Everything posted by விசுகு
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்!
மாவீரர்கள் யார்? அவர்களை வணங்காமல் மாவீரர் நாள் எப்படி?? எல்லாம் பொதியும் இவ்வாறு தான் தமிழர்களுக்கு காட்டப்பட்டது. காட்டப்படும்...
-
காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தை மாற்றுங்கள் - ஐநாவின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - அனுரவிற்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம்
நீங்கள் தேடுபவர்கள் இங்கே வரார். அவர்களே ஒரு குத்துமதிப்பாக தான் மதிலில் நிற்கிறார்கள். பழக்க தோசத்தில்....
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
தமிழ் வாழும் வரை உன் பெயர் வாழும். தேசிய தலைவருக்கு 70 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
அவர்கள் என்னை கள்ளன் என்றும் இயக்கப்பணத்தை ஆட்டையப் போட்ட கூட்டம் என்றும் வியாபாரி அதிலும் குண்டூசி வியாபாரி என்றெல்லாம் எழுதும் வரை சிநேகிதன் மட்டுமே. அதை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழை நேசிப்பதால் நான் தான் உங்கள் எதிரியாச்சே. எப்படி உங்களிடமிருந்து நியாயம் எனக்கு கிடைக்கும்?????
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
காட்டி இருக்கின்றேன். அது ஆனிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் சுடு தண்ணீர் தடவ இங்கே வரும் உங்களை போன்றவர்களின் கண்களில் பட்டாலும் வாசிக்க வராது. வேண்டும் என்றால் உக்ரைன் மற்றும் இஸ்ரேல் திரிகளிலும் தடை செய்யப்பட்ட நண்பர்கள் சம்பந்தமான நிர்வாக நடவடிக்கை திரிகளிலும் இன்றும் பார்க்கலாம். இங்கேயும் தவறு நடக்கவில்லை என்று எழுதவில்லை. எல்லோரும் குறை உடையோரே என்றே எழுதினேன். அதை ஊதிப்பெருப்பித்து தூற்றுபவர் இங்கே வருவதே இவ்வாறு குண்டு போட மட்டுமே.
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
யாழ் களத்தில் 15 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவம். இத்தனை வருடங்களாக ஒருவர் எப்படியானவர் எவ்வாறு எழுதுவார் எதற்காக தனது பொன்னான நேரத்தை இங்கே செலவு செய்கின்றார் என்ற புரிதல் உண்டு. நானும் அதே நோக்கம் மற்றும் நிலைப்பாடு தான். அவ்வாறானவர்களுடன் சேர்ந்து சிநேகபூர்வமாக சிந்தித்து எதையாவது முயலலாம் என்று தான் இங்கே வருகிறோம் அவ்வாறான ஒரு இடத்தில் எங்கே ஒருவர் சிறு தடம்புரள்வார் அவரை வைச்சு செய்ய வேண்டும் என்கிற மனநிலை எனக்கு சரிவராதது. இங்கே பலரும் அப்படி தான். ஒரு கருத்துக்களத்தில் கூட நடப்பவனுடன் ஒற்றுமை பேண முடியாதவர்கள் எவ்வாறு தாயக கட்சிகளின் இன்றைய பிரிவு நிலை சார்ந்து பேசமுடியும்?
-
கூட்டை முறிக்க யோசிக்கிறதா?; ரெலோவும் தனி வழியில்?
தனிக்குடித்தனம் பொது நோக்கம் காலி....
-
பகிரங்க மன்னிப்பு கோரிய அர்ச்சுனா!
அது ஒரு சிங்கள தேசிய புத்த.... அதுக்கு எல்லோரும் எதிரி தான் சுமந்திரன் உட்பட.
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
நூறு வீதம் தூய்மை என்பது எங்கும் இல்லை. ஏதாவது புரியுதா? ****
-
யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
தேசியத்தை நேசிப்பவர்கள் மேல் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்க மாட்டார்களா என்று அலையும் கூட்டம் ஒன்று யாழ் களத்தில் மாத்திரமல்ல எல்லா இடங்களிலும் உண்டு. அதனால் பலரும் தம்மை 💯 தூய்மைவாதிகளாக அணல் மிதித்து நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆனால் 💯 தூய்மை என்பது எங்கும் எவரிடமும் இல்லாதது..
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
என்ன சகோ பம்பாய்க்கு போனேன் விவாகரத்து கேட்கிறேன் என்றால் யாருக்கு காது குத்துதல்?? யார் கேட்டார்கள் இவர்களிடம் இந்த அறிக்கையை.? இங்கே இவர்கள் மிக மிக சுயநலமாக சிந்திக்கிறார்கள். பணம் பிரபலம் புகழ் கௌரவம் குடும்பம் பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லாம் முன்னர் போல வேண்டும். ஆனால் நாங்கள் ஒன்றாக இல்லை இருக்கவும் மாட்டோம். அப்படியானால் அவையும் பழையது போல் இருக்க வாய்ப்பில்லை. தனியே இருக்கும் ஒரு பிரபலம் பழைய மரியாதையை பெறமுடியாது. பம்பாய்க்கு போய் 15 நாளில் எடுத்த முடிவில் ரகுமானின் அந்த அப்பாவி முகம் கண்ணுக்குள் வரவில்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இனி எல்லா புகழும் கேள்விகளுக்குறியே? 1500 கோடி சொத்து என்பது இதற்கு மேலும் செய்யவைக்கும்.
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இது எனக்குத்தான்🤣
-
வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கங்கள் அனுப்பும் நிதி லஞ்சம், ஊழலை வளர்த்துவிடுகின்றது!” - ஆளுநர் வேதநாயகம்
இது உண்மை தான் ஆனால் இதற்கான உங்கள் மாற்றீடு என்ன? வடமாகாண சபைக்கு இது சம்பந்தமான அதிகாரமும் அங்கீகாரமும் வேண்டும் கொடுப்பீர்களா?
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இவர்கள் சொல்லும் காரணத்தை எவராலும் புரிந்து கொள்ள முடியாது. உண்மையை பேசுங்கள். அல்லது அறிக்கை விட்டு மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்துங்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்றை பேசுவதால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.
- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
ஆமாம் அண்ணா மாற்றத்தை நானே தொடக்குகிறேன். சம்பிரதாய பழக்க வழக்கங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் அதை நாமே செய்யவேண்டும் என்பது தான் எனது விருப்பம். இதன் மூலம் தமிழ் மற்றும் இனம் சார்ந்த சிலவற்றை நாம் தொடர்ந்து காப்பாற்றலாம் என்று நான் நினைக்கிறேன். மாற்றங்களை உள் வாங்காத மொழியும் இனமும் அழிந்து போகும். ஏன் ஐயர் என்றால் இப்போதைக்கு தாலி கட்ட அவர் தேவைப்படுகிறார். ஆனால் என் பூட்டன் கலியாணமே செய்யப்போவதில்லை. எனவே ஐயரும்......?
- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
-
நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
எனது மகனின் திருமணத்தில் எனது மருமகளை (மணப்பெண்ணை) ஜயர் (நன்கு தெரிந்த ஊரவர் தான்) எனது மகனின் காலில் விழுந்து கும்பிட சொன்னார். அப்படி செய்ய தேவையில்லை என்று சொன்னேன். இது எமது சம்பிரதாய முறைப்படி வழமை என்றார் அப்படியானால் உங்கள் சம்பிரதாய வழக்கத்தை மாற்றுங்கள். எனது பிள்ளை எவரது காலிலும் விழக்கூடாது என்று எப்படி வளர்க்கின்றேனோ என் மருமகளுக்கும் அஃது தான் என்று மறுத்து விட்டேன். இது ஒரு அடிமை மனப்பான்மையையும் மறுபுறம் ஆதிக்க மனோபாவத்தையும் அன்றிலிருந்தே இருவர் மனதிலும் புகுத்தி விடும்.
-
கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி
நான் சொல்ல வந்தது மிகவும் இலகுவாக பல லட்சம் கடன்களை எடுக்க முடிகிறது என்பது. நன்றி.
-
கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி
மக்களுக்கு இவ்வாறு மேற்படிப்புக்கு கடன் எடுத்து ஊர் சென்று படம் காட்டியவர்களையும் தெரியும் அந்த கடனை அவர்களது பிள்ளைகள் மேற்படிப்புக்கு போகும் வரை கட்டிக்கொண்டு இருக்கும் பிள்ளைகளையும் தெரியும்.
-
கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
கனடாவில் 25 வீத பெற்றோர்களுக்கு உணவில்லை – ஆய்வில் அதிர்ச்சி
அரசின் வங்கிகளின் திட்டங்கள் கடன் கொள்கைகள் தான் காரணம். பிரான்சில் எனது மகனின் மேற் படிப்புக்கு வங்கிகளில் கடன் கேட்டபோது ஆகக் கூடியது 15 ஆயிரம் ஈரோக்கள் அதுவும் கடன் பெற்று இரண்டு வருடங்களுக்கு பின்னர் அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்குள் கட்டி முடிக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் (அதுவும் வருடத்திற்கு 50 ஆயிரம் ஈரோக்கள் சம்பளம் எடுக்கும் ஒருவரின் உத்தரவாதத்துடன்) கடன் தந்தார்கள். மகன் படிப்பு முடித்து வேலைக்கு போய் முதல் வேலையாக கடனை கட்டி முடித்தான். கனடாவில்.....?
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
தவறு நடக்கவில்லை என்று நான் குறிப்பிடவில்லை. குழப்பவாதிகளாக எம்மை காட்ட நாம் காரணமாகிவிடக் கூடாது என்று மட்டுமே எழுதுகிறேன். நன்றி அண்ணா.