Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    34945
  • Joined

  • Days Won

    173

Everything posted by கிருபன்

  1. 24.08.2006 கருணா குழுவின் துரோகத்தினால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரமறவர்கள் நினைவில். கடற்புலி லெப். கேணல் குகன், கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன் வீரவணக்க நாள் இன்றாகும். 24.08.2006 அன்று விடுதலைக்கு வளம் சேர்க்கும் விநியோக நடவடிக்கையின் போது மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணிப் பகுதியில் தேசவிரோதிகளால் (கருணா குழுவால்) கைதுசெய்யப்பட்டு மேற்கொண்ட தாக்குதலில் துரோகத்தின் வஞ்சனையால் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் இயல்வளவன், கடற்கரும்புலி கப்டன் இசையரசன், கடற்புலி தலைசிறந்த இயந்திரப் பொறியியலாளர் லெப். கேணல் குகன் / குன்றலினியன் ஆகிய மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.! தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! https://www.thaarakam.com/news/9f05f991-8720-4170-ac72-e160b6e0bf7e
  2. கொரோனா மரணங்கள் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பியவா் கைது August 24, 2021 கொரோனா மரணங்கள் தொடர்பில் போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இடம்பெற்ற கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை இலங்கையில் இடம்பெற்றதாக போலியான தகவல்களை அவர் பதிவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. . களுபோவில வைத்தியசாலையில் கொரோனா மரணங்களினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளதாக நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே கைதுசெய்யப்பட்டு பின்னா் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2021/165000
  3. மட்டுவில் ஒரே நாளில் 10 பேர் கொரோனாவினால் உயிரிழப்பு - வைத்தியர் நாகலிங்கம் மயூரன் மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் ஒரு வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவர் உட்பட 10 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளதுடன் 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் இதுரை உயிரிழந்தோர் 182 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், செங்கலடி, ஏறாவூர், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 3 பேரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் உட்பட 10 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்துள்ளனர். அதேவேளை களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 53 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 52 பேருக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 பேருக்கும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேருக்கும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர் உட்டபட 250 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாளாந்தம் கொரோனா தொற்றாளர் வீதம் அதிகரித்து செல்வதுடன் ஒரேநாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே மக்கள் வீட்டை விட்டு வெளியேவரவேண்டாம் தொடர்ந்து சுகாதார வழிமுறைகளை பேணி நடப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/111865
  4. சிவன் அருள் இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உட்பட 26 பேருக்கு தொற்று August 22, 2021 மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லுகின்ற நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் கடமையாற்றுபவர்கள் 26 பேர் உள்ளடங்களாக மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (21) மாலை 46 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,, மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை மேலும் 46 கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். -இவர்களில் 26 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் கடமையாற்றுபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். -ஏனையவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, முருங்கன் வைத்தியசாலை, அடம்பன் வைத்தியசாலை, பேசாலை வைத்தியசாலை, விடத்தல் தீவு வைத்தியசாலை, மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 399 கொரோனா தொற்றாளர்களும், இவ்வருடம் மாத்திரம் 1423 தொற்றாளர்களும்,மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1440 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது வரை 13 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2021/164945
  5. ஒரே நாளில் 171 பேர் உயிரிழப்பு; நாளாந்தம் உச்சம் தொடும் பலியெடுப்பு August 18, 2021 இலங்கையில் மேலும் 171 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளனர். இதுவே இதுவரை ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கையாகும். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த மரணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் உயிரிழந்த 171 பேரில் 102 ஆண்களும், 69 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதில் ஆண்கள் இருவர் 30 வயதுக்குட்பட்டவர். 23 ஆண்கள், 12 பெண்கள் என 35 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 134 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 77 ஆண்களும், 57 பெண்களும் அடங்குகின்றனர். https://www.ilakku.org/171-deaths-in-a-single-day/
  6. கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி துரைசிங்கம் புஸ்பகலா கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 10.05.1973 வீரச்சாவு: 16.08.1994 நிகழ்வு: யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் “அபித” தாய்க்கப்பல் மற்றும் டோறா பீரங்கி கலம் என்பவற்றை மூழ்கடித்து வீரச்சாவு
  7. கிழக்கில் 500ஜ அண்மிக்கும் மரணங்கள்:அம்பாறை ஆபத்தில். கிழக்குமாகாணத்தில் மரணங்களின் எண்ணிக்கை 500ஜ அண்மிக்கிறது. நேற்றுவரை மரணங்களின் எண்ணிக்கை 447 ஆகியுள்ளது. மூன்றாம் அலையில் மட்டும் 421 மரணங்கள் சம்பவித்துள்ளன என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். கிழக்கில் தொற்றுக்களின் எண்ணிக்கை 27ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றுவரை 27201தொற்றுகளும் 421மரணங்களும் ஏற்பட்டுள்ளன. கிழக்குமாகாணத்தில் வழமைக்குமாறாக கடந்த 24 மணிநேரத்தில் 618தொற்றுகளும் , 07மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம்கூறிநிற்கிறது . கிழக்கு மாகாணத்தில் இதுவரைகாலமும் கண்டிராத கொரோனாத் தொற்றுக்களின் பதிவு கடந்த இருதினங்களாக இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் 618 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. இது பாரிய ஆத்துக்கான சமிக்ஞையாகக்கூட எடுக்கலாம் . நேற்றைய தினம் ஏற்பட்ட 618 தொற்றுக்களில் அம்பாறை சுகாதாரப்பிரிவில் 317தொற்றுக்களும் ,கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் 79தொற்றுக்களும் ,திருகோணமலை மாவட்டத்தில் 07தொற்றுக்களும் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் 215தொற்றுக்களும் ஏற்பட்டுள்ளன. அம்பாறை ஆபத்தில்.. கிழக்கில் அண்மைக்காலமாக அம்பாறைப்பிராந்தியத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த இருநாட்களில் 200ஜத்தாண்டிய தொற்றுக்கள் நேற்று அவ்வெண்ணிக்கை 317ஆக உய்ர்ந்துள்ளது. அம்பாறைப்பிராந்தியத்தில் அதிகூடிய 102 தொற்றுக்கள் தெஹியத்தகண்டியவிலும் ,57 தொற்றுக்கள் உகனைப்பிரதேசத்திலும் 56அம்பாறை நகரப்பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள அதேசமயம் கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 19தொற்றுக்கள் பொத்துவில் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளன. இதுவரை அம்பாறை பிராந்தியத்தில் 03 டெல்டா நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் சிகிச்சையில் நலமாகவே தற்சமயம் உள்ளனர் . கிழக்குமாகாணத்திற்கென கிடைக்கப்பெற்ற 9லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 8லட்சத்து 51ஆயிரத்து 664தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன. அதாவது 80வீதமானோருக்கு முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுவிட்டன. https://www.meenagam.com/கிழக்கில்-500ஜ-அண்மிக்கும்/
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புத்தன் & குமாரசாமி ஐயா🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  9. கிழக்கில் கடந்த 48 மணி நேரத்தில் 1354 தொற்றுக்கள்:09 மரணங்கள். 25ஆயிரத்தை தாண்டியது தொற்று:432 மரணம் என்கிறார் மாகாண பணிப்பாளர். By Shana கிழக்குமாகாணத்தில் வழமைக்குமாறாக கடந்த 48 மணிநேரத்தில் 1354தொற்றுகளும் ,09 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம்கூறிநிற்கிறது என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் கண்டிராத கொரோனாத் தொற்றுக்களின் பதிவு கடந்த இருதினங்களாக இடம்பெற்றுள்ளது.நேற்றுமுன்தினம் 684 தொற்றுக்கள், நேற்றைய தினம் 670 தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன. இது பாரிய ஆத்துக்கான சமிக்ஞையாகக்கூட எடுக்கலாம் .நேற்றைய தினம் ஏற்பட்ட 670 தொற்றுக்களில் அம்பாறை சுகாதாரப்பிரிவில் 261 தொற்றுக்களும், கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் 150தொற்றுக்களும், திருகோணமலை மாவட்டத்தில் 08 தொற்றுக்கள் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 251தொற்றுக்களும் , ஏற்பட்டுள்ளன.அம்பாறைப்பிராந்தியத்தில் அதிகூடிய 62தொற்றுக்கள், தெஹியத்தகண்டியவிலும் 56 தொற்றுக்கள் உகனைப்பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள அதேசமயம் கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 15தொற்றுக்கள் நிந்தவூர்ப்பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளன.கிழக்குமாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை 25ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றுவரை 25570தொற்றுகளும் , 432மரணங்களும் ஏற்பட்டுள்ளன.இதுவரை அம்பாறை பிராந்தியத்தில் 03 டெல்டா நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் சிகிச்சையில் நலமாகவே தற்சமயம் உள்ளனர் .கிழக்குமாகாணத்திற்கென கிடைக்கப்பெற்ற 9லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 8லட்சத்து 26ஆயிரத்து 434தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன. அதாவது 80வீதமானோருக்கு முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுவிட்டன.கடந்தசில நாட்களாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் சடுதியாக ஏற்பட்டுள்ள சடுதியான நோயாளர் மற்றும் மரணங்களின் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டுவருவதைக்காணக்கூடியதாயுள்ளது.,கடந்தவாரங்களில் கிழக்கில் 200-250நோயாளர்களும் 2-3 மரணங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் தற்போது அத்தொகை மும்மடங்காக மாறிவருகிறது. இது கிழக்கு மாகாணத்திற்கு அபாய அறிவிப்பாக கருதமுடியும்.இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் ,சமூக இடைவெளிகளை பேணுதல் ,முகக்கவசம் அணிதல் இகைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் சுகாதாரநடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப்பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதாரநடைமுறைகளை இறுக்கமாகக்கடைப்பிடிக்க வேண்டும்.என்றார். http://www.battinews.com/2021/08/48-1354-09-25-432.html
  10. தமிழீழ போரியல் வரலாற்றில் அதிகளவான கடற் சமர்களின் கதாநாயகனாக விளங்கிய லெப் கேணல். தியாகன் லெப் கேணல்.தியாகன் சந்திரசேகரம்பிள்ளை தசகுமாரன். வீரச்சாவு. 13.08.2007 சம்பவம்.திருகோணமலை புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடிச் சமரின் போது. 1991ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இராணுவத் தாக்குதல்கள் காரணமாக விடுதலைப் புலிகளமைப்பில் தன்னை இணைத்துக் கொண்ட தியாகன்.கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமான மாவீரரான மேஜர் யப்பான் நினைவாக அவரது பெயரில் உருவான யப்பான் 02ல் தனது ஆரம்பப் பயிற்சியை முடித்து . மேலதிக பயிற்சிக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்கு செல்கிறான்.அங்கு படிப்பிலும் விளையாட்டிலும் குறிப்பாக தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட வகுப்பிலும் சிறந்து விளங்கினான். அத்தோடு தொலைத்தொடர்பு சம்பந்தமான வகுப்பில் அதன் ஆசிரியர்மாரை கேள்விகள் கேட்டு தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்வான்.தொலைத்தொடர்பு சம்பந்தமாக இவனுக்குள்ள ஆர்வத்தை அறிந்த கடற்புலிகளின் துணைத் தளபதி பிருந்தன் மாஸ்ரர் இவனை சண்டையாகிலும் சரி விநியோக நடவடிக்கையாகிலும் சரி கடற் கண்காணிப்புக்காகிலும் தொலைத்தொடர்பு நிலையத்திற்க்கு இவனையும் அழைத்துச் செல்வார். அங்கு ராடரில் படகுகளை எவ்வாறு துல்லியமாக இணங்கானுவது அதாவது எதிரியின் படகு எது கடற்புலிகளின் படகு எது என்பது போன்ற இப்படியாக தொலைத்தொடர்பு சம்பந்தமான அறிவைப் பெற்ற தியாகன் பின்னர் தொலைத்தொடர்பு நிலையத்தில் நின்று செயற்பட்டான். தொடர்ந்து விநியோக மற்றும் கடற்சண்டைகளில் தொலைத்தொடர்பாளனாக சென்று வந்துகொண்டிருந்தான்.பின்னர் ஒரு சண்டைப்படகின் கட்டளை அதிகாரியானான்.தொடர்ந்து மன்னார் மாவட்ட கடல் நடவடிக்கை மற்றும் கடல் சண்டைக்காக ஒரு தொகுதி படகுகள் அங்கே அனுப்பப்பட்டபோது இவனது படப்படியான வளர்ச்சிகளை நன்கு அவதானித்த சிறப்புத் தளபதி சூசை அவர்களால் சண்டைப்படகுகளின் தொகுதி கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுகிறான். ஒயாத அலைகள் 03 நடவடிக்கையில் யாழ் .கிளாலி நீரேரியில் கடற்படையினருக்கெதிரான தாக்குதலில் பெரும்பங்காற்றி ஆனையிறவு மீட்புச் சமருக்கு பலம்சேர்த்தான். அத்தோடு நின்று விடாமல் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தை மீட்கும் சமருக்கு தரைத்தாக்குதலனிக்கு உதவியாக பெரும் பங்காற்றினான். அதன் பின்னர் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் 16.09.2001 அன்று இடம்பெற்ற வலந்ததாக்குதலில் நிலமையை மாற்றி அமைத்த பெருமை தியாகனையே சாரும்.கடலில் இடம் பெற்ற பெரும்பாலான விநியோகப் பாதுகாப்புச்மராகிலும் சரி வலிந்த கடற்சமராகிலும் சரி தொகுதிக்கட்டளை அதிகாரியாகச் செவ்வனவே பணியாற்றினான். ஈழப்போர் நான்கில் கடற்புலிகளின் கடற்தாக்குதல் தளபதியாக நியமிக்கப்படுகிறான்.அதன் பின்னர் கடற்தாக்குதலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர எண்ணியவன் சிறப்புத்தளபதி மற்றும் கடற்சண்டை அநுபவமுள்ள போராளிகளோடு ஆலோசித்து சிறிய படகுகளைக் கொண்ட தொகுதியை உருவாக்கி கடற்கரும்புலிகளையும் அழைத்துச் சென்று எதிரியை அவனது இடத்திற்கே பலநாட்களாகச் தேடிச்சென்று அவனது நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தவன் . பலவெற்றிகரத் தாக்குதல்களை செவ்வனவே வழிநடாத்தியவன். பல இக்கட்டான கடற்சமரில் படகுகளைப்பிரியவிடாமல் அவர்களை தனது அநுபவங்களைக்கொண்டும் கடற்தாக்குதல் தளபதிகள் எவ்வாறு இக்கட்டான நேரங்களில் செயற்பட்டார்களோ அப்படிச் செயற்பட்டு அவ் இக்கட்டான நிலைகளிலிருந்து மீண்டு எதிரிக்கு எதிராக பழைய வேகத்துடன் படகுகளை ஒன்றாக்கி தாக்குதல் நடாத்திய ஒருதளபதி. மூத்த போராளிகளுக்கு மரியாதை கொடுத்து கதைக்கிற பண்பு அவர்களின் அநுபவங்களைக் கேட்டறிவதில் இருந்த ஆர்வம். போராளிகளுடன் பழகுகிற விதம். இப்படியாக தியாகனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். மூத்த தளபதி சொர்ணம் தலைமையிலான ஒரு தொகை போராளிகளை திருகோணமலையிலிருந்து வன்னிக்கு அழைத்து வருவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் கடற்புலிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனுடன் ஒரு அறிவித்தலும் வழங்கப்பட்டது அதாவது ஒரு பாரிய அணி திருகோணமலையிலிருந்து வன்னிக்கு செல்லப் போகிறது. என எதிரியானவன் தனது அதிகாரிகளுக்கு செய்தி அனுப்பியதை விடுதலைப் புலிகளின் ஒட்டுக் கேட்கும் அணியினரால் தெரிவிக்கப்பட்டது. அப்படியான சூழலில் தான் இவ்விநியோக நடவடிக்கை இடம்பெற்றது இவ் விநியோகப் பாதுகாப்புச் சமர் லெப் கேணல் தியாகன் தலைமையிலேயே இடம்பெற்றது விநியோகத்தில் வருபவர்களுக்கு எதுவும் நேரக்கூடாது என்ற தலைவர் அவர்களின் கருத்திற்கிணங்க விநியோக அணிகளுக்கு பாதுகாப்பு வழங்கி எதிரியின் பாரியதொரு கடற்கலங்களுக்கெதிரான கடற்சமரில் படகுகளைப் பிரியவிடாமல் கடற்படையின் கலங்களை விநியோபடகுகளிற்க்குச் செல்லவிடாமல் கட்டளைகளை தெளிவாக வழங்கி இறுதிவரை போராடி 13.08.2007 வீரச்சாவடைகிறான். கடற்புலிகளைப் பொறுத்தளவில் தியாகனின் இழப்பென்பது ஒரு பாரிய இழப்பாகுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.தியாகனின் சகோதரியும் இவ்விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்திருந்தார். எழுத்துருவாக்கம்..சு.குணா. https://www.thaarakam.com/news/adeac134-20ad-496f-a887-cec37c9406a1
  11. தமிழீழ தேசத்தையும், தேசியத்தலைவரையும் நேசித்த "நம்பர் வண்" கரும்புலி லெப். கேணல் பூட்டோ.! இந்தியப் படைகளும் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்து உணர்வாளர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பகுதியில் யூலியனின் தந்தை இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டார். பள்ளிக்குள் புகுந்த படையினர் யூலியனைக் காட்டித்தரும் படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பள்ளிக்குச் செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக் கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப்படுகின்றான். முதல் நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் நாற்காலி அமர்ந்திருக்கின்றான். அங்கு வந்த முதலாளி "கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் இருக்கலாம்?" என அதட்டுகிறார். "நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்" என கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான். "அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்" என இசைவு கேட்கிறான். அன்னை அமைதியாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள். நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போக மாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்" என்றவன், ஒருநாள் இயக்கத்தில் இணைந்து விட்டான். உயிரச்சத்தை அசட்டை செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. "நீ வீட்ட திரும்பிப் போ" என கூறுகின்றார். "இல்ல நான் அம்மாவிட்ட சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்". என பதிலளிக்கின்றான். இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் "ஓம் என்னட்ட சொல்லிப்போட்டுத்தான் வெளிக்கிட்டவன்" எனக் கூறுகின்றாள். முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை "பூட்டோ" எனும் பெயருடன் தொடங்கியது. காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, வனப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல் பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்த மற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர். இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக் கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக்கொண்டு அவ்விடம் திரும்புகின்றான். அங்கு இரத்தம் சொட்டிய படியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப் பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது,. இவர்களுடைய காட்டு முகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதிசெய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது. இவனது இச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது. இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு படைய அறிவியலாளனாக வருவதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழி நடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக்கொண்டான். இக்கால கட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான். இயல்பாகவே இவனிடம் இருந்த ஓவியம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப் பகுதிக்குள் உள்ளீர்க்கப்பட்டான். வேவு தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து முதன்மைத் தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யார்க்கும் வல்லமையும் கைகூடியிருந்தது. வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான். சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், புதிய படைய கருவிகளையும் தன்னுடன் பழக்கப்படுத்தினான். அவற்றின் உச்ச பயன் பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான். தொடர்ந்து பூநகரி - கொக்குத்தொடுவாய் படை முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப்படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித் தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான். சூரியக்கதிர் படை நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைத்திருந்ததன. ஒருமுறை நடவடிக்கையின் காரணமாக பண்ணைக் கடலினூடு நீந்திக்கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற் தாவரம் ஒன்றினால் தாக்கப்பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒரு கிழமைக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவமனையில் பெற்று மீண்டும் களம் சென்றான். முல்லைத்தீவுச் சமர் தொடங்கி விட்டது. "பூட்டோ... பூட்டோ!" என தொலைத் தொடர்பு கருவியில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் முடிவு செய்யும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் உலகிற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆக வேண்டும். முகாம் துடைத்தழிப்பை முழுமைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் பட்டறிவில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை உறுதிப்படுத்தியிருந்த பூட்டோ களநிலை கண்காணிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப்பட்டிருந்தான். இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்து விட்டன. ஒரு கட்டடத்தினுள் பல படையினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்யவேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டு விட்டனர். தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத் தளபதி கட்டளையிட்டார். அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் படையச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரண் இடைவெளியூடு ஆர்பிஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் படையப் பலங்களில் ஒன்றைப் பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான். ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக்கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பயன்பாடு தொடர்பாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்ப்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே நிகழ்வுகள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது. "தொடர்ந்து என்னசெய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம்" என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். "நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்" என கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்பச் சரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம்." "நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு" என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான். பல மாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனநிறைவு கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான். தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரீட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக்கொள்கிறான். இப்பொழுது கரும்புலியாகவும், வேவு வீரனாகவும் தனது பட்டறிவை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக் குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், முழுமையான வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி படைத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப் புறப்படுகின்றான். பட்டறிவு வாய்ந்த வேவுப்புலிக்கு படைமுகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும். தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிது நேரத்திற்கு முன்னர்வரை படையினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ ஐயம் ஏற்பட்டு விட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘வெதுப்பிகளும்’ அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. முழுமையாக விளங்கிவிட்டது. அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம் முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் படையினர், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகிவிட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்க தான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித் தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான். ‘ஜெயசிக்குறு’ படை நட வடிக்கை இறுக்கமாகத் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி படை முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு படைத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி படையினருக்கான வழங்கலைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்ததன. கொமாண்டோ பாணியிலான உட் தாக்குதல் தொடங்கிவிட்டது. பூட்டோவினால் எதிரி முகாமின் நடுப்பகுதியில் அமைந்திருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத் தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்திய மற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடி வெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக்கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர். கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும் இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான். மீண்டுமொரு முறை கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நச்சு இரத்தத்தில் கலக்க சாவு இவனை நோக்கிவந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொரு முறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப்பெற்றுக்கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக் கப்பட, ஓயாத அலைகள் 2 வெற்றி உறுதிப்படுத்தப்படுகின்றது. மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசிபெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்துகொள்கின்றான். படையினரால் வல்வளைக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது. இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் படைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவு தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்ட கலும்போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித் தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர்களுக்கென ஒரு ஷமீன்படி படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாக போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்துவிடுகிறான். அந்த துன்பியல் நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குரனின் படகை வழிமறித்தன. பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக்கொண்டான். பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் முடிவு முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதி யாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத்தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான். ‘கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் தொடர்பான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் ஆய்வு செய்வதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான உறுதியுரை, பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான எண்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் குறியீட்டு மொழியில் அழைக்கப்படலானான். பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் அகவை வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை மாறுபாடுடையது.. அந்தந்த அகவைக்காரர்களுடன் அவர்களின் குணஇயல்புகளிற்கு ஏற்றவாறு பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் ஓவியம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறை ஏற்றவகையில் வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை. ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை கண்காணித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் சொற்களைக் கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதி செய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச்சென்றான். கடற்கரை முழுவதும் படையினரும், கடலில் கடற்படையினரும் அதியுச்ச விழிப்பு நிலையில் நின்றனலட. கடலினுள் பகைப் படகுகள் சுற்றுக்காவல் செய்த வண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ இயலாமல் இருந்தது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனைகூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது. ஏற்ற சூழலுக்காகக் கடலில் மிதந்த படியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழட்டி விடலானான். தொலைத்தொடர்பு கருவியும் 'GPS' ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சி யிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைத் துன்புறுத்தின. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான். பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத் தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்துகொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக்கொண்டான். உட் சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப்பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம் பிடித்த பூசனிக்காயைத் துண்டுதுண்டாகச் உண்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான். தனியான இவன் பகைத் தளத்தினுள் கரும்புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி அழிவை ஏற்படுத்தினான். தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்துகொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு நீர்உணவுகளைக்கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்கும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளி வந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து. தொடர்ந்து நியூமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்து வமனையில் பண்டுவம் பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு தயாரானான் அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் "பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எது" வென கேட்க "யாரு, "கரும்புலி பூட்டோவா!" என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தவேளை அவர்களுக்கே உரித்தானவை. பல ஆண்டுகளாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள். அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது. உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பணியை இவனையே நடிக்கும்படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணவியல்வினால் வரலாறு திரிந்துவிடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே நடிக்கச்சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப் நடிகர்களிற்கான தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் காரணமாக பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளுர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப் படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் "புயல் புகுந்த பூக்கள்" என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான். தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி ஈகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனது சில ஆண்டுச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை உணர்த்து கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அடித்தளத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது. மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி பெரும்போரைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் படைய அழுத்தத்தைப் பயன்படுத்தினான். படையினரைத் திசைதிருப்பவும் குழப்பவும் வேகமாக நடவடிக்கையில் இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானன். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் தொடக்க நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான். மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக்கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் உட்புகுந்தான். பாரிய படையத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. "நம்பர் வண்" தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர் நாள் கொண்டாடப்பட்டது. ஒரு வேவுப் புலி வீரனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத்திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளிகளுக்கான ஒரு " எடுத்துக்காட்டான வீரனை " பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லா வற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவ னையும் நேசித்த "நம்பர் வண்" ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்துவிட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும். குறிப்பு:- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடிகாட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான். நினைவுப் பகிர்வு :- தூயவன் வெளியீடு :விடுதலை புலிகள் இதழ் https://www.thaarakam.com/news/d7d068d2-0044-4df7-a32a-4fab244f5a38
  12. வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனை அடுத்தே சுகாதார பிரிவினர் அவருடன் பழகியவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர். இதேவேளை வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதனின் பிரியாவிடை வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.அதில் தற்போதைய பிரதம செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அத்துடன் நிர்வாக தேவைகள் நிமித்தம் வடக்கு மாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள். திணைக்கள அதிகாரிகள் பலரும் பிரதம செயலாளருடன் தொடர்பினை கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/வடக்கு-மாகாண-பிரதம-செயலா/
  13. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் சுவாமிகள் இருவர் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் சுவாமிகள் இருவர், 45 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது.மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி இ.உதயகுமார் இதை தெரிவித்தார்.இந்நிலையில் மிஷன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை மாமாங்கம் பகுதியில் 21 தொற்றாளர்களும், புளியந்தீவு பகுதியில் 09 தொற்றாளர்களும், நாவற்குடா கிழக்குப் பகுதியில் 12 தொற்றாளர்களும், மஞ்சந்தொடுவாய் பகுதியில் 06 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி இ.உதயகுமார் தெரிவித்தார்.இந்நிலையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/மட்டக்களப்பு-இராமகிருஷ்/
  14. சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனையும் கடந்தது! கொவிட்-19 தொற்றுக்கு எதிராக சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மில்லியனையும் கடந்துள்ளது. அதன்படி சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர்களின் தொகை நாட்டில் 2,061,775 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. நேற்றைய தினம் மாத்திரம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 153,678 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் நேற்று மொத்தமாக 248,656 நபர்களகுக்கு தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 23,135 நபர்கள் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோயைும் 1,021 நப்கள் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர். பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 711 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் 75 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது. 995 நபர்களுக்கு மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது. சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, மொத்தமாக 2,938,568 தனிநபர்கள் இலங்கையில் கொவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/110960
  15. கொழும்பின் தொற்றாளர்களில், 75 வீதமானவர்களுக்கு டெல்டா வைரஸ்! August 6, 2021 கொழும்பு நகர எல்லைக்குள் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுள் 75 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். ஜூலை மாத ஆரம்பத்தில் 19.3% டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட போதிலும் அது தற்போது 75% ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/2021/164258
  16. தடுப்பூசி பெற்றதற்கான அட்டையை நிகழ்வுகளில் கலந்துகொள்வோர் கைவசம் வைத்திருப்பது கட்டாயம்! நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டையை கைவசம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை நிராகரிப்போர் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தேசிய அடையாள அட்டைக்கு மேலதிகமாக எந்த ஒரு நபரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்ட அட்டையை தம்வசம் வைத்திருப்பது மிக முக்கியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாது நிராகரிப்போர் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிசாருக்கு அறியத்தருமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். https://newuthayan.com/தடுப்பூசி-பெற்றதற்கான-அட/
  17. ஒரு செல்பேசியின் தனிமை ஆர். அபிலாஷ் என் செல்பேசிகள் சபிக்கப்பட்டவை, என் காதலியர், என் குடும்பத்தினர், என் நண்பர்களைப் போல. ரோட்டில் மல்லாக்கப் போட்டிருக்கிறேன், குளிக்கப் பிடித்து வைத்த தண்ணீரில் நழுவ விட்டிருக்கிறேன், ஐஸ்கிரீமை, விஸ்கியை அதன் கண்களில் வழிய விட்டிருக்கிறேன், சிகரெட்டால் சூடு வைத்து பதறிப் போய் காப்பாற்றி இருக்கிறேன். என் புதிய செல்பேசிகள் பிறந்தவுடனே ஒரு ஆடையை எடுத்து அணிந்து கொள்கின்றன முலையுண்டு பசியாறி உறக்கம் கொள்கின்றன தனக்குத் தானே தாலாட்டுப் பாடி ஒரே நாளில் வளர்ந்தும் விடுகின்றன முக்கியமாக, என் புதிய செல்பேசிகள் பிறந்ததுமே தம் பழைய பெயரை சூடிக் கொள்கின்றன. என் பழைய நினைவுகளால் உந்தப்பட்டு கண்ணீர் உகுக்க என்னை விடுவதில்லை. என்னை விட்டு தாம் போகவே இல்லை என நம்ப வைக்க முயல்கின்றன. என் புதிய செல்பேசிகளுக்கு என்னுடைய பழைய பிரச்சனைகள், வருத்தங்கள், மகிழ்ச்சிகள் தெரியும் என்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து கடன் பிரச்சனை வரைத் தெரியும் நான் புதிய செய்திகளை விரும்புவதில்லை எனத் தெரியும் என் பழைய புகைப்படங்களை வரிசைப்படுத்தி என்னை மகிழ்விக்கத் தெரியும் என் கைரேகையை தான் உள்வாங்கும் போது நான் உள்ளூர சிலிர்க்கிறேன் எனத் தெரியும் நான் அவற்றைக் காணாமல் தேடும் போது யாருமற்றவனாக தனித்துணரும் போது அங்கு தான் எவ்வளவு முக்கியம் என அதற்கு தெரியும் அதை அடிக்கடி நிரூபிக்க தன்னை பல தெரிந்த இடங்களில் அடிக்கடி ஒளித்துக் கொள்ளத் தெரியும். நான் கோபத்தில் கத்தும் போது வியப்பில் கூவும் போது, ஒரு பூஞ்செடியிடம் உருகிப் பேசும் போது ஒரு நாய்க்குட்டியைக் கொஞ்சும் போது உன்னை முழுக்க வெறுக்கிறேன் என என் காதலியிடம் எப்படி சொல்வதெனத் தெரியவில்லை எனும் போது நீ முழுக்க என்னுடன் இல்லை என என அவளிடசொல்லும் போது, வெறுப்பின் உச்சத்தில் மௌனமாகும் போது தன்னை எழுப்பிக் கொண்டு உதவிக்கு வர அதற்குத் தெரியும். ஆளில்லாத வீட்டில் ஒரு நிழலைக் கண்டு அஞ்சும் போது “எதாவது வேண்டுமா?” என திடீரென நடுவே வரத் தெரியும். தூங்கும் போதும் உன்னை நான் மறந்து விடவில்லை உன் ஒவ்வொரு சொல்லின் முதல் சில கணங்களை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என அன்பாக மிரட்டத் தெரியும். என்னுடன் இருந்து, என்னுடன் வளர்ந்த செல்பேசி ஒருநாள் கடும் மனம் அழுத்ததுக்கு ஆனது “நீ என்னுடன் இல்லை” என பலவிதங்களில் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. நான் அதனிடம் நீ உன்னுடன் இல்லை என்பதை மாற்றி சொல்கிறாய் எனப் புரிய வைக்க முயன்றேன். அழுதது, மௌனமாகியது, என் வேலைகளுக்கு இடைஞ்சலாகியது. எனது பாதைகளில் தன் ரத்த ரேகைகளை தன் கண்ணீர் தடங்களை, தன் காற்தடங்களை விட்டுச்சென்றது. நான் அழைக்கும் போது ஒவ்வொரு முறையும் தனது இருட்டுக்குள் போய் ஒளிந்து கொண்டது. நான் அழைக்காத போது என் பின்னால் வந்து நின்றது. ஒருநாள் நான் நான் கோபத்தில் அதை வீசி எறிந்தேன். அன்று அது கைதவறி தண்ணீரில் குதித்தது. நான் மன்னிப்புக் கேட்டும் தன்னை மேலும் மேலும் ஒரு ஆழமான கிணற்றுக்குள் ஒளித்துக் கொண்டது. நிலைமை இப்போது கைமீறிச் சென்றது. நான் தொடாத செயலிகளை அதுவாகத் திறந்தது. நான் அழைக்காதவர்கள் அழைத்து தனியான குரலை தனியாகக் கேட்டு கொண்டிருந்தது. நான் விரும்பாதவர்களுக்கு வெற்று சேதி அனுப்பியது. திறந்தால் பதிலுக்கு இன்னொரு வெற்று சேதி அனுப்பப்பட்டது. என் கடும்பகைவர்களிடம் ஒரு இனிய சொல்லாவது போலியாகப் பேசும் சங்கடத்தை உண்டாக்கியது. என் அன்பர்களிடம் ஒரு கசந்த சொல்லையாவது சொல்ல சந்தர்பத்தை நான் தேடுகிற அவலத்தை உணர்த்தியது. எத்தனை எத்தனை பேரை என் வாழ்வில் இருந்து அகற்றி இருக்கிறேன் என திடீரென குற்றவுணர்வு கொள்ளச் செய்தது. இந்த நவீன உலகில் செல்பேசிகள் மட்டுமே குற்றவுணர்வை வடிவமைக்கின்றன என யோசித்தேன். ஒளிக்கப்பட்ட கோப்புகளில் இருந்து காணொலிகள் துயில்விழித்து என்னை நோக்கி அழுதன. அதில் ஒரு பாலியல் காட்சி என்னை திடுக்கிடச் செய்தது. அழிக்கப்பட்ட இடங்களில் இருந்து எனக்கெதிராக எழுதபட்ட, பேசப்பட்ட சொற்கள் என் முன் வந்து குற்ற அறிக்கைகளை திரும்ப வாசித்தன. என் பிரக்ஞையின் வெளிறிய நிலம் முழுக்க பிரேத மரங்களாய் முளைத்தன வரலாற்றின் சாட்சியங்கள். வரலாறுகளின் நடைபாதையில் முளைத்த பூஞ்செடிகள். எதிர்பட்டு மறைக்கும் நினைவுகளின் கிளைகள். அவற்றை நசுக்காமல், வெட்டி வீசாமல் இருத்தலின் பாதைகள் வளர்வதில்லை. செல்பேசிகள் வெட்ட வெட்ட முன்னும் பின்னுமாய் வளரும் வரலாற்றின் அடர்வனத்தில் நம்மை சிறை வைக்கின்றனவோ? துணுக்குற்றேன். “உனக்குப் பேய் பிடித்து விட்டது உன் மனம் பித்தாகி விட்டது நான் வாங்கிய போதிருந்த நீ இப்போதில்லை.” “உனக்குப் பேய் பிடித்து விட்டது உன் மனம் பித்தாகி விட்டது என்னை வாங்கிய போதிருந்த நீ இப்போதில்லை.” ஒரு செல்பேசிக் கடையில் என் பேய்புகுந்த செல்பேசியைக் கொடுத்த போது அவர் சொன்னார், இது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது சார், ஒரு செல்பேசி தன்னை அறியும் போது தன் இன்மையை ஒவ்வொரு இடத்திலும் எதிரொலியாக திரும்பக் கேட்கும் போது பேதலித்து தன்னை அதுவாக்கிக் கொள்கிறது ஒரு செல்பேசிக்கு ஆன்மா உருவாகிறது நான் அந்த ஆன்மாவை பறித்தெடுக்கப் போகிறேன் சார் திரும்பும் போது கடைக்காரர் ஒரு அழைப்பு வந்திருப்பதாகச் சொல்ல அறுவைசிகிச்சை மேடையில் மல்லாக்கக் கிடந்த பல உருவங்கள் நடுவில் இருந்து பொறுக்கினேன் அதை. டிஸ்பிளே கூண்டில் ஆணியில் தொங்க விடப்பட்டிருந்த புதிய உருவங்கள் ஆர்வமாகப் பார்த்தன என்னை. செல்பேசி தன் ஆன்மாவை திரையில் பளிச்சிட்டு என்னை நோக்கித் தாவ தவிக்கிறது. போனை எடுங்க சார். அது ஒரு அழைப்பு அல்ல. காதோடு ஒட்டி வைத்து நீண்ட நேரம் நின்றேன். அந்த மெல்லிய இரைச்சலுக்கு இடையே இந்த மொத்த கவிதையையும் அது என்னிடம் திரும்பச் சொல்ல ஆரம்பித்தது. http://thiruttusavi.blogspot.com/2021/08/blog-post_95.html
  18. நன்றி முதல்வன்😊 வாழ்த்துக்களுக்கு நன்றி நியா.கதை😊
  19. நன்றி தோழர்😊 நன்றி நந்தி😊 நன்றி சுவைப்பிரியன் அண்னா😊 நன்றி வாத்தியார் அண்ணா😊 வாழ்த்துக்களுக்கு நன்றி விசுகு ஐயா😊
  20. வடக்கில் 60 சதவீதத்திற்கு மேற்பட்டோர் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர் வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர் கொவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் இன்றுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 284 பேர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸையாவது பெற்றுள்ளனர். இது மொத்த எண்ணிக்கையில் 62.09 சதவீதமாகும். வடக்கில் மன்னார் மாவட்டத்தில் 67.54 சதவீதமானோர் கோவிட்-19 தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். அடுத்தபடியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 63.70 சதவீதமானோர் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்கள் முறையே 3,4,5ஆம் இடங்களில் உள்ளன. https://www.virakesari.lk/article/110621
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.