Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. இங்கேயும் பாடசாலை பிள்ளைகள் தான் அதிகம் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் கஞ்சா பாவிப்பதால் ஏற்படும் பாதிப்பை விட கஞ்சா விற்று பிடிபடுவதால் தான் இவர்கள் வாழ்வு அதிகம் அழிந்து போகிறது 😭
  2. சத்தம் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கு. 🤣 சீனனும் எங்காவது பச்சோந்தி கிடைக்காதா பலத்தை காட்ட என்று தவம் கிடக்கும் இந்த நேரத்தில்...?😂
  3. இன்றும் கசிப்புக்கு வரவேற்பு இருக்கும் இடங்களில் இதை சொல்லி அடி வாங்கமுடியுமா?
  4. தவறான புரிதல் 😂 நீங்கள் சொல்வதை தான் நானும் சொல்லி இருக்கிறேன். வெளியே ஒரு முகமும் உள்ளே ஒரு முகமும் காட்டுகிறார்கள் என்று. உங்கள் கோபம் புரிகிறது. நன்றி.
  5. வாழ்த்துகள் எந்த வாய்ப்பையும் பயன்படுத்தி எமது மக்கள் முன்னேறுவதே தேவை.
  6. ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். என்ன பார்ட்டி இது,? எதுக்கு அப்பா இதை ஏற்பாடு செய்கிறார்? அப்பா ஏன் ரிஸ்க் எடுக்கிறார்? இது கொஞ்சம் வேறு மாதிரி மாறிவிடும் அல்லவா? என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் அப்பா சரியாக செய்து முடிப்பார் என்று பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்பாமாருக்கு பிடித்த சாப்பாடுகள் மற்றும் குடிவகைகள் அனைத்தும் மேசையில் இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். எனது மக்கள் மருமக்களுடன் மருமக்களின் தகப்பனார்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று கண்டிப்பாக சொல்லி விட்டிருந்தேன். அவரவர் மாமனார்களை அழைத்து வரவேண்டியது அந்தந்த மக்களின் வேலை என்றும் பிரித்துக் கொடுத்து இருந்தேன். பார்ட்டி ஆரம்பிக்கும் நேரம் எல்லோரும் வந்து அமர்ந்தார்கள். மேசையில் மக்கள் மற்றும் மருமக்கள் எமக்கு பிடித்த பல உணவுகளை தாமே சமைத்து கொண்டு வந்து வைத்திருந்தார்கள். அத்துடன் பலவகையான குடிவகைகளும் வைக்கப் பட்டிருந்தன. பார்ட்டி ஆரம்பித்தது. இங்கே யாரும் எதுவும் சொல்லக் கூடாது. போதும் என்று கையை காட்டுவது கண் சிமிட்டுவது என்று எதுவும் எவரும் சொல்ல வேண்டாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் குடிக்கலாம். மக்களிடம் கேட்டேன் கேள்வி ஏதாவது இருந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன் என்று. சாப்பிட குடிக்க இந்த பார்ட்டி செய்யவில்லை என்று தெரியும் அப்பா. அப்படியானால் ஏதோ வேறு காரணம் இருக்கும் அது என்ன என்று மகன் கேட்டான். அப்பாக்கள் தமக்கு என்று எதுவும் கேட்கமாட்டார்கள். நாங்கள் இறந்த பின்னர் நீங்கள் எங்களுக்கு என்ன செய்தும் பிரயோசனம் இல்லை எனக்கு அவற்றில் நம்பிக்கையும் இல்லை. இன்றைக்கு நீங்கள் விரும்பி உங்கள் கைகளால் சமைத்து பரிமாறி இருப்பதும் எமக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துப்பார்த்து வாங்கி மேசையில் வைத்திருப்பதும் தான் எமக்கான படையல். இருக்கும் போது கொடுக்கப்படுவது மட்டுமே சாலச்சிறந்தது. அதுவே தேவையும் கூட. நன்றாக குடித்து வயிராற சாப்பிட்டு சந்தோசமாக விடைபெறும் போது சொன்னார்கள் மறக்க முடியாத அனுபவம் என்று. கலந்து கொண்டவர்கள் என் சம்பந்திமார் மூவர். பார்ட்டியின் பெயர் சம்பந்தி பார்ட்டி. 🙏
  7. அதாவது இதுவரை நடந்தவை சரியான பிறப்புகள் என்கிறீர்கள்?? தவறு அங்கே தான். ஆண்களால் சிலவற்றை புரிந்து கொள்ளவே முடியாது.
  8. இது ஒரு பெண் உரிமை சம்பந்தப்பட்டது. அவளது சம்மதம் இல்லாமல் இது நடக்கக் கூடாது என்பதே இச்சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
  9. எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட எம் மண்ணை காக்கவுமே நாங்கள் போராடுகிறோம். இதில் உலக அங்கீகாரம் என்பது அடுத்த கட்டம் மட்டுமே. அது சுயநலத்தால் அல்லது அடிபணிதலால் தான் கிடைக்கும் என்றால் நாம் போராட்டப் புறப்பட்ட நோக்கமே இல்லாமல் போய்விடும்.
  10. ஆமா இந்த குந்தர் தனது சொத்தை தனக்குப் பின் யாருக்கு எப்படி எழுதி வைப்பார்?
  11. இங்கேயும் அதே... சும்மாமே வயிறு எரியும் இதைப் பார்த்தால்????
  12. அதாவது போராட்டம் மற்றும் அது சார்ந்த தியாகங்களை மக்கள் நினைவு கூறுவது தவிர்க்கப்பட வேண்டும்? கொஞ்சம் விரிவாக நேரடியாக பேசுங்கள். எழுதுங்கள். இங்கே மறைத்து எழுத உங்களுக்கு இனி ஏதுமில்லை.
  13. அதாவது சாந்தனை இரகசியமாக புதைத்திருக்கவேண்டும். எவருடைய பொல்லாங்கும் வேண்டாம். எம் இனம் எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு வாழப் பழகணும்.
  14. @Kapithan பாலசிங்கம் அண்ணை சொன்னால் நீங்கள் கேட்பீர்கள் தானே? இந்த பழசை போட்டு கிளறும் ஆட்களுக்கும் சொல்லி இருக்கிறார் கேளுங்கள் எங்கள் நேரத்தை சாகடிக்காமல் இருக்க உதவலாம்.
  15. ரசியாவுக்குள்ளிருந்து புட்டின் இல்லாத ரசியாவை விரும்பும் மக்கள். 👋
  16. 2003 இல் இதே இடத்தில் 15 நாட்கள் கழித்து இருக்கிறேன். அதே இடத்தை இவர் எடுத்திருப்பது ஒருவிதத்தில் கவலையாக இருந்தாலும் இவர் செய்பவை நாம் செய்ய முடியாமல் போனதை செய்வது அல்லது அக்கனவுகளுக்கு ஒரு பலன் தருவதாக உள்ளது.
  17. இது தான் அந்த நோய் எல்லா இடங்களிலும் காவி காவி வம்புக்கு இழுத்தல்.
  18. இப்போது இருக்கும் அரசியல்வாதிகளை விட செயலில் செய்பவரும் இத்தனை நூறு தாயக மக்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்களை மேலைத்தேச முறைப்படி வேலை செய்ய பழக்குபவரும் மக்களின் தெரிவாக இருந்தால் மகிழ்ச்சி தானே அண்ணா.
  19. Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah இலங்கையின் வடக்கில், இயக்கச்சி எனும் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவிலான ஒரு காணியை புலம்பெயர் தமிழ்ச் செல்வந்தர் ஒருவர் வாங்குகிறார். அதில் பெரும்பண்ணை ஒன்றை உருவாக்குகிறார். பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி என ஆயிரக்கணக்கான விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு பயன்தரு மரங்கள், தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் உள்ளே ஹொட்டேல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரத்திலான உணவங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், நீச்சல் தடாகங்கள் என அத்தனை வசதிகளும் கொண்டுவரப்படுகின்றன. குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் பெரும்வளர்ச்சி காண்கிறது. REECHA என்பது நிறுவனத்தின் பெயர். இங்கு 200 வரையான ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். மேலும் பல்வேறு ஒப்பந்த நிறுவனங்கள் உள்ளே பல்வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு பின்தங்கிய கிராமத்தில், சர்வதேச தரத்தில் ஒரு பண்ணையை அமைத்து, அதில் பலநூறுபேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி, புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறார் நமது கரன் அண்ணா. அவரிடம் இருக்கும் பணத்துக்கும் வசதிக்கும் இப்படி ஒரு வரண்ட பிரதேசத்தில் போய்நின்று ஆடு, மாடு, பன்றிகள் வளர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் தாய் நாட்டின்மீதான பற்றும் காதலும் அங்கிருக்கும் எமது உறவுகளுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் எனும் உந்துதலுமே இந்த முயற்சியில் அவரை ஈடுபட வைத்திருக்கிறது. Reecha குறித்து நான் இங்கே எழுதியிருப்பது மிகச் சொற்பமே..! கரன் அண்ணாவின் YouTube க்குச் சென்று பாருங்கள். ‘BK in Reecha’ என்று ஒரு நிகழ்ச்சித் தொடர் இருக்கும். அதில் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஏராளமான தகவல்கள் உள்ளன. வெளிநாடுகளில் எத்தனையோ ஈழத்தமிழ் மில்லியனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தாயகத்தில் முதலிட தயங்குகிறார்கள். ஆனால் கரன் அண்ணா துணிந்து இறங்கியிருக்கிறார். அந்தத் துணிச்சலுக்கு முதலில் வாழ்த்துக்கள். Reecha வின் நோக்கமும் குறிக்கோளும் சிறப்பாக ஈடேற வேண்டும். எமது மக்கள் பொருளாதார ரீதியாக மேலும் முன்னேற வேண்டும். பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாகும்..! ‘வரப்புயர நீருயரும்..! ReeCha வில் தமிழ் மன்னர்களின் கோட்டைகள்..! ReeCha வில் என்னைக் கவர்ந்த முக்கிய விடயமே தமிழுக்கும் தமிழர் வரலாற்றுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்தான். இங்கே ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு தமிழ் மன்னனின் கோட்டையாகக் கருதி, பெயரிட்டு, குறித்த மன்னர்களின் உருவப்படங்களைப் பொறித்து, அவர்கள் குறித்த ஒரு சிறுகுறிப்பையும் எழுதி, அசத்தியிருக்கிறார்கள். எமது பிள்ளைகளுக்கு இவற்றைக் காட்டி ‘குளக்கோட்ட மன்னன் பல குளங்களைக் கட்டி விவசாயத்தை பெருக்கினார்’ என்றும் ‘பண்டாரவன்னியன் வீரத்தில் சிறந்தவர். அவர் போர்த்துக்கேயரை எதிர்த்து போரிட்டார்’ என்றும் அறிமுகம் செய்யும்போது அதில் பெருமையும் உரிமையும் இருக்கும். பிள்ளைகளுக்கும் அது மிகவும் பிடிக்கும். வெளிநாடுகளில் இதைத்தான் செய்கிறார்கள். இங்குள்ள கல்விமுறையின் அடிப்படையே நாட்டுப்பற்றையும் வரலாற்றையும் புகுத்துவதுதான். பூங்காக்களிலும் தெருக்களிலும் மற்றும் திரும்பும் திசை எல்லாம் சிலைகளையும் நினைவிடங்களையும் நிறுவி, வரலாற்று நாயகர்கள் அனைவரையும் பிள்ளைகள் மனதில் பதித்துவிடுவார்கள். இதே முயற்சியை, தமிழ் சார்ந்து ReeCha முன்னெடுப்பது பெருமைக்கும் போற்றுதலுக்குமுரிய விடயமாகும். தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, உல்லாசப் பயணிகளாக வரும் வெள்ளையர்களையும் இந்த முயற்சி ஆச்சரியப்படுத்தும். காரணம் வரலாற்றை அறிவதிலும் அந்தக்கால ஆட்சிமுறைகளைத் தெரிந்துகொள்வதிலும் அவர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். கூகுளிடம் போய் ஆனையும் அல்பேர்ட்டையும் தேடிய எமது பிள்ளைகள் இனி சங்கிலியனையும் இராவணனையும் தேடப்போவது நல்லதொரு மாற்றமாகும். ஒரு முகநூல் பதிவு
  20. சில விடயங்களை பேசுவதில்லை. ஊரில் சொல்வார்கள் நம்ப பல்லைக் குத்தி நாமே . ..... என்று. ஆனால் அதை தமக்கு சாதகமாக எடுத்து எம்மை பதம் பார்ப்பது இங்கும் தொடர்கிறது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.