Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் திகதி மரணம் அடைந்தார். அவர் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும் சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாலை என பெயரிடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த நிலையில், எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை கவுரவிக்கும் விதமாக அவரது பெயர் சூட்டப்பட்ட சாலை அறிவிப்பு பலகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதில், “எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை ” எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=311916
  2. வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த ஜப்பான் நிதியுதவி 12 Feb, 2025 | 11:39 AM பெப்ரவரி 11 ஆம் திகதி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா வடக்கு மாகாணத்திற்கான தனது முதல் பயணத்தின் போது, Humanitarian Development Organization (HDO) மற்றும் Nuffield School for Deaf and Blind ஆகிய இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் முன்னிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் மருத்துவ மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் இந்த திட்டங்களுக்காக 173,659 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூபா 50 மில்லியன்) ஒதுக்கியுள்ளது. மோதல்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளில், குறிப்பாக பாதிப்புகளைத் தணிப்பதை ஊக்குவிப்பதை முன்னுரிமையாகக் கொண்டுள்ளது. பளை பிரதேச வைத்தியசாலையில் புதிய உள்நோயாளர் பிரிவொன்றை நிர்மாணிப்பதன் மூலம் கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார சேவையை மேம்படுத்தும் முகமாக "பளை பிரதேச வைத்தியசாலைக்கான மருத்துவ வாட்டை நிர்மாணிக்கும் கருத்திட்டம்" HDO அலுவலகத்தால் முன்னெடுக்கபடவுள்ளது. மீள்குடியேற்றப்பட்ட 14,927 மேற்பட்டோருக்கு சேவையாற்றும் இந்த வைத்தியசாலையானது தற்போது கடுமையான கூட்ட நெரிசல் மற்றும் போதிய சுகாதார வசதிகள் இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. "வட மாகாணத்தில் செவிபுலனற்றொர் மற்றும் பார்வையற்றோருக்கான நஃபீல்ட் பாடசாலையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டம்" சிறுவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை முழுவதிலுமிருந்து செவிபுலனற்ற மற்றும் பார்வையற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கும் ஒரே தமிழ் மொழி நிறுவனமாக நஃபீல்ட் பாடசாலை திகழ்கின்றது. இந்த திட்டம் பாடசாலையில் மின்சார விநியோகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் விடுதி வசதிகளை மேம்படுத்த உதவும். இலங்கையில், குறிப்பாக வட மாகாணத்தில், பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் உறுதிப்பாட்டை தூதுவர் இசோமாட்டா மீண்டும் உறுதிப்படுத்தினார். https://www.virakesari.lk/article/206473
  3. டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கு ஹமாஸ் பதிலடி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டல் பேச்சுகளைத் தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் மதிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீனிய பணயக்கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலிற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இவ்வாறு குறித்த காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படவில்லை எனில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்து விடுதாக அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார். காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்த நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் கூறினார். அவருடைய இந்த கருத்துக்கு ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி அளித்துள்ள பதிலில், மிரட்டல் விடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறியுள்ளார். ட்ரம்பின் கருத்துகள், போர் முடிவுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளைக் கடினம் ஆக்குவதற்கு வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் என ஒன்று உள்ளதாகவும் அதற்கு இரு தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் ஹமாஸ் அமைப்பின் மூத்த செய்தி தொடர்பாளர் சமி அபு ஜூரி வலியுறுத்தியுள்ளார். https://www.hirunews.lk/tamil/396584/டொனால்ட்-ட்ரம்பின்-கருத்துக்கு-ஹமாஸ்-பதிலடி
  4. அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம் Editorial / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 09:39 யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலம்புரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எம்.பி.க்கும் இரண்டு நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அர்ச்சுனா-எம்-பி-தாக்கியதில்-இருவருக்கு-காயம்/150-351776
  5. கடவுச்சீட்டு வரிசைக்கு ஏப்ரல் மாதத்தில் முடிவு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை குடிமக்களுக்கு நிலவும் கடுமையான கடவுச்சீட்டு பற்றாக்குறைக்கு முந்தைய ஆட்சிகளின் தவறான நிர்வாகமே காரணம் என்றும் கூறியுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்கிழமை(11) டெய்லி மிரருக்கு அளித்த செவ்வியிலேயே இத் தகவலை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, கடவுச்சீட்டு வரிசைகள் ஒரு மாதத்திற்குள் அனைத்து வரிசைகளும் அழிக்கப்படும். அடுத்த வாரத்திற்குள் 24 மணி நேர சேவை தொடங்கப்படுவதால், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரவும் பகலும் உழைக்க உறுதிபூண்டுள்ளனர். கடவுச்சீட்டு வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் உள்ள அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். தகுதிவாய்ந்த அதிகாரியாக இருப்பதால், நாங்கள் அவ்வாறு செய்ய உறுதியளிப்போம். இருப்பினும், இந்தப் பிரச்சினை கடந்த கால அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது. மீதமுள்ள ஊழியர்களை மட்டுமே கொண்டு 24 மணி நேர சேவையை வழங்குவது மிகவும் கடினமான பணி என்று கூறிய அந்த அதிகாரி, பல நாட்கள் வரிசையில் காத்திருப்பதன் மூலம் பொதுமக்கள் அனுபவிக்கும் சிரமங்களுக்கு இது பொருந்தாது என்றார். (S.R) https://www.tamilmirror.lk/செய்திகள்/கடவுச்சீட்டு-வரிசைக்கு-ஏப்ரல்-மாதத்தில்-முடிவு/175-351787
  6. கோப்பாய் காவற்துறை பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்! adminFebruary 12, 2025 கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார். தமிழ் மொழி பேச கூடியவராக இருந்தமையால் கோப்பாய் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இவரை இலகுவில் அணுக கூடியவாறு இருந்தமையால், காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தன. இந்நிலையில், பொறுப்பதிகாரிக்கு, பதுளைக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி பேசக்கூடிய காவற்துறை அதிகாரிகள் கடமையாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வரும் நிலையில் , தமிழ் மொழி பேசக்கூடிய பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/211226/
  7. தையிட்டியில் இரண்டாவது நாளாகவும தொடரும் போராட்டம்!! யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி தையிட்டியில் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் காணிகளைப் பூர்வீக உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தையிட்டியில் நேற்று மாலை 4 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் இந்த போராட்டம் இன்று மாலை 6 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளாதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, இன்றைய தினம் இடம்பெறுகின்ற போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://www.samakalam.com/தையிட்டியில்-இரண்டாவது-ந/
  8. அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (11) இரவு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு இராமநாதன் அர்ச்சுனா சென்று அங்கு காணொளி பதிவில் ஈடுபட்டார். இதன் போது அங்கு நின்ற நபர் தன்னை காணொளி பதிவு செய்ய வேண்டாம் என அர்ச்சுனாவிடம் தெரிவித்திருந்தார். இதன்போது அர்ச்சனா அதனை மீறி காணொளி பதிவில் ஈடுபட்டார். இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதன்போது அர்ச்சுனா பீங்கான் ஒன்றினை எடுத்து குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அர்ச்சனா, குறித்த நபர் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.samakalam.com/அர்ச்சுனா-எம்-பி-யின்-தாக/
  9. 26) ஆவது கேள்விக்கு வேறு வீரரின் பெயரைத் தந்ருங்கள் 30) ஆவது கேள்விக்கு வேறு வீரரின் பெயரைத் தாருங்கள்
  10. கஜேந்திரகுமாருக்கு நீதிமன்று அழைப்பாணை adminFebruary 11, 2025 விகாரையை இடிக்க வாரீர்’ என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவொன்று தொடர்பில் விசாரணைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிக்கையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களின் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றி மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். இதன் பின்னர் – ‘விகாரையை இடிக்க வாரீர்’ என்று நான் அழைப்பு விடுத்தது போன்ற விளம்பரம் வடிவமைக்கப்பட்டு போலியான விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ்விடயத்தை அறிந்த உடனேயே எனது உத்தியோக பூர்வ முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தினூடாக, குறித்த செய்தி போலியானது என பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பிலும் போலி விளம்பரம் குறித்தும் எனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தேன். குறித்த விடயத்தை மறுத்து எனது தெளிவுபடுத்தல்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும், பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 14 ம் திகதிக்கு அழைப்புக்கட்டளை எனக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/211170/
  11. இன்னும் 5 நாட்களே உள்ளன. போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்த/ஆர்வம் உள்ள பலரை இந்தத் திரிப்பக்கம் காணவில்லை.. உங்கள் பதில்களை விரைந்து தந்தால்தான் பதில்களைத் தரவேற்றி போட்டி நடத்தமுடியும். இறுதி நேரத்தில் வந்தால் எல்லாம் பிந்தித்தான் நடக்கும்😀 @Eppothum Thamizhan @goshan_che @nunavilan @குமாரசாமி @ரசோதரன் @நந்தன் @பிரபா @நிலாமதி @சுவைப்பிரியன் @Ahasthiyan, @கந்தப்பு, @தமிழ் சிறி, @vasee, @வாதவூரான், @வாத்தியார், @kalyani, @புலவர், @theeya @கறுப்பி @P.S.பிரபா @முதல்வன் @நீர்வேலியான் @ரதி
  12. பெரியார் வேண்டும் என்றால் கட்சியிலிருந்து வெளியேறலாம் : சீமான் ஆவேசம்! 10 Feb 2025, 10:20 PM பெரியாரை ஏற்றுக் கொள்ளக் கூடிய தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம் என சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 10) செய்தியாளர்களை சந்தித்தார். 2026ல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்! அப்போது அவர், ”ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு இயந்திரம் முழுமையாக திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இருந்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகையை தக்க வைக்க இன்னும் 1,000 வாக்குகள் தேவை.. அவ்வளவுதான். ஈரோடு கிழக்குத் தேர்தலை பொறுத்தவரை கட்சியின் அமைப்பை விரிவாக்கும் பணியாகத் தான் பார்க்கிறோம். 2026ல் நாங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். நான் வளர அதிமுக, பாஜக விரும்புமா? தேர்தலில் 15 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பெற்ற வாக்கு திமுக வாக்கு என்றும், நாம் தமிழர் வென்ற வாக்கு அதிமுக, பாஜகவுக்கு உடையது என்று கூறுவது கேவலமான சிந்தனை. ஈரோடு கிழக்கு தொகுதியில் நாங்கள் பெற்றது எங்களது சொந்த வாக்கு. திமுக தனித்து நின்று வாக்குகளை பெறவும் முடியாது; பணம் கொடுக்காமல் வாக்குகளைப் பெறவும் முடியாது. அதிமுக, பாஜக எதற்காக எனக்கு வாக்குகளை போட வேண்டும்? அவர்கள் நான் வளர வேண்டும் என விரும்புவார்களா? அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நிற்கிற எனக்கு எப்படி அவர்களது வாக்குகள் கிடைக்கும்? நான் சண்டைக்கு போனால் தனியாக தான் போவேன். நான்கு பேருடன் போக நான் ஒன்றும் நரியல்ல. என்னுடைய கோட்பாடு இந்திய மற்றும் திராவிட கட்சிகளுக்கு எதிரானது. என்னால் முடியவில்லை எனில் எனக்குப் பின்னால் வரும் பிள்ளைகள் வெல்வார்கள். உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன்! நான் பெரியாருக்கு எதிராக இப்போது தான் பேச தொடங்கியிருக்கிறேன். நான் திராவிடத்தில் இருந்து வந்தவன். இப்போது விழிப்புணர்வு, தெளிவு பெற்றதால் எதிர்க்கிறேன். ஏனெனில் அவர்கள் கொள்கைக்கானவர்கள் அல்ல; நம்மை கொள்ளையடிக்க வந்தவர்கள். பெரியாரை படித்துவிட்டு பேசுகிறேன்.. என் கேள்விக்குதான் பதில் சொல்ல வேண்டும். தாய்மொழியை இழித்து பேசியவரை எப்படி தலைவனாக ஏற்க முடியும்? தேர்தல் ஆணைய நடவடிக்கை குறித்து கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உள்ளது. மத்திய அரசு வரி கொடுக்கவில்லை என்ற புலம்பவா 40 பேரை அனுப்பி வைத்தோம்? ஆங்கிலேயர் ஆட்சியில்தான் வரிகொடா இயக்கம் நடத்த முடியுமா? இந்தியாவில் அதிக வரி செலுத்தும் மாநிலம் தமிழ்நாடு.. அப்படி இருக்கும்போது, நாம் தமிழர் கட்சி ஆட்சியில் இருந்தால் வரிகொடா இயக்கம் நடத்துவோம். தமிழ்நாடு என்று வேறு எந்த மாநில முதலமைச்சரும் இதுபோன்று புலம்பவில்லை. பெரியாருக்கு வெறும் 222 ஓட்டு தான் கிடைத்தது. எங்கு இருந்தோ வந்த பெரியார் என்பது எங்களுக்கு தேவை இல்லை. பிரபாகரன் பெரியாரை பத்தி பேசவே இல்லை. பிரபாகரன் சாக வேண்டும் என்று நினைத்தது திராவிடம். உலகமே கொண்டாடினாலும் நான் எதிர்ப்பேன். என்னைப் பின்பற்றுகிறவர்கள், பெரியார் வேண்டும் என்றால் என்னைவிட்டு வெளியேறிப் போய்விடலாம்” இவ்வாறு சீமான் பேசினார். https://minnambalam.com/political-news/seeman-again-angry-on-periyar/
  13. இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி! இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரான நாள் முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதுவும் குறிப்பாக வரி விதிப்புகள் மூலம் அவர் புதிய வர்த்தகப் போரை உலக நாடுகள் மீது கட்டவிழ்த்துள்ளார் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. மேலும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளின் எதிரொலியாக உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. முன்னதாக மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனா பொருள்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மெக்சிகோவும் கனடாவும் கடைசி நேரத்தில் புலம்பெயர்வு மற்றும் ஃபெண்டனில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை இந்த நடவடிக்கைத் தொடரும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் கனடாவும், மெக்சிகோவும் கடைசிநேரத்தில் ட்ரம்ப் கோரிய நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் அளித்த நிலையில் வரி விதிப்புக்கு ஒரு மாத காலம் தற்காலிக தடை விதித்தார். இந்த நிலையில் உலக பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய இந்த அறிவிப்பை டிரம்;ப் வெளியிட்டுள்ளார். https://akkinikkunchu.com/?p=311792
  14. தோழர் அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா?; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் கட்டப்பட்ட புத்த கோயிலை இடிக்க முடியாது என்று அண்மையில் அனுர தெரிவித்துள்ள கருத்துக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் பகுதிகளில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கல் திட்டங்களை நிறுத்தும்படியும் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சிங்கள மக்களோ பௌத்த மக்களோ வாழாத இடங்களில் இலங்கை அரசாங்கமும் பௌத்த பிக்குகளும் இராணுவத்தினரை முன்னிறுத்தி புதிய பௌத்த ஆலயங்களைக் கட்டத்தொடங்கினர். வடக்கு-கிழக்கு மாகாணங்களை சிங்கள பௌத்த மயமாக்குதலே அதனுடைய பாரிய நோக்கமாக இருந்தது. அந்த வகையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறுபட்ட இடங்களில் புத்த கோயில்கள் உருவாக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் நாவற்குழி, மன்னாரில் திருக்கேதீஸ்வரம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இத்தகைய புதிய பௌத்த ஆலயங்கள் உருவாக்கப்பட்டன. இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் புதிய புதிய பௌத்த ஆலயங்கள் இன்றும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது. வடக்கு-கிழக்கு என்பது தமிழ் மக்களின் தாயகம் என்பதை இல்லாமற் செய்வதற்கும் இந்த சிங்கள பௌத்தமயமாக்கல் என்பது அரசிற்குத் தேவையாக இருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் பலாலி தையிட்டியிலும் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை பலாத்காரமாகக் கையகப்படுத்தி அங்கு ஒரு பாரிய புத்த கோயிலை நிறுவியிருக்கின்றனர். இந்த புத்த கோயில் கட்ட ஆரம்பிக்கின்றபொழுது யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுவானது தனியார் காணிகளை பலாத்காரமாகக் கையகப்படுத்தியது சட்டவிரோதமானது என்றும் எந்தவிதமான அனுமதிகளும் பெற்றுக்கொள்ளப்படாமல் புத்த கோயில் கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அந்த செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஆரம்பத்திலேயே வலியுறுத்தியிருந்த போதிலும்கூட அது எந்த விதத்திலும் கவனத்தில் எடுக்கப்படாமல் இப்பொழுது அந்த புத்தகோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது புதிதாகப் பதவியேற்றுள்ள இடதுசாரி அரசாங்கமானது சாதி, மத, இன பேதங்களற்ற சமத்துவமான இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென பேசி வருகின்றது. ஆனால் வடக்கு-கிழக்கில் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டு வரும் பௌத்த ஆலயங்கள் தொடர்பாக இன்னும் வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகின்றது. யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் இருந்த பல்வேறுபட்ட சைவ கிறித்தவ ஆலயங்கள் எந்தவிதக் கேட்டுக்கேள்வியும் இல்லாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. இதே போன்று தென் பகுதியிலும்கூட பள்ளிவாசல்களும் சைவக் கோயில்களும் இடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுது தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோதமான ஒரு பௌத்த ஆலயம் எக்காரணம் கொண்டும் இடிக்கப்படமாட்டாது என்று அனுரகுமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான இடதுசாரி அரசாங்கமும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றது. இது சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் ஏனைய மக்களுக்கு ஒரு சட்டம் என்பதைத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றது. சாதி, மத, மொழி, இன பேதமற்ற ஓர் இலங்கையை உருவாக்க வேண்டுமென இப்பொழுது உள்ள புதிய அரசாங்கம் உண்மையிலேயே விரும்புமாக இருந்தால், வடக்கு-கிழக்கு எங்கும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து பௌத்த ஆலயங்களின் கட்டுமானப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். சிங்கள மக்களோ பௌத்தர்களோ இல்லாத இடங்களில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பௌத்த ஆலயங்கள் தொடர்பாக அரசாங்கம் தெளிவான முடிவிற்கு வரவேண்டும். தன்னை ஓர் இனவாதியோ மதவாதியோ அல்ல என்று காட்ட முயற்சிக்கும் அனுர அரசாங்கமானது நடைமுறையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் முன்னிலைப்படுத்துவதை முழுமையாக உடனடியாகக் கைவிட வேண்டும். தையிட்டி புத்த கோயில் நிர்மாணம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. ஆகவே இவற்றிற்கெதிரான கடுமையான கண்டனத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பதிவு செய்வதுடன் இதற்காக மக்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவளிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அனுர அரசாங்கம் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் சிலரை தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவுசெய்திருக்கின்றார்கள். ஆகவே அந்தப் பிரதிநிதிகள் தமது மக்கள் நலன்சார்ந்து அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு எதிராக குரல்கொடுக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://akkinikkunchu.com/?p=311788
  15. 'தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும்,அவ்வளவுதான்." மக்கள் போரட்ட முன்னணி Published By: Rajeeban 11 Feb, 2025 | 11:04 AM தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் போராட்ட முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் ராஜ்குமார் ரஜீவ்காந் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது வடக்குகிழக்கு பகுதிகளிலே தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகள் பல்வேறு தடவைகளில் இடம்பெற்றுள்ளன. நாங்களும் அதற்கான எதிர்ப்புகளை தொடர்ச்சியாக பதிவு செய்துகொண்டுவருகின்றோம். இன்று தையிட்டி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் சில விடயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். குறிப்பாக தையிட்டி என்ற பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக ஒரு விகாரையை கட்டிமுடித்திருக்கின்றார்கள். இராணுவத்தின் உதவியுடன்,இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக இந்த விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பௌத்த சம்மேளனம் கிட்டத்தட்ட 14 ஏக்கர் தனக்கு சொந்தமானது என எந்த வித பொறுப்பும் இல்லாமல், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையின் சட்டத்தின்படி ஒருவருடைய இடத்திற்கு சென்று,நீங்கள் ஒரு கட்டிடத்தை கட்டினால் அந்த இடம் அகற்றப்பட்டு அதன் உரிமையாளருக்கு கையளிக்கப்படவேண்டும். இந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது,இந்த சட்டம் குறிப்பிட்டஒரு பிரிவினருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு மதத்திற்கு மாத்திரம் உரியதல்ல. இந்த சட்டம் பௌத்தபேரினவாதத்திற்கு மாத்திரம் விதிவிலக்கானது என எங்கும் குறிப்பிடப்படவில்லை. எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக உள்ளவர்கள்,அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தங்களிற்கு தேவையானது போல சட்டத்தை வளைத்துக்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இந்த நாட்டில் நடைபெறுகின்றன. தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும்,அவ்வளவுதான். ஏனென்றால் அந்த மக்கள் வேறு ஒரு இடத்திலே தங்களிற்கு தேவையான காணியை பெறுவதற்கு தயாராகயில்லை. குறிப்பாக ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டத்தில்,இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது ஜனாதிபதி எந்த பதிலையும் வழங்கவில்லை ஆனால் ஆளுநர் இடையில் குறுக்கிட்டு,நாங்கள் அவர்களிடம் பேசிவிட்டோம் , அவர்களிற்கு வேறு காணிகளை வழங்குவோம், உரிமையாளர்கள் வேறு காணிகளை பெற்றுக்கொள்ள தயார் என்ற ரீதியில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். இந்த கருத்திற்கு எதிர்ப்பை தெரிவித்த காணி உரிமையாளர்கள் தாங்கள் வேறு காணிகளை பெறதயாரில்லை என தெரிவித்திருந்தனர். சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட் நிலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு வடக்கு ஆளுநர் எந்த அடிப்படையில் ஆதரவை வழங்குவார்? என்ற கேள்வி எமக்குள்ளது. ஆளுநரின் வீட்டிற்கு சென்று நாளை யாராவது அவரது வளவிற்குள் விகாரையை அமைத்துவிட்டு வேறு காணிகளை வழங்கினால் அவர் அதனை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்கின்றோம். ஏனென்றால் நாளை இந்த விடயத்தை உதாரணம் காட்டி வேறு ஒருவர் எந்த இடத்திலும் காணிகளை அபகரித்து தங்களிற்கு தேவையான காணிகளை கட்டிக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் இந்த விடயம் அமைந்துள்ளது. இந்த அபகரிப்பிற்கும் சட்டவிரோதத்திற்கும் யாராவது ஒருவர் ஆதரவுவழங்குவாராகயிருந்தால்,இந்த நாட்டின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறிக்கு உள்ளாகும். ஏனென்றால் இது இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. https://www.virakesari.lk/article/206380
  16. பணயக் கைதிகளை விடுவிக்கக் காலக்கெடு விதித்த ட்ரம்ப் - இல்லையேல் போர் நிறுத்த ஒப்பந்தம் இரத்து? காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலிற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளார். காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் இதனை ஏற்கவில்லை என்றால், அந்த நாடுகளுக்கான உதவியை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். https://www.hirunews.lk/tamil/396460/பணயக்-கைதிகளை-விடுவிக்கக்-காலக்கெடு-விதித்த-ட்ரம்ப்-இல்லையேல்-போர்-நிறுத்த-ஒப்பந்தம்-இரத்து
  17. ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் February 11, 2025 09:31 am கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது அவ் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இவ் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு இத்தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இக்குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் பங்குபற்றியதாகவும் அவர் தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=199971
  18. யோஷித, டெய்சி ஆச்சி மீது பணச்சலவை வழக்குப் பதிவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் 'டெய்சி ஆச்சி' என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டு, பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யோஷித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் 59 மில்லியன் ரூபாய்க்கு மேல் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு அவர் மீதான விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார். பணம் எவ்வாறு வைப்பிலிடப்பட்டது என்பதற்கான நியாயமான விளக்கத்தை யோஷித வழங்கத் தவறிவிட்டார் என்று அவர் கூறினார். மேலும் விசாரணைகளில், கேள்விக்குரிய கணக்கு டெய்சி பொரெஸ்டுடன் இணைந்து நடத்தப்பட்டது தெரியவந்தது. இதன் விளைவாக, யோஷிதவுடன் டெய்சியையும் வழக்கில் சந்தேக நபராக சேர்க்குமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். டெய்சிக்கு ஏற்கனவே வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்க கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/யோஷித-டெய்சி-ஆச்சி-மீது-பணச்சலவை-வழக்குப்-பதிவு/175-351725
  19. திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று போர்! தையிட்டி விகாரைக்கு எதிராகவும், தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரியும் பொதுமக்களும், காணிகளின் உரிமையாளர்களும் இன்றும், நாளையும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தையிட்டி பகுதியில் உள்ள சுமார் 7 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி, எவ்வித அனுமதிகளும் இன்றி சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்த மக்கள் யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். பின்னர் அந்தப் பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் பிரகடனப்படுத்தியிருந்தனர். யுத்தம் நிறைவடைந்த நிலையில் மக்கள் மீள்குடியேற, இராணுவத்தினர் கட்டம் கட்டமாக அனுமதித்தனர். அவ்வேளை தற்போது விகாரை அமைந்துள்ள மற்றும் அதனை சூழவுள்ள சுமார் 14 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியேற இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்தே அங்கு சட்டவிரோதமாக விகாரை கட்டப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் சுட்டிக்காட்டிய போதிலும், பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் முடிவுக்கு மாறாகவே இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே, விகாரையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இன்றும் நாளையும் அங்கு போராட்டங்கள் நடைபெறவுள்ளன. https://newuthayan.com/article/திஸ்ஸ_விகாரைக்கு_எதிராக_இன்று_போர்!
  20. சுழற்சி முறையில் இனி நாடெங்கும் மின்வெட்டு! நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் செயலிழந்துள்ள நிலையில், அதை மீண்டும் மின்கட்டமைப்பில் இணைக்கும் வரை நாடெங்கும் பகுதியளவில் மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை, நாடெங்கும் பகுதியளவில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சாரசபை கோரிக்கை விடுத்திருந்தது. அந்தக் கோரிக்கைக்கே இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கிடையில் ஒன்றரை மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அட்டவணையொன்றும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பிரதேசங்களில் ஏ, பி, சி, டி என அடையாளப்படுத்தப்பட்டுள்ளவை ஒரு குழுவாகவும், இ, எப், ஜி, எச், யு, வி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் இன்னொரு குழுவாகவும், ஐ, ஜெ, கே, எல், பி, கியூ என அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மற்றொரு குழுவாகவும், ஆர், எஸ், ரி, டபிள்யு ஆகிய பிரதேசங்கள் வேறொரு குழுவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது குழுவில் உள்ளடங்கும் பிரதேசங்களில் மாலை 3.30க்கும் 4 மணிக்கும் இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 5 மணிக்கும் 5.30க்கும் இடையில் மீள வழங்கப்படும். இரண்டாவது குழுவில் உள்ளடங்கும் பிரதேசங்களில் மாலை 5 மணிக்கும் 5.30க்கும் இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 6.30க்கும் 7 மணிக்கும் இடையில் மீள வழங்கப்படும். மூன்றாவது குழுவில் உள்ளடங்கும் பிரதேசங்களில் 6.30க்கும் 7 மணிக்குமிடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 8 - 8.30க்கும் இடையில் மீள வழங்கப்படும். நான்காவது குழுவில் உள்ளடங்கும் பிரதேசங்களில் 8 - 8.30க்கு இடையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 9.30க்கும் 10 மணிக்குமிடையில் மீள வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/சுழற்சி_முறையில்_இனி_நாடெங்கும்_மின்வெட்டு!
  21. இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிற்குச் சென்றுள்ள ஜனாதிபதி editorenglishFebruary 11, 2025 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு இன்று (11/2/2025) ஆரம்பமாக உள்ளது. இன்று முதல் 13 ஆம் திகதி வரை டுபாயில் உலகத் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியனின் அழைப்பையேற்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று (10/2/2025) ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் புறப்படுச் சென்றார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டுபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் உரை நிகழ்த்தவுள்ளார். எதிர்கால நோக்கிலான பிரவேசங்கள், தொழில்நுட்ப புத்தாக்கம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தும் கருத்தாடலை ஏற்படுத்த உலகத் தலைவர்களை ஒரே மேடையில் அமர்த்துவதே உலகத் தலைவர்கள் மாநாட்டில் முக்கிய நோக்கமாகும். இந்த மாநாட்டில் மனித சமூகம் தற்காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்கால முன்னேற்றங்கள், புதிய வாய்ப்புகள் தொடர்பில் நாடுகளுக்கிடையில் கருத்து பரிமாறிக்கொள்ளப்படவுள்ளது. இதில் 150 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 4000 ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியன் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பும் இதன்போது நடைபெறவுள்ளதுடன், அதனூடாக இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறை சார்ந்த ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்ளவும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதி மற்றும் பிரதமர் செயிக் மொஹமட் பின் ரஷீட் அல் மக்டூமையும் சந்திக்கவுள்ளார். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வலுசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத் துறைகளில் முன்னணியில் உள்ள உலக நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பலருடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இவ் விஜயத்தில் இணைந்து கொண்டார். https://globaltamilnews.net/2025/211118/
  22. பெரியாரிய சிந்தனையாளர் பிரபு அவர்களின் முகநூலில் இருந்து.. புத்தகங்களும் சில கோழி முட்டைகளும் – நிகழ்வின் முதல் பகுதி இலண்டனில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வரும் தோழர்கள் இணைந்து, “பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள்” குறித்த ஒரு உரையாடலை கடந்த சனிக்கிழமை வெற்றிக்கரமாக நடத்தி முடித்துள்ளோம் என்பதை முதலில் பெருமையுடன் பகிர்கின்றோம். இந்த நிகழ்வு தடுத்த நிறுத்தப்பட்டதாகப் பொய்யான் பிரச்சாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் தாங்கள் இந்த நிகழ்வை தடுத்து நிறுத்தி வெற்றிக் கண்டுவிட்டதாகவே கூச்சலிடுகின்றனர். ஒரு சனநாயகமற்ற தன்மையை மேற்கோள்காட்டி அதுவே தங்களது வெற்றியென கூறும் இவர்கள் யார்? வேறு யார் சீமானின் ஆட்கள்தாம். இலண்டனில் உள்ள பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் மற்றும் தமிழ் மொழிச் செயற்பாட்டகம் அமைப்புகள் இணைந்து தமிழர் தலைவர் – தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள் – விளக்கமும் உரையாடலும் என்ற தலைப்பில் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தோம். இலங்கைச் சார்ந்த தோழர்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த தோழர்கள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சமகால அரசியல் சூழலில் பெரியாரிய சிந்தனைகள் குறித்து உரையாடுவது தங்களது கடமை என்ற நிலைப்பாட்டில் நண்பர்கள் ஒன்றுகூடினோம் என்றே சொல்ல வேண்டும். நிகழ்வில் எம். பெளசர் (பதிப்பாளர், செயற்பாட்டாளர்- இலங்கை), கல்வியாளரும் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான மலையகத்தின் பதுளைப் பகுதியைச் சேர்ந்த மு.நித்தியானந்தம் அவர்கள், நித்தியானந்தம் தோழரின் துணைவியார் மீனா அவர்கள், சிறார் எழுத்தாளர் மற்றும் பெரியாரிய சிந்தனையாளர் பிரபு அவர்கள், ராகவன் (பெரியார், அம்பேத்கர் ஈடுபாட்டாளர்- செயற்பாட்டாளர்- இலங்கை), மயூரன் (பெரியாரிய செயற்பாட்டாளர்- இலங்கை) , தோழர் வேலு(இடதுசாரி செயற்பாட்டாளர்-தமிழ்நாடு) அவர்கள், தோழர் பாரதி அவர்கள் அங்கு கூடியிருந்தோம். நிகழ்வு தொடங்கும் நேரத்தில் கும்பலாக(20-25 நபர்கள்) அந்தப் புத்தக அரங்கில் வந்து அமர்ந்துகொண்டு நக்கல் செய்யும் தொணியில் பேசிக்கொண்டிருந்தனர். அனுமதிகூட கோரமால் அங்கு தங்களது போனில் வீடியோவும் எடுத்தனர். “தமிழர் தலைவர்” என்ற தலைப்பின் மீது தங்களுக்கு விமர்சனம் இருப்பதாகவும் அதுகுறித்து உரையாட வந்துள்ளதாகவும் கூறினர். நிகழ்வின் ஏற்பாடுகளை நாங்கள் தொடர, அவர்கள் எங்களது செயல்களை கிண்டல் செய்யும் தொணியில் பேசிவந்ததை நாங்கள் ஆரம்பம் முதலே எச்சரித்துக் குறிப்பிட்டோம். நாங்கள் நடத்தும் இலக்கிய நிகழ்விற்கும் அல்லது அரசியல் சார்ந்த உரையாடல் நிகழ்விறகும் எந்த ஒரு நிகழ்விற்கும் ஒரு ஒழுங்கியல் உண்டு என்பதையும் அதனை இந்த நிகழ்விலும் நாங்கள் கடைப்பிடிப்போம் என்று அறிவித்தோம். இன்றைய நிகழ்வில் ஐந்து ஆளுமைகள் வெவ்வேறு தலைப்புகளில் பேச இருக்கின்றனர், உரைகளில் எந்த ஒரு குறிக்கீடும் இருக்க கூடாது என்றும், உரை முடிந்த பிறகு கலந்துரையாடலுக்கு நேரம் ஒதுக்கப்படும், அதில் ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு மட்டும் இடமளிப்போம் என்ற அறிவிப்போடு நிகழ்வைத் தொடங்கினோம். நிகழ்வின் தொடக்கவுரையை எம். பெளசர் (பதிப்பாளர், செயற்பாட்டாளர்- இலங்கை) அவர்கள் தொடங்கியதுமே, நிகழ்வை “அகவணக்கம்” செய்து தொடங்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். நிகழ்வின் ஏற்பாட்டளர்களான தோழர்கள் அனைவரும் “இது நாங்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்வு, இதை நாங்கள் எங்கள் வழியிலே வழிநடுத்துவோம்” என்று பதிலை கூறியபோதும். அவர்களது அகவணக்கத்தை உரக்க கூற முயறிசித்தனர். ஆனால் அதனை நாங்கள் அனுமதிக்கவில்லை. இதனிலிருந்து அவர்களது கூச்சல் தொடங்கியது. வந்தவர்கள் தங்களை சீமானின் நாம் தமிழர் ஆதரவாளர்களான ஈழ தமிழர்கள் என்றனர். இந்த நிகழ்வை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே அவர்கள் அங்கு வந்திருந்தனர். சீமானின் சமீபத்தின் பெரியாரிய அவதூற்களின் மறு ஒளிப்பரப்பு செய்யும் வேலைக்காகவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். உண்மையில் அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களின் காட்சியே அவர்களது நோக்கங்களைச் சற்று ஆட்டம் அடைய வைத்தன என்றே சொல்ல வேண்டும். அக வணக்கம் வைக்காத நீங்கள் தமிழரா? இந்ந்தப் பெரியார் தமிழரா? என்ற கூச்சலிட ஆரம்பித்தனர். தமிழராகிய எங்களுக்கு பெரியார் தலைவரே என்று நாங்கள் பேச. அவர்கள் பிறப்பின் கூறுகளை ஆராயத் தொடங்கிவிட்டனர். ஒருவரை மலையாளி என்றும், ஒருவரை தெலுங்கர் என்றும், “சரியான தமிழச்சிக்கும் தமிழனகுக்கும் பிறந்த” என்ற சீமானின் அந்த நாகரீகமற்ற பேச்சுகளை மட்டுமல்லை தூய்மைவாதம் இனவாதம் என அவர்கள் எந்தவித அடிப்படை நாகரீகமுமின்றி கத்த ஆரம்பித்தனர். அங்கிருந்த பேச்சாளர்கள் யார்? மூத்த எழுத்தாளர், மலையக மக்களுக்கு செயல்படும் மு. நித்தியானந்தம் போன்றவர்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பெரியார் வேசி என்கிறார்…நீங்கள் எல்லாம் தமிழரா என்ற ஒரே கூச்சலிட, அந்த கூட்டத்திடம் மனுதர்மம் என்று நாங்கள் நிதானமாகக் கூறியது எதுவும் அவர்கள் காதுகளுக்கு எட்டவில்லை. நமது குழிவிலிருந்த பெண் தோழர்கள் விடாது அவர்களை எதிர்த்து பேசியதையும் அவர்களால் பொறுத்துகொள்ள இயல்வில்லை. இறுதியில் பெண்கள் மீதான வசைச் சொல்லையும் நடத்தைகளுமே அவர்களிடமிருந்தது. நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்த சில பார்வையாளர்களை இந்தக் கூட்டம் உள்ளே நுழையவிடாமல் வெளியிலே நிறுத்தியுள்ளனர். நிறுத்தியவர்களிடம் முட்டைகள் இருந்ததாகவும் நண்பர்கள் எங்களுடன் பகிர்ந்தனர். நாங்கள் பலநூறு புத்தகங்களுடன் உரையாட காத்திருக்க அவர்களிடமோ சில கோழி முட்டைகளே இருந்தன என்பதே நிதர்சனம். தமிழ் மொழி மீது யார் அக்கறைக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதில் பங்குபெறுபவர்க்களின் தமிழ் பங்களிப்பு என்ன? என எதையும் இந்தக் கூட்டம் அறிந்திருக்காத போது, பெரியாரின் எழுத்துகளை இவர்கள் எங்கு அறிந்திருக்க முடியும். அங்கு நடந்த அனைத்தும் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தின் சனநாயகத்தன்மையற்ற போக்கிற்கு அவர்களது உடல்மொழியும், கூச்சலும் கூப்பாடும் சாட்சியாக இருப்பதை கண்கூடாக பார்க்கிறோம். அவர்களின் அடாவடித் தனத்தினை நமது தோழர்கள் மிகுந்த பக்குவமாகக் கையாண்டிருப்பதும் அந்த வீடியோவிலையே இருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் மனித மாண்பின் எல்லைகளை மதித்து நடந்த நமது தோழர்கள் சனநாயக முறையிலே இந்தக் கூட்டத்தைக் கையாண்டோம். இலண்டன் காவல் துறையினருக்கு தகவல் அளித்தோம். காவல் துறையினர் அங்கு வரும் காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. காவல்துறை வந்தபிறகான அவர்களது உடல்மொழி முற்றிலும் மாறியிருப்பதையும் கவனிக்க முடியும். காவல்துறையும் புத்தகங்களோடு நாங்கள் இருப்பதைப் பார்த்ததுமே கூச்சிலிடுபவர்களை விலக்கினர். அதில் சீமான் குழுவில் ஒருவர் தான் நிகழ்வு ஒருங்கிணப்பாளரின் நண்பர் என காவல்துறையிடம் கூறுவதையும் கவனிக்க முடியும். காவல்துறையினர் எங்களிடம் விசாரித்த போதும், சமூகவியல் சார்ந்து உரையாடும் வாசகர் வட்டத்தின் எங்களது உரையாடலை தொடர்ந்த நடத்தவே நாங்கள் முற்படுகிறோம் என்றதும். அவர்கள் அவர்களை வெளியே அனுப்பினர். அதன்பிறகு எங்களது நிகழ்வு திட்டமிட்டபடியே நடந்து முடிந்தது. ஆனால் சனநாயகத்தின் எந்தவித அடிப்படை மாண்பையும் அறியாத இந்தக் கூட்டத்தின் போக்கு அவர்களின் கூச்சலோ எங்களது நிகழ்வை தடுக்கவில்லை என்பதை மீண்டும் கூறிக்கொள்கிறோம். எங்கள் தலைவர்..தமிழர் தலைவர் பெரியார் குறித்து நாங்கள் மட்டுமல்லை உலகத்திலும் இன்னும் ஆயிரக்கணக்கான தோழர்கள் உரையாட வரப்போகிறார்கள் என்ற அறிவிப்போடு இந்தப் பகிர்வை நிறைவு செய்கிறேன். https://www.facebook.com/share/15qQVghJxC/?mibextid=wwXIfr
  23. மாவை சேனாதிராஜாவின் அரசியல் வாழ்வின் மூலமான படிப்பினைகள் February 9, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒரு குறுகிய கால இடைவெளியில் இரு மூத்த அரசியல் தலைவர்களை இழந்து விட்டது. இருவருக்கும் இடையில் சுமார் பத்து வயது வித்தியாசம் இருந்தபோதிலும், அவர்கள் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தை இலங்கை தமிழர்களின் ஜனநாயக ரீதியான அரசியல் உரிமைப் போராட்டத்துக்காக அர்ப்பணித்தவர்கள். இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து ஏழு மாதங்கள் நிறைவடைவதற்கு இரு நாட்கள் இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா 2025 ஜனவரி 29 ஆம் திகதி புதன்கிழமை காலமானர். அவரது இறுதிக் கிரியைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரான மாவிட்டபுரத்தில் பெருமளவு மக்களின் பங்கேற்புடன் இடம் பெற்றன. மாவை சேனாதிராஜாவையும் சம்பந்தனையும் பல்வேறு அம்சங்களில் ஒப்பீடு செய்யமுடியாது என்ற போதிலும், உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப் பகுதியில் இலங்கை தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்த பிரதான அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்களில் இருந்தவர்கள் என்ற வகையில் அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருந்தது. தமிழ் அரசியல் சமுதாயம் முன்னெப்போதையும் விட படுமோசமான முறையில் சிதறுண்டு பொறுப்புவாய்ந்த ஒரு தலைமைத்துவம் இல்லாமல் நெருக்கடியில் சிக்கியிருப்பதால் இருவரும் தங்களது இறுதி நாட்களை பெரும் வேதனையுடனேயே கழித்திருப்பார்கள் என்பதில் இன்னொரு ஒற்றுமையும் அவர்களுக்கு இடையில் இருக்கிறது. அத்தகைய ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைக்கு அவர்களே பெருமளவுக்கு பொறுப்பும் கூட. இறந்தவர்களைப் பற்றி கெடுதியாகப் பேசுவதை தவிர்ப்பது ஒரு பாரம்பரியப் பண்பாக பொதுவில் கருதப்படுகிறது. மனிதர்களாகப் பிறந்த நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். ஆனால், வாழும் காலத்தில் எமது வாழ்க்கைமுறை மற்றும் செயற்பாடுகள் மூலமாக எத்தகைய மரபை நாம் விட்டுச்செல்லப் போகிறோம் என்பதே முக்கியமானதாகும். அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, இது மேலும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தங்களைப் பின்பற்றியவர்கள் தொடர்ந்து அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள் விட்டுச் சென்றிருக்கக்கூடிய வழிகாட்டல்களையும் அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகளில் இருந்து பெறக்கூடிய படிப்பினைகளையும் விமர்சன அடிப்படையில் ஆராய்வது எதிர்காலத்துக்கான சரியான பாதையை தீர்மானிக்க உதவும் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். மாணவப் பருவத்தில் இருந்தே இலங்கை தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சேனாதிராஜா, தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் பல வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்ததுடன் கணிசமான தியாகங்களைச் செய்த ஒரு அரசியல் தலைவர். எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அப்பாபிள்ளை அமிர்தலிஙகம், எம். சிவசிதம்பரம் போன்ற முன்னைய முதுபெரும் தலைவர்களுடன் நெருக்கமாகச் செயற்பட்ட அவர் பேரினவாத மேலாதிக்கத்துக்கு எதிரான தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் அடையாளமாக நீண்ட காலமாக விளங்கிய ஒருவர். சேனாதிராஜாவை அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக அறிந்தவரான மூத்த பத்திரிகையாளரும் முக்கியமான அரசியல் ஆய்வாளருமான நண்பர் டி.பி.எஸ். ஜெயராஜ் சேனாதிராஜாவின் மறைவையடுத்து கடந்த வாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் தியாகங்கள் நிறைந்த போராட்டங்களைச் செய்த இளம் சேனாதிராஜாவை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டனம் செய்யவோ அல்லது விமர்சனம் செய்யவோ தயங்குவார்கள் என்றும் அவரிடம் பிற்காலத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத மாற்றத்துக்கு மத்தியிலும் கடந்த காலத்தை நினைவில் வைத்து அவர் மீது அவர்கள் தொடர்ந்தும் அனுதாபம் காட்டினார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். சேனாதிராஜா அவரது இறுதிக்கால அரசியல் வாழ்க்கைக்காக அல்ல, கடந்தகால தியாகங்களுக்காக மாத்திரமே நினைவு கூரப்பட வேண்டியவர் என்பதே பெரும்பாலானவர்களின் அபிப்பிராயமாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. அரசியல்வாதிகள் தங்களது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் எத்தகைய தியாகத்தைச் செய்திருந்தாலும், தலைமைத்துவப் பொறுப்புக்கு வந்த பிறகு அவர்கள் தாங்கள் தலைமை தாங்கும் இயக்கத்துக்கும் மக்களுக்கு எவ்வாறு வழிகாட்டுகிறார்கள் என்பதும் வாழும் முறையால் எவ்வாறு முன்னுதாரணமானவர்களாக விளங்குகிறார்கள் என்பதுமே அவர்களின் மரபாக வரலாற்றில் நினைவுகூரப்படும். உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு இலங்கை தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மடியில் தானாக வந்து வீழ்ந்தது. அதன் தலைவராக இருந்த சம்பந்தன் போருக்கு பின்னரான காலப் பகுதியில் தமிழ் மக்களின் வலுவான ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கூட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கு தன்னை எந்தளவுக்கு அர்ப்பணித்தார் என்பதும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு இசைவாக எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமான முறையில் முன்னெடுப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதுமே அவரின் அரசியல் மரபாக நினைவு கூரப்படும் என்று கடந்த வருடம் நடுப்பகுதியில் அவரின் மறைவுக்கு பிறகு இந்த பத்தியில் குறிப்பிட்டிருந்தோம். 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வீடு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட காரணத்தினால், நீண்டகால உறங்கு நிலையில் இருந்த தமிழரசு கட்சி புத்துயிர் பெற்றது. அதற்கு பின்னரே அந்த கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியாக தன்னை ஒப்பீட்டளவில் முனைப்புடன் மீண்டும் காட்டிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை தோன்றியது. கடந்த இருபது வருடங்களாக ஒருவருக்கு பின் ஒருவராக தமிழரசு கட்சிக்கு தலைமை தாங்கிய சம்பந்தனையும் மாவை சேனாதிராஜாவையும் தவிர, கூட்டமைப்பின் சிதைவுக்கும் தமிழரசு கட்சியின் இன்றைய பரிதாபகரமான நிலைக்கும் வேறு யாரை பொறுப்பு என்று கூறமுடியும்? தமிழரசு கட்சியைப் போன்று உள்ளக முரண்பாடுகளினால் சீரழிந்து கொண்டிருக்கும் வேறு எந்தவொரு கட்சியையும் இன்று இலங்கையில் காணமுடியாது. கடந்த வருட முற்பகுதியில் அந்த கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு பொதுச் சபையில் நடத்தப்பட்ட தேர்தலும் இதற்கு முக்கியமான காரணம். தமிழரசு கட்சியின் 75 வருடகால வரலாற்றில் முன்னர் ஒருபோதுமே தலைவரை தெரிவு செய்வதற்கு தேர்தல் நடத்தப்பட்டதில்லை. தேர்தலை நடத்தினால் கட்சியின் அணிகளுக்குள் முரண்பாடுகள் வளர்வதை தவிர்க்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்த காரணத்தினாலேயே தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர்கள் ஏகமனதாக தலைவரை தெரிவு செய்யும் பாரம்பரியத்தை கடைப்பிடித்து வந்தனர். 1970 களின் முற்பகுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு அமிர்தலிங்கத்துடன் போட்டிடுவதற்கு முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரை முயன்ற வேளையில் அவருக்கு ஆலோசனை கூறி இணங்கவைத்து செல்வநாயகம் ஏகமனதாக அமிர்தலிங்கம் தெரிவாவதற்கு வழிவகுத்தார். புதிய தலைவரை பாரம்பரியத்தின் பிரகாரம் ஏகமனதாகவே தெரிவு செய்யவேண்டும் தமிழரசு கட்சியின் நலன்களில் அக்கறை கொண்ட தரப்புகள் இடையறாது வேண்டுகோளை விடுத்த போதிலும் கூட சம்பந்தனாலேயோ அல்லது சேனாதிராஜாவினாலேயோ தேர்தலை தடுக்க முடியவில்லை. ஒரு வகையில் நோக்கினால், அந்த தேர்தல் போட்டியின் விளைவாக ஏற்படக்கூடிய சூழ்நிலையை தங்களது அரசியல் நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவதில் அவர்கள் மறைமுகமாக அக்கறை காட்டினார்கள் எனலாம். அத்துடன் அவர்கள் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டாமல் இறுதிவரை பதவிகளில் இருப்பதிலேயே நாட்டம் காட்டினார்கள். அதனால் கட்சிக்குள் அவர்கள் மீதான மதிப்பும் மரியாதையும் கூட குறைவடையத் தொடங்கியது. தங்களது அனுபவத்துக்கும் மூப்புக்கும் பொருத்தமான முறையில் நடுநிலையாக அவர்கள் செயற்படவில்லை. மாறாக முரண்பாடுகளை ஊக்குவிக்கக்கூடிய அணுகுமுறைகளையே அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்பதே உண்மையாகும. தமிழ் மக்களினதும் கட்சியினதும் நலன்களுக்கும் மேலாக சம்பந்தனும் சேனாதிராஜாவும் தங்களது அரசியல் நலன்களுக்கும் பதவி நிலைகளுக்கும் முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டார்கள். அதன் விளைவாகவே தமிழரசு கட்சி இன்று சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது. தலைவர் தேர்தல் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலானதாக அன்றி இரு அரசியல் எதிரிகளுக்கு இடையிலானதைப் போன்றே அமைந்திருந்தது. அந்த தேர்தலில் போட்டியிட்ட இருவரும் கடந்த ஒருவருட காலமாக கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறைகளும் அவற்றின் விளைவாக வடக்கில் தமிழரசு கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த சூழ்நிலைகளும் புறம்பாக ஆராயப்பட வேண்டியவை. சம்பந்தனின் மறைவுக்கு பிறகு கடந்த ஏழு மாதகாலமாக சேனாதிராஜா நடந்து கொண்ட விதம் அவரது பல தசாப்த கால அரசியல் அனுபவத்துக்கு எந்தவகையிலும் பொருத்தமானதாக அமைந்திருக்கவில்லை.. அதன் விளைவாக தமிழரசு கட்சிக்குள் தனது அந்தஸ்தை தீர்மானிப்பதில் எந்த விதமான செல்வாக்கையும் செலுத்த முடியாத பரிதாப நிலை அவருக்கு ஏற்பட்டது மாத்திரமல்ல, அவருக்கு விசுவாசமானவர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொண்டவர்கள் கூட அவரைப் பாதுகாக்க முன்வராமல் வெறும் பார்வையாளர்களாக இருந்தனர். அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் எவ்வாறு செயற்படக்கூடாது என்பதற்கு மாத்திரமல்ல, ஒரு கட்சி அதன் மூத்த தலைவரை எவ்வாறு நடத்தக்கூடாது என்பதற்கும் கூட மாவை சேனாதிராஜா ஒரு உதாரணமாகும். இது நிச்சயமாக இன்றைய மற்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக தமிழரசு கட்சி அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக அமையவேண்டும். அதை அவர்கள் உணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புவது கஷ்டம். வழமையாக அரசியல் தலைவர்களின் இறுதிச் சடங்குகள் பிளவுபட்டு நிற்கும் அவர்களின் கட்சிகளின் அணிகள் வேறுபாடுகளை மறந்து ஐக்கியப்பட்டுச் செயற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதே இயல்பாகும். ஆனால், ஒரு அரசியல் தலைவரின் இறுதிச்சடங்கு எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்பதற்கு கடந்த வாரம் மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் உதாரணமாக அமைந்து விட்டது கவலைக் குரியதாகும். தமிழரசு கட்சிக்குள் பிளவுபட்டு நிற்கும் அணிகள் எதிர்காலத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்து ஐக்கியமாக அரசியல் பயணத்தை தொடராமல் இருப்பதை உறுதிசெய்யவேணடும் என்பதில் அக்கறைகொண்ட சக்திகளே மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்குகளை பொறுப்பேற்று நடத்தினார்கள் போன்று தெரிகிறது. https://arangamnews.com/?p=11784
  24. மாவையின் இறுதிச்சடங்கில் அநாமதேய பதாகையின் பின்னணியில் பல சக்திகள் ; தமிழரசுக்கட்சியை சிதைப்பதே நோக்கம் - சி.வி.சே.சிவஞானம் Published By: Vishnu 11 Feb, 2025 | 02:28 AM மறைந்த தலைவர் மாவை.சோ.சேனதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் கட்சியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் 18பேருக்கு எதிராக அநாமதேய பதாகையை காட்சிப்படுத்தியத்தின் பின்னணியில் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் பல காணப்படுகின்றன என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், எமது கட்சியை சிதைத்து ஓரங்கட்டுவதே அந்த சக்திகளின் பிரதான நோக்கமாக இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு, அவ்விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியம் என்றும் வலியுறுத்தினார். யாழ்.நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய குடியரசு தினமான கடந்த 26ஆம் திகதி யாழ்.இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்கு செல்வதற்காக கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் எனது வீட்டிற்கு வருகை தந்திருந்தார். அன்றையதினம் நானும், அவரும் சுகயீனமுற்றிருந்த சேனாதிராஜாவை நேரில் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தோம். அப்போது அவருடைய உடல்நலன்கள் குறித்தே கலந்துரையாடினோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் அவருடன் கட்சி சார்ந்த விடயங்களையோ அரசியல்சார்ந்த விடயங்களையோ பேசியிருக்கவில்லை. மேலும், அவர் எம்முடன் அன்னியோன்யமாகவே உரையாடினார். அவரது உடல்நலக்குறைவை பொருட்படுத்தாது நாம் விடைபெற்றபோது எம்மை வழியனுப்பி வைப்பதற்காகக் கூட அவர் வரமுன்றிருந்தார். அவ்விதமான நிலைமைகள் இருக்கின்றபோது எமக்கு எதிராக விசமத்தனமான பிரசாரம் செய்யப்படுகின்றது. குறிப்பாக, சசிகலா ரவிராஜ் உள்ளிட்டவர்கள் கூட நாம், சேனாதிராஜாவுக்கு அழுத்தங்களை பிரயோகித்தோம் என்ற தொனிப்பட கருத்துக்களை ஊடகங்களில் பதிவிட்டுள்ளமையானது வருத்தமளிப்பதாக உள்ளது. இதனையடுத்து எமது கட்சியின் மத்தியகுழுவின் அங்கத்தவர்களான 18பேரின் புகைப்படங்களுடன் கூடி பதாகையொன்று சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்ற மயானத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதில் நாம் தான் சேனாதிராஜாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் என்ற அடிப்படையில் வசனங்களும் எழுதப்பட்டிருந்தது. அந்தப்பாதாகை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். அதுமட்டுமன்றி, இந்த விடயங்களுக்குப் பின்னால் கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல எமக்கு எதிரான கட்சிகளில் உள்ளவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட பல சக்திகள் உள்ளன. இந்தச் சக்திகள் தமிழரசுக்கட்சியை பிளவடையச் செய்ய வேண்டும் அல்லது அரசியல் அரங்கிலிருந்து ஒதுக்க வேண்டும் என்று செயற்படுகின்ற தரப்புக்களாகும். ஆகவே இந்த விடயங்கள் சம்பந்தமாக உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றபோது பின்னணியில் உள்ளவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள். சேனாதிராஜாவுக்கும், எனக்கும் இடையில் எவ்விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும் கிடையாது. ஆகவே அவருடைய மரணத்துக்கு என்றார். https://www.virakesari.lk/article/206361
  25. உடல் ஆரோக்கியம் குன்றியிருந்தும் யாழ்களத்தை கலகலப்பாக வைத்திருக்க @suvy ஐயா கலந்துள்ளார். நன்றி பல🙏🏽 முதல்முறை அல்வாயனும் கலந்துள்ளார். அவருக்கும் நன்றி😀 இதுவரை 5 பேர் போட்டிக்கான பதில்களைத் தந்துள்ளனர். இன்னும் 5 பேராவது விரைந்து கலந்துகொண்டால்தான் மேலேயுள்ள விதியின்படி யாழ்களப் போட்டி நடைபெறும். 😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.