Everything posted by கிருபன்
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!
விக்கிரவாண்டி தேர்தல்: திமுக முன்னிலை… பட்டாசு வெடித்து நிர்வாகிகள் கொண்டாட்டம்! Jul 13, 2024 11:31AM IST ஷேர் செய்ய : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏழாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 27,421 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக, நாம் தமிழர் கட்சிகளை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி ஏழாவது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 44,780 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 17,359 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 3,556 வாக்குகளும் பெற்றுள்ளனர். அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், விக்கிரவாண்டி தொகுதி மற்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். https://minnambalam.com/political-news/vikravandi-bypoll-seventh-round-dmk-anniyur-siva-leading/
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்! adminJuly 13, 2024 முன்னாள் எதிர்கட்சி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்றலில் அமைக்கப்பட்டுள்ள அமிர்தலிங்கத்தின் திருவுருவ சிலையின் முன்றலில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன் பொழுது ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு திருவுருவசிலைக்கு மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது. நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் https://globaltamilnews.net/2024/205050/
-
போல் சத்தியநேசன் காலமானார்.
ஆழ்ந்த இரங்கல்கள்.. சில தடவைகள் மரணவீடுகள், கூட்டங்களில் கண்டிருக்கின்றேன். சிறந்த சமூகசேவையாளர்.
-
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!!
நாடாளுமன்றக் குழுத்தலைமை வழங்க மறுத்தால் தனி அணி! புளொட், ரெலோ தீவிர பரிசீலனை!!! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைப் பதவியை வழங்குவதற்கு மறுத்தால், நாடாளுமன்றத்தில் தனி அணியாக இயங்குவது தொடர்பில் ரெலோவும் புளொட்டும் ஆலோசனை நடத்திவருவதாக அறியமுடிகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியன இணைந்து சந்தித்திருந்தன. நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியாக அவை இயங்கின. உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப்போட்டியிடும் முடிவை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்ததைத் தொடர்ந்து புளொட், ரெலோ என்பன வேறு சில தரப்புகளுடன் இணைந்து தங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பிரகடனப்படுத்தின. அத்துடன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்ற பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் பெயரில் உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனுவும் தாக்கல் செய்திருந்தன. இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவின் பின்னர், அந்தப் பதவியை தமக்குத்தருமாறு ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கோரியிருந்தார். ஆனால், இலங்கைத் தமிழரசுக்கட்சி அந்தக் கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. தலைமைப் பதவியை வழங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்ந்தும் மறுக்குமாக இருந்தால், இதுவரை காலமும் நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கீழ் இயங்கி வந்த ரெலோவும், புளொட்டும் சபாநாயகரைச் சந்தித்து தனி அணியாக இயங்குவதற்கான கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில் தீவிரமாகப் பரிலீசிலித்து வருவதாக அறியமுடிகின்றது. (ச) https://newuthayan.com/article/நாடாளுமன்றக்_குழுத்தலைமை_வழங்க_மறுத்தால்_தனி_அணி!
-
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!!
5 கட்சி கூட்டணியிலிருந்து விலகினால் மட்டுமே செல்வத்துக்கு குழு தலைமைப் பதவி – தமிழரசுக் கட்சி July 11, 2024 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மட்டும்தான் இருக்கின்றோம், ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் இல்லை என்ற நிலைப்பாட்டை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெளிவுபடுத்தி உறுதிப்படுத்தினால் மட்டுமே கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைமை பதவியை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நேற்றிரவு நிகழ்நிலையில் கூடித் தீர்மானித்தது. இது விடயத்தில் நேற்றுப் பகல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தமிழரசு கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எடுத்த நிலைப்பாட்டை நேற்றிரவு கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு முழு அளவில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. நேற்றைய அரசியல் குழு கூட்டம் பற்றி நேரத்துடனேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், நேற்றிரவு நிகழ்நிலை கூட்டம் ஆரம்பமான நேரத்தில் இருந்து பல தடவைகள் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டும் அது பலனளிக்கவில்லை என்று தெரியவருகிறது. அவர் கூட்டத்தில் பங்கு பற்றவில்லை. மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவரராஜாவும் இக்கூட்டத்தில் பங்குபற்றவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கம், சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், குலநாயகம், குகதாசன், சுமந்திரன், சிறிதரன், கலையரசன், துரைராஜசிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்ற பலர் இக்கூட்டத்தில் பங்குபற்றினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லாத வேறு ஒரு கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருக்கின்ற ஒருவருக்கு தமிழரசுக் கட்சியின் பெயரிலான நாடாளுமன்றக் குழுவின் தலைமைப் பதவியை வழங்கக கூடாது என்று உறுப்பினர்கள் அநேகமாக எல்லோரும் கருத்துத் தெரிவித்தனர். ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினின்றும் பிரிந்து, தனித்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவது என்ற முடிவை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு எடுத்திருந்ததால், அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளினால் இன்றைய நிலைமை தோன்றியிருக்கின்றது என்பதைக் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் சுட்டிக்காட்டினர். அந்தப் பின்னணியில் இந்த விடயத்தில் மத்திய குழுவின் கருத்தை அறிந்து, அதன் அடிப்படையில் இறுதித் தீர்மானத்தை எடுப்பது என நேற்றிரவு அரசியல் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் அறியவந்தது. https://www.ilakku.org/5-கட்சி-கூட்டணியிலிருந்த/
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
சூடுப்பிடிக்கும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியின் மூன்றாம் கட்டத்தில் ஆறாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. குறித்த அகழ்வின் போது பார்வையாளராக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் மனித உரிமைகளுக்கான அதிகாரி லூடியானா செல்றினி அகிலனும் இந்த அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்திருந்தார். இந்த அகழ்வு பணியின் போது 7 மனித உடல் பாகங்கள் ,சில மனித ஆடைகள் மற்றும் இராணுவத்தால் பாவிக்கப்படும் கம்பி உட்பட சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆடைகளில் பெண்களுக்குரிய உள் ஆடைகள் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக ஆய்வுகள் இன்று நடைபெற இருக்கின்றது. மேலும், அகழ்வு பணிகளை பேராசிரியர் சோமதேவா குழுவினர் மேற்கொண்டனர் அத்துடன் சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தடயவியல் பொலிஸாசார் உள்ளிட்ட தரப்பினரும் இந்த ஆய்வுகளில் பங்கேற்றிருந்தனர். http://www.samakalam.com/சூடுப்பிடிக்கும்-கொக்கு/
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
தெல்லிப்பழை சிறுவர், மகளிர் இல்ல விவகாரம் குறைபாடுகளை நிவர்த்திக்குக் ஆளுநர் நேற்று அதிரடி உத்தரவு உதயனின் செய்தி மீளவும் உறுதிசெய்யப்பட்டது!!! யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் இயங்கும் மகளிர் இல்லம் மற்றும் சிறுவர் இல்லம் தொடர்பில், ஆளுநரின் அபயம் குழுவினருக்கு அண்மையில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் குறைபாடுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை நிவர்த்திக்குமாறு ஆளுநர் நேற்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான ஆளுநர் அலுவலக அறிக்கை, வட மாகாண இணையத்தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழைப் பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு ஆளுநரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திசெய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வடமாகாணத்துக்குள் இயங்கும் அனைத்து இல்லங்களும் உரிய ஒழுங்கு விதிகள் மற்றும் வரையறைகளைப் பின்பற்றி இயங்குவதை உறுதிப்படுத்தும் விதமான அறிவுறுத்தல்களும் ஆளுநரால் தொடர்புடைய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆளுநரின் அறிவுறுத்தல்களில் இருந்து மாறுபட்ட வகையில் சில ஊடகங்களும் சமூகவலைத் தளங்களும் வெளியிடும் செய்திகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் எமது அறிவிப்புகளை www.np.gov.lk என்ற வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகப் பார்வையிட முடியும் - என்றுள்ளது. ஆசிரியர் குறிப்பு: ஆளுநரின் குறித்த அறிவிப்பு மூலம், 'தெல்லிப்பழை மகளிர், சிறுவர் இல்லங்களை மூட உத்தரவிடவில்லை' என்று பரப்பப்பட்ட தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆளுநர் உத்தரவிட்ட செய்தி அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இணையத்தில் இப்போதும் இருக்கிறது. எனவே அதுவே உண்மையான தகவல் என்பதையே ஆளுநர் மீண்டும் உறுதி செய்திருக்கிறார். தெல்லிப்பழையில் இயங்கும் மகளிர் இல்லமொன்றில், மாணவிகள் குளிக்கும், உடைமாற்றும் பகுதிக்கு மேலாக சி.சி.ரி.வி. கமரா பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும், இன்னொரு சிறுவர் இல்லம் அனுமதியற்று இயங்கி வருகின்றமை தொடர்பிலும் உதயனின் ஜூலை 4ஆம் திகதிய பதிப்பில் செய்தியொன்று அறிக்கையிடப்பட்டிருந்தது. ஆளுநர் அலுவலகத்தின் செய்தியறிக்கைகள் வெளிப்படுத்தப்படும், www.np.gov.lk இணையத்தளத்தில் ஜூலை 4ஆம் திகதி 'யாழ்ப்பாணம் தெல்லிப் பழைப்பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்புரை' என்ற தலைப்பில் ஆளுநரின் உத்தரவு தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் வழக்கம்போல இந்தச் செய்தி குறித்த இணையத்தில் பதிவேற்றப்பட முன்னதாக ஜூலை 3 ஆம் திகதியே ஊடகங்களுக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ 'வட்ஸப்' குழுமத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது. 'மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி. கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. 'அபயம்' பிரிவினரால் கோரப்பட்டதற்கு அமைய தெல்லிப்பழைப் பிரதேச செயலாளரால் கௌரவ ஆளுநர் அவர்களுக்கு, களவிஜய விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கைகளின் பிரகாரம் தெல்லிப்பழைப் பகுதியில் இயங்கும் குறித்த இரண்டு இல்லங்களையும் மூடுமாறும், விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது' என்பதாக ஆளுநர் அலுவலகத்தின் அந்தச் செய்தியறிக்கை அமைந்திருந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு மேலதிக புலனாய்வுத் தேடல்களின் மூலமும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலும் உதயனின் ஜூலை 4 ஆம் திகதிய செய்தி அமைந்திருந்தது. ஆனால், உதயன் வெளிப்படுத்திய செய்தி தவறு என்று சமூகவலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறிருக்கையில், ஆளுநரின் நேற்றைய அறிக்கையானது உதயனின் செய்தியின் உண்மைத் தன்மையை மீளவும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதை உதயன் சுட்டிக்காட்ட விரும்புகின்றான். வாசகர்கள் www.np.gov.lk என்ற தளத்துக்குச்செல்வதன்மூலம், உதயனின் முன்னைய செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பிலும், ஆளுநரின் நேற்றைய உத்தரவு தொடர்பிலும் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். ( https://newuthayan.com/article/தெல்லிப்பழை_சிறுவர்,_மகளிர்_இல்ல_விவகாரம்;
-
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!!
தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைமைக்கு இணக்கத்தின் அடிப்படையில் முடிவு!! மாவை சேனாதிராசா தெரிவிப்பு தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகச் செயற்படுவதற்குச் செல்வம் அடைக்கலநாதன் தனது விருப்பத்தை வெளியிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக இணக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் எனத்தாம் ஆலோசனை கூறியிருப்பதாகவும், வழமைபோன்று நாடாளுமன்றக் குழு இதுதொடர்பான தீர்மானத்தை எடுக்க வேண்டுமெனவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய காலகட்டத்தில் எந்த வகையிலும் பிரிவுக்கும், குழப்பங்களுக்கும் இடம்கொடுக்காத வகையில் ஒற்றுமையாக இந்த விடயத்தில் தீர்மானிக்க வேண்டுமென்ற கருத்தை நாங்கள் முன்வைத்துள்ளோம். இதற்கமைய நாடாளுமன்றக் குழுவினர் பொருத்தமான, இணக்கமானதொரு தீர்மானத்தை எடுப்பார்கள் - என்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் மறைவையடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் பதவி வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/தமிழரசுக்_கட்சியின்_நாடாளுமன்றக்_குழுத்தலைமைக்கு_இணக்கத்தின்_அடிப்படையில்_முடிவு!!
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
உமா குமரனின் கணவர் மாரடைப்பு வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும்
சம்மந்தனின் மறைவும் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலமும் July 9, 2024 – கருணாகரன் — “சம்மந்தனின் மறைவுக்குப் பிறகு, தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம் எப்படி இருக்கும்?” – இந்தக் கேள்வி, சம்மந்தனின் மறைவுக்கு முன்னரே எழுப்பப்பட்டிருந்த ஒன்றுதான். ஆனாலும் அவர் மறைந்திருக்கும் இந்தச் சூழலிலும் இதற்குத் தெளிவான பதில் இல்லை என்பதே தமிழ்த்தேசியவாத அரசியலின் பரிதாபகரமான நிலையாகும். என்பதால் சம்மந்தன் இருந்தபோது ஏற்பட்டிருந்த குழப்பங்கள், இழுபறிகளையும் விட இனி வரும் நாட்களில் தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் மேலும் பல குழப்பங்களும் பலத்த இழுபறிகளும் நிகழவுள்ளன. பல்வேறு குறைபாடுகள், கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ்த்தேசிய அரசியலில் அதாவது ஈழத் தமிழரின் அரசியல் அரங்கில், செல்வாக்கைச் செலுத்திக் கொண்டிருந்தவர் சம்மந்தன். அவரை மிஞ்சி நிற்கக் கூடிய வேறு ஆளுமைகள் இருக்கவில்லை. இப்போதுள்ள தமிழ் அரசியற் தலைவர்களில் சம்மந்தனுக்கே சர்வதேச மட்டத்திலும் இலங்கையின் பிற சமூகத்தினரிடத்திலும் கூடுதலான மதிப்பிருந்தது. சுருங்கச்சொன்னால் தமிழ்ப்பரப்பில் கிடைத்த மதிப்பை விட, அதற்கு வெளியேதான் சம்மந்தனுக்கு மதிப்புண்டு. தன்னுடைய அரசியற்செயற்பாட்டினாலும் அரசியற்திறனாலும் தலைமைத்துவப் பண்பாலும் இந்தச் செல்வாக்கை அல்லது இவ்வாறான தாக்கத்தை – சம்மந்தன் உருவாக்கவில்லை. அவருடைய அரசியல் நிலைப்பாடு மட்டுமே இந்த மதிப்பை சம்மந்தனுக்குப் பெற்றுக் கொடுத்தது. சம்மந்தனுடைய அரசியல் நிலைப்பாடென்பது வழமையான தீவிரத் தமிழ்த்தேசியவாதத்திலிருந்து விலகியது; வேறுபட்டது. மென்போக்கையுடையது. பிற இன, மத, மொழியினரையும் ஏற்று இணங்கிச் செயற்பட விரும்புவது. முடியுமான அளவுக்குப் பல்லினத் தன்மையை உள்ளீர்த்துக் கொண்டது. சர்வதேச நிலைப்பாட்டை உள்ளடக்கியது. அரசுடன் – ஆட்சியாளருடன் தீவிர நிலையில் முரண்படுவதைத் தவிர்ப்பது. குறிப்பாகப் புலிகளுடைய அடையாளத்துக்கு வெளியே நிற்க முற்பட்டது. ஆக, தன்னுடைய நிலைப்பாட்டுக்கு அமைவாகப் புறச் சூழலை உருவாக்க ஓரளவுக்குச் சம்மந்தன் முற்பட்டிருந்தார் எனலாம். இதற்குச் சில உதாரணங்களைச் சொல்லலாம். 1. விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியாகவோ அதன் மறுவடிவமாகவோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதனுடைய அரசியலும் இல்லை என்பதை நிறுவ முற்பட்டது. இதை அவர் வெளிப்படையாகவே பல தடவை சொல்லியுமிருக்கிறார். அப்படிச் செய்வதன் மூலமே சர்வதேச சமூகத்திடமும் சிங்களத்தரப்பிலும் முஸ்லிம்களிடத்திலும் தன்னுடைய அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று சம்மந்தன் கருதினார். 2. இதற்கு அமைவாகவும் ஆதரமாகவுமே யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் அன்றைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தேசியக் கொடியை ஏந்தினார். அதாவது புலிக் கொடியை நிராகரித்துச் சிங்கக் கொடியை ஏந்துகிறேன் என. 3. நல்லாட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆளுங்கட்சிக்கு நெருக்கடிகளைக் கொடுக்காமல் நல்லெண்ணத்தை வளர்ப்பதாக இணக்க நிலையில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார். 4. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளதைப்போல எல்லாவற்றையும் கடுந்தொனியில் எதிர்க்கும் தீவிரத் தமிழ்த்தேசியத்துக்குப் பதிலாக மென்னிலையிலான தமிழ்த்தேசியத்தைப் பின்பற்றியது. இதனால்தான் அவர் ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான (சமஸ்டி) தீர்வு என்று துணிவோடு சொல்ல முடிந்தது. என்றபடியாலேயே சம்மந்தனை சிங்களத் தரப்பும் முஸ்லிம்களும் மதிப்புடன் அணுகின. இதற்குக் காரணம், 2009 க்குப் பிறகான சூழலைச் சம்மந்தன் ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருந்தார் எனலாம். அதாவது, புலிகளுக்குப் பிறகான அரசியல் என்பது, பிரிவினைக்குப் பதிலாக ஐக்கிய இலங்கைக்குள் ஒரு நியாயமான தீர்வைக் காண்பதாக அமைய வேண்டும். அது புரிந்துணர்வின் அடிப்படையில் குறைவில்லாத சமநிலைக்குச் செல்வது, சமரசம் காண்பது என்பதாகும். எனவே இதில் தீவிரத்தன்மைக்கு இடமில்லை. ஆகவே, இணக்கத்துக்கும் உடன்பாட்டுக்கும் சமரசத்துக்கும் ஜனநாயக அடிப்படைகளுக்கும் உட்பட்டிருக்க வேண்டும். அதையே சர்வதேச சமூகமும் ஆதரிக்கும். இலங்கையிலும் சாத்தியப்படுத்தலாம் என்பதைச் சம்மந்தன் தன்னுடைய புரிதலாகவும் அரசியல் நிலைப்பாடாகவும் கொண்டிருந்தார். அப்படி விளங்கிக் கொண்டதற்கமையவே அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்த தீவிரநிலைப்பாட்டைக் கொண்ட கஜேந்திரகுமார், கஜேந்திரன், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா போன்றோரைத் தள்ளி வைத்தார். அடுத்ததாக சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோர் விலகிச் செல்வதற்கும் இடமளித்தார். பதிலாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் நிற்கக் கூடிய தமிழரசுக் கட்சியை மட்டுமே பலப்படுத்த விளைந்தார். மறுவளமாகப் பார்த்தால் சம்மந்தனுடைய இத்தகைய நிலைப்பாடு விடுதலைப்புலிகளை ஆதரிப்போருக்கும் குறைந்த பட்சம் செயற்களத்தில் அரசியலை முன்னெடுத்துச் செல்ல முயற்சித்தோருக்கும் உடன்பாடாக இருக்கவில்லை. அதனால் அவர்கள் வெளியேறிச் சென்றனர். பதிலாகத் தன்னுடைய மென்போக்கிற்கு உடன்படக்கூடியவர்கள் எனக் கருதப்பட்ட சுமந்திரன், விக்கினேஸ்வரன், சி.வி.கே. சிவஞானம், சத்தியலிங்கம், ஆர்னோல்ட், குகதாசன் போன்றோரை உள்ளீர்த்து, அவர்களை முன்னிலைப்படுத்தினார் சம்மந்தன். பின்னாளில் விக்கினேஸ்வரன் உள்ளிட்ட சிலர் இதற்கு மாறாக மாறிச் சம்மந்தனுக்கே நெருக்கடியைக் கொடுத்தனர். என்றாலும் இதையெல்லாம் கடந்தே சம்மந்தன் நின்றார். சம்மந்தனுடைய இந்த நிலைப்பாட்டைத் தமிழ்த்தேசியத்தின் இன்னொரு போக்கான தீவிர நிலைப்பாடுடையோர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் கடுமையாகச் சாடினர், எதிர்த்தனர், விமர்சித்தனர். அவர்களுடைய குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் மறுத்துரைக்கக் கூடிய அளவுக்கு, மறுதலித்து நிற்கக் கூடியவாறு சம்மந்தன் தன்னைப் பலப்படுத்தியிருக்க வேண்டும். அப்படி அவர் தன்னைப் பலப்படுத்தியிருக்க வேண்டுமானால், தன்னுடைய நிலைப்பாட்டுக்கு வலுச் சேர்த்திருக்க வேண்டும். அதற்காக வேலை செய்திருக்க வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அவற்றைச் செயற்படுத்தியிருக்க வேண்டும். அவற்றின் பயன்களை மக்கள் பெறக் கூடியதாக மாற்றியிருப்பது அவசியம். அதுவே அவருடைய தலைமைத்துவத்தின் சிறப்பாகவும் பொறுப்பு நிறைவேற்றுதலாகவும் இருந்திருக்கும். அதற்கான வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்திருந்தன. 2009 க்குப் பிறகான 15 ஆண்டுகளில் தமிழரின் அரசியலில் ஏக தலைவராகச் சம்மந்தனே இருந்திருக்கிறார். தமிழரசுக் கட்சியின் தலைவராக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக, தொடர்ச்சியாகப் 15 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பிராக, நல்லாட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எனப் பல நிலைகளில் அவருக்கான தகுதிநிலைகளும் வாய்ப்புகளும் கிடைத்திருந்தன. இதைப் பயன்படுத்தி அவர் பல காரியங்களை – அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதானால் பல கருமங்களையும் ஆற்றியிருக்க வேண்டும். அப்படி நிகழ்ந்திருந்தால் அது மக்களிடத்திலே அவர் மீதான நம்பிக்கையை உருவாக்கியிருக்கும். இவற்றைச் செய்வதற்குப் பதிலாக அவர் கொழும்பு மைய அரசியலை மட்டுமே மேற்கொண்டிருந்தார். அது கொழும்புத் தலைமைகள், சர்வதேசத் தரப்புகளிடம் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் தமிழ் மக்களிடத்திலே பெரிதாக எடுபடவில்லை. இதற்கும் சில காரணங்கள் உண்டு. 1. கட்சிக்குள்ளும் கூட்டமைப்பிற்குள்ளும் அவர் ஜனநாயகத்தை மறுதலித்தது. 2. விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் அவர் செவிமடுக்கத் தவறியது. 3. மக்களின் நலன்கள், தேவைகளைக் குறித்துச் சிந்திப்பதில் பின்னின்றது. பதிலாக தன்னுடைய தனிப்பட்ட தேவைகள், நலன்களில் குறியாக இருந்தது. 4. காலமும் சூழலும் அளித்த தலைமைத்துவ, அரசியல் அதிகார வாய்ப்பைப் பயன்படுத்தி, தீர்வுக்கும் தமிழ் மக்களுடைய நலனுக்குமாகச் செயற்படும் நிலையைத் தீவிரமாக்காமல் விட்டது. 5. மக்களுடனான நேரடி உறவாடலைத் தவிர்த்தது. 6. அரசியல் கைதிகள் விவகாரத்தைப் பற்றிச் சம்மந்தப்பட்டவர்கள் பேச முற்பட்டபோது, சிறைச்சாலைச் சாவி தன்னுடைய கையிலா உள்ளது? என்று கேட்டதைப்போல, மீள்குடியேற்றம், நில ஆக்கிரமிப்பு, காணாமலாக்கப்பட்டோரின் விவகாரம் எனப் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தோரின் நிலையறிந்து செயற்படத் தவறியது. 7. போரினால் பாதிக்கப்பட்டோரிடத்திலே இறங்கிச் செய்திருக்க வேண்டிய பல்வேறு விதமான அவசியப்பணிகளை ஆற்றுவதற்குப் பின்னின்றது. இப்படிப் பலவுண்டு. இதனால் ஒரு கட்டத்தில் அவரைத் தலைவராக அங்கீகரித்த மக்களாலும் கட்சிகளாலும் அவர் கடுந்தொனியில் விமர்சிக்கப்படவும் கேலிக்குட்படுத்தப்படவும் கூடிய சூழல் உருவானது. இதைச் சமாளித்துக் கொள்வதற்காக அவர் இதோ தீர்வு வருகிறது என்று பல அறிவிப்புகளைச் செய்தார். ஆனாலும் அதெல்லாம் மேலும் மேலும் நெருக்கடிகளையே சம்மந்தனுக்குக் கொடுத்தன. இறுதியில் அவர் தலைமை வகித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தவிர்க்க முடியாமல் உடைந்து சிதறியது. இப்பொழுது அவருடைய கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியும் உடையும் கட்டத்திற்கு வந்துள்ளது. உள்முரண்பாடுகள் வலுத்து, கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்கும் தமிழ்த்தேசிய அரசியலின் பின்னடைவுக்கும் பொறுப்பேற்க வேண்டிய வரலாற்றுச் சுமை சம்மந்தனுக்குண்டு. அதிலிருந்து அவர் தப்பவே முடியாது. இவ்வளவுக்கும் அவர் இனப்பரம்பல் பிரச்சினையை எதிர்கொண்டு நிற்கும் கிழக்கின் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர். குறைந்த பட்சம் திருகோணமலையின் நிலைமையில் கூட இடையீடுகளைச் செய்திருக்க வேண்டும். அதைக் கூடச் செய்யவில்லை. பதிலாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்கில் வகித்திருக்க வேண்டிய மாகாணசபையின் ஆட்சிக்கான வாய்ப்பைக்கூட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து, விமர்சனத்தை வாங்கினார். இதேவேளை சம்மந்தன் அரசியலில் செயற்படத் தொடங்கிய காலம் மிகக் கடினமான சூழலையுடையது என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். ஜனநாயக வழிப்போராட்ட அரசியல் செல்வாக்கிழந்து, ஆயுதப்போராட்ட அரசியலும் அதன்வழியான போரும் பலமடைந்திருந்த காலச் சூழல் அது. சம்மந்தன் அந்தத் தீவிரப் பாதையை – அந்த அரசியலை – ஏற்றுக் கொண்டவரல்ல. அதனால் அவருக்குப் பல நெருக்கடிகளும் ஆபத்துகளுமிருந்தன. அவருடைய கட்சியான தமிழரசுக் கட்சியும் அது அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் செயற்பட முடியாத நிலைக்குள்ளானது. அமிர்தலிங்கம், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம், யோகேஸ்வரன் என அவருடைய தலைவர்கள் பலிகொள்ளப்பட்டனர். இருந்தாலும் 70 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏறக்குறைய 30 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டிருக்கிறார் சம்மந்தன். தமிழரசுக் கட்சியின் தலைவராக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக எனப் பல பதவிகளை வகித்திருக்கிறார். தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியைத் தவிர, ஏனையவை காலச் சூழலினால் அவருக்குக் கிடைத்தவை அல்லது வாய்த்தவையாகும். அப்படிக் கிடைத்த வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எவராலும் மறுக்கமுடியாதது. இப்போதைக்கு அப்படியொரு வாய்ப்பு எவருக்கும் கிடைக்கப்போவதுமில்லை. என்பதால் சம்மந்தனின் மீதான கண்டனம் மேலும் அதிகரிக்குமே தவிரக் குறையாது. இப்பொழுது முதிய வயதில் (91) மரணத்துள்ள மூத்த அரசியற் தலைவர் என்ற மதிப்போடு அவருடைய விடைபெறுதல் நிகழ்ந்துள்ளது. மரணத்துக்குப் பிறகு சம்மந்தன் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மதிப்பை அவதானிக்கும்போது தமிழ்த்தேசிய அரசியலில் பின்பற்றப் பட்டுவரும் துரோகி – தியாகி என்ற அடையாளப்படுத்தலின் விசித்திரம் குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. முன்னர் துரோகிகளாகச் சித்திரிக்கப்பட்டு, எதிர்நிலையில் நிறுத்தப்பட்டவர்கள் பின்னர் ஏற்பு நிலைக்கு உயர்த்தப்படும் விநோத நிகழ்வு நிகழ்வதுண்டு. தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் மு. சிவசிதம்பரம், ஊடகவியலாளர் தராகி சிவராம் போல. அவ்வாறான ஒருவராகச் சம்மந்தன் அவர்கள் இன்று பெருந்தலைவராகப் போற்றப்படுகிறார். ஊடகங்களும் தமிழ் அரசியற் கட்சிகளும் அப்படித்தான் விழிக்கின்றன. இதொரு பக்கமிருக்க, சம்மந்தன் மேற்கொண்டு வந்த மென்னிலைத் தமிழ்த்தேசியவாதத்தை அடுத்த கட்டத்துக்குத் தலைமை தாங்கி, முன்னெடுத்துச் செல்வது யார்? அந்த அரசியல் எப்படியாக இருக்கும்? இப்பொழுது அதற்கான அடையாளத்தை – முன்னெடுப்பைச் செய்து கொண்டிருப்பது சுமந்திரன், சாணக்கியன், சி.வி.கே. சிவஞானம், சத்தியலிங்கம் போன்றோரே. இவர்களுடைய அணுகுமுறையும் அதற்கான அங்கீகாரமும் எப்படி இருக்கப்போகின்றன என்பதை அடுத்து வரும் சில மாதங்களிலேயே காணக்கூடியதாக இருக்கும். அடுத்தடுத்து வரவுள்ள தேர்தல்களும் அதற்கு முன்னும் பின்னுமாகச் செயற்படுத்தப்பட வேண்டிய அரசியல் வேலைகளுமே அதைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் ஒன்று, நிச்சயமாக அது சம்மந்தன் மேற்கொண்ட கொழும்பு மைய அரசியலாக அது இருக்க முடியாது. கொழும்பைக் கையாளக் கூடிய தமிழ்பேசும் மக்களின் அரசியலாக அது விரிவடைய வேண்டும். மறுபக்கத்தில் தீவிரத் தமிழ்த்தேசியவாதத்துக்குத் தலைமை தாங்குவோரில் முதன்மையானவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல். ஏற்கனவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணன் உள்ளிட்ட அதனுடைய இளநிலைத் தலைவர்களை இழந்துநிற்கிறது. எனவே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை உச்சவிசையில் இயக்கக் கூடிய தலைமைத்துவம் அதற்குள் இல்லாத நிலையே காணப்படுகிறது. கஜேந்திரன் தன்னுடைய நோக்கு நிலையில் களம் நோக்கிச் செல்லக் கூடியவராக இருந்தாலும் தலைமைத்துவத்துக்குரிய தகுதி நிலையைக் கொண்டவரல்ல. இந்த இரு நிலையிலும் தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம் எப்படி அமையும்? அதற்கு அடுத்ததாக எந்தத் தரப்பு உள்ளது? என்ற கேள்வி எழுகிறது. ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அந்த வெற்றிடத்தை நிரப்புமா? அதற்கான திறனும் பலமும் அதனிடத்தில் உண்டா? எனில், அது புதிய தளமொன்றை நிர்மாணிக்கக் கூடிய அடையாளத்தை இதுவரையில் பிரதிபலிக்கவில்லை. கூட்டமைப்பிலிருந்து விலகிய பிறகு அல்லது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்துக்குள் அது நுளைந்த பிறகு, தன்னைத் தனித்துவமாக வெளிப்படுத்தக் கூடிய எந்த நடவடிக்கைகளையும் அது மேற்கொள்ளவில்லை. இப்பொழுது தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அது தன்னைக் குவித்துள்ளது. இத்தகைய போக்கு அதனுடைய அரசியல் எதிர்காலத்தையும் அது தமிழரின் அரசியலில் உருவாக்க முயற்சிக்கும் விளைவுகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆம், சிலவேளை சம்மந்தனே பரவாயில்லை என்ற நிலையத்தான் வரலாறு உருவாக்கப்போகிறதோ என்னவோ! https://arangamnews.com/?p=10959
-
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியேற்பு
வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியேற்பு maheshJuly 10, 2024 வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா நேற்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். வவுனியா பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகத்தர்கள் புடைசூழ மங்கள வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்ட புதிய துணைவேந்தர் அருளம்பலம் அற்புதராஜா ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டிருந்தார். வவுனியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் உட்பட பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், கல்விசார்ந்த ஊழியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.thinakaran.lk/2024/07/10/local/71298/வவுனியா-பல்கலைக்கழகத்தி/
-
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை மூடப்படும்
கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை மூடப்படும் - பாதை திறந்த முதல் நாளில் சுமார் 7000 பேர் பயணம் PrashahiniJuly 10, 2024 வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல்விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை நாளை (11) மூடப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார். நாளை பிற்பகல் 2.30 மணியளவில் இவ்வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை மூடப்படவுள்ளது. அதேவேளை களுதாவளையிலிருந்து ஒருநாள் பாதை திறப்பை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல்விழா உற்சவத்திற்காக வரலாற்றில் முதல் தடவையாக அதிகப் படியான யாத்திரீகர்கள் கானக பாதயாத்திரையை மேற்கொண்டு வந்தனர். வரலாற்றில் கானகப் பாதை திறந்த (30) முதல் நாளில் சுமார் 7000 பாதயாத்திரீகர்கள் பயணித்தமை இதுவே முதல் முறையாகும். அதேபோல உகந்தை முருகனாலய கொடியேற்றம் இடம்பெற்ற கடந்த 6ஆம் திகதி கானகத்தில் பிரவேசித்த அடியார்களின் எண்ணிக்கை 10,000 ஆகும். இதுவும் ஒரு வரலாற்று பதிவாகும். கதிர்காமத்திற்கான கானகப் பாதை கடந்த 30 ஆம் திகதி திறக்கப்பட்டு கடந்த 12 தினங்கள் அடியார்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கதிர்காமம் மற்றும் உகந்தமலை முருகனாலயங்களின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் 06ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 22ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே. https://www.thinakaran.lk/2024/07/10/breaking-news/71439/கதிர்காமத்திற்கான-காட்-3/
-
பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்கிறார் சிறிதரன்
பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்கிறார் சிறிதரன் என்னையும் எனது குடும்பத்தையும் இலக்கு வைத்து அச்சுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் எனதும் எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் சபாநாயகர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி.யான சிவஞானம் சிறிதரன் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்ற இலங்கை தொலைத்தொடர்பு திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் பேசுகையில், இந்துக்கல்லூரி ஒழுங்கை, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள எனது வதிவிட இல்லத்திற்கு முன்னால் கடந்த 28 ஆம் திகதி கருப்புத்துணியால் இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள் வந்துநின்றன. வெள்ளிப்பிடியிட்ட வாள்கள் ,கூரிய ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து வந்த 12 பேர் பாடசாலை நேரமான காலை 8 .05 மணியளவில் நடமாடினர். இந்த நடமாட்டம் எனது குடும்பத்தினரையும் அவ்வீதியில் வசிக்கும் ஏனைய பொது மக்களையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததை இந்த சபையின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். இது எனதும் எனது குடும்பத்தினரினதும் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே இது தொடர்பில் சபாநாயகர் உயர்ந்த கரிசனை கொண்டு மேற்குறித்த சம்பவங்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து முறையான விசாரணை நடத்த ஆவன செய்து எனதும் எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார். https://www.tamilmirror.lk/செய்திகள்/பாதுகாப்புக்கு-உத்தரவாதம்-கேட்கிறார்-சிறிதரன்/175-340129
-
நவாலி சென். பீற்றர்ஸ் படுகொலைகள்; 29ஆவது நினைவேந்தல் நேற்று உணர்வுபூர்வம்!
நவாலி சென். பீற்றர்ஸ் படுகொலைகள்; 29ஆவது நினைவேந்தல் நேற்று உணர்வுபூர்வம்! நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீதான விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின், 29ஆவது ஆண்டு நினைவுதினம் சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நேற்று மாலை நினைவுகூரப்பட்டது. பங்குதந்தை சந்திரபோஸ் தலைமையில் வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, தேவாலயத்தின் அருகில் அமைக்கபட்டுள்ள நினைவுதூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பகீரதன், ஜெயந்தன், றமணன், அனுசன் மலரஞ்சலி செலுத்தி ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர் 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி சிறிய கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாகக் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில், 147 பேர் பலியாகினர். 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். https://newuthayan.com/article/நவாலி_சென்._பீற்றர்ஸ்_படுகொலைகள்;_29ஆவது_நினைவேந்தல்_நேற்று_உணர்வுபூர்வம்!
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
மக்களின் பேரெழுச்சியால் முடங்கியது ஏ-9 வீதி யாழ். சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும், வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் திங்கட்கிழமை (08) காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் பொதுமக்கள் தமது எதிர்ப்பு கோஷசம் மிட்டு தமது ஆதரவினை வழங்கியுள்ளனர். குறித்த பகுதிக்கு அதிகாரிகள் யாரும் வருகை தராத நிலையில் பொறுமையிழந்த பொதுமக்கள் ஏ-9 வீதியை முடக்கி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றாக முடங்கியது. பின்னர் பொலிஸார் போராட்டக்காரருடன் பேச்சுவார்த்தை நடாத்திய நிலையில் வீதி முடக்கம் கைவிடப்பட்டதுடன் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த காவல்துறையினர் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்யாமையும் குறிப்பிடத்தக்கது. பு.கஜிந்தன், நிதர்ஷன் வினோத் https://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மக்களின்-பேரெழுச்சியால்-முடங்கியது-ஏ-9-வீதி/46-340023
-
சம்பந்தரைத் தோற்கடித்தவர்கள் – நிலாந்தன்.
சம்பந்தர் : “பேசுவம்” - நிலாந்தன் சம்பந்தரின் மரணம் ஈழத்தமிழ்ச் சூழலில் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது ஈழத்தமிழர்களின் கூட்டு உளவியலின் வெளிப்பாடு என்றே கூறவேண்டும். அவருடைய பூதவுடல் யாழ்.நகரப் பகுதிக்கு அருகே வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் நகரம் வழமைபோல இயங்கியது. அதன் ஒலிபெருக்கிகளில் சினிமாப் பாடல்கள் இசைக்கப்பட்டன. நகரம் ஏன் துக்கிக்கவில்லை? சமூகவலைத்தளங்களில் ஒருபகுதி அவரை கௌரவமாக அஞ்சலித்தது. இன்னொருபகுதி கேவலமாக நிந்தித்தது. அது தமிழ் அரசியல் பண்பாட்டின் வீழ்ச்சியையும் காட்டியது. நவீன தமிழ் அரசியலில் குறிப்பாக சமூக வலைத்தளங்களின் காலத்தில்; மீம்ஸ்களின் காலத்தில், அதிகம் கீழ்த்தரமாக நிந்திக்கப்பட்ட ஒரு தலைவராக சம்மந்தரைக் கூறலாம். அவருடைய இறப்பின் பின் அவரைப்பற்றி வரும் குறிப்புக்கள் பெரும்பாலும் அதைத்தான் காட்டுகின்றன 2009க்கு பின்னரான கொந்தளிப்பான ஒரு மனோநிலையின் விளைவுகளே அவை. இக்கொந்தளிப்பான கூட்டுஉளவியலுக்குத் தலைமைதாங்கி ஈழத்தமிழரசியலை ஒரு புதிய பண்புருமாற்றத்தை நோக்கிச் செலுத்த வேண்டிய தவிர்க்கப்படவியலாத ஒரு பொறுப்பை காலம் அவருடைய கைகளில் கொடுத்தது. ஆனால் அதை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதை இப்பொழுது அவரை அஞ்சலித்தும் நிந்தித்தும் வரும் குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஈழத் தமிழர்களின் நவீனவரலாற்றில் நீண்டகாலங்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் இருவர். ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர். மற்றவர் சம்பந்தர். இருவருமே ஒப்பீட்டளவில் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை நிர்ணயித்தார்கள். குறிப்பாக சம்பந்தர் 2009க்குப்பின்னிருந்து கடந்த 15ஆண்டுகளிலும் தமிழ் அரசியலின் தவிர்க்கப்படமுடியாத முதிய தலைவராகக் காணப்பட்டார். அவருக்கு பின்வரும் முக்கியத்துவங்கள் உண்டு. முதலாவதாக அவர் ஒரு மூத்த தலைவர். இரண்டாவதாக அவர் கிழக்கை மையமாகக்கொண்டு எழுச்சிபெற்ற தலைவர். மூன்றாவதாக,அவர் நீண்டகாலம் தமிழ்மக்களின் அரசியலை தீர்மானித்தவர்களில் ஒருவர். அவருடைய நம்பிக்கைகளை பொறுத்தவரை சம்பந்தர் ஆயுதப் போராட்டத்தில் முழுஅளவு ஆதரவாளர் அல்ல. குறிப்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை கொண்டிருந்தார். எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பொழுது அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டார். தன்னை சுகாகரித்துக்கொண்டார். ஆனால் அதற்காக அவர் ஆயுதப் போராட்ட வழிமுறையை ஏற்றுக்கொண்டார் என்று பொருள் அல்ல. அதனை ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் அவருடைய வழி எதுவென்று தொகுத்துப் பார்த்தால் தெரியவரும். சம்பந்தரின் வழி எது? ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு என்று சிந்தித்தால் அதாவது பிரிவினை அல்லாத வேறு எந்த ஒரு தீர்வைப்பற்றிச் சிந்தித்தாலும் அதற்கு சிங்களமக்களின் சம்மதம் அவசியம் என்று சம்பந்தர் நம்பினார். எனவே சிங்களமக்களை எப்படி அரவணைப்பது?அவர்கள் மனதில் இருக்கும் பகையுணர்வை,அச்சங்களை முற்கற்பிதங்களை எப்படி நீக்குவது?என்றும் அவர் சிந்தித்தார். ஆயுதப் போராட்டம் சிங்களமக்களை பகை நிலைக்குத் தள்ளிவிட்டது என்றும் அவர் நம்பினார். எனவே சிங்கள மக்களை பகை நிலைக்குத் தள்ளாத ஒர் அரசியல் வழியை அவர் கடைப்பிடித்தார். சிங்கள மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது என்று அவர் தீர்மானித்தார். அதை நோக்கியே கட்சியைச் செலுத்தினார். அதனால்தான் முதலில் கஜேந்திரகுமார் அணியை வெளியேவிட்டார். அதனால்தான் சுமந்திரனை உள்ளே கொண்டுவந்தார். அதனால்தான் விக்னேஸ்வரனையும் உள்ளே கொண்டுவந்தார். 2015ல்நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தில் சம்பந்தரின் பங்களிப்பு இருந்தது. அந்த ஆட்சி மாற்றத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட ரணில்-மைத்திரி அரசாங்கம் ஐநாவின் 30/1தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. நிலைமாறுகால நீதிக்கான அத்தீர்மானத்தின் பிரகாரம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கட்டமைப்பு சார் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அதன்படி நாடாளுமன்றம் ஒரு சாசனப் பேரவையாக மாற்றப்பட்டு, ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மந்தர் அதில் முழுமையாக ஒத்துழைத்தார். அதுவரையிலும் இருந்த எல்லா யாப்புகளும் தமிழ்மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை என்பதனால், தமிழ்மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கனவு கண்டார்.அதை நம்பித்தான் தமிழ்மக்களுக்கு ஒவ்வொரு பெருநாளின் போதும் வாக்குறுதிகளை வழங்கினார். அதுமட்டுமல்ல, மன்னாரில் நடந்த “தடம் மாறுகிறதா தமிழ் தேசியம்?” என்ற ஒரு கருத்தரங்கில், ஆயர்களின் முன்னிலையில்,அவர் அந்த நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்தினார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதில் உரையாற்றிய நான் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டினேன். மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பு இன்றி,மூன்றாவது தரப்பு ஒன்றின் நெருக்குதல் இன்றி சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பானது, இனப்பிரச்சினையைத் தீர்க்க முன்வராது என்று நான் அந்த உரையில் சுட்டிக்காட்டினேன். ஆனால் சம்பந்தர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தலையை சாய்த்து மண்டைக் கண்ணால் என்னைப் பார்த்தபடி சொன்னார்… “சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதம் ஒரு தீர்வைத் தராது என்பது ஒரு வறண்ட வாதம்; ஒரு வறட்டு வாதம்” என்று யாப்புருவாக்க முயற்சிகள் ஓர் இடைக்கால வரைபுவரை முன்னேறின. அந்த இடைக்கால வரைபை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதித்தபொழுது அதில் டிலான் பெரேரா ஆற்றிய உரையை இங்கு சுட்டிக்காட்டலாம். அது சம்பந்தரின் அரசியல் வழியை மிகக்கூர்மையாக வெளிப்படுத்தும் ஓர் உரை. “சம்பந்தரின் காலத்திலேயே ஒரு தீர்வைக் காணவேண்டும். அவரைப்போல விட்டுக்கொடுக்கும் ஒரு தமிழ்த் தலைவர் இனி வரமாட்டார்” என்று டிலான் உரையாற்றினார். அதுதான் உண்மை. ரணில் மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக சம்பந்தர் அடியொட்ட வளைந்து கொடுத்தார். விளைவு என்ன? யாப்புருவாக்க முயற்சிகளை அதன் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே 2018ல் காட்டிக்கொடுத்தார். சம்பந்தரின் கனவு கலைந்தது. அவர் தமிழ் மக்களுக்கு வழங்கிய எல்லா வாக்குறுதிகளும் பொய்த்துப்போயின. சிங்கள மக்களுக்கு நம்பிக்கை வரும் வரையிலும் விட்டுக் கொடுப்பதன் மூலம், ஒரு தீர்வைப் பெறலாம் என்ற அவருடைய நம்பிக்கை தோற்கடிக்கப்பட்டது. அந்த நம்பிக்கை மட்டும் தோற்கடிக்கப்படவில்லை. அதன் விளைவாக கட்சி அதுவரையிலும் வகித்து வந்த ஏகபோகத்தை இழந்தது. அடுத்த தேர்தலில் கட்சியின் வாக்குகள் சிதறின. அதுமட்டுமல்ல, கட்சியே இப்பொழுது சிதறிவிட்டது. அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் சிதறவில்லை. தமிழரசுக் கட்சியே இரண்டாக உடைந்துவிட்டது. எனவே இப்பொழுது தொகுத்துப்பார்க்கலாம். கூட்டமைப்பின் தலைவராக சம்பந்தர் கடந்த 15 ஆண்டுகளிலும் எதைச் சாதித்தார் என்று பட்டியலிடலாம்… முதலாவதாக,சிங்கள மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முற்பட்டு அதில் தோல்விகண்டார். அதாவது வரலாறு அவருக்கு வழங்கிய பெறுமதியான ஆண்டுகளை அவர் பொருத்தமான விதத்தில் பயன்படுத்தவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான தமிழரசியலில் பண்புரு மாற்றத்துக்கு தலைமை தாங்க அவரால் முடியவில்லை. இரண்டாவதாக,சிங்கள மக்களுக்கு அதிகம் விட்டுக் கொடுத்ததன்மூலம் அவர் எதையுமே பெற முடியவில்லை. மாறாக, தான் தலைமை தாங்கிய கூட்டின் சிதைவுக்கும் அதனால் காரணமாக அமைந்தார். ஈழத் தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில் அதிக ஆசனங்களை கொண்டிருந்த ஒரு காலத்தில் அந்தக் கூட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் கூட்டு உடைந்துடைந்து சிறுத்துக்கொண்டு வந்து இப்பொழுது தமிழரசுக்கட்சியாக சிறுத்து விட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் இரண்டாக உடைந்துவிட்டது.தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவம் 22 ஆசனங்களில் இருந்து 13ஆசனங்கள் வரையிலும் உடைந்துபோனமை மகா தோல்வி. அதுபோலவே தன்னுடைய சொந்தத் தொகுதியிலும் அவர் தொடர்ச்சியாகப் பெற்றுவந்த வாக்குகளை பட்டியலிட்டுப்பார்த்தால் அதில் படிப்படியாக வீழ்ச்சியைக் காணலாம். இப்பொழுதிருக்கும் நிலையில் திருக்கோணமலையில் தமிழரசுக் கட்சிக்குப் போட்டியாக மற்றொரு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சி களமிறங்கினால் இம்முறை சம்பந்தர் பெற்ற ஆசனம் அடுத்த முறை கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சிலசமயம் சம்பந்தரின் அனுதாப வாக்குகள் கிடைக்கக்கூடும். இவ்வாறு,தான் தலைமை தாங்கிய கூட்டுக்குள்ளும் ஒரு தலைவராக தோல்வியடைந்து,தனது சொந்த தேர்தல் தொகுதியில்,தனது தாய்ப்பட்டினத்தில்,தன்னுடைய ஆதரவுத் தளத்தை படிப்படியாகத் தேய விட்டதில் தோல்வியுற்று,தான் அங்கம் வகிக்கும் மூத்த கட்சிக்குள்ளும் ஒரு தலைவராக அவர் தோல்வியடைந்து விட்டார். ஒரு தலைவர் தன் வாரிசுகளாகக் களமிறக்கும் அரசியல்வாதிகள் அந்த தலைவரின் பெயரை வரலாற்றில் ஸ்தாபிப்பவர்களாக அமையவேண்டும். ஆனால் சம்பந்தர் கொண்டு வந்த சுமந்திரனோ அல்லது விக்னேஸ்வரனோ அவ்வாறு இருக்கவில்லை. விக்னேஸ்வரன் சம்பந்தரின் வழி தவறு என்று கூறி அவரிடமிருந்து விலகிச் சென்றார். சுமந்திரன் சம்பந்தரின் பட்டத்து இளவரசர் போல காணப்பட்டார்.ஆனால் கட்சிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பொழுது அவர் சம்பந்தரை பொதுவெளியில் அவமதித்தார். தன்னுடைய வாரிசினாலேயே அவமதிக்கப்படும் ஒரு தலைவராக சம்மந்தர் அவருடைய இறுதிக் காலத்தில் காணப்பட்டார். அவருடைய தாய்க் கட்சி நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டபொழுது அதைத் தடுக்கும் சக்தியற்றவராக அவர் இருந்தார். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் பிணக்கு என்று வரும்பொழுது மூத்தவர்கள் அதைத் தீர்த்து வைப்பார்கள். கட்சிக்குள்ளும் அப்படித்தான். எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முது தலைவர்கள் பிணக்குகளைத் தீர்த்துவைப்பார்கள். ஆனால் மிக மூத்த தலைவராக அவருடைய சொல்லை அவருடைய வாரிசே கேட்கவில்லை. விளைவாக கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. அது மட்டுமல்ல அவருடைய சொந்த தேர்தல் தொகுதியில் தன்னை மதியாமல் நியமனங்கள் செய்யப்படுகின்றன என்ற பொருள்பட அவர் ஒரு முறைப்பாட்டைச் செய்யுமளவுக்கு பலவீனமாக காணப்பட்டார். சம்பந்தரின் சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை மதிப்பிட இது ஒன்றே போதும்.அவர் தன்னுடைய தாய்க் கட்சியைச் சிதைய விட்ட ஒரு தலைவர். அவரால் எப்படித் தேசத்தைத் திரட்டியிருக்க முடியும்? எனவே சம்பந்தரின் கடந்த சுமார் இரண்டு தசாப்த கால தலைமைத்துவத்தை தொகுத்துப் பார்த்தால் கிடைக்கும் விடை என்ன? திருகோணமலையைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மதகுரு,அவர் ஒரு முக்கியமான சமூக அரசியல் செயற்பாட்டாளர்,சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கேட்டார், “சம்பந்தர் இறந்தால் அவருடைய கல்லறையில் என்ன வார்தையைப் பொறிக்க வேண்டும்?” என்று. “என்ன வார்த்தை” என்று நான் கேட்டேன். அவர் சொன்னார் “பேசுவம்” என்று போடலாம். https://www.nillanthan.com/6813/
-
உமாகுமரன் வெற்றி; பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட பெண்
கிருஷ்ணி வெல்லமுடியாது என்றுதான் சொல்லியிருந்தேன். உமா போட்டியிட்டது தொழிற்கட்சி இலகுவாக வெல்லக்கூடிய தொகுதியில். தமிழர்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. கட்சி என்ன சொல்கின்றதோ, அதைத்தான் செய்வார். அவரது தொகுதியில் உள்ள முஸ்லிம்களின் வாக்குக்காக காஸாவில் உடனடிப் போர்நிறுத்தம் வேண்டும் என்று அவரது பக்கத்தில் சொல்லியிருக்கின்றார். அதற்கு மேல் ஏதும் செய்யப்போவதில்லை! https://www.umakumaran.co.uk
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
நானும் வாட்ஸப்பில் இப்போது பார்த்தேன்.. கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் சரவணபவான், அதைத் கேட்ட ஆறு திருமுகன் மேல் சேறு பூச உதயனில் செய்தி போட்டிருக்கின்றார் என்கின்றார்கள். ஊடக அடியாட்களின் வேலையா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
இல்லை! @புலவர் ஐயாவின் கட்சிக்காரர்கள் வென்றுவிட்டார்கள். மூன்றாவதாகத்தான் கிருஷ்ணி வந்தார்!
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் பதிவு; ஆறு.திருமுருகனால் நடத்தப்படும் சிறுவர் இல்லம் இழுத்துமூடல்! வடக்கு ஆளுநர் பணிப்புரை! சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான கலாநிதி ஆறு.திருமுருகனால் யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும், இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மகளிர் இல்லத்தில் பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராக்களால் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுமிகளின் உரிமை மீறப்படுவதாகவும், அவர்கள் சமூகச் சீரழிவுகளை எதிர்கொள்வதாகவும் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்தே குறித்த இல்லத்தை மூடும் உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார். மற்றைய இல்லம் முறையான அனுமதி பெறப்படாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:- ஆறு. திருமுருகனால் நடத்தப்பட்டு வரும் மகளிர் இல்லத்துக்கு கடந்த மே மாதம் 29 சிறுமிகள் மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளாவர். சிறுமிகளுக்கான விடுதியில் தங்கவைக்கப்பட வேண்டிய அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோரைத் தங்கவைக்கும் பெண்கள் விடுதியிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த விடுதியில் 10 குளியலறைகள் காணப்படுகின்றபோதிலும், அவை அனைத்தும் விடுதிப் பராமரிப்பாளர்களின் பயன்பாட்டுக்காகவே ஒதுக்கப்பட் டுள்ளன. சிறுமிகளுக்கு வெளிப்புறமாக நீர் நிரப்பப்பட்ட தொட்டியொன்றே குளிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சிறுமிகள் குளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதியே கண்காணிப்புக் கமராவால் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாம் குளிக்கும் இடத்துக்கு மேற்புறமாக கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருப்பதை அவதானித்த சிறுமிகள். அதுதொடர்பில் தமது பெற்றோருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். விடயம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர் இல்லத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது, பாதுகாப்புக் காரணங்களுக்காக வீதியைப் பதிவு செய்வதற்காகவே கமரா பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருத்துமாறு எந்த அறிவித்தலும் வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விரிவான அறிக்கை ஆளுநருக்கு வழங்கப்பட்டதையடுத்து, அறிக்கைகளின் பிரகாரம் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், அனுமதி பெறாத மற்றொரு இல்லத்தையும் மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது. விடயம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு மாகாணத்தில் இயங்கும் சிறுவர் இல்லங்கள் தொடர் மேற்பார்வை செய்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பதிவுசெய்யாமல் இயங்கும் அனைத்து சிறுவர் இல்லங்களையும் உடனடியாக மூடுவதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வெளி மாகாணங்களில் உள்ள சிறார்களை வரவழைத்து வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்க வைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும், அவ்வாறு தங்க வைக்கப்பட்டிருப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார். (ச) https://newuthayan.com/article/மாணவிகள்_குளிக்கும்_வீடியோக்கள்_பதிவு;_ஆறு.திருமுருகனால்_நடத்தப்படும்_சிறுவர்_இல்லம்_இழுத்துமூடல்!
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்"
இவர் நான் வசிக்கும் குறைடன் தெருவில்தான் வசிக்கின்றார்! ஆனால் தேர்தல் கேட்கும் தொகுதி வேறு இடம்! வெல்ல வாய்ப்பில்லை! எனது தொகுதியிலும் சீர்காழியைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் தமிழர் தேர்தலில் நிற்கின்றார். அவருக்குப் பிரச்சாரம் செய்ய இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்கள் சற்று முன்னர் வந்து கதவைத்தட்டினர். “நீங்க தமிழ்தானே” என்று யெகோவாக்காரர்கள் மாதிரி பேச ஆரம்பித்தனர்! நான் தமிழ்தான் ஆனால் தமிழர் என்பதற்காக வாக்குப்போடமுடியாது. என்ன பொலிஸியுடன் வந்திருக்கின்றீர்கள் என்று கேட்டு, குற்றங்களைக் குறைக்க என்ன திட்டம் என்று கேள்விமேல் கேள்வி கேட்டு அனுப்பிவிட்டேன். புலவர் posh ஆன இடத்தில் இருப்பார்😃. அங்கு பழமைவாதக் கட்சிதான் வெல்வார்கள்!😁
-
சம்பந்தர் காலமானார்
முன்னாள் பா.உ. அரியநேத்திரன் ஒரு வாட்ஸப் குழுமத்தில் பதிந்தது.. — சம்பந்தன் ஐயா தொடர்பாக அறிந்தும் அறியாத உண்மைகள்..! 1. இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் அப்போது அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் ஐயாவுக்கு தாயகத்தலைமகன் எனும் பட்டம் 2014, செப்டம்பர்,27, ம் திகதி இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் கல்லடி துளசிமண்டபத்தில் நடாத்திய வரவேற்பு வைபவத்தின் போதே அவர் தாயகத்தலைமகன் எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2. சம்பந்தன் ஐயா அவர்களுக்கு வாழும் வீரர்' விருது -2016, ஜனவரி,14, கனேடிய தமிழர் பேரவை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. இந்த விழாவில் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்ரபேன் டியோன், குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் யோன் மக்கலம், ஒன்ரேறியோ மாகாண முதலமைச்சர் கத்லீன் வின், ஒன்ரேறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவர் அன்ரியா கோர்வத், ரொறன்ரோ மாநகர சபை முதல்வர் யோன் ரோறி, மார்க்கம் நகர சபை மேயர் பிராங் ஸ்காப்பித்தி, இஸ்ரோவில் மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மூன்று மட்ட அரசுகளில் உள்ள மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 50 இற்கு மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். 👉புலிக்கொடியும் சிங்கக்கொடியும்.. ! 3. சம்பந்தன் ஐயா 2012, மே,01, ல் யாழ்ப்பாண மேதினத்தில் மேடையில் வைத்து அப்போது பிரதமராக இருந்த ரணில் வேண்டுமென திட்டமிட்டு சிங்கக்கொடியை சம்பந்தன் ஐயாவின் கையில் பிடிக்கவைத்தார்.இந்தப்படம் ஊடகபரப்பில் வந்தபோது அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அந்த கொடி ரணிலால் சம்பந்தன் ஐயாவுக்கு அவருக்கு தெரியாமல் கொடுக்கப்பட்டது என்பதே உண்மை. 4. ஆனால் சம்பந்தன் ஐயா திருகோணமலையில் 2004, அக்டோபர்,17, ல் ஒரு நிகழ்வில் அவர் விரும்பி புலிக்கொடியை ஏற்றினார் அந்த நிகழ்வில் 22, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டோம். 5. 2004,மாவீரர் நாள் 2004, நவம்பர்,27 அன்று சம்பந்தன் ஐயா தலைமையில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் மாவீரர்களுக்கு 22, உறுப்பினர்களும் தீபம் ஏற்றி நினைவுகூரப்பட்டதுடன். சம்பந்தன் ஐயா மாவீரர்கள் தொடர்பாக புகழந்தும் பேசினார் என்பதும் வரலாறு. -பா.அரியநேத்திரன்- 03/07/2024
-
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன்
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன் July 1, 2024 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கடசியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு காலமானார். இதையடுத்து, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்ற குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார். https://www.ilakku.org/பாராளுமன்ற-உறுப்பினராக-2/
-
சம்பந்தர் காலமானார்
ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் சம்பந்தன் எனும் தவிர்க்க முடியாத ஆளுமை ஜூலை 01, 2024 ஈழத் தமிழர்களின் மூத்த பெரும் தலைமை தனது 91ஆவது வயதில் இன்று தனது சுவாசத்தை நிறுத்திக் கொண்டது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாததும் மறுக்க முடியாததுமான மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஐயா அவர்கள். உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இயற்கை எய்தினார். சுதந்திரத்திற்கு பின்னரான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றிலும், உரிமை கோரிய ஈழ விடுதலைப் போராட்ட காலம் மற்றும் ஆயுத போராட்டம் மெனிக்கப்பட்டதன் பின்னரான காலத்திலும் ஈழத் தமிழ் மக்களிடத்தினின்றும் அவர் சார் அரசியலினின்றும் பிரிக்க முடியாத ஒரு ஆளுமையாக சம்பந்தன் அவர்கள் இருந்திருக்கின்றார். விமர்சனங்களுக்கு அப்பால் தன்னுடைய காலத்திற்குள் ஈழத்தமிழர்களுக்கு அரசியல்சார் தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது மாத்திரமின்றி இறுதிவரை அதே கொள்கையில் உறுதியாகவும் நின்று மடிந்து போயிருக்கின்றார். 1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் பிறந்தவர் சம்பந்தன். சம்பந்தன் யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரி மற்றும் மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வியை தொடர்ந்த சம்பந்தன் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானவர் சம்பந்தன். 1972ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆரம்பித்து பின்னர் 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவெடுத்த கட்சியின் ஊடாக 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு 15,144 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார் சம்பந்தன். 1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர். மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனையடுத்து 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட சம்பந்தனால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாமல் போனது. இதில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம், அவர் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட ஏழு சந்தர்ப்பங்களிலும் ஒரே ஒரு முறை மாத்திரமே தோல்வியை சந்தித்திருக்கின்றார். இதேபோல, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈபிஆர்எல்எப், டெலோ உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு புதிய கூட்டணி உருவாக்கப்பட்டதன் பின்னர், அந்த கூட்டமைப்புக்கு சம்பந்தன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு 18 வருடங்களின் பின்னர் மீண்டும் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். அதன் பின்னர், 2004, 2010, 2015 மற்றும் 2020ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தல்களின் தமிழரசுக் கட்சியின் ஊடாக போட்டியிட்ட சம்பந்தன் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். இவற்றுள், 2015ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் நல்லாட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் சம்பந்தன் செயற்பட்டு வந்துள்ளார். இதற்கு முன்னர், 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்திற்கு பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக கூட்டமைப்பு செயற்படுகின்றது என்று எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி விலகியிருந்தார். அத்தோடு, 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை அனுமதிக்காததால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட நேர்ந்தது. இந்த சமயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னரான தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் ஊடாக தேர்தலில் போட்டியிட்ட சம்பந்தன் தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், உடல்நலக் குறைவு காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் உள்ளிட்ட பல அரசியல்சார் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது குறைவாக இருந்த போதும், தமிழர் சார் அரசியல் நகர்வுகளை பழைய உத்வேகத்துடனேயே முன்னெடுத்து வந்தார். குறிப்பாக, தற்போதைய அரசியல் பரப்பில் இருக்கக் கூடிய மூத்த அரசியல் தலைவர்களான மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூத்த தலைவர்களாக இருக்கட்டும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட இளம் அரசியல்வாதிகளாக இருக்கட்டும் அனைவருக்குமே சம்பந்தன் மீது தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் காணப்பட்டது. இதற்கு சம்பந்தனுடைய ஆளுமையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இலங்கை, தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக உள்ளூர் மாத்திரமின்றி சர்வதேச தலைவர்களையும் சந்தித்து தமது அழுத்தங்களை கொடுப்பதும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதிலும் சம்பந்தன் எப்போதுமே சோர்வு காட்டியதில்லை. குறிப்பாக, நாடாளுமன்றத்திற்குள் இடம்பெறும் வாத விவாதங்களின் போதும், தமிழர்களுக்கு எதிராகவோ, அல்லது தமிழர்களை தூற்றும் விதமாகவோ, கீழ்நிலைப்படுத்தியோ சிங்கள அரசியல்வாதிகள் கூச்சலிடும் போது அதற்கு தக்க பதிலடி கொடுத்து சம்பந்தன் ஆற்றும் உரை பலரிடத்தில் வரவேற்பை பெற்ற ஒன்றாக பார்க்கப்பட்டிருக்கின்றது இவைகளைக் கடந்து தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களுக்குப் பின்னர் ஒரு அடைமொழியுடன் நோக்கப்பட்ட ஒரு தலைவர் என்றால் அது இராஜவரோதயம் சம்பந்தன் ஒருவரேயாவார். செல்வநாயகம் ‘தந்தை’ என்று விழிக்கப்பட்டது போன்று, சம்பந்தன் ‘ஜயா’ என்று விழிக்கப்பட்டார். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது பல தசாப்தங்களாக கேள்விக் குறியாகவே இருக்கும் நிலையில், தன்னுடைய காலத்தில் ஏதாவதொரு விடயத்தை உருப்படியாக செய்ய வேண்டும் என்பதில் சம்பந்தன் மிகத் தெளிவாகவே செயற்பட்டிருந்தார். நாடாளுமன்றத்திற்கு உள்ளிருந்து தமிழர் உரிமைக்காக சம்பந்தன் குரல் கொடுத்து வந்த போதிலும், உரிமை கோரிய ஆயுத போராட்டக் காலத்தில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டுக் காலத்தில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக சம்பந்தன் செயற்பட்டிருக்கவில்லை என வரலாறு கூறுகிறது.. குறிப்பாக, அந்த காலப் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லாத ஏனைய அமைப்புக்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ தமிழர் அரசியலில் எவ்விதமான தீர்மானிக்கும் இடமும் இருந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்தான் சம்பந்தன் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் மிகப் பெரிய பொறுப்பை ஏற்றிருக்கின்றார். தலைமைப் பொறுப்பை ஏற்ற சம்பந்தன் என்றுமே சளைத்துப் போய்விடவிலலை. அவர் முன்னால் அடுத்த தமிழர் தலைமுறை நிம்மதிப் பெருமூச்சு விட தேவையான பாதையை அமைக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு கையளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, தன்னுடைய காலத்தில் ஒரு சரியான அடித்தளத்தை இடுவதற்கான தற்துணிவும் ஆற்றலும் உள்ள தலைமைத்துவம் அவரிடம் இருந்தமை மறுக்க முடியாத ஒன்று... அவரது இழப்பும் ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. https://www.battinatham.com/2024/07/blog-post_48.html
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.