Everything posted by விசுகு
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
உண்மை தான் அண்ணா ஆனால் சொன்னதும் எழுந்து அதற்குரிய மரியாதையை கொடுத்து இருக்கலாம். இது ஒருவகை புதிய வரலாற்றினை எழுதப் போகும் பாதை பாராளுமன்றம் என்கிறார்கள். அதில் நமது தவறுகள், முரண்பாடுகள் மற்றும் குளறுபடிகளை தவிர்ப்பது இனத்தின் வரலாற்றை தவறாக புரிந்து கொள்வதை தடுக்கும்.
-
கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி
கனடா ஒரு ஊதிப்பெருத்த முருங்கை நிலை தான். காசுகளையும் கடன்களையும் அள்ளி அள்ளி கொடுத்து மக்களை வாழ்நாள் முழுவதும் கடன்காரர்களாகவே வைத்திருக்கும் வைத்திருக்க முனையும் நாடு. கடனிலையே வாழ்நாள் முழுவதையும் தொலைத்து போய்ச்சேர்ந்த பலர் என் குடும்பத்திலேயே உண்டு.
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
உண்மை அண்ணா. ஆனால் அது அவர்களின் கையில் தான் உள்ளது. பணம் புகழ் என்று ஓடி திரிந்து தேவைக்கு அதிகமாக சொத்தையும் புகழையும் சேர்த்த பின் நமக்கு கிடைத்த இந்த உலகில் நாம் வாழப் போகும் சில வருடங்களில் நம் வாழ்க்கையை நமக்காக வாழ்ந்தோமா என்று கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து......????
-
13 பற்றி கதைக்கும் தருணம் இதுவல்ல; புதிய அரசமைப்பை உடன் இயற்றுங்கள்; சஜித் அணி வேண்டுகோள்
நல்ல விடயம் ஆபத்தானதும் கூட.
-
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
ஆனால் இங்கே குற்றச்சாட்டு புலம்பெயர் அமைப்புகள் நோக்கி, சார்ந்து. இதன் நோக்கம் மிக மிக ஆபத்தானது. ஆனால் நாமும் கடந்து சென்று விடுகிறோம்,???
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
எல்லாம் அளவோடு இருந்தால் தான் உணவு. இங்கே எல்லாவற்றையும் பணம் விழுங்கி முன்னால் நின்று வழி நடாத்துதல் தான் காரணம். பணம் வேண்டும் அதிலும் அதிகம் வேண்டும். அத்துடன் அதுவும் வேண்டும். இவை இரண்டும் அதிக அளவில் சமமாகக்கிடைத்தல் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சாத்தியமற்றது. எனவே... அது சரி எல்லாப் புகழும் தனுசுக்கே என்று ஒன்று போய்க்கிட்டிருக்கே?? உயிரே நீதானே நீதானே என்று இருவரும் பாடியது ?????
-
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் ராணுவ தளபதிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்
நல்ல விடயம் அப்படியே எம் பக்கமும் திறக்கப்படும்?
-
"வடக்கு கிழக்கில்" வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்பு!!
26, 27 இயற்கையும் எமக்கு எதிராக. ..😭
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
சோறு முக்கியம் அமைச்சரே...
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நான் ஒரு இலங்கை பூர்வீக தமிழன் என்பதை நிறுவ எவ்வளவு சுத்தி சுத்தி வரவேண்டியுள்ளது.... 😰
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
இன்றைய பிரெஞ்சு செய்திகளின் படி: ரசியா நீண்ட தூரம் போகக்கூடிய ஏவுகணைகளை பக்கத்தில் உள்ள உக்ரைன் மீது ஏவியிருக்கிறது. (அப்படி புட்டின் அறிக்கை விடுகிறார்) இதில் அச்சம் என்னவென்றால் இதன் வேகம் அதிகம் என்பதால் அதனை தடுப்பது கடினம். அந்த நிலையில் இதில் அணுவை வைத்து அனுப்பினால்??? இன்னொன்றையும் சொன்னார்கள் இந்த ஏவுகணையின் இருப்பு ரசியாவிடம் மிக மிக குறைவு.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதுவரைக்கும் உங்களை பிரிந்து இருக்க அவரால் முடியாதல்லவா? கவலை வேண்டாம் 🤩
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அபத்தம் அபத்தம் 🤣 இது வன்முறை அல்ல மென்வலு பெண்மை மென்வலு பற்றியது😋 😋
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அவங்களுக்கு நாலு குடுத்தாலும்???🤣
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நன்றி
-
சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
உண்மை தான் ஆனால் சுவிஸ் பென்சன் காரர் என்றால் பணம் வந்திருக்கும் என்பதையே குறிப்பிட்டேன்.
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
என்னைப் பொறுத்தவரை முன் பள்ளிகளில் படிப்பிக்க சமுக அக்கறையுடைய சாதாரண தரத்தில் சித்தியடைந்த பிள்ளைகளே நன்று. இது அநேகமான வெளிநாடுகளில் அடுத்த கட்டங்களுக்கு சாதாரண தரத்தில் மட்டுமே சித்தியடைந்த பிள்ளைகளையும் நகர்த்துவதற்கும் உதவும். எனது ஊரில் போர்க் காலத்தில் சாதாரண தரத்திற்கு மேல் செல்லமுடியாத பல பிள்ளைகள் உள்வாங்கப்பட்டு பின்னர் பாடசாலைகளுக்கு மாற்றமாகிச்சென்றதும் நடந்தது. கிட்டத்தட்ட 15 முன் பள்ளிகளில் 18 க்கு மேற்பட்ட பிள்ளைகள் உள்வாங்கப்பட்டு ஆறு வருடங்களாக எமது ஊர் ஒன்றியம் மூலம் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் சம்பளம் மட்டும் வழங்கப்பட்டது. பின்னர் டக்லஸ் மற்றும் அரச குளறுபடிகளால் நிறுத்திக்கொண்டோம். பட்டப்படிப்பை தொடரமுடியாத பிள்ளைகளுக்கு தான் இது ஒரு வரப்பிரசாதம்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
அதுசரி பிரதி அமைச்சர்களே இல்லை என்று ஒரு செய்தி வந்ததே? இது என்ன குறைநிறப்பா??
-
சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
சுவிட்சர்லாந்தில் வேலை செய்து ஓய்வூதியம் வழங்கும்போது ஒரு தொகை பணமும் கொடுக்கப்படும். இதை தெரிந்து தகவல் கொடுத்துள்ளனர்.
-
சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
இவ்வளவு பணம் மற்றும் பொருட்களுடன் தனியே??
-
முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
இந்த முன் பள்ளிகள் சார்ந்த பெரிய அனுபவம் உண்டு. டக்லஸ் எங்கள் ஊரில் இதை தேர்தல் காலத்தில் மட்டும் பயன்படுத்திக் கொண்டார். இது நிரந்தரம் என்றால் வரவேற்கத்தக்கது. ஆனால் அதிலும் பட்டதாரிகளாக இருக்கவேண்டும் என்பது நன்றன்று. முன் பள்ளிகளுக்கு எதுக்கு பட்டதாரிகள்????
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
நான் அவ்வாறு நினைக்கவில்லை சகோ. தமிழரை வளர விடுவது எவ்வளவு ஆபத்து என்று அடிக்கடி கலவரம் செய்து அடக்கினார்களோ அதை விட பலமடங்கு அதிகமான ஆபத்து முஸ்லிம்களை வளர விடுவது என்பது தான் சிங்களத்தின் தூரப்பார்வை. ஆனால் முஸ்லிம் நாடுகளின் அரவணைப்பையும் காத்தபடி இதை அவர்கள் முஸ்லிம்களை அரவணைத்து தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களுக்கு எதிராக அழிவுகளை செய்ய வைத்து தமிழர்களின் எதிரியாக்கி அதே அழிவுகளின் சாட்சியங்களை வைத்து அவர்களில் சிலரை வைத்து பேரழிவை ஏற்படுத்தி (ஏப்ரல் தாக்குதல்) முழுமையாக தனிமைப்படுத்தி எந்த அதிகாரமோ பதவியோ பாதுகாப்போ அற்ற நிலைக்கு கொண்டு வந்தாச்சு. பார்க்கலாம் சகோ. நான் அவ்வாறு நினைக்கவில்லை சகோ. தமிழரை வளர விடுவது எவ்வளவு ஆபத்து என்று அடிக்கடி கலவரம் செய்து அடக்கினார்களோ அதை விட பலமடங்கு அதிகமான ஆபத்து முஸ்லிம்களை வளர விடுவது என்பது தான் சிங்களத்தின் தூரப்பார்வை. ஆனால் முஸ்லிம் நாடுகளின் அரவணைப்பையும் காத்தபடி இதை அவர்கள் முஸ்லிம்களை அரவணைத்து தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களுக்கு எதிராக அழிவுகளை செய்ய வைத்து தமிழர்களின் எதிரியாக்கி அதே அழிவுகளின் சாட்சியங்களை வைத்து அவர்களில் சிலரை வைத்து பேரழிவை ஏற்படுத்தி (ஏப்ரல் தாக்குதல்) முழுமையாக தனிமைப்படுத்தி எந்த அதிகாரமோ பதவியோ பாதுகாப்போ அற்ற நிலைக்கு கொண்டு வந்தாச்சு. பார்க்கலாம் சகோ. நான் அவ்வாறு நினைக்கவில்லை சகோ. தமிழரை வளர விடுவது எவ்வளவு ஆபத்து என்று அடிக்கடி கலவரம் செய்து அடக்கினார்களோ அதை விட பலமடங்கு அதிகமான ஆபத்து முஸ்லிம்களை வளர விடுவது என்பது தான் சிங்களத்தின் தூரப்பார்வை. ஆனால் முஸ்லிம் நாடுகளின் அரவணைப்பையும் காத்தபடி இதை அவர்கள் முஸ்லிம்களை அரவணைத்து தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களுக்கு எதிராக அழிவுகளை செய்ய வைத்து தமிழர்களின் எதிரியாக்கி அதே அழிவுகளின் சாட்சியங்களை வைத்து அவர்களில் சிலரை வைத்து பேரழிவை ஏற்படுத்தி (ஏப்ரல் தாக்குதல்) முழுமையாக தனிமைப்படுத்தி எந்த அதிகாரமோ பதவியோ பாதுகாப்போ அற்ற நிலைக்கு கொண்டு வந்தாச்சு. பார்க்கலாம் சகோ.
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்