Everything posted by கிருபன்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
கடைசிக் கட்சை உயிரைக் கொடுத்துப் பிடித்தார் கப்டன் ஹார்மன்பிரீத் கவுர்😃
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இன்னும் ஒரு விக்கெட்!
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஆட்டம் இன்னும் முடியவில்லை! இந்தியா பதற்றத்துடன் விளையாடுது!🙁
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்தியா இனி தோற்கேலாது!😎
-
மட்டக்களப்பு நெடியகல்மலை பகுதியில் பொலன்னறுவையிலிருந்து வந்து பிக்குமார் விகாகரை அமைத்து வருகின்றார்கள் - ஸ்ரீநேசன் எம்.பி
மட்டக்களப்பு நெடியகல்மலை பகுதியில் பொலன்னறுவையிலிருந்து வந்து பிக்குமார் விகாகரை அமைத்து வருகின்றார்கள் - ஸ்ரீநேசன் எம்.பி SayanolipavanNovember 2, 2025 தற்போது நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் மக்கள் நேரடியாக எம்மிடம் விடயங்ளைத் தெரிவித்து வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் அமைந்துள்ளது நெடியகல் மலை எனும் பிரதேசமாகும். அங்கு தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் அந்த இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீற்றருக்கு அப்பால் சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் அந்த 15 கிலோமீற்றருக்கு அப்பாலிருப்பது பொலன்னறுவை மாவட்டமாகும். அப்பகுதியிலிருந்து எமது தமிழ் மக்கள் வாழுகின்ற மட்டக்களப்பு எல்லைப்புறத்திற்கு பிக்குமார் வந்து அங்குள்ள நெடியகல்மலை எனும் பகுதியில் பௌத்த மத வழிபாட்டு தலம் ஒன்றை அமைப்பதற்குரிய செயற்பாட்டில் பிக்குமார் ஈடுபட்டிருக்கின்றார்கள். என இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் முன்னர் ஆளுநராக இருந்த அனுராதா ஜஹம்பத் அவர்கள் இருக்கின்ற காலத்தில் அந்த ஆளுனர் மக்களுக்கு சேவை செய்த செய்த காலத்தைவிட பிரச்சனைகளைத்தான் உருவாககி ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அந்த வரிசையில் தான் இந்த நெடியகல் மலை பகுதியிலும் அவருடைய நிர்வாகக் காலத்தில்தான் இந்த பௌத்தமத வழிபாட்டுத்தலம் ஒன்றை உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தார். பௌத்தமத மக்கள் வாழும் இடங்களில் பௌத்த வழிபாடு தலங்கள் அமைவது அது சாதாரண விடயம். இந்து மக்கள் வாழ்கின்ற பகுதியில் அவருடைய வழிபாட்டுத்தலங்களும், கிறிஸ்தவ மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும், இஸ்லாமிய மக்கள் வாழ்கின்ற வகையில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்களும், அமைவது இயற்கையானது. அதை ஏற்றுக் கொள்ளக் கூடியது, நியாயமானது, ஆனால் எந்த ஒரு பௌத்த சிங்கள குடிமகனும் வாழ்ந்திராத இடத்தில் அந்த நெடிய கால்மலை எனும் இடத்தில் 15 கிலோமீற்றருக்கு அப்பால் இருந்து வந்து பௌத்த துறவிகள் அந்த இடத்தில் பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்றை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது கடந்த காலத்தில் இந்த மாவட்டத்தில் இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருந்திருந்தவர்கள் அவர்களுடைய காலத்தில் இது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த காரணத்தினால் அரசாங்கத்தின் சலுகைகளை பெறுகின்றார்கள் என்ற காரணத்தினாலும், இந்த விடயங்களை அவர்கள் கண்டும் காணாததுபோல் விட்டுவிட்டார்கள். இப்போது இருக்கின்ற ஆட்சியில்கூட அதன் தொடர்ச்சி காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வனஇலாகாவுக்கு சொந்தமான அந்த பகுதியை குறித்த வன இலாகா பிரிவினர் உரிய இடத்தை பௌத்த வழிபாடு அமைப்பதற்குரிய அனுமதியை வழங்கி இருக்கின்றார்கள். இப்போது சர்வ சாதாரணமாக அங்கு இந்த பௌத்த வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு பௌத்த துறவிகள் வந்து செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது. காலப்போக்கில் அவர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் அனைத்தும் அமைக்கப்படும். பின்னர் அவர்களை பராமரிப்பதற்கும், சேவைசெய்வதற்குரிய சிங்கள மக்களை குடியேற்ற வேண்டிய தேவை ஏற்படும், அவற்றுக்கு ஏதும் பிரச்சனைகள் ஏற்படும் வகையில் அங்கு பாதுகாப்பும் வழங்க வேண்டிய நிலைமை ஏற்படும், இராணுவ கட்டமைப்பு அமைக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே கிளக்கு மாகாணத்தை இவ்வாறு திட்டமிட்டு தமிழ் மக்களிடமிருந்து ஆக்கிரமிப்பதற்கான ஒரு செயற்பாடாகதான் இந்த செயற்பாட்டை நாம் பார்க்க முடிகின்றது. நல்லாட்சி, நல்லிணக்கம், சமரசம், போன்றவற்றையெல்லாம் சிந்திக்கின்ற இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும். குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த அதிகாரி பௌத்த இடிப்பாடுடனாக விடயங்களை அவ்விடத்தில் விதைத்துவிட்டு அங்கு பௌத்த வழிபாட்டுத்தலம் எப்போவோ இருந்திருக்கின்றது. என்பதை தாங்கள் அவ்விடத்தில் இட்ட சின்னங்களை வைத்துக் கொண்டு அடையாளப்படுத்தி இருப்பதாக ஒரு பௌத்த துறவி தெரிவித்திருந்தார். அதுபோல் கிழக்கிலும் புதிதாக பௌத்த வழிபாட்டுத் தலம் ஒன்று அமைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதற்குரிய வீதியையும் வீதியை அபிவிருத்தித் திணைக்களம் அமைத்துக் கொண்டிருக்கின்றது. இவ்விடையம் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளார்கள். எனவே ஜனாதிபதியிடவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமும், குறிப்பிட்ட மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் வசிக்காத பிரதேசங்களில் அவர்கள் சாராத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பது என்பது நல்லிணக்கம் அல்லது சமரசமான வாழ்வுக்கான சூழ்நிலை குழப்பப்படும் என தெரிவிக்கின்றேன். இதுபோன்றுதான் மைலத்தமடு, மாதவனை, போன்ற பிரதேசங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மையின மக்கள் வந்து ஆக்கிரமித்து அங்கு இருக்கின்ற தமிழ் மக்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்களில் பெரும்பான்மையின மக்களால் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கால்நடைகளை வளர்க்க முடியாமல் உள்ளார்கள், எனவே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும். குறிப்பாக குறித்த பௌத்தர்கள் இல்லாத இடத்தில் அமைத்துக் கொண்டிருக்கின்ற அந்த பௌத்த வழிபாட்டுத்தலத்தை உடன் நிறுத்தப்பட வேண்டும். அது நிறுத்தப்படாது விட்டால் அதுநல்லிணக்க அல்லது மகிழ்ச்சியாக வாழ்கின்ற ஒரு சூழலை குழப்பக் கூடியதாக இருக்கும். என்பதை நான் அரசாங்கத்திற்கு செய்தியாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நாங்கள் இந்த ஒரு மதத்திற்க்கோ, இனத்திற்கோ, மொழிக்கோ, எதிரானவர்கள் அல்ல. ஆனால் கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற குடியேற்றங்கள் எல்லாம் இவ்வாறு நடைபெற்றிருக்கின்றது. கடந்த காலத்தில் அம்பாறையில் தீக வாவி எனப்படுகின்ற ஒரு இடத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். அது உண்மையிலேயே பொன்னன் வெளி அல்லது மாணிக்கமடு எனப்படுகின்ற ஒரு இடமாகும். https://www.battinews.com/2025/11/blog-post_33.html
-
தமிழ் - முஸ்லிம் நட்புறவை கட்டி எழுப்புது பற்றி கலந்துரையாடல்
தமிழ் - முஸ்லிம் நட்புறவை கட்டி எழுப்புது பற்றி கலந்துரையாடல் 02 Nov, 2025 | 03:01 PM வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடல் நேற்றையதினம் யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம்பெற்றது. வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக குறித்த கலந்துரையாடலில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல், வடக்கில் இருந்து வெளியேற்ற முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களிடம் நல்லதொரு உறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் இரு தரப்பினரும் உறவை வளர்துக்கொள்ள இதய சுத்தியுடன் முன்வர வேண்டும் என்ற நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம், சமூக செயற்பாட்டாளர் செல்வின், சிரேஷ்ட சட்டத்தரணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலூக் , மொகைதீன் நிறைவேற்ற பணிப்பாளர் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/229294
-
சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி : சட்டமா அதிபரின் ஆலோசனைப்படியே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு
சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி : சட்டமா அதிபரின் ஆலோசனைப்படியே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் - காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு 02 NOV, 2025 | 03:14 PM (நா.தனுஜா) மரணதண்டனைக்கைதியான சோமரத்ன ராஜபக்ஷ சத்தியக்கடதாசி ஊடாக வெளிப்படுத்தியிருக்கும் விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவேண்டியிருப்பதாகவும், எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தமது அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இதுபற்றி ஆராயப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஊடக 09.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தார். அதனைத்தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் இழைத்த குற்றங்கள், வலிந்து காணாமலாக்கப்படல்கள், மனிதப்புதைகுழிகள் மற்றும் அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் உள்ளிட்ட சகல உண்மைகளையும் வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷ அறிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி இந்த உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக சத்தியக்கடதாசி வழங்குவதற்கும் அவர் இணங்கியிருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் மேற்குறிப்பிட்ட விடயங்களுடன் தொடர்புடைய சில உண்மைகளையும், எதிர்வருங்காலங்களில் சாட்சியம் வழங்குவதற்குத் தயாராக உள்ள விடயங்களையும் உள்ளடக்கி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்ஷ தனது சட்டத்தரணி முன்னிலையில் சத்தியக்கடதாசி வழங்கியிருந்தார். அந்த சத்தியக்கடதாசியின் ஒரு பிரதி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் மேலும் இரு பிரதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடமும், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடமும் கையளிக்கப்பட்டன. இவ்வாறானதொரு பின்னணியில் சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசியை அடிப்படையாகக்கொண்டு முன்னெக்கப்படவுள்ள அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் வினவியபோதே மகேஷ் கட்டுலந்த மேற்கண்டவாறு பதிலளித்தார். அதன்படி ஏற்கனவே தமது அலுவலக அதிகாரிகள் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தமையை நினைவுகூர்ந்த அவர், தற்போது அவர் அவரது சட்டத்தரணி ஊடாக அனுப்பிவைத்திருக்கும் சத்தியக்கடதாசி தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். இருப்பினும் மரணதண்டனைக்கைதியான சோமரத்ன ரஜபக்ஷ இப்போது வெளிப்படுத்தியிருக்கும் விடயங்களை கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற வேளையிலேயே கூறியிருக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய மகேஷ் கட்டுலந்த, அவ்வாறிருக்கையில் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதி ஒருவர் தற்போது கூறும் விடயங்களை வைத்து தாமாக விசாரணைகளை மேற்கொள்ளமுடியாது என்று விளக்கமளித்தார். அதேவேளை இதுகுறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தமது அலுவலகத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் இவ்விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டு, சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுவது பற்றித் தீர்மானிக்கப்படும் என்றார் https://www.virakesari.lk/article/229297
-
மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு
மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு 02 Nov, 2025 | 04:46 PM மட்டக்களப்பு கிரான் பகுதியில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில், பெரும்பாலான முன்னாள் போராளிகள், முன்னாள் தளபதிகள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இணைந்து புதிய கட்சியின் தலைமையகத்தை நிறுவுவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். மாவீரர் வாரத்தை முன்னிட்டு குறித்த கட்சியை தேசிய அரசியல் கட்சியாக அங்குரார்ப்பணம் செய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. இதனிடையே, கட்சியின் தலைமைச் செயலகத்தை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் கட்சியின் கருணா அம்மானுடன் இருந்துவிட்டு அவருடைய கட்சிக்கு எதிராக அவர் இருக்கின்ற அதே கிரான் மண்ணிலேயே, மாவீரர் குடும்பங்களின் ஆதரவு மற்றும் முன்னாள் போராளிகளின் ஒத்துழைப்புடன் புதிய அரசியல் சக்தியை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தலைமையில் புதிய கட்சி உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் ஜெயா சரவணா அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் மற்றும் அடிப்படை உரிமை பதவியில் இருந்து , அக் கட்சியில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்பதை உணர்ந்தேன் 2024 ஆகஸ்ட் 17 ம் திகதியிலிருந்து உத்தியோக பூர்வமாக விலகி இருக்கின்றேன். தற்போது புதிய கட்சியை புதுப் பொலிவுடன் ஆரம்பிக்க தேவையான முன் ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. போலி தமிழ் தேசியம் பேசி தமிழ் தேசியத்தையும், மக்களையும் ஏமாற்றி வரும் போலி தமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக செயற்படும் கட்சியே எமது கட்சி . எமது எதிரியை தீர்மானித்துவிட்டு தான் களத்தில் இறங்கியிருக்கிறோம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார். இதனால் மட்டக்களப்பை மையமாகக் கொண்டு உருவாகும் இக்கட்சி வட மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல் தளத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/229306#google_vignette
-
சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஆராய்வு
சிறையில் வாடும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் ஆராய்வு 02 Nov, 2025 | 05:10 PM சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை தொடர்ந்து வலியுறுத்திவருகின்ற அமைப்பான குரலற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் சிலரையும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சனிக்கிழமை (01) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அந்தவகையில் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் அமைந்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்புத் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கமைய இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் மற்றும் குறித்த அமைப்பின் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியல்கைதிகளின் உறவினர்கள் ஆகியோரால் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலைதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது. அதேவேளை தமிழ் அரசியல் கைதிகளை சிறைச்சாலைகளில் நேரடியாகச் சென்று பார்வையிடுமாறும், அவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அத்தோடு தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை இதன்போது குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்திருந்தனர். இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் தம்மால் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுமெனவும், உரிய இடங்களுக்கு கொண்டுசென்று அவர்களின் விடுவிப்புத் தொடர்பில் தம்மால் வலியுறுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். மேலும் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களால் இக்கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்துவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229307
-
கொழும்பிலிருந்து மும்பைக்கு போதைப்பொருள் – ஐவர் கைது – பலகோடி சிக்கியது!
கொழும்பிலிருந்து மும்பைக்கு போதைப்பொருள் – ஐவர் கைது – பலகோடி சிக்கியது! adminNovember 2, 2025 இந்தியாவின் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் இந்திய மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து மும்பைக்கு வரும் விமானத்தில் கொகைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த ஒரு பெண் பயணியின் உடமைகளை பரிசோதித்தனர். இதன்போது 09 தேயிலை தூள் பக்கெற்றுகளில் மறைத்து வைத்திருந்த கொகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். சுமார் 4.7 கிலோ நிறையுடன் அதன் மதிப்பு 47 கோடி ரூபா ஆகும். கொகைன் கடத்தி சென்ற பெண், அதை வாங்கிச் செல்ல சென்ற ஒருவர் உட்பட 5 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சர்வதேச போதை கடத்தல் கும்பல், அண்மை காலமாக போதைப்பொருளை கடத்த இந்திய பெண்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இதனைக் கண்டறிவதைத் தடுக்க உணவுப் பொருட்களுக்குள் வைத்து கடத்துகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/222212/
-
யாழ் . பொது நூலகத்தை பார்வையிட்ட தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்!
யாழ் . பொது நூலகத்தை பார்வையிட்ட தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள்! adminNovember 2, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென்றிருந்த நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (02.11.25) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர். 14 அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண பயணம் மேற்கொண்டனர். இவ் விஜயத்தின் போது குறித்த குழுவினர் நேற்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/222219/
-
கட்புலனாகா அரங்கு கட்புலனாகாத போர்? - நிலாந்தன்
கட்புலனாகா அரங்கு கட்புலனாகாத போர்? - நிலாந்தன் கடந்த 30ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் அரசாங்கத்தின் போதைப் பொருளுக்கு எதிரான ஒரு செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரமுகர்கள் அமர்ந்திருந்த அரங்கிற்குள் திடீரென்று ஒருவர் மேடையை நோக்கி வேகமாக நகரத் தொடங்கினார். அங்கிருந்த பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகள் அவரைத் தடுக்க முயற்சித்தாலும் அவர் மேடையில் ஏறி விட்டார். உணர்ச்சிக் குழம்பாக காணப்பட்ட அந்த நபர் மேடையில் நின்று அரங்கில் இருந்தவர்களை நோக்கி அழுதழுது கதைக்கத் தொடங்கினார். இல்லை,நடிக்கத் தொடங்கினார் என்றுதான் சொல்லலாம். ஏனென்றால்,அது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒரு நாடகம். கண்ணுக்குப் புலனாகாத அரங்கு “இன்விசிபிள் தியட்டர்” என்று அதை அழைப்பார்கள். போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்ட தனிநபர் நாடகம் அது. அதில் நடித்தவர் பிரேம் ஜெயந்த கபுகே என்ற கலைஞர். நல்ல விஷயம். நாடு முழுவதுக்குமான ஒரு முக்கியமான வேலைத் திட்டத்தை அவ்வாறு கலை உணர்வோடு அணுகியதும் அரங்கில் கூடியிருந்தவர்கள் எதிர்பாராத விதத்தில் அதிர்ச்சியூட்டும் ஒரு கலை நிகழ்ச்சி மூலம் விழிப்பை ஏற்படுத்தியதும் பாராட்டத்தக்கவை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இதயமாக இருக்கும் ஜேவிபி ஓர் அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில் அது மக்கள் மத்தியில் எப்படிக் கருத்தை கொண்டுபோக வேண்டும் என்ற விடயத்தில் தெளிவாகச் செயல்படுகிறது. போதைக்கு எதிரான போரை அனுர கலை உணர்வோடு தொடங்கியிருக்கிறார். ஆனால் போதைக்கு எதிரான யுத்தம் ஒரு கலையா? நிச்சயமாக இல்லை. அது ஈவிரக்கம் இல்லாத ஒரு கொலை நிகழ்ச்சிச் திட்டம் என்பதற்கு அகப்பிந்திய உதாரணம் பிரேசில். பிலிப்பைன்ஸ்,சில லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் நிலைமை அதுதான். ஏனென்றால் போதையை ஒழிப்பது என்பது ஒரு வகையில் போர்தான். நிச்சயமாக அது இன்விசிபில் தியட்டர் அல்ல. அப்படி ஒரு போரைச் செய்ய அனுர தயாரா? அந்தத் தொடக்க நிகழ்வில் அவர் கூறுகிறார்… “நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக, தனிப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், தனியாக முடியாது. அரசாங்கத்தால் மட்டும் முடியாது. பொலிஸால் மட்டும் முடியாது. அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம்…..” அவருடைய உரையின்படி போதைக்கு எதிரான போராட்டத்தை முழு நாட்டுக்கும் உரியதாக அவர் வர்ணிக்கிறார். அதாவது தமிழ்ப் பகுதிகளையும் இணைத்து நாட்டை ஒரு முழு அலகாகக் கருதி அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால்,கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரக்குமார் தமிழ்ப் பகுதிகளில் உள்ள வேறு ஒரு யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் வடக்கில் விதைத்ததை தெற்கில் அறுவடை செய்கிறது என்ற பொருள்பட அவர் உரையாற்றினார். அதாவது தமிழ் மக்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை ஊக்குவித்து, போதைப்பொருள் வலையமைப்பை உருவாக்கி, தமிழ் மக்களைப் போதையில் மிதக்க விடுவது என்பது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் ஒரு நிகழ்ச்சி நிரல் என்று கஜேந்திரக்குமாரும் உட்பட பெரும்பாலான தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கடந்த 16 ஆண்டுகளாகக் கூறிவருகிறார்கள். 2009க்குப்பின் தமிழ் இளையோர் இலட்சியவாதத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு திரளாக மாறுவதை தடுப்பதற்கு அவர்களைப் போதையால் திசைதிருப்பி போதையில் மூழ்கடிப்பதே அந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் ஆகும். அதன்மூலம் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் இனிமேலும் தலையெடுக்க முடியாதபடிக்கு அரசியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தோற்கடிக்கப்படும். அந்த அடிப்படையில் பார்த்தால் வடக்கு கிழக்கில் போதைப் பொருள் வலையமைப்பு எனப்படுவது ஒரு வகையில் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் இன்விசிபிள் யுத்தத்தின்-கட் புலனாகா யுத்ததின் ஒரு பகுதி தான். கஜேந்திரக்குமார் அதனைத் தனது நாடாளுமன்ற உரையிலும் பின்னர் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களிலும் தெரிவித்திருக்கிறார். ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கூறியதாக ஒரு தகவலை அவர் சுட்டிக்காட்டுகிறார். பெருமளவு போதைப் பொருட்கள் வடக்குக்கிழக்கு கடல் வழியாகவே நாட்டுக்குள் வருவதாக அந்த மேஜர் ஜெனரல் கூறியிருக்கிறார். ஆனால் வடக்கு கிழக்கின் நீண்ட கடல் எல்லைகளை முழுக்க முழுக்க ஸ்ரீலங்கா கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. அப்படியிருக்க அவர்களை மீறி எப்படிப் போதைப் பொருள் உள்ளே வருகிறது? அதுபோலவே போதைப்பொருள் குற்றவாளிகளைப் பற்றிய தகவல்களை மக்கள் போலீசாருக்கு வழங்கும்பொழுது அத்தகவல் உடனடியாகவே குற்றவாளிகளுக்குச் சென்றுவிடுகிறது. கைது செய்யப்படுகின்ற குற்றவாளிகள் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள். போன்ற குற்றச்சாட்டுக்கள் தமிழ் பகுதிகளில் நடக்கின்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. முன்னாள் வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், இந்நாள் ஆளுநர் வேதநாயகன் போன்றவர்கள் அதைக் குறித்து ஏற்கனவே பிரஸ்தாபித்திருக்கிறார்கள். அண்மையில் மாற்றம் அறக்கட்டளை நடத்திய ஒரு நூல் வெளியீட்டு விழாவிலும் ஆளுநர் வேதநாயகன் அதைச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார். மாற்றம் அறக்கட்டளை எனப்படுவது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரேயொரு அரசு சாராத போதைப்பொருள் புனர் வாழ்வு மையம் ஆகும். நீங்கள் வடக்கு கிழக்கில் விதைத்தவற்றைத்தான் தெற்கில் அறுவடை செய்கின்றீர்கள் என்ற பொருள்பட கஜேந்திரக்குமார் கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரை ஆற்றினார். அதைத்தான் முகநூலில் ஒரு மருத்துவர் எழுதினார் “வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான்” என்று. எனவே தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின் ஆளுநர்கள், போதையில் மூழ்கிய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள்,ஊடகவியலாளர்கள்…போன்றவர்கள் தரும் தகவல்களின்படி தமிழ்ப்பகுதிகளில் போதைப் பொருள் வலையமைப்பு எனப்படுவது கட்டமைப்புசார் இன அழிப்பின் ஒரு பகுதிதான். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு இன்விசிபிள் போர். இந்தப் போரை அனுரவால் முடிவுக்கு கொண்டு வர முடியுமா? எந்தப் படைக் கட்டமைப்பையும் போலீஸ் கட்டமைப்பையும் வைத்துக்கொண்டு தெற்கில் அவர் போதையை ஒழிக்கப்போவதாக கூறுகிறாரோ,அதே கட்டமைப்புகள்தான் தமிழ்ப் பகுதிகளில் போதைப் பொருள் வலையமைப்பைப் பேணுகின்றன என்று தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே முழுநாட்டையும் இந்த விடயத்தில் ஒர் அலகாகக் கருதி தெற்கில் போதை வலை பின்னலை முறியடிப்பது போல வடக்கிலும் அதை முறியடிக்க முடியுமா? வடக்கில் அவ்வாறு செய்வது என்று சொன்னால் அனுர முப்படைகளின் தளபதியாக எந்தெந்தக் கட்டமைப்புகளுக்குத் தலைமை தாங்குகின்றாரோ அதே கட்டமைப்புகளுக்கு எதிராக அந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியிருக்கும். அப்படிப்பார்த்தால் தேசிய மக்கள் சக்தி வாக்களித்த மாற்றத்தை அதன் மெய்யான பொருளில் தமிழ் மக்களுக்குக் காட்டுவதற்குரிய ஒரு சோதனைக் களமாக அது அமையுமா? அல்லது இது எதிர்க்கட்சிகளைத் தலையெடுக்க விடாமல் முடக்கும் அல்லது தற்காப்பு நிலைக்குத் தள்ளும் ஒரு நடவடிக்கையாக முடிந்து விடுமா? கடந்த சில மாதங்களாக அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம், பாதாள உலகக் குழுக்களைக் கைது செய்யும் நடவடிக்கை போன்றன எதிர்க்கட்சிகளைப் பெருமளவுக்கு தற்காப்பு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன. ஒருபுறம் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதியும் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள்,அரச அதிகாரிகள்,முன்னாள் அமைச்சர்கள் என்று உயர் பதவி நிலைகளில் இருந்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கிறது. இன்னொருபுறம் பாதாள உலகக் குற்றவாளிகள், போதைப்பொருள் குற்றவாளிகள் என்று பெருந்தொகையானவர்களைக் கைது செய்து வருகிறது. பாதாள உலகம் எங்கேயோ ஓரிடத்தில் அரசியல்வாதிகளோடும் கட்சிகளோடும் தொடர்புற்றிருப்பதாகவே தெரிகிறது. எனவே இந்த நடவடிக்கைகள் யாவும் ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு கட்சிக்கு அல்லது அரசியல்வாதிக்கு எதிரானவைகளாகத்தான் தெரிகின்றன. இதன்மூலம் ஏனைய கட்சிகள் யாவும் எங்கேயோ ஓரிடத்தில் குற்றக் கும்பல்களோடு தொடர்புடையவை என்ற ஒரு தோற்றம் மிகவும் கச்சிதமாகக் கட்டியெழுப்பப்படுகின்றது. இது அதன் தர்க்கபூர்விளைவாக தேசிய மக்கள்சக்தி அரசாங்கமானது சுத்தமானது, ஆனால் அதற்கு எதிரான எதிர்க்கட்சிகள் பெரும்பாலானவை குற்றக் கும்பல்களோடு தொடர்புடையவை என்ற ஒரு அரசியல் தோற்றத்தை கட்டியெழுப்புவதற்கு உதவுகின்றது. இதனால் எதிர்க்கட்சிகள் பதட்டம் அடைகின்றன; பெருமளவுக்குத் தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இவ்வாறு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்ட எதிர்க்கட்சிகள் தவிர்க்க முடியாமல் ஒன்றுசேர வேண்டிய ஒரு தேவை; நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. “கூட்டு எதிரணியினரின் நுகேகொடைக் கூட்டம் வெற்றியளிக்கவேண்டும் எனப் பிராத்திக்கிறேன். ஏனெனில், பொதுமக்களுக்கு பயனற்ற ஒன்றாக அது உள்ளது. மேற்படி கூட்டத்தை நடத்துவதால் பாதாள உலகக் கோஷ்டியையோ அல்லது போதைப்பொருள் வர்த்தகத்தையோ தடுக்க முடியாது. எனவே அது பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு விடயமாக இருக்காது” என்று அமைச்சர் லால்காந்த கூறியிருப்பதும் அதைத்தான். எனவே அரசாங்கம் போதை விலையமைப்பையும் பாதாள உலகம் வலையமைப்பையும் முழுமையாக ஒடுக்குமோ இல்லையோ இப்போதைக்கு எதிர்க்கட்சிகளைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் அரசியல் யதார்த்தம் அதுவல்ல. சுகததாஸ உள்ளரங்கில் போதை ஒழிப்புத் திட்டத்தை கட்புலனாகா அரங்கின்மூலம் கவர்ச்சியாகத் தொடக்கி வைப்பது வேறு. தமிழ்ப் பகுதிகளில் தமிழ் அரசியல்வாதிகள் குற்றஞ்சாற்றுவதுபோல கட்டமைப்பு சார் இன அழிப்பின் ஒரு பகுதியாகத் தொடரும் கட்புலனாகாப் போரை நிறுத்துவது வேறு. ஏனென்றால் இங்கு அனுர போர் புரிய வேண்டியது முப்படைகளின் தளபதியாக தான் தலைமை தாங்கும் கட்டமைப்புக்கும் எதிராகத்தான். https://www.nillanthan.com/7885/
-
விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம்..!
விஹாராதிபதியினால் குருந்தூர் பிரதேச பிரச்சனைக்கான தொல்பொருள் திணைகள மோசடி அம்பலம்..! Vhg அக்டோபர் 31, 2025 இன்றைய (31.10.2025)தினம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி போகும் வழியில் முக்கியமாக மிஹிந்தலை என்னும் பிரதேசத்திலே இருக்கும் பௌத்த விஹாராதிபதி அவர்களின் விசேட அழைப்பின் பெயரில் சென்றனர். அதற்கான காரணம், குருந்தூர் மலையிலே நடந்த ஒரு மிக முக்கியமான ஒரு விடயத்தைப் பற்றி தெரிவிப்பதற்கு ஆகும். குருந்தூர் மலை சம்பந்தமாக உங்கள் அனைவருக்கும் தெரியும். அதிலே ஒரு விகாரை கட்டப்பட்டது அண்மித்த காணிகள் மற்றும் நிலங்கள் தனிநபர்களினால் கையகப்படுத்தப்பட்டது. இதற்கான வழக்கினை எமது கட்சியினை சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான M A சுமந்திரன் அவர்கள் இதற்கான வழக்கினை வாதாடி இருந்தார் . விஹாராதிபதி அவர்கள் எனக்கு எழுத்து மூலமான ஓர் கடிதத்தை வழங்கி இருந்தார். அதில் குற்ற புலனாய்வு திணைக்களத்தின் (21.07.2025 )முறைப்பாட்டின் பிரதி ஆகும். அதில் அவர் பெயர் குறிப்பிட்டு தொல்பொருள் திணைக்களத்தில் பிரதி அட்சத்தராக செயல்பட்ட ஜயதிலக்க என்னும் நபர் பெளத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட சின்னங்களை மூடைகளில் கொண்டுவந்து சுற்றியுள்ள நிலங்களிலும் வயல் நிலங்களில் வீசி அவற்றை தொல்பொருள் நிலங்களாக ஆவணப்படுத்தி தொல் பொருள் திணைக்களம் கையப்படுதியத்தை தெரியப்படுத்தியிருந்தார். பெளத்த துறவியான இவர் இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்க விடயம். இவ் ஆவணத்தை என்னிடம் தருவதற்காக என்னை அழைத்திருந்தார். அத்துடன் அவருடனான சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலை தொடர்ந்து, ஓர் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்திருந்தார். இவ் நாட்டில் அனைத்து மக்களும் மும்மொழிகளான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை படிப்பிப்பதற்கான ஓர் சட்டமூலம் கொண்டுவந்து அனைவரையும் படிப்பிக்க வேண்டும் என்பதனை தெரிவித்திருந்தார். https://www.battinatham.com/2025/10/blog-post_773.html
-
பிள்ளையானை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு.!
பிள்ளையானை மேலும் 21 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தரவு.! Vhg அக்டோபர் 31, 2025 இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை இன்று(31.10.2025) நடைபெற்றது. அதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார். இதன்போது வழக்கு தொடர்பில் அவருடன் கலந்துரையாடியதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துவருகிறது. எனினும், கிழக்கின் பேராசிரியர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் யார் என்று கூட பிள்ளையானுக்கு தெரியாது எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதன்படி, தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய சுமார் ஏழரை மாதங்கள் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுளள நிலையில் மேலும் 21 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இதனடிப்படையில், தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும், இதனூடாக தனது உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அறிவித்து உத்தரவிடுமாறு கோரி, பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனு இன்று உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. https://www.battinatham.com/2025/10/21.html
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
2024, சனத்தொகை கணிப்பீட்டில் ஈழத்தமிழர்கள் நிலை..! 🔺வடமாகாணம்: 1.யாழ்ப்பாணம். தமிழர்கள். 2012, 98.9%~2024,98.6%. (.3% குறைவு) சிங்களவர்,2012,0.4% -2024,0.6% ( .2% அதிகரிப்பு) முஷ்லிம்:2012,0.4%- 2024,0,7% ( .3% அதிகரிப்பு) மலை. தமிழர்:2012,0.3%- 2024,0.1%. (.2% குறைவு) 2.கிளிநொச்சி. தமிழர்கள். 2012,97.3% - 2024,97.3% ( சமன்) சிங்களவர்,2012,1.2% - 2024,1.2% ( சமன்) முஷ்லிம்,2012,0.6% - 2024,0.9% (.3% அதிகரிப்பு) மலை. தமிழர். 2012,0.9% -2024,0.5% (.4% குறைவு) 3.மன்னார். தமிழர்கள். 2012,80.4% -2024,72.7%. (7.7% குறைவு) சிங்களவர்.2012,2.3% - 2024,0.5% (1.8% அதிகரிப்பு) முஷ்லிம்.2012,16.5% -2024,26.5%. (10% அதிகரிப்பு) மலை.தமிழர்.2012,0.7% - 2024,0.3% ( 0.4% குறைவு) 4.வவுனியா. தமிழர்கள், 2012,82.0% - 2024,78.4% ( 9.6% குறைவு) சிங்களவர்,2012,10.0% -2024,10.8% ( .8% அதிகரிப்பு) முஷ்லிம்,2012,6.8% - 2024,10.8% ( 4% அதிகரிப்பு) மலை. தமிழர்,2012,1.1% - 2024,0.9% ( 0.2% குறைவு) 5.முல்லைத்தீவு. தமிழர், 2012,85.8% - 2024, 88.1% ( 2.6% அதிகரிப்பு) சிங்களவர்,2012,9.7% - 2024, 9.1% (.6% குறைவு) முஷ்லிம், 2012,2.0% - 2024, 2.5% (.5% அதிகரிப்பு) மலை.தமிழர்,2012,2.5% -2024,0.2% ( 2.3% குறைவு) 🙌🏿வடமாகாணத்தில் 2012, கணக்கெடுப்புடன் 2024 ஒப்பீடு செய்தால்.. தமிழர் 20.2 வீதம் குறைவடைந்துள்ளது, சிங்களவர் 2.8, வீதம் அதிகரித்துள்ளது. முஷ்லிம்கள்,15.1வீதம் அதிகரித்துள்ளது. மலை.தமிழர்,3.5, வீதம் குறைவடைந்துள்ளது. 🔺கிழக்குமாகாணம்: 1.மட்டக்களப்பு. தமிழர்.2012, 72.3% - 2024,71.3% ( 1% குறைவு) சிங்களவர்,2012,1.3% -2024,1.2%. ( ,1% குறைவு) முஷ்லிம்,2012, 25.4% - 2024, 26.9% ( 1.5% அதிகரிப்பு) மலை. தமிழர்,2012,0.4% - 2024, 0.2% ( 0.2% குறைவு) 2.அம்பாறை. தமிழர்,2012, 17.3% - 2024, 16.9% ( 0.4% குறைவு) சிங்களவர்,2012,30.9% - 2024,37.1% ( 6.2% அதிகரிப்பு) முஷ்லிம்,2012,43.4% - 2024,45.6% ( 2.2% அதிகரிப்பு) மலை. தமிழர்,2012,0.1% - 2024, 0.1% ( சமன்) 3.திருகோணமலை. தமிழர், 2012, 30.7% - 2024, 28.9%. (1.8% குறைவு) சிங்களவர்,2012, 26.7% - 2024, 24.5% ( 2.2% குறைவு) முஷ்லிம்,2012,41.8% - 2024, 46.1% ( 4.4% அதிகரிப்பு) மலை. தமிழர்,2012, 0.3% - 2024, 0.2% (0.1% குறைவு) 🙌🏿கிழக்கு மாகாணத்தில் 2012, கணக்கெடுப்புடன் 2024, ஒப்பீடு செய்தால்.. தமிழர் 3.5, வீதம் குறைவு. சிங்களவர் 4.3, கூடியுள்ளது. முஷ்லிம்கள் 13,3, வீதம் கூடியுள்ளது. மலை தமிழர் 0.3, வீதம் குறைவு ♨️வடகிழக்கில் 2012,ஆண்டுடன் 2024, கணக்கெடுப்பை ஒப்பீடு செய்தால் தமிழர்கள் 23.4% வீதம் குறைவு. சிங்களவர் 7,1% வீதம் கூடியுள்ளனர். முஷ்லிம்கள் 28.3% வீதம் கூடியுள்ளனர். மலை தமிழர் 3.8% வீதம் குறைவு. வடகிழக்கு தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டியது 2012, ல் இருந்த தமிழர் தொகையைவிட 2024, ல் குறைந்தும், ஏனைய சிங்கள, முஷ்லிம் மக்கள் தொகை கூடியும் உள்ளது 12, வருடங்களில் ஏற்பட்ட மாற்றம். காரணங்கள் பல கூறலாம். இடப்பெயர்வு, பொருளாதார வறுமை, தொழில் இன்மை, இவைகளுடன் தமிழரின் பிறப்பு வீதம் ஏனைய சமூகத்துடன் ஒப்பிடும்போது குறைவடைந்து செல்கிறது என்பதும் உண்மை. -பா.அரியநேத்திரன். 01/11/2025
-
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை
மறந்து போனோமா வழுக்கி ஆற்றை sachinthaOctober 30, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியின் தெற்கில் எழிற்சூழலில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பெருமாகடவைப் பிள்ளையாரின் விழிகள் நிலைக்கின்ற இடத்தில் பிணக்கைக்குளம் விரிந்து கிடக்கிறது. மாரி காலத்தில் இக்குளம் நீரால் நிரம்பி வழியும் இக்குளத்தைச் சுற்றியுள்ள வயல்களுக்கு போதிய நீரை அக்காலத்தில் இக்குளத்தின் வழியாகவே வழங்குவார்கள். இது தென்புறமாக சிறு நதி ஒன்றினூடாக கடலை அடைகின்றது. அந்த நதி தான் யாழ்ப்பாணத்தின் ஒரே ஆறு! எழிலாறு! வழுக்கி ஆறு. அகத்தியர் முனிவர் காவேரி நதியை கமண்டலத்திலே அடைத்து வைத்திருந்தார். விநாயகர் காக உருவில் பறந்து சென்று கமண்டலத்தை கவிழ்த்து விட காவேரி நதி பொங்கி பெருகிப் பாய்ந்தது. அதைப்போலத் தான் இந்த வழுக்கி ஆறும் விபீசணன் இலங்கையை ஆண்ட காலத்திலே பெருமாலியன் என்ற ஒரு அரக்கன் வழுக்கி ஆற்றை மறித்து யாழ்ப்பாணத்தை வெள்ளத்துக்குள் ஆழ்த்த நினைத்தான். அப்போது பிள்ளையார் வந்து அவனை கொன்று வழுக்கி ஆற்றினைப் பாயவிட்டார் என்பது புராணக்கதை. யாழ்ப்பாண பெரும் வரலாற்றோடு இணைந்த இவ் ஆற்றை கந்தரோடை அரசர்கள் வெட்டிய கடல்கால் என்றும் கூறுவார்கள். பிணக்கை குளத்தை பெருமாலியன் மறித்த போது, நீர் தேங்கியது. அக்குளத்துக்கு பக்கத்திலேயே பிள்ளையாரும் காவலாக இருந்து விட்டார் அவர்தான் பெருமாகடவைப் பிள்ளையார். உண்மை பொய் எதுவோ பிணக்கைக் குளத்தில் மழைக்காலத்தில் ஊர் வெள்ளம் எல்லாம் நிறைகின்றது. அதனால் மழைக்காலத்தில் வழுக்கி ஆறு பொங்கிப் பெருகி வழிகின்றது. ஆனி, ஆடி மாதத்தில் மழை குறைவு என்பதால் வழுக்கியாறு வறண்டு காணப்படுகின்றது. வழுக்கி ஆற்றுப் படுகையில் புட்களும், முட்செடிகளும் பரவிக் கிடக்கின்றன. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் இந்த ஆற்றைப் பார்க்க வேண்டும். வெள்ளம் கரை புரண்டு ஓடும். வெள்ளத்துக்கு மேலால் தலையை தூக்கி படி பயிர்கள் நிற்கும். வழுக்கி ஆற்றின் இருகரைகளிலும் நீர் இறைப்புமேடைகள் காணப்படுகின்றன. ஆற்றில் நீர் பாயும் போது வயல்களில் காய்கறிப் பயிர்கள் பயிரிட்டால் நீரைக் குறைத்துப் பாய்ச்சுவார்கள். நீர் இறைப்பு மேடைகளைப் போலவே ஆற்றின் படுகையில் குறுக்கு அணைகள் கதவுடன் காணப்படுகின்றன. பெருமாகடவைப் பிள்ளையார் கோயிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் பிணக்கைக் குளம் காணப்படுகின்றது அக்குளத்தின் தென்கிழக்கு மூலையில் தான் வழுக்கி ஆறு பிணக்கைக் குளத்தை விட்டு வெளியேறுகின்றது. அவ் ஆற்றுவரப்பில் நடந்து சென்றால் வழுக்கியாற்றின் போக்கில் உப்புக்குளம் குறுக்கிடும். வழுக்கி ஆறு போகின்ற பாதையில் உள்ள பல குளங்களை இணைத்துக் கொண்டே செல்கின்றது. இன்னும் கொஞ்ச தூரம் சென்றால், ஆற்றுக்குக் குறுக்கே ஒரு வீதி செல்கின்றது. அதுதான் கந்தரோடை- மாசியப்பட்டி வீதி. அதில் கந்தரோடை குளமும் நான்கு கோயில்களும் உள்ளன. அதாவது, வழுக்கியாற்றின் இடது பக்கத்தில் பிள்ளையார், மீனாட்சி, நாகம்மாள், கண்ணகி ஆகிய தெய்வங்களின் கோயில்களும், குளம் மற்றும் வயலும் உள்ளது. இவ்வாறு அளவெட்டி- கந்தரோடையை கடந்தால் சிறு வாய்க்கால் ஒன்று வழுக்கி ஆற்றுடன் இணைகின்றது. அந்த இடத்தை தாண்டிச் சென்றால். சங்குவேலி, சண்டிலிப்பாய் ,கட்டுடை அதில் வழுக்கை ஆற்றின் பாதையில் குறுக்கிடும் பெரிய மதகு உள்ளது. இதனை ஐந்துகண் மதகு என்று கூறுவார்கள். இதில் 5 வாசல்கள் உள்ளன. இதனால் வெள்ளமானது வேகமாக பாயக்கூடிய வகையில் காணப்படுகின்றது. அதற்கு முன்னால் சண்டிலிப்பாய் சீரணி அம்மன் ஆலயமும் உள்ளது. அளவெட்டி – கட்டுடை வரை வயல்களும் கோயில்களும் காணப்படும். கட்டுடைக்கு அப்பால் வயல்களும், சுடலைகளும் அதிகளவில் காணப்படுகின்றன. இதன் மூலம் இறைவனை மறக்காமல் வாழ்ந்து இறுதியில் மயானத்தை அடைந்தால் பேரின்ப கடலை ஈற்றில் சேரலாம் என்பது புலப்படும். இவ்வாறே சென்றால் வழுக்கி ஆற்றின் போக்கில் சில மாறுதல்கள் புலப்படும். வழுக்கி ஆற்றின் படுகை இரு மடங்காக அகலிக்கின்றது. அத்தோடு ஆற்றின் இரு மருங்கும் தென்னந் தோட்டங்களும் காணப்படும். இவ்வாறு கட்டுடையைத் தாண்டி நவாலியை அடையலாம். நவாலியைத் தாண்டிச் சென்றால் அராலிப் பாலத்துடன் கிட்டத்தட்ட 16 கிலோமீற்றர் தொலைவில் கடலோடு இணைந்து வழுக்கியாறு தனது நீண்ட பிரயாணத்தை முடிக்கின்றது. யாழ்ப்பாண மக்களின் நீர் வளத்தில் பிரதான ஒரு இடத்தை வழுக்கியாறு பெறுகின்றது. விலங்குகளுக்கு பல சமயங்களில் தாகம்தீர்க்கும் வகையில் செயற்பட்டுள்ளது. அத்தோடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சாணியாகவும் இருக்கின்றது. இவ் ஆறு பருவகால மழைவீழ்ச்சி குறைவினாலும், காலநிலை மாற்றங்களினாலும் நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது. வெயில் காலத்தில் ஆற்றுப்படுகை முழுமையாக வரண்டு விடுகின்றது. உவர்நீர் ஊடுறுவல் அதிகரிப்பு, காலநிலை மாற்றம், சனத்தொகை அதிகரிப்பு, கழிவுகளைக் கொட்டுதல் போன்றவற்றால் இவ் ஆறு மாசடைந்து வருகின்றது. சமையல் கழிவுகளை மக்கள் கொட்டுவதனால் அவை ஆற்றோடு கலந்து ஆற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. இவ்வாறாக பலவகையில் இவ் ஆறானது மாறுபடுகின்றது. யாழ்ப்பாணத்தின் உயிர்நாடியில் ஒன்றான வழுக்கி ஆற்றினை மீள மாற்றியமைக்கும் வகையில் கழிவு மறுசுழற்சி ஊக்குவிப்பு, நீர்மட்டம் மற்றும் நீர்த்தரம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளல் போன்ற ஊக்குவிப்பு செயற்பாடுகள் மூலம் இதனைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினரிடம் எமது தொன்மங்களை ஒப்படைக்கலாம். பானுஷா நிமல்… ஊடகக் கற்கைகள் துறை, யாழ் பல்கலைக்கழகம் https://www.thinakaran.lk/2025/10/30/featured/161276/மறந்து-போனோமா-வழுக்கி-ஆற/
-
தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி !
தன்சானிய தேர்தல் வன்முறை : 3 நாட்களில் 700 பேர் பலி ! 01 Nov, 2025 | 01:49 PM தன்சானியாவில் கடந்த புதன்கிழமை (ஒக்டோபர் 29) நடந்த பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் மூன்று நாட்களில் சுமார் 700 பேர் கொல்லப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சித் தரப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. முக்கிய வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடை செய்யப்பட்டதால், எதிர்க்கட்சியை நசுக்கும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதான எதிர்க்கட்சியான சடேமா (Chadema) கட்சியின் செய்தித் தொடர்பாளர், பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளார். தலைநகர் டார் எஸ் சலாமில் சுமார் 350 பேரும், மவான்ஸா (Mwanza) நகரில் 200-க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டதாகவும், பிற பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் சேர்த்து, மொத்த பலி எண்ணிக்கை சுமார் 700 ஆக இருக்கலாம் என்றும் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. அவர்கள் இந்த உயிரிழப்பு விவரங்களை வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் மூலமாகக் கட்சி உறுப்பினர்களின் வலையமைப்பு மூலம் சேகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாகவும், மொத்த எண்ணிக்கை 700 முதல் 800 வரை இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பு குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அலுவலகமும் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் குறித்து கவலை தெரிவித்ததுடன், பாதுகாப்புப் படைகள் நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கிடைத்த தகவல்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. தேர்தலுக்கு முன்னரே பிரதான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டனர். இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வன்முறையைக் கட்டுப்படுத்த நாட்டின் முக்கிய நகரங்களில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை குறித்த தகவல்களைச் சரிபார்க்க முடியாத அளவிற்கு நாடு முழுவதும் இணையத்தள சேவை துண்டிக்கப்பட்டிருப்பதும் தகவல் சரிபார்ப்பை கடினமாக்கியுள்ளது. https://www.virakesari.lk/article/229225
-
வெற்றிலை துப்ப முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு
வெற்றிலை துப்ப முயன்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு adminNovember 1, 2025 யாழ்ப்பாணத்தில் கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த வேளை தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் அச்செழு பகுதியை சேர்ந்த மேசன் தொழிலாளியான சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வேளை வெளியில் மழை பெய்து கொண்டிருந்தமையால் , மேல் மாடியில் இருந்து கீழே வெற்றிலையை துப்ப முயன்ற வேளை கால் இடறி கீழே விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்தவரை சக தொழிலாளிகள் மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். https://globaltamilnews.net/2025/222148/
-
உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு
உடைந்த வாக்குறுதிகளும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமும்: மாகாண சபை விவகாரத்தில் NPPயின் தவிர்ப்பு October 31, 2025 — ராஜ் சிவநாதன் — சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பெயரில் வெளியான ஒரு பதிவு பலரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்ட சில கருத்துகள் உண்மையை பிரதிபலித்தன. அவர் வடக்கில் மீண்டும் ஒரு போர் தேவையில்லை என்றும், மாகாண சபை (PC) அமைப்பு தமிழர்கள் தாமே விரும்பிய ஒன்றாகும் என்றும் கூறியதாக தெரிகிறது. மேலும், அந்த அமைப்பில் குறைகள் இருந்தால் அவை திருத்தப்பட வேண்டும் என்றும், தேவையான முன்னேற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, அநுரகுமார திசநாயக்க தெளிவாகவே 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்துவேன் என்று உறுதியளித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை மறுபடியும் வலியுறுத்தினார். வெளிநாடுகளில் உரையாற்றும் போதும், “மாகாண சபை அமைப்பு தமிழர்களின் இரத்தத்தால் பெற்றது” என்றும் தெரிவித்தார். ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் வெற்று ஒலிகளாக மாறிவிட்டன. 1987ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு அரசும் போல, மாற்றத்தின் பெயரில் மறைமுகமான அரசியல் மந்தநிலை மீண்டும் தோன்றியுள்ளது. அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான வாக்குறுதிகளை வழங்கியபோதிலும், NPP நிர்வாகம் அவற்றை அமைதியாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. தவிர்ப்பின் முறைமை: ஜனாதிபதி மற்றும் அவரது அரசு உண்மையில் தமிழ் பிரச்சினையைத் தீர்க்க விரும்பியிருந்தால், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். சட்ட வடிவம் உள்ளது, முன்னுதாரணங்கள் உள்ளன, தேவையும் மிகுந்தது. ஆனால் பதவியேற்று பதினைந்து மாதங்கள் ஆன பிறகும், அரசு காரணங்களையே கூறுகிறது. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குறைந்தபட்சம் இரண்டு மாகாண சபைகளை மீண்டும் செயல்படுத்தும் வாய்ப்பு இருந்தபோதும், “வரையறைச் சிக்கல்கள்” மற்றும் “அமைவுச் சட்ட திருத்தம்” போன்ற காரணங்களின் பெயரில் தப்பித்துக் கொண்டது. இதன்மூலம் மைய அரசு, புறநிலப் பகுதிகளுடன் நம்பிக்கையை மீண்டும் உருவாக்கும் அரிய வாய்ப்பை இழந்துவிட்டது. மாகாண மட்டத்தில் அதிகாரத்தை வழங்கியிருந்தால், அது ஜனநாயகப் பங்குபற்றலை உண்மையில் ஊக்குவித்திருக்கும். ஆனால் தாமதம், NPPயின் அரசியல் நடைமுறை முன்னோடிகளிடமிருந்து வேறுபடவில்லை என்பதையே நிரூபித்துள்ளது. மறைந்திருக்கும் அமைவுச் சட்ட நோக்கம்: அரசின் தயக்கத்திற்குப் பின்னால் இன்னொரு காரணம் மறைந்திருக்கலாம். NPP மற்றும் JVP வட்டாரங்களில் புதிய அமைவுச் சட்டம் உருவாக்கப்படுவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த அமைவுச் சட்டம் 13ஆம் திருத்தத்தை நீக்கவோ அல்லது அதன் அதிகாரங்களை குறைக்கவோ வாய்ப்புள்ளது. அதன் அரசியல் தர்க்கம் எளிமையானது, ஆனால் சூழ்ச்சியானது: தற்போதைய 13A சட்டத்தின் கீழ் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டால், அந்த அமைப்பு சட்டபூர்வமாக வலுப்பெறும்; பின்னர் அதை ரத்து செய்வது கடினமாகிவிடும். ஆகையால் தேர்தல்களை தவிர்ப்பது அரசின் திட்டமிட்ட அரசியல் உத்தி. 13A அமைப்பை செயலிழந்த நிலையிலேயே வைத்திருந்து, புதிய அமைவுச் சட்டத்தின் கீழ் அதிகாரத்தை கொழும்பில் மையப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குகிறது. இதன்மூலம் NPP, “பகுத்தறிவான நிர்வாக முறைமை” என்ற பெயரில் அதிகாரப் பகிர்வை குறைக்கும் நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது. JVPயின் நெறி சுமை: இந்த முரண்பாடு JVPயின் அரசியல் வளர்ச்சியின் மையத்தையே வெளிப்படுத்துகிறது. ஒருகாலத்தில் மாகாண சபை அமைப்பை “வெளிநாட்டு தலையீடு” என்று குற்றம்சாட்டிய அதே இயக்கம், காலப்போக்கில் அதிலிருந்தே அரசியல் பலன் பெற்றது. அதன் பல தலைவர்கள் 13A மூலம் உருவாக்கப்பட்ட மாகாண அரசியல் அமைப்புகளின் வழியே உயர்ந்தனர். இப்போது அதே அமைப்பை தகர்ப்பது, அவர்கள் சொந்த வரலாற்றையும், சமாதானத்திற்காக போராடியவர்களின் தியாகத்தையும் மறுப்பதாகும். தெற்கு மாகாணங்கள் மாகாண சபை அமைப்பை நிராகரிக்க விரும்பினாலும், வடக்கு மற்றும் கிழக்கில் அந்த அமைப்பு செயல்படுவதற்கான அரசியல் மற்றும் நெறி பொறுப்பு JVPக்கு உண்டு. உண்மையான சமரசம் சமநிலையற்ற முடிவுகளை வேண்டுகிறது — அரசியல் சுகமான இடங்களில் அல்ல, மிகத் தேவையான இடங்களில் சுயாட்சியை வழங்கும் தைரியம் தேவை. ஒருமைப்பாட்டுக்கான தவறவிட்ட வாய்ப்பு: அதிகாரப் பகிர்வு என்ற கருத்து இலங்கைக்கே புதிதல்ல. உலகின் பல ஜனநாயக நாடுகளில், ஐரோப்பாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் தொடங்கி, உள்ளூராட்சி நிர்வாகமே திறம்பட செயல்படும் ஆட்சியின் முதுகெலும்பாக உள்ளது. ஆனால் இலங்கை, ஒவ்வொரு முடிவையும் மையத்திலிருந்து கட்டுப்படுத்த முயல்வதன் மூலம் செயற்திறனையும் நம்பிக்கையையும் இழந்துவிட்டது. NPPக்கு அந்த கதைநடையை மாற்றும் வாய்ப்பு இருந்தது, இடதுசாரி அரசு கூட பொறுப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, சட்டப் பூர்வ வாக்குறுதிகளை மதிக்கும் ஆட்சியை உருவாக்க முடியும் என்பதை நிரூபிக்க. ஆனால் அது சீர்திருத்தத்தின் சவாலை விட கட்டுப்பாட்டின் வசதியையே தேர்ந்தெடுத்தது. முடிவுரை: தமிழ் சமூகமும் அரசும் இடையிலான நம்பிக்கையின் சிதைவு ஒரே இரவில் நிகழவில்லை. அது பல தசாப்தங்களாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் மீறலாலும் அரசியல் சூழ்ச்சிகளாலும் உருவானது. இப்போது NPP அதே பட்டியலில் தன்னைச் சேர்த்துக் கொள்வதற்கான அபாயத்தில் உள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைத்து, 13ஆம் திருத்தத்தை குறைக்கும் புதிய அமைவுச் சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம், அரசு ஆட்சியை நவீனப்படுத்துவது அல்ல, நம்பிக்கையின்மையை மேலும் உறுதிப்படுத்துகிறது. உண்மையான தலைமையேனும் கடந்த வாக்குறுதிகளை மதித்து, நிலவும் சட்டத்தின் கீழ் தேர்தல்களை நடத்தி, உரையாடலின் வழியே ஒருங்கிணைந்த நிர்வாகத்தை உருவாக்குவதாக இருக்கும். அது நிகழும்வரை, “புதிய அரசியல் பண்பாடு” என்ற வாக்குறுதி இலங்கையின் நிறைவேறாத சீர்திருத்த வரலாற்றில் இன்னொரு வெற்று கோஷமாகவே இருக்கும். https://arangamnews.com/?p=12407
-
யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு
யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு வெள்ளி, 31 அக்டோபர் 2025 04:30 AM யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான யோசனைகள் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக முன் வைக்கப்பட்டு , மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு , பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மண்டைதீவில் மைதானம் அமைக்க அடிக்கல் நாட்டி , அதன் ஆரம்ப பணிகளை மேற்கொண்டார். அதனை அடுத்து , குறித்த பகுதி பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதி , வலசை பறவைகள் வந்து தங்குமிடம் எனவும் , மைதானம் அமையப்பட்டால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விடும் எனவே மைதானம் அமைக்கப்பட கூடாது என இயற்கை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர் அந்த நிலையில் நேற்றைய தினம் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர், யாழ். மாவட்ட மேலதிக செயலர் , வடமாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் , வேலணை பிரதேச செயலாளர் , தவிசாளர், இலங்கை துடுப்பாட்ட சபை இணைப்பாளர் ,கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர், நீர்வள சபை உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள், கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், வனவளத்திணைக்கள பிராந்திய உத்தியோகத்தர், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர், நகர அதிகார சபை உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தினர் உள்ளிட்டோர் மைதானம் அமைக்கப்படும் இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர். https://jaffnazone.com/news/51780
-
யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது
யாழ் . மாநகர சபையின் சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டுள்ளது வெள்ளி, 31 அக்டோபர் 2025 05:05 AM யாழ் மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளரும் வடக்கு மாகாண சபை அவைத் தலைவருமான சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ் மாநகர சபையின் முன்னைய கட்டிடத்திற்கு கிழக்கு பக்கமாக இருந்த வாசலுக்கு எதிராக ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடமும் மாநகர சபையின் அலுவலகமாக இருந்தது. அது ஒரு கொள்வனவு செய்யப்பட்ட கட்டிடம். ஆனால் அண்மையில் அதனை தற்செயலாக பார்த்தபோது அது மாநகர சபையினுடைய சொத்து என்ற நிலையில் இல்லாமல் வேறு பலர் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நிலையில் இருந்தது. அதை ஆராய்ந்த பொழுது அந்த சொத்துக்கு கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர சபையினுடைய ஆதன வரி பதிவேடுகளில் கூட பதிவு மாற்றம் செய்யப்பட்டதாக நம்பகரமாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. அந்தக் கட்டடத்தின் மேல் பகுதியிலேயே தான் பொது நூலக ஸ்தாபகர் செல்லப்பா பொது நூலகத்தை ஆரம்பித்து வைத்தார். அதற்கு ஆதாரமாக யாழ் மாநகர சபையின் வெள்ளி விழா மலரை குறிப்பிடலாம். அந்த மலர் வெளியிடும் போது யாழ் மாநகர சபையில் கணக்காளராக நான் இருந்தேன். குறித்த காணி தனியாரின் காணியாக இருந்தது. யாழ் மாநகர சபை, நகர சபையாக இருந்த காலத்தில் அந்த கட்டிடம் தேவை கருதி கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இந்த புத்தகத்திலே கொள்வனவு செய்த கட்டிடங்கள் என்று பட்டியலில் களஞ்சியசாலை வசதிக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக கடந்த 23ஆம் திகதி மாநகர சபை ஆணையாளருக்கு ஒரு கடிதம் எழுதி இது தொடர்பிலான நடவடிக்கைக்கு வலியுறுத்தி இருக்கிறேன். இந்த விடயத்தை வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன். 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னரே தான் இந்த இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அது பற்றை வளர்ந்து மாநகர சபை சொத்தாகவே பார்க்கப்படவில்லை. தற்போது அங்கு தற்காலிக வியாபார நிலையம் ஒன்று இயங்குகிறது. அது குத்தகைக்கு கொடுத்திருக்க வாய்ப்பில்லை. உடனடியாக அதனை மீளப்பெறுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாநகர முதல்வருக்கும் கடிதத்தின் பிரதியை அனுப்பி இருக்கிறேன். குறித்த விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த மோசடிக்கு யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயம் வெளிப்படுத்தப்பட வேண்டும். மாநகர சபையின் சொத்தை மாநகர சபையின் பதிவேட்டிலேயே மாற்ற முடியும் என்று சொன்னால் எந்த அளவுக்கு நிலைமை இருக்கிறது. உடனடியாக இந்த விடயத்தில் ஆணையாளர், ஆளுநருடன் கதைத்து புதிதாக உருவாக்கப்பட்ட பொலிஸாரின் விசேட பிரிவில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலேயே இந்த விடயத்தை முறைப்பாட்டை செய்ய வேண்டும். இந்த மோசடிக்கு துணை போனவர்களை அம்பலப்படுத்த வேண்டும் - என்றார். https://jaffnazone.com/news/51784
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
மாவட்ட ரீதியிலான சனத்தொகைப் பரம்பல் யாழ்ப்பாணம் - 584,000 இன ரீதியிலான சனத்தொகைப் பரம்பல் சிங்களவர் - 74.9% இலங்கைத் தமிழர் - 11.1% மலையகத் தமிழர் - 4.1% முஸ்லிம் - 9.3% ஏனையோர் - 0.5% சமய ரீதியிலான பரம்பல் பெளத்தர் - 70.1% இந்து - 12.6% இஸ்லாம் - 9.7% கத்தோலிக்கர் - 6.2% பிற கிறீஸ்தவர் - 1.4% https://www.statistics.gov.lk//Resource/en/Population/CPH_2024/Population_Preliminary_Report.pdf
- IMG_4136.jpeg
- IMG_4137.jpeg
-
கிருபன்