Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது உறுதி செய்யப்பட்டது ! kugenJune 25, 2024 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் ஒரு கொள்கை முடிவாக இருந்த நிலையில் திங்கட்கிழமை (25) அது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அதனை முன்னெடுத்துச் செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உயர்பீட கூட்டம் திங்கட்கிழமை (25) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று பொது வேட்பாளர் தொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள் எமக்குள் இடம்பெற்று இருந்தது. இதுவரை காலமும் கொள்கை ரீதியாக பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர் தரப்பில் நிறுத்துவது என்று இருந்த விடயம் திங்கட்கிழமை (25) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழர் தரப்பில் உள்ள சிவில் அமைப்புகளுடன் பேசி ஏனையவர்களையும் இணைத்து இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளரை நிறுத்துவதனூடாக தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தமிழ் மக்களினுடைய உரிமைகளை முழுமையாக பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிலையை அடையக்கூடிய வகையில் இந்த தேர்தல் களத்தை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் வேட்பாளரை நிறுத்துவது என்பதை தீர்மானமாக எடுத்திருக்கின்றோம் எனத் தெரிவித்தார். இன்றைய உயர் பீட சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஜனா கருணாகரன், ஈ பி ஆர் எல் எப் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன் மற்றும் துளசி, புளொட் சார்பில் முன்னாள் விவசாய அமைச்சர் சிவனேசன், ஜனநாயக தமிழ் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் இந்திரலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.battinews.com/2024/06/blog-post_490.html
  2. இப்படி ஆருடம் பார்த்துத்தான் 18ம் படியில் நிற்கவேண்டியிருக்கு😜 18 வீரப் பையன்26 86
  3. பிரிட்டன் சிறையில் இருந்து ஜூலியான் அசாஞ்ச் விடுதலை ஜூலியான் அசாஞ்ச் வாஷிங்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு ஈடாக ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்ச் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார். அவர் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜராகிறார். அங்கே அவர் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திய குற்றங்களை ஒப்புக் கொள்கிறார். யார் இந்த அசாஞ்ச்? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜுலியன் அசாஞ்ச் கடந்த 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், இராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. இந்த சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜூலியன் அசாஞ்சை கைது செய்ய கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார். கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸார், ஜூலியன் அசாஞ்சை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்ச் மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது. ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார். அவர் பிரிட்டனில் இருந்து கிளம்பியதையும் வரும் புதன்கிழமை அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராவதையும் விக்கிலீக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் விக்கிலீஸ்ட் எக்ஸ் சமூகவலைதளத்தில், “ஜூலியன் அசாஞ்சே விடுதலையானார். 1901 நாட்களுக்குப் பின்னர், ஜூன் 24 காலை பெல்மார்ஷ் அதிகபட்ச பாதுகாப்புச் சிறையிலிருந்து அவர் வெளியேறினார். இதுஉலகளாவிய பிரச்சாரத்தின் விளைவு. https://www.hindutamil.in/news/world/1269747-julian-assange-freed-from-uk-prison-after-he-strikes-plea-deal-with-us-1.html
  4. இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு adminJune 25, 2024 யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் படகொன்றில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை , அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். அதன் போது கடற்படை படகில் இருந்து , மீனவர்களின் படகுக்கு சென்ற கடற்படை வீரர் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார் அதனை அடுத்து மேலதிக கடற்படையினர் , மீனவர்களின் படகுக்கு சென்று , படகில் இருந்த 10 மீனவர்களையும் கைது செய்து கடற்படை படகில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும், அவர்களின் படகும், காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , காவல்துறையினருரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://globaltamilnews.net/2024/204643/
  5. இந்தியாவை இங்கிலாந்து வெல்ல நிறைய வாய்ப்பு இருக்கு!
  6. சுற்றுச்சூழலும் செய்யறிவும் – பா. ஶ்ரீகுமார் BookdayJune 6, 2024 செய்யறிவு தொழில்நுட்பம் தற்போது பெரும்பாலான துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் முன்பை விட வேகமாகவும் பயனளிப்பதாகவும் பரந்த அளவில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது. செய்யறிவு தொழில்நுட்பம் உயிரியல் துறைகளையும் ஒன்றிணைப்பதில் முன்னிலை வகிக்கிறது. மனித வாழ்க்கையுடன் இவற்றை ஒருங்கிணைத்து மாற்றத்தைக் கொண்டு வர முடிகிறது. இதனால் சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. செய்யறிவு என்றால் என்ன? செய்யறிவு என்பது நுண்ணறிவுகளை உருவாக்கச் செயல்முறைகளை தானியங்குபடுத்துதல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதன் வழியே மூலங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும். பயனுள்ள நுண்ணறிவுகளை வழங்குவதற்கும் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கு இயந்திரங்கள் அல்லது கணிப்பொறி சாதனங்களைப் பயன்படுத்தி செயல்படுத்த கூடிய புதிய தொழில்நுட்பம் தான் செய்யறிவு. குறிப்பிடத்தக்க சிக்கல்களைக் கணிக்கவும், அது தொடர்பான பிற நடவடிக்கைகளை அடையாளம் காணவும் உதவுகிறது. செய்யறிவின் கருத்து சமுதாயத்தில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. செய்யறிவு இன்று உடல் கோளாறுகளைக் கண்டறியவும் மருத்துவத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பல்வேறு கற்றல் தேவைகளைக் கொண்ட பயிற்சியாளர்களுக்கான கல்வித் திட்டங்களை மாற்றியமைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது. செய்யறிவானது பூமியின் சுற்றுச்சூழல் சிக்கல்களை அணுகுவதற்கு மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழலின் சீரழிவைத் தூண்டும் திறனையும் கண்டறிய உதவுகிறது. முக்கியமான சுற்றுச்சூழல் சிக்கல்களில் அதிகபட்ச நேர்மறையான தாக்கத்தை உருவாக்க செய்யறிவு அமைப்புகள் உருவாகின்றன. காலநிலை மாற்றத்தை அடையாளம் காணவும், உணவு மற்றும் நீர் பாதுகாப்பை வழங்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் மற்றும் மனித நல்வாழ்வை ஆதரிக்கவும் செய்யறிவு உதவுகிறது. செய்யறிவு சுற்றுச்சூழல் சவால்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழலில் நிகழும் மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை முன்கூட்டியே கணிக்க முடியும் மற்றும் விபத்துகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளைப் பெற முடியும். செய்யறிவு உதவியுடன், அவசர உதவிக் குழு பல சுற்றுச்சூழல் விபத்துகளை நிகழும் முன் கண்டறிய முடியும். நாம் கவனிக்கும் சூழல்கள் மற்றும் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் திறனை அது தருகிறது. செயற்கைக்கோள் உதவியுடன் பகுப்பாய்வு செய்வதோடு காடுகள் மற்றும் கடல் அலைகளைக் கவனிப்பது உள்ளிட்ட நிலப் பயன்பாட்டு வேறுபாடுகளை தானாகவே அடையாளம் காணக்கூடிய விஷயங்களில் செய்யறிவு முன்னிலைப்படுத்தப்படுகிறது. செய்யறிவானது காலநிலை மாற்ற நிலைமைகளை கணிக்கும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் வாழ்தலுக்கு தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான பரிந்துரைகளை உருவாக்குகிறது. இயற்கையை கணிக்கும்போது, துல்லியமாக கணிப்பது முற்றிலும் மாறுபட்ட மற்றும் கடினமான பணியாகும். கால நிலை மாற்றத்தில் பல்வேறு சாத்தியமான அளவுருக்கள் உள்ளன, அவை உடனடியாக அல்லது மறைமுகமாக காலநிலை மாற்றத்தை பாதிக்கின்றன, செய்யறிவுக்கு முன்பான கணிப்புகள் மற்றும் ஆய்வுகள் பல நேரங்களில் மாறுபாடு உடையதாக இருந்தது. ஆனால், தற்போது செய்யறிவு மூலம் இதன் திறன் அதிகரிக்க தொடங்கியுள்ளது பல்லுயிர் பெருக்கம் பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன, மேலும் தாவர இனங்களில் எற்படும் பல்வேறு நோய்களை கண்டறிந்து கண்காணிக்க செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் தாவரங்களின் நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும் சில நோய்களை சரி செய்யவும் உதவுகிறது. காண்டாமிருகங்கள் மற்றும் யானைகள் போன்ற வனவிலங்குகளைக் கண்காணிக்கவும், அவற்றைக் கொல்வதைத் தடுக்கும் பொருட்டு குறிப்பிட்ட விலங்குகளை சுட்டிக்காட்டவும் செய்யறிவு உதவுகிறது. ஆரோக்கியமான பெருங்கடல்கள் செய்யறிவு அமைப்புகள் பெருங்கடல்களைப் பாதுகாக்கவும், நிலையாகப் பராமரிக்கவும் பல புதுமையான நடைமுறைகளை முன்வைக்கின்றன. செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சாதனங்கள், உயிரினங்கள் மற்றும் வாழ்விடங்களைப் பாதுகாக்க உதவுவதால், ஆதாரம் மற்றும் மீன் வள நிலைத்தன்மையைக் கண்காணிப்பதற்கு உதவுவதற்காக வெவ்வேறு கடல் ஆழத்திலிருந்து தரவுகளைச் சேகரிக்கின்றன. இந்த அமைப்பு காலநிலை மாற்றங்களைக் கண்காணிக்க உதவுகிறது மற்றும் சட்டவிரோத மீன்பிடியை தடுத்து மேம்பட்ட தீர்வுகளை வழங்குகிறது. மேலும் விரிவான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க இயந்திர கற்றல் முறைகள் ஆராயப்படுகின்றன. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கப்பல்களில் இருந்து தானியங்கி அடையாள அமைப்பு (AIS) தரவுகளுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளுக்கு ஏற்ப கப்பல் வழிமுறை மாதிரிகளை செயல்படுத்துவதற்கான ஆரம்ப முயற்சிகள் தொடங்கியுள்ளன. நீர் பாதுகாப்பு நீர் மனித வாழ்வின் இன்றியமையாதது நீர்த்தேக்கங்களின் செயல்திறன் மற்றும் நீர் பயன்பாட்டை உருவகப்படுத்த நிபுணர்களுக்கு செய்யறிவு அமைப்புகள் உதவுகின்றன. செய்யறிவு ஸ்மார்ட் மீட்டர் அமைப்பு அதன் நீர் அடித்தளத்தை சரிசெய்வதற்காக கசிவு குழாய்களின் குறிப்பிட்ட இடங்களை அடையாளம் காண உதவுகிறது. இது நீர் அழுத்தம் உணரிகள் மற்றும் வடிகட்டி அமைப்புகளிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்யும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் நீர் இழப்பைக் அதிகளவிற்கு கட்டுப்படுத்துகிறது. மேலும், ஒட்டுமொத்த நீர் மேலாண்மை செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. செய்யறிவானது காலநிலை மாற்றங்களை அடையாளம் காணும் திறன் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் அபாயகரமான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. செய்யறிவு மூலம் பல தீர்வுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன, எதிர்கால திட்டமிடலை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. நாம் அளவிடாததை நம்மால் நிர்வகிக்க முடியாது என்பது பழைய வணிகப் பழமொழி. காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் பல்லுயிர் இழப்பு, மாசுபாடு மற்றும் கழிவுகள் ஆகிய மூன்று நெருக்கடிகளை உலகம் எதிர்கொள்வதால் இது முன்னெப்போதையும் விட இன்று பெரும் சவாலாக உள்ளது. தற்போது அதிக காலநிலை தரவு கிடைக்கிறது, ஆனால் அந்த தரவு எவ்வாறு அணுகப்படுகிறது, விளக்கப்படுகிறது மற்றும் செயல்படுகிறது என்பதை ஒருங்கிணைக்கும் ஒரு தொழில்நுட்பமாகவும் செய்யறிவு செயல்படுகிறது. பருவநிலை மாற்றம் வெப்பநிலை அதிகரிப்பு, கடல் மட்ட உயர்வு, அதீத மழைப்பொழிவு நிகழ்வுகள், தீவிர வானிலை நிகழ்வுகள், ஆர்க்டிக்கில் கடல் பனிப்பாறைகள் குறைதல் மற்றும் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயு செறிவுகள் உயர்வு ஆகியவை காலநிலை மாற்றத்தின் சில நன்கு அறியப்பட்ட குறிகாட்டிகளாகும். உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகளை விவரிக்கும் பெரிய அளவிலான அறிவியல் சான்றுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான சான்றுகள் உள்ளூர் அல்லது ஒரு பகுதியில் இருக்கலாம், அதேசமயம் விளைவுகள் மிகப் பெரிய அளவில் காணப்படுகின்றன; உலகம் ஒரு கிராமம் என்ற அடிப்படையிலும் ஒருங்கிணைந்த உலக பொருளாதார வளர்ச்சியும் இதன் பின்னணியில் உள்ளது. காலநிலை மாற்றம் முதன்மையாக மனிதன் சார்ந்ததா அல்லது காலநிலையின் இயற்கை மாறுபாடா அல்லது இரண்டின் கலவையா என்ற கேள்விகள் இன்னும் உள்ளன, விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், விவசாயிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பலரிடையே குறிப்பிடத்தக்க ஒருமித்த கருத்து இதில் நிலவுகிறது. இருப்பினும், காலநிலை மாற்றத்திற்கான மனிதனின் பங்களிப்பை நாம் குறைக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டுகோள் விடுத்து வருகிறோம். காலநிலை மாற்றம் பற்றிய அறிவியல் புரிதல் சிக்கலானது, அதன் விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பலவகையானவை, முக்கியமாக அவை நேரம் மற்றும் நிலப்பரப்பை சார்ந்தவை. முக்கிய பகுதிகள்/துறைகளைக் கண்டறிவது கடினம் என்றாலும், சமூகம் மற்றும் பொருளாதாரம், அதாவது விவசாயம், கார்பன் பட்ஜெட், கணினி அறிவியல், தரவு அறிவியல், ஆற்றல், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நீர் வளங்கள் ஆகியவற்றுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளன. செய்யறிவு பயன்பாடு காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பங்களிப்பை தருகிறது. தற்போது வானிலை, துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளைக் கண்காணிக்க மற்றும் மாசுபாட்டைக் கண்டறியும் கருவிகளில் செய்யறிவு பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்தை மேம்படுத்தவும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் செய்யறிவு பயன்படுத்தப்படலாம் என்று உலகப் பொருளாதார அமைப்பு கூறுகிறது. செய்யறிவு சக்தியானது பெரிய அளவிலான தரவுகளைச் செயலாக்குவதற்கும், வெவ்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் தக்க முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. உலகின் கடினமான சவால்களில் ஒன்றான காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட செய்யறிவு திறன் உதவுகிறது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி சுமார் 4 பில்லியன் மக்கள் (400 கோடி) ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்கின்றனர் . ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, வயிற்றுப்போக்கு மற்றும் வெப்ப அலையால் மட்டும் 2030 மற்றும் 2050 ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுக்கு 2,50,000 கூடுதல் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தடுப்ப பதற்கு செய்யறிவு உதவும் . இங்கே,காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க செய்யறிவு உதவும் முறைகள் குறித்து பார்ப்போம். உருகும் பனிப்பாறைகளை கண்டறிவது: பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்களை மனிதனால் செய்யக்கூடியதை விட, பத்தாயிரம் மடங்கு வேகமாக அளவிட செய்யறிவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் வளிமண்டலமானது அதிக வெப்பமடைகிறது. இது, பனிப்பாறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. செய்யறிவு பயன்படுத்துவதன் மூலம் பனிப்பாறைகள் எவ்வளவு தூரம் உருகும் அது எவ்வளவு நீரை வெளியிடும் என்ற கணக்குகளை எளிதாக கண்டறிய முடியும். இதனால் ஏற்படப் போகும் பாதிப்புகளுக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு செய்யறிவு தொழில்நுட்பம் உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செய்யறிவானது அண்டார்டிக்கில் உள்ள பெரிய பனிப்பாறைகளை ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கில் செயற்கைக்கோள் படங்களில் வரைபடமாக்க முடியும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தப் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டால் இது நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும், மேலும் மேகங்கள் எது பனிப்பாறைகள் எது என்பதை அடையாளம் காணுவதில் மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும். அதே நேரத்தில் இந்த செய்யறிவை பயன்படுத்தி மிகத் துல்லியமாக பணிப்பாறைகளை கண்டறிந்து தெரிவிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்களை செய்யறிவு மூலம் கண்காணித்து வருகின்றனர். காடழிப்பு கண்டறியும் செய்யறிவு: செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சூழலியல் நிபுணத்துவம் ஆகியவை காலநிலை நெருக்கடியில் காடழிப்பின் தாக்கத்தை வரைபடமாக்க செய்யறிவு திறன் பயன்படுத்தப்படுகிறது. ஸ்காட்லாந்தின் எடின்பரோவை தளமாகக் கொண்ட ‘ஸ்பேஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேலை செய்வதாகவும், செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி விண்வெளியில் இருந்து 1 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை வரைபடமாக்கியுள்ளதாகவும் கூறுகிறது. காடழிப்பு விகிதம் மற்றும் காட்டில் எவ்வளவு கரியமில வாயு சேமிக்கப்படுகிறது போன்ற அளவீடுகளை நிறுவனத்தின் தொழில்நுட்பம் தொலைவிலிருந்து அளவிடுகிறது. இதன் மூலம் காடழிப்பை கண்காணிப்பதுடன் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எளிதில் எடுப்பதற்கும் உதவுகிறது. ஆப்பிரிக்காவில், புருண்டி, சாட் மற்றும் சூடானில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உதவ ஐக்கிய நாடுகளின் திட்டத்தில் செய்யறிவு பயன்படுத்தப்படுகிறது . வானிலை முறைகளை கணிக்க செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது, எனவே அங்குள்ள சமூகங்களும், அதிகாரிகளும் காலநிலை மாற்றத்தை எவ்வாறு மாற்றியமைப்பது மற்றும் அதன் தாக்கத்தை எவ்வாறு குறைப்பது என்பதை சிறப்பாக திட்டமிட உதவுகிறது. தூய்மையான எரிசக்தியை பயன்படுத்துவதற்கான அணுகுமுறையை மேம்படுத்துதல், முறையான கழிவு மேலாண்மை அமைப்புகளை செயல்படுத்துதல் மற்றும் மீண்டும் காடுகளை வளர்ப்பதை ஊக்குவித்தல் ஆகியவை செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது சாத்தியப்படுகிறது. அதிக கழிவுகளை மறுசுழற்சி செய்ய செய்யறிவு பயன்படுத்துதல்: மற்றொரு செய்யறிவு திறனானது கழிவு மேலாண்மையை திறமையானதாக்குவதன் மூலம் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவுகிறது. மீத்தேன், உலகளாவிய பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வுகளில் 16% காரணமாகும் என்று அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட Greyparrot என்ற மென்பொருள் நிறுவனமானது, கழிவுப் பொருட்களை மீட்டெடுக்கவும் மறுசுழற்சி செய்யவும் உதவும் கழிவு செயலாக்கம் மற்றும் மறுசுழற்சி வசதிகளை பகுப்பாய்வு செய்யும் செய்யறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த செய்யறிவைக் கொண்டு இந்த நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் 67 கழிவு வகைகளில் 32 பில்லியன் கழிவுப் பொருட்களைக் கண்காணித்துள்ளது , மேலும் சராசரியாக 86 டன் பொருட்களை மறுசுழற்சி முறையில் மீட்டெடுக்க முடியும் என்று கூறுகிறது. கடலின் மாசுபாடை குறைக்க உதவும் செய்யறிவு: நெதர்லாந்தில் The Ocean Cleanup என்ற சுற்றுச்சூழல் அமைப்பு , கடலில் இருந்து பிளாஸ்டிக் மாசுபாட்டை அகற்ற செய்யறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. கழிவு பொருட்களை கண்டறியும் செய்யறிவு, தொலைதூர இடங்களில் கடல் குப்பைகளின் விரிவான வரைபடங்களை உருவாக்க நிறுவனத்திற்கு உதவுகிறது . இதனால் கடல் கழிவுகளை எளிதில் சேகரித்து அகற்ற முடிகிறது. பிளாஸ்டிக் மாசுபாடு, பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதன் மூலமும் இயற்கைக்கு தீங்கு விளைவிப்பதன் மூலமும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது. காலநிலை பேரழிவுகளை சமாளிக்க உதவும் செய்யறிவு: பிரேசிலில் உள்ள சாவோ பாலோவில், சிப்ரெமோ என்ற நிறுவனம், காலநிலை பேரழிவுகள் எங்கு, எப்போது ஏற்படும், எந்த வகையான காலநிலை பேரழிவுகள் என்று கணிக்க செய்யறிவை பயன்படுத்துகிறது. காலநிலை மாற்றம் மற்றும் அதனுடன் சமூகங்களில் வளர்ந்து வரும் சவால்களுக்கு தொழில்துறையும், அரசாங்கங்களும் சிறப்பாகத் தயாராக உதவுவதே இதன் நோக்கமாகும். இந்த நிறுவனம் காப்பீடு, ஆற்றல், தளவாடங்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட தொழில்களில் வேலை செய்கிறது, அங்கு பேரழிவு நிலைமைகள் மற்றும் காற்றின் தரம் போன்ற காரணிகளின் பகுப்பாய்வு நிகழ்வுகளை தாமதப்படுத்துவது அல்லது இடைநிறுத்துவது பற்றிய முடிவுகளைத் இந்த செய்யறிவு தெரிவிக்கும். கூகுள் டீப் மைண்ட்: கூகுளின் செய்யறிவு ஆராய்ச்சி ஆய்வகமான கூகுள் டீப் மைண்ட், பல பகுதிகளில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட செய்யறிவை பயன்படுத்துவதாகக் கூறுகிறது. காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய செய்யறிவு தீர்வுகளை மேம்படுத்தும் தரவுத்தொகுப்புகளின் முழுமையான விருப்பப்பட்டியலை உருவாக்குவது இதில் அடங்கும். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இயந்திரக் கற்றலில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான Climate Change AI உடன் Google DeepMind இதைச் செய்து வருகிறது . மற்ற கூகுள் செய்யறிவு கருவிகள் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதிலும் காற்றாலை ஆற்றலின் மதிப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகின்றன. கரியமில வாயுவை அகற்ற செய்யறிவு: உலோகம் மற்றும் சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களில் உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளில் கரியமில வாயுவை அகற்ற செய்யறிவு பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவில், கலிபோர்னியாவில் உள்ள Eugenie.ai , இயந்திரங்கள் மற்றும் செயல்முறைகளின் தரவுகளுடன் செயற்கைக்கோள் படங்களை ஒருங்கிணைக்கும் உமிழ்வு-கண்காணிப்பு தளத்தை உருவாக்கியுள்ளது. செய்யறிவு இந்தத் தரவை பகுப்பாய்வு செய்து, நிறுவனங்கள் தங்கள் உமிழ்வை 20-30% வரை கண்காணிக்க, கண்டறிய மற்றும் குறைக்க உதவுகிறது . உலகளவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் சுமார் 30% தொழில் துறைகள் உருவாக்குகின்றன. அவற்றைக் கண்காணிக்க இந்த செய்யறிவு பயன்படுகிறது. காடுகளை உருவாக்கும் செய்யறிவு: பிரேசிலின் கடலோர நகரமான ரியோ டி ஜெனிரோவைச் சுற்றியுள்ள மலைகளில் மீண்டும் காடுகளை வளர்ப்பதற்காக செய்யறிவால் இயங்கும் கணினிகள் பிரேசிலில் ட்ரோன்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. கணினிகள் இலக்குகள் மற்றும் தூவ வேண்டிய விதைகளின் எண்ணிக்கையை வரையறுக்கின்றன. ஜனவரி 2024 இல் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, ரியோவின் சிட்டி ஹால் மற்றும் ஸ்டார்ட்-அப் மோர்ஃபோ ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும்.மேலும், அணுக முடியாத பகுதிகளில் விதைகளை விதைத்து மரம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு ட்ரோன் ஒரு நிமிடத்திற்கு 180 விதைகளை சிதறடிக்க முடியும், இது பாரம்பரிய காடுகளை வளர்ப்பதற்கு மனித கைகளை பயன்படுத்துவதை விட 100 மடங்கு வேகமானது என்று கூறப்படுகிறது. எழுதியவர் பா. ஶ்ரீகுமார் பத்திரிக்கையாளர் & ஊடகவியலாளர், எழுத்தாளர், கவிஞர், அறிவியல் தகவல் தொடர்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர் . மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், கதை, கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருபவர். அறிவியல் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களை தமிழ் மொழியில் பரவலாக எழுதி வருபவர், சமூக அரசியல், பொருளாதார கட்டுரைகளையும் ஆங்கில நாளிதழ் மற்றும் மின்னணு ஊடகங்களில் எழுதி வருபவர். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார். கிழக்கு கடற்கரைச் சாலை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் அமைய வேண்டும் என்று போராடியவர். டூ பாண்ட் நிறுவனத்தால் ஏற்படும் சூழலியல் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்தவர். இறால் வளர்ப்பு எப்படி மண் மற்றும் நீர் வளத்தை பாதிக்கும் என்ற ஆய்வில் பங்கேற்றவர். பூவுலகின் நண்பர்கள் நெடுஞ்செழியனுடன் இணைந்து ஆரம்ப காலத்தில் சூழலியல் குறித்த பல்வேறு கருத்து தாள்கள் உருவாக்கத்தில் பங்கேற்றவர். வானியலில் மிகுந்த ஆர்வமுடையவர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயன்ஸ் சொசைட்டி உருவாக காரணமானவர். ஹலோ வால்நட்சத்திரம், பால்வெளியில் ஒளிரும் வால்நட்சத்திரங்கள், ஜீன் ரகசியம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளை அதிகம் எழுதி வருகிறார். அறிவியல் பலகை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். தமிழில் அறிவியலை கொண்டு செல்லும் பணியில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். அறிவியல் பலகை மாத இதழின் – இதழலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார். https://bookday.in/article-by-srikumar-balakrishnan/
  7. சுவிஸ் தொலைக்காட்சியில் போலி துவாரகா sudumanal கடந்த வாரம் சுவிஸ் தொலைக்காட்சி போலித் துவாரகா விவகாரம் பற்றிய செய்தியை (Rundschau programme) ஓர் ஆவணப்பட வடிவில் வெளியிட்டது. துவாரகா என்ற பெயரோடு 2023 மாவீரர்தின உரை ஆற்றியிருந்த பெண்ணின் படத்தை வெளியிட்டு, அவர் ஒரு ஏமாற்றுக்காரியாகவும் அவரை நம்பி தாம் பணத்தை பறிகொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழர்கள் சிலர் கூறியதை வெளிப்படுத்தியது. அதில் வரும் ஒரு தமிழர் தான் 380’000 பிராங்குகளை அவருக்கு கொடுத்ததாகவும் இன்னொருவர் தான் 70’000 பிராங்குகளை கொடுத்ததாகவும் சொல்கிறார். முதலாமவர் அந்த இலட்சக்கணக்கான பணத்தை ஒரு சாதாரண தொழிலாளியாக நேர்மையாக உழைத்து சேமிப்பது என்பது அவரது வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் சாத்தியப்பட முடியாத ஒன்று. அத் தொகை அவர் தமிழர்களிடம் சேர்த்த பணமாக இருக்கவே சாத்தியம் உண்டு. நிதி சேகரித்து பிடிபடுகிற எல்லா பொறுப்பாளர்களும் தப்பித்தலுக்காக எல்லாவற்றையும் அந்த போலித் துவாரகா மீது கட்டிவிட எத்தனிக்கிறார்களா அல்லது அந்தப் பெண் இந்தப் பண மோசடியில் ஈடுபட்டாரா என்பது வெளிச்சத்தில் இல்லை. 70’000 பிராங்குகளை கொடுத்த நபர் இப்போ அதிகாலையில் செய்திப் பத்திரிகைகளை வீடுவீடாக போடுகிற வேலையை செய்துவிட்டு, பின்னர் தனது வேலைத்தளத்துக்கு போய் வேலைசெய்து தான் பெற்ற கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு உள்ளானதாக சொல்கிறார். அவரது அதிகாலை பத்திரிகை விநியோக கடமையின்போதே அந்த வீதியில் வைத்தே அவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. இதேபோல் இன்னொரு பெண்ணும் தான் 68’000 பிராங்கினை வங்கியில் பெற்று கொடுத்ததாக சொல்கிறார். போலித் துவாரகா தனது பிள்ளை மாற்றுத்திறனாளியாக இருப்பதாக சொல்லி பணம் கேட்டதாகவும் தான் கொடுத்ததாகவும் கூறுகிறார். இப்படி வங்கிகளில் பல ஆயிரக் கணக்கில் பலர் கடனெடுத்துக் கொடுத்து தமிழீழத்துக்கான தமது கடமையை செய்வதாக நினைத்துக் கொண்டது உண்மை. அவர்களில் பலரும் தமது கடன்களை அடைக்க இன்றுவரை மிகக் கடுமையாக வேலைசெய்கிறார்கள். அதிகாலையில் பனி குளிர் எல்லாம் தாண்டி நித்திரையிழந்து வீடுவீடாக செய்திப் பத்திரிகைகள் விநியோகித்துவிட்டு, பின் தமது வேலைத்தளத்துக்குச் சென்று நூறு வீத வேலை செய்கிறார்கள். இன்னும் சிலரோ இந்த இரு வேலைகளோடும் வாரத்தில் கிடைக்கும் மிச்ச இரு நாள் லீவுக்கும் முன்றாவது வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துள் விடப்பட்டிருக்கிறார்கள். அதனால் உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக மாறிவிடும் நிலையும் இருக்கிறது. குடும்பங்களில் பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம் இப்படி உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களின் பின்னால் ஒளிந்துகொண்டு இந்தப் பணமோசடியில் ஈடுபட்டவர்களும் பாதுகாப்பான நிலை எடுக்க எத்தனிக்கிறார்களா என்ற கேள்வி மிக முக்கியமானது. இவர்கள் சொத்துக்களை மட்டுமல்ல மிகை ஆடம்பரமாக பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவற்றை நடத்துவது மற்றும் விலையுயர்ந்த கார்கள் என பவுசு காட்டி அலைய, கடனெடுத்து பணத்தை பெருமளவில் கொடுத்தவர்கள் விடுதலையை நம்பிய ‘குற்றத்திற்காக’ தமது வாழ்க்கையை வேலைக்கு ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள் யார். இதில் போலித் துவாரகாவின் பாத்திரம் என்ன என்பது பற்றியெல்லாம் தெரியாது. அவரையும் ஊடகவியலாளர் சந்தித்து கேட்கிறார். அவர் தன்மீது பழி போடப்படுவதாகவும் தான் ஒருபோதும் நிதிச் சேகரிப்பில் ஈடுபடவில்லை எனவும் மறுக்கிறார். பணத்தை கையாண்டவர்கள் இந்த பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த முன்வராமல் எல்லாவற்றையும் அந்தப் பெண்ணின் தலையில் கட்டிவிட்டு தப்பிக்க முனைகிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் யாராவது நீதிமன்றம் போக நேர்ந்தால் பல உண்மைகள் கண்டறியப்பட வாய்ப்பு ஏற்படும். இந்த விவகாரம் சுவிஸ் பொலிசாரால் கையாளப்படும் பட்சத்தில் மாவீரர் உரையை தயாரித்ததிலிருந்து அதை ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு என தொழில்நுட்ப வேலைகளில் ஈடுபட்டவர்கள் ஊடாக இதன் சூத்திரதாரியாக நின்றவர்கள் வரை கண்டறியப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளராக இருந்தவர் அப்***. அவர் எதிர்பார்த்திராத வகையில் ஊடகவியலாளர் அவரை தேடிப்போய்ச் சந்தித்து சில கேள்விகளைக் கேட்கிறார். “மாவீரர் உரைக் காணொளியில் வந்தது பிரபாகரனின் மகள் தான். நான் தொலைபேசியில் அவருடன் உரையாடி இருக்கிறேன். 14 வருடமாக எந்த அரசியல் தீர்வும் வராததால் இனி என்ன செய்யலாம்” என தாம் உரையாடியதாகவும் சொல்கிறார். ஆனால் தான் பணச் சேகரிப்பில் ஈடுபடவில்லை என்கிறார். தொலைக்காட்சிக்குக் கசிந்த அப்***வின் தொலைபேசி உரையாடல் ஒன்று காட்டப்படுகிறது. அதில் அவர் “எமது நாட்டை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு பணக் கட்டுமானம் தேவை. அரசியல் ரீதியில் நாடுகளின் ஆதரவுடன் அழுத்தத்தைக் கொடுத்து நாட்டைப் பிரிக்கலாம்” என யாருடனோ உரையாடுகிறார். இதுகுறித்து நேரில் தொலைக்காட்சி நிருபர் கேட்டபோது அப்***வோ “அது நானில்லை” என மறுக்கிறார். தான் யாரையும் நிதிப் பங்களிப்பு கேட்கவில்லை என (ச்ச்)சொல்கிறார்.. இந்த விவகாரம் தொலைக்காட்சிவரை வரும் என்று அவர்கள் எதிர்பாராமல் இருந்திருத்தல் கூடும். வெளியே சொல்லத் தகுந்த எல்லைவரைதான் இச் செய்தியை சுவிஸ் தொலைக்காட்சி பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறது என ஊகிக்கலாம். தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என தெரியாது. பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் அவரது மீள் வருகைக்கும் குடும்பத்துக்கும் என அந்தப் பெண் பணம் சேகரித்ததாகச் சொல்கிறது தொலைக்காட்சி. 380’000 பணத்தை கொடுத்து தான் ஏமாந்ததாகச் சொல்லும் நபர் அந்தப் பெண் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகச் சொன்னதை தான் நம்பி பணத்தை கொடுத்ததாகக் கூறுகிறார். 68’000 பிராங்கைக் கொடுத்த அந்த நபர் (பெண்) தனது பிள்ளை சுகவீனமாக இருப்பதாக (போலித்) துவாரகா உதவி கேட்டதால் கொடுத்ததாகச் சொல்கிறார். இவர்களுக்கு வெளியே இன்னும் பலர் இருக்கச் சாத்தியம் இருக்கிறது. இவ்வாறான பெருந்தொகைப் பண விடயத்தில் இந்த “கேட்டார்… கொடுத்தேன்” என்றவாறான காரணங்கள் அவர்கள் சொல்வதை உண்மையென உறுதிப்படுத்துவதை விடவும் அவர்கள் சொல்லாமல் தவிர்ப்பதை அல்லது மறைப்பதையே அதிகம் வெளிப்படுத்தும் வலுக்கொண்டனவாக இருக்கின்றன. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கதைவிடல் (போலித்) துவாரகாவிலிருந்து தொடங்கியதல்ல. 2009 இலிருந்தே உருவாக்கப்பட்டு உலவவிடப்பட்ட கதையாடல் அது. பட்டையடி அடித்து உழைத்த பணத்தையெல்லாம் தமிழீழ மீட்புப் போருக்கான தத்தமது பங்களிப்பாகக் கொடுத்தனர் பல தமிழர்கள். அவர்களின் பணத்தை மில்லியன் கணக்காக சுருட்டி, 2009 புலிகளின் வீழ்ச்சியுடன் தத்தமதாக அபகரித்த பொறுப்பாளர்கள் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க முன்வந்தால் தனக்குத் தானே குழிவெட்டுவதாக அமையும். இந்த கள்ள மௌனமும் கூட்டுக் களவாணித்தனம் அவர்களை பிணைத்து வைத்திருக்கிறது. புலிகளின் வீழ்ச்சிக்கு புலத்துப் புலிகளின் நடவடிக்கைகள் மட்டுமல்ல புலம்பெயர் புலிகளின் பீடமும் அரசியல் ரீதியில் பெரும் பங்கு ஆற்றியது. நந்திக் கடலுக்கு அமெரிக்கக் கப்பல் வந்து மீட்கும் என தலைமைக்கு நம்பிக்கை ஊட்டுமளவுக்கு, அதை நம்புமளவுக்கு விடுதலை அரசியலானது புலத்திலும் புகலிடத்திலும் பலவீனமாக இருந்தது. நிதிப் பொறுப்பாளர்கள் 2009 இல் அவசரகால நிதி என்ற பேரில் பெருநிதியை சேர்த்தனர். அதுக்கு என்னவானது எனத் தெரியாது. ஒருவகையில் இந்தக் கும்பல் அந்தப் பணத்தை தமதாக்கிக்கிக் கொள்ள புலிகளின் அழிவை கள்ளமாக விரும்பினார்கள் என்ற கடுமையான விமர்சனத்தை இவர்கள் குறித்து ஒருவர் முன்வைக்க முடியும். இந்த புலம்பெயர் புலிகளின் பணம் சேர்க்கும் வழிவகைகள், கையாடல்கள் என்பன குற்றத்தன்மை வாய்ந்ததாக அமைந்தது என மதிப்பிடலாம். இந்தக் குற்றத்தன்மையானது சர்வதேச நாடுகள் தமது நலன்களின் அடிப்படையில் எமது போராட்டம் குறித்த எடுத்த நிலைப்பாட்டில் அவர்களது சூழ்ச்சிகரமான பூகோள அரசியலை மறைக்க உதவியது. அதாவது புலிகளின் ஆயுதப் போராட்டம் குற்றத்தன்மை கொண்டதாக சர்வதேச ரீதியில் ஆக்கப்பட்டதற்கு புலிகளின் குற்றத்தன்மை வாய்ந்த நடவடிக்கைகள் சாதகமாக அமைந்தது. எண்ணிலடங்கா மக்களினதும் போராளிகளினதும் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் பங்களிப்புகளும் கொண்டு போராட்டம் வரலாறாகிக் கொண்டிருந்த அதேநேரம், புலிகளின் தோற்றத்திலிருந்து அதன் அழிவுவரை அவர்கள் மேற்கொண்ட தனிநபர் அழிப்பு, கூட்டுக் கொலை, மாற்று இயக்க அழிப்பு, உட்கொலை, சக இனங்கள் மீதான தாக்குதல்கள் கொலைகள், மாற்றுக் கருத்தின்மீதான அராஜகம் மற்றும் ரஜீவ்காந்தி, பிரேமதாச இருவரையும் கொன்றமை என அவர்களது நடவடிக்கைகள் குற்றத்தன்மை கொண்டதாகவும் வளர்ந்துகொண்டுமிருந்தன. இந்த குற்றத்தன்மைப் போக்கின் நீட்சியாக புகலிட புலிகளின் குற்றத்தன்மையான செயல்களை நோக்க முடியும். அது புகலிடத்தில் மாபியாத்தனமான நடவடிக்கைகளுக்கும், எவ்வழியிலாவது பணம் சேர்க்கும் முனைப்புகளுக்கும் இட்டுச் சென்றது. 2009 புலிகளின் அழிவின் பின்னரும் தொடர்ந்து பணம் கறக்கும் வேலைக்காகவும், கொள்ளையடித்த பணத்தை எவரும் கணக்குக் கேட்டுவிடக்கூடிய கொதிநிலையை படிப்படியாக இல்லாமலாக்கும் கள்ள நோக்குடனும் (பிரபாகரன் கொலையுண்டது தெரிந்தும்) “தலைவர் உயிரோடு இருக்கிறார்” எனக்கூறி அவரை மாவீரராகக்கூட அறிவிக்காமல் இழுத்தடிக்குமளவுக்கு இவர்களின் குற்றத்தன்மையான மனநிலை இவர்களை வழிநடத்தியிருக்கிறது. இதற்கு தமிழக தமிழின உணர்வாளர்கள் சிலர் பிழைப்புவாத நோக்கில் துணைபோயினர். ஒருபுறத்தில் விடுதலை அரசியல் செயற்பாடுகள் நிகழ்த்தப்பட்ட அதே நேரம், இன்னொரு புறத்தில் கிரிமினல்தன்மை கொண்ட போக்கும் அதன் தொடர் வளர்ச்சியும், முடிவும் போராட்டக் குணத்தை முழுமையாகச் சிதைத்து, நம்பிக்கையைச் சிதைத்து, அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக ஈழத் தமிழ் மக்களை ஆக்கியிருக்கிறது. 23062024 Thanks: SRF Link: https://www.srf.ch/play/tv/rundschau/video/spendenaffaere-um-tamil-tigers-lebt-der-anfuehrer-noch?urn=urn:srf:video:ff1fd8c5-b11e-47cf-9b1f-96a1828a73b0 (இச் செய்தியில் 33 வது நிமிடத்தின்பின் குறித்த காணொளி வருகிறது. https://sudumanal.com/2024/06/23/சுவிஸ்-தொலைக்காட்சியில்/#more-6094
  8. ஜனாதிபதி தேர்தலும் தமிழர் அரசியலும் June 24, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஏற்கெனவே குழம்பிப்போயிருந்த இலங்கை தமிழர் அரசியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழர்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடு்க்கவேண்டும் என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகள் காரணமாக மேலும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்படுவதில் நாட்டம் காட்டும் என்றோ அல்லது போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலப்பகுதியில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் உட்பட தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்கு ஒன்றிணைந்த நிலைப்பாடுகளுக்கு வரும் என்றோ எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை. சாத்தியமான அளவுக்கு முரண்பட்டு நிற்பதற்கே தமிழ்க் கட்சிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற யோசனை அண்மைக் காலமாக தமிழர் அரசியலை ஆக்கிரமித்து நிற்கிறது. அது தொடர்பில் சில தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இப்போது காணவில்லை. பொதுவேட்பாளர் தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் மாத்திரம் அல்ல, ஒவ்வொரு கட்சிக்குள்ளும் கூட முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தும் யோசனைக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக ‘மக்கள் மனு’ என்ற சிவில் சமூக அமைப்பே முதலில் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தது. தற்போது அந்த முயற்சியை ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ என்ற புதியதொரு சிவில் சமூக அமைப்பு முன்னெடுக்கிறது. பொதுவேட்பாளர் தொடர்பில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களின் பரந்தளவிலான ஆதரவை பெறமுடியுமாக இருந்தால் தமிழ்க் கட்சிகளை வழிக்கு கொண்டுவரலாம் என்று தமிழ் மக்கள் பொதுச்சபையின் முக்கியஸ்தர்கள் நம்புகிறார்கள் என்று தெரிகிறது. தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான சிவில் சமூக அமைப்புக்கள் ஒருபோதும் இருந்ததில்லை. அரசியல்வாதிகள் மீது நெருக்குதலைப் பிரயோகித்து அவர்களை ஒழுங்காக செயற்பட வைப்பதற்கு சிவில் சமூக அமைப்பை கட்டமைக்கும் முயற்சிகள் வரவேற்கப்படக்கூடியதே. அவற்றின் இலக்கு போரின் முடிவுக்கு பின்னரான காலப் பகுதியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரங்களுக்கும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் இன்றைய வாழ்வியல் யதார்த்தங்களுக்கும் பொருத்தமானவையாக இருப்பது அவசியம். வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களின் பின்னால் தமிழ் மக்களை அணிதிரட்ட முயற்சிப்பதில் அர்த்தமில்லை. தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தற்போது தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தென்னிலங்கைக்கும் உலகிற்கும் வெளிக் காட்டுவதற்காக ஜனாதிபதி தேர்தலை வடக்கிலும் கிழக்கிலும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றும் நோக்கிலேயே தமிழ்ப் பொதுவேட்பாளர் யோசனை முன்வைக்கப்பட்டது. தமிழ்க்கட்சிகள் உறுதியான முடிவை எடுக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் மக்கள் பொதுச்சபை தமிழ் மக்களின் இறைமை, பாரம்பரிய தாயகம் மற்றும் மக்களை ஐக்கியப்படுத்தி ஒரு தேசமாகக் கட்டியெழுப்புதல் என்று சில கோட்பாடுகளை முன்வைத்து பிரசாரங்களை முன்னெடுத்துவருகிறது. பொதுவேட்பாளர் யோசனையை இவர்கள் தமிழ்த்தேசியத்துடன் இறுக்கமாக அடையாளப்படுத்தி பிரசாரங்களை செய்வதால் தமிழ் அரசியல்வாதிகள் பலரும் தங்களது எதிர்கால அரசியல் வாய்ப்புக்களை மனதிற்கொண்டு ஆதரவான கருத்துக்களை அவ்வப்போது கூறுவதற்கும் தவறுவதில்லை. பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி இறுதியில் சாத்தியமில்லாமல் போகும் என்று நம்புகின்ற சில அரசியல்வாதிகள் அதற்கு ஆதரவாகப் பேசுவதன் மூலம் தங்களை மிகவும் சாதுரியமானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள் என்பதுவும் உண்மை. பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சியின் பின்னணியில் இருக்கக்கூடிய உள்நாட்டு மற்றும் வெளிச்சக்திகள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகின்றன. தென்னிலங்கையின் குறிப்பிட்ட ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்கான ஒரு தந்திரோபாயமே இது என்று ஆரம்பம் முதலிருந்தே சந்தேகிக்கப்பட்டது. தமிழ்த்தேசிய அரசியலின் சமகால மையமாக பொதுவேட்பாளரை காட்சிப்படுத்துவதில் தமிழ் மக்கள் பொதுச்சபை முனைப்புக் காட்டுகிறது. ஆனால் அவர்கள் வெறுமனே கோட்பாடுகளைப் பற்றிப் பேசுகிறார்களே தவிர, தெளிவான அரசியல் கோரிக்கைகளை இன்னமும் முன்வைக்கவில்லை. தமிழ் மக்கள் இன்று வேண்டிநிற்பது என்ன என்பதை ஜனாதிபதி தேர்தலின் மூலம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கும் உலகிற்கும் வெளிக்காட்டிவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட சக்திகள் தமிழ் மக்களுக்கு முன்கூட்டியே கூறுவதற்கு கடமைப்பட்டிருக்கின்றன. வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பிறகு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் 1977 ஜூலை பொதுத்தேர்தலை தனித்தமிழ் நாட்டுக் கோரிக்கைக்கு ஆணையைப் பெறுவதற்கான ஒரு வாக்கெடுப்பாகவே வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் முன்கொண்டு சென்றார்கள். அந்த தேர்தலில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற அந்த தலைவர்களிடம் அடுத்து என்ன செய்வது என்ற எந்த திட்டமும் இருக்கவில்லை. அதன் விளைவாக தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலம் அண்மைக்கால வரலாறு. அதேபோன்ற வரலாறு மீண்டும் திரும்பிவரக்கூடிய ஆபத்தை உணர்ந்தவர்களாக பொதுவேட்பாளர் யோசனைக்கு ஆதரவாகப் பேசும் அரசியல்வாதிகளும் புதிய சிவில் சமூக முக்கியஸ்தர்களும் மனதிற்கொள்ள வேண்டும். அதேவேளை, பொதுவேட்பாளரை தெரிவுசெய்வதற்கான செயன்முறை குறித்து ஏற்கெனவே சில தமிழ் அரசியல்வாதிகளும் சிவில் சமூக முக்கியஸ்தர்களும் வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் மிகவும் சுவாரஸ்யமானவையாக இருக்கின்றன. பொதுவேட்பாளர் ஒரு அரசியல்வாதியாக இருக்கக்கூடாது என்றும் அவர் தமிழ் மக்கள் தென்னிலங்கைக்கும் உலகிற்கும் கூறவிரும்பும் செய்தியின் ஒரு அடையாளமாக மாத்திரமே இருக்கவேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டக்கூடாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பொதுவேட்பாளர் ஒரு அரசியல் துறவியாக இருக்கவேண்டும். ஏற்கெனவே தமிழர்கள் மத்தியில் துறவிகளாக இருப்பவர்களில் சிலர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் உத்தேச பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் மத்தியில் கணிசமான வாக்குகளைப் பெறும் பட்சத்தில் அவர் அரசியலில் ஆர்வம் காண்பிக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அத்தகைய ஒரு ‘அரசியல் துறவியை’ தமிழ்ச் சமூகத்தில் கண்டுபிடிக்க முடியுமா? ஒரு கோட்பாட்டு அடிப்படையில் நோக்கும்போது பொதுவேட்பாளர் வடக்கு, கிழக்கில் கணிசமான வாக்குகளைப் பெறுவாரேயானால், தமிழ் மக்களின் எதிர்கால தலைவராக அவர் அடையாளம் காணப்படக்கூடிய சாத்தியத்தையும் நிராகரிக்கமுடியாது. இது குறித்த சந்தேகம் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இருக்கக்கூடும். அதனாலேயே அவர்களில் பலர் மத்தியில் பொதுவேட்பாளர் விடயத்தில் உற்சாகமான ஒரு மனநிலையைக் காணமுடியவில்லை. பொதுவேட்பாளருக்கு தமிழர்கள் மத்தியில் கிடைக்கக்கூடிய ஆதரவைப் பொறுத்து தமிழ் மக்கள் பொதுச்சபை ஒரு புதிய அரசியல் கட்சியாக மாறக்கூடிய வாய்ப்பையும் எளிதில் நிராகரித்துவிட முடியாது. கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தபோது தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிய வருகிறது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்கள் மத்தியில் பொதுவேட்பாளர் தொடர்பில் நிலவும் முரண்பாடு ஜெய்சங்கர் முன்னிலையிலும் வெளிக்காட்டப்படடிருக்கிறது. மற்றைய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் பொதுவேட்பாளர் விவகாரம் ஒரு ஆலோசனைக் கட்டத்திலேயே இன்னமும் இருக்கிறதே தவிர, உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறியதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் அது தொடர்பில் எந்த கருத்தையும் கூறவில்லை என்றும் தெரியவந்தது. அதேவேளை, பொதுவேட்பாளர் யோசனைக்கு எதிராக கருத்து வெளியிடுபவர்களை தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்கள் என்று வர்ணிக்கும் ஒரு போக்கும் காணப்படுகிறது. இது தமிழர் அரசியலில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த ஒரு வக்கிரத்தனமான அரசியல் போக்கின் ஒரு தொடர்ச்சியான வெளிப்பாடே தவிர வேறு ஒன்றுமில்லை. தமிழ்த் தேசியம் என்பது வலுவானதாக இருக்கவேண்டுமானால், தமிழர்களின் பாரம்பரிய தாயக நிலப்பரப்பும் அதன் மக்களின் இருப்பும் இன்றியமையாதவை. தங்களது சொந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் வாழ்ந்தால் தங்களுக்கும் தங்களது சந்ததியினருக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்கவேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று அத்தகைய ஒரு சூழ்நிலை வடக்கு, கிழக்கில் இல்லை. பெரும்பாலான தமிழர்கள் மேற்கு நாடுகளுக்கு புலம்பெயர்வதில் நாட்டம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலைவரம் தமிழ்ப்பகுதிகளின் குடிப்பரம்பலுக்கு பாரதூரமான ஆபத்தை தோற்றுவிக்கக் கூடியதாகும். வடக்கு, கிழக்கில் தமிழர்களில் எத்தனை பேர் வெளிநாடுகளுக்கு செல்லாமல் சொந்த மண்ணில் தொடர்ந்தும் வாழ்வதற்கு விரும்புகிறார்கள் என்பதை அறிய ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினால் பயனுடையதாக இருக்கும். பொதுவேட்பாளர் யோசனைக்கு ஆதரவை திரட்டுவதில் ஈடுபட்டிருக்கும் சிவில் சமூக அமைப்பு புலம்பெயர்வதில் தமிழர்கள் காட்டும் ஆர்வத்தின் ஆபத்தையும் மக்களுக்கு விளக்கிக்கூறுவதில் கவனம் செலுத்தினால் கூடுதல் பயனுறுதியுடைய ஒரு பணியை செய்வதாக அமையும். இது இவ்வாறிருக்க, ஜெய்சங்கருடனான சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் மாகாணசபை தேர்தல்களை நடத்தி அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தின. ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் 13 வது திருத்தத்தை தங்களது எதிர்கால அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்து உறுதியளித்திருந்தனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெடுகவும் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர். ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் மூவரும் 13 வது திருத்தத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் இன்றைய புதிய சூழ்நிலையை தமிழ் அரசியல் கட்சிகள் எவ்வாறு அணுகப்போகின்றன என்பது முக்கியமான கேள்வி. 13 வது திருத்தம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு அல்ல என்று கூறும் தமிழ்க் கட்சிகள் நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் முதற்கட்டமாக அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டும் என்று அரசாங்கத்தை கோரிவருகின்றன. அவ்வாறு கோரிக்கையை முன்வைப்பதுடன் தங்கள் பணி முடிவடைந்துவிட்டதாக தமிழ்க்கட்சிகள் நினைக்கமுடியாது. அந்த திருத்தம் தொடர்பில் மாத்திரமல்ல பொதுவில் அதிகாரப் பரவலாக்கம் குறித்தே தப்பபிப்பிராயத்தைக் கொண்டிருக்கும் பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் உள்ள பிரதான அரசியல் சக்திகள் நேர்மறையான ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் சந்தர்ப்பத்தை சாதுரியமாகப் பயன்படுத்தும் அரசியல் விவேகம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் இருக்கவேண்டியது அவசியம். மூன்று பிரதான வேட்பாளர்களும் எடுத்திருக்கும் நிலைப்பாடு 13 வது திருத்தம் தொடர்பில் பெரும்பான்மைச் சமூகம் கொண்டிருக்கும் எதிர்மறையான அபிப்பிராயத்தை ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றுவதற்கு உதவுமேயானால் அது பெரிய காரியமாக இருக்கும். ஜனாதிபதி தேர்தலில் இந்த மூன்று வேட்பாளர்களில் எவர் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்தாலும் அவர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் மற்றைய இருவரும் அதை எதிர்க்கமுடியாமல் போகும். அவர்கள் மூவரிடமும் தமிழ்க் கட்சிகள் அதற்கான உறுதிமொழியை தேர்தலுக்கு முன்னர் பெறுவது விவேகமான ஒரு அணுகுமுறையாக இருக்கும். இந்த வேட்பாளர்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டி ஆட்சிமுறையை தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைப்பார்களா? ஒற்றையாட்சி முறையை மாற்றுவதற்கு இணங்குவார்களா? என்றெல்லாம் சில தமிழ்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அறிக்கைகளை வெளியிடுகின்றன. அவர்களின் அரசியல் விவேகம் குறித்து என்ன கூறுவது என்றே புரியவில்லை. 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கே தயாரில்லாமல் இருக்கும் கொழும்பு அரசாங்கங்களிடம் சமஷ்டித் தீர்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்று முன்னைய ஒரு இலங்கை விஜயத்தின்போது ஜெய்சங்கர் தங்களிடம் கேள்வியெழுப்பியதை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம். விடுதலை புலிகள் 13 வது திருத்தத்தை எதிர்த்தார்கள் என்பதற்காக அதை தொடர்ந்தும் எதிர்ப்பது தமிழ்த் தேசியத்துக்கான தங்களின் கடமை என்று நினைக்கின்ற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். அந்த திருத்தத்தை பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று சில அரசியல்வாதிகளும் சிவில் சமூக முக்கியஸ்தர்களும் பேசுகிறார்கள். அந்த திருத்தத்தை ஒரு தடியினால் கூட தொட்டுப்பார்க்க மாட்டோம் என்று ஒரு காலத்தில் கூறிய மூத்த தமிழ்த் தலைவர் சம்பந்தன் ஐயா அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கோருவதில் முன்னரங்கத்தில் நிற்பவர்களில் முதன்மையானவராக விளங்குகிறார். இந்த கட்டுரையாளர் ஒன்றும் 13 வது திருத்தத்தின் ரசிகர் இல்லை. ஆனால் அந்த திருத்தத்தைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று கூறுபவர்களிடம் ஒரேயொரு கேள்வி. நாம் விரும்புகின்றோமோ இல்லையோ இன்று இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்க சட்டம் என்றால் அது 13 வது திருத்தம் மாத்திரமே. அதை இலங்கை அரசாங்கம் ஒன்று ஒழித்துவிட்டால் எதிர்காலத்தில் குறைந்த பட்சம் அந்த திருத்தத்தைப் போன்ற ஒன்றை அல்லது அதையும் விட குறைவான ஏற்பாடு ஒன்றையாவது கொண்டுவருவதற்கு அரசாங்கங்களை நிர்ப்பந்திக்கக்கூடிய அரசியல் வல்லமை உங்களிடம் இருக்கிறதா? பயன்தராத பரிசோதனைகளையே மீண்டும் மீண்டும் செய்துபார்த்து வேறுபட்ட விளைவுகளை எதிர்பார்க்கும் ஒரு மக்கள் கூட்டமாக இலங்கை தமிழர்கள் இனிமேலும் இருக்கக்கூடாது. https://arangamnews.com/?p=10904
  9. வாங்கோ சுண்டல்! இளமை இறங்கினால் யாழில் தஞ்சம் புகலாம் என்று எந்த ப்ரோ சொன்னது?😛
  10. பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (25 ஜூன்) இறுதியான சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் பங்களாதேஷ் (D2) AFG எதிர் BAN ஒருவரும் போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தான் அணியையோ அல்லது பங்களாதேஷ் அணியையோ இப்போட்டியில் வெல்லும் எனக் கணிக்கவில்லை! எனினும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றால், மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த 09 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு D இல் முதலாவதாக வந்திருந்த தென்னாபிரிக்கா அணியை இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த மூன்று பேருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 WI சுவி NZ நிலாமதி WI குமாரசாமி SA தியா WI தமிழ் சிறி WI புலவர் NZ P.S.பிரபா NZ நுணாவிலான் NZ பிரபா USA WI வாதவூரான் SA ஏராளன் NZ கிருபன் WI ரசோதரன் WI அஹஸ்தியன் NZ கந்தப்பு WI வாத்தியார் NZ எப்போதும் தமிழன் WI நந்தன் WI நீர்வேலியான் NZ கல்யாணி SA கோஷான் சே SL இப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் தயவால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் கிட்டுமா?
  11. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் நெருப்படி விளாசலான 41 பந்துகளில் 92 ஓட்டங்களுடன், 5 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் அதிரடியான 76 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்தாலும், பிற துடுப்பாட்டக்காரர்கள் நிலைத்து ஆடாததால், இறுதியில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 11 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பிறருக்குப் புள்ளிகள் கிடையாது. 51வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 107 2 ரசோதரன் 105 3 ஈழப்பிரியன் 101 4 சுவி 98 5 கந்தப்பு 97 6 கோஷான் சே 97 7 நந்தன் 95 8 நீர்வேலியான் 93 9 குமாரசாமி 92 10 கிருபன் 92 11 எப்போதும் தமிழன் 92 12 தமிழ் சிறி 90 13 P.S.பிரபா 89 14 வாதவூரான் 88 15 வாத்தியார் 88 16 நிலாமதி 87 17 அஹஸ்தியன் 87 18 வீரப் பையன்26 86 19 ஏராளன் 85 20 தியா 80 21 புலவர் 78 22 நுணாவிலான் 76 23 கல்யாணி 75 மூன்று அமெரிக்கர்கள் தொடர்ந்தும் முன்னிலைகளில் நிற்கின்றனர்!
  12. இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி விக்கெட்டுக்களை தொடர்ச்சியாக இழந்து, அதிக ஓட்டங்களைப் பெறமுடியாது இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணியும் நன்றாக ஆரம்பிக்கவில்லை. இடையில் மழைவந்து குழப்பியதால் மூன்று ஓவர்கள் குறைக்கப்பட்டு DLS முறைப்படி வெற்றி இலக்கு 123 ஓட்டங்களாக மாற்றப்பட்டது. தென்னாபிரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் (DLS Method) வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. மற்றையோருக்குப் புள்ளிகள் கிடையாது!
  13. தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது: தேசத்தைக் கட்டியெழுப்புவது - நிலாந்தன் கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில், புங்கங்குளம் சந்தியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் ஒரு பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது. தமிழ் நாட்டின் விருது நகர் ரோட்டறிக் கழகத்தின் இளையோருக்கான தலைமைத்துவ விருதுகளை வழங்கும் நிகழ்வு அது. (RYLA-Rotary Youth Leadership Awards) கனடாவை மையமாகக் கொண்டியங்கும்”ஈ-குருவி-புதிய வெளிச்சம்”அமைப்பு தமிழகத்தின் இதயம் நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் அனுசரணையோடு இளம் தொழில் முனைவோருக்கான வதிவிடக் கருத்தரங்கு ஓன்றினை ஒழுங்குபடுத்தியிருந்தது. இளம் தொழில் முனைவோரின் நம்பிக்கைகளை, தொழில் திறன்களைக் கட்டியெழுப்புவது அக்கருத்தரங்கின் நோக்கமாகும். அதில் பங்குபற்றிய இளையோர் பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றினார்கள். அவர்கள் ஆற்றிய உரைகளின் சாராம்சம் கால முக்கியத்துவம் உடையது; அரசியல் முக்கியத்துவம் உடையது; நம்பிக்கையூட்டுவது. அதில் ஓர் இளைஞர் பின்வரும் பொருள்பட பேசினார் “நான் யார்? இந்த நாட்டில் என்னுடைய பங்கு என்ன? என்ற கேள்வி என்னிடம் இருந்தது… இந்த வதிவிட கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் அதற்குரிய பதிலைப் பெற்றுக் கொண்டேன் ” என்று. ஏனைய பெரும்பாலான இளையோர் தாங்கள் எந்தெந்த துறைகளில் தொழில் முனைவோராக எழுச்சி பெறுகிறார்கள் என்று பேசினார்கள். விஸ்வமடுவிலிருந்து வந்த ஒரு இளையவர் தான் எப்படி தனது சொந்த காயங்களில் இருந்து மீண்டு எழுந்தார் என்பதனைப் பேசினார். போரில் முகம் சிதைந்து கிடந்த அவர் எப்படி ஒரு தொழில் முனைவோராக வெற்றி பெற்றார் என்பதனை விளங்கப்படுத்தினார். அந்த இளையோரின் குரல்களிலும் வார்த்தைகளிலும் நம்பிக்கை பிரகாசித்தது. தமது தாய் நிலத்தில் தாம் தமது தொழில்களை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். அந்த நம்பிக்கைதான் இங்கு இன்று இந்த கட்டுரையின் குவிமையம். இந்த நாட்டில் தன்னுடைய வகிபாகம் என்ன? தான் யார்? என்பதைக் குறித்து ஒரு தொகுதி இளையோர் சிந்திக்கிறார்கள். இன்னொரு தொகுதி அதன் வேர்களை அறுத்துக் கொண்டு புலம்பெயர்ந்து வருகின்றது. சில மாதங்களுக்கு முன்பு கனேடிய விசா வழங்கும் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். ஒர் அழகிய இளம் பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டைக் கையளிப்பதற்கு வந்திருந்தார். அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை அங்கு கையெழுத்து விட்டு திரும்பி வருகையில் கவனித்தேன். அவருடைய கண்கள் அசாதாரணமாக மகிழ்ச்சியால் பூரித்து போயிருந்தன. கிடைத்தற்கரிய ஒரு வேறு கிடைத்ததுபோல அவர் நடந்து போனார். அந்த அலுவலகம் அமைந்திருக்கும் சிறிய வீதி காலி வீதியில் போய் ஏறும் சந்தியில் அவருடைய தாயும் சகோதரரும் அவருக்காக காத்து நின்றார்கள். அவர்களைக் கண்டதும் அவர் ஒரு பெரிய காரியத்தைச் சாதித்து விட்டு வெற்றியின் வாசலில் நிற்பவர் போல நடந்து கொண்டார். இது முதலாவது அவதானிப்பு. இரண்டாவது அவதானிப்பு, யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தரப் பிரிவில் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் கற்கும் பிள்ளைகளுக்கான தனியார் கல்வி நிறுவனம் ஒன்று அமைந்திருக்கும் கன்னாதிட்டி வீதியில் ஒரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் பின்வருமாறு உண்டு ” be a Canadian”- “கனேடியனாக இரு: புதிய வாழ்க்கையின் முதல்படி” கனடாவுக்கு போவது; லண்டனுக்குப் போவது; தாயகத்தை விட்டுப் போவது என்பது ஒரு பகுதி இளையோர் மத்தியில் தணியாத தாகமாக மாறி வருகிறது. அதே சமூகத்தில் இன்னொரு பகுதி இளையோர் இந்த நாட்டில் “என்னுடைய வகிபாகம் இது; நான் எனது தொழிலையும் நாட்டையும் ஒருசேரக் கட்டி எழுப்ப போகிறேன்” என்று நம்பிக்கையோடு மேலெழுகிறார்கள். இக்கட்டுரை புலப்பெயர்ச்சிக்கு எதிரானது அல்ல. புலம்பெயர்பவர்களின் பயங்களை; கவலைகளை; எதிர்காலத்தைக் குறித்த கனவுகளை இக்கட்டுரை அவமதிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே நிலம் சிறுத்து வருகிறது. அதாவது தாயகம் சிறுத்து வருகிறது. இப்பொழுது சனமும் சிறுக்க தொடங்கிவிட்டது. இது தொடர்பாக திருத்தமான புள்ளிவிபரங்கள் எந்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. கனடா அதன் விசிட் விசா விதிகளில் தளர்வுகளை ஏற்படுத்திய பின் அண்மை ஆண்டுகளில் இதுவரை இருப்பதாயிரத்துக்கும் குறையாதவர்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து விட்டதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு புலம்பெயர்வதற்காகக் காத்திருக்கும் இளையவர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக ஒரு மனநல மருத்துவர் அண்மையில் தெரிவித்தார். ”இந்த நாட்டில், இந்த சமூகத்தில் நான் அதிககாலம் இருக்கப் போவதில்லை. இனி இது எனது நாடுமல்ல எனது சமூகமும் அல்ல. எனவே விசா கிடைப்பதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நான் எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகலாம்” என்று சிந்திக்கும் ஒரு பகுதி இளையவர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை அந்த மருத்துவர் சுட்டிக்காட்டினார். ஒருபுறம் நகர்ப்புறங்களில் அன்றாட கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை. பல வாகனம் திருத்தும் கடைகளில் உதவிக்கு ஆட்கள் இல்லை. மேசன் வேலை , வயரிங் வேலை, பெயிண்டிங் வேலை போன்ற வேலைகளுக்கும் உதவி ஆட்கள் கிடைப்பது அரிது. அன்றாடச் சம்பளத்துக்கு வருபவர்கள் கைபேசிகளை கொண்டு வருகிறார்கள். வேலை பாதி; கைபேசி பாதி. இன்னொருபுறம் வேலையற்ற பட்டதாரிகள் வட-கிழக்கில் மட்டும் கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கும் குறையாதவர்கள் வேலை வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கிறார்கள். தமது கல்வித் தகமையைவிடக் கீழான உத்தியோகங்களுக்குப் போகிறார்கள். ஒருபுறம் கூலி வேலைகளுக்கு ஆட்கள் இல்லை. இன்னொருபுறம் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. இப்படிப்பட்டதோர் சமூகத்தில் இருந்து படித்தவர்களும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,அதே சமூகத்தில் ஒரு சிறு தொகுதி தொழில் முனைவோர் அதுவும் இளையோர் நம்பிக்கையோடு மேடை ஏறுகிறார்கள். தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது என்பது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான். அந்த அடிப்படையில் பார்த்தால் அந்த வதிவிடக் கருத்தரங்கு கவனிப்புக்குரியது. அதில் மற்றொரு செய்தியும் உண்டு அந்த கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெரு முதலாளியுந்தான். வளவாளர்களாக வந்தவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். தமிழகத்தின் விருதுநகர் ரோட்டறி கழகத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அது முன்னெடுக்கப்பட்டது. அரசற்ற ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய தேச நிர்மாணத்தின் பங்காளிகள் என்று பார்க்கும்பொழுது புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தையும் தமிழகத்தையும் குறிப்பிட்டுச் செல்லலாம். நிதிப் பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமானது ஈழத் தமிழர்களின் ரத்தமும் சதையுமாக இருக்கிறது. அது தாயக அரசியலில் தொலை இயக்கி வேலைகளைச் செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு; தாயகத்தோடு கலந்து பேசாமல் பிரகடனங்களை வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு;எனினும்,தேசத்தைக் கட்டியெழுப்பும் செய்முறையைப் பொறுத்தவரை அதில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் முதன்மைப் பங்காளி. அடுத்தது தமிழகம். நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமானது தமிழகத்தின் திரைப்படத் தொழிற்துறைக்குள் செல்வாக்கு மிக்க முதலீட்டாளர்களாக வளர்ச்சி பெற்று வருகிறது. அது பெருமளவுக்கு சீரியஸான கலை முதலீடு அல்ல. இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுக் காயங்களையும் கூட்டு மனோநிலையையும் பிரதிபலிக்கும் கலை முயற்சியும் அல்ல. அவை பெருமளவுக்கு ஜனரஞ்சகமானவை. ஆனால் கோடிக் கணக்கான காசு புரளும் முதலீடுகள். அதேசமயம்,சினிமா தவிர தமிழகத்தின் ஏனைய தொழில்துறைகளில் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பின் முதலீடுகள் ஒப்பீட்டளவில் குறைவு. இது தொடர்பாக தேசத்தை கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்து ஒரு முதலீட்டு திட்டம் வகுக்கப்படவில்லை. தமிழகம் புவியியல்ரீதியாகவும் இனரீதியாகவும் மொழிரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஈழத்தமிழர்களுக்கு மிக அருகில் காணப்படுகின்றது. இறுதிக்கட்டப் போரில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்களின் விளைவாக இந்தப் பிணைப்புகள் அதிகம் சோதனைக்கு உள்ளாகியுள்ளன. மீனவர்கள் விவகாரம் தமிழகத்தில் இருந்து வரக்கூடிய பெரு முதலாளிகளால் தாங்கள் விழுங்கப்பட்டு விடுவோம் என்ற ஈழத்தமிழ் வணிகர்களின் அச்சம் போன்றவையும் அந்த உறவுகளை மேலும் சோதனைக்கு உள்ளாக்குகின்றன. தமிழகம் இப்பொழுது இந்தியாவின் மிக வேகமாக முன்னேறும் மாநிலங்களில் ஒன்று. மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அது இரண்டாவதாக பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட மாநிலமாகக் காணப்படுகின்றது. இப்படிப்பட்ட புதிய வளர்ச்சிகளின் பின்னணியில்,நிதிப் பலம்மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து ஓர் அமைப்பும் இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த தொழிற்சார் வளவாளர்களும் இணைந்து இளம் தொழில் முனைவோருக்கான ஒரு வதிவிடக் கருத்தரங்கை நடாத்தியிருக்கின்றனர். “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று பாடிய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து இளையவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், அதே இளையவர்கள் மத்தியில் தமது சொந்தத் திறமைகளின் மீது நம்பிக்கையைக் கட்டியெழுப்ப இது போன்ற கருத்தரங்குகள் உதவும். இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்பு ஒன்றின் தன்னார்வ முயற்சிகளும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தாகமும், தமிழகத்தின் துறைசார் நிபுணத்துவமும் ஒன்றிணையும் போழுது, அது புதிய நொதிப்புகளை ஏற்படுத்த முடியும். தமிழ் நோக்கு நிலையில் இருந்து தாயகமும் டயஸ்பொறாவும் தமிழகமும் இணைந்து வளங்களையும் அறிவையும் பரிமாறிக் கொள்வதும் கூட்டு முதலீடுகளைக் குறித்துச் சிந்திப்பதும் பொருத்தமானவை. தாயகத்தில் உள்ள தொழில் முனைவோரைப் பொறுத்தவரை ஊரில் உழைக்கலாம்,சொந்த காலில் நிற்கலாம் என்ற நம்பிக்கை அதிகரித்தால், வேரை அறுத்துக் கொண்டு தாய் நிலத்தை விட்டு வெளியேறும் நிலைமைகள் தோன்றாது.தாய் நிலத்தில் தன்னுடைய வகிபாகம் என்ன என்ற தெளிவு இருந்தால், இளைய தலைமுறை நாட்டை விட்டு வெளியேற விரும்பாது. புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளும் தமிழக முதலாளிகளும் தாயகத்தில் முதலீடு செய்ய வேண்டும். அதை கொழும்பின் நோக்கு நிலையில் இருந்து செய்வதை விடவும் தாயகம்- தமிழகம்- டயஸ்பெரா ஆகிய முக்கூட்டு நோக்கு நிலையில் இருந்து செய்வது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒப்பீட்டுளவில் பாதுகாப்பாக இருக்கும். குறிப்பாக, தாயகத்தைக் கட்டியெழுப்புவது என்ற நோக்கு நிலையில் அது அதிகம் பொருத்தமானதும்கூட. https://www.nillanthan.com/6803/
  14. கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கருச்சிதைவுகள்! adminJune 24, 2024 கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று (23.06.24) இரவு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றத்தடுப்பு காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2024/204605/
  15. இவர் வெல்ல வாய்ப்பில்லை! தமிழர்களாக இருக்கும் சிலர், இரண்டாம் தலைமுறை உட்பட, பல்வேறு கட்சிகளின் கீழ் போட்டியிட்டு தமிழரது வாக்குகளை “சும்மா” எடுக்கலாம் என்று நினைக்கின்றனர்.
  16. பிரித்தானிய நேரப்படி நாளை திங்கள் (24 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, மேற்கிந்தியத் தீவுகள் (C2) எதிர் தென்னாபிரிக்கா (D1) WI எதிர் SA நான்கு போட்டியில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 11 பேர் போட்டியில் உள்ள தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் வென்றால் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த @suvy ஐயாவுக்குப் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, நியூஸிலாந்து அணிகளைத் தெரிவு செய்த ஏழு பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் SA வீரப் பையன்26 SL சுவி AFG நிலாமதி NZ குமாரசாமி SA தியா NZ தமிழ் சிறி NZ புலவர் SA P.S.பிரபா WI நுணாவிலான் SA பிரபா USA SA வாதவூரான் SL ஏராளன் SA கிருபன் SA ரசோதரன் NZ அஹஸ்தியன் WI கந்தப்பு SA வாத்தியார் WI எப்போதும் தமிழன் SA நந்தன் SA நீர்வேலியான் WI கல்யாணி NZ கோஷான் சே SA இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்? 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா (B2) எதிர் இந்தியா (A1) AUS எதிர் IND 11 பேர் போட்டியில் உள்ள இந்திய அணி வெல்லும் எனவும், 05 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் அவுஸ்திரேலியா வென்றால், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த இருவருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் IND வீரப் பையன்26 IND சுவி IND நிலாமதி IND குமாரசாமி IND தியா PAK தமிழ் சிறி IND புலவர் PAK P.S.பிரபா ENG நுணாவிலான் PAK பிரபா USA ENG வாதவூரான் IND ஏராளன் PAK கிருபன் AUS ரசோதரன் IND அஹஸ்தியன் AUS கந்தப்பு IND வாத்தியார் AUS எப்போதும் தமிழன் AUS நந்தன் PAK நீர்வேலியான் IND கல்யாணி IND கோஷான் சே AUS இப் போட்டியில் யார் புள்ளிகளைப் பெறுவார்கள்?
  17. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரம்பத்தில் வேகமாக அடித்தாடினாலும், பின்னர் விக்கெட்டுகள் சரியத் தொடங்கி, 19வது கிறிஸ் ஜோர்டனின் ஓவரில் 4 விக்கெட்டுகளை, hat trick உள்ளடங்கலாக, இழந்து இறுதியில் 18.5 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஜொஸ் பட்லரின் நெருப்படியான ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களுடன், 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இங்கிலாந்து அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 09 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், இங்கிலாந்து (B1) வெற்றியீட்டியதால் அவுஸ்திரேலியா (B2) இப்போட்டியில் வெல்லும் எனக் கணித்த 11 பேருக்குப் புள்ளிகள் கிடைக்கின்றன. சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்திய அணி வெல்லும் எனக் கணித்த @theeya க்குப் புள்ளிகள் கிடையாது. 49வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 105 2 ரசோதரன் 103 3 ஈழப்பிரியன் 97 4 சுவி 96 5 கோஷான் சே 95 6 கந்தப்பு 93 7 நந்தன் 93 8 நீர்வேலியான் 91 9 கிருபன் 90 10 எப்போதும் தமிழன் 90 11 P.S.பிரபா 89 12 குமாரசாமி 88 13 தமிழ் சிறி 88 14 வாத்தியார் 88 15 அஹஸ்தியன் 87 16 வாதவூரான் 86 17 நிலாமதி 85 18 வீரப் பையன்26 84 19 ஏராளன் 83 20 தியா 80 21 புலவர் 76 22 நுணாவிலான் 74 23 கல்யாணி 73
  18. இன்றைய முதலாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்கள் 118 ஓட்டங்கள் வரை விக்கெட் இழக்காததனால் சிறந்த தொடக்கத்தைக் கொடுத்தனர். எனினும் இறுதி நான்கு ஓவர்களில், பற் கமின்ஸ் இன்னுமோர் hat trick ஐ எடுத்தமையால், அதிக ஓட்டங்கள் எடுக்கமுடியாமல், இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து நிதானமாக ஆடமுடியாமல் இறுதியில் 19.2 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து அதிர்ச்சிகரமான தோல்வியைத் தழுவிக்கொண்டது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், ஆப்கானிஸ்தான் (C1) வெற்றியீட்டியதால் மேற்கிந்தியத் தீவுகள் (C2) இப்போட்டியில் வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் கிடைக்கின்றன. அவுஸ்திரேலியா தோல்வியடைந்ததால், அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த எட்டுப் பேருக்கும், இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கும் புள்ளிகள் கிடையாது! சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத நியூஸிலாந்து அணியைத் தெரிவு செய்த மூவருக்குப் புள்ளிகள் கிடையாது.
  19. பிரித்தானிய நேரப்படி நாளை ஞாயிறு (23 ஜூன்) இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் சுற்றுப் குழுப் போட்டிகளில் முன்னணியில் வரும் அணிகளின் வரிசைப்படி அல்லாது ஏற்கனவே குறிக்கப்பட்ட நிலைகளின்படி போட்டிகள் நடாத்தப்படுவதால் யாழ்களப் போட்டியாளர்கள் சிலரது கணிப்புக்கள், குறிப்பாக குழு B மற்றும் குழு C, குழம்பியுள்ளன. எனவே புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியைச் சரியாகக் கணித்திருந்தால் இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது சுப்பர் 8 சுற்றுப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் அவுஸ்திரேலியா (B2) AFG எதிர் AUS 08 பேர் போட்டியில் உள்ள அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணிக்கவில்லை. அவுஸ்திரேலியா வென்றால் இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கும் புள்ளிகள் கிடைக்கும். ஆப்கானிஸ்தான் வென்றால் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த 06 பேருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத நியூஸிலாந்து அணியைத் தெரிவு செய்த மூவருக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் WI வீரப் பையன்26 WI சுவி ENG நிலாமதி AUS குமாரசாமி AUS தியா WI தமிழ் சிறி AUS புலவர் NZ P.S.பிரபா ENG நுணாவிலான் NZ பிரபா USA WI வாதவூரான் ENG ஏராளன் ENG கிருபன் AUS ரசோதரன் WI அஹஸ்தியன் AUS கந்தப்பு ENG வாத்தியார் NZ எப்போதும் தமிழன் AUS நந்தன் WI நீர்வேலியான் ENG கல்யாணி AUS கோஷான் சே AUS இப் போட்டியில் எவர் புள்ளிகளை எடுப்பார்கள்? 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், ஐக்கிய அமெரிக்கா (A2) எதிர் இங்கிலாந்து (B1) USA எதிர் ENG 09 பேர் போட்டியில் உள்ள இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் உள்ள ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணிக்கவில்லை. இப்போட்டியில் இங்கிலாந்து வென்றால், அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 11 பேருக்கும் புள்ளிகள் கிடைக்கும். சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த இருவருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு A இல் இந்தியா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத இந்திய அணி வெல்லும் எனக் கணித்த @theeyaக்குப் புள்ளிகள் கிடையாது. போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் ஈழப்பிரியன் ENG வீரப் பையன்26 ENG சுவி AUS நிலாமதி ENG குமாரசாமி ENG தியா IND தமிழ் சிறி ENG புலவர் AUS P.S.பிரபா AUS நுணாவிலான் AUS பிரபா USA AUS வாதவூரான் AUS ஏராளன் AUS கிருபன் ENG ரசோதரன் AUS அஹஸ்தியன் ENG கந்தப்பு AUS வாத்தியார் PAK எப்போதும் தமிழன் ENG நந்தன் AUS நீர்வேலியான் AUS கல்யாணி PAK கோஷான் சே ENG இப் போட்டியில் இங்கிலாந்து வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறுமா?
  20. இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஹார்டிக் பாண்டியாவில் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 50 ஓட்டங்களுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி அடித்தாடமுயன்று விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த 17 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன . சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா, பாகிஸ்தான் அணிகளைத் தெரிவு செய்த 05 பேருக்குப் புள்ளிகள் கிடையாது. முதல் சுற்றில் குழு D இல் தென்னாபிரிக்கா இரண்டாவதாக வரும் எனத் தவறாகக் கணித்தமையால் இப்போட்டியில் இல்லாத தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @kalyaniக்குப் புள்ளிகள் கிடையாது. 47வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 101 2 ரசோதரன் 99 3 சுவி 94 4 ஈழப்பிரியன் 93 5 கோஷான் சே 93 6 கந்தப்பு 91 7 நந்தன் 89 8 நீர்வேலியான் 89 9 கிருபன் 88 10 வாத்தியார் 88 11 எப்போதும் தமிழன் 88 12 P.S.பிரபா 87 13 குமாரசாமி 86 14 தமிழ் சிறி 86 15 அஹஸ்தியன் 85 16 வாதவூரான் 84 17 நிலாமதி 83 18 ஏராளன் 81 19 வீரப் பையன்26 80 20 தியா 78 21 புலவர் 74 22 கல்யாணி 73 23 நுணாவிலான் 72
  21. புள்ளிகள் வழங்கும் முறை திருத்தப்பட்டுள்ளது. போட்டிகளுக்கான அணிகள் குழம்பியதன்மூலம், கணிப்புக்கள் தவறாக அமைந்திருக்கும் பட்சத்தில், சுப்பர் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து (B1) அல்லது அவுஸ்திரேலியா (B2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. அதே போன்று ஆப்கானிஸ்தான் (C1) அல்லது மேற்கிந்தியத் தீவுகள் (C2) விளையாடி வென்றால் இரண்டு அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணித்தவர்களுக்குப் புள்ளிகள் கிடைக்கும், தோற்றால் புள்ளிகள் இல்லை. 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், ஆப்கானிஸ்தான் (C1) எதிர் இந்தியா (A1) AFG எதிர் IND இந்தியா ஆப்கானிஸ்தானை வென்றதால் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த ஈழப்பிரியன், தியா, ரசோதரன் ஆகியோரின் புள்ளிகள் மீளப் பெறப்பட்டுள்ளன. 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, இங்கிலாந்து (B1) எதிர் தென்னாபிரிக்கா (D1) ENG எதிர் SA தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வென்றதால் பின்வரும் பத்துப்பேர் புள்ளிகள் மீளப்பெறப்பட்டுள்ளன. சுவி, புலவர், P.S.பிரபா, நுணாவிலான், பிரபா USA, ஏராளன், ரசோதரன், கந்தப்பு, நந்தன், நீர்வேலியான் 57)வது கேள்வியுடன் புள்ளிகள் வழங்கும் முறை திருத்தப்பட்ட பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (இன்றைய போட்டிகளுக்கான புள்ளிகள் பின்னர் வழங்கப்படும்): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 99 2 ரசோதரன் 97 3 சுவி 92 4 ஈழப்பிரியன் 91 5 கோஷான் சே 91 6 கந்தப்பு 89 7 நந்தன் 89 8 கிருபன் 86 9 எப்போதும் தமிழன் 86 10 நீர்வேலியான் 85 11 குமாரசாமி 84 12 தமிழ் சிறி 84 13 வாத்தியார் 84 14 P.S.பிரபா 83 15 அஹஸ்தியன் 83 16 வாதவூரான் 82 17 நிலாமதி 81 18 ஏராளன் 81 19 வீரப் பையன்26 78 20 தியா 78 21 புலவர் 74 22 கல்யாணி 73 23 நுணாவிலான் 72
  22. இரு வேறு பாதைகளில் தமிழ்த்தேசியம்! June 20, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியல் இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது. ஒன்று, தீவிரமான தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முற்றுமுழுதாகவே கற்பனையில் சமராடுவது. கடுமையான அரச எதிர்ப்பு, பிற இன, மத வெறுப்பைக் காட்டுவதெல்லாம் இந்தத் கற்பனைத் தீவிரத் தன்மையின் வெளிப்பாடுகளே. (குரைக்கிற நாய் கடிக்காது). மற்றது, மென்தேசியவாத நிலைப்பாடுடையது. யதார்த்தம், நடைமுறை போன்றவற்றின் அடிப்படையில் சிந்தித்துச் செயலாற்ற விளைவது. முடிந்தளவுக்கு மக்களின் நலன், மக்களுடைய தேவைகள், மக்களுடைய பிரச்சினைகளுக்காக அரசுடன் இணையக் கூடிய புள்ளிகளில் இணைந்தும் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்த்தும் செயற்படுவது. பிற இன, மதப் பிரிவினரோடு புரிந்துணர்வின் அடிப்படையில் இணங்கியிருக்கவும் கூடியது. முதலாவது பிரிவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், அரியநேத்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம், என். ஸ்ரீகாந்தா போன்றோருள்ளனர். இதில் சுரேஸ் பிரேமச்சந்திரனைத் தவிர, ஏனையோர் விடுதலைப்புலிகளையும் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனையும் நிபந்தனையின்றி ஏற்றுக் கொண்டவர்கள். அதனால் புலிகளின் அரசியல் நிலைப்பாட்டுத் தீவிரத்தை இவர்களிடத்தில் காண முடியும். சுரேஸ் பிரேமச்சந்திரன், புலிகளுக்கு வெளியே நிற்கும் தீவிரத் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டாளராக இருக்கிறார். ஆனாலும் அதைக் காட்டிக் கொள்வதில்லை. இதற்குக் காரணங்கள் உண்டு. அவை பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். இரண்டாவது தரப்பில், இரா. சம்மந்தன், ஆபிரகாம் சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், துரைரத்தினம், சி.வி.கே சிவஞானம், சத்தியலிங்கம், சயந்தன் போன்றோருள்ளனர். இவர்கள் புலிகளின் நிழலில் அரசியல் செய்வதைப் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்குப் பிறகான அரசியலைச் செய்ய வேண்டும் என்ற புரிதல் உள்ளவர்கள். இதில் சிலர் இடையிடையே புலிகளை விமர்சித்தும் புலிகளுக்கு அப்பாலான முறைகளைத் தொட்டும் தமது அரசியலை முன்னெடுக்கின்றனர். இவை இரண்டுக்கும் இடையில், சிலபோது தீவிரத் தேசியவாதிகளாக மேலுயர்ந்தும் சட்டெனக் கீழிறங்கி அரசு தரப்புடன் சமரசம் செய்வோராகவும் இங்குமங்குமாகத் தளம்பிக்கொண்டு சிலர் உள்ளனர். இந்தப் போக்கில் மாவை சேனாதிராஜா, சி.விக்னேஸ்வரன், சரவணபவன் போன்றோர் முக்கியமானவர்கள். அடிப்படையில் இவர்கள் மக்கள் நலனை விட்டுத் தூர விலகித் தனித்திருப்போர். ஆனால், அங்குமிங்குமாகச் சரிந்தாடித் தமது தனிப்பட்ட அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதில் வல்லவர்கள். இந்தப் பிரிவு அல்லது பிளவு வெளிப்படையாகத் தெரியாது விட்டாலும் கூர்மையாக அவதானிப்போருக்கு நன்றாக விளங்கும். தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் நடந்து கொண்டிருக்கிற ஆதரவு – எதிர்ப்பு என்பதிலும் இதுவே தொழிற்படுகிறது. செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன், துரைரத்தினம் போன்றோர் பொதுவேட்பாளரை ஆதரிப்பதாகச் சொன்னாலும் மெய்யான ஈடுபாட்டோடும் உண்மையான தெளிவோடும் இதனை ஏற்கவில்லை என்பது பகிரங்கமான விடயம். இருந்தாலும் தாம் சார்ந்திருக்கும் கூட்டணி, கட்சி போன்றவற்றின் நலன், கட்டுப்பாடு போன்றவற்றுக்காக மெல்ல அசைந்து கொடுத்திருக்கின்றனர். ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து நிற்கின்ற ஒரே காரணத்துக்காகவே ரெலோவும் புளொட்டும் பொதுவேட்பாளரை ஆதரிக்கின்றன. அதுவும் நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு அரை மனதோடு வெளியிடப்பட்ட ஆதரவுக் கருத்தாகும். இவர்களுக்கு களச்சூழலும் நிலைமையும் புரியும். இதற்குப் பிரதான காரணம், இவர்கள் யாழ்ப்பாணச் சூழலுக்கு வெளியே தமது அரசியல் இருப்பையும் மனதையும் கொண்டிருக்கின்றனர். அதனால் யாழ்ப்பாணச் சூழலை மனதிற் கொண்டு தீர்மானங்களை எடுப்பதில்லை. தாங்கள் செயற்படும் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான நிலைமைகளையும் கவனத்திற் கொண்டே தீர்மானங்களை எடுக்கின்றனர். அல்லது இவர்கள் எடுக்கும் தீர்மானங்களில் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான வன்னி மற்றும் கிழக்கு மாகாண நிலவரங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. எனினும் நிலைமைகளின் போக்கில் இவர்களுடைய பொதுவேட்பாளர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியங்களே அதிகமுண்டு. காரணம், இவர்கள் யதார்த்தத்தின் வழியில், நடைமுறைச் சாத்தியங்களைக் குறித்து விடயங்களை அணுகும் தன்மையைக் கொண்டவர்கள் என்பதேயாகும். முதலாவது தரப்பு புலிகளின் தொடர்ச்சியாகத் தம்மைக் காட்டிக் கொள்ள முற்படுவது. ஆனால், அது புலிகளின் தொடர்ச்சிக்குரியதோ அடையாளத்துக்குரியதோ அல்ல. தம்மைத் தாமே அவ்வாறு உருவகித்துக் கொள்வது. கவனிக்கவும் அப்படி உருவாக்கிக் கொள்வதல்ல; உருவகித்துக் கொள்ளல் என்பதை. மற்றும்படி புலிகளுடைய செயற்பாட்டுப் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதல்ல. இரண்டாவது தரப்பு புலிகளிடமிருந்து, அவர்களுடைய அரசியற் தொடர்ச்சியிலிருந்து நீங்கிச் செல்ல முயற்சிப்பது. புலிகளின் அரசியலுக்கு ஒரு காலகட்டம் உண்டு. அது வேறு. இப்பொழுது வேறு காலட்டம். எனவே இதற்குரிய அரசியலை முன்னெடுக்க வேண்டும் எனச் சிந்திப்பது. அதனால் தமிழ் மக்களுடைய அரசியல் நலனைப் பற்றி ஓரளவுக்கு யதார்த்தமாகச் சிந்திக்க முடிகிறது. அடிப்படையில் மற்றத் தரப்பிலிருந்து இதனுடைய வேறுபாடு இங்கேதான் நிகழ்கிறது. தங்களுடைய வழியில் முடிந்தளவுக்கான செயற்பாட்டு விளைவுகளை உருவாக்க இது முயற்சிக்கிறது. தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்துக்கு அப்பாலான அரசியல் தீர்மானங்களிலும் செயற்பாடுகளிலும் மேற்சொன்ன இருவகை நிலைப்பாடே இனி வரும் காலத்திலும் செல்வாக்குச் செலுத்தப்போகிறது. இந்தப் போக்கு வரவரத் தீவிரமடையும். இது தவிர்க்க முடியாத அடிப்படையான குணாம்ச வேறுபாடாகும். இதற்குள் சில உப பிரிவுகள் – சிறு கட்சிகள், தனியாளுமைகள் உண்டு. அவை இந்த இரண்டு பெரும்போக்குகளுக்குள்ளும் அடங்கக் கூடியன. இந்த அடிப்படை வேறுபாட்டிலேயே தமிழ்த்தேசியவாதச் சக்திகள் பிளவுண்டு, உடைந்து, புதுப்புது அணிகளாகவும் கட்சிகளாகவும் சிதறிக் கொண்டிருக்கின்றன. இது தவிர்க்கவே முடியாத விளைவு. இதனைக் கட்டுப்படுத்துவது கடினம். அப்படிக் கட்டுப்படுத்தி, ஒருங்கிணைவுக்குக் கொண்டு வரவேண்டுமானால், ஆளையாள் பழித்துரைப்பதை விட, யதார்த்த நிலைமை எப்படியுள்ளது என்ற தெளிவோடு வெளிப்படையாக உரையாட வேண்டும். அந்த உரையாடல் கற்பனைக்கும் – நடைமுறைக்குமிடையிலான மோதலாகவே நிகழும். அதில் ஈடுபடுவோரின் அரசியல் முதிர்ச்சியும் மக்கள் நலனில் உள்ள அக்கறையும் அந்த மோதலைத் தணித்து, மெல்ல மெல்ல ஒரு புதிய விஞ்ஞானபூர்வமாக அரசியலின் பக்கமாகக் கொண்டு வரக் கூடியதாக இருக்கும். ஆனால், தீவிர நிலைப்பாட்டையுடையோர் எப்போதும் கற்பனையிலும் தம்மைப் புனிதர்களாகக் கட்டமைத்துக் கொள்ளும் பாவனை செய்தலிலும் (உருவகித்தலிலும்) பிடிவாதமாக இருப்பதால் எளிதில் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவு. காலம் கரையுமே தவிர, உருப்படியாக எந்தக் காரியங்களும் நிகழாது. இது மேலும் பின்னடைவுகளையே சமூகத்திற்கு அளித்து நிற்கும். மறுதரப்பை இவர்கள் கடுமையாக எதிர்த்துக் குற்றம் சாட்டுவர். தேவையெனில் கடுமையாக விரோதிக்கவும் கூடும். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளத் தவறி, தமிழ்த் தேசியச் சக்திகளுக்கிடையே ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கொண்டு வரப்போகிறோம் என்றால் அதை விட அறியாமை வேறில்லை. சரி, இந்தப் பிரிவு – பிளவு எப்படி உண்டானது? ஏன் உருவாகியது? வரலாற்றுச் சூழலே எதையும் தீர்மானிப்பதுண்டு. ஆயுதப்போராட்டத்துக்கு முன்பான அரசியற் போராட்டங்களை மேற்கொள்ள வைத்தது ஒரு வரலாற்றுச் சூழல். அதற்கடுத்து ஆயுதப்போராட்டத்தை உருவாக்கியது இன்னொரு வரலாற்றுச் சூழல். அது முடிவுக்கு வந்தது அல்லது முடிவுறுத்தப்பட்டது இன்னொரு வரலாற்றுச் சூழல். இதில் உள்நாட்டு நிலவரங்களும் பிராந்திய, சர்வதேசப் போக்குகளும் செல்வாக்குச் செலுத்தியதையும் நாம் கவனிப்பது அவசியம். அதைப்போன்றதே ஆயுதப்போராட்டத்துக்குப் பிறகான இன்றைய நிலைவரம். இது இன்னொரு வரலாற்றுச் சூழல். இந்தச் சூழல் எதையெல்லாம் கோரி நிற்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டியது அரசியலாளர்களின் பொறுப்பு – கடமை. முக்கியமாக யுத்தத்திற்குப் பிறகு, யுத்தத்தினால் அழிவடைந்த (அழிக்கப்பட்ட) பிரதேசங்களையும் மக்களையும் (சமூகத்தையும்) மீள்நிலைப்படுத்த வேண்டிய அவசியமிருந்தது. அழிவடைந்த பிரதேசங்களை எந்த அடிப்படையில் மீள்நிலைப்படுத்துவது என்று தமிழ்த்தரப்பு ஒரு போதுமே சிந்திக்கவில்லை. இது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகும். உண்மையில், அழிவடைந்த – அழிக்கப்பட்ட பிரதேசங்களை மீள்நிலைப்படுத்தும்போது அவற்றின் பண்பாட்டுத் தொடர்ச்சியும் வரலாற்றுத் தொடர்ச்சியும் அறாதவகையில் புதிய வடிவத்தில் அதைச் செய்திருக்க வேண்டும். இதற்கு சமூகவியல், புவியியல், பண்பாட்டியல், வரலாற்றியல், பொருளாதாரத்துறை சார்ந்த அறிஞர்களையும் செயற்பாட்டாளர்களையும் உள்ளடக்கியதொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. “மீள்குடியேற்றம்” என்ற பெயரில் அரசு எதை எண்ணியதோ அதன்படியே மீள்நிலைப்படுத்தல் நடந்தது. அவ்வாறே சமூகத்தை மீள்நிலைப்படுத்துவதற்கான பொறிமுறைகளும் அதற்குரிய கட்டமைப்புகளும் தமிழ்த்தரப்பினால் மேற்கொள்ளப்படவில்லை. இப்பொழுது போதைப்பொருள் பாவனை, சமூக வன்முறைகள், தொழிலின்மை, இயற்கை வள அழிப்பு – அபகரிப்பு, பண்பாட்டுச் சீரழிவு போன்றன அதிகரித்திருப்பதற்குக் காரணம் சமூகத்தைக் கைவிட்டமையே ஆகும். இங்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலே வேலை செய்தது. இப்படி இரண்டு அவசிய நிலைகளில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல், அதை அரசின் கைகளில் விட்டதன் விளைவுகளே இன்றைய பின்னடைவுகளாகும். இவற்றைப் பற்றிய மறுபரிசீலனைகளை தமிழ்ச் சமூகம் (அரசியற்கட்சிகள், அரசியல் அபிலாஷையைக் கொண்டிருக்கும் மத அமைப்புகள் உட்பட அனைத்துத் தரப்பினரும்) செய்வது அவசியம். இவ்வாறே மக்களுடைய உளநிலையை மேம்படுத்துவதற்கும் தமிழ்த்தரப்புகள் முயற்சிக்கவில்லை. தமிழ்த்தரப்பின் யுத்தத் தோல்வி, போராட்டத்தோல்வியாக அரசினால் மடைமாற்றம் செய்யப்பட்டது. அதை மறுதலிக்கும் விதமாக புதிய அரசியற் போராட்ட முறையை மக்களுக்குள் இறக்கவும் இல்லை. அதைத் தமிழ்த் தலைமைகள் கண்டறியவும் இல்லை. பலவீனப்படுத்தப்பட்ட தமிழ்ச்சமூகத்தைப் பலப்படுத்துவதற்கு பல வழிகளிலும் முயற்சிகளை எடுத்திருக்க முடியும். முக்கியமாக அரசியல் காரணங்களால் பிளவுண்ட முஸ்லிம்களுடனான உறவை வலுப்படுத்தியிருக்க வேண்டும். கூடவே முடிந்தளவுக்கு மலையக மக்களோடும் சிங்களத் தரப்பிலுள்ள ஜனநாயக – முற்போக்கினரோடும் இணைந்து செயற்பட விளைவதன் மூலமாக பரந்தளவிலான அரசியற் திரட்சியை உருவாக்கியிருக்க முடியும். சமவேளையில் சர்வதேச சமூகத்தோடும் பிராந்திய சக்திகளாகிய இந்தியா, சீனா போன்றவற்றோடும் உறவை வலுப்படுத்தியிருக்க வேண்டும். அந்த உறவு சம்பிரதாயமானவையாக அமையாமல், அரசியல், பண்பாட்டு, பொருளாதார உறவாக வளர்த்தெடுத்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு புலம்பெயர் சமூகத்தின் வாய்ப்பு பெரிதாக இருந்தது. ஆனால், குழுக்களாகவும் அணிகளாகவும் பிளவுண்டு, ஆளையாள் சந்தேகிப்பதிலும் வசைபாடுவதிலும்தான் கடந்த 15 ஆண்டுகளையும் தமிழ்ச்சமூகம் கழித்தது. உள்நாட்டிலும் வெளியே புலம்பெயர் சூழலிலும் இதுதான் நிகழ்ந்தது. கடந்த 15 ஆண்டுகால நிலவரங்களை அறிய வேண்டுமானால், தமிழ்ச் சமூகம் எப்படிச் செயற்பட்டிருக்கிறது? அதனுடைய சிந்தனைப்போக்கு எப்படியிருந்திருக்கிறது? அதற்குள் என்ன நிகழ்ந்திருக்கிறது? என்பதை அறிய இணைய வெளியிலும் ஊடகப் பரப்பிலும் தேடினால், அதிகமாகக் கிடைப்பது குப்பைகளேயாகும். ஆக்கபூர்வமான – விஞ்ஞான பூர்வமான விளைவுகள் மிக மிகக் குறைவு. மக்களுக்குத் தலைமை தாங்குவதென்பது கட்சித் தலைமை, கூட்டணிகளின் தலைமை போன்ற பெயரை வைத்திருப்பதில் நிகழ்வதல்ல. அதொரு தகுதியுமல்ல. அது அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு, மானுட, வரலாற்று அடிப்படைகளில் இதயமும் மூளையும் இணைந்து நிகழ்த்தும் ஒரு ஆழமான செயலாகும். பரந்த மனப்பாங்கோடும் கூர்மையான அறிவுத்திறன், உணர்திறன் போன்றவற்றோடும் செயற்படுமிடத்தே இதன் வெற்றியை எட்ட முடியும். போர்க்காலத்தில் ஒரு தொகுதி மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தனர். ஏனைய மக்கள் அரச கட்டுப்பாட்டில் வாழ்ந்தனர். இருநிலைகளில் மக்கள் வாழ நேர்ந்தாலும் அரசுக்கு எதிரான உளநிலையையே கொண்டிருந்தனர். போரின் முடிவுக்குப் பிறகு இந்த உளநிலை மேலும் தீவிரமடைந்தது. அதாவது, அரசும் சிங்களப் பேரினவாதமும் தம்மைத் தோற்கடித்து, நிர்க்கதியாக்கியுள்ளன என்ற கோபம் மக்களிடமிருந்தது. இதனைத் தமது அரசியலுக்கான முதலீடாக மாற்றுவதிலேயே தமிழ்த் தலைமைகள் தீவிர கரிசனையைக் கொண்டிருந்தன. பதிலாக மக்களைப் பலப்படுத்துவதிலும் பிரதேசங்களை வளர்த்தெடுப்பதிலும் கரிசனை கொள்ளவில்லை. மக்கள், தங்கள் வாழிடங்களில் வாழ்க்கையைத் தொடர்வதற்கு அங்கே கல்வி, மருத்துவம், போக்குவரத்து, தொழில்வாய்ப்பு, நீர்வசதி உள்ளிட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். அப்பொழுதுதான் மக்கள் அந்தந்தப் பிரதேசங்களில் நம்பிக்கையோடு வாழ்வர். இல்லாதபோது மக்கள் வாய்ப்பான சூழலை நோக்கிப் பெயரவே முற்படுவர். இது உயிரியல் இயல்பு. இதை உணரத் தவறியது தமிழ்த்தலைமை. பதிலாக அது அரசை விமர்சிப்பதன் மூலம் மக்களின் கோபத்தையும் கவலைகளையும் திசைமாற்ற முற்பட்டது. இதற்கு எண்ணெய் விடுவதிலேயே கவனம் கொண்டிருந்தனர் தமிழ்த்தேசியக் கருத்து நிலையாளர்களான பத்தியாளர்களும் ஊடகர்களும் எழுத்தாளர்களும். பதிலாக எதையும் ஆய்வு ரீதியாகப் பார்ப்பதற்கும் உணர்வதற்கும் தவறினர். அதன் விளைவுகளே தமிழ்த்தேசியம் என்ற கருதுகோளும் அதனுடைய கட்டமைப்பும் இன்று பலவீனப்பட்டிருப்பதாகும். இதற்கு தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற ஒற்றை முடிச்சு ஒருபோதும் நிரந்தரப் பயனைத் தராது. அதற்கப்பால் செய்யப்பட வேண்டிய பணிகளிலேயே அதனுடைய பயனும் விளைவும் உண்டு. இதைப் புரிந்து கொண்ட அணி ஒன்றாகவும் புரிந்து கொள்ள மறுதலிக்கும் அணி இன்னொன்றாகவும் உள்ளது. ஒன்று வரலாற்றை முன்னோக்கித் தள்ள முயற்சிக்கிறது. மற்றது பின்னிழுத்துக் கடந்த காலத்திற்குள் சென்று சேரத் துடிக்கிறது. ஒன்று எதிர்காலத்துக்கு நீரூற்றுவதில் அக்கறைப்படுகிறது. மற்றது, இறந்த காலத்தை உயிர்ப்பிக்க உடுக்கடிக்கிறது. https://arangamnews.com/?p=10890
  23. ”பொதுவேட்பாளர் என்பது வாக்கு சிதைவையே ஏற்படுத்தும்”- வீ.ஆனந்தசங்கரி இந்திய முறையிலான அரசியல் தீர்வை முன்வைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிக்க ஒன்றிணைய வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அதற்காக எந்த தரப்புடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாகவும் கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “வடக்கிற்கு வந்து 13 ஆம் திருத்தம் தீர்வு என கூறும் போது, தெற்கில் இலங்கை எரியும் என்கிறார்கள். 13 ஆம் திருத்தம், சமஸ்டி எனக் கூறுவதால் தெற்கில் எதிர்ப்புக்கள் அதிகரிக்கும் என்பதை அறியாத அரசியல் தலைவர்களாக உள்ளனர். இன்று நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் சிலர் தூக்கில் தொங்க வேண்டியவர்களும், சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர்களுமாக உள்ளனர். முள்ளிவாய்க்காலில் அப்பாவி உயிர்களை காப்பாற்ற தவறியவர்கள், இன்று நினைவேந்தல் செய்கின்றனர். கடந்த 4 தடவைகளில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் சட்டவிரோதமானவர்கள். நான் எல்லோரையும் கூறவில்லை. நாடாளுமன்றம் இறைமையை இழந்து பல ஆண்களாகிவிட்டது. வழக்கு தொடர்ந்தாலும் அதை எதிர் கொள்ள தயாராகவே இதை கூறுகிறேன். நாடாளுமன்றம் இறைமை இழந்துள்ளது. அங்கு இருப்பவர்களில் சிலர் சிறையில் இருக்க வேண்டியவர்கள். அரசியலில் அனுபவம் இல்லாதவர்களால் பல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போயுள்ளது. தமிழ், சிங்கள அரசியல்வாதிகளில் நான் மூத்த அனுபவம் உள்ள அரசியல்வாதி. இன்று பேசப்படும் அரசியல் தீர்வுகள் தீர்வாகாது. இந்திய முறையிலான அரசியல் தீர்வே பொருத்தமானது. அந்த தீர்வுத்திட்டம் என்னால் எடுத்து செல்லப்பட்ட போது ஜனாதிபதி, அமைச்சர்கள், பெளத்த மதத் தலைவர்கள், சிங்கள தலைவர்கள், சிங்கள மக்களும் மற்றும் சர்வேதேசமும் ஏற்றுக் கொண்டது. என்னைப் பொறுத்த வரையில், அந்த தீர்வுத் திட்டத்தை யாரும் எதிர்க்க மாட்டார்கள். பொருத்தமான தீர்வும் அதுவாக இருக்கும். இன்று முக்கிய காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல், இடம்பெறவுள்ளது. இந்த தீர்வுத் திட்டத்தை வெளிப்படையாக அறிவித்து போட்டியிடும் வேட்பாளரை ஒன்றாக சேர்ந்து ஆதரிப்போம். அதற்காக எந்த தரப்பாக இருந்தாலும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறேன். மற்றபடி அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு எனது ஒத்துழைப்பு இருக்காது. விக்னேஸ்வரன் நீதிபதியாக இருந்த போது பேச வேண்டிய சந்தர்ப்பங்களை விட்டுவிட்டார். நானே அழிவுகளிலிருந்து காப்பாற்ற வாருங்கள் என அழைத்தும் எதுவும் செய்யவில்லை. அப்போது அமைதியாக இருந்தவர், இன்று ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு ஏதோவெல்லாம் பேசுகிறார். அவர் பேசுவது அரசியலுக்கு இன்று பயனுள்ளதாக இல்லை. அவர் என்னுடைய நண்பராக இருந்தாலும், இதனை சொல்ல வேண்டியதாக உள்ளது. இன்று பொது வேட்பாளர் என பேசப்படுவது வாக்குச் சிதைவுகளை ஏற்படுத்துமேயன்றி வேறு எதையும் பெற்றுத்தராது” என தெரிவித்தார். http://www.samakalam.com/பொதுவேட்பாளர்-என்பது-வா/
  24. மவ்பிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளரான அருண் சித்தார்த் மவ்பிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராகவும் மற்றும் அக்கட்சியின் உயர் மட்ட குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் திலித் ஜயவீரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, இலங்கையை முற்போக்கான நாடாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அருண் சித்தார்த் பெரும் சேவையை ஆற்றுவார் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தார். குறிப்பாக அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என இலங்கைக்குள் அவரது குரல் உரக்க ஒலிக்கும் என எதிர்ப்பார்ப்பதாக திலித் ஜயவீர தெரிவித்தார். இதனிடையே செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அருண் சித்தார்த், இந்த வாய்ப்புபை பெற்றுக் கொடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். “நான் எப்பொழுதும் தேசியவாதக் கருத்துக்களையே கொண்டிருந்தேன். ஒரு இலங்கையனாக, இந்த நாட்டிற்கு நான் எப்போதும் கடன்பட்டிருக்கிறேன். நான் தமிழனாக இருக்கலாம், இன்னொருவர் முஸ்லிமாக இருக்கலாம் அல்லது சிங்களவராக இருக்கலாம். இது எனது நாடு. இந்த நாடுதான் எனக்கு கல்வியை கொடுத்தது. இந்த நாடுதான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது. அதனால் இந்த நாட்டுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். எனவே எனது சித்தாந்தத்துடன் பொருந்தக்கூடிய ஒரு முகாமைத் தேடிக்கொண்டிருந்தேன். அதனால் இந்த முகாமை தெரிவு செய்தேன். என்றார். http://www.samakalam.com/மவ்பிம-ஜனதா-கட்சியின்-யா/
  25. பிள்ளையானின் ஆதரவு ரணிலுக்கு! எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தானும் தனது கட்சியும் ஆதரவளிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) தலைவரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அறிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று (22) பிற்பகல் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார். மட்டக்களப்பில் உள்ள அவர்களின் கட்சியின் தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/பிள்ளையானின்-ஆதரவு-ரணிலு/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.