Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசுகு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விசுகு

  1. இதில் இன்னொரு வகை. அண்மையில் கனடாவில் இருந்து ஒருவர் குடும்பமாக தாயகம் சென்றிருந்தார். அவரது அக்கா வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று கூப்பிட்டு இருக்கிறார். அதற்கு தங்கை எனது கணவர் இந்த கோழி சாப்பிடமாட்டார். இந்த வகை மீன்களை பிடிக்கவே பிடிக்காது என்று சொன்னாராம். அடப்பாவிகளா கனடாவுக்கு வந்ததில் இருந்து இதுவரை சம்பளச்சீற் என்றாலே என்ன என்று தெரியாது. அந்த காசு இந்தக்காசு இலவச மருத்துவம் என இன்னொருத்தரின் வியர்வையை உறிஞ்சி வாழ்ந்தபடி....
  2. சரியான திசையில் சரியான பாதையில் எல்லோரும் எழுதுகிறோம் புரிந்து கொள்ள முயல்கிறோம் என்று தெரிகிறது. தொடர்ந்து ஒவ்வொருவராக பதில் எழுதுகிறேன். நன்றி
  3. பொதுவாக எழுதியது அது. எனக்கு தெரிந்து ஒரு யூரோ= 90 ரூபாய் என்று இருந்தபோது மதில் கட்டி வித்தியாலயத்தை கல்லூரி என்று கொண்டு வந்தவர்கள் உண்டு. ஆனால் புலத்தில் மரத்தில் காசு புடுங்குறோம் என படம் காட்டியவர்கள் பழக்கி விட்டதால் அதை பராமரிக்க பூச்சு பூச என்று இன்னும் கதவு தட்டல் தொடர்கிறது. என்ன இன்னும் கொஞ்ச காலம் பழைய தலைமுறைக்கதவுகள் திறக்கும். திறக்கிறது.
  4. இல்லை சகோ இங்கே இருந்து போய் காசை கட்டு கட்டாக மாத்தி எடுத்து விசுக்கலும் ஆடம்பரம் காட்டுதலும் தேடித் தேடி வாய்க்குள் போட்டு குடித்து கும்மாளம் போடுவதும் அறவே அற்றுப் போகும். அதுவே தேவை. அந்த நிலை வரணும் வந்தால் அந்த மக்களும் இந்த படம் காட்டுதலை காணாது அங்கையே நிம்மதியாக வாழ வழி பிறக்கும்.
  5. சரி சகோ ஒரு கேள்வி ஒரு பவுண்ஸ்=ஒரு ரூபாய் என்று இருந்தால் எத்தனை பேர் ஊர் போவார்கள் எத்தனை முறை போவார்கள்???
  6. 3 - எனது நண்பர் ஒருவர் தன் குடும்பத்துடன் தனது இளம் தங்கையையும் கூட்டிக்கொண்டு பரிசில் இருந்து 850 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் லூர்து மாதா கோயிலுக்கு போனார். இவரே வாகனத்தை தொடர்ந்து ஒட்டியபடி திரும்பி வரும் போது இரண்டு பக்கமும் வாகனம் வரும் வேகப் பாதையில் சில செக்கன்கள் நித்திரையானார். கண்ணை மூடித் திறப்பதற்குள் வாகனம் தடுமாற்றம் தொடங்கி அவரது தங்கை வெளியே தூக்கி எறியப்பட்டு எதிரே வந்த வாகனத்தால் தலையில் நசுக்கப்படுவதை கண்டார். நடமாடும் பிணமாக வாழ்கிறார்.
  7. திராவிடம் சார்ந்து உங்கள் நிலைப்பாடு தான் நானும். தமிழர்களுக்குள் இந்துமதம் எவ்வாறு திணிக்கப்பட்டதோ அதே செயல்முறை தான் திராவிடமும். நீண்ட கால நோக்கில் தமிழர்கள் மீளவே முடியாத பொறிகள் இவை. மீள வேண்டும். அதற்காக உழைப்பவர்களோடு ஒன்றாகணும். நன்றி அண்ணா.
  8. பெரியவர்கள் எம்மை எச்சரிப்பார்கள். இப்படி செய்யக்கூடாது அப்படி செய்யக்கூடாது என்று. அவை மிகச் சிறிய விடயங்களாக மிக மிக அசாதாரண விடயங்களாக எம் வாழ்வில் நடக்கமுடியாத நாம் சந்திக்காத விடயங்களாக இருக்கும். ஆனால் அவ்வாறு நடந்து விட்டால்......?? சில விடயங்களை நான் இங்கே எழுதுகிறேன் நீங்களும் நீங்கள் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட விடயங்களை எழுதுங்கள். எவராவது பயன் பெறட்டும். 1 - பிரெஞ்சில் இருந்து எனது நண்பர் ஒருவர் டென்மார்க்கில் உள்ள ஒரு ஆலயத்தில் தரிசனம் செய்ய தனது குடும்பத்துடன் (இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் கடைசி ஆண் குழந்தை) சென்றிருந்தார். அந்த கோயில் உள்ள இடம் வயலும் காடும் நிறைந்த இடம். அங்கே அந்த ஆண் குழந்தைக்கு (2 வயது) ஒரு பூச்சி கடித்து விட்டது. அது அருகில் இருந்த குதிரைகளின் வளாகத்தில் இருந்து வந்ததாக வைத்தியர்கள் சொல்கிறார்கள். அன்றிலிருந்து அந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி தடைப்பட்டு விட்டது. இன்று அவனுக்கு 20 வயதுக்கு மேல். 2- எனது நண்பர் ஒருவரின் 30 வயது மகன். ஸ்பெயினுக்கு இரண்டு வார விடுமுறையில் நண்பர்களுடன் சென்றிருந்தான். அங்கே மைதானத்தில் உதை பந்து விளையாடிய போது கையில் தோள் பக்கம் ஒரு பூச்சி கடித்து விட்டது. தட்டி விட்டு விட்டு அதை மறந்து விட்டான். ஆனால் நாளாக நாளாக அந்த இடத்தில் ஒரு வித கடி. தோலில் சில மாற்றங்கள். இங்கே வைத்தியரிடம் காட்டிய போதும் பல பரிசோதனைகள் செய்து பார்த்த போதும் எதுவும் புலப்படவில்லை. ஆனால் கையில் தோலில் ஏற்படும் மாற்றம் அதிகரித்த வண்ணமே உள்ளது. நன்றி தொடரலாம்.....
  9. இது தாயகத்தில் வாழும் யாழ் கள உறவு ஒருவரின் முகநூல் பதிவு. நாடு நன்றாக இருக்கிறது என அந்நாட்டு மக்களே சொல்ல வேண்டும் மாறாக நாற்பது நாளில் நாட்டைசுற்றிப்பார்த்து விட்டு மிக பிரமிப்பாக இருக்கிறது என சொல்ல முடியாது. இன்றைய நடுத்தர வர்க்கத்தினரையும் , நாள்கூலி வரை பிரட்டிப் போட்டுள்ள நாட்டின் பொருளாதார சரிவு மக்களை எப்போது மீட்டெடுக்க முடியும் என சொல்ல முடியாது மாறாக அடகு வைக்கப்பட்டுள்ளார்கள். அடகு வைத்தும் வாழ்வை தொடர்கிறார்கள். என்றே சொல்லலாம். கொழும்பில் இருந்து பாரக்கும் போது அழகாக தெரியும் போட் சிற்றி ,தாமரை கோபுரம்,அடுக்கு மாடி உல்லாச விடுதிகள் கொள்ளை அழகுதான் போட்டிருக்கும் காப்பட் வீதிகள் கூட ஆனால் உங்கள் நாட்டின் காசின் பெறுமதிக்கு இலங்கை இலகுவாக இருக்கும் தரமாகவும் இருக்கும் ஐம்பது சதம் காசுக்கு வாங்கிய ரொபி ஒன்று 10 ரூபாய். உழைப்புக்கு ஊதியம் என்பது பாம்பாட்டி விரித்திருக்கும் துண்டில் விழும் சில்லறை போல எடுத்து எண்ணுவதற்குள் சிதறி விடுகிறது. எங்கோ ந சட்டமக்கும் ஓர் மாற்றம் வாழ்வியலில் நிகழ்ந்து விடாதா என ஏங்கும் சாமானிய மக்களே இங்கு இலங்கையில். ஆனால் நடப்பதோ எரிவதில் பிடுங்குவது இலாபம் என்ற நோக்கு . https://www.facebook.com/share/p/QGe169avBt5AkuP7/
  10. இங்கே கேள்வி அது இல்லை அண்ணா ஏதோ ஒரு வகையில் ஒரு இனம் இன்னொரு இனத்தை அல்லது ஒரு சாதி மற்றொரு சாதியை அடக்கி ஒடுக்குகிறதா?? அப்படி ஒடுக்கினால் நாமே அடக்குமுறையாளர்களாக இருந்தபடி இன்னொரு அடக்குமுறை சார்ந்து பேசும் தகுதி இழக்கிறோம்.
  11. ஒரு போராடும் இனம் எல்லாவற்றையும் கழட்டி போடவேண்டும். உன்னை முதலில் நிரூபி என்பார்கள். இதில் அந்த இனத்தின் பண்பாடு கலாச்சாரம் உட்பட நல்லன கெட்டன அனைத்தும் அடங்கும். ஈழத் தமிழ் இனம் அனைத்தையும் அத்துடன் உடல் பொருள் ரத்தம் சதை உட்பட அனைத்தையும் கழட்டி போட்டது. ஆனால் அப்பவும் கிடைத்தது பூச்சியம் தான். 😡
  12. நான் வாசிக்காத வாசிக்க விரும்பாத கருத்துக்கு நான் எப்படி பொறுப்பு சகோ?? யானை வழி விடுவதால் அதற்கு பயம் என்பது போல இருக்கிறது உங்கள் பார்வை. நமக்கெல்லாம் ஒரு சூடு தான்.
  13. நியாயம் என்று வந்தால் சிறிது பெரிது என்று இல்லை தானே சகோ. அப்படி பார்த்தால் இந்த சிறிய இனத்துக்காக எதுக்காக நாட்டை ஆளும் சிங்களத்தை பகைக்கணும் என்று உலகம் சொல்வது சரியாகிவிடும் அல்லவா?? நீங்கள் சொல்லும் அனைத்து கட்சிகளும் அந்த 8 யை தாண்டி வந்தவை தானே,?
  14. உங்கள் கருத்தோடு பலவற்றில் ஒத்துப்போகும் நான்.... சீமான் விடயத்தில் (பர்னிச்சர் உடைக்கும்போது) நான் நாம் தமிழர் கட்சியில் கணக்கில் எடுக்கும் சிலவற்றை சில நல்லவற்றையும் கணக்கில் எடுங்கள் என்று உங்கள் முன் வைக்கிறேன். 1- தமிழ் மொழி சார்ந்த அவர்களது முன் மொழிவுகள் மற்றும் அடுத்த சந்ததிக்கு கடத்தல் (இதில் சீமான் கூட கருத்தில் இல்லை). ஆனால் விதை போடப்பட்டு விட்டது. 2- பெருவாரியான அடுத்த தலைமுறை (படித்த) இளைஞர்களின் கூட்டு 3- சம பங்கு பெறும் பெண்கள் 4- பணம் மற்றும் வசதிகள் செய்து ஓட்டு வாங்காமை கூட்டத்திற்கு ஆட்கள் சேராமை 5- விழாக்கள் மற்றும் பேரணிகளில் நன்னடத்தை மற்றும் ஒழுங்கு,. 6- முடிந்தவரை தமிழர்கள் சார்ந்த சிந்தனை உடையோர்களுடன் பகை தவிர்ப்பு. (திருமால் வளவன், வைகோ, ராமதாஸ் அன்புமணி, விஜயகாந்த்....…) நன்றி
  15. அவர்களின் அந்த வகை கருத்துக்களை நான் வரவேற்றதும் இல்லை என்பதையும் உணருங்கள். அதேநேரம் யாழ் களத்தில் உள்ள உறவுகளுடன் ஒரு முறுகல் அற்ற நிலைக்கு வருவதே எம்மால் முடியாத போது. ...?? எனவே எனது முயற்சி அல்லது எல்லை அது சார்ந்தது மட்டுமே.
  16. எவரையும் புகைக்க கூடாது என்பது என் கருத்து. அந்த இடத்தில் நாமும் (ஈழத்தமிழர்) இல்லை. ஆனால் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று நான் இங்கே வகுப்பெடுப்பதில்லை. எடுக்கும் நீங்கள் அதை பின்பற்றுவதும் இல்லை.
  17. சீமானின் பிள்ளைகளின் படிப்பு பற்றி இங்கே பதிந்ததே நான் தான். ஆனால் தமிழகத்தில் எந்த கட்சியையும் பகைக்க கூடாது என்று வகுப்பெடுத்தபடி நாம் தமிழரை வசைபாடி 13 பக்கங்களுக்கு நீட்டி இருக்கும் உங்கள் அரசியல் இங்கே புரிந்து விட்டது. டொட்.
  18. அப்புறம் சீமானுக்கு ஏன் இத்தனை புடுங்கல்?? தமிழ் நாட்டில் பிறக்காமல் அங்கு வாழாமல் எதுக்காக இத்தனை வன்மம் நாம் தமிழர் மேல். என்ன தான் நீங்கள் கிடந்து குலைந்தாலும் நாம் தமிழர் இனி தமிழகத்தில் அலட்சியம் செய்துவிட முடியாதவர்கள் தான்.
  19. சீமானுக்கு எதிரான உங்கள் நேரத்தை பார்க்கும்போது உங்கள் வாக்கு திமுகவுக்கு என்று தெரிகிறது. காசு வாங்காமல் போடுங்கள். நன்றி.
  20. ஜேசுவை கொன்றவர்கள் இனி ஒவ்வொருவராக கடவுள் வேடமிட்டு வலம் வரும் நிலை தொடரும்....
  21. திராவிடர் கழகம் தான் இவர்களின் அத்திவாரம் அல்லது ஆரம்பம் என்பதால் இருக்கலாம் அல்லவா!
  22. எதுவாக இருந்தாலும் சீமானே தன் வாயால் கெட்டாலும் சீமானும் நாம் தமிழரும் இனி தமிழகத்தில் தவிர்க்கப்படமுடியாதவர்கள் தான் திராவிடக்கட்சிகள் தேய்வதும் நாம் தமிழர் வளர்வதும் இனி தொடரும்... (தமிழக மக்கள் சிலவற்றை பெரிது படுத்துவதில்லை) ஒரு தமிழனாக இதை நான் சாதகமாகத்தான் பார்ப்பேன் பார்க்கணும்
  23. அப்படி நடந்தால் தமிழ்ப்பற்றும் தனி நாட்டுக்கான கோரிக்கையும் தமிழகத்தில் வலுக்கும் அதுவே தேவையும் கூட...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.