Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. தேசிய மக்கள் சக்தி மன்னாாில் கட்டுப்பணம் செலுத்தியது. adminMarch 12, 2025 எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) இன்றைய தினம் புதன் கிழமை (12) மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இளைஞர் மற்றும் விளையாட்டு விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் முஹமட் சாஜித் தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். -மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். இதேவேளை பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அஷேக் சதீக் முப்தி முசலி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள அமையும் குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2025/213298/
  2. வேறு ஒருத்தரையும் இந்தப் பக்கம் காணோம்🤔
  3. பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் - வௌியான திடுக்கிடும் தகவல்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் பிறிதொரு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் இருந்து விடுதலைப் பெற்று வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. 34 வயதுடைய குறித்த சந்தேகநபர் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பதோடு, அவர் கல்னேவ விசேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வைத்தியரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பின்னர் அவரது இரண்டு கையடக்க தொலைபேசிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார், மேலும் காணாமல் போன தொலைபேசியின் இருப்பிடம் குறித்து கிடைத்த சமிக்ஞைகளின் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது, அவுகன ரயில் நிலையம் அருகே கையடக்க தொலைபேசி சமிக்ஞைகள் இல்லாததால், அப்பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கல்னேவ பொலிஸ் விசேட குழுவினர் கல்னேவ, எலபதுகம பகுதியில் மறைந்திருந்து சந்தேக நபரை மடக்கிப் பிடித்துள்ளனர். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணராகப் பயிற்சி பெற்று வரும் 32 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர், நேற்று முன்தினம் (10) இரவு வழக்கம்போல் பணிக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தார். குறித்த வைத்தியர், தனது கடமையை முடித்துவிட்டு, இரவு 7 மணியளவில் வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்திய நிபுணர்கள் மட்டுமே வசிக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளார். வைத்தியர் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைந்தபோது, பின்னால் இருந்து வந்த ஒரு நபர் திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், வைத்தியரின் வாயை இறுக்கமாகக் கட்டி, அவர் கத்த முடியாதபடி கட்டிய சந்தேக நபர், உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவைத் திறக்கச் சொல்லி, வைத்தியரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, சத்தம் யாருக்கும் கேட்காதபடி கதவை மூடியுள்ளார். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் குறித்த பெண் வைத்தியரின் கைகளைக் கட்டி, கண்களைக் கட்டி, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் சந்தேக நபர் தப்பி ஓடிய நிலையில், வைத்தியரின் கையடக்க தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளார். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், வைத்தியசாலை வார்டுக்கு வந்த வைத்தியர், தான் முகங்கொடுத்த சம்பவத்தைப் பற்றி அவரது தந்தைக்கு தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cm85hf2ob001j10a6ddznnod5
  4. கச்சதீவு திருவிழா: 5 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை editorenglishMarch 12, 2025 கச்சதீவு திருவிழாவையொட்டி ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க 5 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு வருகின்ற மார்ச் 14, 15 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து 90 விசைப்படகுகளும், 22 நாட்டுப்படகுகளும் செல்ல விழா கமிட்டியிடம் பதிவு செய்துள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படகுகளில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திருவிழாவிற்கு செல்ல பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் மீன்துறை அதிகாரிகள் நேற்று கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல பதிவு செய்யப்பட்டு, ராமேசுவரம் துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகளில் ஏறி படகின் உறுதித்தன்மை, நீளம், அகலம் படகிற்கான ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். இதேபோல் திருவிழாவுக்கு செல்ல பதிவு செய்து, பாம்பன் கடல் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டு படகுகளையும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு ஆய்வு செய்தனர். திருவிழாவிற்கு செல்ல பெயர் பதிவு செய்துள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு உரிமையாளர்கள் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு வரும்போது படகின் அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் மீன் துறை அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கச்சதீவு திருவிழானையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. https://globaltamilnews.net/2025/213216/
  5. ‘நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு’- சுமந்திரனின் சுலோகம் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்களிடம் எடுபடுமா ? March 9, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் குழுக்களும் மார்ச் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை கையளிக்கலாம். அனேகமாக மே மாத முற்பகுதியில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தோல்வி கண்ட அரசியல் கட்சிகள் மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகங்கொடுக்கக்கூடிய அளவுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளக் கூடிய வலுவுடன் இல்லை என்ற போதிலும், போட்டியிட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் அவற்றுக்கு இருக்கிறது. தெற்கில் உள்ள பழைய கட்சிகளையும் வடக்கில் உள்ள தமிழ்க் கட்சிகளையும் பொறுத்தவரை, இரு தேசிய தேர்தல்களுக்கு பின்னரான புதிய அரசியல் சூழ்நிலையில் தங்களுக்கு ஒரு பொருத்தப்பாட்டை தேடவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. அதனால் உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்கொள்வதற்கு கூட்டணிகளை அமைக்கும் முயற்சிகளில் அவை இறங்கியிருக்கின்றன. நீண்டகாலமாக அரசியலில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) க்கு இருந்த மக்கள் ஆதரவைக்கூட தற்போது கொண்டிருக்கவில்லை. ராஜபக்சாக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த வேகத்தில் மக்கள் மத்தியில் அமோக செல்வாக்கைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியதோ அதே வேகத்தில் அதிகாரத்தையும் ஆதரவையும் இழந்து நிற்கிறது. குறைந்தளவு மக்கள் ஆதரவுடன் என்றாலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியே இரண்டாவது பெரிய அரசியல் சக்தியாக விளங்குகிறது. ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒரு இணக்கப்பாடுக்கு வந்து உள்ளூராட்சி தேர்தல்களை கூட்டாக எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி அண்மைக்காலமாக மேற்கொண்ட முயற்சிகளில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டதை போன்றே முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. இரு கட்சிகளையும் சேர்ந்த அரசியல்வாதிகள் இணைந்து செயற்படுவதற்கு விரும்புகின்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான தன்னகம்பாவப் போட்டி இதற்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது. அதனால், இரு கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தல்களை கூட்டாகச் சந்திப்பதற்கான வாய்ப்பு பெரும்பாலும் இருக்காது. அதேவேளை, ஆளும் கட்சியான ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரை, அதன் கடந்த ஐந்து மாதகால ஆட்சி மீதான ஒரு வாக்கெடுப்பாக உள்ளூராட்சி தேர்தல்கள் அமையப்போகின்றன. பழைய அரசியல் கட்சிகளை நிராகரித்து பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேசிய மக்கள் சக்தியை மக்கள் அதிகாரத்துக்கு கொண்டுவந்த போதிலும், பொருளாதார இடர்பாடுகளில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க தணிவையும் காணமுடியாமல் இருப்பதால் அவர்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமல், இரு தேசிய தேர்தல்களிலும் மக்களுக்கு வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. ஆனால், அதற்காக எதிர்க்கட்சிகளை உள்ளூராட்சி தேர்தல்களில் பெருமளவில் ஆதரிக்கக்கூடிய அளவுக்கு மக்களின் மனங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டுவருகிறது என்று கூறிவிட முடியாது. கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிக்காதவர்களின் தொகையை விடவும் பாராளுன்ற தேர்தல்களில் வாக்களிக்காதவர்களின் தொகை மிகவும் அதிகமானதாகும். ஒரு ஏழு மாதகால இடைவெளியில் மூன்று தேர்தல்களைச் சந்திக்க நிர்ப்பந்திக்கப்படுவதாலும் தாங்கள் ஆட்சிக்கு கொண்டுவந்த அரசாங்கம் தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இயலாததாக இருப்பதாலும் மக்கள் உள்ளூராட்சி தேர்தல்களில் எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்பது முக்கியமான ஒரு கேள்வி. இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் பின்னடைவைக் கண்ட தமிழ் அரசியல் கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்காக மீண்டும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடும் பிரயத்தனங்களில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெருமளவில் பெற்று இரு மாகாணங்களிலும் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய தனியான கட்சியாக விளங்குவதற்கு காரணம் தங்களது கடந்த கால செயற்பாடுகளே என்பதை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுவரையில் முழுமையாகப் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை. தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சியை, எதிர்காலத் தேர்தல்களை நோக்கமாகக் கொண்டு அல்லாமல், வேறு காரணத்துக்காக முன்னெடுப்பதாக முதலில் கூறியவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொனானம்பலம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கும்போது தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகளை தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைப்பதை நோக்கமாகக்கொண்டதே தனது முயற்சி என்று அவர் அறிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் பொன்னம்பலம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து பொன்னம்பலம் ஒத்துழைப்பைக் கோரி கடிதம் ஒன்றையும் கையளித்தார். ஆனால், தமிழரசு கட்சி அரசியலமைப்பு வரைவுச்செயன்முறை தொடர்பிலான அதன் நிலைப்பாட்டை அவருக்கு அறிவித்ததை அடுத்து அவரது முயற்சி தடங்கலுக்கு உள்ளானது. அரசாங்கம் மூன்று வருடங்களுக்கு பின்னரே புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கவிருப்பதாக அறிவித்திருப்பதால், அந்த விவகாரத்தில் தற்போது அவசரப்பட வேண்டியதில்லை என்ற தொனியில் தமிழரசு கட்சியின் பதில் அமைந்திருந்தது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவிதமான அரசியலமைப்புச் சீர்திருத்த யோசனையும் முன்வைக்கப்படாத நிலையில் தமிழ்க் கட்சிகள் அது தொடர்பில் ஆராய்வதற்கு எதுவுமில்லை என்பதே தமிழரசு கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. முதலில் பொன்னம்பலத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதில் அக்கறை காட்டிய சிறீதரன் தனது கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த ஒத்துழைப்பை தொடர்வதில் அசௌகரியத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலான சகல தீர்மானங்களையும் மேற்கொள்ளும் மத்திய செயற்குழுவில் சிறீதரன் செல்வாக்கைச் செலுத்த முடியாத ஒரு நிலை தற்போது காணப்படுகிறது. அவரை எதிர்த்து கடந்த வருடம் ஜனவரியில் தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனே இன்று அந்த கட்சியை வழிநடத்துகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம். அவர் இப்போது கட்சியின் பதில் பொதுச் செயலாளராவும் இருக்கிறார். அதனால் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறை தொடர்பிலான கட்சியின் நிலைப்பாடு சுமந்திரனின் அணுகுமுறைகளின் அடிப்படையிலேயே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதி தேர்தல் உட்பட பல்வேறு விவகாரங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக வெளிப்படையாகச் செயற்பட்டுவந்த சிறீதரன் புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் பொன்னம்பலத்துடன் சேர்ந்து தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை தொடருவதில் ஏன் நாட்டம் காட்டவில்லை என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து யோசனைகளைச் சமர்ப்பிப்பதை நோக்கிய முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படாமல் இருக்கிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வழமைக்கு மாறாக, பொன்னம்பலம் தமிழரசு கட்சியுடன் (குறிப்பாக சிறீதரனை தலைவராகக் கொண்ட அதன் பாராளுமன்றக் குழுவுடன் ) ஒத்துழைத்துச் செயற்படுவதில் அக்கறை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தமிழரசு கட்சி இன்றியமையாதது என்றும் அது பாராளுமன்ற தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது ஜனநாயக விரோதமானது என்றும் பொன்னம்பலம் வெளிப்படையாக கருத்து வெளியிட்டதையும் காணக்கூடியதாக இருநதது. புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையின்போது தமிழ்க்கட்சிகள் எடுக்கவேண்டிய நிலைப்பாடுகள் தொடர்பில் மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் நடத்தப்படக்கூடிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு ஏழுபேரைக் கொண்ட குழுவொன்றை ஜனவரியில் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு நியமித்தது. அந்த குழுவில் சிறீதரனும் ஒரு உறுப்பினர் என்ற போதிலும், தமிழரசு கட்சி பாராளுமன்றக் குழுவின் தலைவர் என்ற வகையில் அவர் பொன்னம்பலத்தின் முயற்சிகளில் தன்னிச்சையாக பங்கேற்பதை தடுப்பதை நோக்கமாகக் கொண்டே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்வதில் எவருக்கும் சிரமம் இருந்திருக்காது. இத்தகையதொரு பின்புலத்தில், தமிழரசு கட்சியின் பதில் தலைவரான சிவஞானம் செயலிழந்துபோன தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு புத்துயிர் அளிப்பதற்கான ஒரு முயற்சியில் அண்மையில் இறங்கினார். இந்த நோக்கத்துக்காக அவர் கூட்டமைப்பின் முன்னைய பங்காளிக் கட்சிகளான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட் ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) ஆகியவற்றின் தலைவர்களை அணுகினார். அவர்களுக்கு கடிதங்களையும் அனுப்பினார். மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படுவதில் நாட்டம் இருப்பது போன்று கருத்துக்களைக் கூறி சிவஞானத்துக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய இந்த முன்று கட்சிகளின் தலைவர்களும் மறுநாள் ஒன்றுகூடி தங்களது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் வேறு ஆறு தமிழ்க் குழுக்களையும் சேர்த்துக் கொண்டு உள்ளூராட்சி தேர்தலுக்கான ஒரு கூட்டை அமைத்துக் கொண்டனர். இதனால் அதிருப்தியுற்ற தமிழரசு கட்சியின் தலைவர் அதை ஆட்சேபித்து கடிதம் எழுதினார். அதற்கு புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஒரு பதிலையும் அனுப்பினார். மீண்டும் கூட்டமைப்பை அமைக்கவேண்டிய தேவையில்லை என்பதும் ஏற்கெனவே தாங்கள் அமைத்திருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணைந்து செயற்படதமிழரசு கட்சி முன்வருவதே பொருத்தமானது என்பதுமே அந்த கூட்டணியின் தலைவர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. கடந்த வருட முற்பகுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு சீறீதரனும் சகல தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு முயற்சிகளை முன்னெடுக்கப்போவதாக அறிவித்தார். புதிதாக கூட்டமைப்பு எதுவும் தேவையில்லை என்று கூறிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒன்றிணைந்து செயற்படுவதில் அக்கறை இருந்தால் தமிழரசு கட்சி தங்களது கூட்டணியில் இணையலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கூட்டணியில் இணைவதற்கு தமிழரசு கட்சி ஒன்றும் சிறிய கட்சி அல்ல, அது இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் இயக்கம் என்று சிவஞானம் கடந்த வாரம் பதிலளித்திருந்தார். தமிழரசு கட்சி பெரும்பாலும் உள்ளூராட்சி தேர்தல்களை தனியாகவே சந்திக்கப் போகிறது. பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் தமிழ் தேசிய மக்கள் கூட்டணியும் கூட தனித்தனியாகவே போட்டியிடப்போகின்றன. உள்ளூராட்சி சபைகளுக்கு தனித்தனியாக தமிழ்க்கட்சிகள் போட்டியிட்டு ஆசனங்களைக் கைப்பற்றிய பிறகு சபைகளின் நிருவாகத்தை அமைப்பதற்கு கூட்டுச்சேருவதே சிறந்த தந்திரோபாயம் என்ற தனது பழைய நிலைப்பாட்டையே சுமந்திரன் இந்த தடவையும் வலியுறுத்துகிறார். கடந்த வருட முற்பகுதியில் அந்த நிலைப்பாட்டை தமிழரசு கட்சி எடுத்ததையடுத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பில் எஞ்சியிருந்த புளொட்டும் ரெலோவும் வெளியேறி (ஏற்கெனவே தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்த) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தங்களது தேர்தல் இயக்கமாக அறிவித்தன. பாராளுமன்ற தேர்தலில் தமிழ்க்கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு பெரும் பின்டைவைச் சந்தித்ததைப் போன்ற சூழ்நிலையே உள்ளூராட்சி தேர்தல்களில் மீண்டும் உருவாகிறது. அது மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பானதாக அமையக்கூடிய சாத்தியமே இருக்கிறது. கடந்த ஐந்து மாதகால ஆட்சியில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவும் அவரது அரசாங்கமும் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் பழைய சிந்தனையில் இருந்து விலகுவதற்கான எந்த அறிகுறியையும் காண்பிக்கவில்லை என்பதை வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் கவனத்தில் எடுத்து பாராளுமன்ற தேர்தலில் வழங்கியதைப் போன்ற ஆதரவை உள்ளூராட்சி தேர்தல்களில் வழங்காமல் விடுவார்களா? இந்த கேள்விக்கு உருப்படியான பதிலை அளிப்பதற்கு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய மாற்றுவழி என்ன? கடந்த வாரம் வடமராட்சியில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய சுமந்திரன் ‘ நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு ‘ என்ற ஒரு சுலோகத்தை முன்வைத்தார். ” அடுத்த ஐந்து வருடங்களுக்கு மத்தியில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியதிகாரத்தில் இருக்கப்போகிறது. அதற்காக சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளூராட்சி விவகாரங்களை கையாளுவதையும் அவர்களிடமே விட்டுவிடக்கூடாது ” என்று அவர் கூறினார். அவரது சுலோகம் எந்தளவுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதை பார்ப்பதற்கு நாம் நீண்டகாலம் காத்திருக்கத் நேவையில்லை. பாராளுமன்ற தேர்தலில் பெரும் பி்ன்னடைவைச் சந்தித்த தமிழ்க்கட்சிகள் உள்ளூராட்சி தேர்தல்களில் ஒன்றிணைந்து போட்டியிட்டால் கூட தமிழ் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது கஷ்டமாகவே இருக்கிறது. கடந்த வருடம் வடக்கில் தமிழ் மக்கள் தங்களை நிராகரித்ததற்கான உண்மையான காரணங்கள் குறித்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் சுயபரிசோதனையை நடத்தியிருப்பதற்கான எந்த வெளிப்படையான அறிகுறியையும் காணமுடியவில்லை. ஒன்றிணைந்து போட்டியிடாத காரணத்தினால் மாத்திரம் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு மக்கள் தங்களை நிராகரித்ததாக தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நினைப்பார்களாக இருந்தால் அவர்கள் மீண்டும் தவறு செய்வதாகவே அமையும். தற்போதைய நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு இசைவான முறையில் தங்களது அரசியல் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளாமல் தேசியவாத அரசியலை சுலோகங்களை தேவாரம் போன்று பாடிக்கொண்டிருந்தால் தமிழ் மக்களிடமிருந்து தமிழ்க்கட்சிகள் மேலும் தனிமைப்படவேண்டியிருக்கும். தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக நீண்டகால அரசியல் அபிலாசைகளை பற்றி ஓயாது பேசுவதில் நாட்டம் காட்டி வந்திருக்கிறார்கள். மக்களின் உடனடிப் பிரச்சினைகளில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. நீண்டகால அபிலாசையைப் பற்றி எப்போதும் பேசிக் கொண்டேயிருக்கலாம்.ஆனால், உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால் விரைவாகவே பயனுறுதியுடைய விளைவுகளை காண்பிக்க வேண்டியிருக்கும். இது தமிழ் அரசியல் கட்சிகளிடமும் தலைவர்களிடமும் காணப்படும் பெரியதொரு குறைபாடு. அர்ச்சுனாவின் குறும்புகளுக்கு ஒரு கூட்டம் ஆரவாரம் செய்யும் துரதிர்ஷ்டவசமான நிலைமைக்கும் இந்த குறைபாடும் ஒரு முக்கிய காரணம். https://arangamnews.com/?p=11884
  6. தமிழீழத் தேசியத் தலைவரின் வீரச்சாவு அறிவிப்பு… (காணொளிப்பதிவு) மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்புமேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு
  7. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு-மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள். March 10, 2025 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு 10 மார்ச் அன்று உத்தியோக பூர்வமாக வெளியாகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாட்டில், தேசியத் தலைவரின் வழிநின்று களமாடிய போராளிகள், தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்த ஒன்றுகூடலில், தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி வெளியிடப்பெற்ற தமிழீழ மாவீரர் பணிமனையின் அறிவிப்பு, 10.03.2025 அன்று உத்தியோகபூர்வமாக வெளிவருகின்றது. தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தும் அறிவிப்பானது காணொளிப் பதிவாகவும் அதேவேளை அறிக்கை வடிவிலும் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இத்தகவலை மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஊடகப் பிரிவு அனைவருக்கும் அறியத்தருகின்றது. சி. அறிவுமணி இணைப்பாளர் ஊடகப்பிரிவு, மேதகு வே.பிரபாகரன் நினைவெழுச்சி அகவம். காணொளிப் பதிவாகவு தரவிறக்கம் செய்து கொள்ள https://app.filemail.com/d/yzyjbebhklsubhr 10.03.2025- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு (காணொளி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் தமிழீழத் தேசியத் தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு அறிவிப்பு – உலகெங்கும் பரந்து வாழும் எம் உயிரினும் மேலான தமிழ் மக்களே! எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழினத்தின் ஒப்பற்ற பெருந் தலைவருமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதிதளராது, முப்பத்தாறு ஆண்டுகளாக எதிரிப்படைகளோடு அடிபணியாது போராடி நந்திக்கடலோரம் நடைபெற்ற இறுதிச்சமரில் வீரகாவியமானார். சிறிலங்கா அரசுக்கும் அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய உலகநாடுகளின் கூட்டுப்படை வலிமையையும் ஏகாதிபத்திய அரசுகளின் சூழ்ச்சி திட்டங்களையும் எதிர்கொண்டு , அனைத்து தடைகளையும், தனது பேராற்றலால் உடைத்தெறிந்து தமிழினத்தின் ஆற்றலோனாக தேசியத் தலைவர் திகழ்ந்தார் . தமிழினத்தின் தேசிய அடையாளத்தை நிலைநிறுத்தி, முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் வரையும் உறுதி குலையாது படைநடத்தி,தான் வரித்துக்கொண்ட உயரிய இலட்சியத்தையும் தனது வழிநடத்தலையும் உளமாரஏற்று, உயிர்களை விதையாக்கிய மாவீரர்களின் தியாகங்களையும் இலட்சியக் கனவுகளையும் நெஞ்சிருத்தி, எதிரிப்படையோடு இறுதிக்கணம் வரை துணிவோடு களமாடி எமது தேசியத்தலைவர் அவர்கள் வீரச்சாவடைந்த நாள் 2009 ஆண்டு மே மாதம் 18 என்று தமிழீழ மாவீரர் பணிமனை முடிவு செய்து அறியத்தருகிறது. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வீரச்சாவினை உறுதிப்படுத்தி நெஞ்சைப் பிளக்கும் இப்பெரும் துயர்மிகு அறிவிப்பை, அவரது வழிநடத்தலை உளமார ஏற்றுப் போராடிய போராளிகளுக்கும்,அவரை ஒப்பற்ற தேசியத் தலைமையாக தமது நெஞ்சங்களில் சுமந்திருக்கும் எம்முயிரினும் மேலான தமிழ் மக்களுக்கும் பெருந்துயரத்தோடு தமிழீழ மாவீரர் பணிமனையூடாக உறுதிப்படுத்தி வெளிப்படுத்திக் கொள்ளும் அதேவேளை எமது வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். காலம் காலமாக அடிமை வாழ்வுக்குள் சிக்குண்டு சிதைந்து கொண்டிருந்த ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த ஒரு சூரிய தேவனாக, இந்த நூற்றாண்டில் உலகமே வியக்கும் பல அற்புதமான வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து, தமிழினத்தின் அதிஉச்ச வீர அடையாளமாக அவர் திகழ்ந்தார். வரலாற்றிலிருந்து எவராலும் அழிக்கப்பட முடியாதவாறு, எதிரியாலும் போற்றப்படும் போரியல் அறத்துடனும் உயர்ந்த இராணுவ ஒழுக்கத்துடனும் தமிழர் வரலாற்றில் அவர் நிலைபெற்றுவிட்டார் என்பதால், செம்மொழியாம் எம் தாய்த் தமிழ்மொழி வாழும் காலமெல்லாம் எம்தேசத் தலைவரும் நிலைபெற்று நித்திய வாழ்வு வாழ்வார் . எமது அன்பிற்குரிய தாயத்தமிழ் உறவுகளே! தமிழினத்தின் கலங்கரை விளக்காக, தமிழ் மக்களை அடிமைத் தனத்திலிருந்து கரைசேர்க்கப் புறப்பட்டு, அடிமை விலங்குடைத்து, கொண்ட கொள்கையில் உறுதி தளராது, மாவீரர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார். தமிழினத்தின் விடிவிற்காக தனது உயிரை அர்ப்பணித்த எம் தேசியத் தலைவருக்கு உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி பேரெழுச்சியோடு அவரை நெஞ்சங்களில் நிலைநிறுத்தி, தமிழீழப் போராட்ட வரலாற்றின் மிகப்பெரும் அடையாளமாக அவரை இறையாக்கி எமது இதயக் கோயிலில் வைத்து பூசிக்கப்படக்கூடியவராக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் மிகப்பெரும் கடமையும் பொறுப்புமாகும் . ஆகவே வரலாற்றில் எமக்கு கிடைத்த பொக்கிசமான எமது தேசத்தலைவருக்கு, தலைவரின் தலைமையில் போராடிய போராளிகள், சமூக கட்டமைப்பினர், புலம்பெயர் மற்றும் தாயக – தமிழக மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அவரது இறுதி வீரவணக்க நிகழ்வை தாயகம், தமிழகம் உட்பட தமிழ் மக்கள் பரந்துவாழும் உலகப்பரப்பெங்கிலும் நடாத்தும் அதேவேளை அனைவரும் ஒன்றிணையக்கூடிய ஐரோப்பிய நாட்டொன்றிலும் வரும் 2025 ஆம் ஆண்டு் நடுப்பகுதியில் உலகம் போற்றும் வகையில் பேரெழுச்சியாக முன்னெடுப்போம் என உறுதி அளிக்கிறோம் . எங்கள் பெருந் தலைவர் அவர்களால் கட்டமைத்து, வளர்த்தெடுக்கப்பட்டு நமது கைகளில் தரப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தை, அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் மாறிவரும் பூகோள அரசியல் மாற்றங்களுக்கேற்ப தடம் மாறாது முன்னெடுத்துச் சென்று எமது இறுதி இலட்சியத்தை அடைவோமென எம் தேசியத் தலைவர் மீதும் மாவீரர்கள் மீதும் உறுதியெடுத்துக் கொள்கிறோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.” இ. பிரசாத் இணைப்பாளர் மாவீரர் பணிமனை, தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். 10.03.2025. https://www.uyirpu.com/?p=19537
  8. மொஸ்கோ மீது உக்ரைன் ‘பாரிய’ ட்ரோன் தாக்குதல் March 11, 2025 12:31 pm ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ஒரு “பாரிய” ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுஇ மேலும், இந்த தாக்குதலை தொடர்ந்து விமான நிலையங்கள் மூடப்பட்டதாகவும், குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மொஸ்கோ அதிகாரிகள் தெரிவித்தனர். சவுதி அரேபியாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யாவுடன் பகுதி போர்நிறுத்தத்திற்கான திட்டத்தை உக்ரைன் அமெரிக்காவிற்கு முன்வைக்கத் தயாராக இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு (01:00 GMT) தொடங்கிய இந்த தாக்குதலின் விளைவாக ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் மொஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் கூறினார். எவ்வாறாயினும், இந்த தாக்குதலின் போது ஒரே இரவில் 337 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாகவும், அவற்றில் 91 மொஸ்கோ பிராந்தியத்தில் இருந்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ட்ரோன் தாக்குதலின் விளைவாக, நகரத்தின் தெற்கே டோமோடெடோவோ, வுனுகோவோ மற்றும் ஜுகோவ்ஸ்கி மற்றும் வடக்கே ஷெரெமெட்டியோ உள்ளிட்ட நான்கு மாஸ்கோ விமான நிலையங்களில் விமானங்கள் தடைசெய்யப்பட்டிருந்தது. ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க உக்ரேனிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சவுதி அரேபியாவில் கூடியுள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/ukraine-launches-massive-drone-attack-on-moscow/
  9. கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி! கனடாவின் மார்க்காமில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (09) அந்த வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகரபிதா ஆல்பிரட் துரையப்பாவின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. 20 வயதுடைய ரகுதாஸ் நிலாக்ஷி என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவிலிருந்து கனடாவுக்குச் சென்ற இந்த பெண் இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அந்த வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இந்த பெண்ணுடன் வசித்து வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிதாரிகள் வீட்டைக் காத்துக்கொண்டிருந்த நாயையும் சுட்டுக் கொன்றதாகக் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நால்வர் கெப் ரக வாகனத்தில் தப்பிச் செல்வது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக கனேடிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகளை கனடா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். Hiru Newsகனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி!கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பெண் பலி! . Most visited website in Sri Lanka.
  10. பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடாக இலங்கை அறிவிப்பு உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் பட்டியல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான சர்வதேச நிறுவனத்தினால் பயங்கரவாதத்தின் தாக்கத்தின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப் படுத்துதல் இந்த உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் மேற்கொள்ளப்படுகிறது. உலக மக்கள் தொகையில் 99.7 சதவீத மக்களை உள்ளடக்கிய, 163 நாடுகளுக்கு பயங்கரவாதத்தின் தாக்கத்தை பகுப்பாய்வு செய்து, உலகளாவிய பயங்கரவாத குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகில் அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள நாடாக புர்கினா பாசோ முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் சிரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தக் குறியீட்டின்படி, பயங்கரவாத ஆபத்து மிகக் குறைந்த நாடாக, உலகளாவிய பயங்கரவாதக் குறியீட்டில் இலங்கை 100வது இடத்தில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்தக் குறியீட்டில் 36வது இடத்தில் இருந்த இலங்கை, 64 இடங்கள் பின்தங்கி, பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் குறைப்பதில் தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் முன்னேறிய நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதல்களும் பதிவாகாத நாடுகளாக இலங்கை மற்றும் பூட்டான் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2019 முதல் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக குறித்த அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cm83tuvsb000c10a688c6t72j
  11. போட்டியில் கலந்துகொண்ட @ஈழப்பிரியன் ஐயா, @alvayan வெற்றிபெற வாழ்த்துக்கள்! இதுவரை 3 பேர் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் பலர் இந்த வாரத்தில் கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தெரிவுசெய்து பதிந்தால் தரவேற்ற உதவியாக இருக்கும்.
  12. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.
  13. பல தேடல்களுக்குப் பின்னர் சாதனையாளர்களின் பட்டியலைக் X தளத்தில் கண்டுபிடித்தேன். Official ICC தரவுகளைக் கைவிட்டு தொலைக்காட்சியில் காண்பித்த சாதனைகளை வைத்து யாழ்கள வெற்றியாளரை அதிகாரபூர்வமாகப் பின்னர் அறிவிக்கின்றேன். ஆரம்பத்தில் இருந்தே சுட்டிக்காட்டிய @Eppothum Thamizhan க்கு நன்றி பல.
  14. ரணிலைத் தூற்றுவது சரிதானா? முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல்-ஜசீராவின் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் கேட்ட கேள்விகளும் அவர் கொடுத்த பதில்களும் உலகளவில் பல விமர்சனங்களை தோற்றுவித்திருக்கிறது. அதற்கெதிரான விமர்சனங்களாக ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று காஸா, மியன்மார், காஷ்மீர் பிரச்சினைகள் பற்றி டிரம்ப், புட்டின், மோடி, நெத்தன்யாகு போன்றவர்களிடம் கேள்விகளைக் கேட்க முடியுமா என்ற வகையிலான கருத்துக்களும் வந்த வண்ணமிருக்கின்றன. இது போலவே டி.டப்ளியு. தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்திருந்த நேர்காணலும் விமர்சனங்களைக் கொண்டுவந்திருந்தது. உலகில் அரசியல்வாதிகள் தங்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களை மிகச் சரியாகப் பயன்படுத்துகின்றார்களா என்றால், அது கேள்விக்குறிகளையே தோற்றுவிக்கும். அது இலங்கைக்கு மாத்திரமல்ல அனைத்து நாடுகளுக்கும்இது பொதுவானதாகவே இருக்கும்.ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகள் யாரும் அவர்களுடைய ஆட்சிக் காலங்களில் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்து முடித்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். அதனை நிரூபிப்பதாகவே ஒவ்வொருவருடைய ஆட்சிக்காலங்களின் பின் ஏற்பட்ட மாற்றங்களே சாட்சியாக இருக்கிறது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மன் என பல நாடுகளை உதாரணமும் காட்டலாம். இலங்கையில் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டே வந்திருக்கிறார்கள். நாட்டுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அக்காலங்களில் உருவான தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தங்களுடைய ஆதரவுகளை வழங்கினார்கள். ஆனால், ஆட்சியிலிருந்து சிங்களத் தலைவர்கள் யாரும் அந்த அரசியல்வாதிகளின் முயற்சிகளுக்குத் தீர்வை முன்வைக்கவேயில்லை. முன்வைத்தாலும் அவை சிங்கள அடிப்படைவாதிகளால் இல்லாமலாக்கப்பட்டன. அதற்கு டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம், சந்திரிகா அம்மையாரின் இடைக்கால நிருவாக சபை, சுனாமி நிவாரணத் திட்டம், மைத்திரிபால சிறிசேன கால புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்றவற்றை அதற்கு உதாரணமும் காட்டலாம். ஏன்? இந்தியாவின் முழுமையான பங்குபற்றலுடன் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனால், உருவான 13ஆவது திருத்தத்தையும் கூறலாம். 13ஆவது திருத்தம் இதுவரையில் முழுமையாக அமுல்படுத்தப்படாமலிருப்பதும் மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை ஆளுநர்கள் வசம் வைத்திருக்கின்றமை வேறுகதை. அகிம்சை வழிப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒருமித்து இருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பிரிவுகளாக மாறத் தொடங்கினார்கள். அதற்கு ஒவ்வொருவரும் கைக்கொண்ட கொள்கைகள் காரணமாக இருந்தன. ஒருவர் ஒருவழியை முன்வைக்க மற்றையவர்கள் வேறு ஒரு முறையையே கையாண்டிருக்கின்றனர். எவ்வாறிருந்தபோதிலும், தமிழ் மக்களின் சுதந்திரமான அரசியல் உரிமைக்கான சுய நிர்ணயக் கோரிக்கைக்கு ஏற்ற தீர்வு வழங்கப்படவில்லை. அது தமிழ் அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனங்களையே ஏற்படுத்தியிருந்தது. இப்போதும் அவ்வாறான விமர்சனங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பக்கம் சாய்வதற்கு அதுவும் ஒரு காரணமாகும். அரசியல் ரீதியான முயற்சிகளின் இயலாமை காரணமாகவே ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. அந்த ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி ஆட்சியிலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரையும் அச்சம் கொள்ள வைத்திருந்தது என்பதற்கப்பால் பிரமிக்கவும் செய்திருந்தது. பிற்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு இறுதியில் ஆயுத ரீதியாகவே அடக்கப்பட்டது. இலங்கையை பொறுத்தவரையில், தமிழ் மக்களது போராட்டமானது ஒட்டு மொத்த சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு திசை திருப்பப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் ஏதோ தமிழர்களுடைய போராட்டத்தை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரே என்றும் சொல்லப்பட்டது. அதனால்தான் இலங்கையின் ஏகபோக ராஜாவாக மகிந்த புகழாரம் சூடப்பட்டிருந்தார். ஆனால், சிறிது காலத்திலேயே அவர்கள் ஒன்றுமே இல்லாதவர்களாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். இறுதியில் தேசியப் பட்டியல் ஊடாக மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டிய நிலையையும் கொண்டுவந்தது, இது சிங்கள மக்கள் தங்களுக்கிருந்த நீண்டகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த தரப்பினரையே மக்கள் ஒதுக்கியதையே காட்டுகிறது. ஒருவகையில் பார்த்தால், உலகமே பிரமிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்காக மிகவும் கவனமாகக் காய் நகர்த்தி நோர்வேயின் உதவியுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைப்பாடுகள் காரணமாகப் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். அவரது அந்த தந்திரமான கனகச்சிதமான வேலைப்பாடு ஆயுத ரீதியாக புலிகள் பலமிழக்கும் நிலையை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துவந்த கிழக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் பங்களிப்பு குறைவதற்கு அல்லது இல்லாமல் போவதற்கு புலிகளின் பிளவு காரணமாக இருந்தது. அதனைச் செய்து முடித்தவர் ரணில் விக்ரமசிங்க ஆகும். ஆயுதப் போராட்டத்தின் முடிவு, அதனால் ஏற்பட்ட நாட்டின் அமைதி நிலை, இயல்பு வாழ்க்கை போன்றவற்றின் பின்னரே சிங்கள மக்கள் தங்களது மற்றைய விடயங்களைப் பற்றி சிந்திப்பதற்கான காலத்தைக் கொடுத்திருந்தது. அதற்காக ரணிலுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த தலைவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு, விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பங்களிப்புச் செய்யவில்லை என்ற கருத்தாகாது என்பதும் இதில் கவனிக்கப்படவேண்டியது. இந்த இடத்தில்தான், அல்-ஜசீராவின் சமீபத்திய நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில், பத்திரிகையாளர் புலனாய்வு அதிகாரி போல் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருந்தார். ரணில் பதிலளிக்க நேரம் கொடுக்காமல் கதைத்து கொண்டிருந்தார். பதிலளிக்கும் நேரத்தில் இடைஞ்சல் செய்து கொண்டே இருந்தார் என்பதெல்லாம் ஒருவகையில் பார்த்தால், ரணில் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டார் என்பதாகக் கொள்ளலாம். உண்மையில் அவர் குற்றவாளியல்ல. இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பியதை ஏற்படுத்த அவருடைய ஆட்சி, அதிகார காலங்களில் அவர் முயற்சியைச் செய்திருந்தார். ரணிலைப் பொறுத்தவரையில், இலங்கையை உலகமயமாக்கலின் சூழலுக்கேற்பவும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் நகர்த்தியே வந்திருக்கிறார். நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் எதிர்பார்த்த ஆட்சியொன்றை மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நிறைவேற்ற முன்னின்றார். அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலர் இணைந்தே இருந்தனர். ஆனால், அந்த முயற்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருகையாலும், கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகி, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததால் கைகூடாமல் போனது. அந்த ஆட்சி முடிவுக்கு வருவதற்கு மக்கள் எதிர்பார்க்காத விடயமான இயற்கை விவசாய முறை அறிமுகம் காரணமாக இருந்தது. மகிந்த குடும்பத்தாருக்கு அரசியலே வேண்டாமென்று ஒதுங்கவேண்டிய நிலையையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கலைத்து விட வேண்டும் என்று சிந்திக்கும் அளவிற்கு தற்போதைய நிலையையும் கொண்டுவந்திருக்கிறது. இருந்தாலும், அந்நேரத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி மக்கள் எதிர்பார்க்கின்ற இலங்கையை ஏற்படுத்தவே ரணில் விக்கரமசிங்க முயற்சியை மேற்கொண்டார். அக்காலத்தில் அவர் மேற்கொண்டிருந்த பிரயத்தனங்கள் சாதாரணமானவையல்ல. பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையை சர்வதேச அளவில் தூக்கி நிறுத்திவிடவேண்டும் என்றே அவர் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். ஓரளவிற்கு அதில் வெற்றியும் கண்டார். அதனாலேயே அவர் இப்போதும் விமர்சிக்கப்படுகின்றார் என்றே சொல்லாம். ஒருவகையில் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த, இலங்கையின் தேசிய செல்வத்தை அழித்து கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரையே ஒன்றுமில்லை என்றாக்கிய மக்கள் ரணில் விக்ரமசிங்கவை மிகச் சாதாரணமாகவே பார்ப்பர் என்பதில் தவறொன்றும் இருக்கப் போவதில்லை என்றே சொல்லாம். ஒரு அரச தலைவர் தன்னுடைய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் விமர்சிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை. இருந்தாலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தேவையற்ற விடயங்கள் அரசியல் நாகரீகமற்றதாகவே பார்க்கப்படவேண்டும். அந்தவகையிலேயே, ரணில் விக்ரமசிங்க மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் அவரை ஒன்றும் செய்து விடப் போவதில்லi என்பதுடன், இலங்கை அரசியலில் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றே கொள்ளலாம். அதே நேரத்தில், தமிழ் மக்களின் விடயத்தில் அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டம் மக்கள் விடுதலை முன்னணியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும், வேறு ஒரு கோணத்தில் அணுகப்படாமலிருப்பதும் இதுபோன்றதொரு நிலையே என்பதும் மறைப்பதற்கில்லை. ன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல்-ஜசீராவின் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் கேட்ட கேள்விகளும் அவர் கொடுத்த பதில்களும் உலகளவில் பல விமர்சனங்களை தோற்றுவித்திருக்கிறது. அதற்கெதிரான விமர்சனங்களாக ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று காஸா, மியன்மார், காஷ்மீர் பிரச்சினைகள் பற்றி டிரம்ப், புட்டின், மோடி, நெத்தன்யாகு போன்றவர்களிடம் கேள்விகளைக் கேட்க முடியுமா என்ற வகையிலான கருத்துக்களும் வந்த வண்ணமிருக்கின்றன. இது போலவே டி.டப்ளியு. தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்திருந்த நேர்காணலும் விமர்சனங்களைக் கொண்டுவந்திருந்தது.உலகில் அரசியல்வாதிகள் தங்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களை மிகச் சரியாகப் பயன்படுத்துகின்றார்களா என்றால், அது கேள்விக்குறிகளையே தோற்றுவிக்கும். அது இலங்கைக்கு மாத்திரமல்ல அனைத்து நாடுகளுக்கும் இது பொதுவானதாகவே இருக்கும். ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகள் யாரும் அவர்களுடைய ஆட்சிக் காலங்களில் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்து முடித்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். அதனை நிரூபிப்பதாகவே ஒவ்வொருவருடைய ஆட்சிக்காலங்களின் பின் ஏற்பட்ட மாற்றங்களே சாட்சியாக இருக்கிறது. அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மன் என பல நாடுகளை உதாரணமும் காட்டலாம். இலங்கையில் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டே வந்திருக்கிறார்கள். நாட்டுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அக்காலங்களில் உருவான தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தங்களுடைய ஆதரவுகளை வழங்கினார்கள். ஆனால், ஆட்சியிலிருந்து சிங்களத் தலைவர்கள் யாரும் அந்த அரசியல்வாதிகளின் முயற்சிகளுக்குத் தீர்வை முன்வைக்கவேயில்லை. முன்வைத்தாலும் அவை சிங்கள அடிப்படைவாதிகளால் இல்லாமலாக்கப்பட்டன. அதற்கு டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம், சந்திரிகா அம்மையாரின் இடைக்கால நிருவாக சபை, சுனாமி நிவாரணத் திட்டம், மைத்திரிபால சிறிசேன கால புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்றவற்றை அதற்கு உதாரணமும் காட்டலாம். ஏன்? இந்தியாவின் முழுமையான பங்குபற்றலுடன் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனால், உருவான 13ஆவது திருத்தத்தையும் கூறலாம். 13ஆவது திருத்தம் இதுவரையில் முழுமையாக அமுல்படுத்தப்படாமலிருப்பதும் மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை ஆளுநர்கள் வசம் வைத்திருக்கின்றமை வேறுகதை. அகிம்சை வழிப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒருமித்து இருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பிரிவுகளாக மாறத் தொடங்கினார்கள். அதற்கு ஒவ்வொருவரும் கைக்கொண்ட கொள்கைகள் காரணமாக இருந்தன. ஒருவர் ஒருவழியை முன்வைக்க மற்றையவர்கள் வேறு ஒரு முறையையே கையாண்டிருக்கின்றனர். எவ்வாறிருந்தபோதிலும், தமிழ் மக்களின் சுதந்திரமான அரசியல் உரிமைக்கான சுய நிர்ணயக் கோரிக்கைக்கு ஏற்ற தீர்வு வழங்கப்படவில்லை. அது தமிழ் அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனங்களையே ஏற்படுத்தியிருந்தது. இப்போதும் அவ்வாறான விமர்சனங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பக்கம் சாய்வதற்கு அதுவும் ஒரு காரணமாகும். அரசியல் ரீதியான முயற்சிகளின் இயலாமை காரணமாகவே ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. அந்த ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி ஆட்சியிலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரையும் அச்சம் கொள்ள வைத்திருந்தது என்பதற்கப்பால் பிரமிக்கவும் செய்திருந்தது. பிற்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு இறுதியில் ஆயுத ரீதியாகவே அடக்கப்பட்டது. இலங்கையை பொறுத்தவரையில், தமிழ் மக்களது போராட்டமானது ஒட்டு மொத்த சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு திசை திருப்பப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் ஏதோ தமிழர்களுடைய போராட்டத்தை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரே என்றும் சொல்லப்பட்டது. அதனால்தான் இலங்கையின் ஏகபோக ராஜாவாக மகிந்த புகழாரம் சூடப்பட்டிருந்தார். ஆனால், சிறிது காலத்திலேயே அவர்கள் ஒன்றுமே இல்லாதவர்களாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். இறுதியில் தேசியப் பட்டியல் ஊடாக மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டிய நிலையையும் கொண்டுவந்தது, இது சிங்கள மக்கள் தங்களுக்கிருந்த நீண்டகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த தரப்பினரையே மக்கள் ஒதுக்கியதையே காட்டுகிறது. ஒருவகையில் பார்த்தால், உலகமே பிரமிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்காக மிகவும் கவனமாகக் காய் நகர்த்தி நோர்வேயின் உதவியுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைப்பாடுகள் காரணமாகப் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். அவரது அந்த தந்திரமான கனகச்சிதமான வேலைப்பாடு ஆயுத ரீதியாக புலிகள் பலமிழக்கும் நிலையை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துவந்த கிழக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் பங்களிப்பு குறைவதற்கு அல்லது இல்லாமல் போவதற்கு புலிகளின் பிளவு காரணமாக இருந்தது. அதனைச் செய்து முடித்தவர் ரணில் விக்ரமசிங்க ஆகும். ஆயுதப் போராட்டத்தின் முடிவு, அதனால் ஏற்பட்ட நாட்டின் அமைதி நிலை, இயல்பு வாழ்க்கை போன்றவற்றின் பின்னரே சிங்கள மக்கள் தங்களது மற்றைய விடயங்களைப் பற்றி சிந்திப்பதற்கான காலத்தைக் கொடுத்திருந்தது. அதற்காக ரணிலுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த தலைவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு, விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பங்களிப்புச் செய்யவில்லை என்ற கருத்தாகாது என்பதும் இதில் கவனிக்கப்படவேண்டியது. இந்த இடத்தில்தான், அல்-ஜசீராவின் சமீபத்திய நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில், பத்திரிகையாளர் புலனாய்வு அதிகாரி போல் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருந்தார். ரணில் பதிலளிக்க நேரம் கொடுக்காமல் கதைத்து கொண்டிருந்தார். பதிலளிக்கும் நேரத்தில் இடைஞ்சல் செய்து கொண்டே இருந்தார் என்பதெல்லாம் ஒருவகையில் பார்த்தால், ரணில் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டார் என்பதாகக் கொள்ளலாம். உண்மையில் அவர் குற்றவாளியல்ல. இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பியதை ஏற்படுத்த அவருடைய ஆட்சி, அதிகார காலங்களில் அவர் முயற்சியைச் செய்திருந்தார். ரணிலைப் பொறுத்தவரையில், இலங்கையை உலகமயமாக்கலின் சூழலுக்கேற்பவும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் நகர்த்தியே வந்திருக்கிறார். நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் எதிர்பார்த்த ஆட்சியொன்றை மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நிறைவேற்ற முன்னின்றார். அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலர் இணைந்தே இருந்தனர். ஆனால், அந்த முயற்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருகையாலும், கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகி, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததால் கைகூடாமல் போனது. அந்த ஆட்சி முடிவுக்கு வருவதற்கு மக்கள் எதிர்பார்க்காத விடயமான இயற்கை விவசாய முறை அறிமுகம் காரணமாக இருந்தது. மகிந்த குடும்பத்தாருக்கு அரசியலே வேண்டாமென்று ஒதுங்கவேண்டிய நிலையையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கலைத்து விட வேண்டும் என்று சிந்திக்கும் அளவிற்கு தற்போதைய நிலையையும் கொண்டுவந்திருக்கிறது. இருந்தாலும், அந்நேரத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி மக்கள் எதிர்பார்க்கின்ற இலங்கையை ஏற்படுத்தவே ரணில் விக்கரமசிங்க முயற்சியை மேற்கொண்டார். அக்காலத்தில் அவர் மேற்கொண்டிருந்த பிரயத்தனங்கள் சாதாரணமானவையல்ல. பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையை சர்வதேச அளவில் தூக்கி நிறுத்திவிடவேண்டும் என்றே அவர் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். ஓரளவிற்கு அதில் வெற்றியும் கண்டார். அதனாலேயே அவர் இப்போதும் விமர்சிக்கப்படுகின்றார் என்றே சொல்லாம். ஒருவகையில் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த, இலங்கையின் தேசிய செல்வத்தை அழித்து கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரையே ஒன்றுமில்லை என்றாக்கிய மக்கள் ரணில் விக்ரமசிங்கவை மிகச் சாதாரணமாகவே பார்ப்பர் என்பதில் தவறொன்றும் இருக்கப் போவதில்லை என்றே சொல்லாம். ஒரு அரச தலைவர் தன்னுடைய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் விமர்சிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை. இருந்தாலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தேவையற்ற விடயங்கள் அரசியல் நாகரீகமற்றதாகவே பார்க்கப்படவேண்டும். அந்தவகையிலேயே, ரணில் விக்ரமசிங்க மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் அவரை ஒன்றும் செய்து விடப் போவதில்லi என்பதுடன், இலங்கை அரசியலில் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றே கொள்ளலாம்.அதே நேரத்தில், தமிழ் மக்களின் விடயத்தில் அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டம் மக்கள் விடுதலை முன்னணியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும், வேறு ஒரு கோணத்தில் அணுகப்படாமலிருப்பதும் இதுபோன்றதொரு நிலையே என்பதும் மறைப்பதற்கில்லை. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலைத்-தூற்றுவது-சரிதானா/91-353428
  15. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை எனத் தமிழரசுக் கட்சி தீர்மானம் editorenglishMarch 10, 2025 எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என்று தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது என கட்சியின் பதில் செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுகின்றமை தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. அந்த வகையில் கொழும்பு மாநகரசபையின் கீழ் தமிழ் மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளன. அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலையை ஏற்ப்படுத்தியுள்ளது. இங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும் அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது என தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (09/03/2025) நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விட‌யங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த கூட்டத்தில் பதில் பொதுச்செயலாளர் எம்.எ,சுமந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன், ஞா.சிறிநேசன்,குகதாசன்,சிறிநாத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://globaltamilnews.net/2025/213040/
  16. நான் கடைசிப் பந்துக்கு அப்பால் பார்க்கவில்லை. Cricinfo மற்றும் Official ICC Stats இல் உள்ளபடிதான் ஹென்றியை முதலாவதாகக் கொடுத்துள்ளேன். @புலவர் ஐயாவும் @வீரப் பையன்26 உம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ICC மீது வழக்கு வைக்கலாம்😃 https://www.espncricinfo.com/records/tournament/bowling-best-figures-innings/icc-champions-trophy-2024-25-16814 https://www.icc-cricket.com/tournaments/champions-trophy-2025/stats
  17. யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் @வீரப் பையன்26 க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! கூடவே இரண்டாம் இடத்திலிருந்து ஆறாம் இடம்வரை சமநிலையான புள்ளிகளுடன் இருக்கும் @செம்பாட்டான் , @Eppothum Thamizhan , @புலவர் ஐயா, @நீர்வேலியான் , @கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். ஏழாம், எட்டாம் இடங்களில் சமமான புள்ளிகளுடன் இருக்கும் @nunavilan , @நியாயம் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றி பல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.