Everything posted by விசுகு
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு - ஐரோப்பிய ஒன்றியம்
நம்ம சனம் புலிகளை மறந்தாலும் அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நேரம் ஒதுக்கி அவர்களை ஆராய்கிறார்கள். பைத்தியம் என்பர் எம்மவர்.
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
ஏதோ எங்களை மட்டும் அவிட்டு விட்டவை ஆக்கும்?? 🤣 அதையும் தாண்டி....?🥰
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
இளவரசர்கள் ஆயுதங்களை தொடுவதில்லை...😂
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
அப்ப தடி பொல்லு சைக்கிள் செயின் தெரிஞ்ச ஆள் என்றால் சாக்கு.. இவை தான் அதி உச்ச பவர் ஆயுதங்கள் 🤣
-
கிளிநொச்சியிலிருந்து காதலியைப் பார்ப்பதற்கு யாழ். வந்த இளைஞர் வாள் வெட்டுக்கு இலக்கு!
எனது காதலி ஸ்ரான்லி கொலேச்சில் படித்தார். நான் ஊரில் இருந்து வந்து சின்னக்கடையில் கடை வைத்திருந்த ஒன்றுவிட்ட அண்ணரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து கூட்டிக் கொண்டு சுத்தி விட்டு நாவலர் வீதி கச்சேரி நல்லூர் வீதியால் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு போய் விடுவது வழமை. ஒருவர் இங்கே மினக்கெடுகிறார். கண்ட இடத்தில் காலை முறிச்சு போட்டு விடுவேன் என்று அவா மேல் கண் வைத்திருந்த ஒரு பொடி சொன்னதாக ஒருநாள் காதலி என்னிடம் சொன்னார். நான் அதை போய் சின்னக்கடை அண்ணரின் காதில் போட்டேன். அடுத்த நாள் 4 சைக்கிள்களில் 8 பேர் கச்சேரி நல்லூர் வீதி முழுவதும் புகுந்து விளையாடி இருந்தார்கள் யாரடா என் தம்பியின் காலை உடைப்பன் என்று சொன்னவன் என்று. அந்த வீதியில் இருந்த ஒரு கடையை கூட விட்டு வைக்கவில்லை. நாங்க அப்பவே வேற மாதிரி.
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
உங்கள் கருத்துப்படி பங்களாதேசத்தை பாகிஸ்தானும் பாகிஸ்தானையும் வங்காளதேசத்தையும் இந்தியாவும் எந்த நேரத்திலும் ஆக்கிரமிப்பு செய்யலாம் என்பதாகிவிடும். மற்றவரின் ஒரு துண்டு நிலத்தைக் கூட நாம் அபகரிப்பு செய்யமாட்டோம். இது மண்ணின் மகிமை புரிந்தவர் கற்று தந்தது. அது தொடரும்..
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
போனவர்களை போற்றுவது போன்று பாசாங்கு செய்தபடி இருப்பவர்களை நசுக்குவது தான் உங்கள் அரசியல் என்றால் அதற்கு நிச்சயம் நான் கொள்ளி வைப்பேன்.
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
அதற்காக நாம் போராடாமல் இருக்கவில்லையே?
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
ஆக்கிரமிப்பாளர்கள் அழியட்டும்
-
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம்
உக்ரெய்னுக்கு 160கோடி டொலரை அனுப்பிய ஐரோப்பிய ஒன்றியம் நல்ல விடயம். வாழ்வா சாவா?? பார்த்திடலாம்...
-
இலங்கை தமிழரசு கட்சி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை - எம்.ஏ.சுமந்திரன்
அப்படியானால் சிங்கள வாக்குகள் மட்டுமே எனக்கு போதுமானது என்று கேட்டு ஒருவர் ஐனாதிபதியாக வந்து ஆண்டபோது சட்டம் படித்த இந்த .......... என்ன புடுங்கி கொண்டு இருந்தார்???
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
முதலிலேயே சொல்லி விட்டேனே மற்றவர்கள் ஏற்கவில்லை. ஏற்க தயங்குகிறார்கள். காரணம் பல.... அவ்வாறு வீண் சிரமங்களை எடுப்பதை விட டொலர் இருப்பது பாதுகாப்பு எல்லோருக்கும்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
பெறுமதி தான் முன்னேற்றம் என்றால் டொலரோ யூரோவோ பக்கத்தில் நிற்கவே முடியாதே ..
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
புரியவில்லை அண்ணா?
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஏனெனில் டொலரை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதை இனி மாற்றுவதாயின் பொது நாணயம் என்பது சாத்தியமே இல்லை. ஒவ்வொருவரும் மகாராஜா என்று நிற்பார்கள். யூரோ கூட டொலருக்கு போட்டியாக வந்தது என்று வெளியில் சொல்லப்படுகிறது. ஆனால் ஐரோப்பியர்கள் அப்படி நினைப்பதில்லை.
-
48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார்
48 வது தேசிய விளையாட்டு விழாவில் வடமாகாண வீரர் சாவகச்சேரியினைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன் 5.11M உயரத்தினை கடந்து புதிய சாதனையினை நிலைநாட்டியுள்ளார் https://www.facebook.com/share/6mUGvkA5M2xtjZAt/
-
யாழ்.கொள்ளைக்காரி கைது
உங்கள் கோபம் நியாயமானது. 🤣
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
இந்த வன்மம் தற்போது எம்மவரிடேயே பேசுபொருளாகி வருகிறது. அதனால் தான் உங்களில் உரசி பார்த்தேன். நன்றி தம்பி.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
தவறான கருத்து தடையை முதல் முதல் போட்டது இந்தியா. எனவே அவர்கள் தடையை முதலில் எடுப்பது தான் ஆரம்பமாக இருக்கவேண்டும். மற்றவை தானே விலகும். இதுவரை இலங்கையின் அழுத்தம் அல்ல தொடர்வதற்கும் புதுப்பித்தலுக்கும். இந்தியாவே முதன்மை. மற்றும் தடை எடுப்பினால் எதுவும் மாற்றப் போவதில்லை என்ற உங்கள் கருத்தை கண்டிக்கிறேன் . சாபப்பட்ட இனமாக நாம் செத்துவிட வேண்டுமா????
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
நீங்கள் சொல்வது உண்மை தான் வரலாறு தான். ஆனாலும் தமிழகமும் ஈழமும் சேர்ந்தால் மட்டுமே தமிழருக்கு ஏதாவது சாத்தியம். இதற்கு இடையில் நம்பிக்கை துரோகங்கள் ஏமாற்றங்கள் சுயநல அரசியல் புடுங்கல்கள் அனைத்தும் நாம் கடந்து தான் ஆகணும்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
சீமான் சொன்னது. அவர் சொன்னவை அனைத்தும் ஈழத் தமிழர்களின் குரல் என்பது மிகவும் அபத்தம். ஆனால் அது உங்களிடமிருந்து வருவது சாதாரணம்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
உங்கள் நோக்கத்தில் தவறு இருக்கும்வரை இவ்வாறு தான் உங்கள் கருத்துக்கள் முடிவுறும். யார் குற்றினாலும் உங்களுக்கு அது விழுவது புலிகளின் தலை மீதாக இருக்கவேண்டும்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
யார் குற்றியும் அரிசியானால் சரி.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
ஆனால் தமிழகத்தில் கையில் காசு வாங்கிக்கொண்டு வாக்குகளை செலுத்துவதை இதனுடன் நீங்கள் ஒப்பிட்டது தவறல்லவா??
-
தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள். சிங்களத்தில் எமக்கான குரல் ஒன்று ஓய்ந்து விட்டது.