Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. பெளத்த துறவிகளுக்கு மட்டும்தான் இப்படி கிரியை/நினைவுகூறல் செய்யப்படுகின்றதோ? இது ஒரு அழகிய கலாச்சார உருவமாக, உயர்ந்த பண்பாடாக தென்படுகின்றது. அதுசரி நம்மட ஆட்கள் நமக்கு ஏதும் நடந்தால் ஒரு கடதாசி ஓடமாவது ஆற்றிலோ கடலிலோ நமது பெயரில் விடுவார்களா? சா.. சா. நடக்கிற விசயத்தை பற்றி யோசிப்போம்.
  2. மன்னார் பகுதியில் இப்படியொரு சம்பவம் ஏதும் முன்பு நடைபெற்றதாக தெரியவில்லையே. வன்முறை கலாச்சாரம் மன்னார்வரை வந்துவிட்டது போலும்.
  3. இலங்கை குடிவரவுத்துறை தம்மால் வீசாவை வழங்க முடியாது என வெளி நிறுவனத்திற்கு வேலையை அனுப்பினார்கள். பின்னர் அது பெரும் பிரச்சனையாகியது. இலங்கை வளங்களை பயன்படுத்தி அடையாள அட்டையை சொந்தமாக உருவாக்க வசதி இல்லை என்றால் இலங்கையில் உள்ள இத்தனை இத்தனை பொறியியல் பீடங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள் எல்லாம் எதற்கு? அடையாள அட்டையை உருவாக்குவதற்கு இந்தியாவிடம் ஏன் கடன் வாங்க வேண்டும்? இதன் பின்னால் நின்று காசு அடிக்கும் கூட்டம் யாதோ?
  4. முதலாவது சந்ததியை விடுங்கள். அடுத்த சந்ததியின் எதிர்காலம் என்ன? அங்கு சிறுவயதில் பெற்றோருடன் சென்ற, மற்றும் அங்கு பிறந்த பிள்ளைகளின் வாழ்க்கை, எதிர்காலம் மிகவும் இடர்மிக்கது.
  5. இலங்கை அகதிகள் விடயத்தில் இந்தியாவின் செயல்கள், கொள்கை இந்தியாவிற்கே அவமானம்.
  6. வெளிநாடுகள் அகதிகளாக ஏற்றுகொண்ட மக்களுக்கு நிரந்தர வதிவுடமை, குடியுரிமை ஆகியவற்றை கொடுக்கின்றன. இந்தியா இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்த வாய்ப்புக்களை வழங்கவில்லை. இந்தியா தனது இந்த கொள்கையை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
  7. செடில் காட்டுற ஒரு ஆளுக்கு செடில் காட்டுற மற்ற ஆளை பிடிக்காது தானே.
  8. பாரவூர்திகளில் அதிலும் குறிப்பாக நீண்டதூர பாரவூர்திகளில் மிகையான ஒளியமைப்பு/அலங்காரம் உள்ளது உண்மைதான். ஆனால், அவை மீது நடவடிக்கைகள் முற்றிலுமாக எடுக்கப்படுவது இல்லை எனவும் கூறமுடியாது.
  9. மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. என்ன நடக்கின்றது என தொடர்ந்து அவதானிப்போம்.
  10. வெளிநாடுகளிலும் வானகத்தை அளங்கரிப்பது, மின்குமிழ்கள் இணைப்பது விடயத்தில் கட்டுப்பாடுகள், தடைகள் உள்ளன. வாகன ஓட்டிகளின் கவனத்தை குலைப்பது தொடக்கம் பல இடர்ப்பாடுகள் இதில் உள்ளன. இலங்கையில் பெரும்பாலும் வண்ணமயமான பிரகாசமான ஒளி அமைப்பு மூலம் சுவாமி உருவங்கள், படங்கள் இவற்றையே முன்னிலைப்படுத்துகின்றார்கள். பல பேருந்துகளில் தொலைக்காட்சி பெட்டி வேலை செய்யாது. பலவற்றில் பாட்டு பெட்டி வேலை செய்யாது.
  11. கலைஞர் விவேக் விடயத்தில் நீங்கள் கூறவருவது என்ன? அவரது மறைவு இயற்கையானது அல்ல, கொலை என கருதுகின்றீர்களா? கொலை என்றால் கொலையாளிகள் யார்? சமூக ஊடகத்தில் நீங்கள் அங்கத்துவம் பெற வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறே மின்னஞ்சல் பாவனையை இயலுமான அளவு தவிர்க்கலாம். வர்த்தக மயப்படுத்தப்பட்டுள்ள இன்றைய உலகில் நான், நீங்கள் எல்லோருமே கண்காணிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களே. எமக்கு புலப்படாமல் ஆயிரம் விடயங்கள் நடக்கலாம். எமது கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் பற்றி நாம் என்னதான் செய்யமுடியும்? கைத்தொலைபேசி, சமூக ஊடக பாவனை இவற்றை எமது தேவை, வசதி, நன்மைகள் கருதி தொடர்கின்றோம். எமது பாவனை மூலம் மற்றவர்களும் பயன்பெறலாம். ஆனானப்பட்ட அமெரிக்க அரசின் உள்ளக நிர்வாக விடயங்கள், தகவல்கள் பற்றிய கோப்புக்களையே சைனாக்காரன் உட்பட பலர் நோண்டிப்பார்க்க முயற்சி செய்கின்றார்கள். எமது இலவச ஈமெயில் கணக்குகள் எல்லாம் எந்த மூலைக்கு? ஈமெயில் முகவரிகளை அடிக்கடி மாற்றுவது உங்கள் மீதான சந்தேகத்தையே நிறுவனங்களுக்கு அதிகரிக்கும். இவ்வாறான செயற்பாடு மூலம் நீங்கள் தேவை இல்லாமல் உங்களை நோக்கிய ஒரு புலனாய்வுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கின்றீர்கள் என எண்ணுகின்றேன்.
  12. கொஞ்சம் விளக்கமாய் கூறுங்கள் @பெருமாள் உங்களை யார் கண்காணிப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள்? நடிகர் விவேக் எவரது கண்காணிப்புக்கு உள்ளாகினார்?
  13. கூகிழ் போக்குவரத்து வழிகாட்டி செயலியே காவல்துறை முன்னால் நிற்பதை எச்சரிக்கை செய்கின்றதே. இது சட்டவிரோதமானது இல்லை போலும்.
  14. தமிழனின் தனித்துவ அடையாளங்கள் எவை என வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்.
  15. அரசியல் செய்வதற்கு தகுந்த, உகந்த சூழல் இலங்கையில் தற்போது உருவாகி உள்ளது. யாராவது கடத்துவார்கள், மண்டையில் போடுவார்கள் எனும் பயம் இல்லாமல் அரசியல் செய்யலாம். இந்த வாய்ப்பை மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா பயன்படுத்துகின்றார். ஆயுத போராட்ட காலத்து சூழலைவிட தற்போது உள்ள சூழல் அரசியல் பிரவேசத்திற்கும், வளர்ச்சிக்கும் பொருத்தமானது.
  16. ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி இவைகளை பின்தள்ளி இலங்கை முன் நகரலாம் என்றால் பாரம்பரிய தமிழ் கட்சிகளை தவிர்த்து இலங்கை தமிழர் அரசியல் செய்ய முடியாதா? புதிய மாற்றீடு மாற்றங்களுக்கு ஏதுவாக அமையலாம்.
  17. நான் மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் தகவல்களை பார்த்து வருகின்றேன். இப்போது தனது யூரியூப் ஊடாக காணொளிகள் பிரசுரம் செய்கின்றார். பல பொழுது போக்கு அம்சங்களுடன் நாட்டில் உள்ள பல பிரச்சனைகளையும் பற்றி உரையாடுகின்றார். அரசியல் களத்தில் பல புதிய விடயங்களை புகுத்தி வருகின்றார். இனிவரும் தேர்தல்களில் இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இவரை ஓரம் கட்டுவதாக நினைத்து செய்யப்பட்ட விடயங்கள் அவரை வளர்த்துவிடுகின்றன. தொடர்ந்து அவதானிப்போம்.
  18. செய்தியின் பிரகாரம் பெண் உடலமைப்பு அழகிகளை தெரிவு செய்துள்ளார்கள். போட்டி விதிமுறைகள், புள்ளி வழங்கல் விபரங்களை செய்தியை இணைத்த @கிருபன் மேற்கொண்டு விபரிப்பார் என எண்ணுகின்றேன்.
  19. ஆட்களின் வடிவை கேலி செய்யக்கூடாது. என்றாலும் வட மாகாணத்தின் பெண்ணழகி படத்தை பார்க்க ஓடிவருபவர்களுக்கு ஏமாற்றம் தான் போல.
  20. பொறுப்பு கூற வேண்டியவர்கள் விபத்துக்கான காரணத்தை அறிய மூன்று வருடங்கள் வரை பிடிக்கலாம் என்று கூறியுள்ளதாக செய்தி பார்த்தேன். இருவர் மடடும் உயிர் தப்பியுள்ளதாக சொல்லப்படுகின்றது. இவர்கள் விமானிகளா தெரியவில்லை. விமானங்கள் Final Leg இற்கு ஓடுபாதையை நோக்கி திரும்பியவுடனேயே சில்லுகளை இறக்கிவிடுவார்கள். பைனல் லெக் ஓடுவதற்கு சில நிமிடங்கள் எடுக்கும். இறக்குவதா இல்லையா என இந்த தருணத்தில் முடிவு எடுப்பார்கள். விமானம் சரியாக நேர்த்தியாக நிலை எடுக்காவிட்டால் திரும்ப மேலெழுந்து பறப்பார்கள், இறக்குவதற்கு முயற்சி செய்யமாட்டார்கள். உறவினர்கள், வேண்டியோர் எக்கத்துடன் விமானநிலையத்தில் காத்து நிற்கும் படம் கவலையை தருகின்றது. நாம் இப்படியான ஒரு சூழலில் மாட்டினால் எவ்வளவு கொடுமையானது என உணர்வோம். துயரமான சம்பவம். ஆழ்ந்த இரங்கல்கள்!
  21. இலங்கையில் பிறந்தாலும் விருந்தினர் வீசாவூடாக செல்லும்போது நாங்களும் சுற்றுலா பயணிகள் தானே. நானே 2024 இரண்டு தடவைகள் சென்று வந்தேன். கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஆஸ்பத்திரியில் காணப்படும் கதிரைகள் போல அல்லாமல் கொஞ்சம் சாய்ஞ்சு படுக்கக்கூடியவாறு இருக்கைகள் அமைத்தால் நல்லது. விமான நிலையத்தில் இலங்கை காசை கொடுத்து சிற்றுண்டி, தேநீர் தவிர வேறு பொருட்கள் வாங்க முடியாது என்பது கொடுமை.
  22. விமானம் பறவைகள் கூட்டத்துடன் மோதுண்டதாகவும், இதனாலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும் ஒரு செய்தியில் பார்த்தேன். பறவைகள் கூட்டத்துடன் மோதுண்டு பின்னர் நியூயோர்கில் ஆற்றில் இறக்கப்பட்டு ஒரு விமானம் முன்பு தப்பியது.
  23. இராணுவத்தினர் அடாவடியாக மக்களின் காணிகளில் உள்ளார்கள். அவர்கள் அவற்றை விடுவிக்கவேண்டும். ஆளுநர் கோரிக்கை சரியாகத்தானே உள்ளது சிறியர்.
  24. நத்தார், ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்! 🎉🎉 2025ம் ஆண்டு அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும்! 🎊🎊

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.