-
Posts
34285 -
Joined
-
Last visited
-
Days Won
113
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by விசுகு
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
விசுகு replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இது தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதாகும். இதை வைத்து கொஞ்ச நாளைக்கு தமிழ் தேசியத்தை வறுக்கலாம் வெருட்டலாம் என்ற கற்பனை தான். ஆனால் மாவீரர் நாளில் தாயகம் இவர்களை வெட்கப்பட வைத்துவிட்டது. -
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
விசுகு replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இதைத் தான் ஆரம்பத்தில் இருந்தே நான் இங்கே எழுதி வருகிறேன். ஜேவிபியால் ஒரு போதும் இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து மீள வைக்க முடியாது என்று. ஏனெனில் அவர்களது கொள்கை அதற்கு எதிர்மறையானது. -
இன்று 10ஆவது பாராளுமன்றின் முதல் செயற்பாட்டு நாள்; அதற்கு சுமந்திரன் இல்லையாம்! இப்படியிருக்க சுமந்திரன் இல்லை அது தமிழருக்கு இழப்பு என்ற வகையாறு கதைகளை சுமந்திர ஆதரவாளர்கள் மட்டும் பதிவிட்டு வருகிறார்கள். அனுர அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களை கைது செய்கிறது, சுமந்திரன் இல்லாத்து இழப்பு. என்று பத்தி எழுதுகிறார்கள். (இதில் காமடி விடயம் என்ன என்றால் சுமந்திரனை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கு விசாரணையில் 14 தமிழர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.) சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரிகளுடன் பேச சுமந்திரன் வேண்டுமாம். அதுக்கு சுமந்திரன் இல்லாதது இழப்பாம். சுமந்திர ஆதரவாளர்களே, முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்… 1) சுமந்திரன் மக்களுக்கு நேர்மையாக நடக்காததால் தான் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். 2) சுமந்தின் கூட்டு முடிவு எடுக்காமல் தனித்து முடிவுகள் எடுத்ததால் தான் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை பெற்றவர். (சம்பந்தன் இருக்கும் வரை மற்றவர்கள் பேசாமல் இருந்தார்கள். சம்பந்தனின் செயற்பாட்டு அரசியல் இல்லாமல் போன பின் சுமந்திரனின் தனித்த செயற்பாட்டை எதிர்த்தார்கள்) 3) 2020 இல் சிறீதரனின் வீட்டுக்கு சென்று ஆதரவு கேட்டு சிறீதரனின் ஆதரவில் வென்று எம்பியானார். சுமந்திரன் எமக்கு தேவை என்று சொன்ன சிறீதரனுக்கே முதுகில் குத்தினார் சுமந்திரன். 4) 2020 தேர்தலில் சுமந்திரன் வென்ற பின் தமிழரசின் தலைவராக சிறீதரன் வந்தால் ஆதரவளிப்பேன் என்று ஊடக சந்திப்பில் கூறினார். பின் அதே சிறீதரனுக்கு எதிராக போட்டி போட்டு தோற்றுவிட்டு, வென்ற சிறீதரனுக்கு எதிராக வழக்கு போட்டார். 5) 2017 இல் ஒரு நேர்காணலில் நல்லாட்சி காலத்தில் உருவாகும் அரசியலமைப்பு தோல்வியுற்றால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன். ராஜநாமா கடிதம் எழுதி பொக்கற்றுக்குள் வைத்திருக்கிறேன் என்றெல்லாம் அடித்துவிட்டார். அரசியலமைப்பும் இல்லை, சுமந்திரன் சொன்னதை செய்யவுமில்லை. 6) சொந்த கட்சிக்குள் இருப்பவர்களில் தனக்கு இசைவாக செயற்படாதவர்களை மெல்ல மெல்ல வெட்டி வெளியே விட்டார். 7) சட்டத்துறையில் சுமந்திரன் கெட்டிக்காரன் தான். ஆனால் ஒரு அரசியல்வாதியாக அவர் தமிழ் மக்களுக்கு பொருத்தமற்றவர். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாதவர் மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது. இப்படி பல குழறுபடிகளை செய்து கட்சியையும் சிதைத்து, மக்களையும் குழப்பிவிட்ட சுமந்திரனை தெரிவு செய்யாதது பிழை என்று பத்தி எழுதும் ஆட்களை பார்க்கும் போது தான் பரிதாபமாக இருக்கிறது. இந்த முறை யாழில் தமிழரசுக்கட்சிக்கு வாக்கு போடாத பலர் சொன்ன விடயம். வீட்டுக்கு கூட வாக்கு போட்டால் சுமந்திரன் வந்திடுவார். என்பது தான். சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசமே 17,000 வாக்குகளுக்கு மேல் இருந்தது. அவளவிற்கு சுமந்திரன் மேல் மக்கள் வெறுப்பில் இருந்திருக்கிறார்கள். இப்போதும் ஒன்றும் குறையவில்லை. சிறீதரன் தலைவராக வருவதற்கு எதிராக சுமந்திரன் திருகோணமலையில் போட்ட வழக்கு வாபஸ் பெற்று புதிய தலைமையை திரும்ப தெரிவு செய்து தமிழரசுக் கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக பயணித்தாலே தமிழ் மக்கள் ஓரணியாக தமிழரசின் பின் அணிதிரள்வார்கள். தமிழரசுக்கட்சியை பலப்படுத்தி அதில் சுமந்திரனுக்கு வெளிவிகாரத்துறையையும், அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான குழுவின் தலைமை பொறுப்பையும் கொடுத்தால் கூட அதற்கு சிறீதரன் எதிர்க்க மாட்டார் என்பது என் பார்வையில் தெரிகிறது. இதெல்லாம் விட்டுவிட்டு பாராளுமன்றம் கூட முன்னரே சுமந்திரன் இல்லாதது இழப்பு என்று அனுதாப பத்தி எழுதுவது அழகில்லை. https://www.facebook.com/share/12HfapQog3C/
-
புலம் பெயர் அமைப்புக்களை தூக்கி எறிந்த அநுர அரசு
விசுகு replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
எப்படி வந்தவர் இன்று எப்படி அழைக்கப்படுகிறார். சும்மா அதிருதில்ல....?😭 -
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
விசுகு replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஒரு ஓநாய் ஒரு ஆட்டுக்குட்டியை மடியில் வைத்திருந்தால் அதற்கு பெயர் இடைவெளியா அண்ணா? -
அது எனக்கு தெரியும் நமக்கு தான் திருப்தி என்பதே கிடையாதே. அப்படியானால் அலையத் தானே வேண்டும்???😂
-
தம்பி பிழம்புவும் இதனை நம்புகிறாரா??
-
அவர் தனது தாயாரை இறுதிக் கணத்தில் பார்க்கவே உயிரை பணயம் வைத்து அங்கே வந்துள்ளார். நமக்காக உழைத்தவர்கள் படும் பாட்டை நாம் பார்க்கும் விதம் இருக்கே???? சொல்லி அழுதாலும் தீராது ஆறாது..😭
-
கடற்றொழில் அமைச்சரின் சகா என கூறி அடாவடியில் ஈடுபட்டவரால் யாழில் பரபரப்பு!
விசுகு replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
(கடற்றொழில் நீரியல் வள அமைச்சரின் ஒருங்கிணைப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தனி நபர் ஒருவர்,) இவருக்கு தான் நடித்துகொண்டிருக்கும் நாடகத்தில் தன் பாத்திரம் மறந்து விட்டது. அல்லது இயக்குநர் சொல்லிக்கொடுத்தது காதில் விழுத்தவில்லைப்போலும். -
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
விசுகு replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இங்கே யாரும் பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் என்று எழுதவில்லை அண்ணா. உங்கட கோவணத்தையும் கழட்டி குடுத்துவிடாமலாவது இருங்கோ என்று தான் சொல்கிறார்கள்.. -
நான் போவதில்லை. பெரிய பெரிய மலைகளே போய் திரும்பி வருகிறார்கள். ஏன் நீங்கள் யோசிக்கிறீர்கள் என்பதும் இவர்கள் தான். போய் மாட்டிக் கொண்டால் என்ன பைத்தியக்காரத்தனம் இது என்பதும் இவர்கள் தான். என்னை சிங்களவர்கள் அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பில்லை. எங்கடையள் நிச்சயமாக செய்து முடிப்பர். அவ்வளவு நம்பிக்கை எனக்கு அவர்கள் மேல்.😭
-
உண்மை ஆதாரம் மற்றும் புள்ளி விவரங்களுடன் வாழ்பவர்களுக்கு அநுராவுக்கு விழுந்த வாக்குகள் டக்லஸ் மற்றும் ஐங்கரன் சார்ந்த வேலை மற்றும் உதவி எதிர்பார்ப்பு வாக்குகள் என்பது தெரியாமலா இருக்கும்???? மற்றும் எமது அரசியல்வாதிகளின் செயற்பாடற்ற நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடரும் போது அதன் வீரியம் அதிகரிக்குமே தவிர குறையாது என்பது பொது நலம் சார்ந்து சிந்திப்போருக்கு புதியதல்லவே....
-
பலஸ்தீனத்திற்கு சுயநிர்ணயத்துடனான தீர்வு அவசியம்,ஜனாதிபதி வலியுறுத்தல்
விசுகு replied to ஈழப்பிரியன்'s topic in ஊர்ப் புதினம்
இது புரிந்தால் குற்றம்???