Everything posted by விசுகு
-
நான் கறுப்பு ஜேர்மன்காரன் 😎
இன்று தான் முழுவதும் வாசிக்க கிடைத்தது. நல்லதொரு பதிவு. சரியாக எடுத்துக் கொண்டால் பலருக்கும் இனியாவது உதவக் கூடும்??? தன்னை சுயவிமர்சனம் செய்வதே முதலாவது படி.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
அவை எவை என்று எழுதினால் நாங்களும் ஆராயலாம். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் முதலாக இன்னொரு நாட்டின் இராணுவம் ரசியாவுக்குள் வந்திருக்கிறது என்பதை விட வரும் தைரியத்தை பெற்றிருக்கிறது. இன்னொரு நாட்டின் இராணுவத்திற்கு பயந்து மக்களை வெளியேற்றி அவசரகால நிலையை கொண்டு வரும் அளவுக்கு ரசியா பாதிக்கப்பட்டிருக்கிறது. இதை புட்டின் உணர்ந்து கொண்டால் பாரிய மாற்றங்கள் உலக ஒழுங்கில் நடக்கும். உணராவிட்டாலும் நடக்கும்.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
ஆம் பிறந்த மண்ணில் இருந்து கலைக்கப்பட்டாச்சு இருக்கும் இடத்தையாவது பகைவர்களிடமிருந்து காக்கணும். இது சுயநலம் என்றால் அதில் பொதுநலனும் சேர்ந்தே இருக்கிறது.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
நான் எங்கள் வீடு என்று சொல்வது நாம் வாழும் நாடு. இதைக் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால்....???
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
பதில் ரொம்ப சுலபம் அண்ணா. எமக்கு நண்பர்கள் என்று எவரும் இல்லை. ஆனால் இது நம்ம வீட்டுக்குள் வரப்போகிறது. அவ்வளவு தான். அப்படியானால் அவர்கள் எப்படி நேட்டோ இராணுவம் என்று உங்களால் முத்திரை குத்த முடியும்??
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
முகம் தெரியாத இந்த கருத்து களத்தில் எழுதப்படும் கருத்துக்களை வைத்து மட்டுமே ஒருவரை வகைப்படுத்த முடிகிறது மேலும் நம்பமுடியாத செய்தியல்ல. கற்பனையே செய்ய முடியாத விடயம் நீங்கள் சொல்வது. உக்ரைனுக்குள் உட்புகவே ஒன்றிற்கு ஆயிரம் தடவை யோசித்து பின் நிற்கும் நேட்டோ ரசியாவுக்குள் நிற்கிறது என்பது.
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
எழுத்து மூலம் கேட்டது கிடைத்தால்?? போட்டியில் இருந்து விலகினாலும் தகும் வந்தால் மலை போனால்....,!(இது எனது கருத்து மட்டுமே.
-
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த தமிழ் பொதுக்கட்டமைப்பு
எது எப்படியோ சிங்களம் இதன் விளைவுகளை புரிந்த அளவுக்கு எம்மவர்???
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உங்களை கொஞ்சம் விசயம் தெரிந்தவர் என்று இதுவரை நினைத்திருந்தேன். 😪
-
அரியம்: பாக்கியமா, பலியாடா?!
ஆம் தமிழர்கள் ஒற்றுமைப்பட்டால் பாக்கியம். இல்லாவிட்டால் பலியாடு. தவறு எம்மிடம் உள்ளது.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
28 கிராமங்கள் உக்ரைன் படையினரிடம் விழுந்துள்ளன, 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நிலைமை மிக மோசமானதாக காணப்படுகின்றது என உள்ளுர்ஆளுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொல்லைக் கொடுத்து அடி வாங்குவது என்பது இதைத் தான். இனி போர் ரசியாவுக்குள் தான்....
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
போன வாரம் எழுதப்பட்ட இந்த எனது கருத்துக்கு இன்று இருவர் விருப்ப வாக்குகள் இட்டிருக்கிறார்கள். இது தான் நிலை. ஆனால் விதைப்பு தொடரும்.....
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஆம் காரணம் ஒற்றுமை இன்மை.
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
யுக்ரேனின் "துரோக" தாக்குதல் 🤣
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
தாயக மக்கள் முட்டாளாக்க படுகிறார்கள் போன்ற கருத்துக்களோ கணிப்புகளோ எனக்கு இல்லை. அவர்கள் தொடர்ந்து கூட்டமைப்பை ஆதரிப்பதற்கு காரணம் அவர்களது தூர நோக்கு தான் உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். போகவேண்டிய இடம் மிக மிக தூரம். பார்க்கலாம். நன்றி.
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
நடந்த அநியாயங்களுக்கு மீண்டும் மீண்டும் நீதி கேட்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படும். முக்கியமாக நீதியும் வாக்குறுதிகளும் மறுக்கப்பட்டதால் தமிழர்கள் வட்டுக்கோட்டையிலேயே உறுதியாக நிற்கிறார்கள் என்று தெரியவரும். இது யாரை எம் பக்கம் சிந்திக்க வைக்கும் என்று கேட்டால் பதில் தெரியாது. ஆனால் எமது கையில் ஒரு பைல் மீண்டும் கனமாக இருக்கும்.
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
ஒரு உதாரணத்திற்கு மேலே கந்தையா அண்ணா குறிப்பிட்ட அறிக்கையையும் கோரிக்கையையும் முன் வைத்து பொதுவேட்பாளருக்கு தமிழர்கள் மீண்டும் ஒன்று திரண்டு வாக்களித்து இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் இருத்தினால்???
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
அவற்றை கட்சியை முதலில் கோட்டில் இருந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் யாரு யார் மேல் நடவடிக்கை எடுப்பது என்று பார்க்கலாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இந்த செய்தி பொருந்தவில்லையே??? லங்கா புவத்தில் எடுத்தீர்களா???🤣
-
பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்
அப்படியானால் அப்டேட்ஸ் செய்து வாழும் நீங்கள் சொல்லுங்கள். அவர்கள் இல்லாத நாடு ஒன்றை சொல்லுங்கள் (உங்கள் கருத்துப்படியே பிரச்சினை இந்த நாட்டுக்காரர்கள் அல்ல.)
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
அது ......🙏
-
பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்
முதலில் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் வசதி வாய்ப்புகளுக்காக இங்கே ஓடி வரவில்லை. அடித்து துரத்தப்பட்டோம். இந்த மக்கள் எங்களுக்கு ஆதரவு தந்து அரவணைத்து உயிர் தந்தார்கள். இப்பொழுதும் இங்கே சட்டம் மற்றும் நீதி எங்களுக்கும் அவர்களுக்கும் ஒன்று தான். இதே சட்டம் நீதி அரசு என்னை அங்கே பாதுகாப்பதற்கு பதிலாக ஓடு இல்லையென்றால் கொல்லப்படுவாய் என்று கொலைகாரர்களுக்கு ஆதரவும் உற்சாகமும் கொடுத்தது. கட்டிய சறத்துடன் நிர்க்கதியாக நின்ற எனக்கான நீதி மற்றும் இன்சூரன்ஸ் கூட இதுவரை ஒரு சதமேனும் தரப்படவில்லை. இப்பொழுது இவை எனக்கு தரப்படும் என்று உங்களால் எனக்கு சொல்லவாவது முடியுமா??? ஆனால் எனக்கு இங்கே கிடைக்கும்.
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
அப்படியானால் வட்டுக்கோட்டை தீர்மானம் ஏன்??? அன்றிருந்த தமிழினம் மீதான அடுக்கு முறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இன்றும் உள்ளனவா?? அதிலிருந்து நாம் கேள்விகளை ஆரம்பிக்கலாமா??
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
1) சிங்கள அரசியல்வாதிகளை ஆதரித்து இதுவரை என்ன பயன்? 2) அந்த சாபக்கேட்டை போக்க மட்டுமாவது இதனை பாவித்தால் என்ன குறைந்து போய் விடும்??
-
தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன், அறிவிக்கப்பட்டுள்ளார்!
சிங்களம் பலமிழந்து தமக்குள் பிரிந்து நிற்கும் இன்றைய சூழலில் தமிழர் ஒற்றுமையாக தமது பலத்தை காட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று அங்குள்ளவர்கள் ஒன்று கூடி முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தமிழர்கள் ஒற்றுமையாக வழி மொழிதல் நடைபெற்றால் மட்டுமே அதன் பயனை அடைய முடியும். ஆனால் எம்மவர் எந்த பொறுப்பும் அற்று எடுத்தவுடன் கவுட்டுப்போடுவது எமது சாபக்கேடே.