Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார் மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று (19) காலமானார். அவருக்கு வயது 76 ஆகும். 1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார். https://tamil.adaderana.lk/news.php?nid=198988
  2. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை.. பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாத வகையில் வங்கிகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்க இலங்கை மத்திய வங்கி தவறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் வங்கி பரிவர்த்தனைகளின் போது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வழங்கிய கண்டு கொள்ள முடியாமைக்கான சான்றிதழை ஏற்றுக்கொள்ள வங்கிகள் மறுப்பதை தடுக்க உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவுறுத்தியிருந்தது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் மேற்பார்வைப் பிரிவின் பணிப்பாளருக்கு அறிக்கையை அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது. எனினும், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதித் தினமான ஜனவரி 14ஆம் திகதி, மத்திய வங்கியினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. காலக்கெடு முடிந்து ஒரு நாள் கழித்து இலங்கை மத்திய வங்கி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது. “முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்புப் பயணம் தொடர்பாக” 2025 ஜனவரி 2ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பாதிக்கும் இந்தப் பிரச்சினையை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வருட இறுதியில் முல்லைத்தீவில் மேற்கொண்ட கண்காணிப்பில் அடையாளம் கண்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “கடந்த டிசம்பரில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று முல்லைத்தீவு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் வழங்கப்பட்ட காணாமற் போனோருக்கான சான்றிதழை வங்கிகள் புறக்கணிக்கின்றமை விசேட அம்சமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால், அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் வங்கிச் சேவையில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.” https://newuthayan.com/article/காணாமல்_ஆக்கப்பட்டவர்களின்_உறவினர்களை_வங்கிகள்_ஏன்_கருத்தில்_கொள்ளவில்லை..
  3. போர் நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் – இஸ்ரேஸ் பிரதமர் படையினருக்கு அவசர உத்தரவு! இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இன்று காலை 8:30 மணிக்கு (0630 GMT) காசாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. “காலை 8:30 மணி முதல் நடைமுறைக்கு வரவிருக்கு போர்நிறுத்தம், ஹமாஸ் வழங்குவதாக உறுதியளித்த விடுவிக்கப்பட்ட கடத்தப்பட்டவர்களின் பட்டியலை இஸ்ரேல் பெறும் வரை தொடங்காது என்று பிரதமர் பாதுகாப்பு படைக்கு அறிவுறுத்தியதாக,” என்று அவரது அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சிறிது நேரத்திற்குப் பின்னர், பெயர்களை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு “தொழில்நுட்பக் களக் காரணங்கள்” காரணம் என்று ஹமாஸ் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உறுதிபூண்டுள்ளதாகவும் ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, “இந்தப் பெயர்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றால், கத்தார் ஹமாஸ் மீது நம்பமுடியாத அளவிற்கு அழுத்தம் கொடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. “எவ்வாறாயினும், ஹமாஸ் போர்நிறுத்தத்திற்கு உறுதிபூண்டுள்ளதை மீண்டும் வலியுறுத்தியுள்ளதுடன், மிக விரைவில் இந்தப் பெயர்களை ஒப்படைப்பார்கள்.” என்றும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. https://newuthayan.com/article/போர்_நிறுத்தத்தை_தொடங்க_வேண்டாம்_–_இஸ்ரேஸ்_பிரதமர்_படையினருக்கு_அவசர_உத்தரவு!
  4. குருநகரில் வீசிய காற்றினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்! குருநகரில் இன்று காலை வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தை அமைச்சர் சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்த அனர்த்தத்தால் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். https://newuthayan.com/article/குருநகரில்_வீசிய_காற்றினால்_பாதிக்கப்பட்ட_பகுதிகளை_பார்வையிட்ட_அமைச்சர்!
  5. அரவிந்சாமியின் கருத்துடன் ஒப்பிடும் போது அஜித்தின் கருத்து இரண்டாம் பட்சம் தான்.
  6. அநுர அரசில் இருந்து ஒரு நேர்மையானவராவது மேற்படி கூற்றுகளுக்கு விடையளிப்பார்களா?
  7. சவூதி அன்பளிப்பாக வழங்கிய பேரீத்தம் பழத்துக்கு அதிக வரி செலுத்தியது ஏன்? றிப்தி அலி புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களுக்கு செலுத்த வேண்டிய வரித் தொகையினை விட அதிக வரிப்பணம் செலுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் மேலதிகமாக செலுத்தப்பட்டுள்ள கட்டணத்தினை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அர்க்கம் இல்யாஸ், புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிடம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். "ரமழானுக்காக அன்பளிப்புச் செய்யப்படும் பேரீச்சம் பழங்களை விடுவித்தல், வரி செலுத்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றினை ஒழுங்குபடுத்தல்" எனும் தலைப்பில் நேற்று (15) புதன்கிழமை புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிற்கு பாராளுமன்ற உறுப்பினரான அர்க்கம் இல்யாஸ் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நோன்பு காலத்திற்கான பேரீச்சம் பழங்களை இறக்குமதி செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றுக்காக 2025ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு 4 கோடி 63 இலட்சத்து 75 ஆயிரத்து 800 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சவூதி அரேபியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களுக்கான வரி மற்றும் தாமதக் கட்டணமாக 3 கோடி 28 இலட்சத்து 61 ஆயிரத்து 109 ரூபா முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சுங்கத் திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு ரமழான் மாத்திற்கென 500 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்கள் தேவைப்படுகின்றன. இதில் 10 சதவீதமான 50 மெட்ரிக் தொன்னைப் விடுவிப்பதற்காக ஒரு கிலோ பேரீச்சம் பழத்திற்கு 657 ரூபாவும் 22 சதமும் செலவிடப்பட்டுள்ளது. இதில் இவற்றை ஏற்றி இறக்கும் செலவுகள் உள்ளடக்கப்படவில்லை. மேலும் பேரீச்சம் பழத்திற்கான 08041020 எனும் எச்எஸ் குறியீட்டுக்கு பதிலாக உலர்ந்த விவசாயப் பொருட்களுக்காக பயன்படுத்தப்படும் 08042020 எனும் எச்எஸ் குறியீட்டினை பயன்படுத்தியமையினாலேயே மேலதிக கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் நலம்விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கு 199 ரூபா வரிச் சலுகை வழங்குவதற்கான அனுமதியினை கடந்த டிசம்பர் 31ஆம் திகதி அமைச்சரவை வழங்கியுள்ள போதிலும் இவ்வாறு அதிக தொகைப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நன்கொடையாக கிடைக்கப் பெறும் பேரீச்சம் பழங்களை விடுவிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் தேவையான Standard Operating Procedures (SOP) இல்லை என்ற விடயம் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்க்கம் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மாவட்ட ரீதியாக உள்ள பள்ளிவாசல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குடும்பங்களின் புதுப்பிக்கப்பட்ட தரவுகளுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களை தெளிவூட்டல் மற்றும் இராஜதந்திர தொடர்பு, மேலதிக கட்டணத்தினை மீளப் பெறல், சுங்க விடுவிப்பினை துரிதப்படுத்தல், விநியோகத்தில் பின்தங்கிய குடும்பங்களை முன்னிலைப்படுத்தல் உள்ளிட்ட எட்டு பரிந்துரைகளை பாராளுமன்ற உறுப்பினர் அர்கம் குறித்த கடிதத்தில் உள்ளடக்கியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அர்க்கம் அனுப்பியுள்ள இக்கடித்தின் பிரதிகள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமைச்சருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://ynei.vidiyal.lk/post/--3209
  8. சீன - இலங்கை இடையிலான கூட்டு அறிக்கை சீன மக்கள் குடியரசுத் தலைவர் ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதுடன், அரச சபைப் பிரதமர் லீ சியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் மேதகு ஜாஓ லெர்ஜி ஆகியோரைச் சந்தித்தார். ஒரு சுமூகமான மற்றும் நட்பு சூழ்நிலையில், இரு தரப்பினரும் பாரம்பரிய நட்பை மேலும் வலுப்படடுத்துதல், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே உயர்தர பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் (ஒரே எண்ணக்கருவுடனான ஒரே பாதை), பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டதுடன், அவை தொடர்பில் விரிவானதும் பொதுவானதுமான புரிதல்களை எட்டினர். வெவ்வேறு அளவிலான பரிமாணங்களைக் கொண்ட நாடுகளான சீனாவும் இலங்கையும் 68 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளில் தொடர்ந்து ஒருவரையொருவர் மதித்து, ஒருவரையொருவர் சமமாக நடத்தி, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துள்ளதுடன், நட்புரீதியான தொடர்புகள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்னும் பெருமையை இரு தரப்பினரும் பகிர்ந்துகொள்கின்றனர். இறப்பர் - அரிசி ஒப்பந்தத்தில் பொதிந்துள்ள, சுயாதீனத்துவம், தன்னிறைவு நிலை, கூட்டுணர்வு மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் உணர்வை முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர மரியாதை, பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர ஆதரவு, இரு தரப்பினதும் வெற்றிக்கான ஒத்துழைப்பு மற்றும் பொதுவான வளர்ச்சி ஆகிய கொள்கைகளைப் பின்பற்றவும், நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் என்றென்றும் நீடிக்கும் நட்பின் அடிப்படையில் சீன - இலங்கை மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் உறுதியாக இருக்கவும், இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் அதிக நன்மைகளை பயக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன - இலங்கை சமூகத்தை கூட்டாகக் கட்டியெழுப்பவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இரு தரப்பு உறவுகள் தொடர்பில், இரு நாடுகளின் தலைவர்களினதும் வலுவான மூலோபாய வழிகாட்டுதலைப் பேணுவதற்கும், இரு அரசுகள், சட்டமன்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான இருதரப்பு பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், அரசியலில் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், ஒருவருக்கொருவர் ஆட்சி மற்றும் அபிவிருத்திக்கான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், அவற்றின்மூலம் கற்றுக்கொள்வதற்கும், சீன - இலங்கை உறவுகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் இணங்கினர். இரு தரப்பினரும், தமது முக்கிய நலன்கள் மற்றும் கவனம் செலுத்தவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பிலான பிரச்சினைகளில், தமது பரஸ்பர ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானம் 2758 இன் அதிகாரத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், சீன மக்கள் குடியரசின் அரசானது, முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கம் என்பதையும், தாய்வான் சீனப்பிரதேசத்தின் பிரிதத்தெடுக்க முடியாத பகுதியாகும் என்பதையும் அங்கீகரித்து, ஒரே சீனா கொள்கைக்கான ஒரே சீனா கொள்கைக்கான தனது, வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைவதற்கான சீன அரசின் அனைத்து முயற்சிகளையும் இலங்கை உறுதியாக ஆதரிப்பதுடன், "சுயாதீன தாய்வான்" எண்ணக்கருவின் எவ்வித நிலையும் எதிர்த்து நிற்கிறது. சீனா தொடர்பிலான எந்தவொரு எதிர் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கும் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், ஷிசாங் மற்றும் ஷின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவை உறுதியாக ஆதரிக்கும் என்றும் இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. தேசிய சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கையை தொடர்ந்து வலுவாக ஆதரிப்பதாகவும், அதன் தேசிய நிலவரங்களுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையை சுயாதீனமான தெரிவுகளில் இலங்கைக்கு மதிபளித்து, அவற்றுக்கு ஆதரிப்பதாகவும் சீனா மீண்டும் வலியுறுத்தியது. சுதந்திரமானதும் அமைதியானதும் வெளியுறவுக் கொள்கைக்கான அதன் உறுதிப்பாட்டை சீனத் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. சுயாதீனமான அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியமைக்காக இலங்கைக்கு சீனா வாழ்த்து தெரிவித்ததோடு, இலங்கையின் புதிய அரசாங்கம், இலங்கை மக்களை பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு, ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் முன்னோக்கி அழைத்துச் சென்றமைக்காக தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தது மட்டுமால்லாமல் இலங்கை அரசாங்கம் நாட்டின் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அயராது உழைக்கும் தருணத்தில், சீனா தனது தீவிர ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தது. புதிய சகாப்தத்தில் சீனாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளை இலங்கை பாராட்டியதுடன், அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகின்ற நவீன சோசலிச நாடொன்றைக் கட்டியெழுப்பவும், சீன நவீனமயமாக்கல் பாதையின் மூலமான சீன தேசத்தின் புத்துணர்ச்சியை மேம்படுத்தவும் சீனாவுக்கான தனது ஆதரவைத் தெரிவித்தது. சீர்திருத்தங்களை விரிவுபடுத்தவும், மேலும் ஆழப்படுத்தவும், உயர்தரத்திலான வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும், சீனாவின் உந்துதல் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும் என இலங்கை நம்புகிறது. இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தலின் கீழ், சீனாவும் இலங்கையும் பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பில் பலனுறுதிமிக்க பெறுபேறுகளை உருவாக்கியுள்ளன. இலங்கை, அதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியிலும், தனது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பின் முக்கிய பங்கைப் பாராட்டுகிறது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து முக்கிய திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கக்க்கூடிய செயற்பாட்டு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும், பட்டுப்பாதைச் செயற்பாட்டுத்திட்டம் போன்ற தளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், வாழ்வாதாரத்திற்கான நிகழ்ச்சித் திட்டங்களுக்கமைவாக ஒன்றாகத் திட்டமிடுதல், ஒன்றாகக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒன்றாக பயனடைதல், திறந்ததும், பசுமையானதும் மற்றும் அர்ப்பணிப்புமிக்கதுமான ஒத்துழைப்பு, உயர்தரத்திலான, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் வளங்குன்றாத நிலையான வளர்ச்சியுடன்கூடிய உயர்தர பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காக ஜனாதிபதி ஷி ஜின்பிங் அறிவித்த எட்டு முக்கிய படிகளைப் பின்பற்றுவதற்கும் இரு தரப்பினரும் இணங்கினர். சீனா-இலங்கை உயர்தர பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், உயர் தர, வலுவான மீள்தன்மை மற்றும் அதிக நிலைத்தன்மையினூடான இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக் கொண்ட மேம்பாட்டிற்கான புதிய இடத்தை கூட்டாகத் திறப்பதற்கும், பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்புத் திட்டத்தில் கைச்சாத்திடுவதில் இரு தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். கடன் பிரச்சினையை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு வலுவான ஆதரவாக விளங்கிய சீனா, கடன்களை மறுசீரமைப்பதில் வழங்கிய முக்கிய உதவி உட்பட, நிதிசார் நெருக்கடி மிகுந்த காலங்களில் சீனாவிடமிருந்து இலங்கை பெற்ற பெறுமதிமிக்க ஆதரவிற்கு இலங்கை தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தது. இலங்கை, சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொள்ளப்பட்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது. சர்வதேச நாணய நிதியத்தில் சீனா தொடர்ந்து நேர்மறையான பங்கை வகிப்பதுடன், இலங்கையின் நிதிச் சிக்கல்களைத் தணிக்கவும், கடன்படு நிலையில் நீடிப்புத்திறனைப் பேணவும் உதவும் வகையில், ஏனைய கடன் வழங்குநர்களுடன் நட்புரீதியான தொடர்பைப் பேணுகிறது. இலங்கை மத்திய வங்கியும், சீன மக்கள் வங்கியும் தங்கள் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதுடன், நிதிசார் ஒத்துழைப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளன. பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து, இரு தரப்பினரும் திருப்தி அடைந்துள்ளனர். பல்வேறு வழிகளில் இலங்கையிலிருந்தான, இறக்குமதியை ஊக்குவிப்பதற்காக சீனா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு இலங்கை தெரிவித்தது. தேயிலை, இரத்தினக்கல் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களுக்கு சீன இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளிக்கவும், சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி, சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கண்காட்சி, சீன - தெற்காசிய கண்காட்சி மற்றும் இலத்திரனியல் வணிகத் தளங்கள் போன்றவற்றில் இலங்கை பங்கேற்பதை எளிதாக்கவும், பரஸ்பர நன்மை மற்றும் இருதராப்பினரதும் வெற்றிக்கான பெறுபேற்று அடிப்படையில் இரு நாடுகளின் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் சீனா தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது. சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக்கொண்ட கொள்கைகளுக்கு இணங்க, சகலதும் அடங்கிய தொகுப்பொன்றில் விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இலங்கை சீனாவிலிருந்து அதிக வணிக முதலீட்டை வரவேற்பதுடன், இந்நோக்கத்திற்காக உகந்ததொரு முதலீடு மற்றும் வணிக சூழலை வழங்கும். இலங்கையில் பொருளாதார மாற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தியை எளிதாக்குவதற்காக இலங்கையில் முதலீடு செய்வதில், சீனாவானது அதன் நிறுவனங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும். உயர்தர மற்றும் பரஸ்பர நன்மை பயக்குகின்ற செயற்பாட்டு ரீதியிலான, ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, ஏற்பாட்டியல், வளங்குன்றாத அபிவிருத்தி மற்றும் இலத்திரனியல் பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் இணங்கினர். விவசாயம் தொடர்பான பரந்த அளவிலான ஒத்துழைப்பு மற்றும் ஆழமான பரிமாற்றங்கள் குறித்த நேர்மறையான மதிப்பீடுகளை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர். இலங்கையின் நிலையானதும், வளங்குன்றாததுமான விவசாய வளர்ச்சிக்கான திறனை மேம்படுத்த உதவும் வகையில் வெப்பமண்டல பயிர்களுக்கான உயிரியற் தொழில்நுட்பங்கள், தாவரப் பெருக்கம் பயிர்ச்செய்கை மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடன் பயிற்சி மற்றும் செயல்விளக்கத் திட்டங்களை மேற்கொள்வதற்கான தனது தயார்நிலையை சீனா தெரிவித்தது. மேலும் தேயிலை, பழங்கள், இலவங்கப்பட்டை மற்றும் நீர்வள உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட தனித்துவமான பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை இலங்கை மேலும் விரிவுபடுத்துவதை வரவேற்றது. வறுமைக் குறைப்பு மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சியில் உன்னிப்பாகக் கவனம் செலுத்துவதன் மூலம் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தயார்நிலையை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர். தொடர்புடைய துறைகளில் பணியாளர்களின் திறனை வலுப்படுத்த இலங்கைக்கு உதவ சீனா தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது. இரு தரப்பினரும் காலநிலை மாற்றத்தை மனித சமூகத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகவும், சீனா மற்றும் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றது என்பதை ஏற்றுக்கொண்டனர். காலநிலை மாற்றத்தில், தொடர்ந்தும் தீவிரமாக இணைந்து பணியாற்ற இணங்கினர். கடுமையான வெள்ளப்பெருக்க்கின்போதான, சீனாவின் மனிதாபிமான நிவாரணத்திற்காக இலங்கை நன்றி தெரிவித்தது. பேரிடர் தடுப்பு, அனர்த்தங்களுக்கெதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால மீட்பு போன்ற துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், அதன் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இலங்கையின் அவசரகால முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதில் பயிற்சி அளிக்கவும் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஐக்கிய நாடுகளின் 2030 இற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான கூட்டு முயற்சியின், பகுதியொன்றாக, பெல்ட் அண்ட் ரோட் சர்வதேச வளங்குன்றாத நிலையான அபிவிருத்திக் கூட்டணி மற்றும் ஏனைய தளங்களின் தொடர்புடைய நடவடிக்கைகளில் இலங்கையின் பங்களிப்பை சீனா வரவேற்கிறது. சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கடல்சார் ஒத்துழைப்பைத் தொடரவும், கடல்சார் விவகாரங்களில் தொடர்ந்து இருதரப்பு ஆலோசனைகளை நடத்தவும் இரு தரப்பினரும் விரும்புகின்றனர். கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல், கடல்சார் கள விழிப்புணர்வு, கடல்சார் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்சார் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய கடல்சார் சமூகத்தை உருவாக்க தங்கள் பலத்தை திரட்டவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். நீல (கடல்சார்) கூட்டாண்மைக்கான கடல்சார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இரு தரப்பினரும் இணங்கினர். கல்வித்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். புரிதல் மற்றும் நட்பை அதிகரிப்பதற்கு கல்வித்துறையிலான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் முழுமையாக அங்கீகரித்ததுடன், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றங்களை மேலும் மேம்படுத்துவதற்கான தயார்நிலையை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர். மேலும் அர்ப்பணிப்புள்ள மாணவர்கள் சீனாவில் மேற்படிப்பைத் தொடர்வதனை சீனா வரவேற்று, ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு அரசாங்க புலமைப்பரிசில்களுடன்கூடிய ஆதரவை அளிக்கத் தயாராக உள்ளது. லூபன் செயற்பாட்டு அமர்வினூடே சிறப்பான பலனை அளிக்கவும், இலங்கைக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மூலம் அதிகபடியான தொழில்வாண்மையாளர்களை வளர்க்கவும், சீனா இலங்கையுடன் இணைந்து செயற்படும். கல்வித்துறையில் சீனாவின் உதவியை இலங்கை பாராட்டுவதுடன், சீனாவுடன் இணைந்து டிஜிட்டல் வகுப்பறை செயற்திட்டத்தின் வெற்றிக்காகச் செயற்படும். இலங்கையில் சீன மொழிக் கல்வியை ஊக்குவிக்கவும், இலங்கையில் உள்ள சீன கலாச்சார மையத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் தயார்நிலையில் உள்ளனர். சீன அறிவியல் கல்வி நிறுவனத்தின் கீழுள்ள, சீன - இலங்கை கூட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரு தரப்பினரும் தொடர்ந்து பணியாற்றுவது மட்டுமின்றி, அதனை மேம்படுத்துவதுடன், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் கல்வித்துறையை வலுப்படுத்துவதில் ஈடுபாட்டுடன் செயற்படுவர். இரு தரப்பும் தமது, நீண்டகால நட்பை முன்னெடுத்துச் செல்லவும், தங்கள் மக்களை நெருக்கமாகக் கொண்டுவரவும் தயாராக உள்ளனர். பரஸ்பர சுற்றுலா மற்றும் விமானமார்க்க தொடர்புகளை ஊக்குவிக்க இரு தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். பட்டுப்பாதை நகரங்களின் சர்வதேச சுற்றுலா கூட்டணியில் இணைத்துள்ள இலங்கை நகரங்களை சீனா வரவேற்கிறது. சீனா மற்றும் இலங்கையில் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பர். இளைஞர்கள், சிந்தனையாளர்கள், விளையாட்டு மற்றும் ஊடகங்கள் போன்ற துறைகளில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புத்தமதப் பரிமாற்றங்களின் பிணைப்பைக் கட்டமைக்கவும், மக்களிடையேயும் சகோதர நகரங்களுக்கிடையிலான பரிமாற்றங்களை ஆழப்படுத்தவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். இலங்கையில் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும். சீனாவின் யூனான் மாகாணம், ப்ரைட்னஸ் ஆக்‌ஷன் திட்டத்தை செயல்படுத்த இலங்கைக்கு மருத்துவக் குழுக்களை தொடர்ந்து அனுப்பும். ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான ஆசிய முன்முயற்சி மற்றும் ஆசியாவில் கலாச்சார பாரம்பரியத்திற்கான கூட்டணி போன்றவற்றில் பங்கேற்பதற்கான இலங்கையின் நேர்மறையான பதிலை சீனத் தரப்பு பாராட்டுகிறது. இக்கூட்டணியின் கீழ் இலங்கையுடன் இருதரப்பு கலாச்சார பாரம்பரிய ஒத்துழைப்பை சீனா மென்மேலும் ஊக்குவிக்கும். நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு முக்கிய அங்கம் என்பதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்வதுடன், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் இணையத்தள சூதாட்டம் போன்ற நாடுகள் கடந்த குற்றங்களை கூட்டாகக் கட்டுப்படுத்தத் தயாராக உள்ளனர். இலங்கையின் நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் திறன் மேம்பாட்டை ஆதரிக்கவும், காவல் துறைக்கு உதவி வழங்கவும் சீனா தன்னால் இயலுமான அனைத்தையும் செய்யத் தயாராகவுள்ளது. ஜனாதிபதி ஷீ ஜின்பிங் முன்மொழிந்த உலகளாவிய அபிவிருத்திக்கான முயற்சி, உலகளாவிய பாதுகாப்பு முயற்சி மற்றும் உலகளாவிய நாகரிக முயற்சி ஆகிய மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமூகத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், அவ்வளர்ச்சியில் தீவிரமாக பங்கேற்பதற்கும் இலங்கை தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த காலகட்டத்தில் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையானது, 2025 ஆகிய இவ்வாண்டில், தனது 80ஆவது ஆண்டு நிறைவைக் குறித்து நிற்கிறது. ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்ட சர்வதேச முறைமை, சர்வதேச சட்டத்தால் ஆதரிக்கப்படும் சர்வதேச ஒழுங்கு மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளுகிணங்க சர்வதேச முறைமையொன்றை நிலைநிறுத்துவதற்கான தனது இணைந்த உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு தரப்பினரும் அமைதியான சகவாழ்விற்கான ஐந்து கொள்கைகளை கடைபிடிப்பதுடன், சமமான மற்றும் சீரான பன்முக உலகம் மற்றும் உலகளாவிய அடிப்படையில் நன்மை பயக்கும் மற்றும் அனைத்தும் உள்ளடங்கலான பொருளாதார உலகமயமாக்கலை கூட்டாக ஆதரிப்பது மட்டுமின்றி, உலகின் அனைத்து நாடுகளுக்கும் அமைதி, பாதுகாப்பு, செழுமை மற்றும் முன்னேற்றத்துடனான பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செயற்படுவர். இவ்விஜயத்தின் போது, விவசாயம், சுற்றுலா, வாழ்வாதார உதவி, ஊடகம் மற்றும் ஏனைய துறைகளில் இரு தரப்பினரும் ஒத்துழைப்பு ஆவணங்களில் கைச்சாத்திட்டனர். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், சீனத் தலைமையை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். சீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி விடுத்த அன்பான அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் இராஜதந்திர ரீதியில் சிறப்பான தொடர்புகளைத் தொடர்ந்தும் சிறப்பாகப் பேண இணங்கினர். https://ynei.vidiyal.lk/post/--3210
  9. சிரித்தாள் அந்த சிரிப்பில் ஒருமோகம்
  10. வடக்கில் ‘Beyond Borders’ January 15, 2025 கடந்த வாரம் பிரித்தானியாவைச் சேர்ந்த ‘எல்லைகளுக்கு அப்பால்’ (Beyond Borders) ஆவணப்படத் தயாரிப்பாளர்கள் வடமாகாணம் சென்றிருந்தார்கள். அங்கு அவர்கள் கிளிநொச்சியில் முன்னாள் போராளியும் ஊடகவியலாளருமான கோகிலவாணி, யாழ்ப்பாணத்தில் தொழில் முனைவர் ஜஸ்டின் குமார் மற்றும் The Jaffna Club நிறுவனரும் பத்தி எழுத்தாளருமான ஜெகன் அருளையா அவர்களையும் சந்தித்து வடக்கு வாழ் மக்களின் வாழ்வியல் தொடர்பான ஆவணப்படமொன்றிற்கான படப்பிடிப்பில் ஈடுபட்டார்கள். லண்டனைச் சேர்ந்த நண்பர்கள் லூயி கோல் (Louis Cole) மற்றும் ஜே.பி. என அழைக்கப்படும் ஹுவான் -பீற்றர் ஷுள்ஸ் (Juan-Peter (JP) Schulze) ஆகிய இருவரும் இரண்டு ஆசனங்களைக் கொண்ட இரட்டை இயந்திர விமானத்தில் உலகம் முழுவதையும் சுற்றிப்பார்த்து பல்வேறு வகையான மக்களின் கலாச்சாரங்கள் பற்றி ஆவணப்படங்களைத் தயாரித்து Beyond Borders என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்கள். கடந்த வாரம் இவர்கள் வட மாகாணத்திற்கு சென்றிருந்தபோது நிகழ்ந்த மேற்படி சந்திப்பு பற்றி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவரும் நண்பர் ஜெகன் அருளையா அவர்கள் தன் முகநூலில் இவர்களது வருகை பற்றிப் பதிவிட்டிருந்தார். ஜெகன் அருளையா தனது இரண்டாவது வயதில் பெற்றோருடன் பிரித்தானியாவிற்குப் புலம் பெயர்ந்து வாழ்ந்த பின்னர் கடந்த 10 வருடங்களாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகிறார். வட மாகாணத்தில் காணப்படும் வளங்கள், புலம்பெயர் மக்களின் முதலீடுகள் மற்றும் அங்குள்ள போதாமைகள் பற்றி அவ்வப்போது லங்கா பிஸினெஸ் ஒன்லைன் ஆங்கில இணையப் பத்திரிகையில் பத்திகள் எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து ‘வளரும் வடக்கு’ என்ற தொடராக’மறுமொழியில்‘ பதிவிட்டு வருகிறோம். ஜஸ்டின் குமார் ஒரு அமெரிக்க குடிமகனாகவிருந்தும் யாழ்ப்பாணத்தில் விவசாயப் பண்ணைகளை உருவாக்கி மரக்கறி, பழவகைகளைப் பதனிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார். இவரது பண்ணை பற்றியும் ஜெகன் அருளையா கட்டுரைகளை எழுதியிருக்கிறார். Beyond Borders தயாரிப்பாளர்களில் லூயி கோல் ஒரு யூ-ரியூப் காணொளிகளைத் தயாரிப்பதில் ஆரம்பித்து இப்போது உலகம் முழுவதும் சென்று எல்லைகளுக்கப்பால் கண் காணாத மக்களையும் அவர்களது கலாச்சாரங்களையும் ஆவணப்படுத்தி வருகிறார். இவரது நண்பரான ஜே.பி. ஒரு விமான ஓட்டி. 2015 இல் தென்னாபிரிக்காவில் ஆரம்பித்த இவர்களது சுற்றுப்பயணம் 90 நாட்களில் பல்வேறு நாடுகளையும் தரிசித்து மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருந்தது. மீண்டும் 2017 இல் இதே போன்றொரு சுற்றுப்பயணம் நடைபெற்றிருந்தது. இதுவரை உலகின் 6 கண்டங்களில் 22 நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். இவர்களது படைப்புகளின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இக்குழு முழுநீள ஆவணப்படத் தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. பொங்கலுக்கு முதல் வாரம் வன்னி வந்தடைந்த இக்குழு முன்னாள் போராளி கோகிலவாணியைச் சந்தித்து போருக்குப் பின்னான, குறிப்பாகப் பெண்களின் வாழ்வியலைப் படமாக்கினார்கள். பின்னர் யாழ்ப்பாணம் சென்று உடுவிலில் ஜஸ்டின் குமார் அவர்களது பண்ணையில் மாம்பழம் பதனிடும் ஆலையைப் பார்வையிட்டதுடன் அங்கு பணிபுரியும் உள்ளூர் பணியாளர்களுடன் உரையாடல்களையும் மேற்கொண்டனர். காலை உணவிற்காக ஜெகன் அருளையா அவர்களை பலாலி வீதியிலுள்ள அம்மாச்சி உணவகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். இலங்கை விவசாயத் திணைக்களத்தின் வெற்றிகரமான கருத்துருவாக்கத்தில் உருவான அம்மாச்சி-யாழ்ப்பாணம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் அதே வேளை குறைந்த விலையில் நிறைந்த சுவையுடனான உணவை வழங்கும் ஒரு உணவகம் (food court) ஆகும். லூயி கோலின் இதர காணொளிகளை இத்தொடுப்பில் பார்க்கலாம். Image Courtesy: Jekhan Aruliah https://marumoli.com/வடக்கில்-beyond-borders/
  11. இலங்கையில் இந்தி: முதலாவது திறந்த கற்கை நெறி ஆரம்பம் இலங்கையில் இந்தி மொழியைப் பரப்புவதற்கான உத்தியோகபூர்வமான முயற்சி நேற்று எடுக்கப்பட்டிருக்கிறது. திறந்த மற்றும் தூரக் கற்கை மூலம் மாணவர்கள் இந்தி மொழியில் சான்றிதழ் பட்டத்தைப் பெறும் வசதியை சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் மேற்கொண்டிருக்கிறது. உலக இந்தி தினத்தின் 50 ஆவது வருட நிறைவையொட்டி ஆரம்பித்து வைக்கப்பட்ட பாரத் – சிறீலங்கா சம்மேளனத்தின் ஒரு அங்கமாக இச்சான்றிதழ் வழங்கல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இலங்கையின் திறந்த பல்கலைக்கழகத்துடன் இணைந்து சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் நாடு தழுவிய ரீதியில் இக்கற்கை நெறியை அறிமுகப்படுத்தவுள்ளது. உலகில் அதிகரித்து வரும் இந்தி மொழிப் பாவனையைக் கருத்தில் கொண்டு இலங்கையின் அனைத்து பகுதிகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் இந்தி மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும். உத்தியோக பூர்வமாக இக்கற்கை நெறி நேற்று (ஜனவரி 11) இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை உயர்கல்விக்கான அமைச்சர் டாக்டர் மதுரா செனிவிரத்ன, பல்கலைக்கழக மானிய ஆணையத் தலைவர் பேரா. கபில செனிவிரத்ன மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. பி.எம்.சீ. திலகரத்ன ஆகியோர் இவ்வாரம்ப விழாவில் கலந்துகொண்டிருந்தனர். இவ்விழாவில் பேசிய டாக்டர் மதுரா செனிவிரத்ன இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையேயான தகவற் பாலமாக இந்தி மொழியே இருக்குமெனவும் இந்திய இசையும் சினிமாவும் உலகில் இந்தி மொழியைப் பிரபலமாக்கி வருகின்றன எனவும் தெரிவித்தார். இந்தியா, இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட அறிஞர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் இக்கற்கைத் திட்டத்தில் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்கள். 25 சிறப்புப் பேச்சாளர்கள் பங்குபற்றிய மூன்று முழுநேர அமர்வுகள், இந்தி மொழியின் கலாச்சாரச் சிறப்பைக் கொண்டாடும் வகையிலான கவிதை வாசிப்பு, இருநாடுகளுக்குமிடையிலான பாரம்பரியப் பொதுமையை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் தற்காலக் கல்வியில் இந்தி மொழியின் பங்கு பற்றிய திறந்த உரையாடல் ஆகிய நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றிருந்தன. நிகழ்வின் முடிவில் பொலிவூட் திரைப்படமான இங்லிஷ் விங்லிஷ் திரையிடப்பட்டது. இலங்கையில் தற்போது 88 பாடசாலைகளிலும், 9 அரச பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்பட்டு வருகிறது. https://marumoli.com/இலங்கையில்-இந்தி-முதலாவ/
  12. சட்டத்தரணிகள் பலர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். இவர்கள் பதவி விலகியா பாராளுமன்றம் வந்தார்கள்?
  13. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
  14. பல வருடங்களாக எந்த வித ஆதரவும் இல்லாமல் சிறிலங்காவுக்கு தங்களை திருப்பி அனுப்ப கேட்டவர்களையே அனுப்பவில்லை தமிழ்நாடு அரசு. இதற்குள் எமது அரசியல் வியாதிகளின் செல்பிக்கு மட்டும் குறைவு இல்லை.
  15. ஆட்சிக்கு வந்த பின் வாகன இறக்குமதி நிறுத்தப்படும் என்றல்லவா சொன்னார்கள்??
  16. அரசுயல் கைதிகளும் உள்ளார்கள். என்ன கதை விடுகிறார் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார.
  17. சிங்களவர் நினைத்ததை தமிழர்கள் செய்கிறார்கள்.
  18. ஜி கே வெங்கடேசின் இசையில் மெளனமல்ல மயக்கம்
  19. மேலும் பல கமலினிகளை தமிழ்நாடு உருவாக்க வேண்டும்.
  20. சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
  21. ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைக்க வேண்டும் என சிறியர் தொடங்கி இருக்க மாட்டாரோ??🙂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.