Everything posted by கிருபன்
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு ஏப்ரல் 29 முதல் பயணிகள் கப்பல் சேவை - கட்டண விபரங்கள் ! Published By: Digital Desk 5 27 Mar, 2023 | 10:59 AM இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு முதலாவது பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வருகை தர உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். பயணிகள் படகுச் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சேவையினை ஆரம்பிக்கும்போது காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் கீழ் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படுகிறது. இதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை 144 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொடுத்துள்ளதுடன் அதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படுகிறது. தற்போது இலங்கை கடற்படையினரால் முனையத்தின் ஆரம்ப நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு ஏப்ரல் மாதம் 02ஆவது வாரத்துக்குள் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு இலங்கை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதால் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எந்தவொரு வியாபாரிக்கும் இந்த சேவையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இச்சேவைக்கு மேலதிகமாக காங்கேசன்துறை துறைமுகம் விரிவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக தற்போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன் தொகை போதுமானதாக இல்லை என்பதால் இன்னும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை இந்திய எக்சிம் வங்கியிடமிருந்து கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பயணிகள் படகு உரிமையாளர்கள் ஒரு பயண வழிக்கு பிரயாணி ஒருவரிடம் 50டொலர்கள் அறவிடுவதுடன் 100கிலோகிராம் பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்று குறிப்பிட்டனர். கப்பல் சேவையினூடாக ஒரு தடவைக்கு 150 பயணிகளை கொண்டு செல்ல முடியும் என்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை பயணிப்பதற்கு 04 மணித்தியாலங்கள் எடுப்பதுடன், முதலில் பகல் வேளையில் மட்டுமே பயணச் செயற்பாடுகளை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/151465
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
இன்றுதான் இந்தத் திரியைப் படிக்க நேரம் வந்தது. @தமிழ் சிறி ஐயா மீண்டும் வேலைக்குப் போவது சந்தோஷம்! வீட்டில் அடைந்து கிடைக்காமல் வேலைக்குப் போனால் உடம்பும் குறையும். மனதும் இலகுவாகும். தவறு செய்தவன் குற்ற உணர்வில் வந்து கதைக்காமல் இருக்கலாம். அது அவனுக்கு தொடர்ந்து உறுத்திக்கொண்டு இருக்கும். இப்போதுவரை அவனுடன் கதைக்கவில்லை என்றால் உறுத்தல் பெருகும். ஒரு சாதாரண தருணத்தில் ஒரு சில வார்த்தைகளை சினேகபூர்வமாகச் சொன்னால் பெரிய மாற்றம் வரும்.
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
கவிதை அருமை. 👏 எப்போதும் முன்னைய காலங்களின் அனுபவங்கள் நனவிடை தோய்தலாக வந்து ஏங்கவைக்கும். ஆனால் மாற்றங்கள் ஒன்றே மாறாமல் இருக்கும். கனவுகள் கனவுகளாக இருக்க கழியும் நாட்களே வாழ்க்கை!
-
நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி! KaviMar 16, 2023 07:06AM நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக திமுக அமைச்சர்கள் பட்டாளமே ஈரோடு கிழக்கில் முகாமிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது. இந்நிலையில் ஈவிகேஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இந்த சூழலில் நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதயவியல் மருத்துவர்கள் நேற்று இரவு அவருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மருத்துவமனை தரப்பிலிருந்தோ ஈவிகேஸ் இளங்கோவன் தரப்பிலிருந்தோ இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. https://minnambalam.com/political-news/evks-elangovan-hospitalized-in-chennai-porur/
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
கதையை பாகம் IV இல்லாமல் பாகம் V ஆகவே முடித்திருக்கலாம். இதுதான் கதையாகப் பிரகாசிக்கின்றது🤩 நல்ல வாசிப்பனுவத்தைத் தருகின்றது😀
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
நாங்களும் வேர்க் புரொம் ஹோம். ஆனால் இந்த ரூட்டின் எல்லாம் கிடையாது. கடுமையான உழைப்பில் சுகம் கண்டவர்கள்! கிடைக்கும் சம்பளத்திற்கு வேலை செய்யவேண்டும் என்ற குற்றவுணர்வு உள்ளவர்கள்! ஆனால் கொஞ்சமாக வேலை செய்வதால் அலுவலகத்திற்கு வாங்கோ என்று உருட்டத் தொடங்கிவிட்டார்கள். கதை இன்னமும் வாசித்து முடிக்கவில்லை.. வாசிக்க தூண்டும் எழுத்து👏👏
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
இன்றுதான் இந்த ஆக்கத்தை வாசிக்க நேரம் அமைந்தது @விசுகு ஐயா. தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் பலர் மன அழுத்தங்கள், மனச் சோர்வுகள் இருந்தும் மற்றையவர்கள் அறிந்தால் மரியாதைக் குறைவு என்று தகுந்த மனநல ஆலோசகர்களை நாடுவது குறைவு. ஆனாலும் கவுன்சிலிங்கில் ஈடுபடும் நண்பர் கோவிட் காலத்துடன் மிகவும் பிஸியாகிவிட்டார். இப்போது ஐரோப்பாவில் இருக்கும் தமிழர்களும் அவரிடம் ஆலோசனை பெறுகின்றார்கள். எனினும் அகதி விண்ணப்பம் கோரி வருபவர்கள்தான் மன நல ஆலோசனைக்கு அதிகம் அனுப்பப்படுகின்றார்களாம்! எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மன அழுத்தம், உளச்சோர்வு, மனப்பிறழ்வு என ஏதாவது ஒன்று வரலாம். மற்றவர்களுக்காக வாழாமல் தங்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் தகுந்த ஆலோகர்களைப் பார்க்கவேண்டும்.
- திரும்பும் வரலாறு!
- திரும்பும் வரலாறு!
-
மடகஸ்கார் பயண அனுபவம்
மடகாஸ்கர் படங்களைப் பகிர்வதற்கு நன்றி @nilmini அக்கா. விசித்திரமான விலங்குகள், பறவைகள் வாழும் இந்தத் தீவுக்குப் போகச் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!😊
- மனிதா உன்னைத்தான்!
-
D4122D6A-7E32-473A-9C93-BFACB8835BF5.jpeg
From the album: கிருபன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அஹஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆங்கிலத்தில் ChatGPT ஓரளவு பரவாயில்லாத ஆக்கங்களைத் தருகின்றது! ஆனால் தமிழில் அந்தத் தரத்திற்கு வர இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்!
-
2D82888A-B017-483D-8C73-E62D0706416D.jpeg
From the album: கிருபன்
-
E72078EF-F13E-4702-8BF9-7975077E9ED0.jpeg
From the album: கிருபன்
-
622AA400-0982-475F-BEDA-93AEE55B50F4.png
From the album: கிருபன்
-
FDCFD3EF-0F82-488C-8D8A-A67A6ACF1AC5.png
From the album: கிருபன்
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
சயனைட்செலுத்தப்பட்டே தினேஸ் சாப்டர் கொலை-சிஐடி அதிர்ச்சி தகவல் By Rajeeban 09 Feb, 2023 | 10:03 AM பிரபல வர்த்தகர் தினேஸ்சாப்டர் சயனைட் செலுத்தப்பட்டு கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றவேளை இந்த விபரம் வெளியாகியுள்ளது. சிஐடியினர் மேலதிக நீதவான் ரஜீந்திரஜெயசூரிய முன்னிலையில் இந்த விடயங்களை சமர்;ப்பித்துள்ளனர். கழுத்துநெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியவை இல்லை என சிஐடியினர் தெரிவித்துள்ளனர். தினேஸ் சாப்டரின் ஐபோன் மற்றும் ஐபாட்டினை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியவேளை பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என சிஐடியினர் தெரிவித்துள்ளனர். தினேஸ்சாப்டர் தனது மனைவிக்கும் மனைவியின் குடும்பத்தினருக்கும் எழுதிய பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன https://www.virakesari.lk/article/147753
-
மெய்தீண்டாக் காதல்........!
தீண்டாக் காதல் பல வருடங்கள் நினைவில் நில்லாத “தீண்டாய் மெய் தீண்டாய்” பாடலை சுண்டிவரச் செய்துவிட்டது!
-
தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
நான் போட்ட பதிவை பொறுமையா வாசிக்கவேண்டும் @ஏராளன்😎
-
தமிழில் சரியாக எழுதுவது காணொளித் தொடர்
தலைப்பிலேயே எழுத்துப்பிழை இருக்கின்றது! 🤪 காணோளி - தவறு காணொளி, காணொலி - இன்னதில் எது சரியாகும்? `காணொளி` என்பதுதான் சரியானது. அச் சொல்லே நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டும் வந்துள்ளது. அண்மையில்தான் `காணொலி` என மிகைத் திருத்தம் செய்துள்ளார்கள். `Video` என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல்லாகவே `காணொளி` என்ற சொல்லாக்கம் செய்யப்பட்டது. `Video` என்ற சொல்லின் வேர்ச்சொல்லும் காண் (videre > see ) என்ற பொருளிலேயே வந்துள்ளது. பின்னர் இச் சொல்லிருந்தே பல ஆங்கிலச் சொற்கள் உருவாகின. அந்த வகையில் காணொளி எனச் சரியாகவே எழுதி வந்த எம்மைச் சிலர் Video இல் காண்பதுடன் கேட்கவும் செய்கின்றோமே என்று சொல்லி, `காணொலி`என மிகைத் திருத்தம் செய்துவிட்டார்கள். இதற்கு இவர்கள் `வானொலி` என்ற எடுத்துக்காட்டினைக் காட்டுவார்கள். வானிலிருந்து வந்த ஒலி என்ற வகையிலும், அதில் கேட்டலே முதன்மை என்பதாலும் அச் சொல் சரியானதே. இங்கு காணொளியில் காட்சியே முதன்மையானது. தமிழில் இரு சொற்கள் சேரும் போது இரண்டாவது சொல்லின் பொருளே முதன்மை பெறும் (எ.கா = பேருந்து ). இதற்கமைய `காணொலி` என்றால் அங்கு ஒலியே முதன்மையாகிவிடுமல்லவா! அது தவறு. காட்சியே முதன்மை. எனவே காணொளி தான் சரியானது. தமிழில் `எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே` என்கின்றது தொல்காப்பியம். அந்த விதிக்கமையச் சொல்லாக்கினால்; ஒளியினைத் தான் காண முடியும், காணும் ஒளி (காண் + ஒளி = காணொளி) என்ற பொருளில் காணொளி என்பதே சரியாகும். "காண் ஒளி என்பது கண்ட ஒளி, காண்கின்ற ஒளி, காணும் ஒளி என்று வினைத்தொகையாய் அமைந்து தெளிந்த பொருள் தருகிறது" என்பார் கவிஞர் மகுடேசுவரன். "காண்+ஒலி=காண்கின்ற ஒலியாகி, பொருளே மாறி விடும்" என்பார் முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான். எனவே முடிவாகக் கூறினால் `காணொளி` என்பதே சரியான தமிழ்ச்சொல்லாகும். ஆதாரம்: குவேரா https://qr.ae/prMaay
-
கடத்தப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!
தினேஸ் சாப்டர் மரணம் - தகவல்கள் கசிவது குறித்து பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை By Rajeeban 02 Jan, 2023 | 10:36 AM வர்த்தகர் தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் குறித்த விபரங்களை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தவேண்டாம் என பொலிஸ்மா அதிபர் விசாரணை அதிகாரிகளை எச்சரித்துள்ளார். சாப்டர் மரணம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிகளை கடந்த வாரம் அழைத்த பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரட்ண முக்கிய குற்றவாளி குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக கசியவிடப்படும் தகவல்கள் குறித்து எச்சரித்துள்ளார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுவரை விசாரணையில் திருப்புமுனை எதுவும் ஏற்படாத போதிலும் முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என்பது போல தகவல்கள் கசியவிடப்படுகின்றன என பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். பலசாத்தியக்கூறுகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன தற்கொலையும் அதில் ஒன்று ஆனால் நிரூபிப்பதற்கு எதுவுமில்லை என விசாரணை குறித்து அறிந்த நபர்கள் தெரிவித்துள்ளனர். கைகளை கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கேபிள்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டமையால் இது தற்கொலை என உறுதி செய்ய முடியாது கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த சாத்தியக்கூறுகளையும் நிராகரிக்கவில்லை தடயவியல் அறிக்கைகளை எதிர்பார்த்திருக்கின்றோம் தொலைபேசி உரையாடல்கள் குறித்த விபரங்களை எதிர்பார்த்திருக்கின்றோம் எனவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/144725
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
இந்த பனிக்கால இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்க்கிறேன் ஒவ்வொரு முறையும் வேறாக இருந்தாலும் எப்போதும் அது வெறுமையைத் தந்ததில்லை அன்பிருந்தாலும் நீங்கினாலும் உடன் இருந்தவர்கள் திடும்மென சாம்பலாகியிருந்தாலும் அரசாங்கங்கள் மாறியிருந்தாலும் நகரமே தீப்பற்றியெரிந்தாலும் இந்த நிலவுக்குப் பொருட்டே இல்லை வளர்வதும் தேய்வதும் மறைவதும் தோன்றுவதுமாய் இரவோடும் வானோடும் ஒரு விளையாட்டைப் போல தன் இருப்பை அதன் போக்கில் ஆடித் தீர்க்கிறது என் உடலில் உறைந்திருக்கும் ரத்தக் குளங்களை உருக்கி அதன் பிரதிமைகளை சேகரிக்கிறேன் வாழ்க்கை ஸ்தம்பிக்கும்போதெல்லாம் நிலாக்களைத் தளும்ப விட்டுக்கொள்வேன் - லீனா மணிமேகலை https://kanali.in/kathadi-kavithigal/