Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
அதிர்ஷ்ட லாபச் சீட்டு
நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன.. உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
வெளிநாட்டில் இருந்துட்டு போய் ஊரில் வாழமுடியாது என்றவர்களுக்கு..
இங்கு நான் ஊருக்கு போகப்போறன் எண்டு எழுதியபோது ஊரில் வாழமுடியாது என்றவர்களுக்கு..
-
என்னோட சாதி..
யாழ்ப்பாணத்தில் இப்ப யாரு சாதி பாக்கிறார்கள் என்பவர்களுக்கு..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
100 வீதம் உண்மை.. இதனால் நான் இப்பொழுது எதுவும் எழுதுவதில்லை.. பதில் எழுதுவம் எண்டு திரிய ஓப்பின் பண்ணினா திரி வந்து சேரா விடியுது.. அதுவும் பாதி வருது மீது வெள்ளையா இருக்கு.. அந்த மீதி வர இன்னும் அரைநாள் வெயிட் பண்ண வேண்டி இருக்கு.. இவ்வளவு வெயிட் பண்ணி ஒவ்வொரு திரியா கருத்து எழுதுறது எண்டால் ஒண்டு பென்சன் எடுத்திட்டு சும்மா வீட்டில் இருக்கோணும் இல்லாட்டி பங்குச்சந்தையில முதல போட்டிட்டு காலாட்டிக்கொண்டு இருக்கோணும் இல்லாட்டி இருபத்து நாலு மணி நேரமும் கொம்பியூட்டரில இருக்கிற IT ல வேலை செய்யோணும்.. நிர்வாகம் தயவு கூர்ந்து பழைய வேகத்துக்கு லோட்டாகும் யாழை கொண்டு வர ஏதாவது செய்யுங்கள்..
-
எளிமையாக தமிழ் மூலம் பிரெஞ்சு மொழி கற்றல் .......!
என்ன இணையவன் அண்ணா இன்னும் பிரெஞ்சு படிக்கிறியளா..?😮
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஏராளன்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓ இண்டைக்கு தலயின்ர பிறந்தநாளா.. அப்ப வீட்டுல வெறிக்கூத்தாதான் இருக்கும்.. ஜக்டானியல் நண்டுப்பிரட்டல் கணவாய்ப்பொரியல் குடல்கறி புட்டு எண்டு பெரிய லிஸ்ட்டா இருக்கும்.. குடியும் குடித்தனமுமாய் குடிச்சு வெறிச்சு குதூகலமா நூறாண்டு வாழ்க..👍
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதெல்லாம் முடியாது.. இதெல்லாம் பத்து பதினைஞ்சு வருசத்துக்கு முன்னமே பலர் கேட்டு களைச்சது.. மோகன் அண்ண யாரிடமும் கடமைப்படமாட்டேன் எண்டு சொல்லிவிட்டார்.. அதுதான் யாழின் மோட்டோவே “ யாமார்க்கும் குடி அல்லோம்” எண்டு போட்டிருக்கிறாரே..
-
1115C5F1-3692-45D3-BF72-03962BCEE914.jpeg
From the album: ஓணாண்டி
-
குஷ்பு சர்ச்சை: சோழர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியான 'சேரி' இழிசொல்லாக மாறிய வரலாறு
குஷ்பு தனக்கு வந்தா ரத்தம் மன்சூர் அலிகானுக்கு வந்தா தக்காளி சட்னி.. விதி வலியது.. மன்சூர் அலிகானை மகளிர் ஆணையத்தில் மாட்டிவிட்டு விடியுறதுக்குள்ள இந்தம்மாவு மன்னிப்பு கேட்கிற நிலமை ஆச்சு..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பையனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இது மாதிரி கிறுக்குத்தனமா பேசற ஆளுங்கள பாக்கிறப்போ ஆளு செட் அப் பண்ணி கூட்டத்துல உருள விடுர போதகர்மார் மைண்ட் வாய்ஸ்- அப்பாடா நம்ப பொழப்புக்கு பிரச்சனை இல்லை…🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பால் தினகரன் குறை தீர்க்கும்கூட்டத்துக்கு போயிட்டு வாணே…!!! எல்லாம் சரி ஆயிடும்..🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
திருடனும் கூட்டத்தோட சேந்து ஜயோ திருடன் திருடன் எண்டு கத்தினமாதிரி இருக்கு..🤣 சீ சீ இஸ்ரேல் அப்பிடி எல்லாம் செய்யாது.. குருசோ படிச்ச பைபிள்ள உதெல்லாம் இல்ல.. மூட நம்பிக்கை உது.. உலக அமைதிக்கு சிக்கலான விடயம் நீங்கள் எழுதுறது..🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தல அதை செய்யுங்கோ முதல்ல… நீங்கள் வாங்கி விக்கும் பங்குகளையும் இணையுங்கோ.. பாத்து எனக்கு ஒரு தெளிவு வரட்டும்.. கண்ணை கட்டி காட்டில விட்டமாரி இருக்கு இந்த பங்கு வர்த்தக விடயங்கள் எனக்கு.. ஆசை நிறைய இருந்தும் விளங்காததால செய்ய முடியல..🥲🥲
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆரோ நல்லா மண்டைய கழுவி விட்டிருக்கானுவள்…😂
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இத எங்கையோ கேட்டிருக்கனே…. ஆ ஞாபகம் வந்திட்டு… இது சண்டை என்றால் ஜனங்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஈழத்தமிழர்களின் அழிவை நியாயப்படுத்தி சட்டசபையில் முழங்கிய ஜெயலிதாவின் குரல்… 👍 👍
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்யாவுக்கு வந்தா தக்காளி சட்னி..
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
காலாடுது… உசிரோடதான் இருக்கிறாங்கள் போல..🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் இறைமை உள்ள ஒரு ஜனநாயக நாடு.. ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு.. யாருக்கும் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள்.. ஆனால் இஸ்ரேல் அப்படி அல்ல.. ஹமாசைபோல அப்பாவி மக்களை கண்ணைமூடிக்கொண்டு கொன்று அளிக்க முடியாது.. ஒரு இறைமை உள்ள ஜனநாயக அரசு அப்பாவி மக்களை கொல்லாமல் மாற்றுவழிகளை கண்டுபிடிக்கவேடும் கமாசை அளிக்க.. இப்படி நீங்கள் எழுதுவது போல் எல்லாம் ஒரு ஜனநாயக நாடு பேசமுடியாது..
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
முள்ளிவாய்க்காலை நக்கலடித்து எள்ளி நகையாடிய இன்றும் அதை சொல்லி சமூகவலைத்தளங்களில் நக்கல்டிக்கும் சிங்களவர்கள் மற்றும் இலங்கை முஸ்லீம்களை ஞாபகப்படுத்துகின்றனர்..
-
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
இவரது ஓவியங்களை பாத்திட்டு அப்பவும் நான் நினைச்சன் இவர் யாழில் மட்டும் சும்மா கீறிவிட்டு போற ஆள் இல்லை இவர் இதில் பலவருட அனுபவமுள்ள தொழில் நேர்த்தியான கலைஞராக இருக்கவேண்டும் என்று.. நான் நினைச்சது சரிதான்.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜயா..