Everything posted by nunavilan
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
மீட்பு பணி தொடருகிறது
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
மாவைசேனாதிராஜாவின் வீட்டிற்கு பிரபல அரசியல்வாதிகள் வருகை
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: பாடாத பாட்டெல்லாம் பாடியவர்கள்: சத்தியபிரகாஸ், நித்தியசிறி வெங்கடரமணன், Emcee D மீளிசை: தரன் குமார் மைமா கேரா ஆக்கிட்டா டோட்டலி மாத்திட்டு தூக்கிட்டு போறாளே இவ இவதானே என்னோட மைனா காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா ஆண் : ஊருக்குள்ள மாமா மவுச பாரு தாருமாறு இனி வேற யாரு கருப்பு ல நா நெருப்பா இருப்பேன் என் கதையில ஒழுங்கா நடப்பேன் ஆண் : உந்தன் அழகை கண்டிட ஹேய்! ஆயிரம் கண்களும் போதாது ஹா ஹா பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு கண்டதும் காதலும் வந்தது உன்னிடம் ஆண் : பாடாத பாடாத பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் பெண் : ஹ்ம் பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் காணாத கண்களை காண வந்தேன் பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் ஆண் : அதிசயம் என்னில் நிகழந்தது அவசியம் உந்தன் வருகை தந்தது அவசியம் உனது வருகை இருதய கதவுகளும் ஏங்குது ஆண் : ஆயிரத்தில் ஒருவனாக்கினாய் ஆதி முதல் அந்தமும் மாற்றினாய் கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய் கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய் ஆண் : மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம் பெண் : மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஆண் : கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல் கண்ணோடு பேசவா சொல் சொல் சொல் பெண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன் காணாத கண்களை காண வந்தேன் பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் ஆண் : பாடாத பாடாத பெண் : ஆஆ.. ஆஆ… அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா பெண் : மிச்சமா மீதமா இந்த நாடகம் ஆண் : மென்மையே பெண்மையே வா வா வா ஆண் : ……………… பெண் : …………….. நிலவிலே நிலவிலே சேதி வந்ததா உறவிலே உறவிலே ஆசை வந்ததா ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா உறவிலே உறவிலே ஆசை வந்ததா பெண் : மறைவிலே மறைவிலே ஆடலாகுமா இருவர் : அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய் பெண் : காணாத கண்களை காண வந்தேன் ஆண் : பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய் பெண் : உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன் உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
-
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம்
அமெரிக்க வரி: கனடாவின் அதிர்ஷ்டம் சிவதாசன் அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் நேற்று இரவு (பெப். 01) விடுத்த அதிரடி வரித்திணிப்பு அறிவித்தலின்படி தனது அயல் நாடுகளான கனடா மற்றும் மெக்சிக்கோவிற்கு 25%; சீனாவுக்கு 10% என்ற வகையில் இறக்குமதித் தீர்வைகளை அறிவித்திருக்கிறார். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே பல்வேறு வாண வேடிக்கைகளை நிகழ்த்தியவர் ட்றம்ப். ‘இவர் சும்மா வெருட்டுகிறார், பொறுத்திருந்து பார்ப்போம்’ எனப் பல பண்டிதர்கள் அப்போது கூறினார்கள். இப்போது அது நிஜமாகியிருக்கிறது. இந்த இறக்குமதித் தீர்வையால் அமெரிக்க, கனடிய, மெக்சிக்க, சீன மக்களுக்கு எவ்வித இலாப நட்டங்கள் ஏற்படலாம் என்பதுகூட ‘பொறுத்திருந்து பார்க்கவேண்டிய’ ஒரு விடயம் தான். இத்தீர்வையால் ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் பல இலட்சம் பேருக்கு வேலை இலாமல் போகலாம் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கடந்த சில வாரங்களாக வெருட்டி வந்தார். ட்றம்பைப் போலவே ‘ Onrtario is Not For Sale’ எனத் தொப்பியையும் அணிந்துகொண்டு அவர் ட்றம்ப் பாணியில் பவனி வரும்போது இவரும் ஏதோ திட்டமிடுகிறார் எனப்பட்டது. இத் தொப்பி மூலம் திடீரென அவருக்கு ஏறிய மவுசைப் பயன்படுத்தி தனது ஆட்சியை நீடிக்கும் கனவோடு அவரும் அதிரடித் தேர்தல் ஒன்றை அறிவித்திருக்கிறார். இப்படியான அதிரடிகள் அரசியல்வாதிகளால் தற்காலிக வெற்றிகளுக்காகப் பாவிக்கப்படும் சுய இன்ப முயற்சிகள். பெரும்பாலான தருணங்களில் இவை எதிரான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன. ட்றம்பரைப் போலவே 1930 களில் ஹேர்பேர்ட் ஹூவர் என்னும் அமெரிக்க ஜனாதிபதி 20% இறக்குமதித் தீர்வையை அறிவித்து அமெரிக்க விவசாயிகளைக் காப்பாற்றப் போகிறேன் எனச் சூளுரைத்தார். ஆனால் The Great Depression என்ற பெயரில் அது அமெரிக்க பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டதுமல்லாது அவரையும் பதவியிலிருந்து தூக்கியெறிந்தது. ட்றம்பர் ஜனாதிபதியாக வருவதை வரவேற்று இதற்கு முன் நான் எழுதியிருந்தேன். அதற்குப் பல முணு முணுப்புகள் கிடைத்தன. அவரின் வருகையால் அமெரிக்க ஏகாதிபத்தியம் அடிவாங்கும் அதனால் உலகம் கொஞ்சம் சுவாசிக்க இடைவேளை கிடைக்கும் என்பதுவே எனது வரவேற்புக்குக் காரணம். ஆனால் இந்த இறக்குமதித் தீர்வை விவகாரம் நான் எதிர்பார்த்ததை விட மேலும் அதிகமான நன்மைகளைத் தரப்போவதாக இப்போது நான் கருதுகிறேன். அமெரிக்கா உருவாகிய காலத்திலிருந்து கனடாவை அது தனது சின்னத் தம்பியாகவே கருதி வந்தது. கனடாவின் இயற்கை வளங்களை வேறெவரும் அனுபவிக்காதவாறு ‘தலையைத் தடவித்’ தன்னிடமே பாதுகாப்பாக வைத்திருந்தது. கனடிய வரியிறுப்பாளர்களின் தலைகளில் மிளகாயை அரைத்து அது தனது சுயநலத்திற்காக கனடாவைச் சுரண்டிக்கொண்டு வந்தது. அமெரிக்க – கனடிய – மெக்சிக்கோ சுதந்திர வலய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்நாடுகளிடையே பண்டப் பரிவர்த்தனை பரஸ்பர பலன்களுடன் சுமுகமாக நடைபெற்று வந்தமையால் எவரும் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. இதன் பலனாக உறவு அமைதியாகவும் பலமாகவும் இருந்தாலும் அமெரிக்கப் பெரியண்ணரே கூடிய அனுகூலங்களைப் பெற்றுவந்தார். முக்கியமான விவகாரங்களில் அவரே முடிவு எடுப்பவராகவும் சின்னத் தம்பிமார் சொல்வதைக் கேட்கும் கிளிப்பிள்ளைகளாகவும் இருந்து வந்தனர். வெளியார் அச்சுறுத்தல் எதுவும் இல்லாத நிலையிலும் தமது பாதுகாப்பை பெரியண்ணர் பார்த்துக்கொள்வார் என்ற நிலையில் அவரது சலசலப்புக்களைப் பொருட்படுத்தாது இனிதே வாழ்ந்து வந்தனர். இதனால் தமது சுய தேவைகளைக் கவனிக்காது அசமந்தமாக இருந்து வந்தனர். ட்றம்பரின் வருகையால் அவர்கள் இப்போ விழித்துக்கொண்டு விட்டனர். இனிமேல் கனடாவும் மெக்சிக்கோவும் தமது சுய அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. சிறிது காலம் சிரமப்பட்டாலும் எதிர்காலச் சந்ததிகளுக்கு அது அவசியமானது என்ற நினைப்பு இவ்விரு நாடுகளுக்கும் ஏற்பட்டதற்கு ட்றம்பருக்கே நன்றி சொல்ல வேண்டும். ட்றம்பரின் அறிபிப்பிற்கு எதிர்வினையா நேற்றிரவு கனடிய பிரதமர் ட்றூடோ பதிலடி அறிவிப்பைக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவிலிருந்து கனடா இறக்குமதி செய்யும் சுமார் $155 பில்லியன் டாலர் பெறுமதியான இறக்குமதிகளுக்கு 25% தீர்வை வசூலிக்கப்படும் என ட்றூடோ அறிவித்திருக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் $30 பில்லியன் பெறுமதியான இறக்குமதிப் பண்டங்களுக்கு இத்தீர்வை அமுலாக்கப்படும். மேலும் மூன்று வாரங்களின் பின் மீதமான பண்டங்கள் தீர்வைக்குள்ளாக்கப்படும். இத்தீர்வைக்குள்ளாகும் பண்டங்களில் சில: அமெரிக்க பியர், வைன், சில வகை விஸ்கி, பழங்கள், பழரசங்கள், மரக்கறி வகைகள், வாசனைத் தைலங்கள், ஆடைகள், சப்பாத்துகள், வீட்டுப் பாவனை உபகரணங்கள் (appliances), தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள், மரம் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புகள் உட்பட மேலும் பல பொருட்கள் அடங்கும். “ட்றம்ப் கூறுவதைப் போல் அமெரிக்கா ‘பொற்காலத்தில்’ நுழைய வேண்டுமாகில் கனடாவுடன் பங்காளியாகப் போகவேண்டுமே தவிர அதைத் தண்டிக்கக் கூடாது. ட்றம்பின் இந்நடவடிக்கை உங்களுக்குப் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என பிரதமர் ட்றூடோ அமெரிக்க மக்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாது “கனடியரும் தம் பங்கினைச் சரியாகச் செய்யவேண்டும்; அமெரிக்கத் தயாரிப்புகளுக்குப் பதிலாக நீங்கள் கனடியத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என கனடியருக்கும் அவர் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். இரண்டாம் உலக யுத்ததிற்குப் பிறகு இப்போதுதான் கனடியத் தேசியம் விழித்துக்கொண்டிருக்கிறது. அல்பேர்ட்டா முதல்வரைத் தவிர ஏனைய மாகாண முதல்வர்களும், நாட்டு மக்களும் பிரதமர் பின் அணி திரள்கிறார்கள். சரிந்துபோயிருந்த அவரது செல்வாக்கு திடீரென்று உச்சம் பெறுவதுடன் அவரது கட்சிக்கான ஆதரவையும் அது மேலெழச் செய்திருக்கிறது. ட்றம்பின் அலை சிலவேளைகளில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சமீபத்திய அலையையே அடித்து சென்றுவிடக்கூடிய ஆபத்தை ஏற்படுத்திருக்கிறது என்கிறார்கள். பொதுமக்கள் பலர் அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் இயக்கங்களை ஆரம்பித்திருக்கிறார்கள். அல்பேர்ட்டாவின் மசகு எண்ணை இதுவரை குழாய்கள் மூலம் அமெரிக்காவிற்கே ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேற்குப் பக்கமாக வான்கூவர் மூலம் ஆசிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய, மானில அரசாங்கங்கள் எடுத்த முயற்சியை சுதேசிகள் நிறுத்தி வைத்திருந்தார்கள். இதனால் கனடாவின் எண்ணை வருமானம் தனியே அமெரிக்காவின் தயவிலேயே இதுவரை இருந்து வருகிறது. ட்றம்பரின் அதிரடி அறிவிப்பிற்குப் பின் சுதேசிகளின் தலைவர்கள் தாமாகவே முன்வந்து மேற்கு இணைப்புக்குழாய் திட்டத்தைத் தொடரும்படி கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதுவரை கனடிய மசகு எண்ணையைச் (crude oil) சுத்திகரிக்கும் நிலையங்கள் எதையும் கனடா தனது மண்ணில் நிர்மாணிக்கவில்லை. அதனால் மசகு எண்ணையை அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கு சுத்திகரிக்கப்பட்டபின் பெற்றோலாக நாம் வாங்கவேண்டியிருந்தது. ட்றம்பரின் அறிவிப்பின் பின் கனடா இனிமேல் தனது சொந்த சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்துக்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. மொத்தத்தில் ‘வாயும் வயிறும் வேறு’ என்று கனடியர்கள் உணரும் நிலைக்கு ட்றம்பர் தள்ளிவிட்டிருக்கிறார். இதுவரை அமெரிக்காவின் பணிப்பின் பேரில் சில சீன இறக்குமதிகளுக்கு, குறிப்பாக மின் வாகனங்களுக்கு அதிக தீர்வையை வசூலிக்கப் போவதாக கனடா அறிவித்திருந்தது. இதனால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின்வாகங்கள் ரெஸ்லா போன்ற அமெரிக்க இறக்குமதிகளூடன் போட்டி போட முடியாத நிலை இருந்தது. இனிமேல் அமெரிக்க ரெஸ்லா வாகனங்களுக்கு கனடாவில் வழங்கப்படும் ஊக்கப்பணம் நிறுத்தப்படக்கூடும் எனக் கூறப்படுகிறது. ட்றம்பரின் இவ்வெருட்டுக்கள் எல்லாம் உண்மையில் இறக்குமதி சம்பந்தப்பட்டதல்ல, அவை வேறு விடயங்களில் கனடா, மெக்சிக்கோ போன்ற நாடுகளை இணங்க வைக்க ட்றம்பர் பாவிக்கும் ஒரு ஏமாற்று வித்தை எனச் சிலர் கூறுகிறார்கள். கொலம்பியாவில் இந்ந்டைமுறையைப் பாவித்து அவர் வெற்றிகண்டுவிட்டார் எனவும் இதன் மூலம் அமெரிக்க எல்லைகளைப் பாதுகாக்க அவர் எடுக்கும் முயற்சிகளே இவை எனவும் சிலர் நம்புகிறார்கள். கனடாவிலிருந்து ஃபென்ரனில் எனப்படும் போதை மருந்து அமெரிக்காவுக்குள் வருகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. அமெரிக்காவிற்குள் கொண்டுவரப்படும் ஃபென்ரனில் போதை மருந்தின் அளவு 0.2% மட்டுமே. அடுத்த சில மாதங்கள் கனடிய மக்களுக்குச் சிரமமான ஒன்றாக இருக்கலாம். வேலை வாய்ப்புகள் இழக்கப்படலாம். கனடிய டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் வெளிநாட்டுப் பயணங்கள் அதிக செலவீனத்தை ஏற்படுத்தலாம். வீட்டு விலைகள் மேலும் வீழ்ச்சி காணலாம். வாழ்க்கைப் பயணம் கொஞ்சம் கரடு முரடாக இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமெனவே பட்சி சொல்கிறது. பார்ப்போம். https://veedu.com/அமெரிக்க-வரி-கனடாவின்-அத/?fbclid=IwY2xjawIMamhleHRuA2FlbQIxMQABHQJ_b9AA4eTrx0CVohnSiUPhQaHDzOVLFWHxmOEEntyOeY6VlWt3yeK0bw_aem_5s4krdp_DP8GXYgD88VeEw#google_vignette
-
டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
நீங்கள் வெறும் அப்பாவியாக இருக்கிறீர்கள்.🙂
-
மாவையின் மரணவீட்டுக்கு வரமாட்டேன்! - சாணக்கியன்
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் அமரர் மாவை சேனாதிராஜா அவர்களுடைய பூதவுடலுக்கு அவரது மாவிட்டபுர இல்லத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி M. A. சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார். M. A. Sumanthiran
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேலும் மூன்று பணய கைதிகள் இன்று கமாசால் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பலஸ்தீனிய கைதிகளில் சிலர் இஸ்ரேலால் மீண்டும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
-
ஆட்சியாளர்களின் நண்பர்களும் விரோதிகளும்
ஆட்சியாளர்களின் நண்பர்களும் விரோதிகளும் -நஜீப் பின் கபூர்- ஆட்சியாளர்களின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் மற்றும் இன்னும் இரு வாரங்களில் உள்ளூராட்சித் தேர்தல்கள் அறிவிப்பு என்பன வெகுவிரைவில் வர இருப்பதால் அவைபற்றி பேச இருக்கின்றன. அதற்கு முன்னர் அனுர அரசின் நண்பர்கள், விரோதிகள் என்ற தலைப்பில் சில விடயங்களை பேச எதிர்பார்க்கின்றோம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை என்பது நமக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ஒரு கதைதான். எனவே அதற்கு நாம் மேலும் விளக்கம் கொடுக்க தேவையில்லை. அதனால் இன்றைய நண்பர்கள் நாளை விரோதிகளாகலாம். இன்றைய விரோதிகள் நாளை நண்பர்களாகலாம். அதனால் எதிரிகள்- நண்பர்கள் என்பன காலத்தால்-சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். எனவே அரசியலில் நண்பர்கள் – விரோதிகள் ஒரு இசுவே கிடையாது. இதனை மக்கள் கண்டு கொள்ளத்தேவை இல்லை. ஆனால் புரிந்து கொள்ள வேண்டும். என்றாலும் நமது அரசியல் வரலாற்றில் இந்த தடப் பிரள்வுகள் சிலவற்றை மட்டும் இங்கு தொட்டுக் காட்டலாம் என்று தோன்றுகின்றது. அவற்றில் தனிப்பட்ட ரீதியில் அரசியல்வாதிகளின் பல்டிகள் ஒருபுறம் இருக்க, கட்சி ரீதியில் ஒட்டுமொத்தமாக நடந்த நண்பர்கள் – பகைவர்களான கதையும் பகைவர்கள் நண்பர்களாக மாறிய நிகழ்வுகள் என்று பார்க்கும் போது எஸ்.டப்ள்யூ .ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சுதந்திரக் கட்சியை அமைத்தபோது இலங்கை அரசியலில் ஐ.தே.க.வும் சுதந்திரக் கட்சியும் எதிரிகளானார்கள். இது இந்த எதிரும் புதிருமான பகைமை அறை நூற்றாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. அடுத்து, 1970ல் நடந்த பொதுத் தேர்தலின் போது விஜேவீர அணியினர் ஸ்ரீமா அம்மையாரை ஆதரித்தனர். இவர்கள் யாரை தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச் செய்தார்களோ, அவர்களுடன் 1971ல் ஆயுதங்களுடன் மோதினார்கள். அப்போது ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாயின. தனது கணவன் விஜே குமாரணதுங்க ஜே.வி.பி. சுட்டுக் கொன்றாலும் அவர்களுடனே கூட்டணி போட்டு தேர்தலில் நின்று அரசு கூட அமைத்தார். நாம் முன்பு சொன்ன ஸ்ரீமா காலத்து ஆயுதப் போராட்டம் மற்றும் சந்திரிகா கணவன் விஜேகுமார படுகொலை தொடர்பாக ஜே.வி.பி. வேறு கதைகளைச் சொல்லி வருகின்றது. இதற்குப் பின்னர் சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரி தனது பரம அரசியல் எதிரியான ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஜனாதிபதி தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். இதனால் புதிய நண்பர்களும் பகைவர்களும் அரசியல் அரங்கில் தோன்றினார்கள். தேர்தலில் தான் தோற்றுப் போய் இருந்தால் ராஜபக்ஸக்கள் தன்னை ஆறு அடி ஆழத்தில் குழி தோண்டிப் புதைத்திருப்பார்கள் என்று மைத்திரி பகிரங்கமாகவே கூறி இருந்தார். அப்படிச் சொன்ன அதே மைத்திரி, அடுத்த தேர்தலில் ராஜபக்ஸக்களுடன் கூட்டணி போட்டது எவ்வளவு பெரும் முரண்பாடு. இதேபோன்று ராஜபக்ஸக்கள் அதிகாரத்துக்கு வருவதற்கும் மைத்திரி ஜனாதிபதியாவதற்கும் ஜே.வி.பி. ஆதரவு வழங்கிய சந்தர்ப்பங்கள் நமது அரசியலில் இருக்கின்றன. எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது அரசியல் என்பதும் பச்சோந்தியின் நிலையில்தான் இருந்து வருகின்றது. இன்று சமகால அரசியல் களத்தில் ஆளும் அனுர தரப்பின் நண்பர்கள்-பகைவர்கள் தொடர்பாகப் பேசுவதுதான் இந்தக் கட்டுரையின் கருப்பொருளாக நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதனை இங்கு சுட்டடிக்காட்ட விரும்புகின்றோம். முதலில் அனுர தரப்பு நண்பர்களாக எவரெல்லாம் இருந்தார்கள் – இருக்கின்றார்கள் என்று பார்த்தால் ஜனாதிபதித் தேர்தலானாலும் சரி பொதுத் தேர்தல் ஆனாலும் சரி ஜே.வி.பி-என்.பி.பி எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் குடிமக்களின் ஆதரவை நம்பித்தான் தேர்தலில் நின்றார்கள். அதேநேரம் சமூக ஊடகங்கள் அவர்களுக்கு முடியுமான மட்டும் ஆதரவை வழங்கி மக்கள் மனங்களில் தங்களின் மீட்பாளர்கள் இவர்கள்தான் என்று சொல்லி வந்தன. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருக்கின்ற இலங்கையர்கள் அனைவரும் போல இந்தத் தேர்தலில் அனுர தரப்பினருக்கு முழு ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தனர். சில தனியார் தொலைக்காட்சிகளும் ஊடகங்களும் அனுர வெற்றி வாய்ப்புக்கான கதவைத் திறந்து கொடுத்துக் கொண்டிருந்தன. பொதுமக்களின் கணிசமான ஒரு தொகையினர் சுயேட்சையாக அனுர தரப்புக்கு ஆதரவாக தங்களால் முடிந்த ஒத்தாசைகளை வழங்கி வந்தனர். அதே அனுர மற்றும் அவர் தரப்பினர் மிகச் சிறப்பாக மக்களை விளிப்படைய செய்து கொண்டிருந்தனர். இதுவரை நம்மை ஆட்சி செய்த தலைவர்கள் – அரசாங்கங்கள் – குடிமக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர். இதற்குப் பின்னரும் இதே நிலைமை தொடர்ந்தால் தங்களது சந்ததியினர் – குழந்தைகளின் எதிர்காலம் சூனியமாகி விடும் என்று மக்களை எச்சரிக்கை செய்து வந்தனர். நாட்டில் வாழ்கின்ற அனைத்து சிறுபான்மை சமூகங்களும் தங்களது எதிர்காலம் அனுர தரப்பினர் வெற்றியில்தான் தங்கி இருக்கின்றது என்று நம்பினார்கள். மொத்த குடிமக்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இலக்கை கடக்கும் அளவுக்கு அனுர தரப்புக்கு ஒரு தேர்தல் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்கள். இதனை அவர்கள் தங்களது சொந்த வெற்றியாகவும் பார்த்தனர். அதற்காக உழைத்தும் வந்தார்கள். உள்நாட்டைப் பொறுத்து அனுர தரப்பு வெற்றிக்கு இவை காரணங்களாக அமைந்திருந்தன. அந்த வகையில் மேற்சொன்னவர்கள் அல்லது சொன்னவை அனுர அரசின் நண்பர்கள் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியும். இப்போது அனுர அரசின் விரோதிகள் அல்லது எதிரிகள் பற்றிப் பார்த்தால் அல்லது அவர்களது அரசியல் எதிரிகள் என்று எடுத்துக் கொண்டால், அரச விரோத ஊடகங்கள், புதிய அரசால் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள், படைத்தரப்பினர், வியாபாரிகள், போதைவஸ்து வியாபாரிகள், குற்றவாளிகள் என்று நீண்டதோர் பட்டியல் இருக்கின்றது. இதில் அரசியல் விரோதிகள் என்று பார்த்தால் மஹிந்த மற்றும் அவர் தரப்பு மொட்டுக் கட்சியினர். மற்றும் ரணில் தரப்பு ஐக்கிய தேசிய கட்சியினர், பிரதான எதிர்க்கட்சியினர் என்று இன்னும் பல அரசியல் கட்சிகளை எடுத்துக் கொள்ள முடியும். இது ஜனநாயகத்தில் நடக்கின்ற வழக்கமான ஒரு ஒழுங்குதான். அதனால் அதனை நாம் ஒரு குற்ற உணர்வுடன் விமர்சிக்க முடியாது. எந்த நாட்டிலும் நிலை இதுதான். அதேநேரம் இன்று நாட்டில் இருக்கின்ற சில தனியார் தொலைக்காட்சிகள் – பத்திரிகைகள் என்பன அரச விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனை தற்போது அதிகாரத்தில் இருக்கின்ற சில அரசியல்வாதிகள் அவ்வாறான ஊடகங்களின் பெயர் குறித்துக் குற்றம் சாட்டி வருகின்றனர். புதிய அரசு பதவிக்கு வந்திருப்பதால் அதில் பல அரசியல்வாதிகள் பாதிப்புக்கு இலக்காகி இருக்கின்றனர். அதில் தாம் அதிகாரத்துக்கு வந்தால் ராஜபக்ஸக்கள் மற்றும் அவர்கள் காலத்தில் இருந்த அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மேற்கொண்ட சட்டவிரோத செயல்பாடுகள், கொள்ளைகள் தொடர்பாக ஆளும் தரப்பு சட்ட நடவடிக்கைகளில் இன்று இறங்கி இருப்பதால் அவர்கள் தாம் பாதிக்கப்படலாம் என்பதால் இன்று ஆட்சியாளர்களுடன் முரண்பாட்டில் -கோபத்தில் இருக்கின்றார்கள். அச்சத்தில் இருக்கின்றார்கள். அதேபோன்று நல்லாட்சி காலத்தில் நடந்த மத்திய வங்கிக் கொள்ளை, அதற்கு நியாயம் சொல்லியவர்கள் என்று பலரும் அரசின் எதிரிகளாக இருக்கின்றார்கள். அதேபோன்று கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த பல மோசடிகளுக்கு ஆதரவாக செயலாற்றிய அதிகாரிகள் இன்று பதவியில் இருக்கின்ற அரசாங்கத்துடன் நல்லெண்ணத்தில் இல்லை. அத்துடன் அரசியல்வாதிகளுடன் இணைந்து இவர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதால் அப்படியான அதிகாரிகள் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்ததால் தமது தனிப்பட்ட வருமானத்துக்குக் கூட ஆப்பாகிவிட்டது என்று கருதுகின்றனர். அவர்களும் இன்று அரச எதிர் மனநிலையில் இருக்கின்றார்கள். படைத்தரப்பினர் மத்தியிலும் இப்படியான ஒரு குழு இருக்கின்றது. அவர்களும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டதால் விசாரணைகள், சட்ட நடவடிக்கைகள் என்று வந்தால் தமக்கு ஆபத்து என்று கருதுவதால் அவர்கள் கூட இந்த அரசின் எதிரிகள் என்ற நிலையில்தான் இருக்கின்றார்கள். அதேபோன்று, அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகளுடன் இணைந்து வியாபாரத்தில் பங்குகளை பெற்று வந்த ஒரு வர்த்தக கோஷ்டியும் இந்த அரசு பதவிக்கு வந்ததால் பாதிப்புக்கு இலக்காகி இருக்கின்றது. உதாரணமாக சீனி கொள்ளை மற்றும் சமயல் எண்ணெய் வியாபாரம், மருந்து வியாபாரம் – கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டவர்கள். குறிப்பாக இதில் கோட்டா காலத்தில் நடந்த இந்த வியாபாரத்தை உதாரணமாகக் கொள்ள முடியும். அதில் வியாபாரிகள் கொள்ளை இலாபம் பெற்றதுடன், ஜனாதிபதி கோட்டா தேர்தல் செலவுகள் போன்றவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கிய வியாபாரிகள் சகாக்களும் இதில் இருக்கின்றனர். அவர்களும் இந்த அரசை ஜீரணித்துக் கொள்ள தயாராக இல்லை. இன்று நமது நாட்டில் போதைவஸ்து வியாபாரிகளின் பின்னணியில் அரசியல்வாதிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இதில் பங்கு இருப்பது மிகவும் தெளிவு. அந்த இரு தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய படைத்தரப்பினர் குறிப்பாக பொலிஸார் என்று பலர் இதில் பங்காளிகளாக இருக்கின்றார்கள். போதை வியாபாரிகளிடம் மாதாந்தம் சம்பளம் வாங்குபவர்களும் இந்த அரசு பதவிக்கு வந்தது தமக்கு பெரும் பாதிப்பு என்று கருதுகின்றார்கள். எனவே அவர்களும் இந்த அரசு பதவிக்கு வந்ததால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பாக இருக்கின்றார்கள். எனவே இவர்களும் இந்த ஆட்சியாளர்களுக்கு எதிரானவர்கள் என்றுதான் பார்க்க வேண்டும். ஏற்கெனவே குற்றவாளிகளாக தண்டனை பெற்று வருகின்ற பலருக்கு சிறைச்சாலைகளில் சலுகைகள் வழங்கப்படுவதால் இதுவரை அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்தவர்கள். தற்போது இந்த அரசு இவர்கள் விடயத்தில் கடுமையாக இருப்பதால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறைச்சாலை அதிகாரிகளும் அதனால் தமக்குக் கிடைத்த வருமானம் தற்போது இல்லாமல் போனதால் இந்த ஆட்சியாளர்களினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். எனவே இவர்களும் இந்த அரசின் எதிரிகளாகத்தான் இருக்கின்றார்கள். இப்படி மேல் மட்டம் முதல் உள்ளூராட்சி சபைகள் போன்ற கீழ்மட்டம் வரை ஊழல் மோசடிக்குப் பழகிப்போன ஊழியர்கள் இன்று பல்வேறு இடங்களில் இருக்கின்றார்கள். இந்த அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதால் அவர்கள் கூட இந்த அரசால் பாதிக்கப்பட்ட தரப்பாகத்தான் இருப்பார்கள் – இருக்கின்றார்கள். எனவே இவர்களையும் இந்த அரசுக்கு எதிரான தரப்பினராகத்தான் நாம் பார்க்க வேண்டும். இப்படி இவர்கள் அரசுக்கு எதிராக பலமாக இருப்பதால் அனுர தரப்பினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அல்லது மேடைகளில் சொன்ன பதவிக்கு வந்ததும் அடுத்த நாள் செய்வதாகச் சொன்ன மாற்றங்களை இன்றுவரை அவர்களினால் முன்னெடுக்க முடியாத ஒரு நிலை காணப்படுகின்றது. எனவே அனுர அரசின் எதிரிகள் இன்னும் பலமாக இருப்பதைத்தான் இந்த தாமதங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. https://thinakkural.lk/article/314918
-
அரசியல் தீர்வு கிடப்பில் ஏன்?
அரசியல் தீர்வு கிடப்பில் ஏன்? நடராஜ ஜனகன் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி மலர்ந்து நூறு நாட்கள் கடந்துள்ள நிலையில், கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் முன்னெடுப்புகளே அதிகம் மேன்நிலை பெற்று வருகிறது. இலங்கையின் ஆட்சி அமைப்பின் 77 வருட கால வரலாற்றைப் பார்க்கின்ற போது தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாததன் காரணமாகவே அனைத்து பிரச்சினைகளும் தோற்றம் பெறத் தொடங்கின. இவை இறுதியில் 30 வருட கால யுத்தம் என்ற நிலைவரை சென்றிருந்தது. இதன் காரணமாகவே ஊழல் மோசடி, கறுப்பு பண வெளியேற்றம், அந்நிய தலையீடுகள் என அனைத்தும் இடம்பெறத் தொடங்கின. தற்போதைய ஆட்சியாளர் பெரிய அளவில் சாதிக்கப் போகின்றார்கள் என்பதன் காரணமாகவே வடக்கு, கிழக்கில் அவர்களை தமிழ் மக்கள் ஆதரிக்கும் நிலை தோற்றம் பெற்றிருந்தது. ஆனால் புதிய ஆட்சியாளர்களும் நாட்டின் பிரச்சனைகள் தோற்றம் பெற மூல காரணியாக இருக்கும் தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வை கிடப்பில் போட்டுவிட்டு ஏனைய விடயங்களில் தமது கவனத்தைக் குவித்து வருகின்றனர். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க மாகாண சபைகளுக்கான பொலீஸ், காணி அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களை வழங்க தயாரென கூறியிருந்ததுடன், பொலீஸ் அதிகாரம் தொடர்பில் பாராளுமன்ற அனுமதியுடன் விடயங்கள் முன்னெடுக்கப்படும் என அறிவித்திருந்தார். அடுத்த பிரதான வேட்பாளரான சஜித் பிரேமதாசா தான் பதவிக்கு வந்தால் பொலீஸ், காணி அதிகாரங்களை வழங்குவேன் என கூறியிருந்தார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரா திசாநாயக்க பெரிய அளவில் வாக்குறுதியை வழங்காமல் மாகாண சபைகள் தொடர்ந்து இயங்குவதில் தனக்கு பிரச்சினை இல்லை என்றதுடன், புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கான தீர்வு எட்டப்படும் என தெரிவித்திருந்தார். என்ன விதமான தீர்வு என்பது தொடர்பில் அவர் எதனையும் குறிப்பிடவில்லை. இலங்கையின் தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பான தீர்வு முயற்சிகளை பொறுத்தவரையில் முதலாளித்துவ அரசியல் தளங்களில் அதிக நெகிழ்வுகள் தீர்வுக்கான ஆயத்த நிலைமைகள் காணப்படுகின்ற அதேவேளை, சோசலிச தளங்களில் தமிழ் மக்களுக்கான பொருளாதார விடையங்கள் தொடர்பான விடயங்களில் காட்டப்படும் அக்கறை அரசியல் தீர்வு தொடர்பில் ஒருவித தயக்கம் – மௌன போக்கே காணப்படுகின்றது. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 58 வது கூட்டத்தொடர் ஆரம்பமாகப் போகின்றது. மேற்படி கூட்டத் தொடரில் இலங்கையில் நடைபெற்ற போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியினர் மிகவும் இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. மேலும் தொடர்ந்தும் பயங்கரவாத தடை சட்டத்தின் பிரயோகம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் போக்கு அரசாங்கத்திடம் இல்லை என்ற நிலை உறுதி பெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவு திட்டம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களின் வறுமை நிலையை போக்க அரசாங்கம் என்ன செய்துள்ளது என்பதை வரவு – செலவுத் திட்டத்தில் பார்க்க முடியும். தேங்காய் விலை 250 ரூபாய் என்று நிலைக்கு சென்றுள்ளது. அரிசி தட்டுப்பாடு தொடர்கின்றது. வாழ்க்கைச் செலவு சுமை தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. வறுமை நிலையில் வாழும் 60 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வியல் மிகவும் துன்பம் நிறைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே புதிய ஆட்சியாளர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் படிப்படியாக தேய்ந்து வரும் நிலையை காணக்கூடியதாக இருக்கின்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் அரசாங்கம் சரிவை சந்தித்து வருகின்றது. அண்மைக்காலத்தில் இருந்து வந்த ஆட்சியாளர்களோடு ஒப்பிடுகையில் தற்போதைய ஆட்சியாளரின் ஒடுக்குமுறை செயற்பாடுகள் அதிக ஒடுக்குமுறை கொண்ட ஆட்சியாக காணப்படுகிறது என அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நெல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நெல்லுக்கான நியாயமான உத்தரவாத விலையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே அறுவடை செய்து வைத்திருக்கும் நெல்லை அரசாங்கத்தின் உத்தரவாத விலை வெளிவராததால் தனிப்பட்ட வியாபாரிகளின் ஈவு இரக்கமற்ற விலை கோரிக்கைக்கு இரையாகும் நிலையில் காணப்படுகின்றனர். தொடரும் இயற்கை அனர்த்தத்தால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்லை தண்ணீருக்கு இரையாக்கும் நிலையில் விவசாயிகள் காணப்படுகின்றனர். தமிழர் தேசத்தை பொறுத்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மீது குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து அவரை சென்னைக்குச் செல்ல விடாது தடுக்க முற்பட்டமையும் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தலையிட்டால் அவர் பயணத்தை தொடரும் நிலை ஏற்பட்டதை பாராளுமன்ற விவாதத்தின் போது பார்க்கக்கூடியதாக இருந்தது. பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்ட நிலைமை தொடர்பில் தனக்கான நீதியை வழங்குமாறு ஸ்ரீதரன் வேண்டி நிற்கின்றார். ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்த நிலை என்றால் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்ன என்பது அச்சம் நிறைந்ததாக காணப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனுக்கு ஏற்பட்ட இந்த நிலை கட்சியின் உட்பூசல் காரணமாக ஏற்பட்டிருக்கின்றது என்ற கதைகளும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றது. எனவே தமிழரசு கட்சி மிகவும் சிக்கலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது என்பதே உண்மை நிலையாகும். தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க நாட்டின் பொருளாதார விடயங்கள் தொடர்பில் போகும் இடமெல்லாம் அதிகம் பேசி வருகின்றார். முன்னைய ஆட்சியாளர் புரிந்த மோசடிகள், வீண்விரயம் தொடர்பில் எவ்வளவோ கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார். ஆனால் தமிழ் தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அவர் இதனையும் கூறாது வருவது கவலை தரும் நிலையாகும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பான விடயம் கிடப்பில் தள்ளப்பட்டால் கிளின் ஸ்ரீலங்கா முயற்சிகள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது கேள்விக்குறியே.. https://thinakkural.lk/article/315064
-
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அறிவிப்பு
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் அறிவிப்பு அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு போன்ற பிரச்சனைகள் தீர்வின்றி தொடரும் நிலையில் சுதந்திர தினத்தை கொண்டாட முடியாது எனவும், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று சனிக்கிழமை (01) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் சுதந்திர தினத்தில் எதிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்க உள்ளோம். இப்போராட்டத்தில் அனைவரும் ஆதரவு தந்து போராட்டத்தை வலுப்பெறச் செய்ய வேண்டும். எமது பிள்ளைகள் தொடர்பில் நீண்ட காலமாக போராடி வருகிறோம். போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், தீர்வினை தருவதற்கு அரசு தயாராக இல்லை. https://www.ilakku.org/சுதந்திர-தின-எதிர்ப்பு-ப/
-
தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!
தையிட்டி விகாரை காணி விவகாரம் : ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது – கஜேந்தரகுமார் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி முன்னிலையில் ஏற்க முடியாது என தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஒருங்கிணைப்பு குழுவு விடயதானங்களில் தையிட்டி விகாரை தொடர்பான விடயம் பேசப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் சிங்கள மக்களின் இன ஒற்றுமையை இந்த அரசாங்கம் எடுத்துக்காட்ட விரும்பினால் ஆரம்ப புள்ளியாக தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்ற வேண்டும் இந்த விகாரை தனியார் மக்களுடைய காணிகளில் அடாத்தாக கட்டப்பட்ட ஒரு விகாரை. இந்த விவகாரம் தொடர்பில் பிரதேச செயலாளர் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு விவரம் வழங்கியுள்ளார். தற்போது மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த நீங்கள் தமிழ் சிங்கள உறவை இனவாதம் இல்லாமல் நோக்குகிறீர்கள் என்றால் சட்ட விரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றுங்கள் என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அது தொடர்பில் ஆராய்வோம் என கூறிய நிலையில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் குறித்த விகாரை அமைந்துள்ள கணிகளின் சொந்தக்காரர்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அவர்கள் மாற்றுக்கானியை வாங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்றார். இதன்போது குறிப்பீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆளுநரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. வேண்டுமென்றே தனியார் காணிகளில் விகாரையை கட்டிவிட்டு மக்களுக்கு மாற்றுக்காணியை வழங்குவதாக் கூறுவதை ஏற்க முடியாது மக்களும் அதனை எதிர்பார்க்கவில்லை. நாங்கள் மக்களுடன் போராடி வருகிறோம் மக்கள் அவ்வாறு காணியை கேட்கவில்லை ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என்றார். https://www.ilakku.org/taiyiti-viharaya-land-issue-cannot-accept-the-governors-opinion-gajendrakumar/
-
நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே?
நெல்லுக்கான உத்தரவாத விலை எங்கே? நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகிவிட்ட போதிலும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாதுபோயுள்ளது என, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதியில், கனேவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள இலுக்வத்த கிராமத்தில் இன்று (01) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். “கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்னமும் உத்தரவாத விலையை வழங்கப்படவில்லை. 3 இலட்சம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவுக்கு திறைசேரி 5 பில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளதாக அறியமுடிகிறது. இருந்த போதிலும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு இன்னும் பணம் தேவை என்ற கோரிக்கை திறைசேரிக்கு சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் பெயருக்கு மாத்திரம் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் பலவீனமாகும். இது ஆட்சியில் காணப்படும் குறைபாடுகள். “நெல் கொள்முதல் செய்ய பணம் ஒதுக்கப்பட்டாலும், ஒதுக்கப்பட்ட பணத்தில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. கடந்த காலங்களில் தற்போதைய அமைச்சர்கள் சிலர் வயல்வெளிகளுக்குச் சென்று உர மானியம் மற்றும் நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பில் அதிகம் பேசினர். விவசாயத்துக்கு உயிர் கொடுக்கத் தயாராக இருந்த அரசுப் பிரதிநிதிகளால் நெல்லுக்கான உத்தரவாத விலையைக் கூட வழங்க முடியவில்லை. “நெல்லுக்கான விலை 80 ரூபாயாக காணப்படுகின்றது. ஆனால் தேர்தல் காலத்தில் 150 ரூபாய் உத்தரவாத விலையைத் தருவோம் என அரச பிரதிநிதிகள் தெரிவித்தனர். தாம் கூறிய பேச்சுக்களை இணையத்தில் இருந்தும் நீக்கி விட்டு, அனைத்தையும் மறந்துவிட்டுள்ளனர். இது மிகவும் நியாயமற்ற செயல். 2025 பெரும் போகத்தில் 2.5 மெட்ரிக் டொன் மற்றும் சிறு போகத்தில் 1.7 மெட்ரிக் டொன் என்றவாறு அரசாங்கம் நெல் அறுவடையை மதிப்பிட்டுள்ளது. “புள்ளி விவர தரவுகள் எவ்வாறு இருந்தாலும், நெல்லுக்கான உத்தரவாத விலையை ஏன் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், இந்த அறுவடையை உத்தரவாத விலையில் பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் எங்கே? “இது தவிர, பயிர் சேத நிவாரணம், காட்டு யானை - மனித மோதலால் ஏற்படும் பயிர் சேதம், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசு தவறிவிட்டது. விவசாயிக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாரான அரசு இன்று மௌனம் காக்கிறது. இதே கதி அடுத்த போகத்திலும் தொடரக் கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார். https://www.tamilmirror.lk/செய்திகள்/நெல்லுக்கான-உத்தரவாத-விலை-எங்கே/175-351278
-
தனியார் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள்
தனியார் வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்துள்ள 9 நிபந்தனைகள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 304 ஒருங்கிணைந்த வகைப்பாடு குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ், 2025 ஜனவரி 31 ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கார்கள், வேன்கள், பேருந்துகள், பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள், சிறப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் இயந்திரங்களைப் பயன்படுத்தாத பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது. அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாத்தல், அந்நியச் செலாவணியை இழந்து அதிக அளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதை ஊக்கப்படுத்தாமல் இருத்தல், அரச வருவாயை அதிகரித்தல் போன்ற நோக்கங்களுடன், நாட்டில் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் பின்வரும் நிபந்தனைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 1. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்களில் பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளர்கள் இதன் மூலம் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்யலாம். 2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறக்குமதியாளர்கள் தவிர மற்ற இறக்குமதியாளர்கள் 12 மாத காலத்திற்குள் ஒரு மோட்டார் வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்யலாம். 3. இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு மோட்டார் வாகனமும் கொள்வனவாளரின் பெயரில் (பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளரிடமிருந்து வாங்கினால்) அல்லது இறக்குமதியாளரின் பெயரில், குறிப்பிட்ட மோட்டார் வாகனம் தொடர்பான இறக்குமதி பில்லில்/சுங்கக் குறிப்பில் பதிவு செய்யப்பட்ட திகதியிலிருந்து 90 நாட்களுக்குள், மோட்டார் வாகனம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். 4. மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு, இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) அடங்கிய பிரமாணப் பத்திரத்தை, மற்ற அனைத்து தேவையான ஆவணங்களுடனும், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மேலே உள்ள பத்தி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர மற்ற இறக்குமதியாளர்கள், தங்கள் இரண்டாவது வாகனத்தை இறக்குமதி செய்யும்போது, தங்கள் முதல் வாகனத்தை இறக்குமதி செய்த நாளிலிருந்து 12 மாத காலத்திற்குள் வேறு எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்யவில்லை என்றும் அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். (சுங்கப் பதிவு திகதியிலிருந்து). 5. ஒரு இறக்குமதியாளர் 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யத் தவறினால், குறிப்பிட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மோட்டார் வாகனத்தின் விலை, காப்பீடு மற்றும் கப்பல் கட்டண பெறுமதி (CIF மதிப்பு) அதிகபட்ச வரம்பு 45% க்கு உட்பட்டு, இறக்குமதியாளர் மாதாந்திர CIF மதிப்பில் 3% தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். 6. மாதாந்திர தாமதக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு எந்தச் சூழ்நிலையிலும் கட்டண விலக்கு அளிக்கப்படாது. 7. ஒரு மோட்டார் வாகனத்தின் வயதை நிர்ணயிப்பதில், மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்ட திகதிக்கும் சரக்குக் கட்டணம்/விமானப் பாதை மசோதா திகதிக்கும் இடைப்பட்ட காலம் கணக்கிடப்படும் 8. சலுகை வரிச் சலுகைகளின் கீழ் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிகளைப் பயன்படுத்தி எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அல்லது அனுமதிப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது. 9. ஏதேனும் மோட்டார் வாகனம் ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டால், தொடர்புடைய இறக்குமதியாளர் சுங்கப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அந்த மோட்டார் வாகனத்தை(களை) மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும். https://tamil.adaderana.lk/news.php?nid=199599
-
France ends military presence in Sahel region with handover of last base in Chad
France ends military presence in Sahel region with handover of last base in Chad Africa The French army has handed over its last base in Chad in a military ceremony in the capital N'Djamena, marking the end of French military presence in the country. Once a key link in France's military presence in Africa, Chad was its last foothold in the wider Sahel region after the forced withdrawal of French troops from Mali, Burkina Faso and Niger. Trucks carrying French army vehicles and equipment leaving the Kossei base. © Joris Bolomey, AFP The French army has handed over its last base in Chad in a military ceremony in the capital N'Djamena, the general staffs of both countries announced Thursday. The central African country in late November abruptly ended military cooperation with its former colonial ruler, and French troops began leaving the country in late December. Thursday's handover of the Kossei base marks the end of France's military presence in the African country "according to the wishes of the high authorities" in N'Djamena, a statement from the Chadian high command said. 12:31 EYE ON AFRICA © FRANCE 24 "The Kossei camp was handed over today to the Chadian army," said Colonel Guillaume Vernet, spokesman for the armed forces' general staff in Paris. French troops withdrew from their Faya-Largeau base in the north of the country on December 26, and on January 11 pulled out of a second base at Abeche. During the handover in Abeche, Chadian authorities declared that a January 31 deadline for the French withdrawal from the country was "non-negotiable". President Mahamat Idriss Deby Itno, in power since 2021, said the cooperation agreements with France had become "completely obsolete" in light of "the political and geostrategic realities of our time". Soldiers and fighter aircraft from France have been stationed in Chad almost continuously since the country's independence in 1960, helping to train the Chadian military. The largely desert country had been a key link in France's military presence in Africa and its last foothold in the wider Sahel region after the forced withdrawal of French troops from Mali, Burkina Faso and Niger in the wake of military coups. The military authorities in Mali, Burkina Faso and Niger have pivoted towards Russia in recent years. At its height, France's Sahel contingent numbered more than 5,000 troops as part of the anti-jihadist Operation Barkhane, which ended in November 2022. French President Emmanuel Macron irked France's allies in a New Year's speech to diplomats, lamenting that African countries "forgot to say thank you" for France's decade-long deployment to fight an Islamist insurgency. Senegal is also negotiating the withdrawal of French forces by the end of 2025. At the same time, Paris's military presence in the Ivory Coast and Gabon is being cut back, in line with a restructuring plan for France's presence in West and Central Africa. A French base in Djibouti, which hosts 1,500 troops, is being developed as a launching pad for future missions in Africa following the forced withdrawal from the Sahel. (AFP) https://www.france24.com/en/live-news/20250130-france-hands-over-last-base-in-chad-amid-withdrawal
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
யாரும் உயிர் தப்புவது சாத்தியமில்லை என கூறுகிறார்கள்.(Experts)
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நீங்கள் பார்க்காததால் உங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
ஒரு வருட காலமாக சீமானை இரகசியமாகக் கண்காணித்த பொட்டம்மான்
-
யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி ரகுராம் நாளை மீண்டும் பதவியேற்பு
பேராசிரியர் எஸ் ரகுராம் கண்ணீர் வாக்குமூலம். தமிழ் இளைஞர்களை போதைப்பாவனையிலிருந்து காப்பாற்றுங்கள்!
-
'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
சென்னையில் என்னை அழைத்து சென்ற சந்தோஷ் ! |
-
ஜனநாயக குடியரசு காங்கோவில் மீண்டும் பயங்கர சண்டை
Fighting rages between rebels and army in Democratic Republic of Congo | BBC News
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நிறம் பிரித்து பார்த்தேன் உன் நெஞ்சின் வண்ணம் என்ன சுரம் பிரித்து கேட்டேன் சங்கீத வண்ணம் என்ன பறந்தேன் திரிந்தேன் உன் ஆசையில் ஓ கரைந்தேன் உறைந்தேன் உன் காதலில் ஓ. (நிறம் பிரித்து..) எந்த மேகம் எந்த ஊரில் இன்று சேர்ந்து பொழியும் முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார் எந்த காலில் என்ன சிற்பம் யார் வடிக்க கூடும் முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார் காலமே படைத்தது காலமே மறைத்தது நாளைகள் என்பது நாளைதான் உள்ளது காலமகள் சுட்டுவிரல் எந்த திசை காட்டும் அங்குதான் மேகமும் மழை நீர் ஊற்றும் (நிறம் பிரித்து..) ஓவியத்தில் எந்த கோடு எங்கு சேர கூடும் எல்லாமே எல்லாமே நம் கையிலே வாழ்க்கை என்னும் சாலை ஒன்று எங்கு யாரை சேர்க்கும் எல்லாமே எல்லாமே யார் கையிலே வசந்தத்தின் சோலைகள் வழியிலே தோன்றலாம் காலமும் காதலும் தோழமை ஆகலாம் முத்துச் சிப்பி மூடிவைக்கும் முத்துக்கள் போல் ஆசை மூடி வைத்த நெஞ்சுக்குள்ளே அலைக்கடல் ஓசை (நிறம் பிரித்து..) படம்: டைம் இசை: இளையராஜா பாடியவர்: சுஜாதா
-
ஜனநாயக குடியரசு காங்கோவில் மீண்டும் பயங்கர சண்டை
ஜனநாயக குடியரசு காங்கோவில் மீண்டும் பயங்கர சண்டை: வன்முறையால் பல ஆயிரம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் 0 காங்கோ: ஜனநாயக குடியரசு காங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கும், ஆயுதம் ஏந்திய இன குழுக்களுக்கும் இடையே மீண்டும் உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சி படைகளில் ஒன்றான M23 தற்போது காங்கோ நாட்டு ராணுவத்தையும், ஐநா-வின் சமாதான தூதுவர்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கோமா என்ற நகருக்குள் புகுந்துள்ள கிளர்ச்சியாளர்கள் தங்கள் கண்ணில் படும் இன குழுக்களையும், ராணுவத்தையும் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அதற்கு ராணுவமும், இன குழுக்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். வைரம், தங்கம், கனிம வளங்கள் கொட்டிக்கிடக்கும் ஜனநாயக குடியரசு காங்கோவை மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு உருக்குலைத்து கொள்ளையடித்து வருகின்றன என்பது குற்றச்சாட்டு. கிளர்ச்சியாளர்களையும் மேற்கத்திய நாடுகள் உருவாக்குகின்றன என்ற புகாரும் உண்டு. அந்த நாடுகளின் தூண்டுதலுக்கு இரையாகி கிடைக்கும் காங்கோவில் பலமுறை தாக்குதல் தொடர்வதால் எப்போதும் தோட்டாக்கள் சுடும் சத்தம் கேட்டு கொண்டே இருக்கின்றன. இதனால் உயிருக்கு பயந்து லட்ச கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பியோட தொடங்கியுள்ளனர். https://www.dinakaran.com/democratic-republic-of-congo-resurgence-violence/
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
காலமாகி விட்டார் என செய்தி வாசித்தேன் ஜஸ்டின்.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
விளங்க நினைப்பவனுக்கு விளங்கிய அளவுக்கு சீமானுக்கு விளங்கவில்லை போல உள்ளது.🙃