Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர 08 Dec, 2024 | 03:29 PM ஆர்.ராம் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருப்பதோடு அந்த அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடப்படும் என்று வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது, புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையிலிருந்து ஆரம்பமாகுமா இல்லை முழுமையாக ஆரம்பத்திலிருந்தான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா என்றும், மூன்று ஆண்டுகள் காலம் தாழ்த்தப்படுகின்றபோது அச்செயற்பாட்டுக்கு எதிரான எதிர்ப்புக்கள் வலுவடையும் சவாலான நிலைமைகள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாளவுள்ளீர்கள் என்றும் வினவியவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் மேலும் தெரிவிக்கையில், 2015-2019 அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான செயற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் இருந்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை மையப்படுத்திய புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். அதனை நாம் எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டுள்ளோம். இருப்பினும், அந்த இடைக்கால அறிக்கையை விடவும் முற்போக்கான விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமாக இருந்தால் நாம் அதுபற்றி கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம். எவ்வாறாக இருந்தாலும் 22திருத்தங்கள் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நாட்டுக்கு புதிய அரசியலமைப்பு தேவை என்ற விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் எமது அமைப்பின் கொள்கைகளை மையப்படுத்திய விடயத்தினை முன்வைப்போம். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதவில்லை. எமது முன்மொழிவுகள் தீர்வினை அடைவதற்கான ஒரு பயணப்பாதையாகும். சிலதரப்பினர் சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து அந்த வழியால் தீர்வினை அடையலாம் என்ற குறிப்பிடுகின்றார்கள். நாட்டில் அனைத்துப் பிரஜைகளும் சம அந்தஸ்துடன் சாந்தியும் சமாதானமுமாக வாழ வேண்டும். வளங்கள் சமமாக பகிரப்பட வேண்டும் என்பது தான் இலக்காக உள்ளது. அதனை அனைவரினதும் பங்களிப்புடன் அடைந்து கொள்வது தான் நோக்கமாக உள்ளது. இதேநேரம், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றபோது 13ஆவது திருத்தச்சட்டம் மட்டுமல்ல முதலாவது திருத்தத்திலிருந்து 22ஆவது திருத்தம் வரையில் அகற்றப்பட்டு அவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்டதொரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது. அதேநேரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் மாகாண சபை முறைமை நீக்கப்படாது. நாட்டில் யுத்தமொன்று இடம்பெற்றது. பல தசாப்தங்களாக இனங்களுக்கு இடையிலான பிரச்சினை நீடித்துக்கொண்டு தான் உள்ளது. அதற்கான தீர்வு வழங்கப்படும் வரையில் மக்களிடத்திலிருந்து வெளிவருகின்ற கோசங்கள் ஓயப்போவதில்லை. எனவே எமது நோக்கம், அனைவரினது இணக்கத்துடன் ஏற்படுத்தப்படுகின்ற தீர்வானது மக்களின் அங்கீகாரத்துக்காக விடப்படும். அதாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவோம். அதேநேரம், தற்போது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் இனவாதம், மதவாதத்தை பேசவில்லை. அவ்வாறு பேசுவதற்கு இடமளிக்கவும் இல்லை. வழக்கமாக ஆளும் தரப்பு தான் அவ்விதமான மனோநிலையில் செயற்படும். ஆனால் இம்முறை அவ்விதமான நிலைமை காணப்படவில்லை. ஆகவே இந்த மாற்றமானது, புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளுக்கு சவால்களை அளிக்காது என்றே கருதுகின்றேன். நிச்சயமாக மக்கள் எதிர்பார்க்கின்ற முறைமை மாற்றமொன்று ஏற்படும் என்றார். https://www.virakesari.lk/article/200735
  2. மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்! மாகாண சபைத் தேர்தலைக் கால தாமதமின்றி அரசாங்கம் நடத்த வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அடுத்த வருட இறுதி வரை காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிந்த பிறகு, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதற்கு முன்னதாக மாகாண சபைகளை முழு அதிகாரத்துடன் இயங்கச் செய்வது முக்கியமானதாகும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை, மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கு மூன்று வருடங்கள் வரை செல்லும். எனவே, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற முறைமை தொடர்பில் தமது பரிந்துரைந்துகளை அனைவரும் முன்வைக்கலாம். புதிய அரசியலமைப்பு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே கொண்டுவரப்படும். இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. எனவே, மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை. மாகாண சபை முறைமை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தற்போதைய அதிகாரங்கள் குறைக்கப்படாது எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.hirunews.lk/tamil/390161/மாகாண-சபைத்-தேர்தலை-கால-தாமதமின்றி-நடத்தக்-கோரும்-சுமந்திரன்
  3. டெலோ கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட விந்தன்! தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பதாக டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு கூட்டம், அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி, தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று செயற்படுவது தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாதகமான சூழலை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல் முடிவுகள் ஊடாக இதனை உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியத்தைப் பாதுகாக்கும் முகமாகத் தமிழ் தரப்பில் இருக்கக்கூடிய அனைவரும் ஒருமித்துப் பயணிப்பது தொடர்பான விடயங்கள் குறித்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதற்குத் தலைமை குழு தீர்மானித்துள்ளதுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய கூட்டத்தின் போது கட்சியின் உள்ளக விடயங்களை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்து விந்தன் கனகரத்தினம் மீது உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி அவரிடம் இருந்து விளக்கம் கோருவதாக தலைமைக்குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://www.hirunews.lk/tamil/390163/டெலோ-கட்சியிலிருந்து-தற்காலிகமாக-இடைநிறுத்தப்பட்ட-விந்தன்
  4. இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை - இராமலிங்கம் சந்திரசேகர்! சீனாவுக்கு ஆதரவாகச் செயற்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காது எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சூரியனின் செய்திப்பணிப்பாளர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரனின் நெறியாள்கையில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். அதேநேரம், இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகளை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விழுதுகள் நிகழ்ச்சியின் முழுமையான காணொளி வடிவத்தினை சூரியனின் யூடியூப் தளத்தில் பார்வையிட முடியும். இதன் முழுமையான காணொளி... https://www.hirunews.lk/tamil/390167/இந்திய-மீனவர்களின்-அத்துமீறல்-செயற்பாடுகளை-முற்றாக-நிறுத்துவதற்கு-நடவடிக்கை-இராமலிங்கம்-சந்திரசேகர்
  5. சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் குற்றச்சாட்டு December 8, 2024 08:04 am அரிசியின் விலையை முன்னைய விலையை விட 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அரிசியின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. நம் நாட்டில் அரிசி தொடர்பில் வர்த்தமானி விலையொன்று காணப்படுகிறது. பச்சை அரிசி கிலோ 210 ரூபாவாகவும், நாடு அரிசி கிலோ 220 ரூபாவாகவும், சம்பா கிலோ 230 ரூபாவாகவும், கீரி சம்பா 260 ரூபாவாகவும் இருந்தது. ஆனால் இன்று முதல் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய 3 அரிசி வகைகளுக்கு 10 ரூபா அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அல்ல செய்திருக்க வேண்டும். விதிமுறைக்கு உட்பட்டு அரிசி விற்பனை செய்வது தொடர்பாக ஆராய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இன்று முதல் நுகர்வோர் அதிகாரசபை ஊடாக அரிசி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் என நம்புகின்றோம். அவ்வாறு செய்யாவிட்டால், இந்நாட்டு நுகர்வோர் பாரிய அநீதிக்கு உள்ளாக நேரிடும். அரிசியை 10 ரூபாவால் அதிகரித்து, அதனூடாக ஆலை உரிமையாளர்களின் இலாபத்தையும் 10 ரூபாவால் உயர்த்தும் நிலைமை இதுவாக இருக்கக் கூடாது. எனவே, நுகர்வோர் அதிகாரசபை இலங்கை முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் அரிசி ஆலைகளிலும் சோதனை நடத்தி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். https://tamil.adaderana.lk/news.php?nid=196985
  6. “உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்போம்” வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் சர்வதேச விசா ரணையை வலியுறுத்துகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர். யாழ் ஊடக அமையத்தில் சனிக் கிழமை (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட் டோரின் உறவினர்களின் சங்கத்தினரால் ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட் டது. அவ்வறிக்கையில், "நாம் ஒரு தேசிய இனம். ஆனால் தொன்று தொட்டு சிறுபான்மையினம் என்ற பதத் துக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டுள்ளது எம். தமிழினம். இன்றும் தமது பிள்ளைகளையும், கணவன்மார்களையும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பரம்பரையில் முதல் வரி சையில், மனம் தளர்ந்து வெந்து கொண்டி ருக்கும் உறவுகளாக, வடக்கு/கிழக்கில் ஏங் கிக்கொண்டிருக்கும் தமிழினமாக வாழ்ந்து வருகின்றோம். இன்று எமது எட்டு மாவட்டத்திலுமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எண்ணிக்கை 18,817 பேர் ஆவர். அதுமட்டு மல்லாமல், 2009இல் முள்ளிவாய்க்காவலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது எமது மக்கள் மீது பாரிய இனவழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1,46,679 பேரை பலி யெடுத்துள்ளது. நாம் எமது உறவுகளை இறுதி யக்கத்தில் இழந்து தவிக்கின்றோம். இன்று எமது எட்டு மாவட்டத்திலுமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் எண்ணிக்கை 18,817 பேர் ஆவர். அதுமட்டு மல்லாமல், 2009இல் முள்ளிவாய்க்காவலில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது எமது மக்கள் மீது பாரிய இனவழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 1,46,679 பேரை பலி யெடுத்துள்ளது. நாம் எமது உறவுகளை இறுதி யுத்தத்தில் இழந்து தவிக்கின்றோம். காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை 2015 ஆம் ஆண்டு நிறுவினார்கள். இதில் எமக்கு நம்பிக்கை இல்லை. காரணம் நாம் கொடுத்த ஆவணங்களுக்கு இன்று வரை பதில் இல்லை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப் பட்ட எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவு களின் தாய்மார்களுக்கு ஒரு லட்சம் அல்லது ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங் கியும் மரணச் சான்றிதழ் கொடுத்தும் நீதி வேண்டிய போராட்டத்தை முடித்துவிடத் துடிக்கிறது இலங்கை அரசு. அதுமட்டுமல்ல, இந்த ஓஎம்பி வடக்கு கிழக்கு மக்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளா கிய எமது பிரச்சினைகளை ஒரு பொருட் டாகப் பார்க்கவில்லை என்பதை நாம் இலங்கை அரசின் செயற்பாடுகளில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக் கவி உரையிலேயே தமிழருக்கான இன அடை 55 யாளம் மறுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் ஒட்டுமொத்த இலங்கை மக்கள் என்று அவர் கூறியுள்ளார். நாம் ஒரு தமிழ் தேசிய இனம் என மீள வலியுறுத்துவதுடன் உள்நாட்டின் எந்தவொரு பொறி முறையையும் நாம் என ஏற்கப்போவதில்லை வலியுறுத்துவதுடன் நாம் சர்வதேச நீதிப் பொறிமுறை ஊடாக நீதி வேண்டும் என வலியுறுத்துகின்றோம்" என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/உள்ளகப்-பொறிமுறையை-நிராகரிப்போம்/71-348412
  7. வவுனியா பொலிஸார் திடீரென சோதனை! பலருக்கு எதிராக வழக்கு பதிவு!! December 8, 2024 வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் பொலிஸார் திடீரென சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருந்த பலருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்தனர். கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதனையடுதது வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பனவற்றில் வவுனியா பொலிஸார் நேற்றுத் திடீரென சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்போது, ரயர்கள், சிரட்டைகள், வெற்றுப் போத்தல்கள் என்பன பல இடங்களில் காணப்பட்டதுடன், அவற்றில் நீர் தேங்கி நுளம்புக் குடம்பிகளும் இனங்காணப்பட்டன. அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களின் வீட்டு உரிமையாளர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதேவேளை, டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தமது அயல் பகுதிகளை நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தினர். https://eelanadu.lk/பொலிஸார்-திடீரென-சோதனைப/
  8. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமாகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க! எதிர்வரும் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய பயணம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இவ்வாரம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த பயணத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட முக்கிஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டெல்லி பயணத்தை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களின் பின்னரான இந்த பயணமானது தெளிவான மக்கள் ஆணையை முன்னிறுத்தியுள்ளதால் இலங்கை - இந்திய உறவுகளின் எதிர்கால நலன்களில் முக்கியத்துவம் பெறுகிறது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெறும். ஏனெனில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை விஜயத்தின் போதும் மாகாண சபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் கருத்துக்களை கூறி வருகின்றது. 1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் கொண்டுவரப்பட்ட நடைமுறையில் உள்ள இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பானது 22 தடவைகள் சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதில் மாற்றத்தை ஏற்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது. எனவே டெல்லி பேச்சுகளில் புதிய அரசியலமைப்பு விடயம் கருத்தில் கொள்ளப்படும். மேலும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களின் எதிர்காலம் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்திய தரப்பு பேச்சுக்களில் பங்கேற்கும். இதேவேளை, இலங்கை கடல்பரப்பில் தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளும் டெல்லி பேச்சுவார்த்தைகளில் கவனத்திற்கு உட்படும் எனவும் மறுபுறம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவுக்கு எரிச்சல் ஊட்டும் விடயமாகவே உள்ளது. இதனாலேயே, இலங்கையுடன் சீனா நெருக்கமாகச் செயற்படுவதற்கும், சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைவதற்கு இந்தியா எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 2015 ஆம் ஆண்டிலிருந்து, இந்தியா பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இத்தகைய எதிர்ப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே ஜனாதிபதியின் இப்பயணத்தின் போது, சீன விவகாரமும் முக்கிய தலைப்பாக இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. (ச) https://newuthayan.com/article/எதிர்வரும்_ஞாயிற்றுக்கிழமை_இந்தியா_பயணமாகும்_ஜனாதிபதி!
  9. உள்ளூராட்சித் தேர்தல் மார்ச்மாத இறுதிக்குள்! 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதற்கு ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்பட்டு புதிதாக வேட்பு மனுக்களைக் கோருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்தே, மார்ச் மாத்தின் இறுதிப் பகுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதற்காக புதிய வேட்புமனுக்கள் விரைவில் கோரப்படும் என்றும் கூறப்படுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்காக 72 கோடி ரூபா நிதி செலவிடப்பட்ட நிலையிலேயே, அந்தத் தேர்தல் காலவரையறையின்றிப் பிற்போடப்பட்டிருந்தது. இதேவேளை, 341 உள்ளாட்சி சபைகளுக்கு 8 ஆயிரத்து 711 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக ஏற்கனவே கோரப்பட்ட வேட்பு மனுக்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 80 ஆயிரத்து 672 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/உள்ளூராட்சித்_தேர்தல்_மார்ச்மாத_இறுதிக்குள்!
  10. சிரிய ஜனாதிபதி பஷார் அல் – ஆசாத் தலைநகரை விட்டு தப்பியோட்டம்! adminDecember 8, 2024 சிரிய ஜனாதிபதி பஷார் அல் – ஆசாத் தலைநகரை விட்டு விமானத்தில் தப்பியோடியிருக்கும் நிலையில், டாமஸ்கஸைக் கைப்பற்றி விட்டதாக கிளர்ச்சிப் படையினர் ஞாயிற்றுக்கிழமை (08.12.24) அறிவித்துள்ளனர். தலைநகரை விட்டு அரசுப்படைகள் வெளியேறி விட்டதால், டமாஸ்கஸ் நீண்டகால ஆட்சியாளரான ஆசாத்தின் ஆட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக கிளர்ச்சி படையினர் தெரிவித்தனர். பஷார் அல் ஆசாத் தப்பியோடிவிட்டார். ஆசாத்தின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து டமாஸ்கஸ் விடுவிக்கப்பட்டது என்று நாங்கள் அறிவிக்கிறோம் என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதனிடையே, கடந்த 24 வருடங்களாக சிரியாவை ஆட்சி செய்த அதிபர் பஷார் அல் ஆசாத், விமானத்தில் ஏறி அடையாளம் தெரியாத இடத்துக்கு சென்று விட்டதாக சர்வதேச செய்தி நிறுவனத்திடம் மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்து விட்டதாக ராணுவத் தளபதி அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருண்ட சகாப்தம் முடிவடைந்தது: ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிப் படை அதன் அறிக்கையொன்றில், “இருண்ட காலத்தின் இந்த சகாப்தம் முடிவடைந்து, புதியதொரு சகாப்தம் தொடங்குவதாக இன்று டிசம்பர் 8, 2024ல் நாங்கள் அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. டமாஸ்கஸின் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சிரியாவின் பாதுகாப்பு படையினர் பின்வாங்கி விட்டதாகவும், கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்கள் காரணமாக ராணுவத்தினரும், அதிகாரிகளும் விமானநிலையத்தை கைவிட்டு விட்டு வெறியேறி விட்டதாகவும், பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு டமாஸ்கஸில் உள்ள சைட்னாயா ராணுவச் சிறைகக்குள் நுழைந்து கைதிகளை விடுவித்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “எங்களின் கைதிகளை சிறைகளில் இருந்து விடுவித்து, அவர்களின் கைவிலங்குகளை விடுவித்து, அநீதியின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது என்ற செய்தியினை அறிவிக்கும் சந்தோஷத்தை நாங்கள் எங்கள் சிரிய மக்களுடன் இணைந்து கொண்டாடுகிறோம்” என்று தெரிவித்தனர். படிப்படியாக முன்னேறிய கிளர்ச்சி படை: கடந்த நவம்பர் 27-ம் திகதி, சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் விரைவாக வெளியேறியதால், அந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதைடுத்து, கடந்த வியாழக்கிழமை ஹோமா நகரையும், வெள்ளிக்கிழமை சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் கைப்பற்றினர். ஒருவாரகாலத்தில் கிளர்ச்சிப் படைகளின் கை வேகமாக ஓங்கி இன்று தலைநகர் டாமஸ்கஸும் கிளர்ச்சியாளர்கள் வசமாகியுள்ளது. முன்னதாக,கிளர்ச்சிப் படையினர் சனிக்கிழமை கடந்த 2000 ஆண்டு முதல் ஆசாத் ஆட்சி செய்து வரும் டமாஸ்கஸை சுற்றிவளைத்திருப்பதாக அறிவித்தனர். “நாங்கள், தலைநகர் மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிக்கு இடையில் இருக்கும் ஹோம்ஸ் நகரின் விளிம்பில் நிற்கிறோம். ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டவுடன் ஆசாத்தின் படை வலிமையாக இருக்கும் கடற்கரை பகுதியில் இருந்து டமாஸ்கஸ் துண்டிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தனர். அன்று இரவு அவர்கள் ஹோம்ஸை கைப்பற்றியதாக அறிவித்தனர். தற்போது தலைநகர் டாமஸ்கஸும் கிளர்ச்சியாளக்கள் வசமாகியிருக்கும் நிலையில், 14 மாகாண தலைநகரங்களில், லடாகிய மற்றும் டார்டஸ் ஆகிய நகரங்கள் மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. 50 ஆண்டு கால ஆசாத் குடும்ப ஆட்சி: சிரியா கடந்த 5 தசாப்தங்களுக்கும் மேலாக ஆசாத்தின் குடும்பத்தால் ஆளப்பட்டு வருகிறது. தனது தந்தை ஹஃபிஸ் ஆசாத்தின் மரணத்தை தொடர்ந்து, பஷார் அல் ஆசாத் சிரியாவின் அதிகாரத்துக்கு வந்தார். மத்திய கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட அரபு வசந்தங்களால் ஈர்க்கப்பட்டநிலையில் சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆசாத்துக்கு எதிரான எதிர்ப்பு நிலவி வருகிறது. அதிபரின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த அந்த அலை உள்நாட்டுப்போராக விரிவடைந்தது. இதனிடையே, கடந்த 2015-ம் ஆண்டு வாக்கில், சிரியாவின் பெரும்பாலான பகுதிகள் கிளர்ச்சி படை மற்றும் முஸ்லிம் அரசுகளின் போராளிகள் குழுக்களுக்களின் கட்டுப்பாட்டில் வந்தன. என்றாலும் ரஷ்யாவின் ராணுவத் தலையீட்டினால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி, ஆசாத்தின் அதிகாரத்தினை மீண்டும் உறுதி செய்தது. தீவிரமாக நோக்கும் அமெரிக்கா: இதனிடையே சிரியாவில் நடந்துவரும் மாற்றங்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அந்தப் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2024/209091/
  11. அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் திட்டமிட்டு அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது - அஜித் பி பெரேரா 08 Dec, 2024 | 01:07 PM (எம்.மனோசித்ரா) அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் திட்டமிட்டு நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அரிசி இறக்குமதி விவகாரத்திலும் பாரிய மோசடிக்கான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. தேவைக்கு அதிகமான அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் அடுத்த அறுவடையின்போது விவசாயிகளுக்கு நியாயமான விலையில் நெல்லை விற்பனை செய்ய முடியாத அபாயம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், அரிசி தட்டுப்பாடு, அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் ஏற்படுத்தப்பட்டவை ஆகும். இவர்கள் நெல் மற்றும் அரிசி என்பவற்றை மறைத்து வைத்திருக்கின்றனர். இவர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசியின் அளவை அரசாங்கத்தால் இலகுவாக கண்டுபிடிக்க முடியும். சில அதிகாரிகள் இந்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அடிபணிந்துள்ளதால் அல்லது அவர்களால் அரசாங்கத்துக்கு தவறான தகவல் வழங்கப்படுவதன் காரணமாகவே அதனை அரசாங்கத்தால் கணிப்பிட முடியாதுள்ளது. அரிசி தட்டுப்பாட்டை அரசாங்கத்தால் முகாமைத்துவம் செய்ய முடியும். அதற்கான தீர்வும் காணப்படுகிறது. அதேபோன்று வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறப்படுவது சந்தேகத்துக்கிடமானதாக காணப்படுவதோடு ஊழல் மிக்கதாகவும் உள்ளது. அரிசியை இறக்குமதி செய்வதற்கான பணம் இந்த பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களாலேயே வழங்கப்படவுள்ளது. அரிசியைப் பதுக்கி தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ள அவர்களாலேயே அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. இதன் பின்புலத்தில் பாரதூரமான பின்விளைவு ஏற்படும். அடுத்த அறுவடையின்போது நாட்டினுள் தேவைக்கதிகமான அரிசி காணப்பட்டால், விவசாயிகளுக்கு நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்காது. விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே, நாட்டுக்கு தேவையான அரிசியின் அளவு எவ்வளவு? அதனை விநியோகிப்பதற்கான வழிமுறை என்ன? எந்த வகை அரிசி தேவையாக உள்ளது? உண்மையில் அரிசி பதுக்கப்பட்டுள்ளதா? பதுக்கப்படாவிட்டால் அரிசிக்கு என்ன ஆயிற்று? என்பன குறித்து தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை விடுத்து அரசாங்கம் எதிர்க்கட்சியைப் போன்று செயற்படக்கூடாது. மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் உடனடியாக குறைக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் கோஷமாக இருந்தது. உடனடியாக என்ற அந்த சொல்லை தற்போது 'இரண்டரை அல்லது மூன்று ஆண்டுகள்' என்று அர்த்தப்படுத்தியுள்ளனர். அரசாங்கம் மக்களை எந்தளவுக்கு ஏமாற்றியிருக்கிறது என்பது இதிலிருந்தே தெளிவாகிறது என்றார். https://www.virakesari.lk/article/200703
  12. சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள் 8 டிசம்பர் 2024, 03:48 GMT Getty Images அதிபர் வெளியேறியதனை அடுத்து, டமாஸ்கஸில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் 'மோசமான ஆட்சியாளர்' அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள கிளர்ச்சி படைகள், நாடு 'விடுவிக்கப்பட்டது' எனவும் அறிவித்துள்ளன. ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது. ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், அதன் தாக்குதலை ஒன்றரை வாரத்திற்கு முன்பு தொடங்கியதில் இருந்து, அவர்கள் சிரியாவின் முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்படும் தலைநகர் டமாஸ்கஸின் மையப் பகுதியில் உள்ள உமையாத் சதுக்கத்தில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார். ''ஆசாத்தின் அரை நூற்றாண்டு ஆட்சியில் சிரியாவில் இருந்து இடம்பெயர்ந்த அல்லது சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் இப்போது தாயகத்திற்கு மீண்டும் வரலாம். இது ஒரு புதிய சிரியாவாக இருக்கும், இங்கு அனைவருக்கும் அமைதி மற்றும் நீதியும் கிடைக்கப்பெறும்" என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 1970களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வந்தது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி, ஆட்சி மாற்றம் நடைபெறும் வரை அனைத்து அரசு துறைகளும் பிரதமரின் மேற்பார்வையில் இருக்குமென தெரிவித்துள்ளார். மேலும் டமாஸ்கஸில் உள்ள அரசு துறைகளுக்கு ராணுவம் செல்ல தடை விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார் இதற்கிடையே சிரியாவின் பிரதமர் மொஹமத் காஸி அல்-ஜலாலி தான் டமாஸ்கஸில் இருப்பதாகவும், மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வெளியேறிய அதிபர் முன்னதாக சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் நுழைவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். "எங்கள் படைகள் டமாஸ்கஸுக்குள் நுழைய தொடங்கிவிட்டன", என்று தங்களின் டெலிகிராம் செயலி கணக்கில் கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். "ஒவ்வொரு பகுதியாக டமாஸ்கஸ் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிக்கொண்டு வருகின்றனர்", என்று பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமாக சிபிஎஸ்ஸிடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். ஹோம்ஸ் நகரை "முழுமையாக விடுவித்த" பிறகு டமாஸ்கஸ் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் வந்தனர். இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவான ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இதனை ஒரு "வரலாற்று சிறப்பு மிக்க தருணம்" என்று விவரித்துள்ளது. இதனையடுத்து, சிரிய அதிபர் பஷார் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு விமானத்தின் மூலம் புறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இரண்டு சிரிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் விமானத்தில் அதிபர் அசாத் ஏறி சென்றிருக்கலாம் என்றும் விமானம் புறப்பட்ட பின்னர், விமான நிலையத்தில் இருந்த சிரிய அரசின் பாதுகாப்புப் படைகள் வெளியேறினர் என்றும் தி சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் தெரிவித்தது. Getty Images சிரிய அதிபர் பஷர் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு புறப்பட்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது மேலும் டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்களின் படைகள், பார்சேவுக்கு அருகே இருப்பதாகவும், அங்கு மோதல்கள் நடைபெறுவதாகவும் அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, இணைய சேவை மிகவும் குறைவாக உள்ளது, மக்கள் தங்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்", என்று அந்த நபர் தெரிவித்துள்ளார். "மிகவும் சத்தமாக துப்பாக்கிச் சூடு நடந்தது அது எங்கிருந்து வருகிறது என்பது உடனடியாகத் தெரியவில்லை", என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அப்பகுதியில் வசிக்கும் இருவரை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது. Getty Images சிரியாவில் என்ன நடக்கிறது? சிரியா அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை கிளர்ச்சிக்குழுக்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கின. சிரியாவில் நடக்கும் மோதலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும், இஸ்லாமிய ஆயுதக் குழுவான 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham- HTS)' தலைமையில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது. ஏற்கனவே கடும் பதற்றம் நிலவி வந்த சூழலில், கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ மற்றும் இட்லிப் பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அலெப்போ மற்றும் தலைநகர் டமாஸ்கஸுக்கும் நடுவே ஹமா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியினை டிசம்பர் 5-ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இது அதிபர் அசாத்திற்கு இரண்டாவது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது. மேலும் கிளர்ச்சிபடைகள் ஹோம்ஸ் நகரையும், தெற்கு சிரியாவின் டெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து அவர்கள் இன்று (டிசம்பர் 😎 தலைநகர் டாமஸ்கஸையும் கைப்பற்றியுள்ளனர். 2011 இல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக தெற்கில் புரட்சி தொடங்கியது. அதைத் தொடந்து, அங்கு அமைதியின்மை நிலவத் தொடங்கியது. Getty Images ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்குதலை தொடங்கியதில் இருந்து, சிரியாவின் முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு யார்? 2011 இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக 'ஜபத் அல்-நுஸ்ரா' (Jabhat al-Nusra) என்ற வேறு பெயரில் 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' அமைக்கப்பட்டது. இஸ்லாமிய அரசு (IS) என தன்னை தானே அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ராவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார். சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கொடிய குழுவாக இது கருதப்பட்டது. ஆனால் அதன் புரட்சிகரக் கொள்கையை விட, 'ஜிஹாதி சித்தாந்தம்' அக்குழுவின் உந்து சக்தியாக கருதப்படுகிறது. 2016-ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பைப் பகிரங்கமாகப் பிரிந்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார். ஒரு வருடம் கழித்து, இதே போன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' என்ற பெயரை இக்குழுப் பெற்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5y88ez95e8o
  13. சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள்: வெளியேறிய ராணுவம் - நடப்பது என்ன? டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சி படைகளின் தொடர் தாக்குதலால், அந்நாட்டு ராணுவம் தெற்கின் பெரும்பான பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தரா மற்றும் ஸ்வீடா நகரங்களை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றின. 2011-ம் ஆண்டு அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக தராவில் இருந்துதான் கிளர்ச்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் சிரியாவின் ராணுவம் இழந்திருக்கும் நான்காவது மிகப் பெரிய நகரம்தான் தரா. கடந்த மாத இறுதியில் சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலெப்போவில் இருந்து அரசுப் படைகள் விரைவாக வெளியேறியதால், அந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதைடுத்து, கடந்த வியாழக்கிழமை ஹோமா நகரையும், வெள்ளிக்கிழமை சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹாம்ஸ் நகரையும் கைப்பற்றினர். கடந்த 2011-ம் ஆண்டு தராவில் உள்ள பள்ளிச்சுவர்களில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான வாசகங்கள் எழுத்தப்பட்டதற்காக, ஒரு சிறுவர்கள் குழு பிடித்து வைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டதால் எழுந்த மக்களின் கோபத்தை தணிக்க அரசு தவறியதால் ஏற்பட்ட கிளர்ச்சியால் சிரியாவின் ஆரம்பக் கால போரில் தரா புரட்சியின் தொட்டில் என்று அழைப்படுகிறது. ஸ்வீடா நகராமனது, சிரியாவின் ட்ரூஸ் சிறுபான்மையினரின் மையப்பகுதி ஆகும். அங்கு வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்து விட்டதாலும், ட்ரூஸ் இளைஞர்கள் கட்டாய ராணுவச் சேவைகளுக்கு இணங்க மறுத்துவிட்டதாலும் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக ஸ்வீடா, அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு சாட்சியாக இருந்து வருகிறது. தரா மற்றும் ஸ்வீடா நகரங்கள் கிளர்ச்சிப் படைகளின் வசம் வந்திருப்பதன் மூலம், சிரிய ராணுவப் படைகள் டமாஸ்கஸ், ஹோம்ஸ், லடாகிய மற்றும் டர்டஸ் ஆகிய நகரங்களில் மட்டுமே தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. தரா பகுதி என்பது தலைநகரில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கிளர்ச்சி படை வெள்ளிக்கிழமை டெலிகிராமில் வெளிட்டுள்ள பதிவொன்றில், "நாங்கள், தலைநகர் மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிக்கு இடையில் இருக்கும் ஹோம்ஸ் நகரின் விளிம்பில் நிற்கிறோம். ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டவுடன் ஆசாத்தின் படை வலிமையாக இருக்கும் கடற்கரை பகுதியில் இருந்து டமாஸ்கஸ் துண்டிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது. கடந்த சில மணி நேரங்களாக சிரிய பகுதிகளில் கிளர்ச்சிப் படைகள் குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. அதனால், ஒரேநாளில் நான்கு முக்கிய மாகாணங்களின் தலைநகரங்கள் வீழ்ந்துள்ளன என்று சுயாதீன பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை அதிகாலை சிரியாவிலுள்ள இந்தியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், “சிரியாவை விட்டு இந்தியர்கள் கிடைக்கும் விமானங்கள் மூலம் விரைவாக வெளியேற வேண்டும். வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். டமாஸ்கஸ் நகரில் உள்ள இந்திய தூதரக ஹெல்ப்லைன் எண்களில் இந்தியர்கள் தொடர்புகொள்ளலாம். வாட்ஸ்-அப் மற்றும் இமெயில் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம்” என்று கூறியுள்ளது. முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை கூறுகையில், “வடக்கு சிரியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சண்டையை தொடர்ந்து அங்கு நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியர்களின் பாதுகாப்பு கருதி அவர்களுடன் எங்கள் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது" என்றார். சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷ்யாவும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் எண்ணிக்கை 92 ஆக சுருங்கிவிட்டது. இவர்களில் 14 பேர் ஐ.நா. அமைப்புகள் மற்றும் என்ஜிஓ.க்களில் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/world/1342492-opposition-forces-take-syria-s-daraa-sweida-explained.html சிரியாவில் முன்னேறும் கிளர்ச்சிபடை : தப்பி ஓடினாரா ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்...! சிரியாவில் கிளர்ச்சிப்படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளிவந்தபோதிலும் சிரிய ஜனாதிபதி அலுவலகம் அதனை மறுத்துள்ளது. இதேவேளை சிரியாவின் உள்துறை அமைச்சர், அரசாங்கத்தின் படைகள் நாட்டின் தலைநகரைச் சுற்றி "மிகவும் பலமான" இராணுவ வேலியை உருவாக்கியுள்ளதாகவும், அதன் வழியாக யாரும் செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார். டமாஸ்கஸில் இருந்து அரசு தொலைக்காட்சியில் பேசிய முகமது அல்-ரஹ்மூன் ,"டமாஸ்கஸ் மற்றும் அதன் கிராமப்புறங்களின் எல்லைகளில் மிகவும் வலுவான பாதுகாப்பு மற்றும் இராணுவ வேலி உள்ளது, மேலும் ஆயுதம் ஏந்திய இந்த தற்காப்புக் கோட்டை யாரும் ஊடுருவ முடியாது என தெரிவித்தார். சிரிய தலைநகரம் "விரைவில் வீழ்ச்சியடையும் இதனிடையே சிரிய எதிர்ப்பிற்கு ஆதரவான அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிரிய அவசரகால பணிக்குழு (SETF), சிரிய தலைநகரம் "விரைவில் வீழ்ச்சியடையும்" என்று தெரிவித்தது. அந்த பணிக்குழுவின் இயக்குனர் Mouaz Moustafa தெரிவிக்கையில், டமாஸ்கஸ் விரைவில் கிளர்ச்சிப் படைகளிடம் வீழ்ந்துவிடும், மேலும் நகரம் திறம்பட சுற்றி வளைக்கப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் உறுப்பினர்கள் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர் ரஷ்ய கடற்படை சொத்துகளும் நாட்டை விட்டு வெளியேறுகின்றன ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டும் சிரியாவின் முக்கிய கூட்டாளிகள் மற்றும் உள்நாட்டுப் போர் முழுவதும் இராணுவ ஆதரவை வழங்கியுள்ளன நாட்டில் என்ன நடைபெறுகிறது இதேவேளை சிரிய தலைநகரில் உள்ள மக்கள் நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை அறியாதவர்களாக உள்ளனர். பல கடைகள் மூடப்படுவதாகவும், பொருட்கள் குறைவாக உள்ளதாகவும், ஏடிஎம்களில் பணம் இல்லை என்றும் ஒருவர் தெரிவித்தார். "என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இதனிடையே ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் இடையிலான எல்லை நகரமான அல்-கைமின் மேயர், சுமார் 2,000 சிரிய துருப்புக்கள் ஈராக் எல்லையைத் தாண்டி தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவித்தார். துருப்புக்களில் சிலர் காயமடைந்து தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக துர்கி அல்-மஹ்லாவி ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். https://ibctamil.com/article/syria-presidency-denies-assad-left-1733594207#google_vignette
  14. யாழில் துவிச்சக்கர வண்டியில் திரிந்து திருட்டில் ஈடுபட்டவருக்கு கொழும்பில் அதிசொகுசு வீடு adminDecember 7, 2024 யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளில் திரிந்து , களவுகளில் ஈடுபட்ட சந்தேகநபர் , கொழும்பில் அதிசொகுசு வீடொன்றினை கொள்வனவு செய்துள்ள நிலையில் , 90 பவுண் நகைகளுடன் கைதாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் , புங்குடுதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட நபர் ஒருவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மலேசியா நாட்டிற்கு சென்று சில காலம் வசித்துள்ளார். பின்னர் மீண்டும் இலங்கை திரும்பி , கொழும்பில் தங்கி வசித்து வந்துள்ளார். அந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு கால பகுதி முதல் , கொழும்பில் இருந்து தனது மனைவியுடன் சொகுசு காரில் யாழ்ப்பாணம் வந்து , விடுதிகளில் தங்கி நின்று பகல் வேளைகளில் காரில் மனைவியுடன் சென்று வீடுகளை நோட்டமிட்ட பின்னர் , ஓரிரு வீடுகளை இலக்கு வைத்து , மாலை வேளைகளில் காரில் மனைவியுடன் சென்று, இலக்கு வைத்த வீட்டிற்கு அண்மித்த பகுதிகளில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை களவாடிய பின்னர் , அதிகாலை 1 மணிக்கும் – 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் துவிச்சக்கர வண்டியில் , சென்று வீட்டில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டு கொள்வார். திருட்டின் போது நகைகள் , பணம் என்பவற்றை மாத்திரமே திருடிக்கொள்வார். தொலைபேசி போன்ற இலத்திரனியல் பொருட்களை திருடுவதில்லை. திருட்டின் பின்னர் , அந்த வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் மீண்டும் சென்று சந்தேகம் இல்லாத பிறிதொரு இடத்திற்கு மனைவியை காரில் வருமாறு அழைத்து , துவிச்சக்கர வண்டியை அருகில் உள்ள பற்றைக்காடு ஒன்றிற்குள் வீசி விட்டு , காரில் தப்பி கொழும்பு பிரதேசத்திற்கு சென்று விடுவார்கள். பின்னர் சில காலம் கழித்து மீண்டும் காரில் யாழ்ப்பாணம் வந்து திருட்டில் ஈடுபட்டு , தப்பி சென்று வந்துள்ளனர் . யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய காவல்துறைப் பிரிவுகளில் கடந்த இரண்டு வருட காலமாக துவிச்சக்கர வண்டியில் முகத்தை மறைத்து முகமூடி அணிந்து வரும் மர்ம நபர் திருட்டில் ஈடுபட்ட பின்னர் தப்பி செல்வது தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு நபர்களின் முறைப்பாட்டின் பிரகாரம் , 300 பவுணுக்கும் அதிகமான நகைகள் மற்றும் பெருந் தொகை பணம் என்பவை களவு போயுள்ளதாக தெரிவந்துள்ளது. காவல்துறையினரின் தீவிர விசாரணைகளை அடுத்து , சந்தேகநபர் கொழும்பில் தனது மனைவியுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவது தெரிய வந்த நிலையில் யாழில் இருந்து சென்ற விசேட காவல்துறை குழுவினர் சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட வேளை மனைவி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட நகைகளில் 90 பவுண் நகைகள் , நகைகளை விற்று கொழும்பில் அதிசொகுசு வீடு வாங்கிய பத்திரங்கள் , கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் , வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர். அதேவேளை , திருட்டு நகைகளை கொழும்பில் அடகு வைத்த நபர்கள் மற்றும் நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான பிரதான சந்தேகநபரை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து யாழ்ப்பாண காவல் நிலையத்தில் காவல்துறை தடுப்பு காவலில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் அதேவேளை தப்பி சென்ற சந்தேகநபரின் மனைவியை கைது செய்யவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் இவர்கள் இருவரும் , நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனரா என்பது தொடர்பிலும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். காவல்துறை விசாரணைகளில் சந்தேக நபர் , தனது மனைவியுடன் பிரான்ஸ் நாட்டுக்கு தப்பி செல்ல முகவர் ஒருவருக்கு பெருந்தொகை பணம் கொடுத்துள்ளமையும் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/209077/
  15. திராவிடமும், தமிழ்த் தேசியமும் வேறு வேறானாவையா? -சாவித்திரி கண்ணன் சமீப காலமாக திராவிடம் என்பதே ஒரு புரட்டு. தமிழர்களை திராவிடர்கள் என்பது பிழையானது. இது இந்த திராவிட கருத்தாக்கத்தை பிரிவினை நோக்கத்தில் ஆங்கிலேயேர்கள் ஊக்குவித்தனர்..என்றெல்லாம் கூறி வருகின்றனர். தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானதா? உண்மை என்ன…? நம்மை பொறுத்த வரை திராவிட இயக்க ஆதரவோ, தமிழ் தேசிய ஆதரவு நிலைபாடோ எடுக்காமல், உண்மை என்னவென்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு நம் தேடலை தொடங்கினோம். நம் தேடலின்படி, திராவிடம் என்ற சொற்றொடர் ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கியே கணிசமாக காணக் கிடைக்கின்றன. இந்தியாவின் தென் பகுதியை குறிக்கும் ஒரு சொல்லாடலாக அந்தக் காலங்களில் இவை பயன்பாட்டில் இருந்துள்ளன. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணத் துறவியான வஜ்ரநந்தி என்பவர் “திரமிள சங்கம்” என்ற ஒன்றை உருவக்கியுள்ளார். இந்த திரமிள சங்கம் என்பதை திராவிட சங்கம் என்றே மயிலை சீனி வேங்கடசாமி , வையாபுரிபிள்ளை போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரிலபட்டர் என்ற ஆன்மீக அறிஞரும் ‘திராவிட பாசை’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். கிபி ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் காலகட்டத்தில் காஞ்சிபுரம் வருகை குறித்த தம் பயண நூலில் சீன அறிஞர் யுவான் சுவாங் திராவிட தேசமான காஞ்சிபுரம் சென்றேன் என பரவசமாகக் குறிப்பிடுகிறார். அந்த பரவசத்திற்கு காரணமாக அவர் சொல்வது, இது புத்தர் கால்பட்ட மண். போதி தர்மர் அவதரித்த பூமி, 100 க்கு மேற்பட்ட அழகிய புத்த விகாரங்களையும் , ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகளையும் இங்கு நான் கண்டேன் என்கிறார். சீன அறிஞர் யுவான்சுவாங் மகாபாரதத்தில் அனுஷான பர்வத்தில் திராவிட போர் வீரர்கள் என்ற வார்த்தை வருகிறது. எப்படி வருகிறது என்றால், மகாபாரத போர்க் களத்தில் பாண்டவர்களுக்கு ஆதரவாக பாண்டிய மன்னர்கள் தங்கள் வீரர்களை களத்தில் இறக்கினார்கள் என்ற இடத்தில் ‘திராவிட வீரர்கள்’ என அதில் குறிப்பிடப்படுகிறது. மகாபாரதம் எழுத்து வடிவம் பெற்றது ஆறாம் நூற்றாண்டு வாக்கில் என்பது கவனத்திற்கு உரியதாகும். ஆந்திராவில் கிடைத்த ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் கல்வெட்டு ஒன்றில், திராவிட தேசத்தில் குடியேறிய பிராமணர்கள் தங்களை ‘திராவிட புதிரலு’ என அழைத்துக் கொண்டதாக உள்ளது. இந்த வகையில் தான் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் குறிப்பிடுகிறார்…என்பதையும் நாம் உய்த்துணரலாம். அப்படியானால், ‘திராவிடர் என்ற வார்த்தை பிராமணர்களைக் குறிக்கிறதா?’ என்றால், இல்லை இந்த தென் இந்திய பிராந்திய மண்ணில் வாழ்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகவே இது இருந்துள்ளதை பல ஆவணங்கள் வெளிச்சப்படுத்துகின்றன. 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்க்கண்டார் இயற்றிய ‘சிவஞான போதம்’ என்ற நூல் தான் இன்று வரை சைவ சித்தாந்தத்தின் பிரதான நூலாக கொண்டாடப்படுகிறது. இந்த சிவஞான போதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ள திருவாவடுதுறை ஆதினம் சிவஞான சுவாமிகள் இந்த நூலின் முகப்பில் இதனை ‘திராவிட மாபாடியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு திராவிட மொழியிலான பேருரை என்று பொருளாகும். இது அச்சு வடிவம் பெற்ற போதும் சைவ சித்தாந்த நூல் நிலையத்தார் நூலின் முகப்பில் சிவஞான முனிவரை ‘திராவிடபாடியகாரர்’ எனக் குறிப்பிடத் தவறவில்லை. தாயுமான சுவாமிகள் ( 1705- 1742) எழுதிய புகழ் பெற்ற பாடலான கல்லாத பேர்களே நல்லவர்கள் எனத் தொடங்கும் பாடலில், வட மொழியிலே வல்லான் ஒருத்தன் வரினும் த்ரவிடத்திலே விவகரிப்பேன்’’ என்ற வரி வருகிறது இந்தப் பாடலில்! இதற்கு உரை எழுதிய அந்த காலகட்டத்தின் பெரும் தமிழ் புலவர்கள் அனைவருமே வட மொழியிலே வல்லவன் ஒருவன் வரினும், தமிழ் மொழியில் கைதேர்ந்தவன் போல விவகரித்து பேசுவேன் என்றே எழுதியுள்ளனர். வைணவர்கள் தங்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ‘திராவிட வேதம்’ என்றே அழைக்கின்றனர். காரணம், 63 நாயன்மார்களும் தென்னகமாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் வட நாட்டு மொழியில் உள்ள வைணவ இலக்கியங்களில் இருந்து வேறுபட்டது என்பதைக் குறிப்பிடவே ஆழ்வார்கள் இயற்றிய பெருமாளைப் போற்றும் பிரபந்தங்கள் அனைத்தையும் ‘திராவிட வேதம்’ என்றனர். திவ்வியப் பிரபந்தத்தில் தலை சிறந்தது நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி; பக்தர்கள் பலரால் நாள்தோறும் போற்றிப் பாராயணம் பண்ணப்பட்டு வரும் இதனை ‘செந்தமிழ் வேதம்’ என்றும், திராவிட வேதம் என்றுமே அழைக்கின்றனர். இவ்வாறு வைணவர்களும், சைவர்களும் தமிழில் எழுதப்பட்ட தங்களின் புனித நூல்களை ‘திராவிட வேதம்’ என அழைத்து பெருமைபட்டுள்ளனர் என்பதே யதார்த்தமாகும். தென் இந்தியாவை குறிப்பிடுவதற்கு பல சமஸ்கிருத நூல்களில் ‘திராவிடம்’ என்ற சொல்லாடல்கள் வெளிப்பட்டுள்ளன. இதைக் கொண்டு ‘திராவிடம் என்பதே சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது’ என்பது கெடு நோக்கம் கொண்ட திரிபாகும். இதற்கு பதில் அளிக்க சிறந்த தமிழ் தேசியவாதியான தமிழ் அறிஞர் தேவ நேயப் பாவணரின் கூற்று ஒன்றே போதுமானது. அவர் எழுதிய ஒப்பியன் மொழிநூலில் எழுதப்பட்டு இருப்பதாவது, “இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறுபிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ்என்னும் சொல்லே”. அதாவது, ‘தமிழில் இருந்து திரிந்து சென்றதே திராவிடம்’ என்கிறார் தேவ நேயப் பாவாணர். இதன் மூலம் தமிழே முந்தியது, திராவிடம் பிந்தியது என்றும், ‘தமிழே, திராவிடம் என்ற சொல்லாக பிரிந்துள்ளதால் தமிழுக்கு திராவிடம் எதிரானதல்ல’ என்ற முடிவுக்கும் நாம் வரலாம். ‘தமிழ் உலக மொழிகளில் மூத்தது, திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கியது’ என்கிறார் தேவநேயப் பாவாணர். இதன் மூலம் தென் இந்திய நிலப்பரப்பை ‘திராவிடப் பகுதி’ என்றும், இந்த நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை குறிப்பதற்கு ‘திராவிடர்கள்’ என்ற சொல்லும் மிக இயல்பாக பழங்காலத்தில் இருந்துள்ளமையை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்தியாவின் தென் பகுதியில் அனைவருமே ஒரு காலத்தில் தமிழ் மொழியில் தான் பேசியுள்ளனர். அந்த தமிழ் மொழியில் இருந்து கிளைத்து எழுந்ததே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்றவையாகும். இதைத் தான் தமிழ்த்தாய் வாழ்த்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களும் எழுதியுள்ளார். ‘நீராருங் கடலுடுத்த..’ படலில் வரும் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வார்த்தை கவனத்திற்கு உரியது. மேலும், ‘சீரிளமையோடு இருக்கும் தமிழில் இருந்து தோன்றியவையே தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும்’ என்ற பெருமையை அவர் குறிப்பிட்டு உள்ளார். ஆகவே, தமிழ் தான் ‘திராவிடம்’ என்ற பொருளில் முற்காலத்தில் சொல்லப்பட்டுள்ளது. மொழியியல் அறிஞர்கள் தமிழையும், தமிழில் இருந்து தோன்றிய மொழிகளையும் ‘திராவிட மொழிகள்’ அல்லது ‘தமிழியன்’ மொழிக் குடும்பத்தை சார்ந்தவை என்றே வகைப்படுத்துகின்றனர். முன்னை திராவிட மொழியும், மூலத் திராவிட மொழியும், தொன்மை திராவிட மொழியும் தமிழே என்பதால், பின்னைத் திராவிட மொழியும் தமிழே என நிலை பெற்றுவிட்டது. அந்த வகையில் திராவிட மொழியும் தமிழும் வேறு,வேறல்ல. திராவிடம் என்பது வெகுகாலமாக தமிழை மட்டுமே குறிப்பிட்டு வந்துள்ளதால், பிற்காலத்தில் தோன்றிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி பேசுவோர் தங்களை தனித்துக் காட்ட விரும்பியதால், ‘திராவிடர்’ என்ற சொல்லை தவிர்த்திருக்கலாம். தமிழின் மூலக் கூறுகளை ஆராய்ச்சி செய்த எல்லீஸ் பிரபுவும், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலணக்கணம்’ என்ற ஒப்பற்ற பெரு நூலை எழுதிய பேரறிஞர் கால்டுவெல்லும் நமது மூலத்தை நமக்கே உணர்த்திய நன்றிக்குரிய பெருமக்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. நமது அயோத்திதாச பண்டிதர் அவர்கள் ‘திராவிடன்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்திய காலத்தில் திராவிட கட்சிகள் தோன்றவில்லை. இன்றைய அரசியல் சூழலில், திராவிடக் கட்சிகள் மீதான கடும் குற்றச்சாட்டுகளுக்கோ, அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கோ ஆதரவு நிலை எடுத்து எழுதப்பட்டதல்ல, இந்தக் கட்டுரை. ஆனால், திராவிட கட்சிகளின் மீதுள்ள ஒவ்வாமையை நிலை நாட்டுவதற்காக திராவிடத்தையும், தமிழையும் ஒன்றுக்கொன்று முரணாக நிறுத்தி, நமது பகைவர்கள் நம்மை மோதவிட்டு ரத்தம் குடிக்க துடிக்கின்றனர். ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தாக்கமும், ‘திராவிட தேசியம்’ என்ற கருத்தாக்கமும் ஒன்றுக்கொன்று பகைமை பாராட்ட அவசியமில்லை’ என்பதை நாம் உணர்வோமாக! சாவித்திரி கண்ணன் https://aramonline.in/20073/tamizhil-dravidam-meaning/
  16. மன்னிப்புக் கோரிய தென் கொரிய ஜனாதிபதி December 7, 2024 10:46 am இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியமைக்கு தென்கொரிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரினார். மீண்டும் அதனைச் செய்யப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார். இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி மக்கள் தொடர்ந்து ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வாக்களித்தனர். சட்டத்தைத் திரும்பப் பெற தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன. இந்நிலையில் இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய ஜனாதிபதி பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 3 இல் இரண்டு பெரும்பான்மை ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவைப்படும். https://oruvan.com/south-koreas-president-very-sorry-as-impeachment-vote-looms/
  17. இன்னும் 300 ‘பார்’ அனுமதிப்பத்திரங்களை வழங்கவே இருந்தேன் – ரணில் December 7, 2024 12:01 pm கடந்த அரசாங்கத்தின் போது வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை. ஒவ்வொரு அனுமதிப்பத்திரத்திற்கும் அரசாங்கம் கட்டணத்தை அறவிட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ”நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ இலஞ்சமாக மதுபான உரிமங்கள் வழங்கப்படவில்லை. அவை சட்டரீதியாக அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டுவதற்காக வழங்கப்பட்டவை. கடந்த அரசாங்கம் மதுபான அனுமதிப்பத்திரங்களை இலஞ்சமாக வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒவ்வொன்றும் 10, 15, 20 மில்லியனுக்கு விற்கப்பட்டது. நேரடி வரிகள் இல்லாமல் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் இவை. இந்த அனுமதிப்பத்திரங்களில் அரசாங்கத்தின் வருமானத்தில் நான்கிலிருந்து ஐந்து பில்லியன் வரை சேர்த்திருக்கலாம். நான் ஏன் யாருக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டும்? இவை எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை. சில எம்.பி.க்கள் பார் உரிமம் பெற சிலரை அனுப்பி வைத்தனர். ஆனால் நான் யாருக்கும் கொடுக்கவில்லை. அதனால்தான் யாரும் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்கவில்லை. நாட்டில் ஆயிரக்கணக்கான மதுபானசாலைகள் உள்ளன. இன்னும் 300 உரிமங்களை வழங்கவிருந்தோம். அடுத்த ஆண்டு இன்னும் 300 உரிமங்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தோம். இவற்றில் வருமானம் சேர்க்கப்பட்டால் எவ்வளவு? கலால் வரி வருவாய் நாட்டின் முக்கிய வருமான ஆதாரங்களில் ஒன்றாகும். இவற்றை மறைத்து பொய்யான தகவல்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.” என்றார். https://oruvan.com/i-was-going-to-issue-300-more-bar-permits-ranil/
  18. வடக்கு-கிழக்கு பல்கலை மாணவர்கள் இந்திய அரசாங்கத்தின் புலமைப் பரிசிலுக்கு தெரிவு December 6, 2024 இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட விசேட நிதியுதவித் திட்டத்திற்காக பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் அதேபோல பொருளாதார ரீதியாக ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த ஏனைய 100 மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலிருந்தும் இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு வருடம் முழுவதும் மாதாந்த நன்கொடை உதவி வழங்கும் இந்தத் திட்டமானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு புலமைப் பரிசில் திட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவால் வருடாந்தம் 710 புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்காக வழங்கப்படுவதுடன் இதில் 200க்கும் அதிகமானவை முழுமையான நிதி அனுசரணையினைக் கொண்டதுடன் முழுமையான கல்விக்கடணம், மாதாந்த உதவித் தொகை, காகிதாதிகள் மற்றும் புத்தகங்களுக்கான கொடுப்பனவு, மற்றும் போக்குவரத்து செலவீனம் ஆகியவற்றை முழுமையாக உள்ளடக்கியதாக காணப்படுகின்றன. அத்துடன் பொறியியல் முதல் மனிதநேயம், விஞ்ஞானம், விவசாயம், பாரம்பரிய மருத்துவம் குறித்த கற்கைகள் வரையான பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, மற்றும் கலாநிதி கற்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகவும் உள்ளன. இந்திய அரசாங்கத்தின் விசேட நிதி உதவியை பாராட்டும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் பீடத்தினைச் சேர்ந்த மாணவர் ஒருவர், “இவ்வாறு வழங்கப்படும் மாதாந்த நன்கொடை உதவியானது நிதி ரீதியான அழுத்தங்களை நிவர்த்தி செய்வதில் மிகுந்த பயனுள்ளதாகவிருக்கின்ற அதேவேளை, எனது கல்வியில் அதிக கவனம் செலுத்துவதற்கும் இடமளிக்கின்றது. அத்துடன் இந்த நிதி உதவியானது, நிதி ரீதியான சுமைகள் குறித்து கவனம் செலுத்தாமல், சீரான வருகையினைப் பேணி எனது கல்வியில் கவனம் செலுத்தவும் வழிவகுக்கின்றது. எனது கல்வி ரீதியான செயல்திறனுக்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் இந்த ஆதரவு கணிசமான பங்களிப்பினை வழங்குகின்றது”, எனத் தெரிவித்திருந்தார். அதேபோல, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவினைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்த உதவித் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும்போது, ‘இந்த உதவி மிகவும் பயனுள்ளதாகும். மாதாந்த கல்விச் செலவீனத்தை இதனால் ஈடுசெய்யமுடிகின்றது. அத்துடன் எனது கல்வித்தேவைக்கான நூல்களை கொள்வனவு செய்தல், நிழற்பிரதி எடுத்தல், அச்சு செலவீனங்கள் மற்றும் எனது உணவுத் தேவைகள் போன்ற செலவீனங்களுக்கு இந்த நன்கொடை உதவி ஆதரவாக உள்ளது”, எனக் குறிப்பிட்டார். மேலும், கலைப் பீடத்தில் கலாசார சுற்றுலாத்துறை குறித்து பயின்றுவரும் மற்றொரு மாணவர், தனது கள விஜயங்கள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு இந்த உதவி ஆதரவளிப்பதாக குறிப்பிட்டார். https://www.ilakku.org/வடக்கு-கிழக்கு-பல்கலை-மா/
  19. ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட இளைஞர்கள்- மீட்குமாறு சிறிதரன் எம்பி கோரிக்கை December 7, 2024 ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் இந்த விடயத்தினை வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது யாழ்ப்பாணத்திலிருந்து பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல முயற்சித்த இளைஞர் குழுவொன்று ரஷ்ய இராணுவத்தினரால் உக்ரைன் எல்லையில் கட்டாய போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர் முகவர் ஊடாக அவர்கள் ரஷ்ய இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர் இதேவேளை இந்த விடயம் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்திருந்தது இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களின் உறவினர்கள் யாழ் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தமது பிள்ளைகளை மீட்டு தருமாறு வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். https://www.ilakku.org/ரஷ்ய-இராணுவத்தில்-வலுக்க/
  20. பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தெரிவு ! ShanaDecember 7, 2024 பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக நேற்றைய தினம் (06) ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க இன் யானை சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதில் 46,438 விருப்பு வாக்குகளை பெற்ற, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். அந்தவகையில் ஐ.தே.க இன் பாராளுமன்றத்திற்கான தலைவராக ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் (06) தெரிவு செய்யப்பட்டுள்ளார். https://www.battinews.com/2024/12/blog-post_556.html
  21. தேசிய மக்கள் சக்திக்கு முன்னால் இருக்கும் உண்மையான சவால் கலாநிதி ஏ.எம். நவரட்ண பண்டார கடந்த 40 ஆண்டுகளில், உலகம் தேசியவாதம் மற்றும் உலகமயமாக்கலுடன் தொடர்புடைய பெறுமான முறைமை களுக்கு இடையே ஒரு பிளவுபட்ட உறவை அனுபவித்துள்ளது, அதனை சமூக விஞ்ஞானிகள் நவீன சகாப்தத்தின் இரண்டு வரையறுக்கும் அம்சங்களாக அடையாளம் கண்டுள்ளனர், இது கடந்த காலத்தில் முழுமையாக்கும் செயல்முறைகளை உருவாக்குகிறது. இலங்கையின் அண்மைக்கால அரசியல் வரலாற்றில் இரண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் – 2022 ஆம் ஆண்டு அரகலய (மக்கள் எழுச்சி) மற்றும் அரச அதிகாரத்தை வைத்திருப்பவராக தேசிய மக்கள் சக்தியின் (என் பி பின் ) எழுச்சி – இந்த உலகளாவிய வளர்ச்சிக்கு இணையாக நிகழ்ந்தது. மேலே குறிப்பிடப்பட்ட மாறிவரும் உலகளாவிய முறைமையின் பின்னணியில் இந்த நிகழ்வுகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அரசியல் மாற்றத்தை பகுப்பாய்வு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். ‘சமகால உலகமயமாக்கல்’ சகாப்தம் தேசியவாதத்தால் வடிவமைக்கப்பட்ட அரசியல் சூழலுடன் குறுக்கிடுகிறது, சில அறிஞர்கள் வாதிடுகின்றனர், இது முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக நவீன காலத்தின் அரசியல் மற்றும் சமூக சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்திய பின்னர் இப்போது குறைந்து வருகிறது. தேசியவாதம், ஒரு வர் தனது தேசத்தின் மீதான பற்றுதலையும் பெருமையையும் வெளிப்படுத்தும் ஒரு கருத்தியலாகும் , அது பிரெஞ்சு புரட்சியின் போது வெளிப்பட்டது. அப்போதிருந்து, இது அரசியல் செல்நெறியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட்பாலியன் ஒப்பந்தங்களின்[பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இடம் பெற்று வந்த முப்பதாண்டுப் போர், மற்றும் எண்பதாண்டுப் போர் ஆகியவை 1648 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தன. இப்போர்கள் முடிவுக்கு வர 15 மே 1648 இல் ஓசுனாப்ருயூக் ( என்ற இடத்திலும், 24 அக்டோபர் 1648 இல் மியூன்சிட்டர் என்ற இடத்திலும் சமாதான உடன்படிக்கைகள் கைச் சா த்தாகின. புனித ரோமன் பேரரசு, எசுப்பானியா, பிரான்சு, சுவீடன் அரசுகள், டச் குடியரசு, மற்றும் சுதந்திர நகரங்கள் உடன்பட்ட இந்த சமாதான ஒப்பந்தமே வெசிட்டுட்ஃபாலியா சமாதான ஒப்பந்தம்என்றழைக்கப் படுகிறது.] சட்டக் கட்டமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் கொள்கைகளை உள்ளடக்கிய தேசிய-அரசு மாதிரியை தேசியவாதம் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. டேவிட் ஹெல்ட் ‘நவீன உலகமயமாக்கல்’ என்று குறிப்பிடும் இந்தக் காலகட்டத்தின் உலகமயமாக்கல், தேசிய அரசின் உலகமயமாக்கலை ஒரு அரசாக்க கலையின் மாதிரியாக எளிதாக்கியது. இந்த காலகட்டத்தில், (பிராந்திய) தேசியவாதம் மற்றும் வர்க்கத்தை மையமாகக் கொண்ட அரசியல் இயக்கங்களுடன் தாராளமயம் மற்றும் மார்க்சியம் போன்ற கோட்பாடுகள் வெளிப்பட்டன. இந்த கோட்பாடுகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் அரசியல் அணிதிரட்டலில் முக்கிய பங்கு வகித்த அரசியல் உயரடுக்கின் வளர்ச்சிக்கு உதவியது, சமூக மற்றும் அரசியல் மோதல்களை உருவாக்கியது மற்றும் அரசியல் சமரசத்தின் சிக்கல்களை வழிநடத்தியது. சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கையின் அரசியல்செல்நெறி வர்க்க அரசியல் மற்றும் தேசியவாதத்தின் எங்களின் பதிப்பான இன தேசியவாதத்தால் உந்தப்பட்ட அரசியல் உயரடுக்கினரின் நடவடிக்கைகளால் கணிசமான அளவில் செல்வாக்கு பெற்றுள்ளது. சுதந்திரத்தைத் தொடர்ந்து, சிங்கள மற்றும் தமிழ் வலதுசாரித் தலைவர்கள் அந்தந்த சமூகங்களின் இன தேசியவாதத்துடன் தொடர்புடைய இரு அரசு திட்டங்களை வலியுறுத்தி அரசியல் அணிதிரட்டலை முன்னெடுத்தனர். இதற்கிடையில், இடதுசாரி தலைவர்கள் வர்க்கப் போராட்டத்தில் கவனம் செலுத்தினர், இது சில நேரங்களில் வலதுசாரி தலைவர்களின் இனவாத நிகழ்ச்சி நிரல்களுடன் முரண்பட்டது. 1960 களின் பிற்பகுதியில், இந்த இரண்டு பிரிவுகளின் தலைவர்களும் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியல் சமரசத்தை எட்டினர், தேசிய இறைமையில் கவனம் செலுத்தினர், இது 1972 அரசியலமைப்பின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. வலதுசாரி தலைவர்கள், இடதுசாரிகளால் ஆதரிக்கப்பட்டு, இந்த அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் தங்கள் அரச திட்டத்தை சட்டப்பூர்வமாக்கினர் மற்றும் பெரும்பான்மை சமூகத்தை அரசின் முக்கிய தேசமாக அங்கீகரிக்கும் ஒரு ‘இன அரசியலமைப்பு ஒழுங்கை’ நிறுவினர். இன மேலாதிக்க முறைமையை பாதுகாக்கும் சாக்குப்போக்குடன் ஒரு பிரதமர் அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. 1978 இல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டது, அது அதிகாரத்தின் மையமயமாக்கல் மற்றும் இன மேலாதிக்க முறைமையை யை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த அரசியலமைப்பு ஒழுங்கின் வரையறுக்கும் பண்பு இரண்டு தாராளமய நிறுவனங்களின் இருப்பு ஆகும்: ஒரு இன மேலாதிக்க முறைமை மற்றும் ஒரு சர்வாதிகார-பாணியிலான நிறைவேற்று ஜனாதிபதி, இது இன மேலாதிக்கத்தின் பாதுகாப்பு கவசமாக செயற் படுகிறது. இன மேலாதிக்க முறைமை அரசின் செயல்முறைகள் மற்றும் கட்டமைப்புகளுக்குள் ஒரு இனக்குழுவிற்கு முன்னுரிமை அளிக்கிறது. சமூக அமைதியின்மை அரசின் அதிகாரத்தை அச்சுறுத்தும் போது, ஒரு சர்வாதிகார அரசாங்கத்தை அமுல்படுத்துவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது, இது அடக்குமுறைக் கொள்கைகளுக்கு வழிவகுக்கும். இந்த அரசியலமைப்புமுறைமை ஏனைய இனக்குழுக்களின் உறுப்பினர்களுக்கு பங்கேற்பு உரிமைகளை வழங்க அனுமதித்தாலும், ஆதிக்க இனக்குழுவின் செல்வாக்கு பெரும்பாலும் தேர்தல்களில் தீர்க்கமானதாக இருந்தது, குறிப்பாக சிங்கள இன தேசியவாதம் தீவிரமடைந்த காலங்களில். சிறுபான்மை இனக் குழுக்கள் முதன்மையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சர்வாதிகார அதிகாரங்கள் ஜனநாயகத்தில் குறைபாடுகளை ஏற்படுத்திய போது இந்த முடிவுகளில் ஈடுபட்டன. 1994 முதல், இந்த ஊசலாட்டத்தின் ஒரு வடிவம் அரசாங்க மாற்றங்களின் இயக்கவியலில் வெளிப்பட்டது. சிங்கள பௌத்த தேசியவாதம் தீவிரமடைந்த போது நிறுவப்பட்ட இந்த அலைவரிசையின் ஒரு முனையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பலப்படுத்த அரசாங்கங்கள் விரும்பின. மாறாக, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் போது, பயனாளிகள் மற்றும் இன மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஜனநாயக கொள்கைகளை நிலைநிறுத்த உறுதியளித்த அரசியல் கட்சிகளை ஆதரித்தனர். ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான இந்த கூட்டு முயற்சி 1994, 2015 மற்றும் 2024 தேர்தல்களில் தெளிவாகத் தெரிந்தது; 2005, 2009, 2019 மற்றும் 2020 நிகழ்வுகளில் காணப்படுவது போல், சிங்கள சமூகத்தில் இன தேசியவாதம் பாதிக்கப்படக்கூடியதாக இருந்தபோது, ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தை வலுப்படுத்தும் அரசாங்கங்கள் தோன்றின. 1980 களில் இருந்து, இன மற்றும் வர்க்க அரசியலுக்கு அப்பால் சமூகத்தை ஊக்குவிக்கும் ஒரு புதிய இயக்கம் உருவாகியுள்ளது. இந்த இயக்கம் மனித உரிமைகள், பெண்ணியம், சுற்றுச்சூழல், மனிதநேயம் மற்றும் சமாதானம் கலாசாரம் பற்றியசெல்நெறிகளை வளர்க்கும் சிவில் சமூக முறைமைகளில் தொகுக்கப்பட்டுள்ளது, இது சமகால உலகமயமாக்கலால் ஊக்குவிக்கப்பட்ட கொ ஸ்மோபாலிட்டன் பெறுமானங்களை பிரதிபலிக்கிறது. இந்த முன்முயற்சிகளை முன்னெடுப்பதற்கு, சமூகத்தை அரசியலிலிருந்து நீக்குவதும், இன அரசியலைகுறைப்பதும் இன்றியமையாததாக இருந்தது, நமது பகிரப்பட்ட மனித நேயத்தை உயர்த்திப்பிடிக்கும் விழுமியங்களைத் தழுவுவது அவசியம். ஆரம்பத்தில், சிவில் சமூக அமைப்புகள் அரசாங்கத்திற்குள் புதிய தாராளமயக் கொள்கைகளை வளர்ப்பதற்கு ஒரு தாராளவாத சூழல் தேவைப்பட்ட உலகளாவிய நிறுவனங்களாக முக்கியத்துவம் பெற்றன. அதைத் தொடர்ந்து, உள்நாட்டுப் போரின் போது பிரிவினைவாத இயக்கங்களைத் தீர்ப்பதற்கான அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளுக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட அரசாங்கத் தலைவர்களிடமிருந்து அவர்கள் மேலும் ஆதரவைப் பெற்றனர். இதன் விளைவாக, இலங்கை சமூகம் தேசியவாதமும் உலகமயமாதலும் சங்கமிக்கும் ஒரு உருமாறும் யுகத்தில் நுழைந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில், இனவாத தேசியவாதத்தின் மூலம் அரசியல் அதிகாரத்தை செலுத்தும் ஆளும் உயரடுக்கின் ஏமாற்றுத் தன்மையை பொதுமக்கள் உணர்ந்தனர். இந்த உணர்தல் இன மற்றும் வர்க்க அரசியலில் வேரூன்றியிருந்த நீடித்த பதற்றம் மற்றும் நடந்து வரும் நெருக்கடிகளுக்கு எதிராக வெளிப்பட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச தலையீட்டை உள்ளடக்கிய முப்பது வருட உள்நாட்டுப் போர் வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து, சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் வகைப்படுத்தப்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால் மேலும் தீவிரமடைந்தன. குறிப்பிடத்தக்க சமூக அழுத்தம் மற்றும் நீடித்த பதற்றம் ஆகியவற்றால் குறிக்கப்பட்ட சூழலில், மக்கள் இனவாத அரசியலின் பயனற்ற தன்மையை அங்கீகரித்தனர். உயரடுக்கினர் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக இனவாதத்தை ஊக்குவிப்பதை அவர்கள் உணர்ந்தனர். “முறைமை மாற்றம்” என்ற பாசாங்கின் கீழ் ஆட்சியைப் பிடித்தது கோத்தா பய அரசாங்கம், ஆனால் பழக்கமான ஏமாற்று நடைமுறைகளை கையாண்டபோது, இறுதியில் அரகலய எனப்படும் மக்கள் எழுச்சியால் வெளியேற்றப்பட்டபோது இந்த விழிப்புணர்வு உச்சத்தை எட்டியது. அரகலய இயக்கம் மற்றும் கோத்தா -கோ-கம ஆக்கிரமிப்பு ஆகியவை உயரடுக்கு அரசியல் கலாசாரத்தின் மீதான சமூகத்தின் அதிருப்தியை உருவகப்படுத்தியது. இன மற்றும் வர்க்க அடிப்படையிலான அரசியலை தீவிரமாக நிராகரித்து, உலகளாவிய மனிதநேயத்தில் வேரூன்றிய சிவில் சமூகத்தின் பிரதிநிதித்துவமாக காலி முகத்திடலில் கோத்தா -கோ-கம வெளிப்பட்டது. இன தேசியவாதத்தின் கதைகளை சவால் செய்வதன் மூலமும், உலகமயமாக்கலின் உலகளாவிய மதிப்புகளைத் தழுவியதன் மூலமும் இது சமூக வேகத்தைப் பெற்றது. தேசிய மக்கள் சக்திஅர கலய இயக்கத்தில் நிலவும் மனநிலையில் உள்ளார்ந்த தீவிரவாதத்தை புத்திசாலித்தனமாக அங்கீகரித்தது. அவர்களின் “புனருதய” (மறுமலர்ச்சி) பிரசாரம் இந்த சமூக உணர்வோடு எதிரொலித்தது. இதன் விளைவாக, அவர்கள் வெற்றிகரமாக வாக்குப்பெட்டி மூலம் பழைய உயரடுக்குகளை அரசாங்க அதிகாரத்திலிருந்து வெளியேற்றினர். என் பி பி வர்க்க மற்றும் இன அரசியலுக்குப் பதிலாக அனைத்து சமூகப் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்த ஒற்றுமையை என் பி பிவளர்த்தெடுத்துள்ளது. இந்த பகுதிகளில் என் பி[ பி க்கு வடக்கு மற்றும் கிழக்கு மொத்த வாக்குகளில் இருபத்தி ஒன்பது சதவீதத்தை மட்டுமே பெற்றிருந்தாலும், இந்த இயக்கம் வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்கு இடையேயான அரசியல் மற்றும் புவியியல் பிளவுகளைத் தாண்டியது. முதல் பார்வையில், என் பி பி இன் முதன்மையான சவால், அதன் நிதி நெருக்கடியின் மூலம் நாட்டை வழிநடத்துவது மற்றும் சட்டத்தின் ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்துவது போல் தெரிகிறது. இருப்பினும், இது அதன் உண்மையான சோதனை அல்ல. அரச அதிகாரத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு அது அறிமுகப்படுத்திய புதிய உரையாடலை மாற்றுவதில் உண்மையான சவால் உள்ளது. மேலாதிக்கம் என்பது சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பற்றியது மட்டுமல்ல; சமூகத்தின் உளவியல் அங்கீகாரத்தின் மூலம் பெறப்பட்ட செல்வாக்கை அது உள்ளடக்கியது. அரகலய எழுச்சி முந்தைய ஆதிக்கத்தை சீர்குலைத்துவிட்டது. இந்த வளர்ந்து வரும் மேலாதிக்கத்தின் ஒரு முக்கிய அம்சம், இன மற்றும் வர்க்க அடிப்படையிலான பிளவுகளிலிருந்து விலகிச் செல்லும் அரசியல் கலாச்சாரத்திலிருந்து உருவாகும் அரசியல் உயரடுக்குகளுக்கு சமூகத்தின் நிபந்தனையற்ற அங்கீகாரமாகும். எ மது பல கட்சி ஜனநாயகத்திற்குள் இன மற்றும் வர்க்க அடிப்படையிலான அரசியல் கலாசாரத்தை ஒழிக்க முனைப்பான நடவடிக்கைகளைஅமுல் படுத்துவது இன்றியமையாதது. அதைச் செய்தால், அடுத்த பத்தாண்டுகளில் தேசிய மக்கள் சக்தி (என் பி பி ஆட்சியில் இருக்கும். ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள என் பி பி தலைவர்கள் இந்த கட்டாயத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் இந்த இலக்கை அடைய தங்கள் அதிகாரத்தை திறம்பட பயன்படுத்தக்கூடிய ஒரு புதிய நிர்வாக கலாசாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் , குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே, உலகளாவிய விழுமியங்களுடன் வளர்ந்து வரும் சீரமைப்பு உள்ளது என்பதை அனைத்து அரசியல் தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் வளர்ந்து வரும் டிஜிட்டல் குடியுரிமையால் வழங்கப்படும் வாய்ப்புகளுடன் முழுமையாக ஈடுபட எதிர்பார்க்கிறார்கள். [*ஏ. எம். நவரட்ண பண்டார, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் முன்னாள் பேராசிரியர்.] https://thinakkural.lk/article/313215
  22. இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் யஸ்மின் சூகா விடுத்திருக்கும் வலியுறுத்தல் இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது. ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கி வரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டமானது, இலங்கையின் அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிரான தடைகள் மற்றும் விஸா அனுமதி தடைகள் தொடர்பான 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருப்பதுடன் உலகளாவிய சட்ட வரம்பெல்லையின் பிரகாரம் வழக்குப் பதிவுகளையும் கோரியிருக்கின்றது. மனித உரிமைகள் தினத்தையொட்டி (எதிர்வரும் 10 ஆம் திகதி) தயாரிக்கப்பட்டிருக்கும் இக்கோரிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் தொடர்புடைய கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க ஊழல், மோசடிகள் என்பன பற்றியவையாக இருக்கின்றன. https://thinakkural.lk/article/313312
  23. ஜனநாயகத்தில் பலதரப்பட்ட குரல்களின் பங்களிப்பு இன்றியமையாதது - சஜித்துடனான சந்திப்பில் அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு 07 Dec, 2024 | 01:02 PM (எம்.மனோசித்ரா) ஜனநாயகத்தில் பலதரப்பட்ட குரல்களின் இன்றியமையாத பங்களிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார செழிப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமையளித்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகத்தின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ, அமெரிக்க திறைசேரியின் உதவி செயலாளர் ரொபர்ட் காப்ரோத், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட குழுவினருக்கு இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (6) மாலை இடம்பெற்றது. இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்துள்ள பதிவிலேயே ஜூலி சங் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது சமகால இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிறுவனத்தின் ஆசியப் பணியகத்துக்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர், இலங்கை பணியகத்தின் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ், டொனால்ட் லூவின் பணிக்குழாம் பிரதானி விர்சா பெர்கின்ஸ் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம், ரிஷாட் பதியுதீன், பழனி திகாம்பரம், அஜித் பீ பெரேரா, முஜிபுர் ரஹ்மான், காவிந்த ஜயவர்த்தன மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/200648
  24. இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை! இந்தியாவிலிருந்து 20,000 மெற்றிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு வெங்காய நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் பாரியளவு வெங்காயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசிக்கான தட்டுப்பாட்டைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் அரிசி இறக்குமதி விடயத்தில் அசமந்த போக்கில் செயற்பட்டுள்ளது. தற்போது கட்டுப்பாட்டு விலையில் சதொச ஊடாக அரிசி வழங்கப்பட்டாலும், அங்கு வழங்கப்படும் அரிசி தொகை போதுமானதாக இல்லை. அரிசிக்கான தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் அரசாங்கம் விரைவாகச் செயற்பட்டு அரிசியை இறக்குமதி செய்திருக்க வேண்டும். அரசாங்கம் ஏதேனும் சில காரணங்களுக்காக அரிசியை இறக்கமதி செய்யவில்லை என்பது புலப்படுவதாக இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/390112/இந்தியாவிலிருந்து-வெங்காயத்தை-இறக்குமதி-செய்வதற்குக்-கோரிக்கை
  25. மதுபானசாலை அரசியல் December 7, 2024 வடக்கு, கிழக்கில் வழங்கப்பட்ட மதுபான சாலைகளுக்கான அனுமதி தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு, தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பாராளுமன்றத்தில் கேள்வி யெழுப்பியிருந்தார். சரி நாங்கள் நாளையே வெளியிடுகின்றோம் என்று அரசாங்க அமைச்சரும் தெரிவித்திருந்தார். அதன்படி எந்த மாவட்டத்துக்கு எத்தனை மதுபானசாலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்னும் தகவல்கள் வெளியாகியிருக்கி;ன்றன. வடக்கு, கிழக்கில் வரலாற்றுரீதியாக வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் மக்களின் தனித்துவமான அரசியல் இருப்புக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறுவிதமான பிரச்னைகள் தொடர்பில் குரல் எழுப்பி வந்த, தமிழ் (தேசிய) அரசியல்வாதிகள் இன்று வடக்கு, கிழக்கிற்கு எத்தனை மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது, அதனை யாருக்கு வழங்கினார்கள் என்னும் தகவல்களை கோரிவருகின்றனர். தங்களுக்குள் இருக்கும் சிலரை தோற்கடித்து, அவர்களை அரசியலிலிருந்து ஓரங்கட்டுவதற்காகத்தான் அதனையும் கோருகின்றனர் – மக்களின் நன்மைக்காக அல்ல – ஏனெனில் தேர்தல் காலத்தில் தங்களின் வெற்றிக்காக அரசியல்வாதிகள் மது பானம் வழங்குவதையும் மக்கள் அறிவார்கள். உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள், இன்று மதுபான சாலைகள் தொடர்பில் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்றால் – இது யாருடைய கெட்டித்தனம். ரணில் விக்கிரமசிங்க அதிகார அரசியலிலிருந்து வெளியேறினாலும் கூட, அவரால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் அதிர்வுகளிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளால் இன்னும் விடுபட முடியவில்லை – தள்ளாடிக் கொண்டிருக்கின்றனர். மதுபான சாலைகள் தொடர்பான விவரங்கள் எதற்காக கேட்கப்படுகின்றன? ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தமிழ் அரசியல் வாதிகளை தங்கள் பக்கம் எடுக்கும் நோக்கில் சலுகையாக, மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களை ரணில் வழங்கியிருக்கின்றார். அது ஒரு வகையில் அரசியல் கையூட்டுத்தான். ஆனால் இலங்கைத் தீவின் அதிகார அரசியலில் இவ்வாறான அரசியல் கையூட்டுக்கள் முதலும் அல்ல – அதேபோல் இறுதியுமல்ல. நாடாளுமன்ற தேர்தல் பிரசார காலத்தில் மதுபானசாலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடப் போவதாக அநுரகுமார திஸநாயக்க தெரிவித்திருந்தார். ஆனால் வடக்கு, கிழக்கில் குறித்த மதுபான சாலைகளை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்னும் தகவல் ஆதாரபூர்வமாக இதுவரையில் வெளியிடப்படவில்லை. ஒரு வகையில் ரணிலின் தந்திரத்தை இன்னொரு வகையில் அநுர தொடர்கின்றார் போன்றே தெரிகின்றது. அநுரகுமார திஸநாயக்க எண்ணினால் குறித்த விவரங்களை வெளியிடுவது சாதாரண விடயம். ஆனாலும் குறித்த சில தமிழ் அரசியல்வாதிகள், தங்களுடைய எதிர்கால நகர்வுகளுக்கு தேவைப்படலாம் என்பதாலேயே, அநுர குமார விடயங்களை வெளிப்படுத்தாமல் தாமதித்துவருகின்றார். அநுர இந்த விடயத்தில் தாமதிப்பதை அல்லது தவிர்ப்பதை வேறு எந்த அடிப்படையில் விளங்கிக்கொள்வது? மதுபானசாலைகள் தொடர்பில் தமிழ் தேசியம் பேசும் அரசியல் வாதிகள் அடிக்கடி பேசுவதானது, தமிழ் சமூகத்துக்கு பெருமையல்ல – உண்மையில் சிறுமை. பல்லாயிரக்கணக்கான உயிர்களை முதலீடு செய்து, கட்டிக்காப்பாற்றிய தமிழர் விடுதலை அரசியலானது, இன்று எந்த இடத்தில் வந்து நிற்கின்றது? ஈழத் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய திட்டங்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டிய தமிழ் மக்களின் பிரதிநிதிகளை மதுபானத்திற்குள் முடக்கியிருப்பதும் கூட, சிங்கள இராஜதந்திரத்தின் வெற்றிதான். https://eelanadu.lk/மதுபானசாலை-அரசியல்/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.