Everything posted by putthan
-
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்! - சரத் வீரசேகர
அது வேற வாய் இது நாற வாய்..என நகைச்சுவையாக சொல்வார்கள் அது இதற்கு நன்றாக பொருந்துகின்றது ...
-
தையிட்டி விகாரை - மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம்; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு
தப்பு தனிகாட்டு ராஜா ..இது உயர் பாதுகாப்பு வலயத்தில் கட்டப்பட்டது ....மக்களுக்கு அப்பொழுது அருகிலும் செல்ல முடியாத நிலை ..காணிகள் விடுவிக்க பின்பு தான் அங்கு விகாரை கட்டியது தெரிய வந்தது... முன்னாள் ஆளுனர் ரெஜினோல்ட் அடிகல் நாட்டினவர்......மக்கள் எப்பொழுது சென்று பார்க்க முடிந்ததோ அப்பொழுது தொடக்கம் போராட தொடங்கி விட்டார்கள் ...
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இந்தியாவில் கைது!
இதுக்கு ஒரு கருத்தையும் காணவில்லை...தேசியம் பேசியவையள் பிழை விட்டால் பக்கம் பக்கமாக போகும்🤣
-
சுழற்சி முறையில் இனி நாடெங்கும் மின்வெட்டு!
புத்தர் உலக மக்களுக்கு ஒளி கொடுக்க உழைத்தார்....நம்ம சிறிலங்கன்ஸ் புத்தருக்கே ஒளி கொடுக்கிறாங்கள் ...
-
இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு
வலதுசாரி குரங்கு போல இருக்கின்றது ...வழமையாக இடப்பக்கம் பாயும் இந்த குரங்கு தோழர் இன்று எதிர்கட்சி,மற்றும் முன்னாள் அரசுகளின் தூன்டுதலினால் வலப்பக்கமாக பாய்ந்து..ஜெ.வி.பி தோழர்களின் ஆட்சிக்கு ஆப்பு வைக்க முயற்சித்துள்ளது..
-
இந்தியாவில் இலங்கை சார்பாக பதக்கங்களை குவித்த மலையக சாதனை வீரர்!
அகில இந்தியா போட்டிகளில் ..இந்தியாவின் 12 மாநிலங்கள் சரி....இலங்கை,பூட்டான்,பூட்டான் இவைக்கு என்ன வேலை அகில இந்தியா போட்டியில் ...அகன்ற பாரதம் என்ற நினைப்போ?அல்லது அதற்கான முன்னெடுப்போ?🤣 🤔
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
ஹாமாசின் தேவை மட்டுமல்ல பல இஸ்லாமிய நாடுகளின் தேவையும் ,விருப்பமும் அதுதான் ,அதாவது இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவது...35 வருடங்களுக்கு முன்பு சவுதியில் உள்ள தகாரான் விமான படை தளத்தில் வேலை பார்த்தனான் .விமானபடை தளத்தில் உள்ள கட்டிடங்களின் எயர்கொண்டிசன் திருத்த வேலைகளுக்கு செல்லும் பொழுது அங்கு உள்ள வகுப்பறைகளில்(விமானபடை அதிகாரிகள் பயிற்சி பெறும் வகுப்பறைகள்) உள்ள உலக வரை படத்தில் இஸ்ரேலை மார்க்கரினால் அழித்து வைத்திருப்பார்கள் ...அந்த அளவுக்கு இஸ்லாமிய உலகம் வெறுக்கின்றது..
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
அந்த செய்தி பார்த்து தான் உலக அரசியல் தெரிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன் ..ஸ்புட்னிக் காரன் அடுத்த கள்ளன்....இவன் செய்வதை அவன் பிழை என்பான் .அவன் செய்வதை இவன் பிழை என்பான்.
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
தோழர் அனுராவும் அவருடைய தோழர்களும் ,புலம் பெயர் அனுரா தோழர்களும் சொல்லும் வசனம் .... சிங்கள இனவாதிகளும் சலைத்தவர்கள் அல்ல ....ட்ரம்ப் ,அனுரா எல்லாம் ஒரே ரகம்.... இந்த ஹாமாசும்,பல்ஸ்தீனர்களும் இஸ்ரேலியர்கள் என்ற அடையாளத்துடன் ஒர்மித்து வாழ பழகவேண்டும 🤣
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
அவ்வாறு செய்தால் இஸ்ரேலின் அகன்ற இஸ்ரேல் என்ற திட்டம் சாத்தியப்படாது,வெற்றி பெறாது...சுயஸ் கால்வாய்க்கு போட்டியாக அமைக்க இருக்கும் அடுத்த கால்வாயும் அமைக்க முடியாது...என்ன அமேரிக்காவும் ,மேற்கும் ஆயுத பலத்துடன் பலஸ்தீனத்தை சிதைக்கின்றனர் ,மேற்கு கரையையும்,ஹாசாவையும் பிரித்து இறுதியில் ஹாசாவை தம் வசம் எடுத்து விட்டனர் ... சிறிலங்காவில் வடக்கையும் கிழக்கையும் அரசாங்கங்கள் அதிகாரங்கள் மற்றும் திட்டமிட்டு குடியேற்றி பிரித்தது . 72 வருடங்களாக செய்கின்றனர் .இது தொடர்கதை பலஸ்தீனருக்கு ஆயுத பலத்துடன் நடை பெறுகிறது ஈழத்தமிழருக்கு அதிகார/ஆயுத /அரச உத்வியுடன் நடைபெறுகிறது...இருவருக்கும் பொதுவானவர்கள் சர்வதேச நாடுகள் மனித உயிர்களை மதிக்க தெரிந்த உலகமாக இருந்ததால் ஏன் இந்த உலகம் ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
அதே போல இந்த ஹாசா பகுதி எதோ 23 ஆம் ஆண்டு ஒக்டொபெரில் நடந்த இஸ்ரேலியர்களின் படுகொலையினால் நடந்தது என நாங்கள் நினைக்கிறோம்...ஹாசாவில் நிலத்தின் அடியில் ஹாசா தீவிரவாத அமைப்பினர் கட்டிய சுரங்க அறைகள் ,மற்றும் ஆயுத கிடங்குகள் யாவும் ஏற்கனவே இஸ்ரேலிய புலனாய்வாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் ...அதுவும் கடலுடன் தொடர்புடைய நிலப்பகுதி ...ஒரு சிறு துறும்பின் அசைவையும் துல்லியாமாக அறிந்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படைகளுக்கு நிச்சயமாக பல வருடங்களுக்கு முதலே இந்த சுரங்கம் பற்றி அறிந்திருப்பார்கள் ...மத்திய கிழக்கு நாடுகளின் பணத்தை இப்படியான கட்டுமாணங்களுக்கு செலவு செய்து தங்களுக்கு தேவையான வருமானத்தை ரஸ்யா,அமெரிக்கா,சீனா முதலாளிகள் பெற்று கொண்ட பின்பு இஸ்ரேலும் ,அமெரிக்காவும் ஹாசவை முற்றாக அழித்து விட்டார்கள்... அறம் சார்ந்து வலது ,இடது அரசியல்வாதிகள் செயல்படுவதில்லை... நம்ம சகோதரயா அனுராவும் இதை செய்கின்றார் .....இடதும் /வலதும் ஒரே நேர் கோட்டில் ஒடுகின்றன பெயர் தான் வித்தியாசம்
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
நீங்கள் கூறும் சிறிலங்கா பட்டதாரிகள் சிலருக்கு சிறிலங்கா படுகொலைகள்,எந்த இயக்கத்தில் எவன் தலைவனாக இருந்தான் என்பதே தெரியாமல் ...சிறிலங்கா அரசியல் பேசுவார்கள் ..பிற்கு எப்படி ஹிடட்லரின் கொலைப்பட்டியல் விபர்ம் தெரிய வரும்..
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவது இலங்கைக்குச் சாதகமானது
தப்பு ...இந்தியா🤣
-
இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் அசைக்க முடியாத ஆதரவு தொடரும் - பாதுகாப்பு செயலாளரிடம் இந்திய உயர்ஸ்தானிகர் உறுதி
பயங்கரவாதம் இல்லாத நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு உதவ போயினமாம்....எங்கயோ பயங்கரவாத செயல் நடை பெற போகின்றது போல....நாட்டு மக்களே உஷார்... முன்னாள் பயங்கரவாதிகளின் வாரிசுகளின் ஆட்சிக்கு இன்னாள் பயங்கரவாதிகள் சப்போர்ட் ...எங்க போய் தலையை முட்ட ....
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
இந்த தமிழ் அடியான் ஆரம்பத்தில் புலி/தமிழ்தேசிய ஆதர்வு வீடியோக்கள் போட்டவர் ..பின்னர் அர்ஜுனா ,,,லண்டனில் வாழ்ந்து கொண்டு 24 மணித்தியாலமும் யூ டியுப் பைத்தியமாக இருந்தால் எப்படி வருமானம் வரும்...சிங்கள புலம்பெயர்கள் இவருக்கும் அர்ஜூனாவுக்கும் பணம் கொடுக்கினமோ?
-
மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என அடையாளப்படுத்துமாறு உத்தியோகபூர்வ சுற்று நிரூபத்தை வெளியிடுங்கள் - மலையக சிவில் அமைப்புக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்
சந்திரசேகரம்,அம்பிகா சாமுவேல்,சாவித்திரி பால்ராஜ்,ஜெ.வி.பி யின் ஊடக பேச்சாளர் ஐஸ்டீன் போன்றோர் சிறிலங்கன் என சொல்லுங்கோ என பாடம் எடுக்கும் பொழுது நீங்கள் இப்படி சொல்லுறீயல் 2000 வருடங்களுக்கு மேலாக வட்க்கில் வாழும் தமிழனே சிறிலங்கன் என சொல்ல வேணும் என சிலர் கருத்து சொல்லும் பொழுது நீங்கள் மலையக தமிழர் என்ற அடையாளத்தைப்பற்றி சிந்திக்கிறீங்கள்
-
12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள், 154 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இடமாற்றம்
தமிழ் இளைஞர்கள் பொலிஸில் இணைய வேண்டும் ஜனாதிபதி வேண்டுகோள்...தமிழுக்கு சம உரிமை நாங்கள் சிறிலங்கன் ...
-
கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீ
அதுதானே ஒன்று வலது மற்றது இடது... யார் இவர்களின் அந்த பொது எதிரி? காந்திஸ்ட்கள்... அல்லது ஹாமாஸ்யிட்கள்..ஜிகாதிகள்..
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
சில நண்பர்கள் படித்த பாடசாலைக்கு பணம் கேட்டாலே கொடுக்க மாட்டார்கள் அதுவும் வருடத்தில் ஒருக்கா....நாங்கள் தனிப்பட்ட வகையில் தாயக மக்களுக்கு பல தொண்டுகள் செய்கிறோம் என புருடா விடுவார்கள்
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
சற்றே நிமிந்தேன்...அவன் பைத்தியம் என்றேன்🤣
-
ரஸ்ய உக்ரைன் போர்முனையில் 56 இலங்கையர்கள் இதுவரை பலி
சிறிலங்கன் ....ஐயா வடக்கு தெற்கு என பிரிவினை பேசாதீர்கள் ...
-
கொழும்பு கிரிஷ் கட்டிடத்தில் தீ
எதிர்கட்சிகளின் சதி
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
சிங்கள தெற்கு ஒர் றொட்டு அமைத்து பூநகரியை மேடுறுத்தி பாலமைத்து சிங்கள நன்நாட்டிளம் பெண்களுடன் சுந்தர பாளியில் பாட்டெழுதி கார்கள் ஓட்டி விளையாடிடுவோம்... என்ன பாரதி மட்டுமா சிங்களவ்ருடன் உறவாட முடியும் நாஙகள் வல்வை மைந்தர்கள் சலைத்தவர்களா என்ன?
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
நானும் புலம்பெயர் பிரதேசத்தில் தான் இருக்கிறேன் ...ஒரு 50 டொலர் டிக்கட் வாங்கிறீயளோ தாயக மக்களுக்கு உதவி செய்ய என கேட்டா...அவர்கள் திருப்பி என்னிடம் கேட்கும் கேள்வி...உண்மையாக இது தாயக மக்களுக்குதான் போகுதோ அல்லது உங்கன்ட பொக்கட்டுக்குள்ளயோ.....ஆகவே புலம் பெயர்ந்தவன் சும்மா கொடுக்க மாட்டான்...இங்க இருப்பவன் லெசுப்பட்டவன் அல்ல ..சிறிலங்கா அரசிடம் .புலம் பெயர்ந்தவர்களின் பணம் என கூறி, வேறு வியாபாரம் செய்து சம்பாதிக்கின்றனர் ... ...
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
மேலோட்டமாக் நாங்கள் பார்த்தால் இதை சும்மா கடந்து போகலாம்....யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு மருத்தவர் (எதற்கு எடுத்தாலும் தேசிய தலைவரையும்,மாவீரர்களையும் துணைக்கு இழுப்பவர்)இப்படி சொல்லுவது யாழ்மாவட்ட மக்களை கரக்க்டர் அசசினேசன் செய்யவோ என எண்ண வைக்கின்றது. இந்த பைத்தியத்தை வைத்து காணோளி போட்டுபணம் சம்பாதித்த யூடியுப் பைத்தியங்களும் உண்டு..