-
Posts
32991 -
Joined
-
Days Won
268
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nedukkalapoovan
-
ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய தர்ஷன் செல்வராஜா!
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in வாழும் புலம்
உழைப்பால் உயர்ந்த தமிழனுக்கு பெருமை சேர்த்த பிரான்ஸ் மக்களுக்கும் தர்சனுக்கும் ஒலிம்பிக் பிரான்ஸ் ஒழுங்கமைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள். -
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
nedukkalapoovan replied to ஈழப்பிரியன்'s topic in உலக நடப்பு
ரம்பும் அவரின் உப சனாதிபதி வேட்பாளரும்.. உக்ரைன் போருக்கு தாம் ஆதரவில்லை என்பதான சமிக்ஞயை காட்டி விட்டார்கள். அதனால் மேற்குலக ஊடகங்கள் மாக்கு மாக்கென்று பைடனை தாங்கின. அவரோ தன் வாயாலேயே உளறிக் கொட்டிட்டு போயிட்டார். புட்டினிடம் மண்டியிட மாட்டன் என்ற பைடன்.. இப்ப மண்டியிட வாய்ப்பே இல்லாத வெத்து பைடனாகி விட்டார். இப்போ கமலா ஹரிஸ் என்ற இன்னொரு இப்புச் சப்பற்றதை தலையில் வைச்சுக் கொண்டாடினம். இதனால்.. ரம் ஆதரவுக்கு வீழ்ச்சி வருமாப் போல தெரியவில்லை. ரம் படுகொலை முயற்சியில்.. உக்ரைன் மறைமுக பங்களிச்சிருக்கலாம். -
சம்பந்தன் எந்த ஒரு முள்ளிவாய்க்கால் நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை. சொந்த இனப்படுகொலையை.. பயங்கரவாத அழிப்பாக நியாயப்படுத்தி இனப்படுகொலையாளர்களைக் காப்பாற்றிய ஒரு கயவர். தெந்தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு ஆற்றக் கிடைத்த சேவையையும் இஸ்லாமிய தமிழர்களுக்கு தாரை வார்த்தது தான் செய்த துரோகம். அவர்கள் தங்களை இஸ்லாமிய தமிழர்களாக இப்போ கருதுவதில்லை. அரபு முஸ்லிம்களாகவே கருதி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு நாட்டுக்கு வெளியில் இருந்து கடும்போக்கு இஸ்லாமியர்களிடம் இருந்தும் இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் உதவி வருகிறது. மேலும் சிங்கக் கொடியை எரித்த பூமியில் இருந்து தெரிவான சம்பந்தன்.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சு.. சொந்த மக்களின் பூமியையும் அந்நிய ஆக்கிரமிப்புக்குள்ளாகி செய்தது தான் தீபாவளி அரசியல். இப்படியாப்பட்ட தோற்றுப் போன ஒரு அரசியல்வாதியான சம்பந்தனுக்கு மக்களின் ஆழ் மனதில் அடைந்து கிடக்கும் அரசியல் ஆசைகளை புரிந்து கொள்ளவோ.. அதனை தாமும்... தாங்கி நின்று முன்னெடுத்துச் செல்லும் சாணக்கியமோ கிடையாது. அவரின் தற்போதைய வாரிசுகளுக்கும் அது கிடையாது.
-
1997 இல் உருவாக்கப்பட்ட ரஷ்சியாவின் Kaspersky சைபர் செக்குரிட்டி மென்பொருளுக்கு அமெரிக்காவில் தடை. நேற்று அது அமெரிக்காவில் இருந்து வெளியேறிவிட்டது. இன்று.. உலகமே பெரிதும் அறியப்படாதிருந்த அமெரிக்க.. crowdstrike க்கு பயங்கர விளம்பரம். ஒரே நாளில் உலக அறிமுகம். இணையத்தை 1990 களில் அமெரிக்க இராணுவப் பாவனையில் இருந்து வியாபார மற்றும் உளவு நோக்கத்திற்காக திறந்துவிட்ட போதே.. ஒரு நாள் இது நிகழும் என்று அப்பவே எதிர்வு கூறியோர் பலர். மக்களை மந்தைகளாக்கி மேற்குலகின் வழியில் கொண்டு சென்றவர்களுக்கு கிடைத்த வெற்றி இது. இந்த இடத்தில் புலிகளை நினைவு கூறுவது சிறப்பு.. புலிகள் தந்தி இல்லாத தொலைபேசிகளை பாவிப்பினும்.. தந்தி உள்ளதையும் மீளமைத்து பாவித்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் பல ஆபத்துக்களில் இருந்து தப்ப முடிந்தது. எப்போது அவர்கள் மேற்குலக சற்றலைட்டுக்கள் சார்ந்த தொழில்நுட்பத்துக்குள் நுழைந்தார்களோ.. அப்பவே அவர்கள் இலகுவாக இலக்கு வைக்கப்பட்டுவிட்டார்கள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
முள்ளிவாய்க்காலில் பயிற்சி எடுத்த இஸ்ரேல் காசாவில் கச்சிதமாகப் பயன்படுத்துது போல. பாதுகாப்பு வலயங்களை அறிவித்துவிட்டு அங்கு மக்களைக் கூட வைச்சுக் கொல்கிறது. இது கமாஸூக்கு எதிரான போராகத் தெரியவில்லை. பலஸ்தீன இன அழிப்பு தான் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிறது. என்ன பலஸ்தீனர்கள்.. ஈழத்தமிழர் மீதான சிங்கள... இன அழிப்புப் பற்றி.. எந்த அக்கறறையும் கருசணையும் இன்றி.. கொழும்பு வந்து மகிந்தவுக்கு மாலை போட்டுச் சென்றதையும் தாண்டி.... -
ஐயா ராமதாஸ் சொல்வது பாதி தான் நியாயம். ஏனெனில் தி மு க இவ்வளவும் கொடுத்தது என்றால்.. பா ம க.. கூட்டணி வைக்காமலே.. மற்றைய கட்சிக்கொடிகளையும் தூக்கி வைச்சுக் கொண்டும்.. பகுதியாக என்றாலும் காசு கொடுத்து வாங்கினது 56,000 வாக்குகள். வெறும் மைக் சின்னத்தை மட்டும் வைச்சுக் கொண்டு காட்டுக்கத்துக் கத்தி மட்டும் 9000 வாக்குகள் பெற்ற நாம் தமிழர் தான் உண்மையான சனநாயகவாதிகள். அவர்களுக்கு வாக்குப் போட்டவர்கள் தான் சாதாரண மக்கள். இங்கு பாமக கொடி மட்டுமா பறக்கிறது..?! ராமதாஸ் ஐயாவுக்கே வெளிச்சம்.
-
கருணாநிதி திட்டாத திட்டுக்களா..?! ஜெயலிலதா.. வை கோ போன்றவர்களை திடாத திட்டா. ஏதோ கருணாநிதி யோக்கியவான் போலவும்.... அண்மையில் ஸ்ராலின் கூட எரிதடி மாலா.. பா(f)னைப் போடு என்று ஒட்டுமொத்த தமிழகப் பெண்களையும் எள்ளி நகையாடியது கூட கைதுக்குரிய அம்சம் தானே. இது குறித்து தி மு க மகளிர் அணி மூச்சும் விடவில்லை. அண்மைய நாடாளுமன்ற.. மற்றும்.. இடைத்தேர்தல் பணநாயக வெற்றிக்கு பின்.. தி மு க கும்பல் கொஞ்சம் ஓவராத்தான் ஆடுது.
-
யார் சரி.. யார் பிழை என்பதற்கு அப்பால்.. இதை ஒரு எச்சரிக்கை செய்தியாக எடுத்து பெருகி வரும் கண்காணிப்பு கமராக் கலாச்சாரத்துக்கு தகுந்த விதிகள் அமுல்படுத்தப்படுவது அவசியம். எங்கு கமரா வைக்கலாம் எங்கு வைக்கப்படாது.. அப்படி வைக்கப்படக் கூடாத இடத்தில் கமரா பொருத்துவது அல்லது வைப்பது சட்டவிரோதம் என்று குற்றச் செயலாக அமுலாக்கப்பட வேண்டும். ஆனால் குற்றங்களைக் குறைப்பதில்.. கண்காணிப்புக் கமராக்களின் பங்களிப்பு முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்வது சிறப்பு.
-
சிந்துவெளி நாகரிகம் தொடர்பில் சைவநெறி பாடப்பரப்பில் பாடசாலையில் படிக்கும் (ஆண்டு 9 இல்) போதே... இது தொடர்பில் ஆசிரியரிடம் கேட்டிருக்கிறேன். சிந்துவெளி அடையாளங்கள் தமிழர் மரபை ஒட்டி காணப்படுகிறதே என்று.. குறிப்பாக பசு பதி பாசம் வடிவங்களில் இறையை காண்பது உட்பட. அதற்கு ஆசிரியரால் அன்று விளக்கம் தர முடியவில்லை. எதையோ சொல்லி சமாளிச்சிட்டார். இன்று சமூக வலையிலும் அன்றைய என் கேள்விக்கு விடை தேடுகிறார்கள். கீழடியில் காணப்பட்ட அடையாளச் சின்னங்களோடு சிந்து வெளி சின்னங்கள் பொருந்தி வருவதும் ஆராயப்பட்டு வருகிறது. இந்த கட்டுரைக்குள்.. தமிழர் மரபுக்கு அப்பால்.. உருவகிக்கப்பட்ட போலித் திராவிடத்தை புகுத்தாமல்.. தமிழர் மரபுகளோடு சம்பந்தப்படுத்திச் சென்றிருந்தால் சிறப்பு என்று தோன்றுகிறது. அதுதான் நியாயமும் கூட. திராவிடம் என்பது கட்டியமைப்பட்ட மாயை.
-
கறுப்புப் பட்டியலில் இடுவதால் மட்டும் பிரச்சனை தீராது. ஆபத்தான புகை வெளியிடுவதை குறைக்கக் கூடிய ஊக்கி மாற்றிகள் பொருத்தப்படுவது.. மின்சார வாகனங்களின் பாவனையை அதிகரிப்பது.. மின்சார வாகனக் கொள்வனவுக்கு மானியம்.. என்று பல வகைகளில் இது அமுலாகப்பட வேண்டும்.
- 1 reply
-
- 1
-
வேகக்கட்டுப்பாட்டு விதிகள் மட்டும் போதாது வீதி மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை அவசியம். இதற்கு சொறீலங்கா பொலிஸ் சரிப்பட்டு வராது. ஏ ஐ உதவியுடன் கூடிய தானியங்கி கமராக்கள் மூலம்.. போக்குவரத்து அமைச்சுக்குள் உட்பட்ட போக்குவரத்து விதி அமுலாக்க துறை சுயாதீனமாக இயங்கும் நிலை அவசியம். சொறீலங்கா பொலிஸ் உதவி தேவை என்றால் மட்டும் பெறப்படலாம்.
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
nedukkalapoovan replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
அமிர்தலிங்கத்தின் கொள்கைக்கு திரண்ட பெரும் திரளானவர்களைக் காண கண்கள் ஆயிரம் தேவை. கூடின கூட்டமே சாட்சி.. இவர்களின் இனக்கொலைக் கொள்கைகள் பற்றிய உண்மைகளைச் சொல்ல. -
கிழக்கு லண்டன்... நியுகாம் தொழிற்கட்சி கவுன்சிலராக பல ஆண்டுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு வந்த போல் சத்தியநேசன் உடல்நலன் குறைவு காரணமாக கடந்த 5ம் திகதி காலமானார். இவர் அடிப்படையில் புளொட் அமைப்புச் சார்ந்தவராக இருந்தாலும்.. புலம்பெயர் மண்ணில்.. தமிழீழத்துக்கு சார்பான நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதிலும் பிரித்தானியர்களிடம் தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றியவர் ஆவார். 1980 களில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் கிடைக்க பல வழிகளிலும் இவர் தன் உதவிகளை வழங்கி வந்திருப்பது தெரிந்ததே. கடந்த சில காலங்களாக தாயகத்தில் சில வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்திருக்கிறார். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
-
சாட்டை துரைமுருகன் விடுவிப்பு
nedukkalapoovan replied to வீரப் பையன்26's topic in தமிழகச் செய்திகள்
ஒரு நாள் உண்ணாவிரதி கருணாநிதி.. ஈழத்தமிழர் துரோகி கருணாநிதி.. சிங்களன் மகிந்தவின் பொன்னாடைத் தோழன் கருணாநிதி.. ஈழ இரத்தம் குடி பிசாசு.. சோனியாவின் சொக்கத்தங்கம் கருணாநிதி.. இப்படி.. இன்னும் பல வகையில் நீளக் கூடியது இப்பாடல். எழுதியவருக்கும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள். -
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி
nedukkalapoovan replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
தொழிற்கட்சி ஈழத்தமிழருக்கு ஆற்றிய கைங்கரியங்கள்.. 1. விடுதலைப்புலிகள் மீதான தடை - ரொனி பிளேயர். 2. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மீதான தடையும் சொத்துப் பறிப்பும் 3. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் பாராமுகத்துடனாக ஊக்குவிப்பு - ஹோடன் பிரவுன். சர்வதேசத்தில்.. 1. ஈராக் மீதான பேரழிவு ஆயுத போலிக் கூச்ச போர் - ரொனி பிளேயர். உள்ளூரில்.. 1. பல அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தியது. 2. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு பிரித்தானியாவை திறந்து விட்டது. 3. சலுகை அளிப்பு என்ற பெயரில் வரி உயர்வுக்கு வழி சமைத்தது. 4. வீட்டு கடன் சுமையை அதிகரித்தது. 5. மாணவர் கடன் சுமையை அதிகரித்தது. 7. தேசிய சுகாதார சேவைக்குள் தனியார் மயப்படுத்தலை புகுத்தியதும் இன்றி காத்திருப்பு காலம் இவர்கள் காலத்தில் தான் நீடிக்க முடிந்தது. 8. மாலை 5 மணிக்கு பின்னரான வேலை நேர கூடிய ஊதியத்தை மாலை 8 மணி ஆக்கி இல்லாமல் செய்தமை. 9. தொழிலாளர்கள் நலனில் அக்கறையின்மை போக்கை கடைப்பித்ததோடு தேசிய விடுமுறை நாட்களையும் வேலை நாட்கள் ஆக்கியது. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம். -
புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸுக்கு அழைப்பு
nedukkalapoovan replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
சம்பந்தன் ரகசியமாகச் செய்து வந்த ஹிந்திய - சிங்கள விசுவாசத்தொழிலை இவரிடம் இன்னும் விரிவாகக் கையளிக்க கூப்பிட்டிருப்பினம். அதில் இவருக்கு மிக அனுபவம் உண்டல்லவா. -
பிரான்ஸ் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்.. அதிபர் மக்ரோனின் கட்சி மரண அடி வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியுள்ளன. அதேவேளை பிரான்ஸ் தேசியவாத வலது சாரிகள் அமோக வெற்றிகளை பெற்று வருகின்றனர். ஏலவே அமெரிக்காவில் பைடனின் உளறல் தேர்தல் பேச்சு அவரின் வெற்றியை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ள நிலையில்.. மேற்குலக புட்டின் எதிர்பாளர்கள் நடப்பு தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுவதோடு.. தேசியவாதம் எழுச்சி பெற்று வருகிறது. https://www.bbc.co.uk/news/live/cn087x77g1dt
-
சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த போராளிகளையும் அந்தப் போராட்டத்தின் விளைவாக உயிர் தந்த மக்களையும்.. இனப்படுகொலையாளர்களை மறந்து.. மன்னித்து.. ஒரே நொடியில் பயங்கரவாதமாக்கிய சம்பந்தன் கும்பல் இரங்கலுக்குரிய கும்பலே அல்ல. இதுதான் எங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு.
-
முள்ளிவாய்க்காலில் இறந்த தன் சொந்த மக்களின் துயரைக் கூட உள்வாங்க வக்கில்லாமல் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு இனக்கொலைஞன் சரத் பொன்சேக்காவுக்கு வாக்குக்கேட்டது முதல் சம்பந்தனை சராசரி மனிதனாகக் கூட காண முடியவில்லை. இன்று வரை ஒரு தடவை தானும்.. இந்த ஆள்.. முள்ளிவாய்க்காலுக்கு சென்றதும் இல்லை.. இறந்த சொந்தங்களுக்கு துக்கம் அனுஷ்டித்ததும் இல்லை. எம் மக்களின் துயருக்கு எதுவுமே இல்லை என்றாக்கிய மிக முட்டாள் அரசியல்வாதியும் சுயநலவாதியுமான சம்பந்தனின் மறைவு.. இரங்கலுக்கு அப்பாற்பட்ட உணர்வே எழுகிறது. அப்படியப்பட்ட ஆளுக்கு அழவோ.. இரங்கவோ முடியவில்லை. இயற்கை காலம் கடந்து தீர்ப்பை எழுதி இருக்கிறது. அவ்வளவும் தான்.
-
Former TNA Leader R. Sampanthan no more Colombo, June 30 (Daily Mirror) - Veteran Tamil politician and parliamentarian R. Sampanthan passed away at a private hospital in Colombo today evening, aged 91. Sampanthan was one of the longest serving MPs with decades of experience and served as the Leader of the Tamil National Alliance for several years. https://www.dailymirror.lk/breaking-news/Former-TNA-Leader-R-Sampanthan-no-more/108-286102