Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழரசின் வேட்பாளர்கள் adminOctober 10, 2024 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிட தமிழரசு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். https://globaltamilnews.net/2024/207317/
  2. தமிழரசு கட்சியினா் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி adminOctober 10, 2024 இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கையளித்துள்ளனர். வேட்புமனுவை கையளிப்பதற்கு முன்பதாக யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், தந்தை செல்வாக்கு அஞ்சலி செலுத்தினார்கள். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர். https://globaltamilnews.net/2024/207324/
  3. விமலின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை adminOctober 10, 2024 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில், ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின், எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என வீரவன்ச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்டு, பெரும்பான்மையை அடையாத பட்சத்தில் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்காமல் ஆட்சியமைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த வீரவன்ச, எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அடுத்த சில நாட்களில் கட்சி வெளியிடும் எனவும் தொிவித்துள்ளாா். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இரண்டாம் கோட்டாபய ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அவ்வாறான முயற்சிகளில் தேசிய சுதந்திர முன்னணியும் ஒரு கட்சியாக இருக்காது எனவும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளாா். https://globaltamilnews.net/2024/207329/
  4. புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் Vhg அக்டோபர் 09, 2024 புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என முன்னாள் போராளி கந்தசாமி இன்பராஜா தெரிவித்துள்ளார். வவுனியா வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை கந்தசாமி இன்பராஜா தலைமையிலான சுயேட்சைக்குழு இன்றையதினம் (09-10-2024) தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சை குழுவில் போட்டியிடுகின்றது. நாடாளுமன்ற தேர்தல் இதனையடுத்து, வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (09-10-2024) வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், கந்தசாமி இன்பராஜாவும் கலந்துகொண்டு தமது கருத்தை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் போராளிகள், மாற்றத்தினை கொண்டு வருவதற்காக களம் இறங்கியுள்ளோம். இன்று மக்களும் போராளிகளும் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் அத்தோடு தங்களுக்குள் முரன்பட்டு சண்டையிட்டுக்கொண்ட அரசியல்வாதிகள், தேர்தலுக்காக புத்தில் இருந்து ஈசல் வருவது போல வருகின்றனர். அத்துடன் இளையவர்களுக்கும் புலிகளுக்கும் வாய்ப்பை கொடுக்காமல் நரிகள் எல்லாம் வெளியே வருகின்றனர் ஆனால் நரிகளுக்கு பாடம்புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2024/10/blog-post_54.html
  5. அநுரவின் பதவியில் முதல் 10 நாள் செயற்பாடுகள்: தொடரும் மாற்றங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முதல் 10 நாள் செயற்பாடுகள்: 01.டொலரின் பெறுமதி 300 ரூபாய்க்கு கீழே காணப்படுகிறது. 02.பங்குச் சந்தை வீழ்ச்சியடையாமல் வரலாற்றில் மிக விரைவான வளர்ச்சியைக் காட்டுகிறது. 03.வரலாற்றில் மிக அமைதியான தேர்தல் நடைபெற்றது. 04. சர்வதேச அளவில் நாடு ஓரங்கட்டப்படாமல் அனைத்து பலம் பொருந்திய நாடுகளின் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றமை. 05. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தமை. 06. ஆடம்பரமற்ற முறையில் சத்தியப் பிரமான நிகழ்வை நடாத்தி, பல இலட்சங்கள் சேமிக்கப்பட்டமை. 07. பேராசிரியர் பட்டம் பெற்ற பெண்ணை பிரதமராக நியமித்ததன் மூலம் பெண்கள் அரசியல் மேலும் ஊக்குவிக்கப்பட்டது. 08. ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புப் படைகளில் மேலதிகமாக இருந்த பாதுகாப்பு அதிகாரிகளையும் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு என அளிக்கபட்டிருந்த அவசியமற்ற பாதுகாப்பு அதிகாரிகளையும் நீக்கி சாதாரண கடமைகளில் ஈடுபடுத்தியமை. 09. அனைத்து அரச வாகனங்களையும் மீள பெற்றுக் கொண்டமை. 10. காணாமல் போன அரச வாகனங்கள் குறித்து ஆய்வு நடாத்தி விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளமை. 11. முட்டை வர்த்தக ஏகபோகம் தடுக்கபட்டதன் மூலம் முட்டை விலை குறைந்தமை. 12. பிரதமரின் உத்தரவின் பேரில் பாடசாலைகள் அரசியல் மயமாவது தடுக்கப்பட்டமை. 13. அரசியல் தொடர்புகள் இல்லாத, சம்பந்தப்பட்ட துறையில் அனுபவமும் கல்வித் தகுதியும் கொண்ட அதிகாரிகளை அமைச்சுச் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களாகவும் நியமித்தமை. 14. ஹெக்டயார் ஒன்றுக்கு வழங்கப்படும் விவசாயிகளின் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டமை. 15. அரசாங்கத்தின் அனுசரணையில் இடைநிலை நிறுவனங்களின் தலையீடு இல்லாமல் இலங்கையில் விசா வழங்கும் செயல்முறையை மேற்கொண்டமை. 16. ஜனாதிபதி பதவியேற்று மிகக் குறைந்த காலத்தில் அதிகமான ஊழல்வாதிகள் மீது வழக்குத் தொடரப்படவுள்ளமை. 17. அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பங்களாக்களை மிகக் குறுகிய காலத்திற்குள் உடனடியாக மீட்பதற்கான உத்தரவுகளை வழங்கப்பட்டுள்ளமை. 18. மீனவ சமூகத்திற்கு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டமை. 19. பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமித்தமை. 20. கோட்டை ஜனாதிபதி மாவத்தை மற்றும் பரோன் ஜயதிலக மாவத்தையை மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டமை. 21. ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்நாட்டில் தற்போது வேலை பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 11 திட்டங்களின் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை . 22. கலால் வரி மோசடி செய்திருந்த பல நிறுவனங்களின் உரிமம் இரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டமை. 23. எரிபொருள் விலையை படிப்படியாக குறைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டமை. 24. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விற்பனை செய்யப்படாது என அறிவித்தமை. 25. வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியின் ஆலோசகர்கள் சம்பளம் அல்லது கொடுப்பனவுகள் எதுவுமின்றி கௌரவ சேவையாக பணியாற்ற முன்வந்துள்ளமை. 26. ஜனாதிபதியின் ஒரு பயணத்திற்கு அநாவசியமாக இரண்டு அல்லது மூன்று ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி முப்பது லட்சங்களுக்கு மேல் செலவழித்து இந்த நாட்டின் அபரிமிதமான விரயம் நிறுத்தப்பட்டமை. பல முற்போக்கான மாற்றங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தகக்து. https://akkinikkunchu.com/?p=294489
  6. இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக் கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் இந்தியாவின் 70 ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, கடந்த 2022 ஆண்டு இயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் இரு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா புறடக்ஸன் தயாரித்திருந்தது. இதில் முதல் பாகம் 2022ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2023ஆம் ஆண்டும் வெளிவந்தன. பொன்னியின் செல்வன் முதலாவது படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைதிருந்தன. சிறந்த தயாரிப்பாளர் - லைகா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் சிறந்த பின்னணி இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான் சிறந்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சிறந்த இசை வடிவமைப்புக்கான விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி. ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/sri-lanka/2024/10/08/இந்திய-ஜனாதிபதியிடம்-இருந்து-இந்திய-ஜனாதிபதியிடம்-தேசிய-விருதினை-பெற்றுக்-கொண்டார்
  7. இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம்: அநுர அரசாங்கமும் நிராகரித்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மான வரைவை இலங்கை நிராகரித்துள்ளது. 51/1 தீர்மானத்திற்கு நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், உள்நாட்டு நடைமுறைகள் மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய மனித உரிமைப் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் இலங்கை ஈடுபடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://oruvan.com/sri-lanka/2024/10/08/the-anura-government-rejected-the-un-human-rights-resolution-regarding-sri-lanka
  8. மனோவுடன் இணைந்தார் பாரத் அருள்சாமி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளராகவும், உப தலைவராகவும் செயற்பட்ட பாரத் அருள்சாமி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இயங்கும் ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்துள்ளார். பாரத் அருள்சாமி மனித வள அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார், மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த எஸ். அருள்சாமியின் மகனும் ஆவார். ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்துள்ள பாரத் அருள்சாமி, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கீழ் பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைக் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக பாரத் அருள்சாம் நேற்றைய தினம் அறிவித்திருந்தார். கட்சியின் பொது செயலாளருக்கு பதவி விலகல் அனுப்பியிருந்தார். இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்குள் அண்மைய நாட்களாக உட்கட்சிபூசல்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான பின்னணியிலேயே பாரத் அருள்சாமியும் பதவி விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது https://oruvan.com/sri-lanka/2024/10/08/bharat-arulsamy-joined-mano-ganesans-party
  9. பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், நமது தூர்தர்ஷனில் மகாபாரதம் ஒளிபரப்பானது. அப்போதுதான் தமிழ்நாட்டில் டெலிவிஷன் என்பது புழக்கத்தில் வந்த சமயம். தூர்தர்ஷனைத் தவிர வேறு சேனல்கள் இல்லை. எனவே பலருடைய வீடுகளில் அப்போது தூர்தர்ஷனை மட்டுமே விரும்பி பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறுதோறும் காலையில் 10 மணி அளவில் முக்கால் மணி நேரம் பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் ( அக்டோபர், 2, 1988 – 24 ஜூன் 1990) என்ற பிரம்மாண்டமான தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பானது. (தயாரிப்பு: பி.ஆர்.சோப்ரா டைரக்‌ஷன்: ரவி சோப்ரா) அந்த தொடர் ஒளிபரப்பாகும் சமயம் ஊரே அமைதியாக இருக்கும். சாலையில் அவ்வளவாக போக்குவரத்து குறிப்பாக இருசக்கர வாகனங்கள் கூட இருக்காது. அதன் தலைப்பு பாடலோடு கண்ணனின் சங்கு முழக்கமும் கேட்டால் மகாபாரதம் டீவியில் ஒளிபரப்பு தொடங்கி விட்டது என்று அர்த்தம். மகாபாரதம் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை என்பதால் அந்த தொடரை பார்த்தவர்கள் அனைவருமே ரசித்தனர். கதை தெரியாதவர்களுக்கு மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவி செய்தனர். கதையின் பிரமாண்டத்திலும் அதன் பிரமிக்கத்தக்க காட்சி அமைப்புகளிலும் மக்கள் மனதைப் பறி கொடுத்தனர். எனக்கு ஆங்கிலத்தில் வெளிவந்த பிரமாண்டமான பத்துக் கட்டளைகள் ( TEN COMMANTMENTS) மற்றும் பென்ஹர் (BENHAR) திரைப்பங்களை நினைவூட்டின. தொடரில் நடித்த நடிகர்களும் நடிகைகளும் மகாபாரத கதைப் பாத்திரங்களுக்கு உயிரூட்டினர். (படம் – மேலே) கதையின் தொடக்கத்தில் வரும் மன்னன் சந்தனு வேடத்தில் ரிஷப் சுக்லா (Rishabh Shukla) மற்றும் தனது முதல் ஏழு குழந்தைகளைக் கங்கையில் கொல்லும் கங்காதேவியாக நடித்த கிரோன் ஜுனேஜா (Kiron Juneja) (படம் – மேலே) சக்திமான் தொடரில் சக்திமானாக நடித்தவர் முகேஷ் கன்னா.( Mukesh Khanna ). அவர் இந்த தொடரில் பிதாமகர் பீஷ்மராக நடித்து இருந்தார். நல்ல உயரம். நல்ல குரல் (படம் – மேலே) பிறவிக் குருடனாகப் பிறந்த ஹஸ்தினாபுரத்து அரசன திருதிராஷ்டிரன் வேடத்தில் வந்து மனங் கவர்ந்தவர் கிரிஜா சங்கர் (GIRIJA SHANKAR) (படம் – மேலே) கிருஷ்ணர் வேடத்தில் நிதிஷ் பரத்வாஜ் என்.டி ராமராவ் என்றால் அவர் திரைப்படங்களில் ஏற்று நடித்த கிருஷ்ணர் வேடம்தான் எனக்கு நினைவுக்கு வரும். ஆந்திர ரசிகர்களும் அவரை கிருஷ்ணராகவே தரிசித்தனர். பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத்தில் நிதிஷ் பரத்வாஜ் (Nitish Bharadwaj) கிருஷ்ணனாக காட்சி அளித்தார். அவர் தனது கதாபாத்திரத்தை திறம்படவே செய்தார். (படம் – மேலே) கைகளில் தாயக் கட்டைகளை வைத்து உருட்டிக் கொண்டே இருப்பவர் சகுனிமாமா. அவர் மூன்று, ஐந்து என்று சொல்லி தாயக் கட்டைகளை வீசுவார். நினைத்தபடியே தாயக் கட்டைகள் விழும். அந்த அழுத்தமான சகுனி வேடத்தில் நடித்தவர் கூஃபி பெயிண்டால் (Gufi Paintal). ( கொசுறு செய்தி கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில் பவித்ரேஸ்வரம் என்னுமிடத்தில் சகுனிக்கு கோயில் உண்டு. தகவல் உபயம் - விக்கிபீடியா) (படம் - மேலே) பஞ்ச பாண்டவர்களோடு கிருஷ்ணர் மற்றும் திரௌபதி. (யுதிஷ்ட்ரன் வேடத்தில், கஜேந்த்ர சவுகான் (Gajendra Chouhan ), அர்ச்சுனன் வேடத்தில் அர்ச்சுன் (Arjun) , பீமன் வேடத்தில் ப்ரவீன் குமார் (Praveen Kumar ) , நகுலன் வேடத்தில் சமீர்(Sameer ), சகாதேவன் வேடத்தில் சஞ்சீவ் (Sanjeev) மற்றும் திரௌபதி வேடத்தில் ரூபா கங்கூலி (Roopa Ganguly) – ஆகியோர் நடித்தனர். .பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தூர்தர்ஷனில் இந்தியில் தொடராக ஒளி பரப்பப்பட்ட போது, எங்கள் வீட்டில் எனது அப்பா அம்மா என்று எல்லோரும் தொடர்ந்து பார்த்தனர். என்னால் தொடர்ந்து பார்க்க இயலாவிட்டாலும், அவ்வப்போது பார்த்து இருக்கிறேன் இப்போது அதன் தமிழ் வடிவத்தை (94 EPISODES(அத்தியாயங்கள்) YOUTUBE – இல் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது. விக்ரம் கிருஷ்ணா (VIKRAM KRISHNAN) என்பவர் 94 அத்தியாயங்களையும் யூடியூப்பில் ஏற்றி வைத்துள்ளார். இதுவரை 25 அத்தியாயங்கள் (EPISODES) பார்த்து விட்டேன். தொடர்ந்து பார்க்க வேண்டும். தமிழ் வடிவத்தில் ஆரம்ப காட்சியாக ஒலிக்கும் பாடலின் வரிகள் இவை . (சங்கு ஒலிக்கிறது) மகாபாரதம் .... மகாபாரதம் .... மகாபாரதம் அ... ஆ... அ.. ஆ... இதுதான் மகாபாரதக் கதை இதுதான் மகாபாரதக் கதை ஆ ... ஆ .. மகாபாரதக் கதை மகாபாரதக் கதை ஒரு கதைக்குள் பல கதை பல கதைகளின் ஒரு விதை கடவுளே ஒரு மனிதனாய் வந்தவரித்த திருக்கதை! தர்மம் என்றும் வெல்லுமே ... என்றே உணர்த்தும் பெருங்கதை! தர்மம் என்றும் வெல்லுமே ... (சங்கு ஒலிக்கிறது) யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் பரித்ராணாய சாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே சம்பவாமி யுகே யுகே …. சம்பவாமி யுகே யுகே (இதன் பொருள்: எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு தலைகுனிவு ஏற்படுகிறதோ, எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் இந்த பூமியில் அவதரிக்கிறேன். சாதுக்களை இரட்சிப்பது, தர்ம வழியில் நில்லாத தீயவர்களை சித்திரவதமான முறையில் அழிப்பது, தர்மத்தை நிலை நிறுத்துவது ஆகிய இம்மூன்று பயன்களுக்காகவே இந்த பூமியில் நான் அவதரிக்கிறேன்.) பி.ஆர். சோப்ராவின் மகாபாரதத்தின் மேலே சொன்ன ஆரம்ப காட்சி (TITLE SONG) பாடலையும் மற்றும் 94 அத்தியாயங்களையும் (94 EPISODES ) தமிழில் கண்டும கேட்டும் ரசிக்க கீழே உள்ள வலைத்தளம் செல்லவும்.*****. https://youtube.com/@penbhaktitamil?feature=shared முதல் அத்தியாயம் முடிந்தவுடன் தொடர்ந்து அனைத்து 94 அத்தியாயங்களும் அவைகளாகவே ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்துவிடும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! http://tthamizhelango.blogspot.com/2014/08/blog-post.html
  10. உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2024 அருணாசலம் ரமணன் அக்டோபர் 7, 2024 நம் உடலில் உள்ள ஒவ்வொரு ‘செல்’லிலும் ஒரே மாதிரியான மரபணு வழிமுறைகள் அல்லது டிஎன்ஏ உள்ளது. இந்த மரபணுக்களில் சில மட்டுமே ஒவ்வொரு ‘செல்’லிலும் வெளிப்படுத்தப்படுகின்றன, இது ‘செல்’லின் தனித்துவமான செயல்பாடுகளைச் செய்யும் புரதங்களின் உற்பத்திக்கு வழிவகுக்கிறது. 2024ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ் (இயற்கை அறிவியல் பேராசிரியர், Massachusetts medical school) மற்றும் கேரி ருவ்குன் (மரபியல் பேராசிரியர், Massachusetts General Hospital & Harvard medical school) ஆகியோருக்கு இந்த முக்கியமான ஒழுங்குமுறை செயல்முறையைச் செய்யும் மைக்ரோஆர்என்ஏ (miRNS அல்லது சிறிய எம்ஆர்என்ஏ துண்டு) என்ற மூலக்கூறைக் கண்டுபிடித்ததற்காகவும், டிரான்ஸ்கிரிப்ஷனலுக்குப் பிந்தைய மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கிற்காகவும் வழங்கப்பட்டுள்ளது. புரதங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகள் உயிரணுக்களின் கருவில் உள்ள டிஎன்ஏவில் சேமிக்கப்படுகின்றன. மெசஞ்சர் ஆர்என்ஏக்கள் (mRNA) இந்த வழிமுறைகளை கருவில் இருந்து கருவுக்கு வெளியே உள்ள புரதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றன. மைஆர்என்ஏக்கள் (மைக்ரோஆர்என்ஏக்கள்) குறுகிய குறியீட்டு அல்லாத ஆர்என்ஏக்கள் ஆகும், இவை மரபணு வெளிப்பாட்டிற்கு பிந்தைய டிரான்ஸ்கிரிப்ஷனலை கட்டுப்படுத்துகின்றன. ஒரு மைக்ரோஆர்என்ஏ பலவிதமான மரபணுக்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் ஒரு மரபணுவை பல மைக்ரோஆர்என்ஏக்களால் கட்டுப்படுத்த முடியும். மைக்ரோஆர்என்ஏக்களின் ஆரம்ப கால கண்டுபிடிப்பு (எண்பதுகளில்) மரபணு ஒழுங்குமுறையின் புதிய மற்றும் எதிர்பாராத பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இவர்களின் ஆரம்பகால‌ ஆராய்ச்சிகள் சிறிய புழுவான C. elegans இல் நடத்தப்பட்டது. பிறகு மனிதர்கள் மற்றும் விலங்குகளின் மரபணுக்களில் இந்த வழிமுறை கண்டறியப்பட்டது. மைக்ரோஆர்என்ஏ வின் கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறையில் (gene regulation) ஒரு புதிய துறையை உருவாக்கி இருக்கிறது. டிஎன்ஏவில் உள்ள பல மரபணு வழிமுறைகளில் சில மட்டுமே உடலில் உள்ள பல்வேறு உயிரணுக்களில் செயல்படும் புரதங்களை எவ்வாறு விளைவிக்கிறது என்பதை விளக்குகிறது. கரு வளர்ச்சி, இயல்பான உடலியல் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்கள் பற்றிய நமது புரிதலுக்கு இவை முக்கியம் என கருதப்படுகிறது. மேலும்: Scientific background 2024 – For the discovery of microRNA and its role in post-transcriptional (nobelprize.org) https://solvanam.com/2024/10/07/உடலியல்-அல்லது-மருத்துவத/
  11. மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! October 8, 2024 எனக்கு மதுபான சாலை இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள். இது உண்மையென நிறுபிக்கப்படுமாகில் நான் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் திங்கள் கிழமை (07) மன்னார் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில். அண்மை காலமாக ஜேவிபி அரசு ஆட்சிக்கு வந்த பின்பு ஊழல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தமாக பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன. நான் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்ற வகையில் எங்கள் தமிழீழ இயக்கம் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். இப்பொழுது பொதுவாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச் சாட்டில் முன்னைய ஜனாதிபதி ரணில் அவர்களால் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபான சாலை வழங்கப்பட்டு வந்தன. இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மதுபான சாலை பேர்மிட் பெற்றுள்ளனர் என்ற சந்தேக கண்கள் கொண்டு பார்க்கும் நிலை இருந்து வருகின்றது. தமிழீழ இயக்கத்தில் இருக்கின்ற எமது நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் இந்த மதுபான சாலை பேர்மிட் எடுக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து நிற்கின்றேன். மக்களுக்கு அநீதி விளைவிக்கும் எந்த செயல்பாட்டிலும் எமது இயக்கம் செயல்படாது என்பதை தெரிவித்து நிற்கின்றேன். என்னை பொறுத்த மட்டில் அரசியல் வாழ்க்கையில் தேசியத்தோடு பயணிக்கின்ற செயல்பாடாகவே நான் இருந்து வருகின்றேன். மதுபான சாலை பேர்மிட் வழங்கும் வேளையில் நாங்கள் இதை பெறுவதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எந்த ஈனச் செயலிலும் நாங்கள் இறங்க மாட்டோம். எனக்கு வவுனியாவில் மதுபான சாலை இருப்பதாகச் சொல்லுகின்றார்கள். இது உண்மைக்கு மாறான விடயம். இது நிறுபிக்கப்படுமாகில் நான் தேர்தலில் போட்டியிடும் நிலையிலிருந்து விலகி விடுவேன். இந்த ஊழல் சம்பந்தமான விடயத்தில் எமது தமிழீழ இயக்கத்தின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசியத்தை நேசித்து செயல்பட்டவர்கள். ஆயுதம் ஏந்தி போராடியவாகள் என்ற வகையில் நாங்கள் ஈனச் செயல்களை செய்யவில்லை செய்ய மாட்டோம் என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன். https://www.supeedsam.com/206574/
  12. ரஷ்ய எண்ணெய் நிலையம் மீது உக்ரேன் தாக்குதல்! இது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள எரிசக்தி வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் அண்மைய தாக்குதல் ஆகும். குடாநாட்டின் மிகப்பெரிய எண்ணெய் பதப்படுத்தும் வசதியான ஃபியோடோசியா முனையத்தின் மீது அந்நாட்டின் ஏவுகணைப் படைகள் ஒரே இரவில் தாக்குதல் நடத்தியதாக கிய்வில் உள்ள உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. தீயினால் ஃபியோடோசியாவிலிருந்து 300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய அரசு நடத்தும் Tass செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மொகோவில் உள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரேனால் ஆல் ஏவப்பட்ட 21 ஆளில்லா விமானங்களில் 12ஐ ஒரே இரவில் தீபகற்பத்தில் சுட்டு வீழ்த்தியதாக கூறியுள்ளது. https://akkinikkunchu.com/?p=294452
  13. இஸ்ரேலினால் தடுக்க முடியாத ஈரானின் ஆயுதங்கள்-வேல்ஸில் இருந்து அருஸ் October 7, 2024 கடந்த செவ்வாய்க்கிழமை(1) இரவு ஈரான் இஸ்ரேல் மீது கடும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்க புலனாய்வுத்துறையினாலும், இஸ்ரேலிய மொசாட்டினாலும் முன்கூட்டியே தாக்குதல் திட்டத்தை அறிய முடியாதவாறு ஏவுகணைகளை நகர்த்திய ஈரான் ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் முக்கிய நகரமான ரெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல நகரங்களில் இருந்த படை நிலைகள் மீது ஏவுகணைகள் சரமாரியாக வீழ்ந்து வெடித்ததை காணொளிகள் மூலம் பார்க்கக்கூடியதாக இருந்தது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் 1864 இடங்களில் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டதுடன், மக்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியதையும் காணக்கூடியதாக இருந்தது. தனது உண்மையான வாக்குறுதி- 2 படை நடவடிக்கை வெற்றி பெற்றுள்ளதாகவும், 90 விகிதமான ஏவுகணைகள் இலக்குகளை தாக்கி அழித்துள்ளதாகவும் ஈரான் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துமாக இருந்தால் இதைவிட மோசமான தாக்குதலை இஸ்ரேல் எதிர்கொள்ள நேரிடும் என ஈரானின் அதிபர் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஈரானில் வைத்து கொல்லப்பட்ட ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ் மயில் ஹனியா, கடந்தவாரம் லெபனானில் கொல்லப்பட்ட ஹிஸ்பல்லாக்களின் தலைவர் சயீட் கசான் மற்றும் அவருடன் கொல்லப்பட்ட ஈரானின் ஜெனரல் ஆகியோருக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. தமது நாட்டை பாதுகாக்க தாம் தயாராக உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. அதேசமயம் ரெல் அவிவ் பகுதியில் உள்ள இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பான மொசாட்டின் தலமையகத்தை ஏவுகணை தாக்கியதாக சி.என்.என் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் தாக்குதலில் நவாடிம் வான்படைத் தளம் உட்பட இரண்டு வான்படைத்தளங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், நவாட்டின் வான்படைத்தளம் அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை விமானங்களாக எப்-35விமானங்களில் தரிப்பிடம் எனவும் அதில் 20 விமானங்கள் முற்றாக அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு விமானத்தின் பெறுமதி 120 மில்லியன் டொலர் களாகும். மத்தியகிழக்கில் பைடன் அரசின் கொள்கையின் தோல்வியையே ஈரானின் பதிலடி காட்டுவதாக இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த ரஸ்யாவின் வெளிவிவகார பேச்சாளர் மரியா சக்கரோவா தெரிவித்தள்ளார். அதேசமயம் இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய பிரதமர் பென்சமின் நெத்தனியாகு பதுங்கு குழியை நோக்கி அவசரமாக ஓடும் காட்சிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி யுள்ளன. இந்த தாக்குதல் என்பது இஸ்ரேலின் அயன் டோம் முற்றாக செயலிழந்துள்ளதையே காட்டு கின்றது அல்லது ஈரானிடம் நவீன தொழில்நுட்பம் உள்ளதை காட்டுவதாக பி.பி.சியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ஆனால் தாக்குதலுக்கு முன்னர் இஸ்ரேலின் அயன் டோமின் கணினிகளை ஈரான் சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்து விட்டதாக கூறப்படுகின்றது. தமக்கு இந்த தாக்குதல் தொடர்பில் முன்னர் தெரிந்திருக்கவில்லை என பென்ரகன் தெரிவித்தள்ளது. ஆனால் இறுதி நேரத்தில் தான் தாம் ரஸ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் தெரியப்படுத்தி யதாக ஈரான் தெரிவித்துள்ளதுடன், இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் அனைத்தும் தாக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. பிரித்தானியா பிரதமர், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இந்த தாக்குதலை கண்டித் துள்ளன. ஏப்பிரலில் இடம்பெற்ற தாக்குதலை விட இந்த தாக்குதல் இரண்டு மடங்கு பெரிதானது எனவும், ஈரான் 200 இற்கு மேற்பட்ட பலிஸ்ரிக் ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளதாகவும் அமெரிக்காவின் பென்ரகனின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பற்றிக் தெரிவித்துள்ளார். மத்திய தரைக்கடலில் நின்ற தமது டிஸ் ரோயர் கப்பல்கள் ஈரானின் ஏவுகணைகளை முறி யடிப்பதற்கு 24 ஏவுகணைகளை ஏவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அவை ஈரானின் ஏவகணைகளை தாக்கியதா என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்ராமர் ஆகியோர் இஸ்ரேலிய அதிபர் பென்சமின் நெத்தனியாகுவை தொடர்புகொண்டு பேசியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நிமிடத்தையும் பைடன் அவதானிப்பதாக அமெரிக்க வெள்ளைமாளிகைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஈரான் நவீன பலிஸ்ரிக் ஏவுகணைகளை (Ballistic missiles) ஏவியதாக intelligence consultancy firm Armament Research Services (ARES) என்ற அமைப்பின் ஆய்வாளர் Patrick Senft தெரிவித்தள்ளார். இந்த ஏவுகணைகள் குரூஸ் ஏவுகணைகளை விட இலக்குகளை மிக விரைவாக எட்டிவிடும். அதிக வேகம் காரணமாக இந்த ஏவுகணைகளை தடுப்பது என்பது கடினமானது. இஸ்ரேலிடம் மூன்று அடுக்கு வான் பாதுகாப்பு பொறிமுறை உள்ளது. முதலாவது அயன்டோம் இது தரையில் இருந்து 10 கி.மீ உயரத்தில் வைத்து உந்துகணைகளை தடுக்கும் சக்தி கொண்டது. அதன் தூரவீச்சு 70 கி.மீ. இரண்டாவது டேவிட் ஸ்லிங் வகை ஏவுகணை இது இருந்து 15 கி.மீ உயரத்தில் வைத்து இடைத்தர தூரவீச்சு ஏவுகணைகளை தடுக்கும் சக்தி கொண்டது. அதன் தூரவீச்சு 300 கி.மீ. மூன்றாவதான அரோ ஏவுகணைத் தொகுதி இது இருந்து 100 கி.மீ உயரத்தில் வைத்து பலிஸ்ரிக் ஏவுகணைகளை தடுக்கும் சக்தி கொண்டது. அதன் தூரவீச்சு 2,400 கி.மீ.ஆனால் ஈரான் தனது பற்றா-1 மற்றும் பற்றா-2 என்ற கைப்பசொனிக் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலின் அரோ ஏவுகணைகளை தாக்கி அழித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கடந்த ஏப்பிரல் மாதம் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களை விட இந்த வாரம் மேற்கொண்ட தாக்குதல்களில் பயன்படுத்திய ஏவுகணைகள் அதிகளவில் இலக்குகளை தாக்கியுள்ளதாக Missile Defense Project at the Center for Strategic and International Studies (CSIS) என்ற அமைப்பின் அதிகாரியான மார்க் கன்சியன் தெரிவித்துள்ளார். அதாவது இந்த தாக்குதல் மூலம் ஈரான் மூன்று விடையங்களை கூறியுள்ளது. ஒன்று இஸ் ரேலின் வான்பாதுகாப்பை ஈரான் இலகுவில் உடைத்துவிடும். இரண்டாவது இஸ்ரேலின் எந்த பகுதியையும் தாக்கும் வல்லமை ஈரானுக்கு உண்டு. மூன்றாவது ஈரானிடம் அணுவாயுதம் இருந்தால் அதன் மூலம் இஸ்ரேலை தாக்குவதற்கும் ஈரானினால் முடியும் என்பது தான் அது. அதாவது ஈரானின் தொழில்நுட்ப வளர்ச் சியை இஸ்ரேலும், மேற்குலகமும் தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டால் அதற்கான விலையை செலுத்த வேண்டும் என்பதே யதார்த்த மானது. https://www.ilakku.org/இஸ்ரேலினால்-தடுக்க-முடிய/
  14. பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்: தமிழர்களின் மண்டைகளை கழுவும் செயற்பாடுகளும் ஆரம்பம்-மட்டு.நகரான் October 8, 2024 இலங்கையின் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக் கான ஏற்பாடுகள் மிக விரைவாக முன் னெடுக்கப் பட்டுவருகின்றன. வடக்கு கிழக்கில் வாக்கு அரசியலை மையப்படுத்திய வகையில் தமிழர்களின் மண்டைகளை கழுவும் செயற்பாடு கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திற்காக வும் சுயநிர்ணய உரிமைகளுக்காகவும் தமிழர்களின் தாயக கனவிற்காகவும் போராடுவதாக கூறுகின் றவர்கள். இன்று இலங்கையின் பாராளுமன்ற கதிரைகளை பிடித்துக்கொண்டு அதில் வரும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காக தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர். இவர்களுக்கு எல்லாம் இன்று தேவையாகவுள்ளது தமிழ் தேசிய உணர்வு இதனை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வருவதற்காக பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்துள்ளனர். வடக்கு கிழக்கில் தமிழர்கள் இன்று முக்கிய காலப்பகுதியில் நிற்கின்றனர்.தென்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஒரு பாரிய போராட்டத்தின் விளைவாக ஒரு போராட்ட பின்புலத்தில் தோற்றம்பெற்ற கட்சியொன்று ஆட்சியமைப் பதற்கான முயற்சிகளை முன்னெடுத்த நிலையில் கடந்த 35வருடமாக தமது உரிமைகளுக்காக போராடிய தமிழ் மக்கள் இன்று தமது தீர்விற்கான கோரிக்கையினை முன்னிறுத்தியுள்ளனர். கடந்த 35வருடத்திற்கு மேலாக போராடிய ஒரு சிங்கள கட்சி அதே கொள்கையுடனும் வீரியத்துடனும் தொடர்ச்சியான பல்வேறு ஜன நாயக ரீதியான போராட்டங்களையும் ஆயுத ரீதியான போராட்டங்களையும் கிளர்சியையும் முன்னெடுத்து இன்று இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினை பிடித்துள்ளது.சிங்கள மக்களினால் குறித்த கட்சியின் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாத போதிலும் தொடர்ச்சியாக தமது குறிக்கோளில் உறுதியாகயிருந்து ஆட்சி அதிகாரத் தினை பிடித்துள்ளனர். ஆனால் இந்த நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தொடர்ச்சியாக ஏமாற்றப் பட்டுவரும் ஒரு இனமாக தமிழினம் காணப் படுகின்றபோதிலும் காலத்திற்கு காலம் தமிழர் கள் மத்தியில் தோற்றம்பெற்ற உறுதியற்ற தலை மைகளும் சுயநல அரசியலும் தமிழர்களை ஏனைய இனங்கள் அடக்கியாளும் நிலைக்கு இட்டுச்சென்றது. இருந்தபோதிலும் தமிழர்கள் மத்தியில் தோற்றம்பெற்ற ஆயுதப்போராட்டம் தமிழர்களுக்கான வலுவான குரலாகவும் தமிழர்களின் நீடித்து நிலைத்த குறிக்கோளையும் கொண்டிருந்த காரணத்தினால் தமிழர்களின் உரிமைப் போராட் டத்தினை சர்வதேசமே ஏற்றுக்கொள்ளும் நிலை மைகளும் உருவாகியிருந்தது.எனினும் சர்வதேசத்தின் வல்லாதிக்க போட்டிகளும் இலங்கையின் சர்வதேச நாடுகளுக்கு தேவையான முக்கியத்துவதும் தமிழர்களின் உரிமைக்கோசத்தினை மறைத்து இலங்கைக்கு உதவும் நிலைமை ஏற்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் இலங்கையில் யுத்தம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழர்கள் இராஜதந்திர ரீதியிலும் அரசியல் ரீதியாகவும் உறுதியான கொள்ளைகையுடன் தமிழர்களின் போராட்டத்தினை முன்கொண்டுசெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இன்று அனைத்தும் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலை மையிலேயே காணப்படுகின்றது. இந்த நாட்டில் தமிழீழ விடுதலைப்புலிக ளின் காலத்தில் மட்டும் தமிழர்களின் உரிமைக்கான கொள்கைகளும்கோட்பாடுகளும் உறுதியாக முன்கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அதன் பின்னரான காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசிய அரசியலானது வாக்கு அரசியலாகவும் சுயநல அரசியலாகவுமே காணப்படுகின்றது.ஆயுதப்போராட்டத்திற்கு முந்திய காலத்தில் இவ்வாறான நிலைமைகள் காணப்பட்டதன் காரணமாகவே தமிழ் இளைஞர்கள் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அவ்வாறான நிலை இன்று உருவாகியுள்ள போதிலும் இன்றைய நிலையில் தமிழ் இளை ஞர்களின் போக்குகளும் எதிர்பார்ப்புகளும் என்பது தமிழர்களின் இருப்பினை எதிர்காலத்தில் கேள்விக்குள்ளாக்கிவிடுமோ என்ற அச்ச நிலை மைகள் காணப்படுகின்றன.இவ்வாறான நிலைமையினை இந்த தமிழர் தேசம் எவ்வாறு எதிர் கொள்ளப்போகின்றது என்பதே இன்று உள்ள மிகப்பெரும் சவாலான விடயமாகவுள்ளது. சிங்கள தேசத்தில் ஊழலுக்கும் அங்கு காணப்பட்ட அடாவடித்தனங்களுக்கும் எதிராக சிங்கள மக்கள் கிளந்தெழுந்து ஆட்சியை மாற்றியுள் ளார்களே தவிர இந்த ஆட்சி மாற்றத்தினால் தமிழர்களுக்கான உரிமையினையோ அல்லது தமிழர்களுக்கான நீதியையோ தேசிய மக்கள் சக்தி போன்ற கட்சிகள் ஒருபோதும் வழங்காது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டது தொடக்கம் இன்றுவரையில் தமிழர்கள் தொடர்பில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்காத நிலையே உள்ளது.எதிர்வரும் காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதனால் தமிழர்கள் சார்ந்து சில உறுதி மொழிகள் வழங்கப்படலாம்.ஆனால் தமிழர்களுக்கான உரிமைசார்ந்த எந்த விடயமும் நடைபெறாது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.ஏன் என்றால் சிங்கள தேசத்தின் டிசைன் என்பது அதுதான். இந்த டிசைன் தெரியாமல் ஒரு போராட்ட வடிவத்திற்குள் வாழும் மக்களாகவுள்ள தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள கட்சிகளுக்கு ஆதரவாக எழும் அலையென்பது தமிழர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்ககும்.இதனை முளையில் கிள்ளவேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசிய சக்தி களுக்கு காணப்படுகின்றது. இணைந்த வடகிழக்கில் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டுமானால் இரண்டு மாகாணங்களிலும் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படவேண்டும்.இந்த இருப்பு பாதுகாக் கப்படவேண்டுமானால் தமிழர்களின் அரசியல் உரிமைகளும் பாதுகாக்கப்படவேண்டும்.வெறு மனே வாக்கு அரசியல்மட்டும் தமிழர்களின் உரிமையினை பாதுகாக்காது என்பதை அனை வரும் உணரவேண்டும். கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரை யில் மூவினங்களும் வாழும் பகுதியாகவுள்ள போதிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நிலையில் அரசியல் என்பது கேள்விக் குறியாகியே வருகின்றது.இலங்கையின் தேர் தல் முறைமையினால் கிழக்கில் தமிழர்கள் அரசியல் ரீதியாக பின்னடையும் நிலையே காணப்படுகின்றது.கிழக்கில் அனைத்து தமிழ் தேசிய அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து செயற்படும் காலங்களில் எல்லாம் பிரிந்துநின்று செயற்பட்ட காரணத்தினாலும் சுயநல அரசியல், வாக்கு அரசியல் காரணமாகவும் கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் கேள்விக்குள்ளாகி ஒட்டுக்குழுக்களும் அரசாங்கத்தினை ஆதரிக்கும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து தமிழர்களை விற்றுப்பிழைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு தமிழ் தேசிய அரசியலை வடக்குடன் மட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட சிங்கள தேசத்தின் அரசியல் நிரலினை இலகுவாக அமுல்படுத்தும் நிலைமைகள் ஏற்பட்டுவருகின்றது.வடக்கில் தமிழ் தேசிய அரசியல் நிலைபெறும்போது கிழக்கில் கேள்விக்குட்படுத்தப்படுமானால் கிழக்கு மாகாண மக்கள் தமிழ் தேசிய அரசியலையும் வடகிழக்கினையும் நிராகரிக்கின்றார்கள் என்ற வகையான பிரசாரங்களை தெற்கு கட்சிகளும் பிரதேசவாத கட்சிகளும் முன்னெடுக்கும் நிலை மைகள் உருவாகியிருக்கின்றன. இதன்காரணமாகவே இந்த தேர்தல் வடகிழக்கு மக்களுக்கு குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு மிக முக்கியத்துவம்வாய்ந்த தேர்தலாக காணப்படுகின்றன.கிழக்கு மக்கள் என்றும் தமிழ்தேசியத்தின் பாதையில் பயணிப்பவர்கள் என்பதை மீண்டும் இந்த நாட்டிற்கு காட்டவேண்டிய பாரிய பொறுப்பு காணப்படுகின்றது.இந்த நிலைமைகளை உணர்ந்துசெயற் படவேண்டிய நிலையில் தமிழ் தேசிய கட்சிகளும் இருக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் பல பிரிவுகளாக நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய சக்திகள் களமிறங்கப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன.இவற்றினை தடுத்து நிறுத்தி அனைவரை யும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கின்றது.இது தொடர்பான கோரிக்கை அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் அனைத் தையும் ஒன்றிணைந்து தேர்தலை முகங்கொடுத்து தமிழர் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டிருக்கின்றது.அவ்வாறு செயற்படாவிட்டால் நாங்கள் சிங்கள கட்சிகளை ஆதரிக்கும் நிலையுருவாகும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை-திருகோணமலை மாவட்டங்க ளில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து தேர்தலில் களமிறங்கப்படும்போதே அங்குள்ள தமிழர் பிரதிநிதித்துவத்தினை பாதுகாக்கமுடியும்.அதேபோன்று கிழக்கில் தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து கேட்பதன்மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்கமுடியும்.வெறுமனே வாக்கு அரசியலுக்காகவும் சுயநல அரசியலுக்காகவும் பிரிந்துநின்று செயற்படுவதா னது ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலும் தமிழர்களின் இருப்பினையும் தமிழர்களின் தமிழ் தேசிய கோரிக்கையினையும் வலுவிழக்கச்செய்யும் செயற்பாடாகும்.இதனை உணர்ந்து செயற்பட வேண்டிய நிலையில் தமிழர்களும் தமிழ் தேசிய அரசியல் சக்திகளும் உள்ளனர்.இதற்கான அழுத்தங்களை சர்வதேச தமிழர் அமைப்புகளும் சிவில் சமூக கட்டமைப்புகளும் வழங்கவேண்டும். https://www.ilakku.org/பொதுத்தேர்தலுக்கான-ஏற்ப/
  15. தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போ வதில்லை என்று தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியானது ஜனநாயக தேசியக் கூட்டணியில் அங்கத்துவம் வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இதில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்துக்கு ஏற்ப இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்குத் தான் தீர்மானித்துள்ளார் என்று சிவசக்தி ஆனந்தன் அறிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310400
  16. இ.தொ.க உப தலைவர் பதவி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி விலகல்! இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பாரத் அருள்சாமி பதவி விலகும் கடிதத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு இன்று (07) மாலை அனுப்பி வைத்துள்ளார். மக்களினதும், கட்சி அங்கத்தவர்களினதும் எதிர்பார்ப்புகளை மீறி எதிர்வரும் பொதுத் தேர்தலில் இந்த நாட்டினை வங்குரோத்து நிலைக்கு அடைய செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிட தயார் இல்லை எனவும், கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக மக்களின் எதிர்பார்ப்புக்கு அப்பால் தன்னால் செயல்பட இயலாது என்பதன் காரணமாக இந்த முடிவை தான் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி 2013 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் மாகாண சபை உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்காக தனது தந்தையும், தானும் அயராது உழைத்தது மாத்திரமன்றி மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானினால் மாவட்ட பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை கடந்த தேர்தலில் இ.தொ.காவிற்கு ஆதரவாக வெறும் மூன்று வாரங்களில் ஏரதாள 25 ஆயிரம் வாக்குகளை பெற்று மக்களின் நம்பிக்கையை வென்றதாகவும், இம்மாவட்ட மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் ஊடாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாகவும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்ததோடு, மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு போதும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடனும், அதன் தலைமையை விமர்சித்த தலைமைகளோடு சேர்ந்து தான் தேர்தல் கேட்க தயார் இல்லை எனவும் தெரிவித்தே இப்பதவி விலகல் கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். மேலும், மக்களின் நலனுக்காகவே கட்சி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமே தவிர சில தனி நபர்களின் வளர்ச்சிக்காக மாத்திரமே கட்சி முடிவுகளை எடுக்க கூடாது என்பதினையும் சுட்டிக்காட்டி உள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினராக தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளதுடன், கட்சியின் இளைஞர் அணி உருவாக்கம் மற்றும் கட்சியினுடைய சர்வதேச தொடர்புகள், கண்டியில் இ.தொ.காவின் வளர்ச்சியில் தனது அலப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அதற்கு துணை நின்ற கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து நல்லுல்லங்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/இ-தொ-க-உப-தலைவர்-பதவி-கட்சி/
  17. மாவையிடம் இருந்து சிறீதரனுக்கு பறந்த கடிதம்! அக்டோபர் 08, 2024 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாவை சேனாதிராஜா, கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறு கோரி கட்சியின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகிய நான் இதுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். தமிழரசுக் கட்சியின் தலைவர் தாங்கள் அந்தவகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை இன்னும் ஏற்கவில்லை. அதனால் நான் தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்துள்ளேன். அந்தப் பொறுப்பை உடன் ஏற்றுத் தலைவராகச் செயற்படுமாறு அன்றிலிருந்து பல தடவைகள் வற்புறுத்தி வந்துள்ளேன். 2024 ஒக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளேன் என்பதனை இந்தக் கடிதம் மூலம் அறியத் தருகின்றேன். எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்று நிறைவேற்றிச் செயற்படுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது. தமிழரசு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தான் விலகுவதாக நமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ள போதிலும் அவர் கடிதம் எதனையும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என கட்சியின் செயலாளர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2024/10/blog-post_60.html
  18. வடக்கில் காத்திருப்பு காலமின்றி கண்புரை சத்திர சிகிச்சையை முன்னெடுக்க நடவடிக்கை October 8, 2024 வடமாகாணத்தில் காத்திருப்பு பட்டியல் இன்றி கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் , 10 நாட்களுக்கு 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ் . போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச பார்வை தினத்தினை முன்னிட்டு, யாழ் . போதனா வைத்தியசாலை கண்ணியல் பிரிவில் 2ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்யவுள்ளோம். யாழ் போதனா வைத்தியசாலையில் குறுகிய காலத்தில் கண்புரை சத்திர சிகிச்சை முகாமை நடத்துவது இது மூன்றாவது தடவை. வடமாகாணத்தில் இது நாலாவது தடவையாகும். இலங்கையில் மாத்திரம் இன்றி , சார்க் வலய நாடுகளில் கூட “பேகோ” மூலம் இப்படியான சத்திர சிகிச்சை முகாம்கள் நடத்ததில்லை. வடக்கிலையே இவ்வாறான கண் புரை சத்திர சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. முதல் தடவை நாங்கள் 1200 சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டோம். அதுபோன்று கடந்த வருடம் இரத்தினபுரி வைத்தியசாலை நட்புறவு மன்றத்தின் ஏற்பாட்டில் “சர்வதேச பார்வைகள் தினம் – 2023” முன்னிட்டு ஐந்து நாட்களில் 1200 பேருக்கு சத்திர சிகிச்சை செய்தோம் இந்த முறை யாழ்.போதனா வைத்தியசாலை கண்ணியல் பிரிவு , வடமாகாணத்தில் உள்ள ஏனைய கண்ணியல் பிரிவுடன் இணைந்து 2ஆயிரம் கண்புரை சத்திர சிகிச்சையை ஐந்து, ஐந்து நாட்களாக 10 நாட்களுக்குள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தனியார் – அரசாங்க நட்புறவு உதவிகளுடன் அலாக்க பவுண்டேசன் (ALAKA FOUNDATION) , ஆனந்தா பவுண்டேசன் (ANANDA FOUNDATION) மற்றும் அசிஸ்ட் ஆர்.ஆர் (Assist RR) நிறுவனம் ஆகிவற்றின் உதவியுடன் இந்த கண்புரை சத்திர சிகிசிச்சையை மேற்கொண்டு வருகிறோம். கடந்த வருடம் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சத்திர சிகிச்சை செய்துள்ளோம். இது வளர்ந்த நாடுகளுக்கு ஒப்பானது. இந்த வருடம் இதுவரையிலான கால பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மாத்திரம் 09 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்புரை சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளோம் கிளிநொச்சி . வவுனியாவில் 05 ஆயிரம் பேருக்கு செய்துள்ளோம் வடமாகாணத்தில் இந்த வருடம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்புரை சத்திர சிகிச்சையை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தோம். ஆனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு செய்ய முடியும் என நம்புகிறோம். இதன் நிறைவு விழா எதிர்வரும் 25ஆம் திகதி வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடாத்தவுள்ளோம். அன்றைய தினம் ஆளூநரால் இரண்டு பிரகடனங்கள் வெளியிடப்படவுள்ளது . வடமாகாணத்தில் கண்புரை சத்திர சிகிச்சைக்கான காத்திருப்பு காலம் பூச்சியமாக பேணுவது. அதாவது சத்திர சிகிச்சைக்காக பதிந்தால் ஒரு வார கால பகுதிக்குள் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளல் ஆகும். அதொரு சிறப்பான விடயமாக அமையும் யாழ்ப்பாணத்தில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காத்திருப்பு 2 வருடங்களுக்கு மேலாக இருந்தது. சத்திர சிகிச்சைக்கு பதிந்தால் 2 வருடங்களின் பின்னரே சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியும். சிலவேளைகளில் 4 வருடங்களுக்கு பின்னர் கூட சிலருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது லண்டன் உள்ளிட்ட நாடுகளில் கூட காத்திருப்பு காலம் இன்றும் உள்ளது. காசு கட்டி செய்வதாக இருந்தாலும் கூட இந்த காத்திருப்பு காலம் உண்டு இந்த நிலையில் தான் வடமாகாணத்தில் காத்திருப்பு காலம் இல்லாது பதிந்தால் உடனடியாக சத்திர சிகிச்சையை மேற்கொள்ள கூடியவாறு இருக்கும். எதிர்வரும் 25ஆம் திகதி முதல் செயற்படவுள்ளோம். அதேவேளை இரண்டாவது பிரகடனமாக அனைத்து ஆரம்ப சுகாதார பிரிவுகளிலும், வடமாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுகாதார திணைக்களத்தால் காத்திருப்பு காலம் இல்லாது உடனுக்கு உடன் கண்புரை சத்திர சிகிச்சையை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம். எனவே வடமாகாணத்தில் வசிக்கும் அனைத்து மக்கள் ஆகிய உங்களுக்கு கண்புரை இருக்கிறது அல்லது பார்வை குறைப்பாடுகள் இருப்பதாக உணர்ந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கோ அல்லது தள வைத்தியசாலைக்கோ அல்லது மாவட்ட வைத்திய சாலைக்கோ சென்று கண்களை பரிசோதித்து, கண்புரை சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனில் காத்திருப்பு காலம் இன்றி செய்ய கூடியவாறாக இருக்கும் என தெரிவித்தார். https://eelanadu.lk/வடக்கில்-காத்திருப்பு-கா/
  19. தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார். இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியில் அவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் தெரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடாவடித்தனமாகப் பல்வேறு குளறுபடிகளைச் செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு நியமனத்தைக் கொடுத்துள்ளார் என்று சசிகலா நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார். "எனக்கு மட்டுமல்லாது கட்சியின் நீண்ட கால உறுப்பினர்கள் பலருக்கும் வேட்பாளர் நியமனம் கொடுக்கபடாமல் தனக்குத் தேவையானவர்களுக்கே சுமந்திரன் நியமனம் கொடுத்துள்ளார்." - என்றும் சசிகலா குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து தமிழரசுக் கட்சியில் இருந்து இன்று காலை வெளியேறிய சசிகலா, ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று பிற்பகல் கையெழுத்திட்டுள்ளார். https://oruvan.com/sri-lanka/2024/10/07/sasikala-who-came-out-of-tamilarasu-party-competes-in-the-conch-symbol
  20. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி! kugenOctober 7, 2024 யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் 9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு இன்று திங்கட்கிழமை (07) தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஈபிடிபி வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உள்ளடங்கிய வேட்பு மனுவே யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்ட அத்தாட்சி அலுவலரிடம் கையளித்தார். இதேவேளை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள் கொழும்பு உள்ளடங்களாக ஒன்பது மாவட்டங்களில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பிடி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதன்போது ஊடகவியலாளர்கள் கொழும்பில் இம்முறை ஈ.பி.டி.பி போட்டியிடுவதற்கு விசேட காரணங்கள் ஏதும் உண்டா? என்ற கேள்விக்கு கொழும்பிலுள்ள எமது கட்சியின் ஆதரவாளர்கள் கொழுப்பிலும் போட்டியிடுமாறு கோரிக்கை விடுத்திவந்திருந்தனர். அவர்களது கோரிக்கையின் அடிப்படையில் இம்முறை அந்த மாவட்டத்திலும் போட்டியிடுகின்றது ஈ.பி.டி.பி. இதேநேரம் ஈ.பிடி.பி ஆரம்பகாலம் முதற்கொண்டு தொடர்ச்சியாக கூறிவருகின்ற தேசிய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அதை வலுப்படுத்தும் நோக்குடன் கொழும்பு மாவட்டம் பல்லின பல மொழி பேசும் மக்கள் வாழும் இடமாக இருப்பதனால் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் வேட்பாளர்கள் களமிறங்ககின்றனர். அந்தவகையில் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் இலக்கை அடைவதற்கு வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்திருநதமை குறிப்பிடத்தக்கது. https://www.battinews.com/2024/10/blog-post_259.html
  21. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழில் வேட்புமனு தாக்கல் October 7, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதன்போது கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். வேட்புமனுத்தாக்கலின் பின்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். https://eelanadu.lk/நாடாளுமன்றத்-தேர்தலில்-ப/
  22. இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் விபரம்! பொதுத்தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதன்படி வேட்பாளர்களாக எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், இ.ஆர்னோல்ட், எஸ்.சுகிர்தன், கே.சயந்தன், இளங்கோவன், பிரகாஸ், சுரேகா, கிருஷ்ணா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இதேவேளை கட்சியின் சில தீர்மானங்களை எதிர்த்து தமிழரசுக் கட்சியின் முக்கிஸ்தர்கள் பலர் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. http://www.samakalam.com/இலங்கை-தமிழ்-அரசு-கட்சிய/
  23. தமிழரசுக்கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறக்கிறார் மாவை! adminOctober 7, 2024 இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா தீர்மானித்துள்ளார். பதவியை துறந்தாலும் அவர் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை முக்கியஸ்த்தர் சட்டத்தரணி கே.வி தவராசா தமிழரசுக்கட்சியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/207216/
  24. நீலநிற சூரியன் : விமர்சனம்! christopherOct 06, 2024 10:30AM பெண்ணாகத் தன்னை உணரும் ஆணின் கதை! பெரும்பாலான திரைப்படங்கள் வாழ்வோட்டத்தில் இருக்கிற பெருஞ்சிக்கல்களைப் பேசுவதே இல்லை. சமத்துவ சமுதாயம், பாலின சமத்துவம், சூழல் பாதுகாப்பு உட்படப் பல விஷயங்களைப் பேசுகிற வாய்ப்புகள் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன. அப்படியொரு நிலையில், தன்னைச் சிறு வயதில் இருந்து பெண்ணாக உணரும் ஆணின் உருமாற்றத்தைப் பேசுகிறது ‘நீலநிற சூரியன்’. சம்யுக்தா விஜயன் இதனை எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? வலிமிகு தருணங்கள்! பானு என்ற பெயரில் தன்னைப் பெண்ணாகப் பாவித்துக்கொண்டு பேசிப் பார்க்கிறார் அரவிந்த் (சம்யுக்தா விஜயன்). அப்போது, தன் குரலில் மாற்றம் பெரிய அளவில் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைகிறார். இந்தக் காட்சியில் இருந்து ‘நீலநிற சூரியன்’ திரைப்படம் தொடங்குகிறது. அரவிந்தின் முன்கதை எப்படிப்பட்டது? எதனால் அவர் இப்படியொரு மாற்றத்திற்கு உள்ளானார்? எப்போது அதற்கான முதல் விதை விழுந்தது என்பது போன்ற விஷயங்கள் எதையும் பேசாமல் நேராக அவரது சமகால வாழ்வுக்கு நகர்கிறது திரைக்கதை. அதுவே இக்கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றும் அரவிந்த், தன் பெற்றோரிடத்தில் (கஜராஜ் – கீதா கைலாசம்) கூட அதிர்ந்து பேசுவதில்லை. வீட்டை அடமானம் வைத்துக் கடன் வாங்கித் தனது கடையை நடத்த விரும்புகிறார் அரவிந்தின் தந்தை. அதற்காக, அவரது சகோதரர் (பிரசன்னா பாலச்சந்திரன்) ஒரு பைனான்சியரிடம் அழைத்துச் செல்கிறார். ஒரே சாதியைச் சார்ந்தவர்கள் என்ற வகையில், தனது மகளை அரவிந்துக்குக் கல்யாணம் செய்துவைக்க அந்த பைனான்சியர் எண்ணுகிறார். கடனாக அல்லாமல் சீதனமாகப் பணம் தர விரும்புவதாகத் தெரிவிக்கிறார். ஆனால், அரவிந்த் அதனை ஏற்பதாக இல்லை. ‘எனக்குக் கல்யாணம் வேண்டாம்’ என்கிறார். ஹார்மோன் மாற்றத்திற்காக மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் அரவிந்த், திருமண நிர்ப்பந்தத்தால் உடனடியாகத் தான் பெண்ணாகச் சமுதாயத்திற்குத் தெரிய வேண்டுவது அவசியம் என்றெண்ணுகிறார். அது வீட்டிலும், தான் பணியாற்றும் பள்ளியிலும் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் புரிந்து கொண்டிருக்கிறார். அதனால், அவரிடத்தில் பெருகிய தயக்கங்கள் உடையச் சரியான தருணம் இது என்று சொல்கிறார் சக ஆசிரியை ஒருவர். நட்போடு அவர் சொல்லும் வார்த்தைகள், அரவிந்தைப் பானுவாக மாற வைக்கின்றன. அதனால், அவர் சந்தித்த விளைவுகள் எத்தகையவை என்பதைச் சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி. ஒரு ஆண் தன்னைப் பெண்ணாக உணர்வதும், அதனைச் சமூகத்தில் வெளிப்படுத்துவதும் சாதாரண விஷயமல்ல. யாரோ ஒருவருக்கு அது நிகழும்போது இரண்டொரு வார்த்தைகள் உதிர்த்துவிட்டுக் கடந்து போகின்றவர்கள், தமது குடும்பத்தில் அவ்வாறு நிகழ்வதை இம்மியளவு கூட விரும்ப மாட்டார்கள். ‘நீலநிற சூரியன்’ அப்படிப்பட்ட ’பேசாப்பொருட்களை’ப் பற்றிப் பேசுகிறது. வலிமிகு தருணங்கள் பலவற்றை உள்ளடக்கிய கதை இது. ஆனாலும், அனைத்தையும் திரையில் காட்டாமல் சிலவற்றை வசனங்களில் சொல்லிச் செல்கிறது. சில விஷயங்கள் பூடகமாக உணர்த்தப்படுகின்றன. அது, இப்படத்திற்கு வேறொரு வண்ணத்தைப் பூசியிருக்கிறது. ’மெலோடிராமாவாகத் திரையில் நகர்ந்து நம்மை அயர்ச்சிக்கு உள்ளாக்குமோ’ என்று நினைக்கிற உள்ளடக்கத்தை, ரொம்பவே எளிமையாகத் திரையில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் சம்யுக்தா விஜயன். அதுதான் ‘நீலநிற சூரியன்’ படத்தின் பலம். சிறப்பான முயற்சி! ‘நீலநிற சூரியன்’னை எழுதி இயக்கியிருக்கும் சம்யுக்தா விஜயன், இதில் அரவிந்த் ஆக நடித்திருக்கிறார். ‘அதீதம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு, ரொம்பவே சாதாரணமாகத் திரையில் வந்து போயிருக்கிறார். ஆத்திரம் பொங்குகிற தருணங்களில் கூட, அவர் அப்படி நடித்திருப்பது மட்டுமே கொஞ்சம் இடறுகிறது. அரவிந்தின் பெற்றோராக வரும் கஜராஜ், கீதா கைலாசம் இருவருமே ‘அளவாக’ நடித்திருக்கின்றனர். அதேநேரத்தில், ’சமகாலச் சமூகத்தில் இப்படியொரு சூழலை எதிர்கொள்ளும் பெற்றோர்கள் இப்படித்தான் இருப்பார்களா’ என்ற கேள்வியை முன்வைக்கிறது அவர்களது நடிப்பு. பல காட்சிகள் பாதியில் தொடங்குகின்றன அல்லது பாதியில் முடிவடைகின்றன என்கிற எண்ணமே அதற்கான பதிலாகவும் நாம் கொள்ள வேண்டியிருக்கிறது. இக்கதை பொள்ளாச்சியில் நிகழ்வதாக உள்ளது. அதற்கேற்ப, கோவை வட்டாரத் தமிழ் பேசியிருக்கிறார் சித்தப்பாவாக வரும் பிரசன்னா பாலச்சந்திரன். அவரது மனைவியாக வருபவரும் அந்த உச்சரிப்பைச் சரிவரப் பயன்படுத்தியிருக்கிறார். இதர பாத்திரங்கள் ஏதும் அதனைப் பின்பற்றவில்லை. அது இப்படத்தின் மைனஸ்களில் ஒன்று. பள்ளி துணை முதல்வராக வரும் கேவிஎன் மணிமேகலை, இக்கதையில் வரும் ’உணர்ச்சிமிகு தருணங்களுக்கு’ உத்தரவாதம் தருகிறார். சாதாரண மனிதர்களின் பிரதிநிதியாகத் திரையில் தெரிகிறார். இக்கதையில் உடற்கல்வியியல் ஆசிரியர்களாக ஆண், பெண் என்று இரண்டு பேர் காட்டப்படுகின்றனர். ஆசிரியையாக வருபவர் முதன்மை பாத்திரத்தை தோழமையுடன் நடத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. அவரது நடிப்பில் ‘இயல்பு’ நிறைந்திருப்பது அருமை. இன்னொரு ஆசிரியராக வருபவரின் பாத்திரம் கொஞ்சம் ‘கத்தி மீது நடப்பது’ போன்றது. அதனை அவர் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, நமது வசவுகளை வாங்குமளவுக்கு நடித்திருக்கிறார். மருத்துவராக வரும் சீரியல் நடிகை, அவர் பரிந்துரைக்கும் மனநல நிபுணராக வரும் கிட்டி என்று இதில் சில தெரிந்த முகங்களும் உண்டு. இவர்கள் தவிர்த்து பள்ளி முதல்வர், தாளாளர், மாணவர்கள், மாணவிகள், அவர்களுள் ஒருவராக வரும் மசாந்த் ராஜன் உட்பட அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மட்டுமல்லாமல் இப்படத்தின் இசையமைப்பையும் கையாண்டிருக்கிறார் ஸ்டீவ் பெஞ்சமின். உண்மையைச் சொன்னால், இப்படம் முழுக்கத் தென்படும் வண்ணங்கள் ஒரேமாதிரியான அலைவரிசையில் இருக்கின்றன. அவற்றில் எந்த ஏற்றமோ, இறக்கமோ இல்லை. டிஐயில் அது இப்படித்தான் அமையும் என்பதைத் திட்டமிட்டு ஒளிப்பதிவு செய்தால் மட்டுமே அது சாத்தியம். போலவே, கேமிரா கோணங்களிலும் பெரிதாக ‘வெரைட்டி’ காட்டவில்லை. படத்தொகுப்பை மனதில் கொண்டு, திரையில் கதை மெதுவாகவும் சீராகவும் நகரும் வண்ணம் ‘கட்’கள் அமைந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் அமைதியைத் தவழவிட்டு, முதன்மைப் பாத்திரத்தின் மனவோட்டம் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கிற வேளைகளில் மட்டும் பின்னணி இசையைத் தந்திருக்கிறார் ஸ்டீவ் பெஞ்சமின். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை மூன்றிலும் சிறப்பான பங்களிப்பைக் கொண்டிருப்பதால் மட்டுமே, ஒரு வழக்கத்திற்கு மாறான திரையனுபவத்தை நாம் பெறுகிறோம். நிச்சயமாக, அவரது உழைப்பு சிறப்பானது. இதைத் தாண்டி டிஐ, ஒலிப்பதிவு உட்பட இதர அம்சங்களும் இக்கதையை முன்னிறுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஒரு இயக்குனராக, சம்யுக்தா விஜயன் இப்படத்தில் தான் விரும்பிய ஒன்றைச் சொல்லியிருக்கிறார். திருநங்கையாகத் தன்னை உணர்ந்து, அதே போன்றிருப்பவர்களோடு சேர்ந்து வாழ்பவர்கள் சிலர். மிகச்சிலர் அதில் தங்களை அடக்கிக்கொள்ளாமல் தனிமையாகவே இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நபரை முன்னிறுத்துவதாக ‘நீலநிற சூரியனை’ வடிவமைத்திருக்கிறார். பெயர் மாற்றத்திற்காக வட்டாட்சியர் அலுவலகம் செல்கையில், அங்கிருக்கும் பெண் கிளார்க் விண்ணப்பத்தில் ‘திருநங்கை’ என்று குறிப்பிடச் சொல்வதாக ஒரு காட்சி உண்டு. அது முடியும்போது, உடல்நலம் சரியில்லாத குழந்தையை ஆசீர்வாதம் செய்யுமாறு முதன்மை பாத்திரத்திடம் ஒரு பெண் வேண்டுவார். போலவே, தான் விரும்புகிற ஆண் ஒருவரோடு ஒரு ஹோட்டலில் முதன்மை பாத்திரம் தனியாக அமர்ந்து பேசுவதாக ஒரு காட்சி வரும். தன்னைப் பெண்ணாக உணர்கிற ஆண் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட பார்வைகளைக் கடக்க வேண்டியிருக்கும் என்பதை இவ்விரு காட்சிகளும் மிகச்சரியாகக் காட்டியுள்ளன. பள்ளிக்கூடக் காட்சிகளில் கூட, அரவிந்தை பானுவாகப் பார்க்கும் மாணவர்களின் அனுபவம் எத்தகையது என்பது காட்டப்படவில்லை. போலவே, உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரின் கேலி, கிண்டல்கள் இதில் காட்டப்படவில்லை. முக்கியமாக, முதன்மை பாத்திரம் மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதாக ஓரிடத்தில் கூடச் சொல்லப்படவில்லை. ஆனால், இது போன்று நாம் பார்த்த பல கதைகள் அப்படிப்பட்ட அனுபவங்களையே தந்தன. திரைக்கதையில் எந்தெந்த இடங்களைத் தவிர்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டு காட்சிகளை அமைத்திருப்பதால், இப்படம் திரையில் வித்தியாசமானதொரு அனுபவத்தைத் தருகிறது. அதனாலே, சிறப்பானதாகவும் இம்முயற்சி அமைந்திருக்கிறது. சிறிய பட்ஜெட்டில், சிறப்பான திட்டமிடல் உடன் கவனமாகக் கதை சொல்லலைக் கையாண்டால் வெற்றி பெறலாம் என்று காட்டியிருக்கிறது ‘நீலநிற சூரியன்’. டீசர், ட்ரெய்லர் பார்த்துவிட்டு அல்லது இப்படம் பேசும் விஷயங்கள் எத்தகையவை என்று அறிந்துகொண்டு, அதன்பிறகு தியேட்டருக்கு வருபவர்களுக்கு ‘நீலநிற சூரியன்’ நல்லதொரு அனுபவத்தைத் தரும்! https://minnambalam.com/cinema/neela-nira-sooriyan-movie-review/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.