Everything posted by விசுகு
-
Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah
Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah இலங்கையின் வடக்கில், இயக்கச்சி எனும் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவிலான ஒரு காணியை புலம்பெயர் தமிழ்ச் செல்வந்தர் ஒருவர் வாங்குகிறார். அதில் பெரும்பண்ணை ஒன்றை உருவாக்குகிறார். பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி என ஆயிரக்கணக்கான விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு பயன்தரு மரங்கள், தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் உள்ளே ஹொட்டேல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரத்திலான உணவங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், நீச்சல் தடாகங்கள் என அத்தனை வசதிகளும் கொண்டுவரப்படுகின்றன. குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் பெரும்வளர்ச்சி காண்கிறது. REECHA என்பது நிறுவனத்தின் பெயர். இங்கு 200 வரையான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். மேலும் பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளே பல்வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு பின்தங்கிய கிராமத்தில், சர்வதேச தரத்தில் ஒரு பண்ணையை அமைத்து, அதில் பலநூறுபேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி, புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறார் நமது கரன் அண்ணா. அவரிடம் இருக்கும் பணத்துக்கும் வசதிக்கும் இப்படி ஒரு வரண்ட பிரதேசத்தில் போய்நின்று ஆடு, மாடு, பன்றிகள் வளர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் தாய் நாட்டின்மீதான பற்றும் காதலும் அங்கிருக்கும் எமது உறவுகளுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் எனும் உந்துதலுமே இந்த முயற்சியில் அவரை ஈடுபட வைத்திருக்கிறது. Reecha குறித்து நான் இங்கே எழுதியிருப்பது மிகச் சொற்பமே..! கரன் அண்ணாவின் YouTube க்குச் சென்று பாருங்கள். ‘BK in Reecha’ என்று ஒரு நிகழ்ச்சித் தொடர் இருக்கும். அதில் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஏராளமான தகவல்கள் உள்ளன. வெளிநாடுகளில் எத்தனையோ ஈழத்தமிழ் மில்லியனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாயகத்தில் முதலிட தயங்குகிறார்கள். ஆனால் கரன் அண்ணா துணிந்து இறங்கியிருக்கிறார். அந்தத் துணிச்சலுக்கு முதலில் வாழ்த்துக்கள். Reecha வின் நோக்கமும் குறிக்கோளும் சிறப்பாக ஈடேற வேண்டும். எமது மக்கள் பொருளாதார ரீதியாக மேலும் முன்னேற வேண்டும். பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாகும்..! ‘வரப்புயர நீருயரும்..! ReeCha வில் தமிழ் மன்னர்களின் கோட்டைகள்..! ReeCha வில் என்னைக் கவர்ந்த முக்கிய விடயமே தமிழுக்கும் தமிழர் வரலாற்றுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்தான். இங்கே ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு தமிழ் மன்னனின் கோட்டையாகக் கருதி, பெயரிட்டு, குறித்த மன்னர்களின் உருவப்படங்களைப் பொறித்து, அவர்கள் குறித்த ஒரு சிறுகுறிப்பையும் எழுதி, அசத்தியிருக்கிறார்கள். எமது பிள்ளைகளுக்கு இவற்றைக் காட்டி ‘குளக்கோட்ட மன்னன் பல குளங்களைக் கட்டி விவசாயத்தை பெருக்கினார்’ என்றும் ‘பண்டாரவன்னியன் வீரத்தில் சிறந்தவர். அவர் போர்த்துக்கேயரை எதிர்த்து போரிட்டார்’ என்றும் அறிமுகம் செய்யும்போது அதில் பெருமையும் உரிமையும் இருக்கும். பிள்ளைகளுக்கும் அது மிகவும் பிடிக்கும். வெளிநாடுகளில் இதைத்தான் செய்கிறார்கள். இங்குள்ள கல்விமுறையின் அடிப்படையே நாட்டுப்பற்றையும் வரலாற்றையும் புகுத்துவதுதான். பூங்காக்களிலும் தெருக்களிலும் மற்றும் திரும்பும் திசை எல்லாம் சிலைகளையும் நினைவிடங்களையும் நிறுவி, வரலாற்று நாயகர்கள் அனைவரையும் பிள்ளைகள் மனதில் பதித்துவிடுவார்கள். இதே முயற்சியை, தமிழ் சார்ந்து ReeCha முன்னெடுப்பது பெருமைக்கும் போற்றுதலுக்குமுரிய விடயமாகும். தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, உல்லாசப் பயணிகளாக வரும் வெள்ளையர்களையும் இந்த முயற்சி ஆச்சரியப்படுத்தும். காரணம் வரலாற்றை அறிவதிலும் அந்தக்கால ஆட்சிமுறைகளைத் தெரிந்துகொள்வதிலும் அவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். கூகுளிடம் போய் ஆனையும் அல்பேர்ட்டையும் தேடிய எமது பிள்ளைகள் இனி சங்கிலியனையும் இராவணனையும் தேடப்போவது நல்லதொரு மாற்றமாகும். ஒரு முகநூல் பதிவு
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
சில விடயங்களை பேசுவதில்லை. ஊரில் சொல்வார்கள் நம்ப பல்லைக் குத்தி நாமே . ..... என்று. ஆனால் அதை தமக்கு சாதகமாக எடுத்து எம்மை பதம் பார்ப்பது இங்கும் தொடர்கிறது
-
சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024
சிறப்பு முகாமிலிருந்து ஓர் திறந்த மடல் -இராபர்ட் பயஸ், சிறப்பு முகாம், கொட்டப்பட்டு, திருச்சி. 29/2/ 2024 உலகத் தமிழர்களுக்கு.... வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன். உங்களை உங்களோடு உங்களில் ஒருவனாக சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில் ஒருவரான சாந்தனை இழந்து இதோ இந்த கம்பிகளுக்கு பின்னால் இருந்து இப்படி உங்களை சந்திக்க நேர்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. 32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பிறகு கடந்த 11-11- 2022 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறுபேரில் நானும் ஒருவன். அந்த ஆறுபேரில் நான், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளியுறத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது. தொலைந்து போன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுபெறும் தருவாயில் கூட விடுதலையை ருசிக்க முடியாமல், சிறிது நேரம் கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும் வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டோம். இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது. இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதும் எங்களுக்கு போகப்போகத் தான் விளங்கியது. நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய தேதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். "சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்" என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாகமும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஒரு வார காலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக் கூட முடியாமல் மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது..? யாரை நாங்கள் நொந்துக்கொள்வது..? அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுத்து, உடல்நலன் குன்றி 'விடுதலை ஆகிவிடுவோம். விடுதலை ஆகிவிடுவோம்.' என்று கனவு கண்டு விடுதலை ஆகிவிட்டோம் என்று பூரிப்பு கிடைத்த தருவாயில் மீண்டும் ஏமாற்றப்பட்டு சிறைமாற்றப்பட்டு இதனால் மனநலனும் பாதிக்கப்பட்டு இறந்து போன சாந்தனுக்கு சிறை வாழ்வு முடிந்தது. இன்னும் மீதம் மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குகிறோம் இந்த சிறப்பு முகாமில். சிறையில் கூட சிறை நிர்வாகத்திற்கு சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு இருக்கக்கூடிய மற்றும் இல்லாத உரிமைகள் கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்பு முகாமோ சிறையை விட கொடுமையானது, இங்கு எந்த சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டத்திட்டங்களாகவும் ஆகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச் சிறை யாரும் மனு பார்க்கக்கூடாது என்று இவர்கள் முடிவெடுத்தால் யாரும் மனுப்பார்க்க முடியாது. இப்படியான நிர்வாகம் தான் நாட்டைவிட்டு வெளியில் அனுப்புவதற்காக என்று காரணம் கூறி சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமல் வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்னொரு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் சிறு சிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் கூட போராடி, உயிரைக் கொடுத்து பெறவேண்டிய சூழலே இருக்கிறது. எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்கு பின்னும் எங்களை எங்கள் குடும்பங்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும், உண்ணாநிலை போராட்டங்களையும் மேற்கொண்டே பெற்று வருகின்றோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலே போகும். மீதி, கேட்கப்படாமலே மக்கிப் போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாட்களை கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இவ்வாறில்லாமல் உரிய அரசுப் பொறிமுறைகள் அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிரு வருடங்களாவது இருந்திருப்பார். 33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன்மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்தமகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார். இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் 'உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும். அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன.!? 33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?! இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை. மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாடும் நிலையில் நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய், சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்றுசேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்து விட மாட்டோமா?! பச்சிளம் பாலகனாக பார்ந்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்கு திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனை பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப் பஞ்சு பாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களை காணிக்கையாக்கிவிட மாட்டேனா..?! அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். எங்கள் நிலைமை? நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசி காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்ச காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து விட்டுப் போக இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..? எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா..? இப்படிக்கு இராபர்ட் பயஸ் https://www.facebook.com/share/p/aZ7vRzda99wrq7mL/
-
வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்
அப்படி போடு அரிவாளை???😅
-
ஆண்டவனையும் கேட்க வேண்டும்
ஆண்டவன் கொலை செய்தாலும் அவனை குற்றம் சொல்லக் கூடாது. படித்தவனை ஏன் கொன்றாய்? பாமரனை ஏன் வதைத்தாய்? என்றெல்லாம் நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அப்படிக் கேட்டால் ஆண்டவனின் கோபத்துக்கு ஆளாகிப் போவோம். ஆண்டவன் தண்டனை கொடுத்த போது அது செய்யப்பட வேண்டியதாக நியாயமானதாக என்னால் செய்ய முடியாததை ஆண்டவர் செய்கிறார் என்று வரவேற்றோமா? இல்லையா? எம் மனதில் எழும் எம்மால் முடியாத விடயங்களை ஆண்டவனை செய்ய வைத்து விட்டு கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அல்லாவுக்கு பிகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது என்பதும் நான் மோடு அவர் எல்லாம் தெரிந்தவர் செய்திருக்கக் கூடாது என்பதெல்லாம் சுயநலத்தின் உச்சம் மட்டுமே.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உங்களை பற்றி இங்கே கிழித்து காயப்பட்ட போதும் துரோகி என்று பலராலும் சொல்லப்பட்ட போதும் என் தம்பிகள் பலரும் என்னை எச்சரித்த போதும் நான் உங்களுக்கு பதில் எழுதிய படி ஒரு தமிழனாக புறந்தள்ளக்கூ டாது என்று தொடர்ந்து எழுதி வருகிறேன். அது தான் நான் காட்டும் நாகரீகம் மேன்மை. அதை உதாசீனம் செய்து இவ்வாறு பண்பற்று தொப்பியை தலையில் போட்டு ஆடுவது எந்த நாட்டில் வாழ்ந்தாலும் போகாத மனநோய். எனவே என்னை நானே நொந்தபடி????😭
-
உக்ரைனிற்கு மேற்குலக படைகள் - சாத்தியம் உள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு
நாம் கண்ணால் பார்ப்பது வேறு ஆனால்.....?
-
ஜெர்மனியில் கஞ்சா செடிகளை வீட்டில் வளர்க்க அனுமதி!
அப்பன் வளர்ந்த நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். கல்வி மூலம் இங்கே அனைத்தும் (செக்ஸில் இருந்து செல்போன் வரை) சிறிய வயதிலேயே ஊடட்டப்பட்டு விடும். நமது மண் இன்றும் கசிப்புக்குள் கிடந்து வெளியே வரமுடியாமல்....? 😭
-
கடற்றொழிலாளர்களுக்காக அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு போராடத் தயார் - டக்ளஸ்
அவருக்கு இரண்டு பக்கங்களிலும் இருந்து வரும் சூட்கேஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது போலத்தான் தெரிகிறது
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அதை சொல்லவும் ஒரு பொறுப்பு வேண்டும் அல்லவா??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நன்றி தம்பி பல முகங்களை தரிசிக்க இத்திரி உதவியதில் நல்லதே.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
என்னைப் பொறுத்தவரை நான் அறிந்தவரை புலிகள் குறைந்தது மூன்று தடவையாவது எச்சரிக்கை செய்தார்கள். இதற்கு மேல் இதற்குள் நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை. நன்றி.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை... இது தான் வரலாறா??? புலிகள் அப்படி செய்தார்களா??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
மேலை இன்னொருவர் விடுதலைப்புலிகளின் உண்மை வரலாற்றை எழுதி இருக்கிறார். 😡 அதற்கு உண்மையை உள்ளபடி அடுத்த சந்ததிக்கு கடத்தணும் என்போர் உள்ளிட்டோரிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் வராதது இங்கே என்ன வரலாறு பதியப்படப்போகிறது. அதனை மௌனத்தின் ஊடாக எவ்வாறு ஊக்குவிக்கப்போகிறோம் என்பதற்கு சான்றாகிறது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
1- நான் புலிகள் தவறே செய்யவில்லை என்று எங்கும் சொல்லவில்லை. 2 - எனக்கு சிலவற்றில் சந்தேகம் இருக்கிறது என்றும் எழுதியுள்ளேன். மற்றும் படி மேலே நீங்கள் எழுதிய பலவற்றுடன் முரண்பாடு இல்லை. நன்றி ஜயா நேரத்திற்கு. (உங்களின் நேரத்தின் பெறுமதி அறிவேன். )
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நான் யாழுக்கு வர ஒரு தூர நோக்குண்டு. அதற்கு முடிந்தவரை அனைவரையும் அரவணைத்து சொல்லணும். ஆனால் அதற்கான பரிசுகள் புலிகள் மீதான சேறப்புத்தான் என்றால் அது நான் மாவீரர்களுக்கு செய்யும் அநியாயமாகி விடும். இந்த திரியில் உண்மையே தேடுதல் என்ற பெயரில் சில சந்தேகக்கொலைகளை புலிகள் தான் என்றும் அவர்களால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. (அமிர்தலிங்கம் கதிர்காமர் நீலன் மற்றும் ராஜீவ் காந்தி உட்பட) எனக்கு இவற்றில் சந்தேகங்கள் உண்டு. குடும்பம் மற்றும் உறவுகளுக்கு சில இழப்புகள் வருத்தம் தரும் என்பதைவிட அது ஒரு இனத்தையே அழித்து விடும் என்றே நான் பார்ப்பதுண்டு. இந்த களை பிடுங்குதலுக்கு என் குடும்பமும் இலக்காகி இருக்கிறது. புலிகள் அப்படி தான் தன் குடும்பத்தையே பலி கொடுத்தும் புலிகளை பாதுகாத்த பலரை எனக்கு தெரியும். அதேபோல் தன் குடும்பமே அழியப் போகிறது என்று தெரிந்தும் தனக்கு கொடுக்கப்பட்ட இலக்கை நோக்கி பயணித்த புலிகள் பல நூறு. மற்றும் படி உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பால் முழு உயிருக்கும் ஆபத்து வரும் என்றால் அதை எடுத்து விடுவதற்கு இன்றும் ஆதரவானவன். எனவே தயவு செய்து கடந்த காலங்களை கிளறி சேறடிக்காது இன்று என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். எம்மால் முடிந்ததை செய்யலாம். நன்றி.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
புலிகளால் உரிமை கோரப்படாத எந்த தாக்குதலையும் நான் புலிகளின் தலையில் போடமாட்டேன். அவை குற்றம் சாட்டப்பட்டவர் மட்டுமே. குற்றத்தை நிரூபிக்க நீதியான சர்வதேச விசாரணை தேவை. அதற்கு புலிகள் எப்பொழுதுமே தயாராக இருந்ததே சாட்சி. அதேநேரம் சிங்கள அரசு அதற்கு தயாராக இல்லாதது இத்தாக்குதல்களின் அதன் பங்கை உறுதி செய்கிறது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
எதற்காக எல்லோரும் நீலனை பிடித்து தொங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. நான் கேட்ட கேள்வி நீலன் பற்றி அல்லவே?? தற்கொலை தாக்குதல் என்றால் அது புலிகள் தான் என்ற குற்றச்சாட்டில் எனக்கு உடன்பாடு இல்லை.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நீங்கள் வேண்டும் என்றால் சிரியுங்கள் ஆனால் குற்றவாளி என்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்குமான வித்தியாசத்தை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். ஏனெனில் என் இனம் மீதான பொறுப்பு எனக்கிருக்கிறது. டொட்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இலங்கையில் நடைபெற்ற அத்தனை தற்கொலை தாக்குதல்களும் புலிகளால் மட்டுமே நடாத்தப்பட்டதா??
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சீ நாங்க பிணத்தை புணரும் இனத்துடன் இணக்கமாக உள்ளோம். அவர்களின் எந்த செயலையும் கண்டிக்க மாட்டோம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அதனை விடுதலைப் புலிகள் உரிமை கோரினார்களா?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உதாரணமாக ஒரு செயல் சொல்லுங்கள்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
நேரடியாக பேசுங்கள் உங்களுக்கு புலிகளுடன் என்ன தகராறு?? உண்மையை வையுங்கள். பேசலாம்.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அண்ணா நீங்கள் ஊரில் இருந்து எழுதுவதாக ஒரு பெயரில் வாருங்கோ. சொல்வதெல்லாம் பொன்னும் பொருளும் வரலாறுமாக அங்கீகரிக்கப்படும்.😅