Everything posted by விசுகு
-
மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
நீதிமன்ற விசாரணைகளில் குற்றவாளிகள் இவ்வாறு அதிருப்தியும் மக்களை குழப்பி மேலும் நாசங்களை தொடர்வதை கண்டும் காணாமலும் இருக்க பழக்குவதும் வழமை தான். பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதி கோரி தமக்கான நீதி கிடைக்கும் வரை எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அது அவர்களது வலி. அதனை அவர்கள் மட்டுமே உணர்வார்கள். அதற்கு பக்கபலமாக இருப்பவர்களை கூட இவர் போன்ற குற்றவாளிகளுக்கு பைத்தியங்களாக தான் தெரியும். எல்லாவற்றையும் இழந்து போராடும் கூட்டத்தை பிழைக்க தெரியாத பைத்தியங்களாகவும் சுயநலவாதிகளை புத்திசாலிகளாக வளைந்து நெளிந்து தம்மை வளப்படுத்திய சாதனையாளர்களாகவும் போற்றுவது தானே இன்றைய உலக நிலை.
-
தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…!
தன்னை புறம் போடாத எந்த இனமும் அடுத்த கட்டத்திற்கு நகராது. அல்லது நாம் எல்லாம் சரியாக செய்தோம் கடவுளின் கிருபை கிடைக்கவில்லை என்று இனி அழுது புலம்ப வேண்டியது தான். நன்றி வணக்கம்.
-
தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…!
போராட்டம் எம் கண்முன்னே நடந்தது. அதில் நாமும் இருந்திருக்கிறோம் ஓடி ஒழிந்திருக்கிறோம் காட்டிக் கொடுத்திருக்கிறோம் மதில் மேல் பூனையாக நின்றிருக்கிறோம். இதில் எத்தனை வீதம் அவர்களுடன் முழுமையாக நின்றோம் என்பதே இத்தனையையும் முன் சென்று செய்த அவர்களால் கூட வெல்ல முடியாமையின் உண்மையை கண்டறிய உதவும். தாயகத்தில் ஒரு சிறிய பகுதியும் புலத்தில் மிக மிக சிறிய பகுதியும் பங்களித்து வெற்றியை எதிர் பார்க்கும் எந்த இனமும் அழிந்து மட்டுமே போகும். ஒரு காலத்தில் தன்னிடம் நாடி வந்த இளைஞர்களை தேர்வு செய்து எடுத்து மிகுதியானவர்களை திருப்பி அனுப்பிய ஒரு அமைப்பு கட்டாய ஆட்சேர்ப்பு செய்யவேண்டிய நிலைக்கு ஏன் வந்தது என்று ஒருமுறை சிந்தித்தால் தமிழினம் எங்கே தவறியது என்பது புரியும் இதில் நானும் அடக்கம் தான்
-
தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…!
சும்மா பேசுவதற்காக அல்லது உங்கள் எழுத்து திறமையை காட்ட இங்கே பொய்களை எழுத வேண்டாம். சமாதான காலத்தில் மட்டும் எம் இனத்தால் காட்டிக் கொடுப்பட்டு கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன போராளிகள் எத்தனை பேர்?? இது எமது இனத்தின் சாபக்கேடு. இது இருக்கும் வரை விமோசனம் இல்லை. எவரும் எமக்காக வரப் போவதுமில்லை
-
தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…!
அது என்னுடைய அனுபவத்தில் இருந்து வந்த கருத்து. என்னைப் பொறுத்தவரை எமது இனத்தின் ஈடுபாடு இன்மையும் காட்டிக்கொடுப்புமே அவர்களின் அழிவு மற்றும் இன்றைய இந்த இழிநிலைக்கும் காரணம். எமது இனத்தின் பலவீனங்களை விடுத்து மற்றவர்கள் அல்லது யார் மீதோ பழி போட்டு விட்டு நாம் தப்புதல் என்பது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள மட்டுமே உதவும். நன்றி.
-
தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…!
இல்லை இதையும் மீறி இவற்றையெல்லாம் தாண்டி தம்மையே ஈகை செய்தவர் எம்மிடம் இருந்து வந்தனர் செய்தனர். அவர்களை நாம் தான் இழந்தோம் அல்லது கைகொடுக்க மறந்தோம். 😭
-
சமனற்ற நீதி ? – நிலாந்தன்.
இக்கட்டுரையை முழுமையாக வாசித்தேன். இவர் மீதான வரம்பற்ற மீறல்களுக்கு இவரது தாயக விரும்பலும் முக்கிய காரணம். அது பற்றி புத்தகத்தில் பேசி இருக்கிறாரா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தாயகமுதலீடுகளின் தலைமைகளின் முதற்படி தாயக விரும்பிகளாக இருக்கவேண்டும். இவர் பொருத்தமானவரே. நன்றி.
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
குடும்பம் ஊர் தாயகம் கட்சி எதுவாயினும் முன்னுதாரணமான தலைமை அமையவில்லை என்றால் இப்படித்தான் உலகமே சிரிக்கும். நாம் என்று சிந்திக்காதவரை எந்த விமோசனமும் இல்லை.
-
இனப்படுகொலை நினைவு தினம்: யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் 'கொடூர வதை முகாம்கள்'
அப்படியானால் காசாவில் இஸ்ரேலியர்கள் செய்வது வரலாற்றில் இருந்து வந்த பாடமாக ஏற்றுக்கொள்ளப்படும்??
-
நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
ஏன் அண்ணா அவை என்ன குற்றம் செய்தன?? எமக்கு நன்மையும் உழைப்பும் உணவாகவும் பயன்படுத்தப்பட்டதை தவிர. ஆனால் இவன் கொலைகாரன். அதுவும் பணத்திற்காக திட்டமிட்டு கொலை செய்தவன். என் குடும்பத்தில் இப்படி இவன் செய்திருந்தால் அவனை என்னிடம் தந்தால் வைச்சு செய்து தான் கதை முடித்திருப்பேன். அதுவே மற்றவர்கள் குடும்பத்தில் நடந்தாலும். டொட்.
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
அவளைத் தொடுவானேன் வெடிப்பானேன்??😂
-
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்
WWF விளையாட்டுக்காரரிடம் அதை கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கிறேன். நான் அவரின் ரசிகன். 😛
-
நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
அவனை நிறுத்த சொல் இவன் நிறுத்துவான் 😭
-
நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் அமெரிக்க கைதியின் கடைசி நேர அச்சம்
கொலையாளி அதிலும் பணத்திற்காக திட்டமிட்டு? வச்சு செய்யணும் இவன்களை.... தண்ணீர் சாப்பாடு மருத்துவத்தை நிறுத்தி விட்டால் போதும். அனுபவித்து போய் சேரும்
-
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்
வா மச்சான் வா ஊரே அமைதியாக இருக்கு. ஒரு கை பார்க்கலாம் 😡
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
ரசிய சாம்ராஜ்யம் புட்டின் என்ற ஒரு தனி நபரின் சொத்தாகி விட்டது. அவரை வளைப்பதனூடாக அல்லது அவரை அழிப்பதன் ஊடாக மிகச் சுலபமாக ரசியா கைமாறும். மாறணும். . இது தான் இன்றைய உண்மை நிலை. அபாயகரமாதும் கூட ரசிய மக்களுக்கு.
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
ரசியாவை விட்டு ஓட்டம் பிடித்த நாடுகள் எல்லாம் நல்லா தானே இருக்கின்றன.
-
உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது
கொலையை தவிர்க்க முடிகிறது அல்லவா?😎
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இது தான் உண்மை இது தான் வரலாறு இதை கணக்கெடுக்கவில்லை என்றால் மேலும் மேலும் நாசம் மட்டுமே.
-
உக்ரேனியப் போர்க்கைதிகளை ஏற்றிவந்த ரஸ்ஸிய விமானம் விபத்திற்குள்ளானது
தகர டப்பாக்களில் ஆட்களை ஏற்றும் புட்டின்???
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
என்னைப் பொறுத்தவரை புட்டின் அரசியல்வாதியாக அல்ல கொள்கைவாதியாக அல்லது தேசியவாதியாக அம்மக்களால் நம்ப வைக்கப்பட்டவர்.
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
ஒரு தவறை குறிப்பிட்டு செய்தி வந்தால் அவனை நிறுத்த சொல் இவன் நிறுத்துவான் என்பது தவறை தட்டிக் கொடுக்கும் வேலை. இந்த வியாதி இருக்கும் வரை தத்துவத்தை வைத்து மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்து சேர்த்து வாழ்வோர் வேலை இலகுவாக தொடரும்.
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
முதுகில் குத்துதலில் வலி வலியது. பாவம் அந்த மக்கள்.
-
பாடசாலைகளிலேயே மாணவர்களுக்கு தொழிற்கல்வி
பாரபட்சம் உள்ள நாடுகளில் இது எதிர் மாறான விளைவுகளையே விதைக்கும் அண்ணா.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
புலிகள் தமக்கு பின்னர் எதையாவது ஏற்பாடு செய்தார்களா என்பதற்கான பதில் அது. எனக்கு தற்போது அவர்களில் எந்த எதிர்பார்ப்பும் மக்கள் நலன் சார்ந்த உழைப்பும் இல்லை. இருக்கவும் வாய்ப்பு இல்லை. நன்றி