Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34945
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் – பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.எனவே, நாட்டில் ஒரு பெரிய வெடிப்பைத் தடுக்க, பூஸ்டர் டோஸைப் பெறுவதும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதும் முக்கியமானது என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து ஒமிக்ரோன் நோயாளர்கள் கண்டறியப்பட்டு முழு தீவுக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.மறுபுறம் பொது மக்கள் ஒமிக்ரோன் பரவலை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லையென்பது அண்மைக்கால விடுமுறை நாட்களில் மக்கள் செயற்பட்டதில் தெளிவாகிறது என்றும் குறிப்பிட்டார். தற்போது ஒமிக்ரோன் சமூகத்தில் பரவத் தொடங்கியதால், சிந்தப்பட்ட பாலுக்காக அழுவது அபத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.எனவே, நாட்டில் ஒரு பெரிய வெடிப்பைத் தடுக்க, பூஸ்டர் டோஸைப் பெறுவதும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதும் முக்கியமானது என்று அவர் மேலும் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/எதிர்வரும்-இரண்டு-வாரங்க/
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னியஷ்த்ரா🎉🎊🎈 வாழ்க வளமுடன்🎂
  3. அப்ப தொடர்ந்து சைன் இன் பண்ணி வாசியுங்கோ! இல்லாத பிரச்சினைகளுக்கு மோகன் எப்படி தீர்வு தருகின்றார் என்று பார்ப்போம்! எதுக்கும் இரண்டு ஸ்கிரீன் ஷொட் கேட்பார் (1: நோமல், 2: பிராந்து)
  4. Don’t Look up : நாம் மேலே பார்ப்பதை தவிர்க்கிறோம் || ராஜசங்கீதன் சமூகதளங்கள் முழுக்க 'க்ரெட்டா'வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன. December 29, 2021 “அந்த இரண்டு மார்க்சிஸ்டுகள் உலகம் முழுவதும் சென்று உலகம் அழியப் போவதாக சொல்லிக் கொண்டிருப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது”என ஒரு வசனம் Don’t look up படத்தில் வருகிறது. நாயகனும் நாயகியும் விஞ்ஞானிகள். ஒருநாள் நாயகி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கிறாள். வால் நட்சத்திரம்! புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் கொண்டாடுகின்றனர். நாயகன் வால் நட்சத்திரம் இருக்கும் தூரத்தைக் கணக்கிடுகிறான். வால் நட்சத்திரத்தின் தூரம் ஒவ்வொரு கணக்கிடலிலும் குறைந்து கொண்டே இருக்கிறது. வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது! ஆறு மாதங்கள்தான் கெடு! நாம் அறிந்த வகையில் இருக்கும் உலகம் அழிந்துவிடும்! – இந்த மூன்று விஷயங்களை உலகுக்கு அறிவிக்க முயலும் இரு விஞ்ஞானிகளின் கதைதான் படம். முதலில் அமெரிக்க ஜனாதிபதியிடம் பேச முயலுகிறார்கள். நடக்கவிருக்கும் தேர்தலை வால் நட்சத்திரம் பற்றிய செய்தி பாதிக்கும் என யோசிக்கிறார். தொலைக்காட்சியில் சொல்ல முயலுகிறார்கள். ‘இந்த வால் நட்சத்திரத்தை என் முன்னாள் மனைவியின் வீட்டு மேல் விழச் செய்ய முடியுமா?’ என சொல்லி விட்டு சிரிக்கிறார். இவை அன்றி, கூப்பிட்டால் ஜனாதிபதி பம்மி ஓடி நிற்கும் ஒரு முதலாளி, வால் நட்சத்திரத்தில் பல ட்ரில்லியன் டாலர் மதிப்பு வாய்ந்து மினரல்கள் இருப்பதாகச் சொல்கிறார். அவற்றை எப்படி எடுப்பது என்பதைப் பற்றி ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடக்கிறது. சமூகதளங்கள் முழுக்க ‘க்ரெட்டா’வைப் போல் நாயகியை ட்ரோல் செய்யும் பிரச்சாரம் முடுக்கி விடப்படுகிறது. அரசு, முதலாளி என ஆளும்வர்க்கம் விரும்புகிற பாணியில் மக்களை மந்தைகளாக்க சமூக தளங்கள் பயன்படுகின்றன. இறுதியில் என்னவாகிறது என்பது மிச்சக் கதை! கதையில் வரும் வால் நட்சத்திரம், வால் நட்சத்திரம் அல்ல; நிகழ்ந்து கொண்டிருக்கும் காலநிலை மாற்றமே என்பதை மேற்கண்ட கதையிலேயே ஒருவர் புரிந்துகொள்ள முடியும். காலநிலை மாற்றத்துக்கான எல்லாவித சாட்சிகளும் நேரடியாக நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே எப்படி insensible ஆக அரசும் ஆளும்வர்க்கமும் இருக்கின்றன என்பதையும் காலநிலை மாற்றத்தை மறுக்கும் ஆளும் வர்க்க அடிவருடிகள் சமூக ஊடகங்களைக் கொண்டு எப்படி மக்களை முட்டாள்களாக்குகின்றனர் என்பதையும் முதலாளியம் ஏன் தீர்வாக முடியாது என்பதையும் அறிவியலில் முதலாளிக்கான அறிவியல், மக்களுக்கான அறிவியல் என இரு வகை இருப்பதையும் படம் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. இத்தகையக் கதைக்குள்தான் இரு விஞ்ஞானிகளையும் பிடிக்காத ஒரு நபர் அவர்களை மார்க்சிஸ்டுகள் எனக் குறிப்பிடுகிறார். விஞ்ஞானம் பேசுபவர்கள் எப்படி மார்க்சிஸ்டுகளாக முடியும்? ஆக முடியும். விஞ்ஞானம் முதலாளிகளுக்கானதாகவும் மக்களுக்கானதாகவும் இரு வகையாக இருப்பதை புரிந்து, மக்களுக்கான விஞ்ஞானத்தை அரச எதிர்ப்பு, மக்களின் பொதுப்புத்தி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பேசுபவர்கள் மார்க்சிஸ்டுகள்தான். அறிவியலுக்குள் இருக்கும் லாபவெறி, வர்க்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமல் ஒற்றையாய் அறிவியலைப் புரிந்து கொண்டு கண்மூடித்தனமாக பேசுபவர்கள் அறிவியல் பூசாரி கணக்கில்தான் வருவார்கள். காலநிலை மாற்றத்துக்கான தீர்வு அரசநிலை மாற்றமும் உற்பத்தி முறை மாற்றமும்தான் என்பதை முதலாளியமே ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு விஞ்ஞானம் அவர்களைத் தள்ளியிருக்கிறது. அதனால்தான் க்ரெட்டா உள்ளிட்டோர் ‘The system has to be changed’ என மார்க்சிய மொழியில் பேசுகிறார். உலகளாவிய இடதுசாரிகள் ‘System change, not climate change’ என அரசநிலை மாற்றத்தை பிரசாரம் செய்கின்றனர். மானுடத்தை அழிவிலிருந்து காக்க இயற்கையே முன் வைக்கும் தீர்வு, மார்க்சியம்தான். அதனால்தான் உலகமெங்கும் சூழலியலாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சமூக ஊடகப் பதர்களைக் கொண்டு Cancel செய்யப்படுகிறார்கள். அரசுகள் காலநிலை மாற்றத்துக்கான தீர்வை முதலாளியத்துக்குள்ளேயே தேடுகின்றன. பாசாங்கையோ வழக்கமான அரசியல் உத்திகளையே கதைக்குதவாத வாதங்களையோ முன்னெடுக்கும் காலத்தை தாண்டிவிட்டோம் என்கிறோம். ஆனால் கேட்பாரில்லை. உண்மை என்னவோ பூமியை அழிக்க வந்த வால் நட்சத்திரம் போல் தெள்ளத்தெளிவாக வானில் தெரிகிறது. நாம்தான் மேலே பார்ப்பதைத் தவிர்க்கிறோம். படத்தைப் பார்த்துவிடுங்கள்! படம் நெற்ஃபிளிக்ஸில் பார்க்கலாம்👍🏾 https://www.vinavu.com/2021/12/29/dont-look-up-netflix-movie-rajasangeethan/
  5. தடுப்பூசி அட்டை கட்டாயம்; 2 வாரங்களில் நடைமுறை! பொது இடங்களுக்கு செல்லும் போது, கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது நேற்று முதல் கட்டாயமாக்கப்படுகின்ற போதிலும், அது நடைமுறையாவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் எடுக்கும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அதற்காக செயலி ஒன்றையும் ‘க்யூஆர் கோட்’ ஒன்றை உருவாக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். https://newuthayan.com/தடுப்பூசி-அட்டை-கட்டாயம்/
  6. இருந்தது. எனக்கு வேலை செய்தது. ஆனால் அண்மையில் மோகன் கருத்துக்கள மென்பொருளை மாற்றும் வரையில் நிலாமதி அக்காவுக்கும், உங்களுக்கும் வேலை செய்யவில்லை!😁 இப்போது எல்லாம் திருப்தியாக வேலை செய்கின்றது நிலாமதி அக்காவும், நீங்களும் சொல்லியிருப்பதால், அண்மைய கருத்துக்கள மாற்றம் சிக்கல், சில்லெடுப்புக்களைத் தீர்த்துவைத்துள்ளது. அநேகமாக இது நீங்கள் பாவிக்கும் browser specific பிரச்சினையாக இருந்திருக்கும். மோகன் இன்று ஏதோ பெரிதாக மாற்றுகின்றார். அதன் பின்னர் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது!! புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎆
  7. சைன் இன் பண்ணாவிட்டால் ஒரு திரியின் முதலாவது கருத்துக்குத்தானே போகின்றது. சைன் இன் பண்ணினால் இறுதியாக வாசித்த கருத்துக்குப் போகின்றது. இதனால் விளங்குவது என்னவென்றால் சைன் இன் பண்ணாவிட்டால் யாழ் மென்பொருளுக்கு பாவனையாளரைத் தெரியாது. அதனால் பின்தொடரமுடியாமல் முதலாவது கருத்தைக் காட்டுகின்றது. சைன் இன் பண்ணினால் குக்கீஸ் மூலம் பாவனையாளர் களத்தில் என்ன செய்கின்றார் என்பதை கண்டறியலாம். இவை வேகமாக வாசிக்காத இறுதிப் பதிவுகளுக்கு போக வழி செய்யும். இந்தப் பொறிமுறைதான் இணையத்தில் எல்லோரும் பாவிக்கின்றார்கள்.
  8. வியட்னாம் புரட்சிவாதிகள் மேற்கொண்ட தற்காப்பு முறைகளை தமிழீழத்தில் உருவாக்கியவர் மேஜர் அகத்தியர் மேஜர் அகத்தியர் செல்லத்துரை புவினேயராஜ் கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:21.06.1967 - வீரச்சாவு: 01.01.1990 நிகழ்வு:முசல்குளத்தியில் புளொட் கும்பலின் முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: கொடிகாமம் மேலதிக விபரம்: கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. புலேந்திரன் - குமரப்பா முதலான போராளிகள் இலங்கை - இந்திய கூட்டுச்சதிக்குப் பலியானதைத் தொடர்ந்து 'இனி யுத்த நிறுத்தம் இல்லை ' என தலைவர் பிரபாகரன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் இடம்பெற்றது. இலங்கை மக்களின் பாதுகாப்புக்கென உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கை இராணுவம், இந்திய இராணுவத்தின் பாதுகாப்புடன் உலா வருகையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்தது. இந்திய இராணுவத்தினரின் வாகனங்களைத் தவிர்த்து, இலங்கை இராணுவத்தைக் குறிவைத்து, மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என இலண்டன் பி.பி.சி.வர்ணித்தது. இந்த வர்ணனை அக்காலத்தில் பிரபலமாக இருந்தது. இத்தாக்குதலில் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பதிகாரியும் சிரேட்ட பொலிஸ் அத்தியட்சருமான நிமால் டி சில்வாவுடன் ஒன்பது இராணுவத்தினரும் பலியாகினர். அவ்வளவு திறமையான இத்தாக்குதலை மேற்கொண்டவன்தான் மேஜர் அகத்தியர். மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்வி ஆறு என சிறப்பாகக் குறிப்பிடப்படும் கோட்டைக்கல்லாறுப் பகுதியைச் சேர்ந்த இவன், 1984 ஆம் ஆண்டு புலிகளுடன் தன்னை இணைந்துக்கொண்டான். விடுதலைப் புலிகளின் ஐந்தாவது முகாமில் பயிற்சி பெற்றுக்கொண்ட இவன், மருத்துவக் குழுவினருக்கான விசேடபயிற்சியையும் மேலதிகமாகப் பெற்றுக்கொண்டான். மீண்டும் இந்த மண்ணில் அவன் மருத்துவனாக காலடி எடுத்துவைத்தாலும், திறமை மிக்கஒரு போராட்ட வீரனாகவே இனங்காணப்பட்டான். அதனாலேதான், அபாயகரமான பகுதிகள் எனக்கருதப்படும் பகுதிகளில் நடத்த உத்தேசிக்கப்படும் தாக்குதல்கள் இவனிடம் ஒப்படைக்கப்பட்டன. மட்டக்களப்பு - வாழைச் சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள வந்தாறுமூலை அம்பலத்தடிச் சந்தி, எமது போராளிகளில் கணிசமான பேரை பலிகொண்ட இடமாகும். ஏனெனில் இப்பகுதியில் இருந்தே எமது பயிற்சி முகாம்களுக்கான உணவுப் பொருட்கள் விநியோகிக்கப் படுவதுண்டு. எனவே இப்பாதை மீது சிறீலங்காப் படையினருக்கு எப்போதுமே குறியிருக்கும். இப்பகுதியில் துப்பாக்கிச் சன்னத்தைக் காணாத சுவர்களே இல்லையெனலாம். ஆனால், இந்த அபாயகரமான பாதையில் சண்டையிடத்தான் இவனுக்கு விருப்பம். தன்னைப் போலவே ஏனைய போராளிகளையும் உருவாக்கினான். ஒரு கட்டுப்பாடான ஒழுக்கமான போராளியால் தான் ஒரு சிறந்த தலைமையை அளிக்கமுடியும். எனவே கட்டுப்பாடு, ஒழுக்கம் என்பன போராளிகளுக்கு வேண்டும் என வலியுறுத்துவான். மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியைப் பற்றி போராளிகள் குறிப்பிடும் போது “ஓடிணா வெளி, விழுந்தா வெளி” என்று குறிப்படுவார்கள். அப்படியான இயற்கை அமைப்பைக்கொண்ட அந்தப் பிரதேசத்தின் பொறுப்பாளனாக இவன் நியமிக்கப்பட்ட காலத்தில், இவன் எவ்வாறு போராளிகளைக் காப்பாற்றினான் என்பதை அறியும் போது ஒவ்வொருவர் நெஞ்சும் புல்லரிக்கும். மட்டக்களப்பில் இருந்து வளைந்து நீண்டுவரும் அந்த வாவிக்கரையில், தொம்பலும் (சேறு) கன்னாப்பற்றைகளும் ஒட்டு என்று அழைக்கப்படும் தாவரங்களும் நிறைந்திருக்கும் இப்பகுதிக்குள் இடுப்பளவு தண்ணீருக்குள்ளும் அதற்கு மேலும் இந்தப் பற்றைகளிடையே தடிகளினால் அரண் அமைத்து அவற்றையே முகாம் ஆக்கியிருந்தான். தேசத்துரோகிகள், எமது காற்றையே அசுத்தப் படுத்தும் வகையில் நிறைந்திருக்கும் இந்தியப் படையினர் இவர்களின் பார்வையில் படாது அந்த வயல்வெளிகளைக்கடந்து குளிர், நுளம்புத் தொல்லை மிகுந்த இந்த நீர்நிலை முகாம்களுக்குச் செல்வதென்றால் அதற்கு எவ்வளவு கவனம் தேவை. இந்த முகாம்களில் இருந்தே ஏனைய இடங்களுடன் தகவல் தொடர்பு எடுக்க வேண்டும். தொலைத் தொடர்புக் கருவிக்கு வேண்டும் பற்றரி கொண்டு செல்வதென்றால் கூட இலேசானதல்ல. ஆனால், இவன் அதையெல்லாம் செய்துகாட்டினான். அங்கிருந்தே தாக்குதலுக்குத் திட்டமிட்டான், போராடினான். இதற்கான மக்கள், பலத்தையும் திரட்டினான். இதனால்தான் 'புலிகளுக்கு குளிருக்கு போர்வையோ, உணவோ தேவையில்லை. ஆயுதங்களைக் கடலிற்குள் கூடப் புதைத்து வைத்தனர். இருட்டில்கூட அவற்றைத் தேடி எடுத்தனர் என பம்பாயில் வீக்லி இதழுக்கு பேட்டி அளித்தார் இந்தியப்படை எம் மீது போர் தொடுத்த காலத்தில் அதற்குப் பொறுப்பாயிருந்த இந்தியப்படை அதிகாரி. இதேபோல வந்தாறுமூலைப் பகுதிக்கு அப்பால் முகாம்களை அமைக்கும்போது இயற்கையினை போராளிகளுக்கு அரணாக்கித் தந்தான். மலைகளுக்குப் பக்கத்தில் உள்ள குகைகளே பாதுகாப்பு அரண்கள். விமானக்குண்டு வீச்சின்போதும் எறிகணைத் தாக்குதல்களின்போதும் குகைகளுக்குள்ளேயே தனது வாரிசுகளைப் பாதுகாத்தான். உணவைப் பெற்றுக்கொள்வதற்காக சுமார் 15 மைல்தூரம் நடந்துவரும்போது முன்னே செல்வது இவன்தான். ஏனையோரைவிட கூடுதலான பாரம் சுமப்பதும் இவன்தான். ஆம்.... போராட்டத்தினுள் உள்வாங்கப்படும் போராளிகளுக்கு இவன் புத்தகமாகத் திகழ்ந்தான். எமது தேசத்தை குடியேற்றத்தின் மூலம் அபகரிக்க முயலும் பேரினவாதிகளுக்கு, இவன் கனவிலும் பயமூட்டிக் கொண்டிருந்தான் மேஜர் அகத்தியர் இவனது தாக்குதல்கள் அவர்களைச் சொந்தப் பிரதேசங்களுக்கு ஓடவைத்தன. இந்திய இராணுவத்தினரின் காலத்தில் இவற்றைச் செய்வதென்பது சுலபமாக இருக்கவில்லை. ஒருமுறை நீண்ட தொலைவில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களின் இலக்குமீது தாக்குதல் தொடுத்துவிட்டு வந்துகொண்டிருந்தனர் இவனும் இவனது வாரிசுகளும், அனைவருக்கும் நல்ல பசி. சோர்ந்து வாடினார்கள். போராட என்று வெளிக்கிட்டால் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறி, அவர்களை ஒருவாறு சமாளித்துகூட்டிக் கொண்டு வந்தான். இதே நேரம் சிங்களப்படை கொடுத்த தகவலின்பேரில் இந்தியப்படை இவர்களைத் தொடர்ந்துகொண்டிருந்தது. இவர்கள் அவர்களைக் காணவில்லை . அந்தளவுக்கு பசி, இவர்கள் கண்ணை மறைத்திருந்தது. முகாமுக்குச் சென்று அனைவரும் வாயில் உணவை வைத்ததுதான் தாமதம், இந்தியப்படையின் துப்பாக்கி வேட்டுக்கள் எல்லாவற்றையும் மறக்கவைத்தன. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியேறி இந்தியப்படையை எதிர்க்க இன்னொரு பாதையில் காத்திருந் தனர். ஏனெனில் இது எமது நாடு. நாம் ஓடமுடியாது. ஓட வேண்டியவர்கள் எல்லை தெரியாது எம்மண்ணை மிதித்தார்களே. ஆனால் இந்தியர்கள் வரவேயில்லை. ஏனோ தெரியாது. அப்படியே போய்விட்டனர். அக்காலங்கள் மிக வேதனை நிறைந்தவை. பல இடங்களில் பாதுகாப்புக்காக இந்தி மொழி பேசியே பாதையைக் கடக்கவேண்டிய தேவையை ஏற்படுத்தின. இந்தியை விரட்ட பல கட்டங்களில் இந்தி மாதிரிமொழியில் பேசினான் அகத்தியர். பின்னர் மட்டக்களப்பு பிராந்தியத்தை விட்டு, வன்னிக் காடுகளுக்கு நெருக்கமானான் இவன். அங்கும் பல தாக்குதல்களில் கலந்துகொண்டான். இறுதியில் முசல்குத்தியில், தேசவிரோதிகளின் மீதான தாக்குதல்களில் கப்டன் முரளி, இரண்டாவது லெப். அலெக்ஸ் ஆகியோருடன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான். இத்தாக்குதலில் பல தேசத்துரோகிகள் உயிரிழந்தனர். வியட்னாமிலும், சிங்கராஜா காடுகளிலும் புரட்சிவாதிகள் மேற்கொண்ட தற்காப்பு முறைகளை தமிழீழத்தில் உருவாக்கிய இவன், என்றும் மறக்கப்பட முடியாதவன். அதைவிட ஒவ்வொரு வருடம் பிறக்கும் போதும் தமிழீழ மக்கள் இவனை நினைவுகூரத் தவறமாட்டார்கள். ஏனெனில் இவன் வீரச்சாவெய்திய தினம் ஜனவரி 1. -களத்தில் https://www.thaarakam.com/news/72096c59-5510-41de-b876-5b9cb3ee0f43
  9. கர்ப்பம்: நொயல் நடேசன் நான் ஒரு மிருகவைத்தியர். சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.” என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே. ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா? எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால் சில நேரத்தில் மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கலாம். அதன்பின் அவை மயக்கம் தெளியும்வரை காத்திருக்கவேண்டும். நான்கு மணி நேரத்தில் இவை நடக்குமா? “என்னத்திற்காக எக்ஸ்ரே?” “பெண் நாய், கர்ப்பமா எனப் பார்க்க வேண்டும் “ “சரி” என்றேன். அன்று அதிகம் வேலை நெருக்கடி இருக்கவில்லை. மெல்பனில் குளிர்காலம். இரு நாட்கள் முன்பாக கொரோனோ என இரண்டு கிழமைகள் மெல்பன் நகரம் மூடப்பட்டிருந்தது. பலருக்கு முக்கிய வேலைகள் பல இருக்கலாம். காலை 11 மணியளவில் நடுத்தர வயதுப் பெண் எக்ஸ்ரேக்கு நாயைக் கொண்டு வந்தார். பெண் அரேபிய ஒலிவ் நிறம். ஆனால் அவுஸ்திரேலியாவில் பிறந்ததால் அவுஸ்திரேலிய ஆங்கிலத் தொனி, உடை, பாவனையுடன் இருந்தார். நாய்க்குப் பெயர் லூசி; ஸ்பிரிங்கர் ஸ்பனியல் இனம். சிவப்பு நிறம். மூன்று வயது இருக்கும். முயல், பறவைகள் வேட்டைக்கு இந்த நாயைப் பாவிப்பார்கள் “இன்றைக்குக் குட்டி போடும் நாள், எந்த அறிகுறியுமில்லை என்பதால் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்போம் எனக் கொண்டுவந்தேன்” என்றார் நாய்களுக்கு இரண்டு மாதம் கர்ப்பம். இந்த இன நாய்களுக்கு 5-6 குட்டிகளாவது இருக்கும். ஏற்கெனவே ஒரு மிருக வைத்தியரைக் கலந்தாலோசித்து அவரது பரிந்துரையில் இங்கு வருகிறார் என்பதால் எந்த விடயத்தையும் துருவிக் கேட்காது நாயை, நேரடியாக எக்ஸ்ரே அறைக்குக் கொண்டுசென்று, எக்ஸ்ரே எடுத்தோம். எந்தப் பிரச்சினையுமில்லாது எக்ஸ்ரே எடுக்க முடிந்தது . எக்ஸ்ரேயில் எந்த நாய்க்குட்டிகளும் தெரியவில்லை . நிறைமாதக் கர்ப்பமாக இருக்கும் நாயில் முள்ளந்தண்டுகள், தலை எலும்புகள் தெளிவாகத் தெரியும். எனது உதட்டைப் பிதுக்கி “கர்ப்பமில்லை. நான் கையால் சோதிக்கிறேன்” என அதன் வயிற்றை அழுத்தினேன். நிச்சயமாகப் பெரிய வயிறு, ஆனால், உள்ளே எதுவும் கையில் தட்டுப்படவில்லை. எனது பரிசோதனை அறைக்குக் கொண்டுவந்து மீண்டும் கைகளால் பரிசோதித்தேன். நிச்சயமாக வயிறு பெரிதாக உள்ளது . முலைகளில் பிடித்துப் பிதுக்கியபோது பால் வந்தது. மீண்டும் இரண்டாவது தடவையாக வயிற்றை வேறுவிதமான கோணத்தில் வைத்து எக்ஸ்ரே எடுத்தேன். குறைந்தது இரண்டு எக்ஸ்ரேக்கள் எடுக்க வேண்டும். “நிச்சயமாகக் கர்ப்பமில்லை. ஆனால், இதை நாங்கள் பன்ரம் பிறக்னன்சி (Phantom pregnancy) என்போம். இதில் கர்ப்பப்பை முலை என்பன எல்லாம் விருத்தியடைந்து குட்டித்தாச்சி நாய் போலிருக்கும் . இரண்டுமாத முடிவில் குட்டி போடுவதற்கு முயலும். இது உடலில் உள்ள ஓமோனின் தாக்கத்தால் ஏற்படும் மாற்றம் “ என்றேன். “நான் இதுவரையில் கேள்விப்பட்டதில்லை” என்று கண்களை அகல விரித்தார். “பல நாய்களில் நான் கண்டிருக்கிறேன். ஆண் நாய் கூடும் காலம் சரியாக இல்லாதபோது கருக்கட்டுதல் தவறிவிடும். ஆனால் இப்படியான நிலை ஏற்படும்.“ கொரோனோ கலத்தில் நாய்க்குட்டிகளின் விலை பல மடங்காகி விட்டது. வீடுகளில் அடைபட்டுக் கிடப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும், நாய்கள் முக்கியமான தோழமையாகியது. பலர் புதிதாக நாய் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு மனரீதியான உற்சாகத்தை மட்டுமல்ல நாய்களைக் கூட்டிக்கொண்டு நடப்பதற்கு அனுமதியுள்ளதால், உடல்ரீதியான ஆரோக்கியத்தையும் பெறமுடிகிறது. பலர் நாய்களை வியாபார நோக்கத்தில் குட்டிக்காக வளர்க்கத் தொடங்கியுள்ளார்கள். நாய்க்குட்டிகளை விற்பவர்கள் அவற்றின் விலையையும் கூட்டிவிட்டார்கள். பொருளின் தேவை அதிகமாகும்போது அதனது விலை அதிகரிப்பது நியாயமானதே! அந்தப் பெண்ணின் முகத்தில் மேகமாகப் படர்ந்த ஏமாற்றம் மறைந்து ஒரு சுமுகமான நிலைக்கு வந்தபின்னர், அந்தப்பெண் “சமீபத்தில் நான் கூட மார்பைப் பரிசோதிக்க எக்ஸ்ரே எடுத்தேன். அப்போது எனது சுவாசப்பையிலிருந்து கட்டியான கான்சர் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அதை வெட்டி எடுத்தார்கள் “ என்றார். ஒரு கணம் திகைத்து சுதாரித்துக்கொண்டேன். சொந்த விடயங்களைப் பேசுமளவு வரும்போது அவர்களுக்கு என்னில் நம்பிக்கை வந்துள்ளது என்பதோடு நானும் பொறுப்பாக நடக்கவேண்டுமென்ற உணர்வும் தானாக வந்துவிடும். பேசும் வார்த்தைகளில் அவதானம் ஏற்பட்டுவிடும், அதிலும் பெண்களாக இருந்தபோது மேலும் கவனமெடுப்பேன். அதன்பின் எங்கள் உரையாடல் மீண்டும் நாயின் கர்ப்பத்தில் வந்தது. அப்பொழுது நான் சொன்னேன் “கர்ப்பத்தில் உருவாகும் ஓமோன்கள் எத்தனையோ மாயம் செய்யும். எனக்குத் தெரிய, ஒரு பெண் தனது இறந்த பிள்ளையை உயிருடன் இருக்கிறது எனப் பல வருடங்கள் நம்பியபடி இருந்தார்.“ அந்தப் பெண் “உங்களோடு பேசினால் நேரம் போவது தெரியவில்லை. எனது மகனை சொக்கருக்கு கொண்டுசெல்ல வேண்டும்” எனச் சிரித்தபடி சொல்லியவாறு வெளியே சென்றாலும், என் மனதின் ஆழத்தில் புதைந்திருந்த கதையொன்று எகிப்தியப் பிரமிட்டில் இருந்து பல்லாயிரம் வருடங்கள் பின்பாக வெளியெடுக்கப்பட்ட மம்மியாக அகக் கண்ணில் தரிசனமாகியது. 000 நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த காலம். 87 ஆம் ஆண்டின் பின்பகுதியில் நானும் எனது மனைவியும் ஒன்றாக ஆங்கில வகுப்பிற்குச் சென்றோம். வைத்திய மற்றும் பல் வைத்தியர்கள் இங்கு வந்ததும் ஆங்கிலத்தைப் படித்து அதில் சித்தியடைந்த பின்பே, அவர்களது தொழில்த் துறைக்கான பரீட்சைகள் எடுக்கலாம் என்பது விதியாகும். ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலம் படிப்பதற்குப் பணம் கொடுக்கிறார்கள். இலங்கை – இந்தியா போன்ற பிரித்தானியக் காலனி நாடுகளிலிருந்து வந்த என் போன்றவருக்குப் பெரிதாக ஆங்கிலம் தேவையில்லாதபோதும், மற்றைய ஆசிய, அரேபிய, கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களுக்கு இந்த ஆங்கிலம் கற்பித்தல் முக்கியமாகிறது . மெல்பனில் நடந்த இந்த வகுப்பில் பல நாட்டவர்கள் இருந்தார்கள். ஒரு விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை போல் இருந்தது. அங்கு நான் சந்தித்த பெண் சோபியா. அக்கால யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியான குரேசியாவைச் சேர்ந்த மிருக வைத்தியர். 28 வயது. கத்தரித்த பொன்னிறக் கேசங்கள். நீலக்கண்கள். கன்னக் கதுப்புகள் சோபியா லோரனை நினைவுபடுத்தித் தூக்கலாக அமைந்திருக்கும். நல்ல உயரம்– தடுக்கியபடி ஆங்கிலம் பேசுவாள். மற்றைய அங்க அவயவங்கள் மீண்டும் ஒரு ஆணைத் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகாக அமைந்திருந்தாலும், அவளது முகத்தில் சோகத்தின் சாயல், மாலை நேரத்து நிழலாகத் தெரிந்தது. முகத்தில் சோகத்தின் நிழல் என எப்படி என்னால் சொல்லமுடியும் என்கிறீர்களா? சோபியாவுக்கு இயற்கை அழகை அள்ளிக் கொடுத்தாலும், அது தெரிவதில்லை. கண்கள் ஆன்மாவின் வாசல் என்பார்கள். அவளது பெரிய கண்கள் பியூசாகிய பல்புபோல் ஒளியற்றது. சில பெண்களுக்கு இயற்கையிலே சோகமான முகம். சிரித்தாலும் சோக ரசம் முகத்தில் வழிந்து ஹோலிப் பண்டிகையில் முகத்தில் ஒட்டிய நிறங்களாகத் தெரியும். அது எப்படி என்று என்னால் உங்களுக்குப் புரிய எழுதமுடியாது. காரணத்தை என் மனத்தில் அனுமானித்தபோது பல பதில்கள் வந்தன. சோபியா தாயின் வயிற்றில் இருக்கும்போது தாய் கஸ்டப்பட்டிருக்கலாம்; அல்லது சிறு வயதில் மற்ற குழந்தைகளால் வீட்டிலோ பாடசாலையிலோ கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம். ஆனால், அவளது ஆன்மாவில் கலந்த ஆழமான சோகத்தை அவளது கண்களின் வழியாக என்னால் எட்டிப்பார்க்க முடிந்தது. பெரும்பாலும் எனது அருகே இருப்பாள். அத்துடன் தொட்டுத்தொட்டுப் பேசுவாள். அப்படி அவள் பேசும்போது எனது மனைவியின் கண்கள் அவளைப் பார்த்தபடியிருக்கும். எனக்கு அந்தரமான நாட்கள் அவை. ஒரு நாள் என் மனைவி, ஏன் எல்லோரையும் விட்டுவிட்டு உங்களிடம் ஏன் பேசுகிறாள் எனக் கேட்டபோது, எனக்கு மனைவியின் பொறாமை புரிந்தாலும், “சோபியா ஒரு மிருக வைத்தியர் என்பதால் என்னிடம் பேசுகிறாள்” என்றேன். அது திருப்தியான பதிலாகத் தெரியவில்லை. ஆனாலும் என் மனைவி எப்பொழுதும் அவள் முன்பாக முகம் சுழித்ததாகவோ அல்லது அதிருப்தியாகவோ காட்டிக் கொள்ளவில்லை . மதியத்தில் உணவருந்தப் போகும்போது சோபியா வருவாள். அன்று ஒரு முறை நான் தனியாக கன்ரீனில் நின்றபோது, கோப்பி வாங்கித் தரும்படி கேட்டாள். நான் வாங்கிக் கொடுத்தேன். அப்பொழுது, “எனது தந்தை மிகவும் பணக்காரர். ஏன் இங்கு வந்து கஸ்டப்படுகிறேன். இங்கு பரீட்சையில் சித்தி பெற்றாலும் நான் வேலை செய்யமாட்டேன் ” என அலுத்துக்கொண்டாள். அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை. அப்படியே வகுப்புக்குப்போய் எனது மனைவியிடம் நான் கோப்பி வாங்கித் தந்ததாகச் சொன்னாள். ஏன் இவள் என் மனைவியிடம் போய்ச் சொன்னாள் ? அக்காலத்தில் அரச உதவிப் பணம், அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே போதும் என்பதால் எண்ணி எண்ணி செலவு செய்யும் காலமது. நாங்கள் இருவரும் ஒரு கோப்பியை வாங்கிப் பிரித்துக் குடிப்போம். இவளுக்கு வாங்கிய கோப்பியால் இன்றைக்குக் குருஷேத்திரம் என நினைத்தபோது மனைவி அதைப்பற்றிக் கேட்கவில்லை. ஆனால், எனக்குத் தெரியும். பெண்கள் இப்படியான விடயங்களை மறப்பது கிடையாது. பிற்காலத்தில் அம்பறாத்தூணியில் வேறு அஸ்திரங்கள் இல்லாதபோது இது கர்ணனின் நாகாஸ்திரமாக உபயோகிக்கப்படும் என்பது எனக்குத் தெரியும். தலையை எப்படிக் குனிந்து தப்புவது என்ற யோசனையிலிருந்தேன். மெல்பனின் வசந்தகாலம். ஞாயிற்றுக்கிழமை. எங்கும் பச்சைபசேலன்ற இலைகளில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி கண்ணைக் கூசவைத்தாலும் மிதமான காற்றும் அதில் வரும் நறுமணங்களும் சேர்ந்து வெளியே வா என்றழைத்தது. வீட்டுக்குள் இருக்காது வெளியே போவோம் என்றால் கையில் பணமில்லை. வாகன வசதியில்லை. பஸ்சில் நானும் மனைவியும் எனது மூன்று வயதான மகளோடு மெல்பனில் உள்ள விக்டோரிய மார்க்கட் சென்றோம். அங்கு காய்கறி, மீன், இறைச்சி என்பன மலிவாக வாங்கமுடியும் என்பதால் ஒரு கிழமைக்கான பொருட்களை வாங்குவது எங்கள் நோக்கம். இரண்டு மணிநேரம் அந்த மார்க்கட்டைச் சல்லடைபோட்டு இரண்டு கைகளிலும் சாமான்கள் நிரம்பிய பைகளை சுமந்து கொண்டு மார்க்கட்டை விட்டு வெளியே வந்துகொண்டிருந்தோம். கொஞ்சம் நடந்தே பஸ் ஏற வேண்டும். அப்பொழுது எதிர்பாராதவிதமாக சோபியா எதிரில் வந்தாள். வழக்கமாக முழங்கால்வரை கவுனாகப் போட்டிருப்பவள் அன்று கறுப்பு ஜீன்சும், வெள்ளை மேலாடையும் அணிந்து அளவுக்கு மேலான அழகோடு இருந்தாள் . நாங்கள் அவளைக் கண்டு சிரித்தவுடன், எங்களுக்குப் பின்னால் தாயின் கையிலுள்ள பை ஒன்றைத் தொட்டபடி வந்துகொண்டிருந்த எனது மகளை அப்படியே வாரியணைத்துத் தூக்கிவைத்து, நெஞ்சருகே அணைத்துப் பலமுறை முத்தமிட்டாள் . எங்களை மார்க்கட்டை விட்டு வெளியேறாமல் தடுத்து, மகளைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு கடைகளுக்குச் சென்றாள். ஒவ்வொரு கடையையும் காண்பித்து, அவளிடம் என்ன வேண்டுமெனக் கேட்டாள். மகள் வெட்கத்தில் அவளது பிடியிலிருந்து இறங்க நெளிந்தாள். சோபியா விடவில்லை பலமுறை வற்புறுத்தி, என்ன வேண்டும் என எனது மகளைக் கேட்டாள். இறுதியில் நாங்கள் தடுத்தாலும் கடையில் ஒரு பெரிய கரடிப் பொம்மையை வாங்கி எனது மகளுக்குக் கொடுத்தாள். அவள் என் மகளோடு நடந்துகொண்டது எனக்கு வியப்பாக இருந்தது. பல காலம் குழந்தையைப் பிரிந்த ஒரு தாய் எப்படி மகளோடு நடப்பாளோ அதே மாதிரி இருந்தது. அவளது உடல் மொழி மாறியிருந்தது. அவளது முகத்தில் புது ஒளி வந்து பூரண நிலவாக ஒளிர்ந்தது. நீலக் கண்கள் அகன்று விரிந்து ஒளிர்ந்தது. நான் கண்ட சோகம் படர்ந்த கண்கள் எங்கோ தொலைந்திருந்தது. இது வரையும் அவள் மகளைத் தோளில் தூக்கிவைத்திருந்தாள் எனது மகளைக் குனிந்து கீழே விட்டு, அந்த கரடிப்பொம்மையை மகளது கையில் கொடுத்தபோது, அவளது கறுத்த ஜீன்சுக்கும் வெள்ளை மேலாடைக்கும் இடையில் சிறிய இடைவெளி, நாடக மேடையின் திரையாக விலகியபோது, என் கண்களுக்கு சிறிய இரண்டு வெள்ளிக் கீறல்கள் சமாந்தரமாக மேலிருந்து கீழ்நோக்கி ஓடி ஜீன்சுக்குள் மறைந்தன . இவள் தாயாகி இருந்தாளா? என்ற எண்ணம் உடனே வந்தாலும் , சே… அப்படி இருக்கமுடியாது. உடல் பருத்துப் பின்பு மெலிந்தவர்களுக்கும் அப்படியான கோடுகள் இருப்பது உண்டே! எனக்குள் சொல்லிக்கொண்டேன். இதெல்லாம் தேவை இல்லாத ஆராய்ச்சி என்று அறிவு சொன்னபோதும், மனதில் வரும் நினைப்புகள் தவிர்க்க முடிவதில்லை. இப்படியான விடயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாது என்ற எனது நினைவுகள் முட்டையிட்டன. “இப்படி ஒரு மூன்று வயது மகள் ஊரில் எனக்கு இருக்கிறாள்” என்று பளிச்சென சோபியா என் மனைவியைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள், என் மனதிலிருந்த கற்பனைகள் நிலத்தில் விழுந்த முட்டையாகின. மனைவிக்கும் வாரிப்போட்டது. ஆனால் சமாளித்தபடி “ எங்கே மகள்?” எனக்கேட்டதும், “சாகரப்” என்றாள் சோபியா. ஏதோ இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறாள் என்பது தெரிந்தது. ஆனால், மார்க்கட்டில் வைத்து அதற்குமேல் பேசமுடியாது. அவள் சொன்ன விடயத்தில், மேலும் அவள் சொல்லாது நாங்கள் பேசுவது நாகரீகமில்லை என நினைத்தேன் . ஆனால், எங்களுக்குள் பல நாட்கள் அவளைப்பற்றிப் பேசினோம். ஆனாலும் நான் பார்த்த வெள்ளிக்கம்பிகளை மறைத்துவிட்டேன். மனைவிக்குச் சொல்லவில்லை . இப்படி இடை வெளிகள் பார்ப்பதுதான் பழக்கமா? அதுவும் என்னை அருகில் வைத்துக்கொண்டு… என்றெல்லாம் கேள்விகளும் பதிலும் வரும். அதற்கு எந்தப் பதில் சொல்லியும் சமாளிக்கமுடியாது என்பது எனக்குத் தெரியும். அதன்பின்பு எனது மனைவிக்கு சோபியாவிடம் அனுதாப உணர்வு . ஏதோ பிரச்சினையில் இருக்கிறாள் என்பதால் அவளிடம் போய்ப் பேசுவாள். சுகம் விசாரிப்பாள். இறுதிவரையும் தனது மகளைப் பற்றியே சோபியா பேசவில்லை. நாங்களும் அவளிடம் கேட்கவில்லை. இடைக்கிடையே சொக்கலேட் எனது மகளுக்குக் கொடுக்கும்படி என்னிடமோ மனைவியிடமோ தருவாள். மூன்று மாதங்கள் நடந்த எங்கள் வகுப்புகள் முடிந்தது. இறுதி நாளில் செப்பால் செய்யப்பட்ட குதிரைச் சிலையொன்றை எனது மகளுக்கு எனப் பரிசளித்தாள். அரசாங்க உதவிப் பணத்தில் நாங்கள் வாழ்ந்த காலமது. அவளது அந்த விலை உயர்ந்த பரிசை மறுத்தோம். தனது மகளுக்குத் தருவதாக நினைக்கிறேன் என்றபோது அவளது கண்கள் பனித்தன. வேறு வழியின்றி வாங்கினோம். கடைசி நாளன்று எனது மனைவியை அணைத்து முத்தமிட்டவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னருகே வந்து என்னை அணைத்தாள். அவள் அணைத்த கைகளை எடுத்து விலகியபோதிலும் அவளது நினைவுகள் பல காலம் என்னிடம் தேங்கியிருந்தன. அது வற்றவில்லை. அவள் மீது உறவோ நட்போ அனுதாபமோ எதுவும் இல்லாதபோதும், ஏன் அவளது நினைவுகள் மட்டுமுள்ளது? எனக்கு விடை தெரியாது. ஆனால் சோபியா, ஏதோ பாதியில் படித்துவிட்டு விமானத்தில் தொலைத்த சுவாரசியமான புத்தகம் போலிருந்தாள். நான் பரீட்சையில் சித்தியடைந்து மிருக வைத்தியராக மெல்பனில் வேலை செய்த இடத்தில் ஐந்து வருடங்களின் பின் பெஸ்னிக் என்ற குரேசியாவில் படித்த ஒருவனைச் சந்தித்தேன். அவன் மிருக வைத்தியருக்கான படிப்பை அரைவாசியில் விட்டுவிட்டு அவுஸ்திரேலியா வந்தவன். மூன்று வருடங்கள் குரேசியத் தலைநகரான சாகரப்பில் படித்தவன். மெல்பனில் எனது உதவியாளராக வந்தான். அவன் அல்பேனிய முஸ்லிம். அவன் படித்துக்கொண்டிருந்தபோது ஆஸ்திரேலியாவில் உறவினர்கள் திருமணம் பேசியதால் இங்கு வந்துவிட்டான். அவனுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மனைவி பிள்ளை என வந்துவிட்டதால் மேற்கொண்டு அஸ்திரேலியாவில் மீண்டும் படிக்கவில்லை. ஏற்கெனவே அவனது நாட்டில் பல பிரச்சினைகள் உருவாகிப் பல புதிய நாடுகள் கருக்கொண்டிருந்த காலத்தில், அங்கு இருந்தால் பிரச்சினை உருவாகும் என்ற காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறுவதே தனது நோக்கம் என்றான். பெஸ்னிக் எனக்கு உதவியாளரென்ற போதும் நண்பர்களாகவே பழகினோம். அது ஒரு கிறிஸ்மஸ் காலம். வேலைத்தளத்தில் நடந்த கிறிஸ்மஸ் மதிய விருந்தில் நாங்கள் இருவர் மட்டுமே வெளிநாட்டவர்கள். ஒரே மேசையில் அருகருகே அமர்ந்தோம். பெஸ்னிக் தனது பழைய வரலாற்றைச் சொல்லியபடி இருந்தான். கேட்கச் சுவாரசியமாக இருந்தது. அப்போது பினோநுவா (Pinor Noir) வைனை ஊற்றும் பரிசாரகப் பெண் நேரே கிளாசில் ஊற்றும்போது, அவளை நிறுத்தி கிளாசை கையில் எடுத்துச் சரித்து ஊற்ற வேண்டுமென்றபோது, அந்தப் பெண்ணின் முகம் வெட்கத்தால் அந்த வைனின் நிறமாகியது. “வெட்கமடைய வேண்டாம். நானும் சில காலங்கள் ஹோட்டலில் வேலை செய்தபோது பல விடயங்களை அறிந்துகொண்டேன்” என்றான். அவனோடு உணவருந்தியபடி பேசும்போது “ சோபியா என்ற குரேசிய மிருக வைத்தியர் என்னோடு ஐந்து வருடம் முன்பாக ஒன்றாக மெல்பனில் ஆங்கிலம் படித்தவள். அவளைத் தெரியுமா? ” என்று அவனிடம் மிகச் சாதாரணமாகக் கேட்டேன். “அவள் என்னோடு படித்தாள். அவள் ஊருக்கு இப்பொழுது திரும்பிவிட்டாள். அவளது தந்தை குரேசியாவில் மந்திரி” என்று நான் எதிர்பார்க்காத பதிலைக் கூறினான். “அப்படியா…? என்னோடு மிகவும் நன்றாகப் பழகினாள் . தனது தகப்பன் வசதியானவர் என்றும் சொன்னாள். அவளுக்கு ஒரு குழந்தை இருந்தது என்றும் கூறினாள். அது உண்மையா?” நானும் அவனிடம் சோபியாவின் கதையைத் தோண்ட, கிளாஸ் வைனை மேசையில் வைத்துவிட்டுத் தயாராகினேன். “அது பெரிய கதை.அவள் எனது நண்பனான ஒரு அல்பேனியனைப் பல வருடங்களாகக் காதலித்தாள். இறுதிப் பரீட்சை முடிந்த காலத்தில் அவளுக்குக் குழந்தை உருவாகிவிட்டது. அக்காலத்தில் பழைய யூகோஸ்லாவியா பல துண்டுகளாகப் பிரிந்தது தெரியும்தானே. சேர்பியாவுக்கு எதிராக குரேசியா – அல்பேனியா எனப் பிரிந்துகொண்டிருந்த காலத்தில் இவர்களது காதலுக்கு அவளது குடும்பத்தில் பயங்கர எதிர்ப்பு. இவளது தந்தையார் சாகரப்பில் வசதியும் செல்வாக்குமுள்ள மனிதர். அரசியல்வாதியும் கூட. அத்துடன் ஆழமான நம்பிக்கையுள்ள கத்தோலிக்கக் குடும்பம். அவளது பெரியப்பா கத்தோலிக்க சேர்ச்சில் குருவக இருக்கிறார். இருவரும் ஒன்றாக இருந்தபோது சோபியா எட்டு மாதத்தில் வயிற்றில் வலி என வைத்தியசாலையில் சேர்த்தபோது நானும் இவளது காதலனுடன் கூட இருந்தேன். இவள் வைத்தியசாலையிலிருந்தபோது காதலனது வீட்டில் உள்ளவர்கள் வந்து அவனை அல்பேனியாவுக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். அப்பொழுது நான் சோபியாவினது குடும்பத்திற்குச் செய்தி அனுப்பினேன். அவர்கள் வந்து அவளைப் பார்த்தார்கள் . அதன் பின்பு எல்லாம் சுமுகமாக முடியும் என நான் நினைத்து அல்பேனியா போய்விட்டேன். அதன் பின்பு நடந்த விடயங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. நான் ஒரு ஹோட்டல் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராது மீண்டும் சோபியாவைச் சந்தித்தேன். அவளே அதிர்ச்சியளிக்கும் புதிய விடயங்களைச் சொன்னாள். சோபியாவுக்குப் பெண் குழந்தை இறந்து குறை மாதத்தில் பிறந்தது. ஆனால், அதை சோபியா நம்பவில்லை. தனது குழந்தையைத் தனது பெற்றோர்கள் விரும்பாததால் யார் மூலமாகவ ஒளித்துவிட்டார்கள் என நினைத்துவிட்டாள். பெற்றோரை வெறுத்தாள். இரண்டு நாளில் பெற்றோருக்குத் தெரியாமல் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி பலரிடம் விசாரித்தபடி பைத்தியமாகத் தன் குழந்தையைத் தேடி அலைந்தாள். முக்கியமாகக் கத்தோலிக்கத் தேவாலயங்கள் நடத்தும் குழந்தைகள் காப்பகங்கள் எல்லாவற்றிலும் தேடியபடி இருந்தாள். யாராவது தத்து எடுத்துவிட்டார்களா என விசாரித்தாள். அந்த நேரத்தில் அவளது சித்தப்பா அவுஸ்திரேலியாவில் இருந்ததால் இங்கு வந்தாள். அப்போதும்கூட சித்தப்பாவிடம், தனது குழந்தை இருக்கலாம் என்ற சந்தேகம் அவளுக்கிருந்தது . எங்களோடு படித்தவர்களில் அவளே அழகி. நாங்கள் சோபியாவை, சோபியா லோரன் என்போம். மிகவும் அழகாக உடுப்பாள். அலங்கரிப்பாள். ஆனால் நான் பார்த்தபோது எந்தவொரு ஒப்பனையும் இல்லாது மிகவும் சாதாரணமான உடையிலிருந்தாள். கண்கள் ஆழமாகி, கன்னம் ஒடுங்கி, மெலிந்து. வயதான பெண்ணாகத் தோற்றமளித்தாள். நான் வேலை செய்யும் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அட்ரியாரிக் கடலருகே உள்ளது . அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள் வருவார்கள். இவள் அங்கு வந்தவர்களிடம் யாராவது குழந்தையத் தத்தெடுத்தார்களா என்று விசாரித்தாள். அவளை நான் சந்தித்தபோது என்னிடம் கேட்டாள், குழந்தைகளைக் கடத்தும் அல்பேனியன் மாபியா கும்பலில் எவரையாவது தெரியுமா என்று. தெரிந்தால் அவர்களிடம் தனது குழந்தையைப்பற்றி விசாரித்துச் சொல்லும்படி கெஞ்சினாள். அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவளுக்கு நட்டுக் கழன்று, பைத்தியமாகி விட்டாள் என நினைத்தேன் . இறுதியில் அவுஸ்திரேலியா வந்துவிட்டாள் என அறிந்தபோது சந்தோசப்பட்டேன். இனிமேலாவது சுமுகமான நிலைக்கு வருவாள் என நினைத்தேன். ஆனால் இரண்டு வருடம் இங்கிருந்துவிட்டுப் போய்விட்டாள். எனக்கு கிடைத்த தகவலின்படி அவளது பிள்ளை இன்னமும் உயிரோடிருப்பதாக நம்புகிறாள் . “மிகவும் சோகமான கதை. ஆனால் இப்படி கர்ப்பத்தில் குழந்தை இறந்தாலும் அதனது ஓமோன்களால் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் அப்படிப் பல பெண்கள் தனக்குக் குழந்தை பிறந்தது என நம்புவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைவிட குழந்தை பிறந்த பின்பு பல பெண்களுக்கு மன அழுத்தம் (Post Natal depression) ஏற்படும். ஆனால், இங்கே அரசியல், காதல், மதம் எனப் பல விடயங்கள் சோபியாவை ஒரே நேரத்தில் அவளுக்கு எதிராக மாற்றி இருக்கிறது.” “இப்பொழுது திருமணமாகி இருக்கிறாள் எனக் கேள்விப்பட்டேன்” என்றான். “அது நல்ல விடயம்” என்னைப் பொறுத்தவரையில் பாதியில் படித்துவைத்த புத்தகத்தின் மிகுதியை மீண்டும் படித்த உணர்வு ஏற்பட்டது. நோயல் நடேசன் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் ‘நோயல் நடேசன்’ பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவல் தமிழ் இலக்கிய சூழலில் கனவிக்கப்பட வேண்டிய படைப்பாக மதிப்பிடப்படுகிறது. https://akazhonline.com/?p=3578
  10. அதுதானே ஈழப்பிரியன் ஐயா! தினமும் குப்பைகொட்டும் எங்களுக்கும் தெருவால் எட்டிப் பார்த்துவிட்டு போகின்றவருக்கும் ஒரே சலுகை கொடுக்கலாமா? ஆங்🤪
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்🎉🎊🎈 வாழ்க வளமுடன்🎂
  12. இதை நாங்கள் “விண்” என்று சொல்லுவோம். வில்லு மாதிரி முறியாமல் வளையக்கூடிய தடி என்றால் மூங்கில் தடி அல்லது கமுகம் சிலாகை (தடி) பாவிப்போம். படலம் அல்லது தட்டி (காணொளியில் இருக்கும் செவ்வக வடிவ பட்டம்) க்கும், கொக்கு, பிராந்து போன்ற பட்டங்களுக்கும் விண்பூட்டித்தான் ஏத்துவோம். விண் செய்ய தேவையானவை: விசை - வில்லு மாதிரி வளையக்கூடிய மூங்கில் அல்லது கமுகம் தடி. விசையை வழுவழுப்பாக இணக்கி, நடுவில் வைத்து பலன்ஸ் பார்த்து, முறியாமல் வளையக்கூடிய மாதிரிச் செய்யவேண்டும். நார் - பார்சல் ரேப் அல்லது பனம் நார், அல்லது உரப்பையில் இருந்து கிடைக்கும் பொலித்தீன் நார் (1 1/2 முழ விசைக்கு மேல் பாவிக்கமுடியாது!) வெடிப்பு இல்லாத பார்சல் ரேப்பாக எடுத்து, பிசிங்கானால் “வாட்ட”வேண்டும். பிசிங்கான் உடைந்த போத்தல் துண்டு. சிலவேளை உடைந்த பல்ப் துண்டும் பாவிக்கலாம். வாட்டுவது என்றால் நாரை சீராக செம்மைப் படுத்துவது. அப்போதுதான் பிசிறில்லாமல் கூவும்! காணொளியில் உள்ள விண் “அழறுகின்றது” (நாரில் வெடிப்பு இருக்கலாம் அல்லது ரென்சன் போதாது!). பனம் நார் செய்வது மிகவும் கடினம். முதலில் வடலிப்பனையில் நீண்ட ஓலையைக் கண்டுபிடிக்கவேண்டும். மூன்று நாலு முழ நீளமான பச்சை ஓலையின் தடியில் நீளப்பாட்டுக்கு பிசிங்கானால் நாரை வெட்டியெடுக்கவேண்டும். இது சரியாகக் கிடைக்க மிகவும் பொறுமை தேவை. அதை வெடிக்காமல் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்னர் “வாட்ட”வேண்டும். நார் அறாமல் இருந்தால் அதிஸ்டம்! கொக்கு, பிராந்துப் பட்டங்களுக்கு பனம்நார் கலாதியாக இருக்கும்! அவை ஜா(சா)டும்போது விண் நன்றாகக் கூவும்! கூவைகள்- நாரை இழுத்துப் பிடித்துக்கொள்ள. இவற்றை கிளுவைத் தடியில் வெட்டி துளை போட்டுச் செய்வது. — காணொளியில் வரும் முதலாவது படலம் அளவு நானும் எனக்கு கூட்டுக்களும் கட்டி ஏத்தினோம். 😀 அதை ஒரு “மிஷனாக” இரண்டு மூன்று நாட்களில் செய்தோம். ஊரில் பலரது வேலிகளை வெட்டி தடிகளைப் பெற்றுக்கொண்டோம். நாங்கள் விண்ணை பட்டத்தின் மேல் விளிம்பில் இருந்து 2-3 இஞ்சுகள் கீழேதான் கட்டுவோம். அப்போதுதான் முழுநார் மீதும் காற்றுப் படாமல் வெளிநீட்டிய நாரின் பகுதிகளில் மட்டும் காற்றுப் படும். இது அதிர்வின் frequency ஐக் கூட்டும் என நினைக்கின்றேன்!
  13. வடமராட்சி என்றாலே பட்டம் ஏற்றுவதுதான் வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காலத்தில் எமது முக்கிய தொழில்..😄 நாமளும் என்னைவிட பெரிய படலம் கட்டி ஏற்றி இருக்கின்றேன்.☺️ ஆனால் இந்த துணிஞ்ச கட்டை மாதிரி மேலே போகவில்லை! யாழில் எழுதியதை தொகுத்தது. https://kirubans.blogspot.com/2017/04/blog-post_1.html
  14. மேஜர் அல்பேட் ச.கந்தையா ரூபதநிதி அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:24.06.1961 வீரச்சாவு:21.12.1985
  15. சைன் இன் பண்ணாவிட்டால் ஏதும் track பண்ணப்படவில்லை என்பது உங்கள் முந்திய பதிவின் மூலம் உறுதியாகிவிட்டது. சைன் இன் பண்ணினால் நீங்கள் இறுதியாக வாசித்த பதிவுகள் தானாகவே track பண்ணப்படும். இதன்மூலம் நீங்கள் ஒரு திரியை கிளிக்கினால் வாசிக்காத கருத்துக்கு உடனடியாகப் போகலாம். அதுதான் tracking. உங்களுக்கு கடைசிப் பதிவுக்குப் போகவும் வேண்டும், ஆனால் track பண்ணவும் கூடாது என்றால் அது மிகவும் கஷ்டம்!
  16. ஒளிச்சு வராமல் சைன் இன் பண்ணிவரத்தான் இந்த ஏற்பாட்டை மோகன் செய்திருக்கின்றார்😁 சைன் இன் பண்ணினால்தானே ஒவ்வொரு உறுப்பினர்களின் activities ஐ track பண்ணலாம். இல்லாவிட்டால் ஐபி முகவரியைக்கொண்டு அல்லது பாவிக்கும் device ஐக்கொண்டு track பண்ணவேண்டும்.
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎊🎈 வாழ்க வளமுடன்🎂
  18. தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது – ஆய்வாளர் பற்றிமாகரன் December 14, 2021 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகள் இன்றைய காலத்தின் தேவையாகிறது: சிறிலங்காவில் பௌத்த சிங்களப் பெரும்பான்மையினர், ‘சிறிலங்காவினர்’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும், அதே அரசியல் அடையாளத்துள்ளேயே, இலங்கையின் எல்லா மக்களும் வாழ்தல் வேண்டும் என்பது 2009இல் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு மூலம் நிலைநிறுத்தப்பட்ட மகிந்த சிந்தனை. பத்தாண்டுகளின் பின்னர் ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ என அவ்வழியைச் “சிறிலங்காவினர்க்கான அபிவிருத்திகள்” என்ற வார்த்தைஜாலங்கள் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கான புது வழியாக கோத்தபாய சிந்தனை காட்ட முற்பட்டிருக்கிறது. எப்பொழுதுமே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை வடக்கு கிழக்கின் அபிவிருத்தி என்பதுடன் இணைத்து, ஈழத்தமிழர்களின் தாயகம் – தேசியம் – தன்னாட்சி என்ற தொன்மையும் தொடர்ச்சியுமான உரிமைகளை மறுத்து, சிறிலங்கா என்னும் நாட்டு அடையாளத்துடன் வாழும் சிறிலங்காவின் சிறுபான்மையினமாக அவர்களின் அடையாளத்தை நிலைப்படுத்திச் சில அபிவிருத்தித் திட்டங்களை முன்வைத்து அவற்றில் பங்கெடுக்க வரும் சர்வதேச அரசுக்களின் நிதி மற்றும் ஆயுத ஆதரவையும் பெற்று வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் மேல் தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வது சிறிலங்கா அரசின் வழமையாகத் தொடர்கிறது. இவ்வாறு தமிழர்களின் தேசியப் பிரச்சினை (Tamil’s National Question)என்ற ஒன்றே இலங்கையில் இல்லை எல்லாமே அபிவிருத்திப் பிரச்சினையெனச் சிறிலங்கா உலகுக்குக் காட்ட முற்படும் இவ்வேளையில், இலங்கையில் தமிழர்களின் தேசியப் பிரச்சினை என்றால் (Tamil’s National Question) இதுதான் என உலகுக்குத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்து வந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தெளிவான அரசியல் சிந்தனைகள் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல் நாளான டிசம்பர் 14ம் நாளன்று உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் நன்றியுடன் அவரை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செய்வது தமிழர் சமுதாய வழமையாக உள்ளது. இவ்வாண்டு அவரின் 15வது ஆண்டு நினைவேந்தல் காலமான டிசம்பர் மாதத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இன்றைய காலகட்டத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சிந்தனைகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைச் சிந்திப்பது சாலப்பொருத்தமாக அமைகிறது. “மாநிலங்களுக்கு இறையாண்மை அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, அதிகாரப் பரவலாக்கம் பற்றியே அவர்கள் சிந்திக்கின்றார்கள்” (போரும் சமாதானமும் 647) என்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் கருத்து இன்றைய காலகட்டத்தில் தெளிவாக உலகுக்கு மீளவும் எடுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இந்தச் சிந்தனையே இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வைக் காண முடியாத நிலையை உருவாக்கி வருகிறது. சுயநிர்ணய உரிமை அதிகாரப்பரவலாக்கம் என்பது எப்பொழுதும் மையப்படுத்தப்பட்டுள்ள தங்களின் அதிகாரத்தை மற்றைய மாநிலங்கள் மேல் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தியே தவிர இலங்கைத் தீவு போன்ற வரலாற்றில் இருதேசியங்களின் இறைமைகளை இறைமை இழப்பு ஏற்படாது பகிர்ந்து கொள்வதற்கு எந்த விதத்திலும் பயனளிக்காது. உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் “பிரதேச சுயாட்சி” என்பதே தமிழர்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களுடைய தன்னாட்சி உரிமை இழப்பின்றி இறைமை பகிரப்படுவதற்கான நேர்மையான வழியாக அமையலாம். ஒரு அரசு தனது மக்கள் என்று கூறிக்கொள்பவர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு மதிப்பளித்து நடக்கும் பொழுதே அந்த அரசுக்கு பிரதேச ஒருமைப்பாடு உள்ளதென்பதையும் தனது மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கும் போது அந்த அரசு அந்த மக்கள் மீதான பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையைத் தானே இழந்து விடுகிறது என்பதையும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கியூபெக் மாநிலத்தின் பிரிவினைப் பிரச்சினையை கனடிய உச்ச நீதிமன்றம் விசாரித்து அளித்த தீர்ப்பின் பின்வரும் வாசகங்களின் அடிப்படையில் பின்வருமாறு விளக்குகிறார் :- ‘தன்னாட்சி உரிமை (சுயநிர்ணய உரிமை) என்பது வளர்ந்து வரும் ஒரு கருத்துருவம். பரிணாமம் பெற்று வரும் ஒரு கோட்பாடு. சர்வதேசச் சட்டத்துறையில் புத்தாக்கம் பெற்று வரும் விதியாகவும், சர்வதேச மனிதஉரிமை நியமமாகவும் இது கொள்ளப்படுகிறது. சுயநிர்ணய உரிமைக் கோட்பாடானது, ஆரம்பத்தில் மேற்குலக வல்லரசுகளின் குடியேற்றத்திற்கு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 1970ம் ஆண்டுக்குப் பின்பு இக்கோட்பாடு புத்தாக்கம் கண்டது. பிரத்தியோகமாகக் குடியேற்ற நாட்டு மக்களின் அரசியல் சுதந்திரத்திற்கான தகைமையை நிர்ணயிப்பதற்காகப் பிரயோகிக்கப்பட்டது. இவ்வாண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் ‘அரசுகள் மத்தியில் நல்லுறவையும் ஒத்துழைப்பையும் நிலைநாட்டுவது பற்றிய சர்வதேச சட்டவிதிகள்’ என்ற புதிய பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரகடனத்தில் “சுயநிர்ணயமும் சம உரிமை விதிகளும்” என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட ஒரு விதி பின்வருமாறு உள்ளது:- “ஐநா சாசனத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் சமஉரிமைகளும் மக்களது சுயநிர்ணயமும் என்ற விதிக்கு இணங்க, எல்லா மக்களும் வெளிப்புறத் தலையீடு எதுவுமின்றி, தமது அரசியல் தகைமையைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும், தமது பொருளாதார, சமுக,கலாசார வளர்ச்சியைப் பேணுவதற்கும் உரிமை உடையவர்களாவர். இந்தச் சாசனத்திற்கு அமைய ஒவ்வொரு அரசும் இந்த உரிமைக்கு மதிப்பளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. “இப்போதுள்ள அரசுக்கள், கனடா உட்பட தமது பிரதேச ஒருமைப்பாட்டைப் பேண விழைவதற்கும், ஒரு ‘மக்கள்’ ஒரு சுயநிர்ணய உரிமையை முழுமையாகப்; பெற்றுக் கொள்ள முனைவதற்கும் இடையில் மத்தியில் முரண்பாடு எழுவதற்கு அவசியமில்லை. எவ்வித பாகுபாடுமின்றி முழு மக்களையும் அல்லது மக்கள் சமுகங்களையும் தனது ஆட்சி அமைப்பில் பிரதிநிதப்படுத்தி, உள்ளீட்டான ஆட்சி ஒழுங்கில் சுயநிர்ணயத்தின் விதிகளுக்கு ஒரு அரசு மதிப்பளிக்குமானால், சர்வதேச சட்டத்திற்கு அமைய தனது பிரதேச ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு அந்த அரசுக்கு உரிமையுண்டு. ஒரு அரசின் பிரதேச ஒருமைப்பாட்டை இந்தப் பிரகடனம் உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஒரு சிறுபான்மை மக்களை அடக்கு முறைக்கு ஆளாக்கும் பொழுது, பிரிவினைக்கு இடமளிக்கும் விதிவிலக்காக, ஒரு அரசு தனது பிரதேச ஒருமைப்பாட்டு உரிமையை இழக்கிறது.எனவே இந்த விளக்கத்தின் மூலம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இலங்கை அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களின் மேலான தனது அடக்கு முறைகளால் தமிழர் தாயகப் பகுதிகளில் தானாகவே தனது பிரதேச ஒருமைப்பாட்டை இழந்து விட்டது என்பதை மிக அழகாக விளக்குகிறார். ஒருதலைபட்சமான பிரிவினையைப் பிரகடனம் செய்யும் பிரத்தியோகச் சூழ்நிலை பற்றிய கனடிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: – அரசியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அல்லது நிறுவிக் கொள்ளும் உரிமையான வெளியக சுயநிர்ணய உரிமை இரு வகுப்பினரான மக்களுக்கு (குடியேற்ற ஆட்சியின் கீழுள்ள மக்களுக்கு அல்லது அந்நிய ஆதிக்கத்தின் கீழுள்ள மக்களுக்கு) உரித்தாகும். ஏகாதிபத்திய வல்லரசிடமிருந்து உறவை முறித்துக் கொண்டு தமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவதற்குக் குடியேற்ற நாட்டு மக்களுக்கு உரிமையுண்டு என்பது இப்பொழுது விவாதத்திற்கு இடமற்ற உண்மையாகி விட்டது. குடியேற்றத்திற்கு வெளியான சூழ்நிலையை எடுத்துக் கொண்டால், ஒரு மக்கள் சமுகம் அந்நிய அடக்கு முறைக்கும், ஆதிக்கத்திற்கும், சுரண்டல் முறைக்கும் ஆளாகும் பொழுது வெளியக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டலாம். ஒருதலைபட்சமான பிரவினைக்கு சுயநிர்ணய உரிமையைப் பாவிக்கும் மூன்றாவது சூழ்நிலை பற்றியும் சில மதிப்புரைஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். இந்த மூன்றாவது சூழ்நிலை குறித்துப் பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்ட போதும், ஒரு மக்கள் சமுகம் தனது உள்ளக சுயநிர்ணய உரிமையை அர்த்தமுள்ள முறையில் அடைவதற்குத் தடையேற்படுமானால், இறுதி வழிமுறையாகப் பிரிந்து செல்லும் உரிமையைப் பயன்படுத்த அந்த மக்களுக்கு உரிமையுண்டு.” என்கிறது. எனவே ஒரு அரசு தனது மக்களின் சமமான உரிமைகளையும் உள்ளக சுயநிர்ணய உரிமையையும் தனது அரசின் கட்டமைப்புக்கு உள்ளேயே நிறைவு செய்யாவிட்டால் அந்த மக்கள் இயல்பாகவே வெளியக சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்க உரிமையுடையவர்கள். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இவற்றைத் தெளிவுபடுத்தியது பிரிவினையைத் தூண்டவல்ல அரசின் கடமையையும் மக்களின் உர்pமையையும் இருதரப்பினருக்கும் தெளிவுபடுத்துவதற்காகவே. இதனை உறுதி செய்யக் கூடிய முறையிலேயே 2003ம் ஆண்டு மாவீரர் உரையில் தேசியத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையையும் அவர் குறிப்பிடுகிறார் :- “தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வரும் பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடின்றி, சுதந்திரமாகக் கௌரவமாக வாழ விரும்புகின்றார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இனஅடையாளத்தைப் பாதுகாத்து, வாழ விரும்புகிறார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகிறார்கள். இதுவே எமதுமக்களின் அரசியல் அபிலாசை, உள்ளக சுயநிர்ணயத்தின் அர்த்த பரிமாணம் இதில்தான் அடங்கியிருக்கிறது” என்பது தேசியத் தலைவரின் கருத்து. தமிழ் மக்களின் பிரதேச சுயாட்சி என்றால் என்ன என்பதை இதில் மிக அழகாக எடுத்துரைத்தார். தமிழ் மக்கள் தமது வரலாற்றுத் தாயக மண்ணில் தம்மைத் தாமே ஆளும் தன்னாட்சி அதிகாரத்தை, அதாவது உள்ளக சுயநிர்ணய உரிமையை தேசியத் தலைவர் அவ்வுரையில் வலியுறுத்தி வேண்டினார். ஆயினும் அவர் உள்ளக சுயநிர்ணய உரிமையின் எல்லை வரம்புடன் நின்று விடவில்லை. https://www.ilakku.org/balasingham-their-thoughts-are-the-need-of-the-hour/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.