Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. இது போன்ற கருத்துக்களை இங்கு அடிக்கடி காணும் போது நினைப்பதுண்டு. இக்கருத்தை வலியுறுத்துபவர்கள் இன்னும் மோட்டுச் சிங்களவன் என்ற நிலையில் இருந்து மீளவில்லை என்று. 😭
  2. நன்றி சகோ @goshan_che இன்று உங்கள் பல மணித்துளிகள் எனக்காக. நன்றிகள் மீண்டும்.
  3. பயங்கரவாத தடைச் சட்டம் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானது இதில் சிங்களவருக்கு தாயகத்தமிழர் புலம்பெயர் தமிழர்கள் என்ற பாகுபாடு இல்லை. நாம் தான் நமது கதவை தட்டும் வரை?????
  4. ஆம் பயங்கர வாத தடைச்சட்டம் இருக்கும் வரை இலங்கை மீது சர்வதேசமோ தமிழரோ நம்பிக்கை வைக்க மாட்டார்கள். அதுவரை இலங்கை அமுங்கி கொண்டே இருக்கும். அனுரா இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கையின் மீட்பராக தன்னை உயர்த்திக் கொள்வாரா அல்லது அதே சகதியில் மூழ்கி சிங்கள மக்களாலையே தூக்கி எறியப்படுவாரா? காலம் சொல்லும்..
  5. தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: திரு அனுரா குமார திசாநாயக்க அவர்கள் மிக சில நாட்களில்/வாரங்களில் சாதிக்க போவதாக வழங்கியிருந்த வாக்குறுதிகள் மின்சாரக் கட்டணத்தைக் மூன்றில் ஒரு பங்கு குறைப்போம். உதாரணமாக, ரூபா 3,000 மின்சார கட்டணம் , ரூபா 2,000 ஆக குறைக்கப்படும். ரூபா 9,000 மின் கட்டணம் ரூபா 6,000 ஆக குறைக்கப்படும். எரிபொருளுக்கான வரி ரூபா 50 வை நீக்கி எரிபொருள் மீதான விலையை குறைப்போம் உதாரணமாக டீசல் லீட்டர் ஒன்று ரூபா 100 இற்கு வழங்குவோம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மதிப்பீட்டில் (DSA) உடன்பட மாட்டோம் Bailout programme குறித்து மீள் பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு நன்மைகளை பெற்று கொடுப்போம் அரிசி இறக்குமதியை முழுமையாக தடை செய்து அரிசி மாஃபியா வை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் அரசின் கமிஷன் கலாச்சாரத்தை முழுமையாக கட்டுப்படுத்தி முட்டை , தேங்காய் உட்பட்ட பொருட்களுக்கான விலை தளம்பலை இல்லாதொழிப்போம் பாராளமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை முடிவுக்கு கொண்டு வருவோம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சம்பளத்தை உயர்த்துவோம். பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிப்போம் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களிடம் மதுபான அனுமதி பத்திரம் (Liquor Permits) பெற்ற சகல அரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்துவோம் தகுதி அடிப்படையில் மட்டுமே அரசங்கத்தில் உயர் பதவிகளுக்கான நியமனங்கள் செய்யப்படும் ஊழல் மோசடி பேர்வழிகளுக்கு எந்த வாய்ப்பும் அரசாங்கத்தில் வழங்கப்படாது இவ்வாறு தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திரு அனுரா குமார திசாநாயக்க அரசாங்கம் தவறியதோடு IMF யின் DSA உட்பட்ட விவகாரங்களில் U TURN எடுத்திருக்கின்றது இது போதாதென்று அசாதாரண காலநிலை தொடர்பான Disaster Management யையும் சரியாக கையாள முழுமையாக தவறியிருக்கின்றார்கள் ஆனால் சலிக்காமல் பொய்களை சமூக தளங்களில் பரப்புகின்றார்கள் நன்றி: இனமொன்றின் குரல் https://www.facebook.com/share/p/18AXGvhU4u/
  6. முன்னைய போராட்டத்திற்கு தமிழர்களின் ஆதரவைக் கேட்டு, அனுமதி பெற்றா செய்தார்கள் தொடங்கினார்கள்???
  7. இது தமிழர்களை தமிழர்களோடு உரசவிட நூல் விடும் ஏற்பாடு. அவர்கள் நினைத்ததை விட அதிகமான பலனை கொடுக்கத் தொடங்கி இருப்பது யாழ் களத்திலும் காணக்கிடைக்கிறது.
  8. புலத்தில் உள்ளவர்களும் அறிக்கை விடக் கூடாது தாயகத்தில் உள்ளவர்களையும் அறிக்கை விடக்கூடாது என்றால் இதில் யார் திருந்தணும்?? இந்த சிங்கள தேசியவாதிகளின் எடுபிடி தாங்கமுடியல சாமி....
  9. பயங்கர தடைச்சட்டம் மிகப்பெரிய ஆயுதம் சிங்களவருக்கு. அதை அவர்கள் கைவிடுவார்கள் என்று எம்மவர் சொல்வது தான் மிகப் பெரிய ஏமாற்றுதல்.
  10. இது தான் சகோ சீமான் சொல்லும் அதிகாரம். அது எவன் கைவசம் இருக்கிறதோ அதுவே வேதம் தத்துவம் கட்டளை..
  11. இனி இப்படியான பொரிகள், பொதிகள் அள்ளி வழங்கப்படட்டு அவை யானைகளாக காட்சி(வீடியோ) பெரிப்பித்து ஊதப்படுவது தொடரும் ...
  12. சட்டம் நீதி எல்லோருக்கும் சமன் என்கிறார்கள். பார்க்கலாம்.
  13. எனக்கு அவருடன் நேரடி அனுபவம் உண்டு. எனவே அவர் இதை செய்திருக்க மாட்டார் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவரிடம் படித்த பல மாணவர்கள் எனது உறவுக்குள் இருக்கிறார்கள். அதில் முந்நாள் போராளிகளும் அடங்குவர். ஆனால் நான் இவற்றை சொல்லும்போது அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஊரிலும் இவ்வாறு என்றபடியால் தான் அவரால் தொடர்ந்து அதிலும் அதிக வாக்குகளால் வெல்ல முடிகிறது??? அதனால் தான் உங்களிடம் முக்கிய ஆதாரங்கள் உள்ளனவா என்று கேட்டேன். நன்றி..
  14. வணக்கம் சகோ சிறியரில் எனக்கு பொதுவேலைகள் மற்றும் தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் இந்த சாராயக்கடை விடயத்தை தொடர்ந்து நீங்கள் இங்கே சிறியருக்கு எதிராக பலமாக தொடர்ந்து பாவிக்கிறீர்கள். உங்களிடம் அந்த அளவுக்கு தேவையான ஆதாரங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அவை என்ன என்று எங்களுக்கும் தெரியத் தரலாமே.
  15. சிலவற்றை நாம் மீண்டும் மீண்டும் கிளற மாட்டோம். அவற்றை நாமே வெளியே கொண்டு வந்து காவித் திரிந்து எம் சகோதரர்களுக்கு எமக்காக உயிர் வந்தவர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்ள மாட்டோம். இது தான் நாம் அவர்களுக்காக செய்யக்கூடிய மிகக்குறைந்த செயல். மாறாக ஒரு குற்றச்சாட்டு அதிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை காவி சேறுபூசுவது????
  16. சில விடயங்களை செய்ய சிலரால் மட்டுமே முடியும். அதை அவர் செய்தால் போதும். போற்றுதலுக்குரியவரே. 💯 வீத தூய்மை என்பது எங்கும் இல்லை. இல்லாத ஒன்றை எதற்காக தேடி இருக்கும் நண்பரையும் இழப்பான்???? நமக்கு ஒத்துவராத அவரது செயல்களுக்கு நாம் ஆதரவளிக்காதிருந்தாலே போதும் அது அவரே பாதை மாற்ற உதவக்கூடும்?
  17. எமது இனத்தின் குறைபாடு இது தான். ஒவ்வொரு மனிதனிலுமுள்ள குறைகளை கண்டு பிடிப்பதே முழுநேர வியாதியாகும். ஆனால் அவர்கள் செய்யும் செய்த செயல் சார்ந்து சிந்தித்தால் கை விரல் நீட்டுபவர்கள் வெறும் பூச்சியமே. 😭
  18. என்னவோ தெரியவில்லை இன்று காலையில் ஒரு நல்ல செய்தி போல் இருக்கிறது...
  19. ஆழ்ந்த இரங்கல்கள் அனைவருக்கும் நன்றிகள் பலமுறை நான் அவரை அவரது வீட்டிலும் (Bremen) அவர் என்னை எனது வீட்டிலும் சந்திக்க நாள் குறித்தும் கடைசிவரை முடியாமலேயே போன உறவு. இறுதியாக அவர் எம்மை விட்டு பிரிந்த பின்னர் எனது அக்காவின் மகன் அந்த இடத்து பெண்ணை திருமணம் செய்த போது அங்கே நின்று இவரைத் தான் நினைத்தேன். குடும்பத்தை விசாரித்தேன். என் மருமகனுடைய மனைவி உட்பட அனைவருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் தெரிந்திருந்தது. தமிழ்க்கல்வி, இசை மற்றும் ஆலய வழிபாடுகளில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் இவற்றை பயிற்றுவிப்பதிலும் அவரும் அவரது துணைவியாரும் பெரும் பங்காற்றி இருப்பதை அறிந்து பெருமை கொண்டேன். அன்றே அவரது யாழ் களத்தின் எழுத்துக்கள் மற்றும் உறவுகள் பற்றி அவரது மனைவியாரை சந்தித்து சொல்ல வேண்டும் என்று முயற்சித்தேன். அதுவும் முடியாமல் போய்விட்டது. 😭 ஓம் சாந்தி.
  20. இந்த முன்னால் பின்னால் உள்ள வசனங்களை புரிந்து கொள்தல் தான் எமது பலமும் பலவீனமும் ..👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.