Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. பாமாகாவையும் ஈழப்போராட்டத்தையும் பிரிக்கமுடியாது.. எனக்கு நினைவு தெரிந்து தொண்ணுறுகளில் கிழமைக்கு ஒரு செய்தியாவது உதயனில் பாமாக ஈழத்தமிழருக்காக செய்யும் போராட்டம் பற்றி அல்லது ராமதாஸ் ஈழத்தமிழருக்காக பேசியது பற்றி செய்தி வரும்… இப்பொழுது நாம் தமிழர் செய்வதுபோல அந்த நெருக்கடியான காலகட்டங்களில் எப்போதும் எமக்காக குரல் கொடுத்த சொந்தங்கள் அவர்கள்.. அந்த நன்றியை ஈழத்தமிழினம் ஒரு போதும் மறக்ககூடாது..( இந்த வரிசையில் திராவிட இயக்கங்களும் வரும்)
  2. அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
  3. சீனா காரியக்கள்ளர்.. ஒண்டுக்கையும் மூக்கை நுழைக்காது.. அறிக்கை மட்டும் விடும்.. தெமு,விஸ், அலிபாப வியாபாரம் படுத்திடும்.. தெமு டிறோன்ஸ் ஜோர்டான் பார்டர்கூட தாண்டேல்ல..இதென்ன புதுக்கதையா இருக்கு.. எந்த நியூசில் இது வந்தது..? தம்பி லிங்கை தரமுடியுமா..?
  4. Temu delivery.. பால்னா பொங்கும் பச்சதண்ணி எப்புடி பொங்கும்..
  5. என்ன ஈரான் பயந்திட்டு போல இருக்கு.. இது தனது தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலாக ட்றோன் ஏவி இருக்காம்.. அதுக்கும் இதுக்கும் கணக்கு சரியாம்.. இனி மேற்கொண்டு எந்த தாக்குதலும் ஈரான் செய்யாதாம்..
  6. மறுபடியும் முதல்ல இருந்து சாமான் எல்லாம் விலை ஏறப்போகுது.. ஆனால் சம்பளம் ஏறாது.. நான் இலங்கையை பற்றி கதைக்கேல்ல.. இந்தியா ஜரோப்பா கனடா அவுஸ் எண்டு தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளையும்தான் சொல்லுறன்.. நடுத்தர மற்றும் ஏழைமக்கள் ஏற்கனவே உக்ரைன் சண்டையில் சாப்பாட்டு சாமானைகூட வாங்கும் திறனை இழந்திருக்க இதுவேற வர பட்டினிசாவு கொலை கொள்ளை எண்டு போகப்போகுது உலகம்.. எதை சாதிக்கபோகிறார்கள் இந்த போர் விரும்பும் மேற்குலக மற்றும் அடிப்படைவாத முஸ்லிம் நாடுகள்..??
  7. வெள்ள மா புட்டும் பபாசி யூசும் வெட்டுவதை பார்த்தால் தலைக்கோ தலையின்ர பரம்பரையிலையோ டயபிற்றி இல்லை எண்டது கன்போர்ம்.. குடுத்து வச்ச மனுசன்.. அம்மாவுக்கு அம்மம்மாவுக்கு டயபிற்றிக் இருப்பதால் எச்சரிக்கையாக இதை எல்லாம் விட்டு பலசகாலம் ஆகிவிட்டது.. சோறுகூட வரகு சாமை போன்ற தானியங்களுடன் ஒரு கரண்டி ஆகிவிட்டது வாழ்க்கை.. பென்சன் எடுக்கிற வயசிலும் வெள்ளமா புட்டு தின்னுற உங்களை எல்லாம் பாக்க வயிறு எரியுது.. நல்லா இருக்க மாட்டியல்.. நாசாமாப்போவார்..😡😡😡
  8. அது அவர்கள் உள்வீட்டு பிரச்சினை.. அதில் நாங்கள் தலையிடாமல் இருப்பதுதான் நாங்கள் அசிங்கப்படாமல் இருக்க உதவும்.. ஒரு தமிழ்தேசியவாதியாக சீமான் தமிழ்தேசியம் சார்ந்து மட்டும் ஏதாவது தவறு செய்யும்போது அதை தோழமையுடன் சுட்டிக்காட்டுவதனுடன் முடிந்துவிடுகிறது நம் எல்லை.. அதை அவர்கள் எடுத்து திருத்திக்கொண்டால் அவர்களுக்குத்தன் நல்லது.. இல்லை நான் நாசமாப்போவன் எண்டாலும் அது அவர்களுக்குத்தான்.. இங்கு பலரைப்போல் அடுத்தவன் கொல்லைக்குள் உள்ள குதிச்சு ஊளை இட்டுக்கொண்டிருந்தால் இழப்பும் அசிங்கமும் நமக்குத்தான்.. உங்களுக்கு சுட்டுப்போட்டுதாக்கும்..😂 நீங்கள் இடித்துரைத்தால் மூடிட்டு கம்முன்னு இருப்பீர்கள்.. இல்லை காழ்ப்புணர்ச்சியுடன் எழுதினால் இப்பிடித்தான் குய்யோ முறையோ எண்டு கூப்பாடு போடுவீர்கள்..😂 தீதும் நன்றும் பிறர் தர வாரா..😂 நான் உங்கள் தலையில் தொப்பியை போடவில்லை.. நீங்களாக போட்டுக்கொண்டு ஒற்றைக்காலில் நிண்டு ஜயோ தவளை தவளை எண்டு கத்துறியள்..😂 உதுக்கு நான் என்ன செய்ய..😂 சட்ட கிளிஞ்சிருந்தா தச்சி முடுச்சிறளாம் நெஞ்சு கிளிஞ்சிருச்சு இத எங்க முறையிடலாம்..😂😂😂
  9. உண்மைதான்.. எனக்கு தெரிந்த இந்த வருடம் இலங்கைக்கு சுற்றிப்பார்க்க வந்த பல வெள்ளைகள் என்னை தொடர்புகொள்ளும்போது ஆச்சரியப்படுகிறார்கள்.. என்ன இலங்கை இவ்வளவு வேகமாக பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வந்திருக்கிறது என்று.. சிங்களவனின் அதுவும் ரணில் போன்ற படித்த சிங்களவர்களின் அறிவு அபாரமானது.. எல்லாப்பக்கத்தையும் சமாளித்து வெட்டி ஓடி வென்று விடுவார்கள்..
  10. இந்த இழவு பிச்சைக்கார உக்ரேன் மற்றும் ரஷ்யாராணுவத்தில் சேருர நேரத்துக்கு பேசாமல் french foreign legion(Légion étrangère française) சேர்ந்தால் உலகின் மூண்டாவது பெரிய வல்லரசு நாட்டு ராணுவத்தில் பணிபுரிஞ்ச பெருமையும் சம அந்தஸ்த்தும் சம உரிமையும் மூண்டு வருசத்தில் பிரெஞ்சு குடியுரிமையும் அஞ்சு வருசத்தில் ராணுவத்தை விட்டு வெளியேறி சில பல விசேட சலுகைகளுடன் பிரெஞ்சு குடிமகனாக கெளரவமாக வாழ்ந்துட்டு போகலாம்.. உக்ரேன் ரஸ்ய ராணுவத்தில் இறப்புவீதம் பத்துக்கு ஒன்பது எண்டால் பிரெஞ்சு ராணுவத்தில் இறக்கும் சந்தர்ப்பம் ஆயிரத்தில் ஒன்றுதான்..
  11. நான் ஒரு முற்போக்கான தமிழ்தேசியவாதி.. தமிழ்தேசியம் என்பது உலகம் முழுதும் பரந்துவாழும் தமிழர்களையும் உள்ளடக்கியது.. திராவிடம் அப்படி அல்ல.. தமிழ்நாட்டுடன் முடங்கிவிடும்.. நான் ஈழத்தில் ஒரு தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதி தன் பிள்ளையை ஆங்கில வழி அல்லது சிங்கள வழி கல்வியில் படிக்கவைத்தால் கண்டிப்பாக மிக உக்கிரமாக எதிர்த்து குரல் கொடுக்கவேண்டும்.. தமிழ் மொழிதான் தமிழ்தேசியத்தின் அடி அத்திவாரம்.. இருப்பு.. அதேபோல் தமிழ் தேசியம் என்று வரும்போது அதில் ஏதும் தவறு செய்யும்போது நாங்களும் சீமானின் தவறை தோழமையுடன் சுட்டிக்காட்ட உரிமை இருக்கு என்று நம்புகிறேன்.. கம்யூனிஸ்ட்டுக்கள் இன்னொரு நாட்டில் கம்யூனிஸ்ட்டுக்கள் அதன் சித்தாந்தத்தில் இருந்து விலகி நடந்தால் அது தவறு என்று தோழமையுடன் சுட்டிக்காட்ட முடியும்.. ஆனால் அதை சீமானை வீழ்த்த காழ்ப்புணர்ச்சியுடன் திட்டமிட்டு செயல்படுவது ஈழத்தமிழர் நமக்கு வேண்டாத வேலை.. திராவிடத்திற்கு தோழமையுடன் கூட சுட்டிக்காட்ட முடியாது.. திராவிட சித்தாந்தத்திற்கும் ஈழத்தமிழருக்கும் கொள்கை அளவில் கூட எந்த சம்மந்தமும் இல்லை..
  12. பிரான்ஸ் மட்டுமல்ல ஜரோப்பிய நாடுகளே அமெரிகாவுடன் ஒப்பிடும்போது சிறந்த உடல் ஆரோக்கியமும் அளவான வேலை நேரமும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொண்டிருப்பதற்கான பிரதான காரணம் ஜரோப்பிய ஒன்றியத்தின் தரக்கட்டுப்பாடுகளும் வேலை சட்டதிட்டங்களும்.. ஜரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிரித்தானிய ஆரோக்கியத்தில் அமெரிக்காபோல் ஆவது வெலுதூரத்தில் இல்லை..
  13. அப்படி ஆரம்பத்தில் பல நாம்தமிழர்கட்சி ஈழ ஆதரவாளர்கள் தமிழக அரசியலில் தேவையற்று மூக்கை நுழைத்து தமிழக மற்றைய கட்சி உறவுகளை ஈழத்தமிழருக்கும் புலிகளுக்கும் எதிராக பேசவைத்ததுதான் மிச்சம்.. மிக மிகத்தவறான உதாரணங்கள் அவை.. இப்பொழுது திராவிட கட்சிகளை எதிர்ப்பதில் ஆரம்பத்தில் இருந்த அந்த மூர்க்கம் நாம்தமிழர் ஈழ ஆதர்வாளர்களிடம் இல்லை.. வெகுவாக குறைந்து விட்டது.. பலர் தமிழ்நாட்டு அரசியலால் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யமுடியாது என்ற உண்மையை மெதுமெதுவாக உணர தொடங்கிவிட்டனர்.. ஆனாலும் நான் உட்பட பலரும் நாம் தமிழரை மனதில் ஆதரிப்பதற்கான காரணம் மேலே விசுகண்ணை கோசானுக்கு சொன்னவைதான்.. நம்ம ஆதரவை மற்ற கட்சிகளை பகைக்காமல் நம்மளவில் வைத்துக்கொண்டிருப்பதுதான் ஈழத்தமிழருக்கு நல்லது.. ஒரு வெகு சிலரை தவிர மற்றைய அனேக நாம் தமிழர் ஈழ ஆதர்வாளர்கள் இவற்றை புரிந்து கொண்டுள்ளதை இந்த வருடம் அங்கு நடக்க இருக்கும் தேர்தலில் இணையத்தில் நடக்கும் பிரச்சாரங்களில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.. ஆனால் மறுவளத்தில் ஈழத்தமிழரில் பலர் நாம் தமிழர் கட்சி ஈழ ஆதர்வாளர்கள் மற்றைய திராவிட கட்சிகளுக்கு எதிராக ஆரம்பத்தில் மூர்க்கமாக களமாடி எமக்கு எதிராக அவர்களை திருப்பியதுபோல் நாம் தமிழர் கட்சி தமிழக உறவுகளுக்கு எதிராக மூர்க்கமாக களமாடி அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக திருப்பும் வேலையை அதே மூர்க்கத்துடனும் வெறியுடனும் செய்கிறார்கள்.. அது எப்படி மிக மிகத்தவறோ அதேபோல் இதுவும் மிகமிகத்தவறே.. இவற்றையும் சேர்த்து நீங்கள் சுட்டிக்காட்டினால்தான் உங்கள் கரிசனை நியாயமானதாகவும் முழுமை பெற்றதாகவும் இருக்கும்..
  14. தவறுகளை திருத்த அவற்றை சுட்டிக்காட்டி வைப்பது விமர்சனம்.. மற்றைய நக்கல் நையாண்டி எல்லாம் காழ்ப்புணர்ச்சி.. இங்கு பலரின் கருத்துக்களை மேலோட்டமாக வாசிக்கும்போதே புரிந்துவிடுகிறது காழ்ப்புணர்ச்சி என்று.. நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை இவை எதுவும் தடுக்காது.. மெதுவாக வளரும் கட்சி நிரந்தரமான ஒரு குறிப்பிட்ட இலக்க வாக்காளர்களை ஒரு போதும் இழக்காது.. அதிமுக திமுக விசிக பாமாக போன்றவை அப்படி நிரந்தர வாக்காளர்களை எப்பொழுதும் கொண்டிருக்கும்.. நாம் தமிழர் கட்சி அந்த இடத்திற்கு எப்பவோ வந்துவிட்டது.. இந்த தேர்தலில் நாம் தமிழர் மேலும் வளருமா அல்லது அந்த நிரந்தர வாக்காளர்கள் எண்ணிக்கையுடன் நின்றுவிடுமா என்று தெரியும்.. தவக்கைகள் கத்தி வயிறு வெடித்து செத்துவிடும்.. ஊர் தூக்கத்தை கெடுக்க முடியாது அவற்றால்..
  15. என்ன அதிசயம்.. முத்தவெளி கடக்க வெட்டின பனமரம் இரவோட இரவா முளைச்சு வளந்து நிக்குது.. தமன்னாவின் சக்தியோ சக்திதான்.. ஓம் தமன்னா அடி போற்றி..🙏
  16. //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.// அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  17. நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன.. உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  18. தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  19. தலை இல்லாமல் டல்லா இருந்தது யாழ்.. நானும் பெரிசா எழுத இல்லை.. தலா வந்தாச்சு.. இனி இருக்குடி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.