Everything posted by விசுகு
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
சந்திரா என்ற பெண் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்கு செல்கிறார் சக்திவேல். அங்கு இந்திராணியை (த்ரிஷா) பார்க்கிறார். ‘நீங்க தேடி வந்த சந்திராவைத்தான் கூட்டிட்டு போவீங்களா. என்ன கூட்டிட்டு போக மாட்டீங்களா’ என்கிறார் இந்திராணி. ‘அவ்ளோதானே’ என்று அவரை அழைத்துச் சென்று தனியே ஒரு வீட்டில் தங்க வைக்கிறார் (நாங்களும் இங்கே தான் என்று எப்படி சொல்லவதாம்🤣)
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
நான் எவரையும் நம்பவில்லை இது பைத்தியக்காரத்தனமான கோரமான கொலை. ஆனால் இங்கே நீங்கள் தீர்ப்பு வழங்கும் போது எனக்கெளும் கேள்விகளை மட்டுமே வைத்தேன். மற்றும் படி தீர்ப்பு எப்பொழுதும் கொலைக்கு சார்பாக இராது. இதன் உண்மையான தரவுகளும் வெளியே வராது. எனவே எல்லாம் லாம்.....??? என்பதுடன் முடிவுறும்.
-
கடவுள்களை உருவாக்கியது கதைகளே...
கடவுள்களை உருவாக்கியது கதைகளே... https://www.facebook.com/share/v/16V6HsqRhi/
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
ஏன் ? தன் ஆசைக்கு இணங்காத இந்த அப்பாவி பெண் மேல் பழி போடுவதற்காக இருக்கலாம் அல்லவா? ஆகவே எதையும் தீரவிசாரிக்காமல் சொல்ல முடியாது. இந்த கோணத்தில் பார்த்தாலும் நீங்கள் மேலே குறிப்பிட்ட மூன்று காரணங்களும் இதற்கு முரண்பட்ட சாட்சிகளாகவே அமைகின்றன. கணவர் ஊரில் இல்லை வயிற்றில் குழந்தை மற்றும் இருவரும் ஒன்றாக இருந்த படங்கள். எனவே அப்பாவி பெண் மேல் பழி போடுதல் என்பது லாம்.... என்பதற்கு கூட வரமறுக்கிறதே.....
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
திட்டமிட்டு கூட்டிச்சென்று கொலை செய்துவிட்டு உடலை மறைத்தோ அல்லது ஓடி ஒளிந்தோ கொள்ளாமல் காவல் நிலையம் சென்று விடயத்தை சொல்லி சட்டத்திடம் சரணடைந்தவருக்கு கட்டுக்கதைகள் என்ற உங்கள் சந்தேகம் பொருந்துமா? (இதில் எழுத இனி எதுவுமே இல்லை என்று நினைத்தேன். உங்கள் நீண்ட கருத்தால் இக்கேள்வி வருகிறது)
-
நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!
அவசர தேவைகள் சார்ந்த சுயநலக்காதல் இவ்வாறு தான் நிறைவு பெறும்
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
மிகவும் கொடூரமான பைத்தியக்காரத்தனமான கொலை இது. இவ்வுலகில் இனிமையாக வாழ ஆயிரம் வழிகள் இருக்கும்போது.....? ஆனால் அவரவருக்கு இந்த நிலை வராத வரை நாம் என்னவும் சொல்லலாம். நம்பிக்கை துரோகம் குடும்பவாழ்க்கை பூச்சியமாகல் என்னுடையது மட்டுமே என்பதில் விழுந்துள்ள ஆழமாக ஏமாற்றப்பட்டுவிட்ட தோல்வி இவற்றை தாண்டி செல்வது எல்லா மனிதர்களாலும் முடியுமா???? (இங்கே ஆண் பெண் என்ற வேறுபாடில்லை) ஆனால் உலகம் அதிலும் மேற்குலகம் இதை தாண்டிச் செல்கிறது. பட்டறிவு மட்டுமே துணை.
-
மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
இந்த மாம்பழம் பிரச்சினை என்று வந்தால் அதில் என் தலை நிச்சயமாக உருளும் என்று நினைக்கிறேன். மாம்பழப்பிடுங்குப்பாட்டால தானே அந்தாள் மலைக்கு போனது. ஆனால் கோமணத்தோட விட்டது எனது ஊர்க்காரர்கள் என்று கதையை கட்டிவிட்டார்கள். இது வேறு ஊரில் என்று வந்து பார்த்தால் பிரான்ஸ் பிரமுகர் என்று போட்டிருக்கு.....🤣
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
200% என் ரத்தமையா நீ.. இந்த எனது நிலைப்பாட்டால் தானே என்னவோ மூத்தமகன் முழு விஞ்ஞானி இளையவன் முழு மெய்ஞானி 😄 மக்களுக்கும் அதே. நீயே தேடு. படி அனுபவி கண்டுகொள். ஆனால் ஒரு மதத்தை விட இன்னொன்று சிறந்தது என்று சொன்னால் கோபம் வரும். உனக்கு ஒரு மண்ணும் தெரியாது என்று தான் பதில் சொல்லப்படும்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
சகோ தொடர்ந்து இது பற்றி பேச விரும்பவில்லை நான் உயிர் கொடுப்பதை தடுக்கும் ஆயுதங்கள் இருந்தன என்று தான் சொல்கிறேன். நீங்கள் விமானங்கள் மற்றும் டிரோன்கள் பற்றி பேசுகிறீர்கள். ஒவ்வொரு தற்கொலை போராளியும் தம்முயிரை கொடுத்த நாட்கள் நாங்கள் தூக்கத்தை விட்டு அழுத நாட்களாக இருந்தன. இதை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் மேலும் மேலும் ஓடிய நாட்களாக இருந்தன. இதற்கு மேல் இது பற்றி எழுத எதுவுமில்லை. நன்றி.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இவை அனைத்தும் தெரிந்தவை தான். ஆனால் இயக்கம் பணத்தில் திணைத்திருந்தது அங்காங்கே பணம் இருந்தபோதிலும் அவை பயன்படுத்தப்படவில்லை என்பது போன்ற கருத்ததையே நான் மறுதலித்தேன். அதற்கு சாட்சியாக வீட்டிற்கு ஒரு பவுண் மற்றும் புலத்தில் சில மக்கள் பாதிக்கப்படக்கூடிய பணச்சேர்ப்புக்கள் அனைத்தும் பணத்தேவையால் அல்லது பணப்பற்றாக்குறையால் முன் தள்ளப்பட்டவையே. அங்கே இருந்தவன் என்ற அடிப்படையில் இதை தான் என்னால் சொல்லமுடியும். மற்றும் படி சண்டை பிடித்த ஒரு தரப்பினர் உலகமே கூட நின்ற போதும் வங்குரோத்து நிலையடைந்து பிச்சை எடுக்கும் நிலையில் மக்களின் ஒரு பகுதியினரின் பங்களிப்புடன் அதே சண்டையை எதிர்கொண்ட தரப்பு செல்வச் செழிப்பானது என்பதை யாரும் நம்ப மாட்டார்கள்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இராணுவத்தினர் தற்கொலையாளிகளை கொண்டா புலிகளின் முகாம்களை தகர்த்தனர். அவர்களிடம் இருந்த அனைத்தையும் நாமும் பெற்றிருக்க முடியும். ஏன் வாங்காமல், ஆட்பலம் இல்லாதபோதும் ஆட்களை கொடுத்தோம் மனிதர்களை அனுப்பினோம் என்றால் ஒரே விடை மட்டுமே பணபலமில்லை.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
இங்கே விமானங்கள் பற்றி நான் எதுவும் பேசவில்லை. மில்லர் சென்று வெடித்து தான் அந்த இடத்தை தகர்க்கவேண்டும் என்ற நிலை அன்றே இருக்கவில்லை.....
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
சகோ நாங்கள் கரும்புலிகள் உருவான காலம் பற்றி பேசுகிறோம்.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
தவறு இது இறுதி யுத்த காலநிலை மட்டுமே.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
2003 கடைசிவரை பணத்தட்டுப்பாடும் கடன்களுமே தான் இயக்கத்திடம் புலத்தில் இருந்தன. (முக்கியமாக பிரான்சில்). இது எனக்கு நன்கு தெரிந்த விடயம். அதன் பின்னர் தாயகத்திலிருந்து வந்தவர்களால் புலத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. எனவே அதன்பின்னர் நடந்தவை எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது. ஒரு காலத்தில் காற்று புக முடியாத இடமெல்லாம் நாம் புகுவோம் என்ற எமது பெரும் பலமாக கருதப்பட்ட ஒரு விடயம் நம்மையே புகமுடியாத விடயமாக்கியது தான் முடிவுரையானது.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
அப்பொழுதும் இருந்த இடத்தில் இருந்தபடி இலக்கை தகர்க்கும் ஆயுதங்கள் சந்தையில் இருந்தவை தான். ஆனால் நம்மிடம் தான் மனமில்லை பணமில்லை.... அதனால் ஆயுதத்துக்கு பதிலாக எம் உடன்பிறந்தாரை அனுப்பிக் கொண்டே இருந்தோம் 😭
-
கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்
விளக்கத்திற்கு நன்றி ஆனால் நடக்காத ஒரு விடயத்திற்காக எதற்காக இங்கே மாநகர மற்றும் மத்திய ஆட்சி அதிகாரம் பற்றிய கருத்துக்கள்?? இவை இங்கே குழப்பங்களை உருவாக்கும் அல்லவா?
-
ரப் பாடகர் வேடன்
எனக்கு மதம் சாதி சார்ந்த உங்கள் பார்வை கிடையாது. அநியாயத்திற்கு எதிராக எவர் குரல் கொடுத்தாலும் அவர்கள் எனது உறவே. என் வலியை மறுக்காதிருந்தால் சிறப்பு.
-
கனடாவின் நினைவுத் தூபியும் அலறித் துடிக்கும் இலங்கை அரசும்
ஒரு மாநகரால் கட்டப்பட்ட மற்றும் இதை எதிர்ப்பவர்கள் வெளியேறலாம் என்று பகிரங்கமாக அறிவித்த தூபி ஒன்று அங்கே வைத்தே அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. யாரிடம் என்ன அதிகாரம் இருந்து என்ன பயன்???
-
ரப் பாடகர் வேடன்
அடுக்குமுறைக்கெதிரான எந்த ஆயுதத்தையாகினும் கையில் ஏந்தியபடி நிற்பவர் எவராக இருந்தாலும் போற்றுதற்குரியோரே. பலம் சேர்ப்பதே. இணைவுப்பாலமே.....
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
தொடருங்கள் தொடரவேண்டும்.....
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
அதாவது பிரச்சினைகள் வேண்டாம் என்பதற்காக உண்மையை, வரலாற்றை புதைக்கலாம்???? அடுத்து தமிழுக்கு கன்னடம் தான் மூலம் என்று வரும். அப்பொழுதும். .. நட்பு முக்கியமல்லோ....
-
பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? ; ஜனாதிபதியின் கூற்றுடன் என்னால் உடன்படி முடியாது - சரத் பொன்சேக்கா
அனுரா ஒரு இக்கட்டான காலகட்டத்தில் உள்ளார். தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்று தொடங்கி அதன் பின்விளைவுகளை காண தொடங்குகிறார். தொடர்வாரா? மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி ....?
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
வைகோ அவர்கள் பெரிய மனதுடன் கமலுக்கு இடம் தந்து தானாகவே ஒதுங்குவது தான் அவருக்கு நல்லது.