Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவித்தல்! இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது வீசா விண்ணப்பங்களை கண்காணிப்பதை இயலுமாக்குவதை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல், வீசா தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் VFS கூரியர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பின்பு அமெரிக்கத் தூதரகத்தில் நேரடியாக ஆவணங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது. தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி முதல், பிரீமியம் டெலிவரி சேவைகள் மற்றும் கட்டண முறைகள் பற்றிய விபரங்களுக்காக இந்த இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பார்வையிடலாம். https://ustraveldocs.com/lk/en/nonimmigrant-visa/ http://www.samakalam.com/அமெரிக்க-விசா-விண்ணப்பதா/
  2. ”புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பு இப்போதைக்கு இல்லை” - அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அரசியலமைப்பு மறுசீரமைப்பு பணிகளை இப்போதைக்கு ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்றும், தற்போதைய நிலைமையில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்கு கொண்டுவரும் பணிக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானஙகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு மக்கள் ஆணைக்கமைய நடக்கும். இப்போதைக்கு அந்த நடவடிகையை ஆரம்பிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டரை மாதங்களே ஆகியுள்ளன. எமக்கு பொருளாதாரமே எங்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. பொருளாதார ஸ்தீரப்படுத்துவதற்கே முழு அரசாங்கமும் செயற்படுகின்றது. அதற்கு சிலகாலம் எடுக்கும். அதனுடன் தொடர்புடைய தினசரி பிரச்சினைகள் உள்ளன. அவற்றை முகாமைத்துவம் செய்து வருகின்றோம். பொருளாதாரம் ஸ்தீர நிலைக்கு வந்த பின்னர் நாங்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கையை ஆரம்பிப்போம். அதனை இழுத்தடிக்காது குறிப்பிட்ட காலத்திற்குள் மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொறிமுறையை தயாரித்து பாராளுமன்றத்தின் ஊடாக அரசியலமைப்பை தயாரிக்கவே எதிர்பார்க்கின்றோம். எல்லாவற்றிலும் சிக்கிக்கொண்டு ஒன்றையும் செய்ய முடியாத நிலைக்கு போக தயாராக இல்லை. பொருளாதார பிரச்சினைகளுக்கே நாங்கள் முன்னுரிமை வழங்கி செயற்படுவோம் என்றார். http://www.samakalam.com/புதிய-அரசியலமைப்பு-மறுச/
  3. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்! February 4, 2025 8:07 pm வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்! வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தரவை வழங்க வேண்டும் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் இன்று செவ்வாய்கிழமை சர்வதேச கவனயீர்ப்பு போராட்டமொன்றை லண்டனில் முன்னெடுத்தனர். இலங்கையில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இதனை கரிநாளாக கருத வேண்டும் என இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரித்தானியாவில் வாழும் ஈழ மற்றும் உலக தமிழர்களும் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து போராட்டமொன்றை லண்டனில் முன்னெடுத்தனர். ‘தன்னாட்சிக்கான உரிமைக்குரல்’ என்ற தொனிப்பொருளில் கீழ் இந்த போராட்டத்தை தமிழர்கள் முன்னெடுத்தனர். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பிரித்தானிய அரசு தார்மீக அடிப்படையில் காத்திரமான அரசியல் இராஜதந்திர நகர்வை வெளிப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். உலகத்தமிழினமாக அணிதிரண்டு சுதந்திர தமிழீழத்திற்காகப் போராடுவோம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் அறைகூவல் விடுத்தனர். https://oruvan.com/a-solution-must-be-provided-to-the-tamils-of-eelam-in-accordance-with-the-vaddukottai-resolution-charcoal-day-protest-in-britain/
  4. காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப் - தெரிவித்துள்ளது என்ன? Published By: Rajeeban 05 Feb, 2025 | 10:36 AM cnn காசாவில் நிலவும் பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்புவதற்காக அமெரிக்க படையினரை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளை அமெரிக்க ஜனாதிபதி நிராகரிக்கதவறியுள்ளார். காசாவில் நிலவும் பாதுகாப்பு வெற்றிடத்தை நிரப்புவதற்காக அமெரிக்க படையினரை அனுப்புவாரா என்ற கேள்விக்கு காசாவை பொறுத்தவரை நான் என்ன அவசியமோ அதனை செய்வேன் படைகளை அனுப்புவது அவசியம் என்றால் நான் அதனையும் செய்வேன், நாங்கள் காசாவை கையகப்படுத்தி அதனை அபிவிருத்தி செய்யப்போகின்றோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். நீண்டகால உரிமை பிரச்சினை உள்ளது எனக்கு தெரியும்,மத்திய கிழக்கின் அந்த பகுதிக்கும் மத்தியகிழக்கின் முழுவதற்கும் ஸ்திரதன்மையை கொண்டுவருவதற்கு நான் முயல்கின்றேன் என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி இது மிகவும் இலகுவாக எடுக்கப்பட்ட முடிவில்லை, நான் உரையாடிய அனைவரும் காசா அமெரிக்கா சொந்தமாக்கிக்கொள்வதையும் அபிவிருத்தி செய்வதையும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளைஉருவாக்குவதையும் விரும்புகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/205831
  5. லசந்த படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை - நாளை எதிர்ப்பு போராட்டம் Published By: Rajeeban 05 Feb, 2025 | 11:47 AM சண்டேலீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. நாளை வியாழக்கிழமை இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் சட்டமாஅதிபர் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. சட்டமா அதிபர் பதவி விலகவேண்டும்,லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்வதன் பின்னால் உள்ள காரணங்களை பகிரங்கப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இளம் பத்திரிகையாளர் சங்கம்நீதி கோரும் அனைவரையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவை வழங்குமாறு கோரியுள்ளது. சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சியங்களை அழித்தமை மாற்றியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஐந்து மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள்பிரதிப்பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபால இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உதலாகம ஆகியோரை முற்றாக வழக்கிலிருந்து விடுவிக்க சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். https://www.virakesari.lk/article/205842
  6. உலகெங்கிலும் உள்ள USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு February 5, 2025 10:56 2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து USAID ஊழியர்களையும் விடுமுறையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விசேட பணிகளில் ஈடுபடும் ஒரு சில ஊழியர்களை மட்டுமே தொடர்ந்து சேவையில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நபர்கள் யார் என நாளை (06) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை USAID நிர்வாகம் எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://tamil.adaderana.lk/news.php?nid=199751
  7. அர்ச்சுனாவுக்கு எதிரான குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு யாழ். மாவட்ட எம்.பியான இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை, எதிர்வரும் மே மாதம 28ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு அநுராதபுரம் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அநுராதபுரம் பிரதேச போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் செல்லுபடியற்ற வாகன சாரதிப் பத்திரத்துடன் வாகனத்தை செலுத்தியமை ஆகிய போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அர்ச்சுனாவுக்கெதிராக இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. அண்மையில், யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அரச்சுனாவின் காரை, அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் வைத்து, அவரது சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் ஆவணங்களை பொலிஸார் பரிசோதனை செய்ய முற்பட்டபோது பொலிஸார் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அர்ச்சுனா எம்.பி. மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவானால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. (R) https://www.tamilmirror.lk/செய்திகள்/அர்ச்சுனாவுக்கு-எதிரான-குற்றப்பத்திரம்-தாக்கல்-செய்ய-உத்தரவு/175-351431
  8. இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி நியமனம்! இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், இராணுவத் தளபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 45 ஆவது பிரதி பதவிநிலை பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, கஜபா படைப்பிரிவில் இணைந்து பணியாற்றிய ஒரு இராணுவ அதிகாரி ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு இராணுவத்தில் ஒரு கெடட் அதிகாரியாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/இலங்கை_இராணுவத்தின்_புதிய_தலைமைத்_தளபதி_நியமனம்!
  9. யாழ். சிறைச்சாலையில் வெற்றிகரமாக நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்! மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நேற்றையதினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த இரத்ததான முகாமானது 60 குருதிக் கொடையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் சீ.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கியினரால் குருதி சேகரிப்பு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் , விசேட அதிரடிப் படையினர், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டு 60 பேர் குருதிக்கொடை வழங்கினார்கள். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் அத்தியட்சகர், பிரதான ஜெயிலர், ஏனைய ஜெயிலர்கள், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள், சரயன்கள், உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கி பொறுப்பு மருத்துவ அதிகாரி திருமதி தாரணி, பொது சுகாதார பரிசோதகர் ரவீனதாஸ், தாதியர்கள் சுகாதார ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கம் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/யாழ்._சிறைச்சாலையில்_வெற்றிகரமாக_நடைபெற்ற_மாபெரும்_இரத்ததான_முகாம்!
  10. இலங்கை அரசியல் வரலாற்றில் மகிந்த ராஜபக்சவின் இடம் February 4, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இலங்கையின் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர்கள் அல்லது ஜனாதிபதிகளில் எவரினதும் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு நினைவாலயத்தில் வைக்கப்படவில்லை. அவர்கள் இறந்தபோது உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் நாம் அறியவில்லை. ஆனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மறைந்த பிறகு அவரது உடலை பேணிப்பாதுகாத்து மக்களின் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று ஒரு வேண்டுகோளை முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச கடந்தவாரம் விடுத்திருக்கிறார். மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்தவின் மரபை எதிர்காலச் சந்ததிகள் கௌரவிப்பதற்காக அவரது உடலைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்றும் அத்தகைய ஒரு மதிப்புமிகு அங்கீகாரத்துக்கு அவர் உரித்துடையவர் என்றும் செய்தியாளர்கள் மகாநாட்டில் அஜித் ராஜபக்ச கூறினார். “முன்னாள் சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகர தலைவர் ஹோ சி மின் ஆகியோர் அவர்களின் நாடுகளின் வரலாற்று நாயகர்கள் என்பதால் உடல்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அந்த நாடுகள் அவற்றின் தலைவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்திருக்கின்றன. அதேபோன்ற மரியாதையை இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கவேண்டும். ஒரு மகத்தான தலைவர் என்ற வகையில் அவரின் முதன்மை நிலையை மலினப்படுத்தும் முயற்சிகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபடுகின்றது. முன்னாள் ஜனாதிபதி தேசத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக அவருக்குரிய பாதுகாப்பையும் மதிப்பையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று அவர் கூறினார். வெளியான செய்திகளின்படி முன்னாள் பிரதி சபாநாயகர் லெனினையும் ஹோ சி மினையும் மாத்திரமே உதாரணமாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், வேறு சில நாடுகளின் தலைவர்களின் உடல்களும் அவர்களின் மரணத்துக்கு பிறகு நினைவாலயங்களில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1924 ஆம் ஆண்டு மரணமடைந்த லெனினின் உடல் பேணிப்பாதுகாக்கப்பட்டு மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நினைவாலயத்தில் 1930 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யர்கள் மகத்தான தேசபக்தப் போர் என்று வர்ணித்த இரண்டாவது உலகப்போரின்போது மாஸ்கோவை ஜேர்மன் படைகள் கைப்பற்றக்கூடும் என்று தோன்றியபோது 1941 ஆம் ஆண்டில் லெனினின் உடல் நினைவாலயத்தில் இருந்து அகற்றப்பட்டு பாதுகாப்புக்காக சைபீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. போரின் முடிவுக்கு பிறகு அவரது உடல் மீண்டும் மாஸ்கோவுக்கு கொண்டு வரப்பட்டது. சோவியத் யூனியனின் இரண்டாவது தலைவர் ஜோசப் ஸ்டாலின் 1953 ஆம் ஆண்டில் மரணமடைந்த பிறகு பதப்படுத்தப்பட்ட அவரது உடலும் மாஸ்கோ நினைவாலயத்தில் லெனினின் உடலுக்கு அருகாக வைக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு பிறகு பதவிக்கு வந்த நிகிட்டா குருஷேவ் ஸடாலினின் கொள்கைகளை நிராகரித்து முன்னெடுத்த இயக்கத்தின்போது 1961 ஆம் ஆண்டில் அவரின் உடல் நினைவாலயத்தில் இருந்து அகற்றப்பட்டு செஞ்சதுக்கத்தில் கிரெம்ளினுக்கு அருகாக இருந்த மயானத்தில் புதைக்கப்பட்டது. 1976 செப்டெம்பரில் மரணமடைந்த சீனத்தலைவர் மாவோ சேதுங்கின் உடல் பெய்ஜிங்கின் தியனென்மென் சதுக்கத்தின் மத்தியில் அமைந்திருக்கும் நினைவு மண்டபத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தனது உடலை தகனம் செய்யவேண்டும் என்று மாவோ விரும்பிய போதிலும், அவரது விருப்பம் அலட்சியம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சோவியத் யூனியனில் ஸ்டாலினின் சடலத்தை நினைவாலயத்தில் இருந்து அகற்றி புதைத்ததன் மூலமாக அவரையும் கொள்கைகளையும் குருஷேவ் ஆட்சி நிராகரித்ததைப் போன்று தனக்கும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக மாவோ தனது உடலை தகனம் செய்யவேண்டும் என்று கேட்டிருக்கக்கூடும். ஆனால், இன்றைய சீனாவில் மாவோவின் கொள்கைகள் பின்பற்றப்படுவதில்லை என்றாலும், அவரது உடல் தொடர்ந்தும் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 1969 ஆம் ஆண்டில் மரணமடைந்த வியட்நாமின் புரட்சிகர தலைவர் ஹோ சி மின்னின் உடல் 1975 ஆம் ஆண்டு முதல் தலைநகர் ஹனோயில் உள்ள நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்றே 1994 ஆம் ஆண்டில் காலமான வடகொரியாவின் தாபகத் தலைவர் கிம் இல் சுங்கின் உடலும் அவருக்கு பிறகு அதிகாரத்துக்கு வந்த அவரது மகன் கிம் ஜொங் இல்லின் உடலும் தலைநகர் யொங்யாங்கில் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தலைவர்களின் கொள்கைகள் மற்றும் ஆட்சிமுறை பற்றி பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்ற போதிலும், அவர்கள் சகலருமே கம்யூனிஸ்டுகள். பெரும் தியாகங்களுக்கு மத்தியில் தங்களது நாடுகளில் வெற்றிகரமான கம்யூனிஸ்ட் புரட்சிகளுக்கு தலைமை தாங்கி வழிநடத்தியவர்கள். அவர்களை உதாரணம் காட்டி இலங்கையில் மகிந்த ராஜபக்சவுக்கும் அத்தகைய கௌரவம் அளிக்கப்படவேண்டும் என்பது முன்னாள் பிரதி சபாநாயகரின் பெருவிருப்பமாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மீதான விசுவாச மிகுதியில் அந்த தலைவர்களின் ‘விக்கிரக’ வரிசையில் தனது தலைவரையும் வைத்துப்பார்க்க அவர் விரும்புகிறார் போலும். முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவிக்கும் சிறப்புச் சலுகைகளையும் வசதிகளையும் குறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி எடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மகிந்த ராஜபக்சவின் தற்போதைய கொழும்பு வாசஸ்தலம் மற்றும் பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் மூண்டிருக்கும் சர்ச்சையே அஜித் ராஜபக்சவின் வேண்டுகோளுக்கான உடனடிக்காரணம் என்று தெரிகிறது. மகிந்த ராஜபக்சவுக்கு விசுவாசமான அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஒரே காரணத்துக்காகவே அவரையும் அவரது ஆட்சியையும் புகழ்ந்து பேசக்கூடியதாக இருக்கிறது. அந்தப் போர் எவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை கிடையாது. மகிந்தவும் கூட தனது கட்சியின் அரசியல் மீட்சிக்கு போர்வெற்றி மீண்டும் கைகொடுக்கும் என்று நம்புகிறார். அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்சவும் கூட ஜனாதிபதி தேர்தலில் போருக்கு அரசியல் தலைமைத்துவம் வழக்கிய தந்தையாரின் சாதனையையே மக்கள் மத்தியில் கூறி வாக்குக் கேட்டார். போர்வெற்றியை பயன்படுத்தி பெரும்பான்மையினவாத அணிதிரட்டலைச் செய்து தங்களது அதிகாரத்தை பல வருடங்களாக வலுப்படுத்திய ராஜபக்சாக்கள் மீண்டும் அதே தந்திரோபாயத்தின் மூலமாக அரசியலில் மீட்சிபெறலாம் என்று இன்னமும் கூட நம்புகிறார்கள் போன்று தெரிகிறது. இனவாதத்தை தவிர அவர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. போர்வெற்றி காரணமாக குறிப்பாக மகிந்த ராஜபக்சவும் பொதுவில் அவரது குடும்பத்தவர்களும் சிங்கள மக்கள் மத்தியில் அமோக ஆதரவைக் கொண்டிருந்தார்கள் என்பது உண்மையே. ஆனால், போர் வெற்றியை பயன்படுத்தி சிங்கள மக்களின் கவனத்தை திசைதிருப்பி முன்னென்றும் இல்லாத வகையிலான ஊழல் ஆட்சியை நடத்திய அவர்கள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆட்சிமுறையின் கெடுதியான போக்குகள் சகலவற்றையும் உருவகப்படுத்துபவர்களாக ராஜபக்சாக்கள் விளங்குகிறார்கள். இலங்கை அரசியல் கடந்த காலத்திலும் சில உயர்வர்க்க குடும்பங்களின் ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது. ஆனால், மகிந்த ராஜபக்ச அதிகாரத்துக்கு வந்த பிறகு அவரது குடும்பம் அரசியலிலும் ஆட்சிமுறையிலும் அருவருக்கத்தக்க முறையில் மட்டுமீறிய ஆதிக்கத்தைச் செலுத்தியதை போன்று அந்த குடும்பங்கள் செய்ததில்லை. ராஜபக்சாக்களுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தது போன்று அந்த குடும்பங்களுக்கு எதிராக ஒருபோதும் கிளர்ச்சிகள் மூண்டதில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரச நிருவாகத்தில் எதேச்சாதிகாரம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் மாத்திரமே அந்த எதேச்சாதிகாரம் உச்சநிலைக்குப் போனது. மட்டுமீறிய அதிகாரங்களை தங்களிடம் குவித்து வைத்திருப்பது ஏதோ தங்களது பிறப்புரிமை என்ற நினைப்பில் அவர்கள் நடந்து கொண்டார்கள். தங்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ராஜபக்சாக்கள் உள்நாட்டு, வெளிநாட்டுச் சதி என்று கூறுவது வழக்கம். நாட்டு மக்கள் தங்களுக்கு கடைமைப்பட்டவர்கள் என்ற விசித்திரமான உணர்வை அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள். விடுதலை புலிகளை தோற்கடித்து போரை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக சிங்கள மக்கள் என்றென்றைக்கும் தங்களை ஆதரிப்பார்கள் என்ற எண்ணமும் ராஜபக்சாக்களிடம் இருந்தது. தங்களது தவறுகளை சிங்கள மக்கள் பொருட்படு்த்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட முன்னென்றும் இல்லாத படுமோசமான பொருளாதார நெருக்கடிக்கு மூன்று ராஜபக்ச சகோதரர்களும் அவர்களின் கீழ் பணியாற்றிய உயரதிகாரிகளுமே பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். முன்னாள் பிரதி சபாநாயகரைப் போன்ற அரசியல்வாதிகள் மீண்டும் அரசியலில் தலையெடுக்க வேண்டுமானால், மக்கள் மத்தியில் ராஜபக்சாக்களின் செல்வாக்கு அதிகரிக்க வேண்டியது அவசியமாக இருக்கலாம். மகிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையிலும் கூட தனது மூத்த மகனின் எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை தனது காலத்தில் உறுதி செய்யவேண்டிய அவசரம் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினை அதுவல்ல. மகிந்த ராஜபக்ச உரிமை கோருகின்ற போர் வெற்றியை அடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான ஒரு அரிய வாய்ப்பை வரலாறு அவருக்கு கொடுத்தது. போர் முடிவுக்கு வந்த உடனடியாக அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு பெரும்பான்மையின மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவருக்கு சகல வாய்ப்புக்களும் இருந்தன. குறைந்த பட்சம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தையாவது சாத்தியமான அளவுக்கு நடைமுறைப்படுத்த மகிந்த ராஜபக்ச முன்வந்திருந்தால் எதிர்ப்பு கிளம்பியிருக்காது. ஆனால், அவர் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக மேலும் பகைமையை வளர்க்கக்கூடிய அணுகுமுறையையே கடைப்பிடித்தார். பெரும்பான்மையின மக்கள் மத்தியில் இனவாதத்தை வளர்ப்பதற்கு புதிய எதிரிகளை அவர் கண்டுபிடித்தார். எதிர்காலச் சந்ததிகளுக்கு இனப்பிரச்சினையை விட்டுச் செல்லாமல் இருப்பதற்கு தனக்கு இருந்த வாய்ப்புக்களை மகிந்த ராஜபக்ச தீர்க்கதரிசனத்துடன் உகந்த முறையில் பயன்படுத்தியிருந்தால் உண்மையிலேயே அந்த சந்ததிகளின் கௌரவத்துக்கு உரியவராக அவரைக் கொண்டாட முடியும். போர்வெற்றிக்காக மாத்திரம் அவரை எதிர்காலச் சந்ததிகள் கௌரவிக்க வேண்டும் என்று கூறுவது அடிப்படையில் இனவாதத்தை மேலும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட கோரிக்கையேயாகும். அரசியலில் இருந்து தற்போதைக்கு விலகப் போவதில்லை என்றும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறிக்கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச தனது மரணத்துக்கு பிறகு உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று அஜித் ராஜபக்ச விடுத்த வேண்டுகோளை எவ்வாறு நோக்குகிறாரோ தெரியவில்லை. மகிந்தவின் விசுவாசிகள் போர் வெற்றிக்காக அவர் வரலாற்றில் நினைவு கூரப்படவேண்டியவர் என்று கொண்டாடலாம். மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு சந்தர்ப்பங்களுக்காக காத்திருக்கும் தேசியவாத சக்திகளின் நம்பிக்கைக்குரியவராக அவர் விளங்கக்கூடும். ஆனால் அவர் தவறான ஆட்சிமுறையின் ஒரு சின்னமாகவே நினைவு கூரப்படுவார் என்பதே உண்மை. https://arangamnews.com/?p=11766
  11. கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். சொல்பவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பதே கருத்துக்கு மதிப்பை அளிக்கிறது. இதைச் சொன்னவரின் தரம் இந்த வரியாலேயே தெரிகிறது.😀 அறிவாளிகளையும், அறிவற்றவர்களையும் கையாள்வது இலகு அவர்களுடன் கதைக்கலாம். அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம் @விசுகு ஐயா!😎
  12. ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை பலி ஸ்வீடன் நாட்டின் ஓரேப்ரோ நகரில் உள்ள ஒரு வயது வந்தோர் கல்வி மையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்தில் பத்து பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. TV4 Nyheterna மற்றும் TT உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், சம்பவத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கின்றன. துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். காயமடைந்தவர்களின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், அறிக்கைகள் ஒரு குழப்பமான சூழ்நிலையைக் குறிக்கின்றன. ஸ்வீடன் நாளிதழான Aftonbladet, பள்ளியில் சிக்கியிருந்த ஒரு நபர் பல துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டதாகக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஸ்வீடன் நீதி அமைச்சர் Gunnar Strommer, வன்முறையை "மிகவும் தீவிரமானது" என்று விவரித்தார். மேலும் அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், சட்ட அமலாக்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார். https://news.lankasri.com/article/sweden-school-shooting-5-injured-1738679764
  13. அவர்கள் எல்லாம் அறிக்கை தரமாட்டார்கள் என்று முழுநம்பிக்கை இருப்பதனால்தான் அறிக்கைவிடுவார்களா என்று சவாலாகப் பதிந்தேன்😁. ஆனால் பங்குபிரிப்பவர்கள் பங்கில் மட்டுமே குறியாக இருப்பார்கள் என்று தெரியும்தானே!
  14. சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழர் பிரதிநிதியாக எத்தனை தேர்தல்களில் என்ற வரலாறு தெரிந்தால் அவரை தமிழ் மக்களின் பிரதிநிதி என்று சொல்லமாட்டீர்கள். மண்டையன் குழு என்ன செய்தது என்பதை உணர்ந்திருந்தால் கடைசிவரை ஈபிஆர் எல் எவ் ஐ ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். சுரேஷ் பிரேமச்சந்திரன் 1989 இல் ஈபிஆர் எல் எவ் அடாவடி அதி உச்சத்தில் இருந்தபோது எம்பியாக தெரிவானார். இது கள்ள வாக்குகளினால் அவரை பாராளுமன்றம் செல்லவைத்தது. பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக, புலிகளின் ஆசீர்வதத்தினூடாக, 2004இல் எம்பியானார். 2010 இலும் தட்டித் தடுமாறி எம்பியானார். அதன் பின்னர் தொடர்தோல்விதான். மக்கள் எப்போதுமே தெளிவாகத்தான் இருக்கின்றார்கள்.
  15. மண்டையன் குழுவின் அட்டகாசங்களைப் பார்க்காததால் உங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் எங்களால் சுரேஷை மண்டையன் குழுத்தலைவராகத்தான் பார்க்கமுடியும். புலிகள் சர்வதேச நாடுகளின் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டதாலும், தமிழ் அரசியல் அமைப்புக்களை ஒடுக்கவில்லை என்று காண்பிக்கவும், தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியலை இக்கட்சிகள் முன்னெடுக்க விரும்பியதாலும் கூட்டமைப்பினுள் சேர்த்துவிட்டார்கள். ஆனால் சுரேஷ் பிரேமச்சந்திரன் மண்டையன் குழுவின் அட்டகாசங்களுக்கு மன்னிப்புக் கேட்டதாக எனக்கு நினைவில்லை. அதனால் அவரை இப்போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
  16. இணைத்ததனால்தான் விவாதிக்கின்றோம். ஆனால் ஒரு தேசியச் செயற்பாட்டளாராக இருந்த உங்களால் சீமானும் நாம் தமிழர் கட்சியும் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் புலிக்கொடியையும் ஏன் பாவிக்கின்றார்கள் என்று புரியவில்லையா? நன்றாகவே புரியும். ஆனால் புலிக்கொடியை ஆட்டுபவன் எல்லாம் புலிகளின் ஆதரவாளர் என்று நம்புவது உங்கள் குணம். அதையும் இணைத்து ஏன் சீமானைக் கழுவி ஊத்துவதில் ஈடுபடுவதில்லை என்று வியாக்கியானம் தந்தீர்கள். கீழேயுள்ள இணைப்பில் உள்ளது உங்கள் சொந்தக் கருத்தா அல்லது எங்கேயோ பார்த்ததை வெட்டி ஒட்டினீர்களா? 2009 இல் கற்றுக் கொண்ட பாடங்களில் இருந்து திராவிடராக இருக்கும் வரை நாம் பேய்க்காட்டி முதுகில் குத்தி அழிக்கப்படுவது மட்டுமே நடக்கும் என்ற படிப்பினையோடு இனி நாம் தமிழராக தமிழர் தேசியமாக ஒன்றிணைத்தல் மட்டுமே ஒரே ஒரு வழி என்ற முடிவுக்கு வந்தபோதே இந்த மோதல் நிலையை கடந்து தான் செல்லவேண்டிய சூழல் வரும் என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்றே. ஒவ்வொருநாளும் புதிதாக கற்றுக்கொள்வதில் தப்பில்லை!😀 மாடு என்ன எருமை என்றும் சொல்லலாம். எங்களுக்கு தடித்த தோல் (thick skin)😂
  17. 😂🤣 சீமான் பின்னால் போனால் இதுக்கும் மேலே சொல்லுவியள்.. காகம் திட்டி மாடு சாவதில்லை😎
  18. அடி முட்டாளாக இருந்துவிட்டுப் போகின்றேன்😜 எனது கருத்தில் மாற்றமில்லை @விசுகு ஐயா! 50,000 போராளிகளின் தியாகத்திலும், பல இலட்சம் மக்களின் இழப்பிலும் நடந்த போராட்டத்தை, தலைவர் தன் குடும்பத்தையே பலிகொடுத்த போராட்டத்தை தமிழ்நாட்டு உள்ளூர் அரசியலுக்கு சீமானும் நாம் தமிழர் கட்சியும் சுயநலத்தோடு பாவிப்பதை நியாயப்படுத்த அல்லது கண்டுகொள்ளாமல் இருக்க ஒரு தேசியச் செயற்பாட்டாளாரால் முடிகின்றது என்றால் அவருக்கும் ஒரு சுயநலம் இருக்கும். சில சுயநலன்கள் பணம், பொருள் ஈட்டுவதில் இல்லை. நாளை ஒரு “நாட்டுப்பற்றாளர்” என புலிக்கொடி போர்த்தப்படவேண்டும் என்ற விருப்பமாகவும் இருக்கலாம்.
  19. அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு போன்ற புலம்பெயர் அமைப்புக்கள் வாய் மூடி மெளனிகளாக இருப்பதனால் நாம் தமிழருக்கும் திமுகவும் இடையேயான உள்ளூர் அரசியலுக்கு தலைவர் பிரபாகரனையும் பெரியாரையும் மோதவிட்டுள்ளனர். இந்த புலம்பெயர் அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமையால்தான் சீமானின் அடிப்பொடிகள் தமக்கேற்றவாறு சமூக ஊடகங்களில் பதிவுகளையும், வீடியோக்களையும் பகிர்கின்றார்கள். பதிலுக்கு திமுக, பெரியார் சார்பானவர்கள் தலைவரையும், புலிகளையும் இழிவுபடுத்துகின்றனர். இந்த நிலைக்கு கொண்டுவந்த நாம் தமிழர் கட்சியையும், சீமானையும் இன்னமும் ஆதரிக்கும் ஈழத்தமிழர்கள் உண்மையில் முழு மூடர்கள் அல்லது புலிகளின் சித்தாந்தத்தைக் கடத்துகின்றோம் என்று நம்பி அதனை அழிக்க துணைபோகின்றவர்கள். நாடு கடந்த தமிழீழ அரசு பெரிதாக எதனையும் கிழிக்கவில்லை என்றாலும், தமிழ்நாட்டு அரசியலில் புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்தவேண்டாம் என்று அறிக்கை விட்டது நல்ல விடயம்தான்.
  20. மதுரை 144 எதிரொலி : இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது! Feb 4, 2025 திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 4) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்ட நிலையில், இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இரு தரப்பிலும் போராட்டங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக ‘திருப்பரங்குன்றம் மலையை பாதுகாப்போம்’ என்ற கோரிக்கையுடன் பிப்ரவரி 4 (இன்று) மாலை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி கட்சி அறிவித்தது. இதனையடுத்து மதுரையில் நேற்றும், இன்றும் என 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்ட எல்லையிலும், திருப்பரங்குன்ற பகுதியிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரு நாள் திருப்பரங்குன்றம் மலை கோவில் மற்றும் தர்காவிற்கு சென்று வழிபட பக்தர்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதற்கிடையே நேற்று இரவு முதல் இந்து முன்னணி கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவர் கற்பகவடிவேல் மற்றும் நிர்வாகி செந்தில்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் கருப்பையா உட்பட 8 பேரை போலீசார் இன்று அதிகாலை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவலில் வைத்துள்ளனர். திருப்பூரில் இருந்து இன்று காலை போராட்டத்திற்கு புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது ஒரு ஆதரவாளர் தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று மதுரை வந்துகொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் மாநில நிர்வாகி வன்னிராஜனை விருதுநகரில் வைத்து போலீசார் கைது செய்தனர். இதே போன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். https://minnambalam.com/political-news/hindu-munnani-rss-leaders-arrested/
  21. பெரியார் அவமதிப்பு : நாம் தமிழர் நிர்வாகி சிறையில் அடைப்பு! Feb 4, 2025 பெரியார் சிலை மீது காலணி வீசியதை அடுத்து கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினம் நேற்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மேடையேறிய சென்னை நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பிரிவு செயலாளரான அஜய் (வயது 32), பெரியார் சிலை மீது காலணி வீசினார். இதனைக்கண்டு கொந்தளித்த திமுக மற்றும் பெரியார் அமைப்பினர் அஜயை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சீமானுக்கு எதிராகவும் அவர்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பெரியார் அமைப்பினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கைதான அஜய் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது பிப்ரவரி 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அஜய் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாருக்கு எதிராக சர்ச்சையாக கருத்து தெரிவித்து வருகிறார். அவர் மீது 70க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்யக் கோரி, பெரியார் அமைப்பினர் உட்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/political-news/insult-to-periyar-ntk-ajay-in-prison/#google_vignette
  22. மன்னார்: கனிய மணலை அகழும் முயற்சில் சர்வதேச நிறுவனங்கள்! February 4, 2025 இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் தீவில் இலட்சக்கணக்கான தொன் கனிய மணலை அகழும் முயற்சில் சர்வதேச நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஹேமந்த விதானகே, முன்னாள் இராணுவ உறுப்பினர்களை பணிக்கு அமர்த்தி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் ”இந்த நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள், தற்போது பணியில் இல்லாத இராணுவ அதிகாரிகள் உட்பட, ஓரளவு அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடியவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பணத்திற்காக பாதாள உலகத்தினருக்காக கொலைகளை செய்பவர்கள் இராணுவத்தில் இருப்பதாக ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியான ஜனாதிபதி அறிவித்து சில நாட்களுக்குள், அரச மற்றும் வெளிநாட்டு முதலீடுகளினால் மன்னார் தீவில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களினால் உள்ளூர் மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் மன்னார் பிரஜைகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே மேற்குறிப்பிட்ட தகவலை வெளியிட்டுள்ளார். https://www.ilakku.org/மன்னார்-கனிய-மணலை-அகழும்/
  23. தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் போராட்டம்! February 4, 2025 இலங்கையின் சுதந்திரமான இன்று தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் பாரிய பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திரநாளான இன்று லண்டனில் ஆர்ப்பாட்டபேரணியொன்று இடம்பெறவுள்ளது. உலகின் பல நாடுகளையும் சேர்ந்த ஆயிரதக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்கள் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே அணிதிரளவுள்ளனர். அவர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ளும் தமிழர்களிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர். லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் ஆரம்பமாகி பிரிட்டிஸ் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி இந்த பேரணி செல்லவுள்ளது. இந்த பேரணியின் பின்னர் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை மீள பெற்றுக்கொள்வதற்கு உதவவேண்டிய கடப்பாடு பிரிட்டனிற்கு உள்ளதை வலியுறுத்தி பிரிட்டிஸ் பிரதமருக்கும் மன்னர் சார்ல்ஸ் உட்பட உயரதிகாரிகளிற்கும் கடிதமொன்றை ஏற்பாட்டாளர்கள் வழங்கவுள்ளனர். இந்த நிகழ்வில் உலகளாவிய புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம். தேசிய விடுதலை என்பது எங்களின் வரலாற்றுக்கடமை https://www.ilakku.org/protest-in-london-demanding-the-right-of-self-determination-of-the-tamil-people/
  24. மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை 04 Feb, 2025 | 12:02 PM இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 16 கைதிகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் தலைமையில் சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகள் 16 பேர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/205764
  25. ’’அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும்’’ - கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இலங்கை மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவரும் பரந்த அரசியல், பொருளாதார மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கு கொழும்பு பேராயர் கார்டினல் மால்க்லம் ரஞ்சித் இன்று அழைப்பு விடுத்தார். 77வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் சிறப்பு வழிபாட்டின் போது பேசிய கர்தினால் ரஞ்சித், புதிய அரசியலமைப்பு, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் ரத்து செய்தல் மற்றும் அதிகாரம் சலுகைகளை அனுபவிப்பதை விட மக்களுக்கு சேவை செய்ய அரச தலைவரை வழிநடத்தும் புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "தற்போதைய அரசியலமைப்பு விரைவில் ரத்து செய்யப்பட வேண்டும், மேலும் அதிகாரம் மற்றும் சலுகைகளை அனுபவிக்காமல் தேசத்திற்கு சேவை செய்ய தேசத் தலைவரை சட்டப்பூர்வமாகக் கடமைப்படுத்தும் ஒரு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/அரசியலமைப்பு-விரைவில்-ரத்து-செய்யப்பட-வேண்டும்/175-351386

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.