Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. N.Korea leader Kim Jong Un congratulates Putin on re-election By Cynthia Kim March 18, 20247:40 AM EDTUpdated a day ago Russia's President Vladimir Putin and North Korea's leader Kim Jong Un attend a meeting at the Vostochny ?osmodrome in the far eastern Amur region, Russia, September 13, 2023 in this image released by North Korea's Korean Central News Agency. KCNA via REUTERS/File Photo Purchase Licensing Rights, opens new tab SEOUL, March 18 (Reuters) - North Korean leader Kim Jong Un on Monday congratulated Russian President Vladimir Putin for his re-election, saying Pyongyang would work together with him to further develop bilateral relations. "I will firmly join hands with you as we meet the demands of the times to provide a new turning point for the Russian-DPRK (North Korea) friendship that has long historical roots and traditions, and push forward to build a strong nation," KCNA reported Kim as congratulatory remarks sent to Putin. Putin won a record post-Soviet landslide in Russia's election on Sunday, cementing his already tight grip on power in a victory he said showed Moscow had been right to stand up to the West and send its troops into Ukraine. Both Kim and Chinese President Xi Jinping congratulated Putin on Monday, as both Pyongyang and Beijing have strengthened ties with Russia since the start in 2022 of its full-scale war with Ukraine. The United States has accused North Korea of supplying Russia with artillery shells and missiles used in Ukraine. Moscow and Pyongyang deny the accusations and pledged last year to deepen military relations. https://www.reuters.com/world/europe/nkorea-leader-kim-jong-un-congratulates-putin-re-election-2024-03-18/#:~:text=SEOUL%2C March 18 (Reuters),to further develop bilateral relations.
  2. நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
  3. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
  4. விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது . கணவன் மட்டும் எழுந்து போனான் . கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார். “சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார். கணவனோ “முடியவே முடியாது, ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டு கதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான் . “யாரது?” என்று மனைவி கேட்டாள் . “எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்” “நீங்க உதவி செஞ்சீங்களா?” “இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?” “3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்” என்றாள் மனைவி. கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான். இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான். “ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?” “ஆமா சார்” “ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?” “ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்” “எங்கே இருக்கீங்க? “இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க....” அட நன்னாரிப் பயலே.... Ha ha ha
  5. தொடருங்கள் சுமே. உங்களுடன் பிரச்சனையும் கூட வருவது எங்களுக்கு சுவாரசியமாக இருக்கிறது. ( சும்மா பகிடிக்கு)😝
  6. ஸ்ராலின் பங்கருக்குள் இருப்பதாக உணர்கிறேன்.🤣 மோதி , ஸ்ராலினுடன் நேரடியாக இப்படி மோதுவது மோதியின் பலவீனத்தை காட்டுகிறது.
  7. 13000 சிறுவர்களின் பெயர்களை அல்ஜசீரா தனது தொலைக்காட்சியின் பின்புலத்தில் ஓட விட்டுள்ளது.
  8. உண்மையான நாடகம் கார்த்திகையில் வரவுள்ளது. Stay tuned.🙂
  9. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தில் நெருக்கடி! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் தொடர்பில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை பெற விருப்பம் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றிக்கொண்டுள்ளார். கடந்த சில நாட்களாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய கூட்டணி தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டமும் அண்மையில் கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், இந்த நெருக்கடி நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறாயினும், புதிய கூட்டணியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அந்த கலந்துரையாடலில் மீண்டும் ஒருமுறை முன்னாள் ஜனாதிபதியுடன் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, சுயேச்சைகள் என பலர் இணைந்து கூட்டணியில் செயல்படுவதால், தங்கள் கருத்து, நிலைப்பாடு குறித்து கூட்டணியில் செயல்படுவது குறித்தும் விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. https://tamil.adaderana.lk/news.php?nid=185298
  10. இன்று வரை எமக்குரிய நண்பர்களையும் பலஸ்தீனியர்களின் நண்பர்களையும் (நாடுகளையும்) கணக்கில் எடுங்கள். யார் எங்கு பிழை விட்டோம் என புரியும்.
  11. வெடுக்குநாறி மலையை இனி விடமாட்டார்கள்!
  12. நாங்கள் யாரையும் நண்பராக்காமல் குய்யோ முறையோ என்பதில் பலனில்லை. சிங்களம் தமிழர்கள்(புலிகள்) முஸ்லிம்களை தமது இடத்தை விட்டு கலைத்து விட்டார்கள் என்று கூறி முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற்றார்கள் என்பதை நீங்கள் அறியாது அல்ல.
  13. புரட்சி சிங்கங்கள் கியூபாவும் எமக்கு எதிராக ஐ நாவில் வாக்களித்த்தார்கள். யாரின் குற்றம் அது??
  14. இன்று ஒடிசாவில் இறந்த இராணுவத்தினர் #Ukraine - Détails sur la frappe Iskander sur Odessa -3/4- Encadrants étrangers (OTAN) éliminés identifiés : Klaus Fischer, Jurgen Schmidt, Kevin Miller, Philippe Leblanc, Stefan Dragomirescu Translate post 9:46 AM · Mar 16, 2024 · Jacques Frère @JacquesFrre2 · 11h #Ukraine - Détails sur la frappe Iskander sur Odessa -4/4- Au total, plus de 45 à 50 étrangers et militaires ont été tués par la frappe, tandis que le nombre de blessés dépasse les 100 personnes (et non pas 550 comme évalué précédemment)
  15. வேதனையான கருத்துக்கள். எம்மவர்கள் (சிலர்) திருந்தப்போவதில்லை. தொடர்ந்து உங்கள் காணொளிகளை பதியுங்கள், பவனீசன்.
  16. Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்
  17. “என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” எஸ். தில்லைநாதன் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக் கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று காலை கரையொதுங்கியுள்ளது. “பரமேஸ்வரி - என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/எனன-நமமதயக-பக-வடஙகள-சகதரரகள/73-334760
  18. புதிய கூட்டணிக்கு கைச்சாத்து ஆ.ரமேஸ். ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையை கொழும்பில் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கான நிகழ்வு கொழும்பு பம்பலப்பிட்டி லூரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலையங்கத்தில் (15.03.2024) இடம்பெற்றதாக ஐக்கிய சுதந்திர கட்சி பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார். இதன்போது இடம்பெற்ற கைச்சாத்து நிகழ்வில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் கங்காதரன் சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டனர். அதேபோல ஐக்கிய சுதந்திர கட்சி தலைவர் சோம் கோச் மற்றும் கட்சியின் பொது செயலாளர் சவேரியார் ஜேசுதாஸ் உள்ளிட்ட தேசிய சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு புதிய கூட்டணிக்கான உடன்படிக்கையை கைச்சாத்திட்டதாக சவேரியார் ஜேசுதாஸ் மேலும் தெரிவித்தார். இது இவ்வாறிருக்க நுவரெலியா மாவட்டம் ஹட்டன் பிரதேசத்தை தலமையகமாக கொண்டு செயற்படும் ஐக்கிய சுதந்திர கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்து திசை காட்டி சின்னத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/மலையகம்/பதய-கடடணகக-கசசதத/76-334751
  19. கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் : மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் ! NO COMMENTS பௌத்தமதகுரு ஒருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கடுமையா சாடியுள்ளார். மகிந்த ராஜபக்ச முன்னிலையில் உரையாற்றிய முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் மிகப்பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்தார் என குறிப்பிட்டுள்ளார். கோட்டபயவிடம் நிர்வாகத் திறமையிருக்கவில்லை தனக்கு யாரால் நன்மை கிடைக்கும் என கருதினாரோ அவர்களையே கோட்டபய தன்னை சுற்றிவைத்திருந்தார் எனவும் பௌத்மதகுரு தெரிவித்துள்ளார். கோட்டாபய தவறான பாதையில் செல்கின்றார் என நாங்கள் பல தடவை அவரிடம் தெரிவித்தோம் அதற்காரணமாகவே அவர் வீழ்ச்சியடைந்தார் நாங்கள் இன்று எதிர்கொள்ளும் நிலைமைக்கு அவரின் நிர்வாகத்திறன் இன்மையே காரணம் எனவும் பௌத்தமதகுரு தெரிவித்துள்ளார். https://www.battinews.com/2024/03/blog-post_387.html
  20. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!! 18- வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளிடம் பேசிய, தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுவதாக தெரிவித்தார். ஒரே கட்டமாக 22 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ளது என்றும் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் நடத்தப்படவுள்ளது என்றும் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவுகள், ஆந்திரா, சண்டிகர், தாதா நாகர் மற்றும் ஹவேலி, கோவா, டெல்லி, குஜராத், இமாசல பிரதேசம், அரியானா, கேரளா, லட்சத்தீவு, லடாக், மிசோரம், மேகாலயா, நாகலாந்து, புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, பஞ்சாப், தெலங்கானா, உத்தரகாண்ட் ஆகிய 22 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார் கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுரா, மணிப்பூரில் 2 கட்டங்களாகவும், சட்டீஸ்கர், அசாமில் 3 கட்டங்களாகவும், ஒடிசா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட்டில் 4 கட்டங்களாகவும், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அவர் கூறினார். https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/how-many-phases-of-election-in-which-states-here-is-the-full-details-124031600060_1.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.