"நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும்இ நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது."
மிக ஆக்கபூர்வமான கட்டுரை
எழுதியவர் எவ்வளவு தூரம் இந்த கருப்பொருளுக்குள் தன்னை மிக நுட்பமாக நுழைத்து ஆய்வு செய்கிறார் என்பதை வாசித்துக்கொண்டுபோகும்போது நன்றாக உணரமுடிகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்றல் என்பது பாலியல் வன்முறை சார்ந்த விடயங்களில் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது என்பதை ஆய்வாளரின் எழுத்துகள் நிரூபிக்கின்றன. சாதாரண நீரோட்டமான வாழ்க்கையிலும் நான் பழகும் பலரில் அந்த ஆய்வில் கூறப்பட்ட குணாதியங்களை காண முடிகிறது.மனோதிடம் குறைந்தவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இலகுவாக ஒருவரை மனோதிடம் உடையவராக மாற்றிவிடமுடியாது. ஆய்வாளரின் எழுத்துகள் அவருடைய பலதரப்பட்ட முயற்சிகளை வெளிப்படுத்துகிறது. நல்ல முயற்சியும் தேடலும் வழிநடத்தலும் வாழ்த்துகள் கிரிசாந்த்.
இணைப்பிற்கு நன்றி கிருபன்.
கட்டுரையை வாசித்தவுடன் நிறையவே எழுதவேண்டும் என்று தோன்றியது ஆனால் கைத் தொலையேசியில் வாசித்ததனால் அப்போது எழுதமுடியவில்லை பின்னர் எழுதலாம் என்று தள்ளிப்போட்டேன் எழுத நினைத்த விடயங்கள் எங்கோ போய் ஒளிந்து விட்டன.