Everything posted by விசுகு
-
கடன் மீள செலுத்த சரியான திட்டமிடலை மேற்கொள்ளாவிட்டால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் - ரணில்
இது தான் சிறீலங்காவின் இன்றைய நிலைமை. ஒரு சோசலிச சமத்துவ அரசினால் இதை தீர்க்க முடியாது. ஆளான அமெரிக்காவே இரண்டு முதலாளிகளிடம் நாட்டை மீட்டுத்தருமாறு கொடுத்திருக்கிறது.
-
அநுரவின் அதிரடி நடவடிக்கை! அநுரவினால் கோடீஸ்வரராகும் யூடிப்பர்கள்! ஆரம்பமே பெரும் ஊழல்!
அநுரவின் அதிரடி நடவடிக்கை! அநுரவினால் கோடீஸ்வரராகும் யூடிப்பர்கள்! ஆரம்பமே பெரும் ஊழல்! https://www.facebook.com/share/1AE8sN2Ykp/
-
1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்
அவரிடம் இருக்கும் அளவு வாங்கினால் அதற்கு பெறுமதி இராது தானே? அதுக்கும் மேல....
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
எனது வாக்கு தமிழ் தேசிய முன்னணிக்கு என்று எழுதி விடுகிறேன். காரணம் ஒப்பீட்டளவில் ஊழல் மற்றும் இரகசிய பேச்சுவார்த்தைகள் இல்லை அத்துடன் தேசியம் நிச்சயம் வாழணும். நன்றி.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ஒவ்வொரு கட்சியாக பார்த்தேன். எவர் எவருடனும் கூட்டு என்று ஒன்றுமே புரியல. எதையோ மாறி அமுக்கி விட்டேன் போல...
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இல்லையே
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
என்னால் வாக்களிக்க முடியவில்லை. எனக்கு முடிவுகள் தான் தெரிகிறது?
-
'எல்போர்ட்' பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி - ரணில்
இதைத் தான் நானும் சொல்ல வந்தேன். எதிரி என்பதற்காக படிப்பை மட்டம் செய்வது நல்லழியன்று.
-
ஒரு ஏரி. அதன் ஆழத்தில் இரண்டு தனித்துவமான மீன் வகைகள் வெவ்வேறு சமூகங்களாக வாழ்ந்து வந்தன.
தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: ஒரு ஏரி. அதன் ஆழத்தில் இரண்டு தனித்துவமான மீன் வகைகள் வெவ்வேறு சமூகங்களாக வாழ்ந்து வந்தன. ஒவ்வொன்றும் அவற்றுக்குச் சொந்தமான பிரதேசங்களுக்குள் நிம்மதியாக வாழ்ந்து வந்தன. இந்த மீன்கள் ஒவ்வொரு வகையிலும் வித்தியாசமாக இருந்தன - அளவு தோற்றம் மற்றும் நடத்தை. ஒரு சமூகம் குறிப்பாக பெரிய மீன்களைக் கொண்டிருந்தது மற்றொன்று மிகச் சிறிய மீன்களால் ஆனது. எண்ணிக்கையில் பெரிய மீன்கள் அதிகமாகவும் சிறிய மீன்கள் குறைவாகவும் இருந்தன. இரண்டு மீன் குழுக்களும் ஒரே ஏரியில் வாழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறாக இருந்தது. திடீரென்று அருகிலிருந்த கடல் பெருகியபோது அங்கிருந்த வெள்ளைச் சுறாக்கள் ஏரிக்குள் வந்தன. அவை ஏரியைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. சுறாக்கள் இரண்டு மீன் சமுதாயங்களது வாழிடங்களையும் ஒன்றாக்கின. இடையிலிருந்த தடைகளை அகற்றின. காலம் செல்லச்செல்ல சுறாக்களுக்கு இந்தச் சிறிய ஏரியை வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை எனத் தோன்றவே மீண்டும் தமது கடலுக்கே சென்றுவிடலாம் என அவை முடிவெடுத்தன. இப்போது ஏரி ஒரே ஏரி ஆகிவிட்டது. எண்ணிக்கையிலும் அளவிலும் பெரிய மீன்கள் ஏரியில் சுறாக்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஆளத் தொடங்கின. பெரிய மீன்கள் அடிக்கடி சிறிய மீன்களின் இடத்திற்குள் நுழைந்து அவற்றை விழுங்கின. சிறிய மீன்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிய மீன்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக ஒரு சிறிய தடுப்பு வேலியை உருவாக்க முயன்றன. அது சிறிய மீன்களின் பிரதேசத்தை பெரிய மீன்களிடமிருந்து ஓரளவு பாதுகாத்தது. ஆனால் இந்த தடையை அடிக்கடி உடைத்து பெரிய மீன்கள் சுதந்திரமாக நீந்தி வந்து சிறிய மீன் சமூகத்தினரில் அதிகளவானோரை விழுங்கி வந்தது. சிறிய மீன்களுக்கோ வேறு வழிகள் இருக்கவில்லை. காலப்போக்கில் சிறிய மீன்கள் நியாயத்தை கோர ஆரம்பித்தன. தங்கள் பகுதியில் பயமின்றி வாழ்வதற்கான உரிமை மற்றும் சம உரிமை எனப் பேசத் தொடங்கின. பெரிய மீன்களுக்கு தமது கோரிக்கையை முன்வைத்தன. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பெரிய மீன்கள் எதிர்பாராத மற்றும் தைரியமான முன்மொழிவு ஒன்றைச் சொன்னது. "உங்கள் துயரை நாங்கள் உணர்கின்றோம். உங்களுக்கு நீதி வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்" என்று பெரிய மீன்கள் கூறின. "இன்று முதல் நாம் அனைவரும் சமம். யாரும் மற்றவரை விட உயர்ந்தவர்கள் இல்லை இனிமேல் சிறிய மீன்களும் பெரிய மீனாகிய நம்மைப் போலவே உரிமைகளைப் பெறுவர். இனி நாம் இருவரும் சமமாக இருப்பதால் ஏரியில் தனித்தனி பிரதேசங்களோ தடுப்பு வேலிகளோ தேவையில்லை. நாங்கள் இனி ஒரு பெரிய இணக்கமான சமூகமாக வாழலாம்” எனக் கூறின. “முழு ஏரியிலும் இரு பகுதியினரும் சுற்றித் திரியலாம்" என்றெல்லாம் கூறின. முத்தாய்ப்பாக பெரிய மீன்கள் "இவ்வளவு நாளும் பசி வந்தால் நாங்கள் மட்டும்தான் உங்களைச் விழுங்கினோம். இனி உங்களுக்குப் பசித்தால் நீங்களும் எங்களை விழுங்கலாம். அந்த உரிமை இனி உங்களுக்கும் உள்ளது. ஆகவே இனி அனைவருக்கும் சம உரிமை." என கூறின. சிறிய மீன்கள் அப்பாவியாகவும் நம்பிக்கையுடனும் பெரிய மீன்கள் மாறிவிட்டன. அவர்கள் முன்னம்போல் இல்லை என ஏனைய சிறிய மீன்களிடம் கூறின. இறுதியாக நீதி கிடைத்துவிட்டதாக சிறிய மீன்கள் நம்பின. ஆம் கடைசியாக சம உரிமை கிடைத்துவிட்டதாக சிறிய மீன்கள் கருதின. புதிதாகக் கிடைத்த வாக்குறுதிகளுக்காக பெரிய மீன்களைத் தடுக்கும் இயற்கையான தடுப்புகளை சிறிய மீன்கள் அகற்றின. தடைகள் நீங்கியதும் பெரிய மற்றும் சிறிய மீன்கள் இரண்டும் சுதந்திரமாக ஏனையவர்களது பிரதேசங்களுக்குள்ளும் நீந்திச் சென்றன. ஆனால் யதார்த்தம் பயங்கரமாக இருந்தது. பெரிய மீன் எந்தத் தடையும் இன்றி சிறிய மீன்களின் வீட்டு வாசல்களில் வந்து அவற்றை விழுங்கின. சிறிய மீன்கள் தமக்குக் கிடைத்த சம உரிமைக்கு அமைய பெரிய மீன்களை விழுங்க முயன்றன. ஆனால் அவற்றின் சின்னஞ்சிறிய வாய்களால் பெரிய மீன்களை விழுங்கவே முடியவில்லை. சமத்துவம் பற்றிய வாக்குறுதி ஒரு மாயையே தவிர வேறொன்றுமில்லை என்பதும் பெரிய மீன்கள் எதையும் மாற்றாமல் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு புத்திசாலித்தனமான சூழ்ச்சியைச் செய்து அனைவருக்கும் சம உரிமை என்று பேசி தங்களை ஏமாற்றி விட்டதாக காலஞ்செல்லச் செல்ல சிறிய மீன்கள் புரிந்து கொண்டன. எனவே ஏரியின் வரலாறு முன்பு போலவே தொடர்ந்தது. ஆனால் இப்போது சிறிய மீன்களால் எதுவும் செய்ய முடியவில்லை.😢 https://www.facebook.com/share/p/128h6yV5HDH/
-
சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
நீங்கள் செய்ய விடாத ஒன்றை நோக்கி ஏதாவது செய்ததா என்ற கேள்வியை எப்படி எழுப்ப முடியும்???
-
சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவான சூழ்நிலையில் (புலிகளின் கட்டமைப்புக்கள் முற்றிலும் சிதைவடைந்த காலப்பகுதியில்) அதற்கு நாம் கொடுத்த ஆதரவு என்ன?? மாறாக என்னைப் பொறுத்தவரை அதனை இயங்க விடாமல் செய்த தடைகளே அதிகம். (நான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளன் அல்ல) ஆனால் நியாயத்தை நிஜத்தை பேசணும்.
-
76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம்
@goshan_che நன்றி தரமான செயல். நான் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் பற்றி தான் அதிகம் எழுதுவேன். அதில் பலதையும் நீங்கள் சரியாக தொட்டிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை தாயகத்தில் உடைக்க முடிந்த அளவுக்கு கூட புலம்பெயர் அமைப்புகளை உடைக்க முடியாத படி இருந்தன. உங்கள் பலருக்கும் இது 2009 க்கு பின்னர் என்று தான் தெரிந்து இருக்கக்கூடும். ஆனால் எனக்கு அது சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த தொடங்கிய 2002 லிலேயே இது மும்மரமாகக்கப்பட்டு விட்டது. இதனை செய்வதற்கு சிறீலங்கா அரசுக்கு புலம்பெயர் தேசங்களில் சிங்களவர்கள் தேவையே இல்லை என்ற அளவிற்கு எமது இனத்தவர் முழுவதுமாக முழுநேரமாக உழைத்தனர் என்பது தான் கிரகித்து கொள்ள முடியாத நிஜம். இதனாலேயே யாழ் களத்தில் இவர்கள் சார்ந்த எழுத்துருக்களை காணும் போதெல்லாம் என் என் கண்கள் சிவக்கும். நன்றி சகோ நேரத்திற்கும் ஆக்கத்திற்கும்.
-
சிங்களத் தேசியக் கட்சிகளுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பது எமது கண்களை நாமே குத்துவதற்கு ஒப்பானது - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
உண்மையில் இங்கே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீது விமர்சனங்களை வைப்பவர்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். அவ்வாறு ஒன்று உருவானபோது அன்றைய சூழ்நிலையில் நீங்கள் அதற்காக என்ன செய்தீர்கள்?? நான் உட்பட. என்னைப் பொறுத்தவரை ஒன்று உருவான போது அதை உருவாக விடாமல் உருப்படவிடாமல் செயலாற்றிவிட்டு இன்று அது வலுவற்றதாகி விட்டபின் அதை நக்கல் நையாண்டி செய்வது எந்த வகையில் நியாயம்???
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
இது ஒரு வகை அடிமைத்தனம்?? அல்லது தாழ்வு மனப்பான்மை?? எம்மவர் மீது தான் தவறு இருக்கும் அல்லது எம்மவர் தான் எல்லாவற்றையும் விட்டு கொடுத்து போகணும் என்று உடல் முழுவதும் பரவி விட்டது?? இது @vasee க்கானது அல்ல பொதுவாக.
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
உங்கள் கருத்து மீது முரண்பாடில்லை சகோ. சட்டம் ஒழுங்கு சரியான முறையில் விதைக்கப்படணும் அவை எல்லோருக்கும் பொதுமானதாக பக்கச்சார்பற்றதாக இருக்கணும். நாம் கண்ட கனவு தேசம் என நமக்கு மறுக்கப்பட்டாலும் எவருக்குமே நீதிக்கான அநீதிக்கெதிரான எமது பார்வை ஒன்றே மாறாதது. மாறக்கூடாதது. அல்லவா? அத்திவாரம் தவறானால்??
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
என்ன செய்தாலும் நீ சிங்களத்தின் காலைப்பிடி என்பதை வேதமாக ஏற்றுவிட்டோம். எனவே ....
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
ஒரு குற்றம் நடந்திருக்கிறது. எந்த சூழ்நிலையில் யார் எதற்காக இதை செய்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆனால் இதற்குள் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கும் தேர்தலில் வேட்பாளராக உள்ள ஒருவரால் தனியாளாக தீர்ப்பெழுத முடிகிறது. என்ன நாடு இது? என்ன அரசு இது? என்ன சட்டம் நீதி இது? இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு யார் கையில் இருக்கப் போகிறது?????
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
எழுதுங்கள் நான் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் தேசிக்காய்களின் வரைபாக பார்க்கப்படும் என்பதால் விட்டு விட்டேன்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
இங்கே சிலர் புதிதாக பாடம் சொல்லிக் கொண்டே போகிறார்கள். எழுத்தை பார்த்தால் எல்லாமே புரியும் இவர்கள் முயல் பிடிக்கும் நாய்கள் அல்ல என்பது. தமிழர்களுக்கான தாகத்தை நாம் மட்டுமே போராடிப் பெற வேண்டும் என்பது தான் கனவும் நிலைப்பாடும். யாருடைய தயவிலோ அல்லது தட்டில் வைத்து பெறுவதோ நோக்கமாக ஒரு போதும் இருந்ததில்லை. கருணாநிதி எம் இனத்தின் ஒரு பகுதியை ஆண்ட தமிழர் தலைவர் என்ற முறையில், கடமையில் தன்னால் முடிந்ததை செய்யவில்லை மாறாக அதை தனது மாகாணத்திற்காக கூட அல்ல தனது சுயநலத்திற்காக குடும்பத்திற்காக எம் இனத்தின் அழிவை பயன்படுத்தி கொண்டார். அதேநேரம் எம்மை கடைசிவரை காப்பாற்றுவதாக நாடகமாடினார். மறக்க முடியாத துரோகம் இது.
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது
ஆம் அவர் முன்னர் கூறியதை காவித்திரியும் சிங்கள தேசிக்காய்க்கூட்டம் அவர் பின்னர் புலிகளுக்காகவே உயிரைக் கொடுத்ததை காவமாட்டார்கள். ஏனெனில் நாசியில் ஏறிய **** மட்டுமே மூளையில் உள்ளது.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நன்றி சகோ.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நம்பிக்கை துரோகமும் அண்ணண் தம்பியிடம் முதுகில் குத்து வாங்குவதும் அந்நியனின் எதிர்ப்பும் ஒன்றா சகோ? இந்த வலி புரியவில்லையா சகோ? இந்தியன் தானே எல்லோரையும் ஆட வைத்தான் அவனை அடக்க ஒரு ஊசி எம்மவரிடம் இருந்ததே சகோ. அப்படி நாம் நம்பினோமே சகோ? இவ்வளவும் பொய்யா சகோ????
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
நான் நினைக்கிறேன் முள்ளிவாய்க்காலுக்கு பின்னரே திராவிட இயக்கங்களின் கோரமுகம் எமக்கு முழுமையாக தெரியவந்ததாக. அதன் பின்னரே தமிழ் தேசியமும் தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளணும் என்பது உறைத்ததாக. இப்பொழுதும் நினைப்பதுண்டு முள்ளிவாய்க்கால் நேரம் தமிழகத்தை ஒரு தமிழர் ஆண்டிருந்தால் தடுத்திருக்க முடியும் என்று.
-
கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!
அது சரி ஆனால் கிளறி விட்டால் தானே கோழிக்கு தீனி....
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
முன்னர் அறிந்து இருந்தேன். சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தபோது உள் நுழைந்து விசாரித்ததில் காலை பின்னால் எடுக்க நேர்ந்தது.