Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34945
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. முதல் சுற்றில் மோதும் அணிகள் பிரிவு A: அயர்லாந்து Andrew Balbirnie (c), Paul Stirling, Kevin O’Brien, Mark Adair, Curtis Campher, Gareth Delany, George Dockrell, Shane Getkate, Graham Kennedy, Joshua Little, Andrew McBrine, Barry McCarthy, Neil Rock, Simi Singh, Harry Tector, Lorcan Tucker, Ben White, Craig Young நமீபியா Gerhard Erasmus (c), Stephen Baard, Karl Birkenstock, Michau du Preez, Jan Frylinck, Zane Green, Nicol Lofie-Eaton, Bernard Scholtz, Ben Shikongo, JJ Smit, Ruben Trumpelmann, Michael van Lingen, David Wiese, Craig Williams, Picky Ya France Reserves: Mauritius Ngupita நெதர்லாந்து Pieter Seelaar (c), Colin Ackermann, Ben Cooper, Philippe Boissevain, Ben Cooper, Bas de Leede, Scott Edwards, Brandon Glover, Fred Klaassen, Stephan Myburgh, Max O’Dowd, Ryan ten Doeschate, Logan van Beek, Timm van der Gugten, Roelof van der Merwe, Paul van Meekeren சிறிலங்கா Dasun Shanaka (c), Dhananjaya de Silva, Kusal Perera, Dinesh Chandimal, Avishka Fernando, Bhanuka Rajapaksa, Charith Asalanka, Wanindu Hasaranga, Kamindu Mendis, Chamika Karunaratne, Nuwan Pradeep, Dushmantha Chameera, Praveen Jayawickrema, Lahiru Madushanka, Maheesh Theekshana Reserves: Lahiru Kumara, Binura Fernando, Akila Dananjaya, Pulina Tharanga, Pathum Nissanka, Minod Bhanuka, Ashen Bandara, Lakshan Sandakan, and Ramesh Mendis. பிரிவு B: பங்களாதேஷ் Mahmudullah (c), Shakib Al Hasan, Mohammad Naim, Soumya Sarkar, Liton Das, Mushfiqur Rahim, Afif Hossain, Nurul Hasan Sohan, Shak Mahedi Hasan, Nasum Ahmed, Mustafizur Rahman, Shoriful Islam, Taskin Ahmed, Shaifuddin, Shamim Hossain Reserves: Rubel Hossain, Aminul Islam Biplob ஓமான் Zeeshan Maqsood (c), Aqib Ilyas, Jatinder Singh, Bilal Khan, Khawar Ali, Mohammad Nadeem, Ayaan Khan, Suraj Kumar, Sandeep Goud, Nester Dhamba, Kaleemullah, Naseem Khushi, Sufyan Mehmood, Fayyaz Butt, Khurram Khan பபுவா நியூகினி Assad Vala (c), Charles Amini, Lega Siaka, Norman Vanua, Nosaina Pokana, Kipling Doriga, Tony Ura, Hiri Hiri, Gaudi Toka, Sese Bau, Damien Ravu, Kabua Vagi-Morea, Simon Atai, Jason Kila, Chad Soper, Jack Gardner ஸ்கொட்லாந்து Kyle Coetzer (c), Richard Berrington (vc), Dylan Budge, Mark Watt, Matthew Cross (wk), Josh Davey, Alasdair Evans, Chris Greaves, Oli Hairs, Michael Leask, Calum Macleod, George Munsey, Safyaan Sharif, Chris Sole, Hamza Tahir, Craig Wallace (wk), Brad Wheal சுப்பர் 12 சுற்றில் மோதும் முழு அங்கீகாரமுள்ள 8 அணிகள் பிரிவு 1: அவுஸ்திரேலியா Aaron Finch (c), Pat Cummins (vc), Josh Hazlewood, Josh Inglis, Glenn Maxwell, Kane Richardson, Mitchell Marsh, Steve Smith, Mitchell Starc, Marcus Stoinis, Mitchell Swepson, Matthew Wade, David Warner, Adam Zampa, Ashton Agar இங்கிலாந்து Eoin Morgan (c), Jos Buttler (vc), Moeen Ali, Jonny Bairstow, Sam Billings, Sam Curran, Chris Jordan, Liam Livingstone, Dawid Malan, Tymal Mills, Adil Rashid, Jason Roy, David Willey, Chris Woakes, Mark Wood Reserves: Tom Curran, James Vince, Liam Dawson தென்னாபிரிக்கா Temba Bavuma (c), Quinton de Kock (wk), Aiden Markram, David Miller, Keshav Maharaj, Bjorn Fortuin, Reeza Hendricks, Heinrich Klaasen, Wiaan Mulder, Lungi Ngidi, Anrich Nortje, Dwaine Pretorius, Kagiso Rabada, Tabraiz Shamsi, Rassie van der Dussen Reserves: George Linde, Andile Phehlukwayo, Lizaad Williams. மேற்கிந்தியத் தீவுகள் Kieron Pollard (c), Nicholas Pooran (vc), Chris Gayle, Andre Russell, Fabian Allen, Dwayne Bravo, Roston Chase, Andre Fletcher, Shimron Hetmyer, Evin Lewis, Obed McCoy, Lendl Simmons, Ravi Rampaul, Oshane Thomas, Hayden Walsh Jr Reserves: Darren Bravo, Sheldon Cottrell, Jason Holder, Akeal Hosein பிரிவு 2: ஆப்கானிஸ்தான் Rashid Khan, Rahmanullah Gurbaz, Hazratullah Zazai, Usman Ghani, Asghar Afghan, Mohammad Nabi, Najibullah Zadran, Hashmatullah Shahidi, Mohammad Shahzad, Mujeeb ur Rahman, Karim Janat, Gulbadin Naib, Naveen ul Haq, Hamid Hassan, Sharafuddin Ashraf, Dawlat Zadran, Shapoor Zadran, Qais Ahmed Reserves: Afsar Zazai, Farid Ahmed Malik இந்தியா Virat Kohli (c), Rohit Sharma (vc), KL Rahul, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Suryakumar Yadav, Hardik Pandya, Ravindra Jadeja, Rahul Chahar, Ravichandran Ashwin, Varun Chakravarthy, Axar Patel, Jasprit Bumrah, Bhuvneshwar Kumar, Mohammed Shami Reserves: Shreyas Iyer, Shardul Thakur, Deepak Chahar நியூஸிலாந்து Kane Williamson (c), Tim Seifert (wk), Martin Guptill, Todd Astle, Trent Boult, Mark Chapman, Devon Conway, Lockie Ferguson, Kyle Jamieson, Daryl Mitchell, Jimmy Neesham, Glenn Phillips, Mitchell Santner, Ish Sodhi, Tim Southee பாகிஸ்தான் Babar Azam (c), Imad Wasim, Mohammad Hafeez, Shadab Khan, Asif Ali, Azam Khan, Haris Rauf, Hasan Ali, Khushdil Shah, Mohammad Hasnain, Mohammad Nawaz, Mohammad Rizwan, Mohammad Wasim, Shaheen Shah Afridi, Sohaib Maqsood Reserves: Fakhar Zaman, S Dahani, Usman Qadir
  2. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 வணக்கம், கடந்த ஆண்டு நடக்கவிருந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் கோவிட்-19 பெருந்தொற்றால் பிற்போடப்பட்டு இந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஓமானிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 17 அக்டோபர் 2021 அன்று தகுதிச் சுற்றில் ஆரம்பித்து 14 நவம்பர் 2021 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் மோதும் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன: பிரிவு A: அயர்லாந்து நமீபியா நெதர்லாந்து சிறிலங்கா பிரிவு B: பங்களாதேஷ் ஓமான் பபுவா நியூகினி ஸ்கொட்லாந்து முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 17 அக்டோபர் முதல் 22 அக்டோபர் வரை அபுதாபி, சார்ஜா, மற்றும் ஓமானில் உள்ள அல் அமரட் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. பிரிவு A போட்டிகள் அபுதாபியிலும், சார்ஜாவிலும் நடைபெறவுள்ளன. பிரிவு B போட்டிகள் ஓமான் அல் அமரட் நகரத்தில் நடைபெறவுள்ளன. பிரிவு A இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு B இல் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகளும் சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 12 சுற்று: சுப்பர் 12 சுற்றில் T20 முழு அங்கீகாரம் உள்ள எட்டு அணிகளுடன் முதல் சுற்றில் தேர்வான 4 அணிகளும் இணைந்து மொத்தமாக 12 அணிகள் விளையாடவுள்ளன. இந்த சுப்பர் 12 சுற்றிலும் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு 1: அவுஸ்திரேலியா இங்கிலாந்து தென்னாபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகள் A1 (முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி) B2 (முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி) பிரிவு 2: ஆப்கானிஸ்தான் இந்தியா நியூஸிலாந்து பாகிஸ்தான் A2 (முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி) B1 (முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி) சுப்பர் 12 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 23 அக்டோபர் முதல் 8 நவம்பர் வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் பிரிவு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், பிரிவு இரண்டில் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். அணி A1 (பிரிவு 1 முதல் இடம்) vs அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்) அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்) vs அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) முதலாவது அரையிறுதிப் போட்டி 10 நவம்பர் அன்று அபுதாபியிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 11 நவம்பர் அன்று துபாயிலும் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகள் வெல்லும் அணிகள் 14 நவம்பர் அன்று துபாயில் மோதவுள்ளன. கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
  3. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! AdminOctober 5, 2021 இலங்கை இந்திய கூட்டுச்சதியை முறியடிக்கபலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல்குமரப்பா லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்.) திருமலை மாவட்ட தளபதி லெப்.கேணல் புலேந்திரன் (குணநாயகம் தருமராசா – பாலையூற்று,திருகோணமலை.) மேஜர் அப்துல்லா (கணபதிப்பிள்ளை நகுலகுமார் –சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.) கப்டன் பழனி (பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா– வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன் கரன் (வைத்திலிங்கம் மனோகரன் –சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.) கப்டன் மிரேஸ் (தவராஜா மோகனராஜா –வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.) கப்டன் நளன் (கணபதிப்பிளளை குணேந்திரராஜா –பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.) லெப்டினன்ட் அன்பழகன் (தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை,யாழ்ப்பாணம்.) லெப்டினன்ட் தவக்குமார் (சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.) 2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட் (கபிரியேல் பேனாட்மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.) 2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார் (ஞானபிரகாசம்பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு,யாழ்ப்பாணம்.) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்டபோது 06.10.1987 அன்று கப்டன் ரகுவப்பா (இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை,யாழ்ப்பாணம்.) வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமதுஇன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூருகிறோம். http://www.errimalai.com/?p=8078
  4. யாழில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் October 1, 2021 சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவில் பரிந்துரைக்கு அமைய 12 வயது தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டமானது வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 12 வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட நீண்ட கால நோய் உடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பைசர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் வைத்தியர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில் குறித்த தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2021/166678
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎈🎊 வாழ்க வளமுடன்🎂
  6. இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது September 28, 2021 இலங்கையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இது வரையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 513,609 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 455,344 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் எனினும் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மக்கள் தொகையில் 52.3 சதவீதமானோருக்கு தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. https://www.ilakku.org/the-number-of-corona-deaths-in-sri-lanka-has-increased-to-12731/
  7. அமைதியான ஆளுமை, ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல் - லெப். கேணல் சித்தார்த்தன்.! மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல் விருத்திக்கு அது அடித்தளமாகவும் இருந்தது. “பாவம் நல்லா மாட்டுப்பட்டுத்துகள், எப்படித்தான் நிண்டு பிடிக்கப்போகுதுகளோ” மூத்தபோராளி ஒருவன் பரிதாபப்பட்டான். “ஏன் அண்ண, உயிரையும் கொடுப்பம் எண்டுதானே போராட வந்தனாங்க, நிட்சயம் எதுக்கும் நிண்டுபிடிப்பம்.” மிக அமைதியான சுபாவம் கொண்ட அந்தப் புதிய போராளியிடமிருந்து வந்த நம்பிக்கையும், உறுதியுமிக்க வார்த்தைகள் எம்மை ஆச்சரியப்பட வைத்தன. “தம்பி உங்கட பேரென்ன?” “சித்தார்த்தன்” ஆம். அவனிடம் தொனித்த அந்த நம்பிக்கை, உறுதி அவன் போராளியாக வாழ்ந்த காலம் முழுவதும் அவனிடம் நிறைந்தே இருந்தது… இன்னும் வலிமையாய்…. மட்டக்களப்பில் 1992இல் தனது தொடக்கப்பயிற்சியை நிறைவுசெய்த “சித்தா” (நாங்கள் அவனை அப்படித்தான் அழைப்போம்) படைத்துறைப் பயிற்சிப் பிரிவில் இணைக்கப்படுகின்றான். இந்தப் பிரிவில் நின்றுபிடிப்பது கஸ்டம் என்று கூறப்பட்ட அந்த நாட்களில் அவன் இங்கு தன்னை மிக விரைவாக தகவமைத்துக் கொண்டான். தொடர்ச்சியான பயிற்சிகள், மிகக் கடினமான வேலைகள், புதிரான பாடங்கள், எதிரியின் தாக்குதல்கள், எமது வலிந்த தாக்குதல் முன்னெடுப்புகள் என்றிருந்த அந்த நாட்களில், சராசரிக்கு மேற்பட்ட ஒரு போராளியாக அவன் இனங்காணப்பட்டான். மிக அமைதியான சுபாவமும், உதவும் பண்பும், கடினமான வேலைகளைக்கூட தானாக விரும்பி ஏற்றுச் செய்யும் பக்குவமும், அவனது செயற்திறணும் போராளிகள் மத்தியில் அவனுக்கென்றொரு இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. பூநகரி கூட்டுப்படை முகாம் மீதான “தவளை” நடவடிக்கையே வடதமிழீழத்தின் அவனது முதற் களமாக அமைந்தது. சமர் முடிந்த கையோடு எழுதுமட்டுவாள் பகுதியில் பயிற்சி ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிகள் தொடங்கப்பட்டன. இப் பயிற்சிக் காலத்தில் பயிற்றுவித்த ஆசிரியர்களே பெருமைப்படக்கூடிய அளவிற்கு அவனது செயற்பாடுகள் அமைந்திருந்தன. அதேபோன்று, அவன் பயிற்சி வழங்கத் தொடங்கியபோது, வழமையான “பயிற்சி ஆசிரியர்கள்” என்ற தோற்றப்பாட்டிற்கு அப்பால் ஒரு வேறுபாடான பயிற்சி ஆசிரியராக அவன் இனங்காணப்பட்டான். செயற்திறண், முன்மாதிரி, அணுகுமுறை என்பவற்றால் “சித்தா மாஸ்ரர்” என்ற பெயர் போராளிகளின் மனங்களில் நிலைபெற்ற ஒன்றாக மாறிவிட்டிருந்தது. படைத்துறை தொடர்பிலான தொழிநுட்பக் கற்கைநெறி ஒன்றினைப் நிறைவு செய்து தென்தமிழீழம் திரும்பத் தயாரான வேளை சிறிலங்காப் படையினரால் “முன்னேறிப்பாய்தல்” நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிராக எம்மால் முன்னெடுக்கப்பட்ட “புலிப்பாய்ச்சல்” உட்பட்ட தாக்குதல்களில் பங்கு கொண்டான். இவற்றைத் தொடர்ந்து கொக்குளாய் இராணுவமுகாம் தாக்குதலிலும் பங்கெடுத்தான். அவன் சார்ந்திருந்த ஜெயந்தன் படையணி மீண்டும் தென்தமிழீழம் திரும்பியபோது சித்தாவும் புறப்பட்டான். பயிற்சி ஆசிரியர் பிரிவில் 1992 இல் இணைந்து கொண்டவன் மிக விரைவிலேயே அப்பிரிவின் பொறுப்பாளராக உயர்ந்தான். இக் காலகட்டத்தில் மட்டக்களப்புப் பகுதியில் இடம்பெற்ற பல தாக்குதல்களில் பங்கு கொண்டான். 1993இல் ஜெயந்தியாய இராணுவ முகாம் தாக்குதலுடன் தொடங்கிய இவனது சமர்க்களப் பட்டறிவு, மாவடிவேம்பு படை முகாம் , கிண்ணையடி படை முகாம், குடாப்பொக்கணை காவல்துறை நிலையம், புளுகுணாவ சிறப்பு அதிரடிப்படை முகாம், மாவடிவேம்பு படை முகாம், கறப்பள படை முகாம், வவுணதீவு படை முகாம் என விரிந்ததுடன் எம்மால் நடாத்தப்பட்ட பல்வேறு பதுங்கித் தாக்குதல்களும் முற்றுகை முறியடிப்புகளும் அப்பட்டறிவிற்கு மேலும் வலுச்சேர்த்தன. யாழ்.குடாநாட்டிற்கு பாதை திறக்கவென சிறிலங்காப் படைத்தரப்பு முன்னெடுத்த “ஜெயசிக்குறு” நடவடிக்கை தொடங்கப்பட்டபோது மீண்டும் தென்தமிழீழப் படையணிகள் வன்னி நோக்கி விரைந்தன. எதிர்கொள்ளப் போகும் சமரின் பரிமாணத்தைக் கருத்தில் கொண்டு ஜெயந்தன் படையணி மீள் ஒழுங்கு செய்யப்பட்டது. இதன்போது ஆற்றல் மிக்க அணித்தலைவர்களின் தேவையும் உணரப்பட்டது. இவ் அடிப்படையில் ஒரு கொம்பனி கொமாண்டராக சித்தா நியமனம் பெற்றான். அந்நாட்களில் கொம்பனி கொமாண்டராக, கொம்பனி மேலாளராக, குறித்ததொரு வேளையில் படையணியின் தாக்குதற் தளபதி என, பொறுப்பேற்று களங்களில் அணிகளை வழிநடத்தினான். “ஜெயசிக்குறு” எதிர்ச் சமர்முனையின் மாங்குளப் பகுதி, முன்னணிக் காவலரண் பகுதியில் அவனை சந்திக்கிறோம். கையில் ஏற்பட்ட விழுப்புண் முற்றாக மாறாத நிலையில் அவன் இயல்பாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தான். “என்ன சித்தா வழமைபோல காயம் மாறமுதல் வந்தாச்சி போல…. இது எத்தனையாவது….” சித்தாவிடமிருந்து அந்த வழமையான புன்னகையே பதிலாகக் கிடைத்தது. “முதல் மூண்டு… ஜெயசிக்குறுவில நாலு…. மொத்தம் ஏழு” அருகில் நின்ற போராளி அழுத்தமாய் கூறுகின்றான். ஓ… இவன் என்ன மாதிரியான மனிதன். ஏற்கனவே மூன்றுமுறை, அதில் கறப்பளையில் மார்பை ஊடறுத்த ரவை அவனை சாவின் வாசலுக்கே கொண்டுசென்றது. தாண்டிக்குளத்தில் காயமடைந்து அது மாறமுன்பே களம் வந்தான், மீண்டும் பெரியமடுவில்… அது மாறுமுன் மீண்டும் களம், அடுத்தது ஓமந்தையில்… குணமாகும் முன் மாங்குளம் வந்தான், மாங்குளத்திலும் அவனைத்தேடி ரவை வந்தது. இதோ இப்போது கைக்காயத்துடன் முன்னணியில்…. ஓயாத அலைகள் – 2. கிளிநொச்சி பிரிகேட் தளத்தைக் கைப்பற்றுவதற்கான தாக்குதல்கள் தொடங்கின. இத் தாக்குதல்களில் ஜெயந்தன் படையணியின் கொம்பனிகள் வெவ்வேறு முனைகளில் சண்டையிட வேண்டியிருந்தது. சித்தாவின் அணிக்கு கிளிநொச்சி குளப்பகுதி முன்னணி அரண் வரிசையைக் கைப்பற்றி குறித்த இலக்கு நோக்கி தாக்குதல் தொடுக்கும் பணி வழங்கப்பட்டிருந்தது. நீர் நிறைந்திருந்த குளத்தின் ஊடாக மிக இரகசியமாக நகரவேண்டியிருந்தது. நகர்வை மிகச் சிறப்பாகச் செய்த அவ்வணி குள பண்டை கடந்து கொண்டிருந்தபோது அங்கு சண்டை மூண்டது. சாதகமற்றதொரு சூழ்நிலையில், தரையமைப்பில் சண்டை தொடங்கி விட்டது. உக்கிரமான தாக்குதல், அந்த அணியின் வீரர்கள் அதன் தலைவனைப்போல் உறுதியானவர்கள், இறுதிவரை போராடக்கூடியவர்கள்….. அடுத்த நாள் கிளிநொச்சி பிரிகேட் தளம் அழிக்கப்பட்டு, கிளிநொச்சி நகர் மீட்பு வெற்றிச் செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது…. குறித்ததொரு பயிற்சித் திட்டம் தொடர்பாகக் கதைப்பதற்காக தேசியத் தலைவரால் அழைக்கப்பட்டிருந்தோம். மூத்த தளபதிகள் சிலருடன் தேசியத் தலைவர் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது எல்லைப்படை வீரர்களுக்கான பயிற்சிப் பாசறைக்கு பொருத்தமான பெயர் சூட்ட வேண்டும் என மூத்த தளபதி ஒருவர் கோரிக்கை வைக்கிறார். பலரும் பல்வேறு பெயர்களை முன்மொழிகின்றனர். தேசியத் தலைவரின் முகத்தில் சிந்தனை ரேகைகள்…. “சித்தா பயிற்சிப் பாசறை என்று பெயர் வையுங்கோ.” “லெப். கேணல் சித்தா ஒரு அமைதியான சுபாவம் கொண்ட ஆற்றல் மிக்க லீடர், ஒரு நல்ல பயிற்சி ஆசிரியர், களத்தில் பலதடவை காயப்பட்டவர், கடைசிச் சண்டையில்கூட மிக உறுதியாகச் செயற்பட்டவர்….” என சித்தா மாஸ்ரரைப் பற்றி தேசியத் தலைவர் கூறிக்கொண்டு போக எமக்கு ஆச்சரியமாகவும், அதேவேளை மிகப் பெருமையாகவும் இருந்தது. ஒரு உண்மை வீரனுக்குக் கிடைக்கக்கூடிய அதியுயர் மதிப்பு இதைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?. எமது போராட்ட வரலாற்றில் ஒரே களத்தில் நான்குமுறை விழுப்புண் ஏற்று ஒவ்வொரு விழுப்புண்ணும் மாறும் முன்பே களம் வந்து படைநடத்திய வீரன் அவன் ஒருவனாகத்தான் இருக்க முடியும். அந்தப் பெரும் சமர்க்களத்தில் அவன் ஐந்தாவது முறையாகவும் காயப்பட்டான். மீண்டும் அவன் களம் வரவில்லை, வரவேயில்லை. சித்தா….அமைதியான ஆழுமை. ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல். நினைவுப்பகிர்வு:- சுடரவன். விடுதலைப்புலிகள் (மார்கழி 2005 – தை 2006) https://www.thaarakam.com/news/8cc6303e-8121-4064-8fb1-38879ce975fb
  8. நீண்ட கடற்சண்டையில் அனுபவமுள்ள உத்வேகமான போராளி லெப்.கேணல் சீராளன்... லெப்.கேணல் சீராளன் தேவதாஸ் சூரியவதணன் - 12ம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:-13.11.1980 வீரச்சாவு: - 24.09.2006 நிகழ்வு: -திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவு 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட சீராளன் அடிப்படைப் பயிற்சிகள் நிறைவடைந்ததும் மேலதிக வகுப்புக்கள் மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப்பள்ளிக்கு செல்கிறான்.அங்கு சென்றவன் கடல் சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் வகுப்பக்களில் சிறந்து விளங்கியதுடன் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கினான். இவனது செயற்பாடுகளைக் கவனித்த அப்போது கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிப் பொறுப்பாளரான மாவீரரான லெப் கேணல். நரேஸ் அவர்கள் ராடர் நிலையத்திற்க்கு செல்லும் போது இவனையும் அழைத்துச் சென்று அங்கே ராடரில் எப்படி இலக்குகளை இணங்கானுவது போன்ற பல்வேறுபட்ட விடயங்களையும் அதன் நுணுக்கங்களையும் அவனுக்கு விளங்கக்கூடிய வகையில் சொல்லிக் கொடுத்து அவனை ஒரு சிறந்த தொலைத்தொடர்பாளனாக வளர்த்துக் கொண்டிருக்கையில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் நிலஆக்கிரமிப்பு நடவடிக்கையான முன்னேறிப்பாய்ச்சல் நடவடிக்கைக்கெதிரான விடுதலைப்புலிகளின் புலிப்பாய்ச்சலுக்கான கடற்சமரில் லெப்.கேணல் நரேஸ் அவர்கள் வீரச்சாவடைய சீராளனோ தனித்துவிட்டவனாக உணர்ந்தபோதும் தலைவர் அவர்களையும் மாவீரர்களையும் மனதில் நினைத்து தனது வழமையான செயற்பாடுகளில் புதிய உத்வேகத்துடன் ஈடுபட்டான்.தொடர்ந்து லெப் கேணல் நரேஸ் அவர்களின் நினைவாக கடற்தாக்குதல் படையணி உருவாக்கப்பட்டபோது இவனும் அங்கே சென்றான். மேலதிக பயிற்சிகளை முடித்தவன்.கடல் விநியோகப் பாதுகாப்புச் மற்றும் கடற்சமர்களிலும் பங்குபற்றியவன். தொடர்ந்து மாவீரரான லெப் கேணல் மங்களேஸ் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தென் தமிழீழத்திற்கான விநியோக நடவடிக்கையிலும் செவ்வனவே பங்குபற்றினான்.அதனைத்தொடர்ந்து புதிய கனரக ஆயுதங்களின் வரவினையடுத்து அக்கனரக ஆயுதப் பயிற்சிக்கென உள்வாங்கப்பட்டவர்களுள் ஒருவனாக வந்த சீராளன் அப் பயிற்சியிலும் சிறந்து விளங்கினான்.சிறந்த சூட்டாளனாக பயிற்சியை முடித்து வெளியேறியவன் கடற்புலிகளின் சாள்ஸ் படையணியில் இணைக்கப்பட்டு அக்கனரக ஆயுதத்துடன் கடற்சண்டைகளில் ஈடுபட்டான் .தொடர்ந்து தனது தனிப்பட்ட முயற்சியால் சண்டைப் படகின் தொலைத்தொடர்பாளனாக இரண்டாம் நிலைக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டான். சமாதன காலப்பகுதியில் தலைவர் அவர்களின் சிந்தனைக்கமைவாக கடற்புலிகளின் கடற்படைக்கான கட்டமைப்புக்களுடன் கூடிய பயிற்சிக் கல்லூரியான லெப் கேணல் நிரோஐன் கடற்படைக் கல்லூரிப் பொறுப்பாளனாக சிறப்புத்தளபதி அவர்களாள் நியமிக்கப்படுகிறான்.அப்பணியிலும் சிறந்து விளங்கி பல போராளிகளின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியதுடன் தனது களஅனுபவங்களையும் சகபோராளிகளுக்கு படிப்பித்தான். சண்டை தொடங்கியவுடன் சண்டைப்படகின் கட்டளை அதிகாரயாகவும் .தொடர்ந்து சண்டைப் படகுகளின் தொகுதிக்கட்டளை அதிகாரியாகவும் செயற்பட்டான்.கடற்சண்டைகளில் மிகவும் திறம்பட படகுகளை ஒருங்கினைத்து செவ்வனவே வழிநடாத்தினான்.இப்படியாக படிப்படியாக வளர்ந்த ஒரு போராளி , நீண்ட கடற்சண்டை அனுபவமுள்ள ஒரு சண்டைக்காரன்,தனக்குத் தெரிந்தவைகளை சகபோராளிகளுக்கு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசான், எந்த வேலையாகிலும் அதை சரியான முறையில் திருப்தியுடன் செய்த வீரன். சக போராளிகளை மதிக்கிற பன்பு. ஒரு சிறந்த நிர்வாகி . இப்படியாக சீராளனைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படிப்பட்ட ஒரு வீரனை 24.09.2006 அன்று தென்தமிழீழ விநியோகப் பாதுகாப்பு சமரின் போது புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலின்போது நாம் இழந்துவிட்டோம். எழுத்துருவாக்கம்..சு.குணா. https://www.thaarakam.com/news/8524e8fa-8c8d-46cf-aaad-bdfc17027183
  9. உயர்தர மாணவர்களுக்கு விரைவில் பைஷர் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது: கல்வியமைச்சு இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பைஷர் தடுப்பூசியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து கல்வி அமைச்சுக்கும் சுகாதார அமைச்சுக்கும் இடையில் இது தொடர்பாக ஏற்கனவே கலந்துரையாடல்கள் தொடங்கியுள்ளன என்றார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பாடலி சம்பிக்க ரணவக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முதல் கட்டமாக உயர்தர மாணவர்களுக்கு பைஷர் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/138670
  10. பிறந்தநாள் கொண்டாட்டம் – யாழில் 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்! September 20, 2021 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அவற்றை மீறி யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்னர் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரும், ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார பிரிவினரும் , யாழ்ப்பாண காவற்துறையினரும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2021/166246
  11. தடுப்பூசிகள் ஆண்மைக்குறைவு கருவள பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற கட்டுக்கதைகள் காரணமாக கொழும்பில் 20-30 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகின்றனர்- பேராசிரியர் நீலிகா தடுப்பூசிகள் ஆண்மைக்குறைவு கருவள பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற கட்டுக்கதைகள் காரணமாக கொழும்பில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகின்றனர் போல தெரிகின்றது இது முற்றிலும் தவறான கருத்து என அவர் தெரிவித்துள்ளார்.கொவிட் காரணமாக ஆண்மைக்குறைவு ஏற்படலாம் என சிறிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் தடுப்பூசிகளால் இத்தகைய ஆபத்துக்கள் உள்ளன என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.ஏனைய சிலர் வெளிநாட்டில் குடியேறும் திட்டம் காரணமாகவும் வெளிநாட்டிற்கு செல்லும் திட்டம் காரணமாகவும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வில்லை அவர்கள் சில மருந்துகளிற்காக காத்திருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்ள்ளார்.வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது உறுதியாகிவிட்டால் மாத்திரமே அவ்வாறு காத்திருப்பது உகந்தவிடயம் வெளிநாட்டு பயணம் உறுதியாகாவிட்டால் தடுப்பூசிகளை தவிர்த்துக்கொள்வது புத்திசாலித்தனமான விடயமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.battinews.com/2021/09/20-30_19.html
  12. 19.09.1994 அன்று “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடித்து வெற்றிக்கு வித்திட்ட மறவர்கள் நினைவில் கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன், கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 27 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வெற்றிக்கு வித்திட்டு தாய்மண்ணின் விடியலின் கனவுடன் கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.! தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.com/news/d80be2e2-d745-4a55-b148-6d79dd43204b
  13. 20 – 30 வயதிற்கு உட்பட்டோருக்கு செவ்வாய்க்கிழமை முதல் தடுப்பூசி September 19, 2021 வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொவிட்-19 தடுப்பூசி மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் 20 தொடக்கம் 30 வயதிற்கு உள்பட்ட அனைவருக்கும், நாளைமறுதினம் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி செவ்வாய் கிழமை முதல் வழங்கப்பட உள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விவரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியினால் வெளியிடப்படும். அவ்வாறு அறிவிக்கப்படும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாவது, இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகளும் வழங்கப்படும். 20 தொடக்கம் 30 வயதிற்கு உள்பட்டவர்கள் அனைவரும் தமது அடையாள அட்டை போன்ற உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனைகளிலும் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 2ஆம் ஆம் திகதி சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான நிலமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தமது பிரதேசத்திற்குரிய சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும். https://globaltamilnews.net/2021/166208
  14. வடக்கில் நேற்று 159 பேருக்கு தொற்று கண்டறிவு – 7 பேர் உயிரிழப்பு September 17, 2021 வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் நேற்று வியாழக்கிழமை தொற்றாளர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளமை சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை மாகாணத்தில் 159 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர். செப்ரெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 240 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்த நிலையில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் 240 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 36 தொற்றாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 61 தொற்றாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 39 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 18 தொற்றாளர்களும் மன்னாரில் 5 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2 பேரும் வவுனியா மாவட்டத்தில் 3 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். 2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 33 ஆயிரத்து 953 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 649 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 711 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 366 பேர் உயிரிழந்துள்ளனர். https://globaltamilnews.net/2021/166132
  15. தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் தியாகப் பயணத்தின் முதலாம் நாள்…! AdminSeptember 15, 2021 செப்.15 – 1987 🔴தியாக பயணத்தின் முதலாவது நாள்! காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடை பெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வாக்கி டோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார். அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம். 🔴தமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார் எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா தள்ளாத சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடுங்கும் விரல்களால் திரு நீற்றை எடுத்து திலிபனின் நெற்றியில் பூசுகிறார். சுற்றியிருந்த கமராக்கள் எல்லாம் அந்த காட்சியை கிளிக் செய்தது. வீரத் திலகமிடுகிறார் அந்தத் தாய். தாயற்ற திலீபன் அந்த தாயின் பாச உணர்வில் மூழ்கிப் போனார். 🔴போராளி பிரசாத் இன் ஆரம்ப உரை (மேஜர் பிரசாத்) காலை மணி 9.45 உண்ணாவிரத மேடையிலே நாற்காலியிலே திலீபனை அமர வைத்தோம். திலீபனின் அருகே நான், ராஜன், பிரசாத், சிறி ஆகியோர் அமர்ந்திருந்தோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அன்று பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத்தின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணா விரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பதனைபற்றி விளக்கம் அளித்தார்கள். தமிழ் மக்களினதும், தமிழர் தாயகத்தினதும் உரிமைகளை பேணும் நோக்கமாக இந்தியமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட ஜந்து கோரிக்கைகளும் விளக்கப்பட்டன. 🔴ஐந்து அம்ச கோரிக்கை 1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும். 2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நாடாத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும். 3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும். 4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக் கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும். பிரசாத் அவர்களால் மேற்படி ஜந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கையை இரண்டு தினங்களுக்கு முன்பு இந்திய உயர்ஸ்தானிகரின் கையில் நேரடியாக கிடைக்கக் கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 15 திகதி வரையும் தூதுவரிடமிருந்து எந்த பதில்களும் கிடைக்காத காரணத்தினால் சாகும் வரை உண்ணா விரதமும் மறியல் போராட்டமும் நடத்துவது என தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 🔴வாசிப்பதற்கு புத்தகங்கள் கேட்ட திலீபன் அதன்படிதான் இந்த தியாகச்செம்மலின் தியாகப் பயணம் ஆரம்பித்தது. பிற்பகல் 2.00 மணி இருக்கும் திலீபன் கம்பீரமாக வீற்றிருந்தார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்கள் முடிந்து விட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றுக் பொண்டிருந்த உண்ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்து விட்டது. படிப்பதற்கு புத்தகம் வேண்டும் என என்காதில் குசுகுசுத்தார் திலீபன். நான் ராஜனிடம் சொன்னேன். 15 நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வந்தன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதற்கு திலீபனுக்கு ஆர்வங்கள் எப்போதும் உண்டு. பிடல் காஸ்ரோ, சேகுவரோ, கொஜுமின், யசிர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையை பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிப்பார். பலஸ்தீன மக்களி்ன் வாழ்க்கையை பற்றி படிப்பதென்றால் அவருக்கு பலாச்சுழை மாதிரி பிடிக்கும். பலஸ்தீன கவிதை என்ற நூலை அவரிடம் கொடுத்தேன். 🔴மாணவர்கள் இளையோர்களின் உணர்ச்சி கவிதைகள்… அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். மாலை ஜந்து மணிக்கு பக்கத்து மேடையில் மீண்டும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று. பாடசாலை மாணவிகள் போட்டி பாட்டுக் கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசிலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தனது கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார். “அண்ணா திலீபா இளம் வயதில் உண்ணாமல் தமிழினத்திற்காக நீ தவமிருக்கும் கோலத்தைக் காணும் தாய்க் குலத்தின் கண்களில் வடிவது செந்நீர்.” சுசிலாவின் விம்மல் திலீபனின் கவனத்தை திருப்பியது. கவிதைத் தொகுப்பை மூடிவைத்து விட்டு கவிதை மழையில் நனைய தொடங்கினார். அவர் விழிகளில் முட்டிய நீர் தேக்கத்தை ஒருகணம் என் கண்கள் காணத் தவறவில்லை. எத்தகைய இளகிய மனம் அவருக்கு இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்க போகிறது. அகிம்சை போராட்டத்திற்கே ஆணி வேராக திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட தன்னுடைய உண்ணா விரத போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார். 🔴திலீபனின் தியாகப் பயணம் ஓர்….. ஐரிஸ் போராட்ட வீரர் பொபிஸ் ஆன்ஸ் என்ன செய்தார்? சிறைக்குள் நீராகாரம் அருந்தித்தான் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து உயிர் நீத்தார். இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலிபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதி உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டால் அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றிதான். 🔴நல்லூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடம்…. உலகின் புதிய அத்தியாயம் ஒன்றின் சிருஸ்டி கர்த்தா என்ற பெருமை அவனையே சாரும். ஆனால் அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா? இறைவா திலீபனை காப்பாற்றிவிடு. கூடியிருந்த மக்கள் நல்லூர் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக் கொள்கிறார்கள். இதை நான் அவதானித்தேன். பழம் தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரச தானியிலே, தமிழ்க் கடவுள் ஆகிய குமரனின் சந்நிதியில் ஓர் இளம் புலி உண்ணாமல் துவண்டு கிடந்தது. ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்து விடும். எனக்குள் இப்படி எண்ணிக்கொண்டேன். அப்போது ஒர் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான். திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல, தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான் இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவர் தமிழீம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லையே. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜந்தே ஜந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வற்புறுத்தித்தான் சாகும் உண்ணா விரதத்தை ஆரம்பி்த்திருக்கிறார். 🔴தமிழீழ தேசிய தலைவர் திலீபனை பார்க்க வருகின்றார். இந்தக் காரணத்தாலாவது இந்திய அரசு இதை நிறைவேற்ற தவறுமானால் திலீபன் அண்ணா இறப்பது நிச்சயம். திலீபன் அண்ணா இறந்தால் ஒரு பூகம்பம் இங்கே வெடிக்கும். ஒரு புரட்சி இங்கே வெடிக்கும். இதுதான் என்னால் கூற முடியும். அவரின் பேச்சு முடிந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அப்பேச்சை வரவேற்பது போல் கைகளை தட்டி ஆரவாரித்தனர். அந்த ஒலி அடங்க வெகு நேரம் பிடித்தது. அன்று இரவு 11.00 மணியளவில் தலைவர் பிரபாகரன் திலீபனை பார்ப்பதற்காக மேடைக்கு வருகிறார். அவருடன் சொர்ணம், இம்ரான், அஜித், சங்கர், ஜொனி இப்படி பலரும் வருகின்றனர். வெகுநேரம் வரை தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தார் திலீபன். யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்க வேண்டாம் என்று போகும் போது என்னிடம் கூறிவிட்டுச்சென்றார் தலைவர். நீர், உணவு உட்கொள்ளாத ஒருவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் விரைவில் களைப்படைந்து விடுவார். இதனால் தான் தலைவர் அப்படி கூறிவிட்டுச் சென்றார். ட வருகை! அன்றிரவு பத்திரிகை நிருபர்களும் பத்திரிகை துறையை சார்ந்தவர்களும் திலீபனை பார்க்க மேடைக்கு வந்திருந்தனர். முரசொலி ஆசிரியர் திருச்செல்வம், ஈழமுரசை சேர்ந்த பசீர் போன்றோருடன் திலீபன் மனம் திறந்து பேசினார். அவரை கட்டுப்படுத்த எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதிகம் பேசி உடம்பை கெடுத்துக் கொள்ள போகிறாரே என்பதால் அவரை அன்பாக கடிந்து கொண்டேன். இரவு 11.30 மணியளவில் கஸ்டப்பட்டு சிறுநீர் கழித்து விட்டு 12.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றார். முதல் நாள் முடிவு, அதிகாலை 1.30 இற்கு உறங்கினார். அவர் ஆழ்ந்து உறங்கத் தொடங்கிய போது நேரம் 1.30 மணி. அவரின் நாடித்துடிப்பை பிடித்து அவதானித்தேன். நாடித்துடிப்பு 88. சுவாசத்துடிப்பு 20. அவர் சுய நினைவோடு இருக்கும் போது வைத்திய பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டார். தனக்கு உயிர் மீது ஆசை இல்லை என்பதால் பரிசோதனை தேவை இல்லை என்று கூறுவார். அவர் விருப்பத்திற்கு மாறாக உணவோ, நீரோ, மருத்துவமோ இறுதிவரை அளிக்கக் கூடாது என்று முதல் நாளே என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டார். மேடைக்கு முன்பாக மகளிர் அமைப்பு உறுப்பினர்களும், பொதுமக்களும் கொட்டக் கொட்ட கண்விழித்துக் கொண்டிருந்தனர். இந்த தியாக தீபத்தி்ன் உண்ணாவிரத போராட்டத்தின் முதல்நாள் முடிவு பெற்றது. – தியாக வேள்வி தொடரும்…. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” http://www.errimalai.com/?p=56007
  16. தனிமைப்படுத்தல் ஊரடங்கு 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் September 15, 2021 நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இந்த மாதம் 21ஆம் திகதி அதிகாலை வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண தொிவித்துள்ளாா். இந்த உத்தரவால் நாட்டில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், ரடங்கு உத்தரவு தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமாயின் அது தொடர்பில் உரிய முறையில் அறிவிக்கப்படும் எனவும் ஊரடங்கு உத்தரவினை நீக்குவது குறித்து, கொரோனா ஒழிப்பு தொடர்பான செயலணியின் தீர்மானத்துக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளாா். நேற்றையதினம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பெயரளவில் இருப்பதுடன், இதனால் சிறிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என,ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2021/166021
  17. எதிர்வரும் வாரம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என எதிர்பார்ப்பு -அமைச்சர் ரமேஷ் பத்திரண தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் கொரோனா பணிக்குழு பரிசீலனை செய்த பின்னரே இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது எதிர்வரும்வாரம் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/எதிர்வரும்-வாரம்-தனிமைப்/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.