Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்க தீர்மானம் - தனது முடிவை நியாயப்படுத்துகின்றார் பைடன் Published By: Rajeeban 08 Jul, 2023 | 11:12 AM உக்ரைனிற்கு கொத்துக்குண்டுகளை வழங்குவது என்ற அமெரிக்காவின் முடிவை ஜனாதிபதி ஜோபைடன் நியாயப்படுத்தியுள்ளார். பொதுமக்களை கொன்ற வரலாற்றை கொண்ட கொத்துக்குண்டுகளை உக்ரைனிற்கு வழங்குவது என்ற மிகவும் கடினமான முடிவை அவர் நியாயப்படு;த்தியுள்ளார். கொத்துக்குண்டுகளை வழங்குவா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு நீண்டகாலம் எடுத்தது என அவர் தெரிவித்துள்ளார். உக்ரைனிடம் வெடிபொருட்கள் முடிவடைவதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொருத்தமான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு என உக்ரைன் தலைவர்கள் இதனை வரவேற்றுள்ள அதேவேளை மொஸ்கோ இதனை சாடியுள்ளது. உலகின் 120 நாடுகள் கொத்துக்குண்டுகளை தடை செய்துள்ளன. அடுத்தவாரம் நேட்டோவின் உச்சிமாநாடு இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் நேசநாடுகளிற்கு இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். கொத்துக்குண்டுகள் பொதுமக்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் உணர்ந்திருந்ததால் உக்ரைனிற்கு அவற்றை வழங்கும் நடவடிக்கைகளை நீண்டகாலமாக தவிர்த்துவந்தோம் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக்சுலிவன் தெரிவித்துள்ளார். உக்ரைனிடம் ஆட்டிலறிகள் இல்லாத நிலை உருவாகின்றது அமெரிக்கா உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் அதேவேளை விநியோகங்களை முன்னெடுக்கவேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த நிலையிலும் உக்ரைனை பாதுகாப்பற்ற நிலையில் விடமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொத்துக்குண்டுகள் நீண்டகாலம் வெடிக்காமல் மண்ணில் புதையுண்டு இருக்ககூடியவை என்பதால் சர்ச்சைகள் காணப்படுகின்றன. https://www.virakesari.lk/article/159491
  2. முல்லைத்தீவு மனித புதைகுழி: 13 உடலங்கள் இனங்காணப்பட்டன சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ன அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன முதல் நாள் அகழ்வில் 13 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஆண், பெண் இருபாலரும் இருக்கலாம் எனவும் மேலதிக அகழ்வு பணி இடம்பெறவுள்ள நிலையில் அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் வருகின்ற வியாழக்கிழமை இடம்பெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/வன்னி/முல்லைத்தீவு-மனித-புதைகுழி-13-உடலங்கள்-இனங்காணப்பட்டன/72-320506
  3. உக்ரேனின் தாக்குதலில் கிரைமியா பாலம் சேதம்: ரஷ்யா தெரிவிப்பு Published By: Sethu 22 Jun, 2023 | 05:37 PM கிரைமியா தீபகற்பத்தையும் உக்ரேனையும் இணைக்கும் பாலமானது உக்ரேனின் தாக்குலினால் சேதமடைந்துள்ளது என ரஷ்ய அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். கிரைமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. நேற்றிரவு நடந்த தாக்குதல் சோங்கார் பாலத்தை தாக்கியது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட உக்ரேனிய ஆளுநர் சேர்ஜி அக்சினோவ் தெரிவித்துள்ளார். சோங்கார் பாலம், உக்ரேனின் தென் பிராந்திய மாகாணமான கேர்சோனையும் கிரைமியாவையும் இணைக்கிறது. கேர்சோன் பிராந்தியமும் தனக்குரியது என கடந்த வருடம் ரஷ்யா அறிவித்திருந்தது. அதன் பின்னர், அப்பிராந்திய தலைநகரை உக்ரேன் மீளக் கைப்பற்றியது. https://www.virakesari.lk/article/158358
  4. ரஸ்ய படையினருக்கு எதிரான பதில் தாக்குதல் - மூன்று கிராமங்கள் மீட்பு - உக்ரைன் Published By: Rajeeban 12 Jun, 2023 | 10:56 AM ரஸ்ய படையினருக்கு எதிரான பதில்தாக்குதலில் மூன்று கிராமங்களை ரஸ்ய படையினரின் பிடியிலிருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மூன்று கிராமங்களை மீள கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உக்ரைனின் பதில் நடவடிக்கைகளில் அந்த நாட்டிற்கு கிடைத்துள்ள முதல் வெற்றிஇது. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்புகளிற்கு அருகில் உக்ரைன் படையினர் வெற்றியை கொண்டாடுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பிளகோடட்னே என்ற பகுதியில் கட்டிடங்களிற்கு வெளியே உக்ரைன் படையினர் உக்ரைன் கொடிகளை ஏற்றும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. டொனெட்ஸ்க் பிராந்தியம் மீண்டும் உக்ரைனின் கொடியின் கீழ் என உக்ரைன் படையினர் கோசமெழுப்பும் வீடியோவும் வெளியாகியுள்ளது. உக்ரைன் படையினரின் பதில் தாக்குதல்கள் மீள ஆரம்பமாகியுள்ளதை சனிக்கிழமை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதிசெய்திருந்தார். மூன்று கிராமங்களை இழந்துள்ளதை மொஸ்கோ இன்னமும் உறுதிசெய்யவில்லை மாறாக தாக்குதல்களை முறியடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/157498
  5. திரியை தூக்கியது பற்றி நிர்வாகம்தான் பதில் சொல்லவேண்டும்.🤓 நான் பெருமாள் கறுப்பரின் பெருமிதம் பற்றிக் கூறியபோது கறுப்பர் என்பதற்கும் கறுவல் என்பதற்குமான வித்தியாசம் என்னவென்றுதான் விளங்கப்படுத்தினேன். இது வெறும் தமிழ் இலக்கண விளக்கம் மட்டுமில்லை இல்லை. வேற்றினத்தவரை அடையாளப்படுத்தும் சொற்கள் கவனமாகப் பாவிக்கப்படவேண்டும். ஒரு இனத்தை இழிவுபடுத்தும் வகையில் பாவிப்பது கூடாது என்பதற்கான விளக்கம் மட்டுமே.
  6. ஆம். செய்திகள், கட்டுரைகள் இலக்கணத் தமிழில்தான் வருகின்றன. எழுத்தில் எப்படி வரும் என்பதற்கு கொடுத்த விளக்கத்தை மறுக்க முடிந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்ட்டால் இதில் குத்திமுறிவதில் பிரயோசனம் இல்லை.
  7. கறுவல் என்று செய்திகளில் கறுப்பினத்தவரைச் சுட்டிய ஒரு இணைப்பைக் கொடுக்கமுடியாத நீங்கள்தான் விதண்டாவாதம் செய்கின்றீர்கள். குற்றம் புரிந்த தமிழனை பொதுவாக “தமிழன்” என்றுதானே சொல்கின்றீர்கள். கடும் கண்டனத்திற்காக ஒரு இழிவழக்கைப் பாவித்திருக்கலாமே. இதற்கு மேல் குத்திமுறிய எனக்கு நேரம் இல்லை!
  8. கறுப்பர்கள் பார்க்காவிட்டால் இழிவாக எழுதுவதில் பிழை இல்லை என்பது போல இருக்கின்றது உங்கள் கருத்து. நான் கறுவல் என்பதற்கும் கறுப்பர் என்பதற்கும் உள்ள வேறுபாட்டைத்தான் சொன்னேன். White என்றால் வெள்ளையினத்தவர் அல்லது வெள்ளையர் என்றுதான் எழுத்தில் வரும். செவலை, சிவலை, வெள்ளை என்பதெல்லாம் பேச்சுவழக்கில்தான். இந்தப் புரிதல் இருந்தால் சரி.
  9. நாதம்ஸ் இணைத்த செய்தியை நான் பார்க்கவில்லை. வழமையான சொந்தச் சரக்காக இருந்திருக்கவேண்டும்! ஆனால் எந்த ஒரு ஊடகமும் செய்திகளில் கறுவல் என்று பாவிப்பதில்லை. கூகிளில் தேடிப் பார்த்துத்தான் சொல்கின்றேன். இலங்கைத் தமிழர்கள்தான் பட்டப்பெயராக அல்லது அடைமொழியாக கறுவல் என்று பாவிப்பவர்கள். கறுவல் செல்லத்துரை, கறுவல் மாடு, கறுவல் நாய் என்று சொல் வழக்கு உண்டு. ஆனால் கறுப்பினத்தவரைக் குறிக்க கறுவல் என்று பேச்சுமொழியில் சொல்வது கூட அவர்களை இழிவாகப் பார்க்கும் தன்மையில் இருந்தே வருவது. அதை எழுத்தில் கறுப்பினத்தவரைக் குறிக்கப் பாவிப்பது இழிவழக்குத்தான். அப்படி இல்லை என்றால் கறுவல் என்று பாவித்த ஒரு செய்தியையோ, கட்டுரையையோ காட்டுங்கள்.
  10. கறுப்பர் என்பது பெருமிதம் ஆனால் கறுவல் என்று சொல்லுவது இழிவழக்கு. இந்த வித்தியாசம் தெரியவேண்டும்😎 இன்று UK Post Office 30 வருடத்திற்கு முன்னர் கறுப்பரைக் குறிக்க பாவித்த சொல் இனவாதம் என்று செய்தி வந்துள்ளது.
  11. ஒரே வழி. அங்கு டொக்டர்களாக இருக்கும் பழைய நண்பர்களுடன் நல்ல நண்பர்களாக இருக்கவேண்டும் அல்லது குடும்ப உறவுக்குள் டொக்டர்கள் இருக்கவேண்டும். என்னுடன் படித்த ஐந்து நண்பர்கள் டொக்டர்களாக இருக்கின்றார்கள்! கைகால் முறிவுக்கு ஒருத்தர்! நரம்புப் பிரச்சினைக்கு ஒருத்தர்! இன்னொருத்தர் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில்! இவர்களை நம்பிப் போகலாம் என்று இருக்கின்றேன்😊
  12. கோவில் கட்டுவது பணம் சம்பாதிக்கவும், பந்தா காட்டவும்தானே. இது புதிது இல்லையே. கோவில்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் தினமும் பூஜையோடு நடந்தால் பிரயோசனமாக இருக்கும். ஆனால் அர்ச்சனைகள்தான் தினமும் நடக்கின்றன!
  13. அட உங்கள் மூளை கிரகித்துவிட்டது🤡 அகல் நியூஸ் உங்கள் பினாமித் தளம் என்பதும் அதன் நோக்கம் என்னவென்பதும் முன்னர் ஒருவர் திண்ணையில் எழுதியிருந்தார். அதை அடிக்கடி மறக்காமல் இருக்கவேண்டுமல்லவா!
  14. உன்க பெர், உன்க பீனமி அக்ல் நியுஸ்ல இக்கு.🤓
  15. மின் ஒலி இதய வரைவி அறை - தமிழ் சுத்தமாகத்தானே இருக்கு! ஆனால் தமிழருக்கு சுத்தத் தமிழ் விளங்காது🤪
  16. சுவி ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊
  17. நான் ஆபிரிக்காவில் இடைநடுவில் இருக்கும்போது அப்பா ஒரு கடிதம் எழுதினார். அதில் “பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கென வாழவேண்டும்” என்று எழுதியிருந்தார். இவர் அங்குபோய் சிம்பிளாக வாழ முடியாமல் படாடோபமாக இருந்திருக்கின்றார். எத்தனை கோடி என்றாலும் கரையத்தானே செய்யும். தனிய ஒரு பரோபகாரரிடம் வாங்கினால் மற்றைய பரோபகாரர்கள் தங்கள் பின்னிருக்கும் ஒளிவட்டம் மங்கிவிடும் எனக் கவலைப்படுவார்கள்! அதனால் எல்லோரும் உதவவேண்டும். பணத்தைச் சேருங்கள். ஒரு தொகையைக் கேட்கிறேன்!😉 பரோபகாரி - பிறர்க்கு உதவி புரிவோன் பரதேசி - அலைந்து யாசகம் பெறுபவர் இலண்டனில் பண்ணை போட பல மில்லியன் பவுண்ட்ஸ் தேவைப்படும் என்பது தெரியாதா?😛 பண்ணையை அமைத்து வேலை இல்லாமல் இருப்போருக்கு வேலை கொடுக்கவேணும் என்பதுதானே மிஷன். அதனால் எனக்கு புத்தகம் வாசிக்க நேரம் எப்போதும் இருக்கும்😎 நானும் நாட்டுக்கு இன்னும் சில வருடங்களில் இறங்குவதாகத்தான் திட்டம். நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிட்டால் செலவுகள் கூடும். பிஸினஸ் பிளானை புதுப்பிக்கவேண்டும்! கட்டாயம் சொல்கின்றேன்! என்மேல் பூரண நம்பிக்கை உங்களுக்கு இருக்கு என்று எனக்குத் தெரியும். காசு விசயத்தில என்னைப்போல நியாயவான் ஒருத்தரும் இல்லை. 😇 டக்கென்று மாத்திவிடுங்கோ! இது மோசடி செய்யும் பிளானோடு இருப்பவர்களின் வழி! நம்வழி நேர்மையான வழி. எல்லாக் கணக்கு வழக்கும் பகிரங்கமாக இருக்கும். சோஷல் மீடியாவில் லைவ் கமராவில் பண்ணையை எப்பொதும் பார்க்க வழி செய்வோம்! நல்லவர் இல்லையெண்டாலும் நம்பிக்கையும் நாணயமும் நிறைந்தவர்😎
  18. எனக்கு இங்குள்ள வாழ்வில் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. மூளை தேய வேலை செய்வதைவிட ஊருக்குப் போய் ஒரு organic பண்ணை ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பிஸினஸ் பிளான் எல்லாம் போட்டுவைத்திருக்கின்றேன்.😇 யாழில் பரோபகாரம், தயாள குணம், ஈகை, தருமம், தொண்டு, தானம், கொடை, காருண்யம், அறக்கட்டளை என்ற சிறந்த பண்புள்ள பலரைப் பார்க்கும்போது எனக்கு ஸ்பொன்ஸர்கள் பலர் வருவார்கள் என்று நம்பிக்கை வந்துவிட்டது!😉 @மெசொபொத்தேமியா சுமேரியர் முதலாவதாக ஒரு பத்தாயிரம் பவுண்ஸ் தருவீங்களா?
  19. போன வருஷம் பருத்தித்துறையில் இருந்து திரும்பும்போது அம்மாச்சி உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டேன். தரமும் நன்றாக இருந்தது. விலையும் மலிவு. போன வருடம் இருந்த எரிபொருள் நெருக்கடிக்குள்ளும் கொழும்பில் பம்பலப்பிட்டியில் இருந்து சுதந்திர சதுக்கம் போக நாலு தடியன்களுக்கு 1000 ரூபாதான் கொடுத்தோம்! ஊரில் பேரம் பேசமுடியாத நிலை போலிருக்கு! குடையின் பழைய விலையை கிழிக்க மறந்த கடைக்காரரின் பேச்சை நம்பும் அளவுக்கு அப்பாவியா நீங்கள்?😂🤣
  20. புருஷன்மார் இந்த வயதிலும் கண்டிசன் போட்டுத்தான் வைச்சிருக்கினம்! நானும் வாசிக்கின்றேன்! சிறிலங்காவில் ஏலக்காயும் இல்லையோ!😉
  21. செங்கோட்டைசிங்கம் படத்தில், KV மகாதேவன் இசையில், TMS, ஜிக்கி இனிமையாக பாடிய, மருதகாசியின் வரிகள்.
  22. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி பரணி. யாழ் இணையம் வாழ்க்கைத்துணையை கண்டடைய உதவியது என்பது புதிய தகவல்.!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.