Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. இது தான் தமிழரின் சாபம். எதையாவது ஒருவர் செய்ய முனைந்தால் ஆமாம் இவர் கிழிச்சுடுவார். எங்களுக்கு தெரியாததா?? என்று முளையிலேயே ......???
  2. போர் ஆக்கிரமிப்பை எதிர்த்து என்றால் அது திணிக்கப்பட்டதாகிவிடும். எனவே மண்ணுக்காக போராடுபவர்கள் எம்மை போல போராளிகளே. அவர்களை கோமாளிகள் என்பவர்களால் மண் மீட்பை ஒருபோதும் உணரமுடியாது ... அது தான் நியம்.
  3. இது தான் நாம் புரிந்து கொள்ள முடியாதது. நாம் இங்கே தவறுவோமானால் நமக்கு இன விடுதலை தாயக மண் மற்றும் எமது சொந்த வரலாறு பற்றி எதுவுமே தெரியாது என்று தான் அர்த்தம். சிறீலங்கா எனக்கு இலவச கல்வி மருத்துவம் தந்தது தான். ஆனால் எங்கள் மண்ணை விட்டு வெளியே போ என்ற எமது வேண்டுகோளை மறுத்து அடாத்தாக தனது அதிகாரத்தை எம் மீது பதிவதற்காக இத்தனையும் என் மீது திணித்தது. இப்பொழுதும் தொடர்கிறது. வாழு வாழ விடு என்பவர் நாம். எப்படி நன்றி உள்ளவர்களாக முடியும்???
  4. சும்மா ஏத்தவில்லை. காசு கொடுத்து ரிக்கேற் எடுத்து வந்தேன். அதனால் நன்றி இல்லை. ஆனால் ஜேர்மனிக்கு நன்றி உண்டு.
  5. நாடே அப்படி தான் இருக்கு. ம்ம் எப்படி இருந்த ரசியா??
  6. நாம் ஏன் நாம் தோற்றோம் என்பதற்கான பதில் இதில் இருக்கிறது 😭
  7. இனி இவை அவரை வழி நடாத்தும் ...? எம் பிள்ளைகள் என்ற நம்பிக்கை என்றும் உண்டு....
  8. உள்ளதும் போச்சே ... தொடரும்.....
  9. செய்தி : மன்னார் இளந்தாய் மரணத்தில் வைத்தியசாலை தரப்பில் தவறு நடைபெற்றுள்ளமை விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.!
  10. மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் சரியானதே. மக்களின் சராசரி வாழ்க்கையை கணக்கெடுக்காமல் அரசியல்வாதிகளின் ஆடம்பரமான மற்றும் ஊழலுக்கு மக்களின் கொதிப்பு இதுவாகவே இருக்கும். இதில் சில நரிகள் புகுந்து விளையாடுவதும் இயற்கையே.
  11. வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும்! தெய்வத்துக்கு நிகராக கருதப்படுகின்ற மருத்துவத்துறையில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து குறைந்து வருவதாகவே தோன்றுகிறது. "வைத்தியரிடமும் வக்கீலிடமும் உண்மையை மறைக்க கூடாது" என்று சொல்வார்கள். அதற்காக வைத்தியர்களும் வக்கீல்களும் உண்மைகளை மறைப்பது நியாயமாகுமா? 1.மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பில் மருத்துவமனையோ அல்லது மாகாண மருத்துவத்துறையோ அல்லது GMOA போன்ற மருத்துவ சங்கங்கள் ஏதாவது விளக்கமளிக்கும் அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளனரா? அவ்வாறு எதுவும் இல்லை எனின் அதற்கான காரணம் என்ன? 2. எமது நாட்டின் மருத்துவத்துறை உலகின் பல நாடுகளின் மருத்துவத்துறையை விட மேம்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த மருத்துவத்துறையினுள் இருக்கும் ஊழல்வாதிகள்/ சுயநல்வாதிகளின் செயற்பாடுகளை தட்டிக்கேட்க வக்கில்லாமல் மொத்த துறையும் இயங்குவது என்பது வெட்கக்கேடானது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறானவர்களின் செயற்பாடுகளால் தான் உண்மையில் மருத்துவத்துறையின் மாண்பை பாதுகாக்கும் பல வைத்தியர்களும் அவப்பெயர் வாங்கும் நிலை உருவாகிறது. 3. டாக்டர். அரிச்சுணாவின் பல அணுகுமுறைகளில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், மேற்படி மன்னார் வைத்தியசாலை விடையத்தில் நீதிகேட்டு பொதுமகனாக வந்த அரிச்சுணாவை கைதுசெய்வதிலும், ஜாமீனை நிராகரிப்பதிலும் காட்டிய அக்கறையை ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கான நீதியில் குறிப்பாக தாயை இழந்த அந்த பச்சிளங் குழந்தைக்கான நீதியில் காட்ட முடியவில்லை? குறைந்தபட்சம் இந்த இழப்பினை புரிந்துகொள்ளும் பண்பையாவது மருத்துவத்துறை சார்ந்தவர்கள் கொண்டிருப்பது அத்திய அவசியம் அல்லவா? ஆனால் அந்த வைத்தியசாலையில் எடுக்கப்பட்டிருந்த காணொளிகளில் வார்த்தைகளை உமிழ்ந்த வைத்தியர்கள் அல்லது காற்சட்டையுடன் நின்று பேசிக்கொண்டிருந்த (ஆள் என்ன பதவி என்று தெரியவில்லை) நபர் உள்ளிட்டவர்களின் நடத்தையை பார்க்கும் போது உண்மையில் அந்த அப்பாவிப் பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் வாய்ப்பு இருப்பதையே ஒரு சாதாரண பார்வையாளனாக உணர முடிகிறது. இவ்வாறான நடத்தைகள் தானே பல வைத்திய சாலைகளில் மக்களின் நம்பிக்கை குறைவதற்கு காரணமாகின்றன. 4. அரிச்சுணா விடையத்தில் அவரது அணுகுமுறைகள் தவறு என்று குரல் கொடுத்த GOMA உள்ளிட்ட சங்கங்ஙளும் வைத்தியர்களும் ஏன் இவ்வாறான விடையங்களில் வாய் திறக்கவில்லை? அரிச்சுணாவுக்காக பகீஸ்கரித்த எந்த வைத்தியரும் மன்னார் விடையத்தில் அமைதி காப்பது ஏன்? மறுபடியும் சொல்கிறேன். இதை நான் அரிச்சுணாவை ஆதரித்து எழுதவில்லை. சாமானியனாக அரிச்சுணா போன்றவர்களுக்கே கேள்வி கேட்க அனுமதி இல்லாத போது சாதாரண மக்களுக்கான நீதி எட்டாக்கனியாக அல்லவா இருக்கப்போகிறது. 5. யாழ் வைத்தியசாலையில் சில காலங்களுக்கு முன்னன் கையை இழந்த சிறுமிக்கான விசாரணை அறிக்கை எங்கே? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பிரச்சினைகள் நடக்கும் போது விசாரணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுபன் நடவடிக்கை எடுக்கப்பட்டால் வைத்தியத்துறையின் மாண்பும் மேம்படும். மக்களும் சந்தேகப்படமாட்டார்கள். 6. மன்னார் மாவட்டம் மட்டுமல்ல வடக்கின் அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்? அரிச்சுணாவுக்கு ஆதரவு பெருகிய போது அதை வளைத்துப்போட வரிசையாக சென்றவர்கள் மன்னார் விடையத்தில் மௌனம் காப்பது ஏன்? இதுவரை சார்ந்வர்களிடம் இருந்து ஒரு பேட்டியை கூட காணமுடியவில்லை. விசாரணை என்ன அமெரிக்காவிலா நடக்கிறது? வடக்கை பொறுத்தவரை வெளியில் இருந்து அழிப்பதை விட உள்ளே இருப்பவர்களின் சுயலாபங்களுக்காகவும் உண்மைகளை மூடி மறைத்து மறைத்தே எம்மையும் எமது மாண்பையும், உண்மையான வைத்தியர்களின் சேவைகளையும் களங்கப்படுத்தி அழித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அரிச்சுணாவின் அணுகுமுறைகளிலும் ஆணவப் பேச்சுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை ஆயினும் அரிச்சுணாவால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையின் முறைகேடுகளை பேசமுடிந்திருக்கிறது. அந்த தற்துணிவு பலருக்கும் இருந்ததில்லை. இதனால் மருத்துவத்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் இன்று பல விழிப்புணர்வுகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். நிறைய அவதானிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! ஒரு நாள் இல்லை ஒருநாள் இது பலபெரும்புள்ளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும். பலரை வாழ்நாளில் மீளமுடியாத நிலைகளில் தள்ளவும் கூடும். இந்தப் பதிவு நல்ல மருத்துவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலுமே எழுதப்படுகின்றது. இப்படியே மருத்துவத்துறையில் உள்ளும் வெளியும் அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டிருந்தால் எம்மிடம் எஞ்சியிருக்கும் சில நல்ல மருத்துவர்களையும் இழந்துவிடுவோம். மருத்துவத்துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் என்று உருவாகிறதோ அன்றுதான் உண்மையான மாபியா அழியும். நன்றி திருநாவுக்கரசு தயந்தன் 2024.08.06 https://www.facebook.com/share/7H2mKsKqyirjhqEB/
  12. வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும்! தெய்வத்துக்கு நிகராக கருதப்படுகின்ற மருத்துவத்துறையில் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புக்கூறலும் தொடர்ந்து குறைந்து வருவதாகவே தோன்றுகிறது. "வைத்தியரிடமும் வக்கீலிடமும் உண்மையை மறைக்க கூடாது" என்று சொல்வார்கள். அதற்காக வைத்தியர்களும் வக்கீல்களும் உண்மைகளை மறைப்பது நியாயமாகுமா? 1.மன்னார் பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பில் மருத்துவமனையோ அல்லது மாகாண மருத்துவத்துறையோ அல்லது GMOA போன்ற மருத்துவ சங்கங்கள் ஏதாவது விளக்கமளிக்கும் அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளனரா? அவ்வாறு எதுவும் இல்லை எனின் அதற்கான காரணம் என்ன? 2. எமது நாட்டின் மருத்துவத்துறை உலகின் பல நாடுகளின் மருத்துவத்துறையை விட மேம்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அந்த மருத்துவத்துறையினுள் இருக்கும் ஊழல்வாதிகள்/ சுயநல்வாதிகளின் செயற்பாடுகளை தட்டிக்கேட்க வக்கில்லாமல் மொத்த துறையும் இயங்குவது என்பது வெட்கக்கேடானது என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. அவ்வாறானவர்களின் செயற்பாடுகளால் தான் உண்மையில் மருத்துவத்துறையின் மாண்பை பாதுகாக்கும் பல வைத்தியர்களும் அவப்பெயர் வாங்கும் நிலை உருவாகிறது. 3. டாக்டர். அரிச்சுணாவின் பல அணுகுமுறைகளில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், மேற்படி மன்னார் வைத்தியசாலை விடையத்தில் நீதிகேட்டு பொதுமகனாக வந்த அரிச்சுணாவை கைதுசெய்வதிலும், ஜாமீனை நிராகரிப்பதிலும் காட்டிய அக்கறையை ஏன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கான நீதியில் குறிப்பாக தாயை இழந்த அந்த பச்சிளங் குழந்தைக்கான நீதியில் காட்ட முடியவில்லை? குறைந்தபட்சம் இந்த இழப்பினை புரிந்துகொள்ளும் பண்பையாவது மருத்துவத்துறை சார்ந்தவர்கள் கொண்டிருப்பது அத்திய அவசியம் அல்லவா? ஆனால் அந்த வைத்தியசாலையில் எடுக்கப்பட்டிருந்த காணொளிகளில் வார்த்தைகளை உமிழ்ந்த வைத்தியர்கள் அல்லது காற்சட்டையுடன் நின்று பேசிக்கொண்டிருந்த (ஆள் என்ன பதவி என்று தெரியவில்லை) நபர் உள்ளிட்டவர்களின் நடத்தையை பார்க்கும் போது உண்மையில் அந்த அப்பாவிப் பெண்ணிற்கு அநீதி இழைக்கப்படும் வாய்ப்பு இருப்பதையே ஒரு சாதாரண பார்வையாளனாக உணர முடிகிறது. இவ்வாறான நடத்தைகள் தானே பல வைத்திய சாலைகளில் மக்களின் நம்பிக்கை குறைவதற்கு காரணமாகின்றன. 4. அரிச்சுணா விடையத்தில் அவரது அணுகுமுறைகள் தவறு என்று குரல் கொடுத்த GOMA உள்ளிட்ட சங்கங்ஙளும் வைத்தியர்களும் ஏன் இவ்வாறான விடையங்களில் வாய் திறக்கவில்லை? அரிச்சுணாவுக்காக பகீஸ்கரித்த எந்த வைத்தியரும் மன்னார் விடையத்தில் அமைதி காப்பது ஏன்? மறுபடியும் சொல்கிறேன். இதை நான் அரிச்சுணாவை ஆதரித்து எழுதவில்லை. சாமானியனாக அரிச்சுணா போன்றவர்களுக்கே கேள்வி கேட்க அனுமதி இல்லாத போது சாதாரண மக்களுக்கான நீதி எட்டாக்கனியாக அல்லவா இருக்கப்போகிறது. 5. யாழ் வைத்தியசாலையில் சில காலங்களுக்கு முன்னன் கையை இழந்த சிறுமிக்கான விசாரணை அறிக்கை எங்கே? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பிரச்சினைகள் நடக்கும் போது விசாரணைகள் நேர்மையாக முன்னெடுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுபன் நடவடிக்கை எடுக்கப்பட்டால் வைத்தியத்துறையின் மாண்பும் மேம்படும். மக்களும் சந்தேகப்படமாட்டார்கள். 6. மன்னார் மாவட்டம் மட்டுமல்ல வடக்கின் அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்? அரிச்சுணாவுக்கு ஆதரவு பெருகிய போது அதை வளைத்துப்போட வரிசையாக சென்றவர்கள் மன்னார் விடையத்தில் மௌனம் காப்பது ஏன்? இதுவரை சார்ந்வர்களிடம் இருந்து ஒரு பேட்டியை கூட காணமுடியவில்லை. விசாரணை என்ன அமெரிக்காவிலா நடக்கிறது? வடக்கை பொறுத்தவரை வெளியில் இருந்து அழிப்பதை விட உள்ளே இருப்பவர்களின் சுயலாபங்களுக்காகவும் உண்மைகளை மூடி மறைத்து மறைத்தே எம்மையும் எமது மாண்பையும், உண்மையான வைத்தியர்களின் சேவைகளையும் களங்கப்படுத்தி அழித்துக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அரிச்சுணாவின் அணுகுமுறைகளிலும் ஆணவப் பேச்சுகளிலும் எனக்கு உடன்பாடு இல்லை ஆயினும் அரிச்சுணாவால் ஒட்டுமொத்த மருத்துவத்துறையின் முறைகேடுகளை பேசமுடிந்திருக்கிறது. அந்த தற்துணிவு பலருக்கும் இருந்ததில்லை. இதனால் மருத்துவத்துறை சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் இன்று பல விழிப்புணர்வுகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். நிறைய அவதானிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்! ஒரு நாள் இல்லை ஒருநாள் இது பலபெரும்புள்ளிகளை வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடும். பலரை வாழ்நாளில் மீளமுடியாத நிலைகளில் தள்ளவும் கூடும். இந்தப் பதிவு நல்ல மருத்துவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலுமே எழுதப்படுகின்றது. இப்படியே மருத்துவத்துறையில் உள்ளும் வெளியும் அழுத்தங்கள் அதிகரித்துக்கொண்டிருந்தால் எம்மிடம் எஞ்சியிருக்கும் சில நல்ல மருத்துவர்களையும் இழந்துவிடுவோம். மருத்துவத்துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் என்று உருவாகிறதோ அன்றுதான் உண்மையான மாபியா அழியும். நன்றி திருநாவுக்கரசு தயந்தன் 2024.08.06 https://www.facebook.com/share/7H2mKsKqyirjhqEB/
  13. அங்கே என்ன நடந்தது?? அந்த இளம் தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியும் கொடுமையும் அதிர்ச்சியையும் கடுங்கோபத்தையும் ஏற்படுத்துகிறது. என்ன நடந்தது என்பதை வாசித்துப் பாருங்கள். மன்னார் முருங்கன் பிரதேசத்திலுள்ள தம்பனை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் திருமதி.சிந்துஜா தனது முதலாவது பிரசவத்தை மன்னார் பொது மாவட் வைத்தியசாலையில் பலத்த போராட்டத்தின் பின்னர் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையினைப் பெற்றுக் கொண்டார். திருமதி.சிந்துஜா பட்டப் படிப்பினை மேற்கொண்டு முடிக்கும் தறுவாயில் உள்ள வேளையில் தனது எதிர்கால கனவுகளுடன் தாயாகும் பாக்கியம் பெற்றிருந்தார். வைத்தியசாலையிலிருந்து தாயும் குழந்தையும் சுகமாக வெளியேறி தங்களது வீட்டில் தனது தாயாரின் அரவணைப்பில் இருந்த நிலையில் 5வது நாள் மட்டில் அசாதாரணமாக பெண்ணுறுப்பின் வழியில் இரத்தம் கசிவதை அவதானித்துள்ளார். மாலை நேரம் நெருங்கும் போது, கூடுதலான இரத்தம் வெளியேறத் தொடங்கிய நிலையில், அசிரத்தையாக இருந்ததை உணர்ந்து, தாயாரினதும் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் முடிவில் 1990 அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து பிரதேச வைத்தியசாலை முருங்கனிற்குக் கொண்டு சென்று அங்கு காலதாமதமின்றி மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார். தயார் மிகவும் நம்பிக்கையுடன் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு இரவு 2.00 மணியளவில் கொண்டு சென்று தனது மகளை விடுதி இலக்கம் 06 இல் அனுமதித்தார். அங்கு கடமையில் இருந்த தாதிகள் கொண்டுவரப்பட்ட நோயாளியை குளியலறைக்குச் சென்று இரத்தம் தோய்ந்திருந்த உடுப்புக்களை கழுவிவரும்படி பணித்துள்ளனர். அதன் படி கழுவிவிட்டு வந்த நோயாளியை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு ஏதோ ஒரு கருவியைக் கையில் பொருத்திவிட்டு தங்களது ஓய்வு அறைக்குச் சென்றுவிட்டனராம். தனது மகளிற்கு ஏதாவது பரிகாரம் நடக்கும், வைத்தியர் வருவார் என ஏக்கத்துடன் இருந்த தாய் பொறுக்கமுடியாது தாதியர்களின் ஓய்வு அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு தாதியர்கள் கைத்தொலைபேசியை வைத்து நோண்டிக் கொண்டிருந்ததை அவதானித்தார். தயார் பொறுத்துக் கொள்ள முடியாது ‘மகளின் நிலையைப் பாருங்கள்’ என்று அழுத போது, தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தாயாரை விரட்டியுள்ளனர். ‘கையில் பொருத்திய கருவியை கைத்தொலைபேசியில் பார்த்தால் மட்டும் போதுமா? மகளின் உடம்பிலிருந்து வெளியேறும் இரத்தத்தை பார்க்க முடியுமா?’ என்று தாயார் தனக்குத்தானே கூறிக்கொண்டு வந்து, மீண்டும் மகளின் கட்டிலருகில் வந்து கடவுளை வேண்டிக் கொண்டு கையில் மகளின் சிறு குழந்தையையும் வைத்துக் கொண்டு காலை வரையும் இருந்ததாகவும் தயார் கூறுகிறார். காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுள்ளார். நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியுள்ளார்கள். தாயார் மிகவும் கஷ்டப்பட்டு கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டார். இந்நிலையில் தாயார் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள். பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள். காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர். தாயார் மகளின் கைக்குழந்தையுடன் காவல் இருந்ததாகவும், 11 மணியளவில் ஒரு வைத்தியர் வந்து தாயாரைப் பார்த்து பெரிய ஐயா கதைக்க வரும்படி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெரிய ஐயா பின்வருமாறு தயாரிடம் கூறினாராம். “அம்மா உங்கள் மகளிற்கு நிறைய இரத்தம் போய்விட்டது. இப்போது மூச்சுவிட முடியாது கஷ்டப்படுகிறா. நாங்கள் குழாய் போட்டு சுவாசிக்க காற்று கொடுக்கிறோம். இனி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப் போகிறோம்” என்றாராம். அதற்குத் தாயார் “நாங்கள் நடுச்சாமத்தில் இங்கு கொண்டுவந்தோம். மகள் மயங்கி விழும்வரை ஏன் ஐயா நீங்கள் ஒருத்தரும் வந்து பார்க்கவில்லை” என்று கூறி அழுததாகவும் தயார் கூறுகிறார். அவ்வேளையில், அங்கு வந்த இன்னுமொரு டொக்டர் ஏதோ இங்கிலீசில் பெரிய டொக்டருடன் கதைத்த முறையை அவதானித்த போது, ஏதோ விபரீதமாக மாறுவதை தான் உணர்ந்ததாகத் தாயார் கூறுகிறார். அவ்விடத்தை விட்டு உடனே டொக்டர்மார் உள்ளே சென்று விட்டனராம். ஏறத்தாழ அரைமணித்தியாலம் கழித்து பெரிய டொக்டர் மீண்டும் வந்து தாயாரிடம் இவ்வாறு கூறினாராம். “உங்கள் மகளைப் போய்ப் பாருங்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்” என்றாராம். தாயார் மிகவும் ஆத்திரப்பட்டு “அடப்பாவிகளா! எல்லோரும் சேர்ந்து எனது மகளைக் கொன்று விட்டீர்களா? என பத்திரகாளியாக மாறியது மட்டும்தான் செய்யக் கூடியதாக இருந்ததாம். தன் மகளின் உயிர் மீண்டும் வருமா? சிறு கைக்குழந்தை தன் தாயின் பாலைக் குடிக்குமா? அதற்கு என்ன பதில்? பணிப்பாளர் வந்து கூறுகிறார் தாய் இறந்ததற்குக் காரணம் தெரியாதாம். பிணப்பரிசோதனை செய்துவிட்டுத்தான் கண்டுபிடிக்க வேண்டுமாம். இது என்ன கதை? எங்களுக்கே தெரியும். இரத்தம் வெளியேறுவதை எப்படி நிற்பாட்டுவது என்று தெரிந்தால் நாங்கள் ஏன் இங்கு கொண்டு வரவேண்டும்? இரத்தம் ஓடுவதை நிற்பாட்ட அதைக் கண்டுபிடிக்க பிணப்பரிசோதனை செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வைத்தியசாலையை சுடலையாக மாற்றுங்கள். பிணப்பரிசோதனை செய்பவர் உடல் பாகங்களை வெட்டியெடுத்து கொழும்புக்கு அனுப்புவார். அதற்கான பதில்கள் கொழும்பிலிருந்து கடைசி வரை வராது. வரும், வரும் என்று கடைசி வரை கூறி எங்களை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்க, அலுத்துப்போய் நாங்களாகவே விலகிச் செல்வதற்கு செய்யும் தந்திர வேலைகைள் தான் என அறியாமல் போவதற்கு மன்னார் காட்டில் வாழும் நரிக் கூட்டமோ அல்லது கழுதைக் கூட்டமோ அல்ல நாங்கள். இவ்விடயம் தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக நாம் பல்வேறுபட்டவர்களிடம் ஆலோசனை நடாத்தியிருந்தோம். அதன் தொகுப்பை இங்கு முன்வைக்கிறோம். 1. வைத்தியசாலையிலிருந்து பிரசவத்தின் பின் தாய் வீடு திரும்பியிருந்தால் உடனடியாகவும்மேலும், ஐந்து தடவைகள் அடுத்துவரும் பத்து நாட்களிற்குள் பிரதேச குடும்பநலமாது கள விஐயம் செய்து தாயினதும், சிசுவினதும் சுகாதார நிலைமைகளை அவதானித்து அப்பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிக்கையிடல் வேண்டும் என கடமை அறிவுறுத்தல் பட்டியல் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டதா? 2. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப் பட்ட தாய் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டார். விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளரை உடனடியாகக் கவனித்து அது பற்றி கடமை வைத்தியருக்கு அறிவிக்க வேண்டிய கடமைப் பொறுப்பினை தாதியர்கள் மேற் கொண்டனரா? (எந்நிலையில் நோயாளர் வருகை தந்தாலும் உடனடியாக அவ்வேளையில் பொறுப்பிலுள்ள வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும்) 3. புதிதாக விடுதிகளுக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களை 15 நிமிடங்களிற்குள் வைத்தியர் பார்வையிடல் வேண்டும் என்ற கடமைப் பட்டியல் உள்ள போதும், ஏன் வைத்தியர் இரவு 2.00 மணிக்கு வந்து நோயளரைப் பார்வையிடாது காலை 7.30 மணிக்கு வந்தார்? 4. விடுதி 06 இற்குரிய இரவுக் கடமைக்குரிய வைத்தியர் அன்றைய தினம் கடமைக்கு வந்திருந்தாரா? அவர் இரவு வைத்தியசாலையில் தங்கியிருந்தாரா? 5. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்பட்ட நோயாளி இரத்தப் பெருக்குக் காரணமாக விடுதிக்கு வந்த போது, தாதியர்கள் நடந்து கொண்ட கடமைப்பொறுப்பு நடவடிக்கைகள் ஏற்புடையதா? மேற்படி இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் வைத்து மனிதப் படுகொலைக்குட்படுத்தப்பட்டதற்கு சமூகம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் என்ன? இச்சம்பவத்தில் வைத்தியசாலைச் சமூகம் நடந்து கொண்டுள்ள முறைமை வைத்தியசாலை முறைமைக்கு உட்பட்டதா? இதுதான் இலங்கை மாவட்ட வைத்தியசாலைகளின் சாதாரண நடைமுறைகளா? இவை பொதுமக்களிற்குத் தெரியாதா? நோயாளிகளுடனான தொடர்பாடல்களில் அரச வைத்தியசாலைகளின் பொதுவான நடைமுறைகள் என்ன? சாதாரண பொதுமக்கள் தொடக்கம் மதப் பெரியார்களே!, கற்றோரே!, இளம் குடும்பத் தலைவர்களே!, எதிர்காலத்தில் தாயாகக் காத்திருக்கும் இளம் பெண்களே! நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்? நேற்று சிந்துஜா. நாளை யாரோ ? copied post https://www.facebook.com/share/b8EK2FpTq7HrEq8S/
  14. என் மீதான தங்கள் வெறுப்பு தான் இங்கே உங்களை கருத்து வெறுப்பை கொண்ட தள்ளுகிறதே தவிர என் கருத்தில் எங்கும் சீனா மீதான வெறுப்பு இல்லை. மேலும் அடம் பிடிக்கிறீரே,....எனது எழுத்தின் சாரம் புரியவில்லையா அல்லது புடியாதமாதிரி நடிக்கிறீரா,. ஒருவரை இவ்வாறு ஒருமையில் அழைப்பது கூட வெறுப்பின் உச்சமே தவிர கருத்தை கருத்தால் வெல்ல அல்ல.
  15. இச்செய்தியை என் மகளிடம் இன்று காட்டினேன். இது போன்ற சிகிச்சைகள் தான் வேலை பழகும் வைத்தியசாலையில் தினமும் சாதாரணமாக நடப்பதாகவும் தான் அந்த ரோபோக்களுக்கு உதவுபராக பலமுறை இருப்பதாகவும் சொன்னார். சிலவேளைகளில் 5 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் என்பது சீனாவின் விரும்பிகளுக்கு துள்ள இடம் கிடைத்ததாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு ஏதாவது என்றால் சீனா தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அடம் பிடித்தால் நன்று. வரவேற்க தக்கது.
  16. சிறி சண்முகா இந்து மகளிர் கல்லூரி - திருகோணமலை https://www.facebook.com/share/v/UbpRGcKTUjVACkDS/
  17. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  18. விசுகு என்பது எனது அடையாளம் விசுகர் என்பது அந்த அடையாளத்தின் வயதுக்கு கொடுக்கப்படும் மரியாதை என்பதை அறிவேன். இலங்கையன் என்பது நான் பிறந்த மண்ணுக்கு நான் கொடுக்கும் மரியாதை. சிறீலங்கன் என்பது என்மீது அடாத்தாக திணிக்கப்பட்ட அவமானம். அதை ஒரு போதும் நான் ஏற்கவில்லை.
  19. இதோ நான் சொன்னதற்கான அடுத்த கட்டம்: மன்னார் வைத்தியசாலையில் கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட இளம் தாயின் இறப்புக்கு காரணமான குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் மன்னார் வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் பல வருட காலமாக இடம் பெற்று வரும் தென்பகுதியில் உள்ள வீட்டில் இருந்துகொண்டு சம்பளம் பெறும் மற்றும் மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவாக பல இலட்சம் ரூபாய்கள் மோசடி செய்யப்படும் ஊழலை அண்மையில் எனது "மருத்துவ மாபியா" கட்டுரையில் அம்பலப்படுத்தியிருந்ததுடன் ஊறுபடும் நிலையில் உள்ள நோயாளிகளை குறிப்பாக இரவில் உடனடியாக வைத்தியர்கள் கவனிக்காவிட்டால் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்து இருந்தேன். இந்த கட்டுரை வெளியிட்டு சில தினங்களுக்குள் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற கவனக்குறைவு காரணமாக இரவு அனுமதிக்கப்பட்ட 27 வயது தாய் காலை வரை எந்த வித சிகிச்சையுமின்றி இருந்ததனால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார். வழமை போல வைத்தியசாலைக் குறிப்புகளில் பொய்யாக உரிய சிகிச்சை இடம்பெற்றதாக குறிப்பிட்டு பின்னர் விசாரணை என்று சில குழுக்களை அமைத்து அனைத்தையும் முடிமறைக்கும் செயல்பாடுகள் இடம் பெறும் . இவை அனைத்தையும் GMOA மாபியா குழுவினர் மேற்பார்வை செய்து இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கடைசியில் குற்றமற்றவர்கள் என்று நிர்வாகத்தையும் மிரட்டி முடிக்கும். இந்த அவலத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தக் கொடுமைகள் தொடரும். இதற்கிடையில் நிர்வாகமும் GMOA மாபியாவும் இணைந்து மக்களை ஏமாற்றும் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். ஸ்தாபன கோவையின் 31.5.2.பிரிவு (கீழ் இணைக்கப்பட்டுள்ளது ) மிகவும் தெளிவாக ஒரு அரசாங்க அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் மோசமான பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அவர் உடனடியாக பணி நீக்கம் (interdiction ) செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. இதுவரை இந்த அனாவசிய உயிரிழப்புக்கு காரணமான வைத்தியசாலை ஊழியர்கள் எவரும் ஏன் பணி நீக்கம் செய்யப்படவில்லை? அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் அவர்களது பெயர்கள் ஏன் இன்னமும் வெளியிடப்படவில்லை ? வைத்தியசாலைக்கு அப்பால் பட்ட வேறு அரசாங்க திணைக்களங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு விசாரணையின் பின்பு குற்றமற்றவராக இருந்தால் மட்டுமே மீண்டும் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுவார். ஆனால் இங்கே தெளிவாக ஒரு உயிரிழப்பு கவனக் குறைவு காரணமாக இடம் பெற்று இருக்கிறது. ஆனால் எவரும் பணி நீக்கம் செய்ய படவுமில்லை. அதே நேரம் பல விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் நீதியான விசாரணை இடம்பெறும் என்றும் அதன் பின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் என்ற தமது வழமையான பம்மாத்துக் கதைகளை GMOA மாபியா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம் கூறி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னாரில் உள்ள தமிழ் பேசும் மக்கள் முன்வர வேண்டும். குற்றவாளிகள் எந்த வித தாமதமும் இன்றி பணி நீக்கம் செய்யப்படும் வரை போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதை நீங்கள் செய்ய தவறினால் தொடர்ந்து கவனக் குறைவு காரணமாக பல உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும். அதே வேளை இறந்த நோயாளியின் உறவினர்கள் தாமதம் இன்றி போலீஸ் நிலையத்தில் கவனக் குறைவால் இடம்பெற்ற இந்த இறப்பு தொடர்பாக உரிய முறைப்பாட்டை செய்ய வேண்டும். மன்னாரை சேர்ந்த சட்டத்தரணிகள் இலவசமாக இந்த அநியாயத்துக்கு எதிராக போராட முன்வரவேண்டும். நீதிமன்றின் ஊடாக 1. பொலிஸ் மூலம் குற்றச் செயலுக்கான வழக்கு மற்றும் 2. இறப்புக்கான நட்டஈடு கோரி சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஒரு குற்றவாளி ஆவது முறையாக தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் தான் இந்த மருத்துவ மாபியா திருந்த வாய்ப்புள்ளது. அதைவிடுத்து பல கட்டுரைகள் விரிவுரைகள் சமூக ஊடக பதிவுகள் மூலமாக இவர்கள் திருந்தப் போவதில்லை மனம் வருத்தப் போவதும் இல்லை. உடனடியாக மன்னாருக்கு நான் வரும் சூழ்நிலை காணப்படாத நிலையில் இது தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் என்னுடன் 0779068868 தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முடியும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 4.8.2024 https://www.facebook.com/share/p/ifukxJct4R8pBWu4/
  20. இலங்கையன் என்பதற்கும் சிறீலங்கன் என்பதற்கும் வித்தியாசம் தெரியாதவரோடு எல்லாம் பேசுவதே நேர விரயம்.
  21. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இவை வைத்தியர் அதிலும் வைத்திய நிர்வாக பதவியில் உள்ளார். அவருக்கு தெரிந்து இருக்கும் அல்லவா? மேலும் செயல் என்பது இவ்வாறு தான். நாம் நினைத்து செல்லும் பாதையை களம் மற்றும் பகை மாற்றிவிடும். அதற்காக செய்யாமல் இருக்க முடியாது அல்லவா?? அதனால் தான் இவர் மன்னாரிலும் களத்தை திறந்து விட்டுள்ளார் என்று எழுதினேன். ஆனால் தமிழர்களின் நிலை என்ன என்றால் இனி அவர் வெளியே வந்து தான் விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும் 😪
  22. சீ அவருக்கு புலம்பெயர்ஸ் எல்லாம் தன்னைப் போல் சிறீலங்கனாக இருக்கணும் என்ற கனவு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.