Everything posted by கிருபன்
-
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உண்மை என்ன? March 24, 2025 — கலாநிதி சு.சிவரெத்தினம் — சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான தமிழர் முற்போக்குக் கழகமும் இணைந்து ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் அரசியல் கூட்டணியினை 15.03.2025 அன்று உருவாக்கியுள்ளனர். ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்பது சந்திரகாந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோருடைய சிந்தனையில் முகிழ்ந்த முத்தல்ல. 2018ம் ஆண்டு கிழக்குத் தமிழர்களின் அரசியல் சமூக, பொருளாதார, அரசியல் சீரழிவு கண்டு அவற்றை நிவர்த்திக்கும் முகமாக த.கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த.சிவநாதன் ஆகியோரின் முயற்சியினால் உருவாக்கிய ஓர் அமைப்பே ‘கிழக்குத் தமிழர் ஒன்றியம்’ ஆகும். கிழக்குத் தமிழர் ஒன்றியமானது அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பொதுச்சின்னத்தில் எதிர்காலத் தேர்தல்கள் அனைத்திலும் கிழக்கில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து, அனைத்துத் தமிழ் கட்சிகளையும் அழைத்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் ஒரு கூட்டத்தினையும் நடாத்தியிருந்தது. அங்கு நடந்த பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்குப் பின் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிப்பது என்றும் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பாடான கட்சிகள் அதில் கையொப்பம் இட்டு கூட்டமைப்பை உருவாக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டதுக்கு இணங்க கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அரசியல் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ உருவாக்கம் பெற்றது. இந்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்துத் தமிழ்க் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டபோது அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழர் விடுதலைக் கூட்டணி,(TULF) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP), வரதாராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் தங்களுடைய உடன்பாட்டைத் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் பின்பு வரதாராஜப் பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆகிய இரு கட்சிகளும் விலகிக் கொண்டன. இறுதியாக அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் கைச்சாத்திடுவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல்வேறு இழுத்தடிப்புகளுக்குப் பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதைத் தவிர்த்துக் கொண்டது. இறுதியாக அகில இலங்கை தமிழர் மகாபையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு அதன் அங்கீகாரத்துக்காக 2019ம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தது. எனவே ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ எனும் பெயரைப் பயன்படுத்துவதற்கான தார்மீக உரிமை இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட மேற்படி இரு கட்சிகளுக்கும் உரியதே தவிர இதனை புறக்கணித்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு அல்ல என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும். இன்று கிழக்குத் தமிழர் ஒற்றுமை பற்றிப் பேசுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2020ம் ஆண்டுத் தேர்தலில் தங்களது கட்சி நலன் சார்ந்தே சிந்தித்தார்கள். கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதை அவர்கள் விரும்பவேயில்லை. தங்களுடைய கட்சியின் பெயரும் படகுச் சின்னத்தையும் கிழக்குத் தமிழர்களின் நலனுக்காக விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை. ஆனால் அகில இலங்கை தமிழர் மகாசபை கிழக்குத் தமிழர்களின் நலனுக்காக மட்டக்களப்பில் தன்னை தியாகம் செய்யத் தீர்மானித்தது. அந்தவகையில் மட்டக்களப்பில் தனித்து தேர்தலில் போட்டியிடாது படகுச் சின்னத்தை ஆதரிப்பது என்றும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் சார்பில் தங்களுடைய இரு வேட்பாளர்களை நியமிப்பது என்றும் இது போன்று அம்பாறையிலும் திருகோணமலையிலும் அகில இலங்கை தமிழர் மகாசபை தனது சின்னமான கப்பல் சின்னத்தில் போட்டியிடுவதென்றும் அதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆதரித்து தனது வேட்பாளர்களை கப்பல் சின்னத்தில் நிறுத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி மட்டக்களப்பில் அகில இலங்கை தமிழர் மகாசபை தனது வேட்பாளர்களை படகுச் சின்னத்தில் நிறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குச் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறையிலும் திருகோணமலையிலும் அகில இலங்கை தமிழர் மகாசபையின் வேட்பாளர் பட்டியலுக்கு தங்களுடைய வேட்பாளர்களை நியமிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. அத்தோடு வி.முரளிதரன் (கருணா) அகில இலங்கை தமிழர் மகாசபையில் இணைந்து அம்பாறையில் போட்டியிட்டதையும் ஆட்சேபித்தார்கள். இவர்களுடைய இவ்வாறான சுயநலமான நடத்தையினால் அம்பாறையில் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரேயொரு தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இத்தேர்தலில் இழக்கப்பட்டது. அதற்கான பெரும் பொறுப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே சாரும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் பொதுச்சின்னத்தில் கிழக்கில் போட்டியிட்டிருந்தால் 2020ம் ஆண்டுத் தேர்தலில் மட்டக்களப்பில் இரு பிரதிநிதித்துவமும் அம்பாறையில் ஒரு பிரதிநிதித்துவமும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்புப் பெற்று அத்துடன் மேலதிகமாக தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றும் கிடைக்கப் பெற்று கிழக்கில் தனித்துவம் பேணும் ஒரு மாற்று அரசியல் சக்தியாக உருவாகியிருக்க வேண்டிய கூட்டமைப்பை அப்போது இல்லாமலாக்கியது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியேயாகும். தேர்தலில் வெற்றியீட்டிய பின் மாற்று அரசியல் கலாசாரத்தினையும் கிழக்கிற்கான சிறந்த அபிவிருத்தித் திட்டங்களையும் உருவாக்கிச் செயற்பட வேண்டும் என்ற தூர சிந்தனை கொண்டு உழைத்த த.கோபாலகிருஸ்ணன் அவர்களை தேர்தலில் வென்றியீட்டிய சிவநேசதுரை சந்திரகாந்தன் எள்ளவும் பொருட்படுத்தாது தன்னுடைய நலனுக்காக எல்லாரும் சேர்ந்து உழைத்த வெற்றியினைப் பயன்படுத்திக் கொண்டார். அதற்கான பலனை 2024ம் ஆண்டு மக்கள் அவருக்கு வழங்கினர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 2020ம் ஆண்டில் அவர்களுக்கிருந்த அனுதாப அலையினையும் அபிவிருத்தி நோக்கையும் வைத்து தாம் வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையில் கிழக்கின் அரசியல் ஒற்றுமையினைச் சீர்குலைத்தார்கள். ஆனால் இன்று 2024ம் ஆண்டுத் தேர்தலில் கற்ற பாடத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போது கிழக்குத் தமிழர்களின் அரசியல் ஒற்றுமை, எதிர்கால நலன் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். இவர்கள் பேசுகின்ற இந்த ஒற்றுமை, நலன் என்பவை தாம் இழந்த அரசியல் நலன்களையும் சுகபோகங்களையும் மீண்டும் பெற்றுக் கொள்வதற்காக போடப்படும் அரசியல் கபட நாடகமேயாகும். எனவே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இந்தக் கபட நாடகத்துக்குப் பின்னால் உள்ள சுயநல நோக்கத்தைப் புரிந்து கொண்டு தமக்கான அரசியல் திசையை எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டும். https://arangamnews.com/?p=11912
-
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் இணைவு; கிழக்குத் தமிழருக்கு ஆபத்தான கூட்டு கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது கிழக்கு தமிழர்களின் பலத்தினை குறைக்கின்ற,வடக்கு,கிழக்கில் பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளும் ஒரு கூட்டமைப்பாகவே இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யம் பாராளுமன்ற குழு பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கடந்த காலத்தில் ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோர் இணைந்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதனை உருவாக்கி இருப்பதாக ஊடகங்கள் மூலமாக அறிந்து கொண்டேன். நீதிமன்ற தீர்ப்பு ஒன்று கூறப்பட்டிருக்கின்றது. பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. நாங்கள் சொல்லவில்லை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. ஆகவே கூட்டமைப்பு அமைப்பது என்பது சாதாரண விடயமாக இருக்கலாம் .ஆனால் அந்த கூட்டமைப்புக்கு உரியவர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கின்றார்கள் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.ஒரு காலத்தில் ஒரு விடுதலை போராட்டம் என்பதனை உரிமையோடு போராடிய ஒரு கட்டமைப்பில் இருந்தவர்கள். ஒரு கட்டத்தில் அந்த இயக்கத்தை பிளந்து கொண்டு வந்து அந்த இயக்கத்தை காட்டி கொடுத்தவர்கள் என்று கூட சொல்லுகின்றார்கள் மக்கள். ஆகவே இவ்வாறானவர்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள், அதுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்று கூறுகின்றார்கள். கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்றால் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வடக்கு கிழக்கில் நாங்கள் இணைந்து செயல்படுகின்ற போதுதான் நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருக்க முடியும். மாறாக கிழக்கு என்றும், வடக்கு என்றும், மலையகம் என்றும், மட்டக்களப்பு என்றும், யாழ்ப்பாணம் என்றும் நாங்கள் பிரிந்து செயல்படுகின்ற போது எங்களுடைய பலமான சக்தியை அழிக்கின்ற செயற்பாடாக தான் இருக்கும். ஆகவே கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்று உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு தமிழர்களின் பலத்தை குறைக்கின்ற அல்லது வடக்கு கிழக்கு என்று பிரிவினையை ஏற்படுத்தி பிரித்தாளுகின்ற ஒரு கூட்டமைப்பாக இருக்கின்றது. கடந்த காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டி போட்டு அங்கு தமிழ் பிரதிநிதியாக வரவேண்டிய கோடீஸ்வரனின் வெற்றியை தடுத்து அதாவுல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்தியவர் தான் இப்போது இந்த கூட்டமைப்பில் வந்து சேர்ந்திருக்கின்றார். கடந்த காலத்தில் பல்வேறுபட்ட தவறான செயற்பாடுகளில்,அதாவது லஞ்சம் வாங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களின் கட்சிகள் கூட இதில் இணைந்திருக்கின்றன. எனவே கொலை,கொள்ளை,கப்பம்,கடத்தல்,காணாமல் ஆக்குதல்,திருட்டு, லஞ்சம்,தரகு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் பற்றி மக்கள் அறிவார்கள். எனவே இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கு நன்மை செய்கின்ற கூட்டமைப்பு என்பதை விட பேரினவாத்திற்கு துணை போகின்றவர்கள் எனலாம். கடந்த காலத்தில் பெரும்பான்மை இன பேரிடவாதத்திற்கு துணை போய் அங்கு பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள்,இராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஆகவே தமிழ் மக்கள் மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்வார்கள். கடந்த காலத்தில் தவறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்,மக்களின் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள்,காணாமல் ஆக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று பல்வேறு பட்டவர்கள் இணைந்து செயல்படுகின்ற போது நிச்சயமாக இது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக அமையும். ஆகவே நீதிமன்ற தீர்ப்புகள் சட்ட நடவடிக்கைகள் என்று எல்லாம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது இந்த கூட்டமைப்பால் தமிழ் மக்களுக்கு எதுவித பிரயோசனமும் இல்லை. இவர்கள் கிழக்கை பிரித்து துண்டாடி பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். குறிப்பாக மாதவனை மைலத்தமடு இடங்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி குடியேறிய போது ஒரு சத்தமும் போடாதவர்கள் தான் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பில் இருக்கின்றார்கள். ஆகவே மக்கள் இந்த கிழக்கு தமிழர் கூட்டமைப்பு என்பதற்கு வாக்களிக்க கூடாது வாக்களிக்க மாட்டார்கள் என்றார். https://akkinikkunchu.com/?p=317491
-
புதிய அரசமைப்பு உருவாக்கம் விரைவாக நடப்பது அவசியம்! கரு ஜயசூரிய வலியுறுத்துகின்றார்
புதிய அரசமைப்பு உருவாக்கம் விரைவாக நடப்பது அவசியம்! கரு ஜயசூரிய வலியுறுத்துகின்றார் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை விரைவில் களையப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பை விரைவில் இயற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார். டி.எஸ். சேனாநாயக்கவின் 73 ஆவது நினைவு தின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- பல நாடுகளில் உயிர் தியாகம் செய்தே சுதந்திரம் பெற்றனர். எமக்கு இலகுவில் சுதந்திரம் கிடைக்கப்பெற்றதால் சுதந்திரத்தின் பெறுமதி எமக்குச் சரியாகப் புரியவில்லை. அதனால்தான் இனங்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டு நாடு பின்நோக்கிச் சென்றது. அண்மையில் ஏற்பட்ட இளைஞர்களின் எழுச்சியின்போது இளைஞர்கள் இன, மத, குல பேதங்களை முழுமையாக நிராகரித்தனர். காலிமுகத்திடலிலும் ஏனைய இடங்களிலும் அதைக் கண்டோம். நாடாளுமன்றத்தில் இன்றுள்ள கட்சிகள் இனவாதத்தை நிராகரித்துள்ளன. இது வரவேற்ககூடிய விடயமாகும். இதனை தொடர்ந்து முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும். இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை இந்த தலைமுறையுடன் முடிவுக்கு வரவேண்டும். அடுத்த தலைமுறைக்கு செல்லக்கூடாது. இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு சிறு குழுவொன்று முயற்சித்தாலும் அது வெற்றியளிக்காது. அன்று அனைத்து இன மக்களும் ஒன்றாக கல்வி பயின்றனர், ஒன்றாக விளையாட்டுகளில் ஈடுபட்டனர். 1960களில்தான் இந்தநிலைமை மாறுபட்டது. இன, மத ரீதியாக மாணவர்கள் பிளவுபட்டனர். இன நல்லிணக்கம் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் பேசுகின்றது. இதற்குரிய பணிகள் விரைவில் செய்யப்பட்டால் நல்லது-என்றார். https://newuthayan.com/article/புதிய_அரசமைப்பு_உருவாக்கம்_விரைவாக_நடப்பது_அவசியம்!_கரு_ஜயசூரிய_வலியுறுத்துகின்றார்
-
இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!
இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் படுகொலையான இருவரின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்! 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டுக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு நேற்று சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கைகயில், கண்டி வீதியில் வீடொன்றில் இருந்த தாயும் அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர். உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்தநிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டு வளவிலேயே அடக்கம் செய்துள்ளார். பின்னர் அங்கு கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது ஏனைய பிள்ளைகளுக்கு அவர் தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர். நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/இந்திய_இராணுவத்தின்_துப்பாக்கிச்_சூட்டில்_படுகொலையான_இருவரின்_உடல்கள்_38_ஆண்டுகளின்_பின்_தீயுடன்_சங்கமம்!
-
”அரசியலை கைவிட மாட்டேன்” - டக்ளஸ்
”அரசியலை கைவிட மாட்டேன்” - டக்ளஸ் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி வந்த டக்ளஸ் தற்போது அதனை கைவிடுவதாக அறிவித்துள்ளார். உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்று விடயங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் அதிகாரம் தற்போது இல்லாத போதிலும், அண்மைய அரசியல் பின்னடைவை சவாலாக எடுத்து அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலின் பின்னராக நடைப்பிணமாக டக்ளஸ் மாறியிருப்பதாக அவரது கட்சி ஆதரவாளர்கள் கவலை கொண்டுள்ளனர். https://www.samakalam.com/அரசியலை-கைவிட-மாட்டேன்/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை திங்கள் (24 மார்ச்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG இப்போட்டியில் யாழ்களப் போட்டியாளர்களில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும் என்பதை நாளை தெரிந்துகொள்வோம்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியாது தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களையே எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ரச்சின் ரவீந்திராவினதும், ருதுராஜ் கைக்வாட்டினதும் அரைச் சதங்களுடன் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. யாழ்களப் போட்டியாளர்களில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியின் வீரர்கள் அனைவரினதும் நெருப்படிகளால், குறிப்பாக இஷான் கிஷான் ஆட்டமிழக்காது பெற்ற 106 ஓட்டங்களுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களை அள்ளிக்குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அதிகூடிய இலக்கை, சஞ்சு சாம்ஸனினதும், துருவ் ஜுரேலினதும் அரைச் சதங்களுடன் வேகமாக அடிக்க முனைந்தும், இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதரபாத் 44 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. யாழ்களப் போட்டியாளர்களில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.
-
கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? - நிலாந்தன்
கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திய மக்கள் அமைப்புக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் ஒரு பல்கலைக்கழக மாணவரை அறிமுகப்படுத்தினார். அவர் பொது வேட்பாளருக்கான அணியுடன் இணைந்து இயங்குவார் என்றும் சொன்னார். அந்த மாணவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குத் துடிப்பாகச் செயல்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு காணப்பட்டார். இது பழைய கதை. அண்மையில் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மேற்படி மாணவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் விதத்தில் கவர்ச்சியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி அது. அவர் ஏன் அதைப் பகிர்ந்திருக்கிறார் என்பதனை அறிவதற்கு பல்கலைக்கழகத்தில் அவருக்கு கற்பித்த ஓர் ஆசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னார்,”அந்த மாணவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களில் ஒருவர் போலத் தோன்றுகிறார்” என்று. “ஜனாதிபதித் தேர்தலில் அவர் பொது வேட்பாளரின் பக்கம் வந்தாரே?” என்று கேட்டேன். ”அது அப்பொழுது.இப்பொழுது அவர் தேசிய மக்கள் சக்திக்கு வந்து விட்டார். படிக்கும் காலங்களில் அவர் தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்து சக மாணவர்களோடு தர்க்கப்படுவார். ஆனால் படித்து முடிந்ததும் அவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் பக்கம் நிற்கிறார்” என்றும் அந்த ஆசிரியர் கூறினார். அந்த மாணவர் பகிர்ந்த காணொளியானது அனுரவை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே அதுபோன்ற சிறிய காணொளித் துண்டுகள் பல வெளிவந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் டிஜிட்டல் ப்ரோமோஷனக்கான அணி வினைத்திறனோடும் படைப்புத்திறனோடும் செயல்படுகின்றது. அனுரவை ஒரு கதாநாயக பிம்பமாகக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு திட்டமிட்டு அவ்வாறான காணொளிகளை உருவாக்கி வருகிறது. அவற்றில் காணப்படும் தொழில்சார் திறன், கலை நயம் போன்றன அனுரவைச் சுற்றி ஓர் ஒளிவட்டத்தைக் கட்டமைக்கும் நோக்கமுடையவை. ஒரு கதாநாயகராகக் கட்டியெழுப்பத் தேவையான முகம், உடல்வாகு, உடல் மொழி போன்றன அனுரவுக்கு உண்டு. அவற்றையும் சேர்த்து மாற்றத்தின் அலை ஒன்றுக்குத் தலைமை தாங்கும் கதாநாயக பிம்பமாக அவரைக் கட்டமைத்திருக்கிறார்கள். இந்த இடத்தில் தமிழ் நோக்கு நிலையில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கலாம். அனுரவைப் போல ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கத்தக்க அம்சங்களைக் கொண்ட தமிழ் தலைவர்கள், தலைவிகள் யாருமே இப்பொழுது களத்தில் இல்லையா? அல்லது அவ்வாறு கதாநாயக பிம்பங்களைக் கட்டியெழுப்ப முடியாத ஒரு சமூக,உளவியல்,அரசியற் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்குள் இருக்கிறது தமிழரசியலின் சீரழிவும் சாபக்கேடும். கடந்த 15ஆண்டுகளாக ஈழத்தமிழ் கூட்டு உளவியலானது கொந்தளிப்பானதாகவே காணப்படுகின்றது.கடந்த 15ஆண்டு கால தலைமைத்துவ வெற்றிடத்தில் தன்னைத்தானே தின்னும் ஒரு சமூகமாக; தானே தன்னை நம்பாத; ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்துகின்ற; தன் பலம் எதுவென்று தெரியாமல் தூர்ந்து போகும் ஒரு சமூகமாக ஈழத் தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா? உளவியலில் Pistanthrophobia – “பிஸ்டாந்ரோ ஃபோபியா” என்ற ஒர் ஆங்கிலப் பதம் உண்டு. அதன் பொருள், யாரையும் நம்புவதற்கு பயம். இறந்த காலத்தில் ஏற்பட்ட எதிர்மறையான, கசப்பான அனுபவங்களின் விளைவாக மற்றவர்களை நம்பத் தயாரற்ற எரிச்சலுடன் கூடிய பயம். (An irritating fear of trusting others, typically resulting from previous negative experiences) போருக்குப் பின்னரான கூட்டு மனவடுக்களின் போதும் இதுபோன்ற உளவியல் விளைவுகளைக் காண முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு கூட்டுக் காயங்கள்,கூட்டு மன வடுக்களுக்குள் அழுத்திக் கிடக்கும் ஒரு சமூகத்தின் கொந்தளிப்பான கூட்டு உளவியலுக்குத் தலைமை தாங்கும் அரசியலானது ஒரு விதத்தில் கூட்டுச் சிகிச்சையாக அமைய வேண்டும். அதை ஒருவிதத்தில் குணமாக்கல் செயற்பாடு என்று கூடச் செல்லலாம். அவ்வாறு இறந்த காலத்தின் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மனவடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஒரு அரசியலுக்குத் தலைமை தாங்கும் சக்தி மிக்க தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லையா? அல்லது இருப்பவர்களை மேலெழ விடாமல் ஒருவர் மற்றவரைக் கடித்துத் தின்னும் அல்லது ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்தும் அல்லது மேலெழ முயற்சிப்பவரின் காலைப் பிடித்து இழுத்து விழுத்துகின்ற ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா? அதனால்தான் தமிழ் அரசியலில் கதாநாயக பிம்பங்களைக் கட்டமைக்க முடியவில்லையா? அரசியலில் கதாநாயக பிம்பங்களை கட்டமைப்பது என்பது தனிமனித துதிக்கும் தலைமை வழிபாட்டுக்கும் வழிவகுக்கும் என்ற விமர்சனங்களை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வாக்கு வேட்டை அரசியலில் ஜனவசியம் மிக்க பிம்பங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதுவும் டிஜிட்டல் ப்ரோமோஷனின் காலத்தில் அந்த முக்கியத்துவம் பல மடங்கு அதிகம். அதைவிட முக்கியமாக,சுமார் 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடத்துள் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்ட அரசியலுக்கு பண்புரு மாற்றம் செய்வதற்கு அவ்வாறான தலைமைகள் அவசியம். ஆனால் அப்படிப்பட்ட தலைமைகள் மேலெழ முடியாத அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலின் கூட்டு உளவியலானது சிதைந்து போய்க் கிடக்கின்றது. ஐக்கியத்துக்காக உழைப்பவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று கூறும் அளவுக்கு பிஸ்டாந்ரோ போபியா ஒரு சமூக அரசியல் நோயாக மாறிவிட்டது. ஐக்கியப்படுமாறு கேட்பவர்களை எதிரியின் ஆட்கள் என்று முத்திரை குத்தும் நோய் ஈழத் தமிழர்கள் மத்தியில் மட்டும்தான் உண்டா? தமிழ்த் தேசிய அரசியலில் வெறுப்பர்களை அதிகம் உற்பத்தி செய்த ஒரு கட்சியாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளின் பின் ஞானம் பெற்று கொள்கை வழி ஐக்கிய முயற்சிகளில் இறங்கியிருப்பதை ஒரு திருப்பகரமான மாற்றம் என்றே வர்ணிக்க வேண்டும். ஆனால் கொள்கை எது? ஒரு மக்களை அவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய பலம், பலவீனங்களோடு ஒரு திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான் தேசியவாத அரசியல். ஒரு தேசம் என்பது புனிதர்களுக்கு மட்டுமல்ல. ஒரு தேசத்துக்குள் தியாகிகள் மட்டும் இருப்பதில்லை.நல்லவர்கள், கெட்டவர்கள், புனிதர்கள், கபடர்கள், நபுஞ்சகர்கள், மனம் திருந்தியவர்கள், மனம்திருந்தாதவர்கள், விலைபோனவர்கள், ஒத்தோடிகள், எதிர்த்தோடிகள் மறுத்தோடிகள் என்று எல்லா ஓட்டங்களும் ஒரு சமூகத்துக்குள் இருக்கும். அந்த எல்லா ஓட்டங்களையும் ஒரு பொது எதிரிக்கு எதிரான பேரோட்டமாக மாற்றுவதுதான் தமிழ்த் தேசிய அரசியல். கடந்த 15 ஆண்டுகளாக அதைச் செய்யத் தமிழ் தேசியக் கட்சிகளால் முடியவில்லை. அவர்களால் தமது கட்சிகளையும் கட்டியெழுப்ப முடியவில்லை மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை. தங்களைக் கதாநாயகர்களாக அல்லது தியாகிகளாகக் கட்டமைப்பதற்காக தமது அரசியல் எதிரிகளை வில்லன்களாகச் சித்திரிக்கும் ஓர் அரசியல் பாரம்பரியமானது முடிவில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் அநேகம் பேரை சொந்த மக்களே நம்ப முடியாத வில்லன்களாக பார்க்கும் ஒரு பரிதாபதாபகரமான இடத்தில் வந்து நிற்கின்றதா? உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தலைமைப் போட்டிக்குள் சிக்கி ஏறக்குறைய தூர்ந்து போய்விட்டது. அந்தக் கெட்ட முன்னுதாரணமானது தமிழரசியலின் குறிகாட்டியும் கூட. சுமந்திரன்,சிறீதரன்,சாணக்கியன் போன்றவர்கள் தங்களுக்கென்று டிஜிட்டல் ப்ரோமோஷன் அணிகளை வைத்திருக்கிறார்கள். அவை அவர்களை கதாநாயகர்களாகக் கட்டமைக்கின்றன. ஆனால் கட்சியை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவர முடியாத தலைவர்களை தமிழ் மக்கள் கதாநாயகர்களாகக் கருத மாட்டார்கள். சில சமயம் வில்லன்கள் ஆகத்தான் பார்ப்பார்கள். விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்த புதிதில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகத் தோன்றினார்.தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியோடு அவருக்கு இருந்த ஜனக் கவர்ச்சி மேலும் அதிகரித்தது. ஆனால் அவரே அதனைப் போட்டு உடைத்தார். இப்பொழுது அவருடைய ஜனவசிய முகம் பரிதாபகரமான விதத்தில் சுக்குநூறாகிவிட்டது. இது விக்னேஸ்வரனுக்கு மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளில் மேலெழுந்த பெரும்பாலான எல்லா தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். தமிழ்த் தேசிய அரசியலில் மேல் எழுகின்ற எந்த ஒரு தலைவருமே தன் ஜனவசியத்தை ஏன் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை? ஏனென்றால் யாருமே தாங்கள் முன்வைத்த இலட்சியத்தை நோக்கி தமது கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை; தமிழ் மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை. தன் பலம் எதுவென்று தெரியாமல், தானே தன்னில் நம்பிக்கை இழந்து, ஒருவர் மற்றவரை நம்பாத, ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற,ஒருவர் மற்றவரை வெறுக்கின்ற, ஒரு சமூகமானது தன்னை ஒரு தேசம் என்று அழைக்க முடியாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களையும் ஒரு தேசமாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன.தங்களையும் கட்சிகளாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன. தமிழ் மக்களுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை ஒளியாகவும் முன்னுதாரணமாகவும் நிற்கக்கூடிய தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? அல்லது அப்படிப்பட்ட தலைவர்கள் மேலெழு முடியாத ஒர் அரசியல் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா? அதற்குக் கட்சிகள் பொறுப்பில்லையா? இந்த சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் உளவியல் சூழல் தொடருமாக இருந்தால் அனுரவை நோக்கி ஆர்வத்தோடு பார்க்கின்ற;அவரை கதாநாயகராகக் கொண்டாடுகின்ற இளையவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.அது இனி வரக்கூடிய தேர்தல்களிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும். https://www.nillanthan.com/7232/
-
பிரிந்திருந்த கருணா பிள்ளையான் மீண்டும் இணைவு
அரசியல் சக்தியாக எழுந்து நிற்போம் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியாக நிரூபிக்கக் கூடிய சக்தியாக எழுந்து நிற்பதே எங்கள் நோக்கமாக இருக்கின்றது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ என்னும் புதிய கூட்டணி கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான கனவான் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டக்களப்பில் கைச்சாத்திடப்பட்டது. இதனை தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பில் பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இதன்போது கருத்து தெரிவித்த பிள்ளையான், “இற்றைக்கு 21 ஆண்டுகளுக்கு முன்னர் இதே மார்ச் மாதம் அளவில் என்று நினைக்கின்றேன் வன்னிக் காடுகள் அதிர்கின்ற அளவிலே எங்கள் தளபதி ஒரு அறிவிப்பைச் செய்கின்றார். அனைவருக்கும் தெரியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலே வடக்குத் தலைமைகளால் கிழக்கு மாகாணம் வஞ்சிக்கப்பட்டு வருவதை எதிர்த்துக் குரல் எழுப்பினார். அவருடைய கருத்தை ஏற்று நான் உட்பட சுமார் ஆறாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் போர்க்கொடி தூக்கினோம். ஆனாலும் சிறிலங்கா அரசுடன் கூட பேச்சுவார்த்தை நடத்திய விடுதலைப் புலிகளின் வடக்குத் தலைமை ஆயிரம் ஆயிரம் மாவீரர்களைக் கொடுத்த எம்முடன் பேசமறுத்தமை கசப்பான விடயங்கள். இந்த நிலையில் நாங்கள் அங்கிருந்து வெளியேறி ஆயுத இயக்கமாக ஒன்றும் சாதித்து விட முடியாது என்பதை உணர்ந்து ஒரு ஜனநாயக இயக்கமாக நாங்கள் ஒன்றிணைந்து செயலாற்ற முனைந்தோம். கட்சியாக நாங்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினாலும் நானும் கருணா அம்மானும் ஒன்றாக இணைந்து பயணிக்க முடியாத சில துரதிர்ஷ்டவச நிகழ்வுகள் நடந்தன. இருப்பினும் அரசியல் ரீதியில் அவர் அவரால் இயன்ற மக்கள் சேவையை ஆற்றியிருக்கின்றார். மறுபுறத்தில் நாங்களும் ஆற்றியிருக்கின்றோம். தற்போது பல்லின மக்கள் வாழும் இந்த மாகாணத்திலே தமிழ் மக்களினுடைய எதிர்காலம் அவர்களின் அரசியல் அதிகாரத்தினைத் தக்க வைப்பது, கல்வி பொருளாதார சுகாதார உட்கட்டுமான மேம்பாடு, மாகாணசபையின் அதிகாரம் என்பவற்றைப் பார்க்கும் போது நாங்கள் தொடர்ந்தும் பிரிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பது இந்த மக்களுக்கும் இந்த மாகாணத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் எமது சமூகம் தொடர்ந்து பின்தள்ளப்படுகின்ற அபாயம் ஏற்பட்டிருப்பதை நாங்கள் உணர்கின்றோம். கடந்த கால கசப்புகளை மறந்த் எதிர்காலத்தில் ஒரு உறுதியான கிழக்கு மாகாண அரசியற் தளத்தை நிறுவ வேண்டும் என்ற பகிரங்க பிரயத்தனத்தின் காரணமாகவும் எமது கட்சியின் சிரேஸ்ட தலைவரின் முயற்சியின் காரணமாகவும் நாங்கள் கருணா அம்மானுடன் ஒப்பந்தத்தைச் செய்திருக்கின்றோம். இதனூடாக நாங்கள் எமது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும், சிறந்த ஒரு அரசியற் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கின்றோம். நாங்கள் அண்மையில் உருவாக்கியுள்ள கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு என்ற அமைப்பையும் பலப்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியாக நிரூபிக்கக் கூடிய சக்தியாக எழுந்து நிற்பதே எங்கள் நோக்கமாக இருக்கின்றது. எனவே எமது கிழக்கு மாகாண மக்களே நாங்கள் முன்னமே கூறிய 21 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற வஞ்சிப்பு போலவே 70, 80 ஆண்டு காலமாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றோம், வஞ்சிக்கப்பட்டிருக்கின்றோம், பல கஸ்டமான சம்பவங்களைக் கடந்து வந்திருக்கின்றோம். 2008ம் ஆண்டின் பின் ஓரளவு எமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திய சமூகமாக நாம் நின்றிருக்கின்றோம். இப்போது அந்த நிலைமை சற்று மாறுபட்டிருக்கின்றது. அதேபோன்று ஏனைய தேசிய மட்ட அரசியல் சக்திகளுக்குச் சமமாக நாங்கள் எழுந்து நிற்க வேண்டிய அவசியம் கருதியும், எங்களது போராட்டத்திற்கு நாங்கள் கொடுத்த விலைகளை நாங்கள் உயிர்வாழுகின்ற போதே எமது மக்களைத் தூக்கி நிறுத்தி அவர்களை முடியுமானவரை அபிவிருத்தி செய்துவிட வேண்டும் என உறுதியான எண்ணப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம். இந்த கட்டமைப்பு இனி ஒருபோதும் சிதைவடையாமல் கருத்து பேதங்கள் இல்லாமல் உறுதியாக இருப்பதற்கான விட்டுக்கொடுப்புகளைச் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். இந்த இணைவை இயற்கையும் ஏற்றுக் கொள்ளும் அதேபோன்று எமது மாகாணத் தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டு எம்முடன் கைகோர்த்துச் செயற்பட வேண்டும் என கோருகிறேன்” என்றார். https://akkinikkunchu.com/?p=317365
-
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்
இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் March 23, 2025 10:53 am இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை (22.03.2025) விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஒபர் சிலோன் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக இது ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரவேண்டும் என போர் முடிந்ததிலிருந்து சொல்லப்பட்டு வருகின்றது என்பதையும், அவர்கள் மீண்டும் இங்குவரவேண்டும் என்பதே இங்குள்ள எல்லோரது விருப்பம் என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் கடந்த காலங்களில் இவ்வாறு இந்தியாவிலிருந்து வந்த ஒவ்வொருவர் தொடர்பான விவரங்களையும் பெற்று அவர்களுக்கு எத்தகைய தேவைப்பாடுகள் இன்னமும் இருக்கின்றன என்பதை அறிந்து அதனை உடனடியாக பூர்த்திசெய்யவேண்டும் என்றும் ஆளுநர் தெரிவித்தார். ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் சின்னதம்பி சூரியகுமாரி, தமது நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்பார்ப்புத் தொடர்பிலும் விவரித்தார். இலங்கையிலிருந்து 4 கட்டங்களாக இந்தியாவுக்கு 334,797 பேர் அகதிகளாகச் சென்றுள்ளனர் என்றும் தற்போது தமிழகத்தில் 103 முகாம்களில் 58,104 பேர் இருக்கின்றனர் என்ற தரவுகளையும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் தெரியப்படுத்தினர். தற்போது தமிழகத்தில் முகாம்களிலுள்ள 58,104 பேரில், 50,620 பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டனர். 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை வடக்கு மாகாணத்துக்கு 14,531பேர் வருகை தந்துள்ளனர் என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர். தமிழகத்தில் தங்கியுள்ளவர்கள் நாடு திரும்புவதற்கு நிலையான கட்டமைப்பு பொறிமுறை உருவாக்கப்படவேண்டும் என்றும், இலங்கை, இந்திய அரசாங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை தேவை என்றும், இலங்கையில் அரசியல் உறுதிபாடு அவசியம் எனவும் ஒபர் சிலோன் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர். மேலும் தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளுக்கு இலங்கை மற்றும் வடக்கு மாகாணம் தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட அல்லது போலியான தகவல்கள் வழங்கப்படுகின்றமையும் அவர்கள் நாடு திரும்புவதற்கு சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் நாடு திரும்பிய ஈழ அகதிகள் இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இலங்கைக்கு நாடு திரும்புவர்கள் இங்கிருந்து சென்றவர்களின் இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையினர் என்பதால், இலங்கையில் அவர்களது பூர்வீக பிரதேசத்தை அடையாளம் காண்பதிலும், அவர்களின் காணிகளைக் கண்டறிவதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்ற விடயமும் ஆளுநரின் கவனத்துக்கு ஒபர் சிலோன் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது. கொள்கை ரீதியான ஆவணம் ஒன்றை ஒபர் சிலோன் நிறுவனம் தயாரித்து வழங்கிய பின்னர் அதனை அடிப்படையாக வைத்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதாக ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார். நாடு திரும்ப விருப்பமானவர்களின் பட்டியலை ஒபர் சிலோன் நிறுவனம், வடக்கின் 5 மாவட்டச் செயலர்களுக்கு வழங்கிய பின்னர் அவர்களுக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலர்கள் மேற்கொள்வார்கள் என ஆளுநர் குறிப்பிட்டார். அதேவேளை, தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளில் பலர் தாதியர் கற்கைநெறியை முடித்தவர்கள் எனவும், விளையாட்டுத்துறையில் சாதித்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டிய ஒபர் சிலோன் நிறுவனத்தினர், வடக்கு மாகாணத்தின் சொத்தான அவர்களை இழக்கக் கூடாது எனவும் கோரிக்கை முன்வைத்தனர். தமிழகத்திலிருப்பவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்துவரமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், வரவுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கத் திட்டமிடுமாறும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்தக் கலந்துரையாடலில் ஒபர் சிலோன் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மேலதிக மாவட்டச் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்திப் பணிப்பாளர்கள், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். https://oruvan.com/eelam-refugees-staying-in-india-should-return-to-sri-lanka-northern-province-governor/
-
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு!
இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு! தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் ஆரம்பமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்து அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே செய்தியை ஹமாஸ் ஆதரவு ஊடகங்களும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. https://www.hirunews.lk/tamil/400821/இஸ்ரேலின்-வான்வழி-தாக்குதல்-ஹமாஸ்-அரசியல்-தலைவர்-உயிரிழப்பு
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை ஞாயிறு (23 மார்ச்) இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI இப்போட்டியில் யாழ்களப் போட்டியாளர்களில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும் என்பதை திங்கள் அன்று தெரிந்துகொள்வோம்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு ஃபில் சால்ட்டினதும் விராட் கோலியினதும் அதிரடியான அரைச் சதங்களுடன் 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 177 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. யாழ்களப் போட்டியாளர்களில் ராயல் சலஞ்சேர்ஸ் பெங்களூரு வெல்லும் எனக் கணித்தவர்களுக்கு தலா இரு புள்ளிகள் வழங்கப்படும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐபிஎல் 2025 போட்டிகள் நாளை ஆரம்பிக்கவுள்ளது. நாளை சனி (22 மார்ச்) முதலாவது போட்டி நடைபெறவுள்ளது. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB இப்போட்டியில் யாழ்களப் போட்டியாளர்களில் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும் என்பதை திங்கள் அன்று தெரிந்துகொள்வோம்!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
திருத்தமுடியாது. ஆனால் மாற்ற விரும்பினால் புதிய பதில்களை தாருங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போட்டியில் கலந்துகொள்ள ஒரு நாளே உள்ளது. நாளை இரவு 8 மணி (பிரித்தானிய நேரம்) வரையே காலக்கெடு! இன்னமும் பதில்களைத் தராதவர்கள் விரைந்து கலந்துகொள்ளுங்கள்! @Ahasthiyan , @நீர்வேலியான் ,@நியாயம் , @goshan_che , @கறுப்பி
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்: 1 வசீ 2 ஈழப்பிரியன் 3 அல்வாயன் 4 வாத்தியார் 5 வீரப் பையன்26 6 நிலாமதி 7 சுவி 8 சுவைப்பிரியன் 9 பிரபா 10 செம்பாட்டான் 11 கந்தப்பு 12 வாதவூரான் 13 ஏராளன் 14 ரசோதரன் 15 நுணாவிலான் 16 தமிழ் சிறி 17 கிருபன் 18 குமாரசாமி 19 எப்போதும் தமிழன் 20 நந்தன் 21 புலவர் 70 கேள்விகள் கூகிள் ஷீற்றில் இலகுவாக தெரிவு செய்யலாம். மிச்சம் 20 கேள்விகள் கடினமானவை இல்லை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@Eppothum Thamizhan , 73) வது கேள்விக்கு பதிலைக் காணவில்லை!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@நந்தன் இன் பதில்கள் (கூகிள் ஷீற்றில் இருந்து) # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR RCB No Result Tie RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH RR No Result Tie SRH 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK MI No Result Tie CSK 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC LSG No Result Tie LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT PBKS No Result Tie GT 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR KKR No Result Tie KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH LSG No Result Tie SRH 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK RCB No Result Tie RCB 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT MI No Result Tie MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC SRH No Result Tie SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR CSK No Result Tie RR 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI KKR No Result Tie MI 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG PBKS No Result Tie PBKS 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB GT No Result Tie RCB 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR SRH No Result Tie KKR 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG MI No Result Tie LSG 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK DC No Result Tie CSK 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS RR No Result Tie RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR LSG No Result Tie KKR 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH GT No Result Tie GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI RCB No Result Tie RCB 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS CSK No Result Tie PBKS 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT RR No Result Tie RR 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB DC No Result Tie DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK KKR No Result Tie CSK 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG GT No Result Tie GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH PBKS No Result Tie SRH 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR RCB No Result Tie RR 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC MI No Result Tie MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG CSK No Result Tie CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS KKR No Result Tie KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC RR No Result Tie DC 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI SRH No Result Tie MI 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB PBKS No Result Tie PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT DC No Result Tie GT 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR LSG No Result Tie LSG 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS RCB No Result Tie RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI CSK No Result Tie MI 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR GT No Result Tie GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG DC No Result Tie LSG 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH MI No Result Tie SRH 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB RR No Result Tie RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK SRH No Result Tie SRH 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR PBKS No Result Tie PBKS 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI LSG No Result Tie MI 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC RCB No Result Tie RCB 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR GT No Result Tie RR 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC KKR No Result Tie KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK PBKS No Result Tie PBKS 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR MI No Result Tie RR 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT SRH No Result Tie SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB CSK No Result Tie RCB 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR RR No Result Tie RR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS LSG No Result Tie LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH DC No Result Tie DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI GT No Result Tie MI 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR CSK No Result Tie CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS DC No Result Tie PBKS 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG RCB No Result Tie RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH KKR No Result Tie SRH 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS MI No Result Tie MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC GT No Result Tie No Result 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK RR No Result Tie RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB SRH No Result Tie RCB 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT LSG No Result Tie LSG 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI DC No Result Tie MI 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR PBKS No Result Tie PBKS 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB KKR No Result Tie RCB 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT CSK No Result Tie GT 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG SRH No Result Tie SRH 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK Select CSK Select DC Select DC Select GT Select GT Select KKR Select KKR Select LSG Select LSG Select MI Select MI MI PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB RCB SRH Select SRH SRH 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) RCB #2 - ? (3 புள்ளிகள்) SRH #3 - ? (2 புள்ளிகள்) MI #4 - ? (1 புள்ளி) RR 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team SRH 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team MI 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 SRH 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DC 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Abhishek Sarma 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Travis Head 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) varun 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) THILK VARMA 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) DC @நந்தன் 76) வது கேள்விக்கு உங்கள் தெரிவுகளின்படி RCB அல்லது MI. எது உங்கள் தெரிவு?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்னும் வந்து சேரவில்லை! புள்ளிகள் திங்கள்/செவ்வாய் மட்டில்தான் வரும்
-
போதை மாபியாக்களை அழிக்க புதிய சட்டங்கள்: ஜனாதிபதி அநுர உறுதி!
போதை மாபியாக்களை அழிக்க புதிய சட்டங்கள்: ஜனாதிபதி அநுர உறுதி! குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலிஸ் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார இவ்வாறு தெரிவித்தார். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதே பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாமல் இலங்கையில் நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது. எனவே, அதை உணர்ந்து பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். பொலிஸாருக்குத் தேவையான உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/போதை_%C2%A0மாபியாக்களை_அழிக்க_புதிய_சட்டங்கள்:_ஜனாதிபதி_அநுர_உறுதி!
-
அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பாராளுமன்றம் நடவடிக்கை! பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வௌியிடும் கருத்துக்களை ஓடியோ, வீடியோ வடிவில் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். அதன்படி, நாளை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா தெரிவிக்கும் கருத்துக்கள் ஔிபரப்பப்படமாட்டாது. குறித்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் நடத்தையின் அடிப்படையில் இந்தத் தற்காலிக தடை, நீக்கம் நீக்கப்படுமா? இல்லையா? என்பது பரிசீலிக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார். https://www.samakalam.com/அர்ச்சுனா-எம்-பிக்கு-எதி/
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் editorenglishMarch 19, 2025 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்பினை எதிர்மறையான ஒரு விடயமாக நாம் பார்க்கவில்லை. அவரால் தெரிவிக்கப்படும் விடயங்கள் நியாயமானவையாகும். எந்தவொரு பிரச்சினையின் போதும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் மனதளவில் பாரிய துயரத்தை எதிர்கொள்ள நேரிடும். அந்தச் சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு அது பாரிய கவலையை அளிக்கும். அந்த வகையிலேயே கத்தோலிக்க மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் பேராயரின் அதிருப்தியும் கவலையும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகும். அரசாங்கம் என்ற ரீதியில் எமக்கும் அதற்கான பொறுப்பு காணப்படுகிறது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தைக் கூறுவதை விட, அதன் அடிப்படையில் எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விரைவில் அனைவராலும் அறிந்து கொள்ள முடியும். கொலையாளிகளே இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு சாட்சிகளை அழித்த சூழலிலேயே நாம் ஆட்சியமைத்திருக்கின்றோம். எனவே மீண்டும் அவற்றை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல. எவ்வாறிருப்பினும் இந்தக் கொடூர சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார். https://globaltamilnews.net/2025/213621/
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் நெடுக்ஸுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்