Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
புட்டினும் புதுமாத்தளனும்
சரியாக சொன்னீர்கள்.. இதைத்தான் நான் மனதில் நினைத்தேன்.. யாழில் பலதிரிகளில் பலவருடங்களாக இப்படித்தான் உரையாடுகிறார்கள் உரையாடுவோம்.. யாழின் அழகே அதுதான்.. மனதில் வன்மத்துடன் பார்த்ததால் அவருக்கு அவை எல்லாம் கண்ணை மறைத்துவிட்டன..
-
புட்டினும் புதுமாத்தளனும்
போரைத் தீவிரமாக்கும் முயற்சிக்கு ஐரோப்பா அடிபணிந்துவிட கூடாது பைடனின் போலந்துப் பேருரைக்கு எதிராக மக்ரோன் ஆட்சேபக்கருத்து போரை மேலும் தீவிரமாக்கத் தூண்டு கின்ற "செயல்கள்", "வார்த்தைகள்" தவிர்க்கப்பட வேண்டும் என்று அதிபர் மக்ரோன் கூறியிருக்கிறார். ரஷ்ய அதி பர் புடினை "சர்வாதிகாரி""கசாப்புக்கடை க்காரர் "என்று வர்ணித்து ஜோ பைடன் போலந்து நாட்டில் கூறிய வார்த்தைக ளுக்கு எதிராகவே மக்ரோன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கிறார். " இதுபோன்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தப் போவதில்லை. ஏனெ னில் நான் புடினோடு தொடர்ந்தும் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகிறேன்.." என்றும் அவர் கூறியிருக்கிறார். "உக்ரைனில் ரஷ்யா தொடங்கியுள்ள போரை நாங்கள் போருக்குச் செல்லா மலேயே நிறுத்த விரும்புகிறோம். இதுவே எங்கள் குறிக்கோள்.நாம் அதைச் செய்ய விரும்பினால், நமது வார்த்தைகளையோ செயலையோ தீவிரமாக்கக்கூடாது... " "ஐரோப்பியர்கள் சில விரிவாக்கங் களுக்கு அடிபணியக் கூடாது.நமது புவியியல் மற்றும் நமது வரலாற்றை மறந்துவிடக் கூடாது. நாங்கள் ரஷ்ய மக்களுடன் போரில் ஈடுபடவில்லை" என்று அவர் வலியுறுத்தினார், " ஐரோப்பா இனிமேலும் மொஸ்கோவிற் கும் வோஷிங்டனுக்கும் இடையிலான பனிப் போர்க் காலச் சூழ்நிலைக்குள் இருக்கப் போவதில்லை "-என்பதையும் மக்ரோன் சுட்டிக்காட்டியுள்ளார். போலந்து தலைநகர் வார்ஸோவில் ஜே பைடன் ஆற்றிய பேருரையில் புடினின் அதிகாரத்தை நேரடியாகவும் தகாத வார்தைகளாலும்" உணர்ச்சிவசப் பட்டுச்" சாடியுள்ளார் என்று சர்வதேச அவதானிகள் கருதுகின்றனர். அரசியல் படைபலம், பொருளாதார நிலைகளில் பார்த்தால் அமெரிக்க அதிபர் இவ்வாறு தனக்கு நிகரற்ற ரஷ்யா மீது கருத்துக் களால் தாக்குவதற்கு அருகதையுடை யவர் என்று வேறு சில கொள்கை வகுப் பாளர்கள் கூறுகின்றனர். புடினின் கோபத்தைக் கிளறாமல் அவரை அணுகிப் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகின்ற ஐரோப்பியத் தலைவ ரான மக்ரோனை அமெரிக்காவின் போர் விரிவாக்கப் பேச்சுகள் பொறுமையிழக் கச் செய்துள்ளன. புடினுடன் தொடர்பைப் பேணக் கூடிய ஒரே தலைவராகவும் புடின் செவிமடுக்கக் கூடிய குரலுடைய ஒரே நண்பராகவும் விளங்கும் மக்ரோன் ஐரோப்பாவின் பாதுகாப்புத் தொடர்பான "யதார்த்த நோக்கத்தில்" மொஸ்கோவை வெளியே விலக்கி வைக்க விரும்பாதவர். தார்மீக ரீதியில் நேட்டோவுக்கு ஆதரவா கச் செயற்பட்டாலும் புடினோடு சமாதான முறையில் இணக்கம் காண்பதிலேயே மக்ரோன் கவனம் செலுத்திவருகிறார். போருக்கு முன்னரும் பின்னருமான அவரது பல செயற்பாடுகள் இதனையே வெளிப்படுத்துவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ------------------------------------------------------------------- -பாரிஸிலிருந்து குமாரதாஸன். 28-03-2022 https://www.facebook.com/1328781225/posts/10228838670214750/?d=n
-
புட்டினும் புதுமாத்தளனும்
காலம்: டிசம்பர் 2027 இடம்: பிராங்பேர்ட், ஜெர்மன் அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் படான்ஸ் எழுதிக்கொள்வது. உனது மடல் கிடைத்தது. உடான்ஸ் சொன்னது ஒண்டையும் நம்பாத.. பூரா கற்பனை.. மச்சான் இப்ப நிலைமை அமெரிக்காவிலையும் அமெரிக்காவுக்கு வால்பிடிச்ச யுகேயிலும்தான் ரெம்ப மோசமடா… ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவின் நோக்கத்தை உணர்ந்து உசாராகி ரஷ்யாவுக்கு கண்டனத்துடன் நிறுத்திக்கொண்டு விட்டது.. ஆனா நம்ப யூகே வாயைக்குடுத்து சூ*ல சூடு வாங்கி இருக்கு… ரஸ்யாகாரன் ரேடாரால கண்டுபுடிச்சு அழிக்கேலாத ballistic missiles இல அணுகுண்டை பூட்டி அடிச்சதில லணடனிலையும் அமெரிக்காவிலையும் சரியான சேதம்.. எங்கட சனம் கொஞ்சம் இங்க யுகே இன்னும் கொஞ்சம் கனடால இருந்து வெளிக்கிட்டு ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அகதியளா வந்து கொண்டு இருக்கு... நல்லா வாழ்ந்த குடும்பங்கள்… இப்ப பிரான்ஸ் ஜேர்மன் சுவிஸ் நோர்வே எண்டு அரசாங்கம் குடுத்த முகாம்களில் ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அரசாங்க உதவியை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் யூகேயிலயும் அமெரிக்காலயும் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது.. ஜரோப்பிய ஒன்றியம் உக்ரேனைப்போல அமெரிக்காவை நம்பி முட்டாள்தனமா இருக்காமல் பின்விளைகளை சிந்திச்சு சமயோசிதமா செயற்பட்டதால அங்க இருக்கிற சனம்கள் சந்தோசமா நிம்மதியா இருக்குதுகள்.. நானும் இப்ப ஜெர்மனில அகதியா வந்து இருக்கிறன்.. ஊரில இருந்து யூகேக்கு அகதியா வந்து பிரிட்டிஸ் சிட்டிசன் ஆகி கெத்தா இருந்தனான்.. இப்ப மறுபடியும் ஜெர்மனுக்கு அகதியா போய் இருக்கிறன்.. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் எண்டுறது.. ஜேர்மன் நோர்வே பிரான்ஸ் சுவிஸ் எண்டு இரட்டை சிற்றிசன் வச்சிருந்தவை இப்ப அங்கபோய் நிம்மதியா வேலை செய்து கொண்டு இருக்கினம்.. இவன் மோடன் பொறிஸ் ஜரோப்பிய ஒன்றியத்தில இருந்து யுகேயை பிரிச்சதால விசாஇல்லாம இங்க ஜரோப்பிய ஒன்றியத்தில இருக்கேலா.. அதால நானும் அகதி எண்டு பதிஞ்சுபோண்டு இருக்கிறன்.. எல்லாம் ஊழ்வினையோ? எண்டும் யோசிக்க வருகுது மச்சான். சிங்களவனிட்ட இவ்வளவு அடிவேண்டியும் இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் இந்த உலக மகா யுத்தம் தொடங்கேக்க, உக்ரேனில சிறுபான்மை ரஷ்யா சனத்தின்ர அழிவைக்கூட அப்படி ஒண்டுமே இல்லை அப்படி ஒரு அழிவே அங்க நடக்கேல்ல எண்டு எழுதின்னான்.. அமெரிக்கா நேட்டோ நாலுபக்கமும் ரஷ்யாவை சுத்திவளைச்சு ஈரான் ஈராக் லிபியா சிரியா எண்டு பலநாடுகளில் செய்ததை ரஷ்யாக்கு உக்ரேனை வச்சு செய்ய நிண்டதை மனசாட்சியை பூட்டி வச்சிட்டு சரியெண்டு சொல்லி மேற்குக்கு முட்டு குடுத்தனான்.. இப்ப ரஷ்யாக்காரன் அடிபோட்டு அழிவெண்டா என்ன எண்டு மறுபடி எனக்கு காட்டுறான்.. இப்பவும் நான் திருந்தாட்டி நான் மனுசனே இல்ல… உக்ரேனை ரஷ்யா சிறுபான்மை இனமக்களை போட்டு வெளுத்த நேரம், ரஷ்யாவில் இருந்து எல்லாம் புரட்சிக்காரர்களுக்கு உதவ ரஷ்யமொழிபேசும் இரத்தங்கள் எல்லாம் தம் சகோதர ஒரே மொழிபேசும் இரத்தங்களுக்காக சண்டை பிடிக்க உக்ரேன் போனது… எங்கட தமிழ்மொழிபேசும் இரத்த உறவுகள் உலகத்தமிழர்கள்..? மற்றது மச்சான் எங்களுக்கு, குறிப்பாக இந்த புலம்பெயர்ந்த தமிழருக்கு வெள்ளைத்தோல் மோக அடிமை விசுவாசம் ரெம்ப அதிகம் மச்சான். இங்கு பரம்பரையா வாழுற வெள்ளைக்காரனே தங்கட அரசுகள் ஈராக் ஈரான் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் எண்டு உலகம்பூரா செய்யும் அநியாயங்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடும்போது வெள்ளைக்காற இனவாதிக்கே வாந்தி வாற அளவுக்கு மேற்குலகின் அநியாயங்களுக்கு முட்டுகுடுத்து எழுதுகிறார்கள்டா மச்சான்.. நாங்கள் ஒடுக்கப்படும் இனத்து மக்கள் எண்டால், உலகம் எங்கும் ஏழைநாடுகளை ஒடுக்கும் மேற்குலகுக்கு எப்படி மச்சான் முட்டு குடுக்க முடியும்..? எங்கள் சுயநலனுக்காக எப்படி மச்சான் மேற்குலகின் அநியாயங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு முட்டுகுடுப்பது..? ஆனால் நாங்கள்தான் மந்தைகள் ஆச்சே மச்சான். எங்களுக்கு சுய புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை… சரி மச்சான் கனக்க எழுதி போட்டன். அடுத்த முறை எழுத கிடைத்தால் - அதுவரை, நட்புடன், படான்ஸ்.. (யாவும் கற்பனையாக இருக்கட்டும்)
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
முளளிவாய்க்காலில் இன அழிப்பே நிகழவில்லை தமிழ் மக்களை புலிப்பயங்கரவாதிகளிடம் இருந்து யுத்தம் செய்து மீட்டு எடுத்து இருக்கிறோம் என்றுதான் சிங்கள அரசும் கூறுகிறது.. ரஞ்சித்தும் சிறுபான்மை உக்ரேனிய ரஷ்யர்கள் வாழிடங்கள் மீது உக்ரேன் எந்த தாக்குதலும் செய்யவில்லை என மேற்குலகுக்கு வெள்ளை அடிக்கிறார்.. இவரும் இவரது கருத்தை ஆதரிப்பவர்களும் முள்ளிவாய்க்காலை தமது கருத்தை நியாயப்படுத்த ஊறுகாயாக தொட்டுக்கொள்கிறார்கள்.. உண்மையில் இவர்கள் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி ஒப்பீட்டு கட்டுரைகள் எழுத எந்த தார்மீக உரித்தும் உடையவர்கள் அல்ல..
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உக்ரைன் இந்தப்பகுதியில் விடுதலைக்காகப்போராடும் மக்களை கிளர்ச்சியாளர்கள் எண்டு சொல்லி குண்டுவீசி தாக்குது.. இலங்கை அரசும் இதைக்கூறித்தான் எம்மீது குண்டுவீசியது.. அப்படி பார்க்கபோனால் முள்ளிவாய்க்கால் ஒப்பீடு ரஷ்யா என்னும் வல்லரசுக்கும் மேற்குலக வல்லரசுகளால் ஆயுதம் வழங்கி பின்னின்று அனுப்பப்படும் உக்ரேனிய வல்லரசுக்கும் நடக்கும் யுத்தத்துக்கு அல்ல, நடுவில் கிடந்து நசுங்கி உக்ரேனிய படைகளிடம் செல்லடிவாங்கி சாகும் சிறுபான்மை ரஷ்யமக்களுக்காகவும் உக்கிரைன் படையினரின் தாக்குதலில் பெரும் அழிவுகளை சந்தித்துக்கிடக்கும் அவர்களின் நகரங்களுக்காகவும்தான் நாம் முள்ளிவாய்க்கால் ஒப்பீட்டு கட்டுரை எழுதவேண்டும்.. ஏனெனில் மேற்குலகின் அனைத்து ஊடகங்களாலும் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் உள்ள அப்பாவி மக்கள் அவர்கள்.. ஒட்டுமொத்த உலகாலும் கைவிடப்பட்டவர்கள்.. உக்கிரைனுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் யாழ்கள உறுப்பினர்கள் இந்த மக்களைப்பற்றி ஒருவார்த்தைகூட எழுதி யாமறியோம்.. அதிகாரம் உள்ளவர்களின் பக்கம் சாய்ந்து அவர்களின் சூவைத்துடைப்பது இந்தியாவில் பார்ப்பணர்களுக்குதான் கைவந்த கலை.. அது நமக்கு எதுக்கு..
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
# According to the statement's description, the Ukrainian military forces bombarded the city with heavy artillery, mortars, grenades, and tanks. "People are dying," read the statement, as it emphasized that the armed forces of Ukraine fired at least 1 700 shells in residential areas. https://www.telesurenglish.net/news/DPR-Claims-Shelling-Against-Donetsk-From-Ukraine-20220221-0013.html #Donetsk city centre came under shelling of the Armed Forces of Ukraine last night. The Ukrainian rockets, reportedly, fell near the Donbass Arena stadium. “The park named after Leninsky Komsomol, the territory of the Donbass Arena stadium, as well as the park area of school No. 54 in Donetsk were under artillery fire,” "Dozens of people were injured as a result of shelling by the Ukrainian Armed Forces and national battalions. Over the past 24 hours, 28 civilians were injured. The severity of injuries vary. Donetsk was under fire all night, and just a few hours ago, one of the districts of the city was shot at more than 20 times." https://www.euronews.com/2022/03/23/russian-state-tv-reports-donbass-arena-stadium-was-under-fire-last-night # Ukrainian military fires 200 shells at Donetsk Republic over three hours WorldFebruary 19, 16:31 The situation at the line of engagement in Donbass escalated on the morning of February 17 DONETSK, February 19. /TASS/. The Ukrainian armed forces fired 200 munitions during their bombardments of the territory of the self-proclaimed Donetsk People’s Republic (DPR) during three hours, employing heavy artillery guns, the DPR mission to the Joint Ceasefire Control and Coordination Center reported on Saturday. https://tass.com/world/1406417 # The situation along the contact line in eastern Ukraine took a turn for the worse on Thursday morning DONETSK, February 19. /TASS/. The self-proclaimed Donetsk People’s Republic on Saturday said shelling by Ukraine damaged a water supply station. The water-pumping station in Vasilievka is an important part of the system that supplies water for population centers on both sides of the conflict. "We have urgent information that the Vasilievka water-pumping station has been damaged," power supply in the area has been disrupted and a backup water supply system has been utilized, the DPR’s office at the Joint Center for the Control and Coordination of the Ceasefire Regime said on Telegram. The situation along the contact line in eastern Ukraine took a turn for the worse on Thursday morning. The DPR and LPR reported some of the most intensive shelling by Ukraine’s armed forces in recent months. There have been no reports of deaths but one civilian woman was injured and the shelling damaged some civilian facilities. https://tass.com/world/1406319
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உக்ரேனில் ரஷ்யமொழி பேசும் மக்கள் வாழும் வசிப்புடங்கள் பாடசாலைகள் மீது உக்ரைனால் ஏவப்பட்ட செல்களினால் இறந்துபோன குழந்தைகள் மக்களையும் இப்படி முள்ளி வாய்க்கால் அவலத்துடன் இணைத்து கட்டுரை எழுதலாம்.. அவரவர்க்கு அவரவர் நியாயம்..
-
மனிதாபிமானப் பன்னாடை
அருமையான கவிதை.. மனிதாபிமானம் பேசும் உலகின் இரட்டைவேடத்தை தோலுரிக்கும் கவிதை..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
-
71C51582-F4F0-49AD-833E-7A46EF055F82.jpeg
From the album: ஓணாண்டி
-
50B69186-805C-41F2-9CC5-C62E9A23781A.jpeg
From the album: ஓணாண்டி
-
8BFCE9A2-9581-44F5-9322-9CA5A00BB949.jpeg
From the album: ஓணாண்டி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன தடை உங்களுக்கு…?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆப்பி பேர்த்டே ஏராளன் செல்லத்துக்கு.. வாழ்க பல்லாண்டு.. எல்லோரையும் நாபகப்படுத்தும் சுவி அண்ணைக்கும் நன்றிகள்..
-
தொங்குடா.. தொங்கு..!
அதான.. ஜடியா இல்லாத மோட்டு பொடியனா இருக்கு… ஒரு வேளை எல்லாரும் கைய விட்டுட்டானுவள் பட்டத்த நான்தான் காப்பாத்த போறன் எண்டு நினைச்சிருப்பார் போல…😂
-
தொங்குடா.. தொங்கு..!
நானா இருந்தா அடம்புடிச்சு இன்னும் கொஞ்ச நாள் ஆஸ்பிட்டல்லயே படுத்திரிந்திருப்பன்.. குடும்பம் குழந்தைக பொண்டாட்டி இருக்கிறத மறந்து இப்படி திரிஞ்சா நம்பள சுளுக்கு நிமித்தி படுக்கவுட்டுறுவாங்கய்யா…😂😂
-
தொங்குடா.. தொங்கு..!
இவரு பரம்பரபட்டக்காரன் இல்ல போல.. பஞ்சத்துக்கு பட்டம் ஏத்த போய் ஆப்புல அவரே ஏறி உக்காந்து இருக்கார்… பாவத்த..
-
தொங்குடா.. தொங்கு..!
2k கிட்ஸ்ன்னா… புள்ள அநேகமா இவுரு ரசிகையா இருக்கும்…👇😂😂
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆப்பி பேத்டே நிழலி.. காலையில மந்தம்… மாலைல மப்பு.. மனுசன் வாழ்ராருப்பா… ஆனா என்ன இன்னைக்கு நிழலி வீடு வழியா கிராஸ் பன்னவங்க பூரா மூக்க பொத்திகிட்டுதா போயிருப்பானுக..😂😂
-
நீங்காத நினைவுகளில்..
மின்மினிப் பூச்சிகள் விளக்கேந்திய கானகம் விருட்சங்களின் உரசலில் தீப்பொறிக்கும் நீலக்கடல் நிமிர்ந்த தென்னை,பனை மரங்கள் உச்சரிக்கும் குடம் குடமாய் இரத்தம் பருகிய நிலம் எதையும் மறவாது நெருப்புப் பூக்கள் பூத்திருக்கின்றன நினைப்பதற்கு காலம் நேரமென்றில்லை சந்ததி சந்ததியாக ஒளி சூடி ஓடிக்கொண்டேயிருப்பதற்காகவே பிறந்தோம்.. -தா.பாலகணேசன்
-
ஐம்பதில் ஆசை
லவ்யூ.. எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள்… எண்பதுகளில் வரவேண்டிய சிந்தனைகளுடன் இருக்கிறேன்.. எல்லாம் பொய் இந்த வாழ்க்கையே சுத்தம் பத்தம் ஏன் நான்கூட ஒருநாள் இல்லாமல் போய்விடுவேன் என்ற உண்மையை முப்பதுகளிலேயே உணர்ந்தபின் இன்றுவரை பிரக்ஞை பிடித்தவன் போல் வாழ்ந்துகொண்டிருக்கும்போது உங்கள் போன்றவர்கள் இருக்கும் வரையும் வாழ்வோம் என்று இந்த வாழ்க்கையின்மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறீர்கள்..
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நான் ஊரில் போய் செட்டில் ஆக இருப்பதால் இருக்குற காசபோட்டு சொந்தமா ஒரு வீடுவாங்கி வீட்டு ஏஜென்சிக்காரனிடம் விட்டிட்டு ஊருக்கு போய் செட்டில் ஆகிற ஜடியாவில் இருப்பதால் வீட்டு ஏஜென்ஸிக்காரனிடம் கொடுத்தால் *வாடகைக்கு இருப்பவன் காசு கட்டாமல் பிரச்சினை விட்டால் அவனை எழுப்பவதை அதனால் வரும் பிரச்சினைகளை வீட்டு ஏஜென்சிக்காறன் பாத்துக்கொள்ளுவானா அல்லது ஓனர் நான் தான் வரணுமா? *ஏஜென்சிக்காறன் வீட்டில் வாடகைக்கு இருப்பவனிடம் வாங்கும் காசைவிட எவ்வளவு குறைவா எங்களுக்கு தருவான்..? அதிலும் ஏதும் சுத்துமாத்துவிடுவானோ ஏஜென்சி..? *ஏஜென்சிக்காறன் வாடகைக்கு ஆளை இருத்திவிட்டு எங்களுக்கு யாரையும் இருத்தவில்லை அதனால் காசு இல்லை என்று பொய் சொல்ல சான்ஸ் இருக்கா..? இதெல்லாம் தெரிஞ்ச ஆரும் இருந்தா எனக்கு கொஞ்சம் சொல்லுங்கப்பா.. மண்டை சுத்துது யோசிச்சு யோசிச்சு காசை என்னத்தில பாதுகாப்பா முதலிடலாம் வருமானத்தோட எண்டு பாத்ததில கடைசியா தேறின ஒரே ஒப்சன் இதுதான்.. ஆனா அதிலும் இந்த ஏஜென்சி செக்சன் எனக்கு விளங்கேல்ல.. ஆரேன் கெல்ப்பண்ணுங்கப்பா.. கூடவே பங்கு வியாபாரத்தில் கொஞ்சம் கொஞ்சம் வாங்கி ரெஸ்ற் பண்ணி பாத்து ஊரிலபோய் சும்மாதான இருப்பன் இதை செய்யலாம் எண்டு பாத்தா முதல் ஸ்டெப் Step 1: find a good online broker இதுலயே ஸ்ரக் ஆகி நிக்குரன்.. ஆரும் நல்ல பாதுகாப்பான நம்பிக்கையான புரோக்கர் லிங் தாங்கப்பா..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆப்பி பர்த்டே விசுகண்ணை.. பேரப்பிள்ளையளை சீக்கிரம் கொஞ்சவும்..
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
ஒருக்கா ஒரு பொடியன் சண்டை கட்டம் வரேக்க எழுப்பி விடு எண்டு பக்கத்த இருந்த பொடியனிட்ட சொல்லீட்டு நித்திரையாபோனான்.. அவன்ர குஞ்சில சணல் நூல கட்டி பக்கத்துல இருந்த தேமாவில சணலின்ர மற்றபக்கத்தை நல்லா இழுத்து கட்டி விட்டுட்டு சண்டை வந்திட்டு எழும்புடா எண்டு கத்தி எழுப்பி அவனுக்கு சூ அறுந்துபோகப்பாத்திச்சு.. 😅 ஓம் பூவரசம் நெட்டும் சொன்ன சாமான்..
-
நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
உதில மரவள்ளி நெட்டு வச்சு அடிச்சா சுள்ளிடும்… இயக்கம் இருக்கேக்க ஊரில ஆற்றையன் மோழுக்கு சாமத்தியவீடு கலியாண வீடு பொறந்தநாள் எண்டு ஏதும் நல்லது நடந்தா ஜெனரேட்டரில படம் வீடியோ கொப்பி போடுவாங்கள் முதல்ல.. அது முடிய விடிய விடிய படம் ஓடுவாங்கள்.. ஒரு கிழமைக்கு முன்னமே ஊர் புல்லா என்ன என்ன படம் எண்டு போடலாம் எண்டு கேட்டு கொப்பி வாடகைக்கு எடுப்பாங்கள்.. நாங்கள் மரவள்ளி நெட்டு ரப்பர் பாண்டு கல்லுகுறுணி எல்லாம் பொறுக்கி கொண்டு போவம்.. பொடனிக்கு பின்னுக்கு இருந்து வம்பு வேல செய்யுரது.. இருட்டுக்க எங்களுக்கும் ஆரும் செஞ்சு விட்ருவாங்க..