Everything posted by suvy
-
மெய்தீண்டாக் காதல்........!
வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி சகோதரி.......! 😁
-
கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
உங்களுக்கு எல்லா கிரகமும் உச்சம் பெற்றுக் கொண்டிருந்திருக்கு ஆனாலும் என்ன எல்லா கிரகமும் வேறெங்கேயோ வெள்ளி பார்த்துக் கொண்டிருக்கு......இதை படிச்சு சிரித்துக் கொண்டிருக்க மனிசியும் ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு போகுது.....இது நிஜமா மறக்க முடியாத அனுபவம்தான்......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம்வர நெஞ்சமில்லையோ. அன்பே என் அன்பே. தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்டநிலவோ கண்ணே என் கண்ணே... பூபாளமே கூடாதேன்னும் வானமுண்டோ சொல் தாமரை மேலே நீர்த்துளி போல் தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு மாலையும் மேளமும் தேவையென்ன... சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல் பூவே உன் வாழ்க்கைதான் என்ன. சொல் மேடையை போலே வாழ்க்கையல்ல நாடகம் ஆனதும் விலகிச்செல்ல ஓடையைப் போலே உறவுமல்ல பாதைகள் மாறியே பயணம் செல்ல விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வார்ண நிலாவும் என்னோடு நீவந்தால் என்ன... வா.....! ---மன்றம் வந்த தென்றலுக்கு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்பே அமுதா......! 😢- மலருக்கு தென்றல் பகையானால்.........!
உ மலருக்கு தென்றல் பகையானால் .......! மலர்ந்திட கதிரவன் துணையுண்டு. (1). நிர்மலா சங்கரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்கு வந்து பத்து வருடமாகின்றது. முன்பெல்லாம் மிக அன்பாயிருந்த அவளது மாமியார் இராசம்மா இப்போதெல்லாம் அவள்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கிறாள். அது நிர்மலா அவளைக் கடந்து போகும் போதெல்லாம் ஜாடைமாடையாக கதைப்பதும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கி சண்டை போடுவதுடன், மாலையில் மகன் சங்கர் வேலையால் வந்ததும் போட்டுக் குடுப்பதிலும் தெரிகிறது. அவனும் வேலையால் அலுத்துக் களைத்து வரும்போது தாயின் புறணியைக் கேட்டு சில நேரங்களில் நிர்மலாவை கை நீட்டி அடித்தும் விடுகிறான். நிர்மலாவின் குடும்பம் அவ்வளவு வசதியில்லா விட்டாலும்கூட சராசரியான நடுத்தரக் குடும்பம்தான். சண்முகம் கோமளம் தம்பதிகளுக்கு நிர்மலா ஐந்தாவது பெண்பிள்ளை. ஆனாலும் அவர்கள் அவளை நன்றாகப் படிக்க வைத்திருந்தார்கள். அவளும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. விசேஷமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அந்தப் பாடசாலையிலேயே சிறப்பான சித்தி பெற்றிருந்தாள். அத்துடன் சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக இந்தத் திருமணம் வந்தது. அவர்கள் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை. ஆயினும் நிர்மலா எவ்வளவோ மறுத்தும்கூட, இனி இப்படி ஒரு சம்பந்தம் அமைவது கஷ்டம் என்று சொல்லு அவளை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். ஆனாலும் சண்முகம் அவளுக்கு கழுத்துக்கு காதுக்கு கைகளுக்கு என்று சில பல நகைகள் எல்லாம் போட்டுத்தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் வரும்போது மறக்காமல் தனது மடிக்கணனியையும் கைபேசியையும் கையேடு கொண்டு வந்திருந்தாள். இராசம்மாவும் கொடுமையானவள் அல்ல. அவளுக்கு வயசும் நாற்பத்தைந்தில் இருந்து நாற்பத்தெட்டில்தான் இருக்கும். அவளுக்கு குட்டையான தலைமுடி. முன்பெல்லாம் முடி நீளமாக வளரவில்லையே என்பதுதான் அவளது குறையாக இருந்தது. அதற்காக "கேசவர்த்தினி" உட்பட பல எண்ணெய்கள் தைலங்கள் எல்லாம் பாவித்தும் வந்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் குறைகூட இல்லை அவளுக்கு. முடிவாக இருக்கிற முடியை காப்பாற்றினாலே போதும் என்னும் மனநிலைக்கு வந்திருக்கிறாள்.அவ்வளவுக்கு முடி கொட்டத் தொடங்கி விட்டது. அத்துடன் இத்தனை வருடங்களாகியும் மகனுக்கு பிள்ளை இல்லையே என்னும் கவலையும் சேர்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல் கோயில் குளங்கள், கடைகளில் சந்திக்கும் அவளது சிநேகிதிகளும் சங்கருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள். "கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைவதுபோல்" இப்போதெல்லாம் அந்த எண்ணங்கள்தான் அவளை ஆட்டிப் படைக்கிறது. முன்பு இராசம்மாதான் மகனிடம் சொல்லி நிர்மலா விட்ட அவள் படிப்பைத் தொடர வழி செய்து பட்டப் படிப்பை முடிக்கவும் உதவியவள். சமைக்கவே தெரியாமல் இருந்த அவளை தனக்குப் பக்கத்தில் வைத்து தான் சமைக்கும் போதெல்லாம் அவளுக்கும் சொல்லிக் குடுத்து சாம்பார்,ரசம்,கறி குழம்புகளுக்கு ஏற்றாற்போல் காய்கறி வெட்டுவதில் இருந்து மீன்கள், இறைச்சிகள் எப்படி வெட்டுவது என்பதுவரை கற்றுக் குடுத்திருந்தாள். கூடவே வேலைக்காரி தாயம்மாவும் இருப்பதால் சமைக்கிற நேரம் போக மிச்சம் நிறைய நேரம் இருக்கும். அந்நேரங்களில் இருவரும் சங்கீதம்,இராகங்கள் பற்றி விலாவாரியாக விவாதிப்பதும் தேவாரம் கீர்த்தனைகள் சாதகம் செய்வதுமாய் பொழுதுகள் போகும். அதனால் மாமியாரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவவை தனது தாய்க்கும் மேலாக மதித்து கவனித்து வருவாள். ஆனாலும் என்ன செய்வது தன் குலம் விளங்க ஒரு பேரனோ பேத்தியோ அவள் பெற்றுத் தரவில்லை என்னும் ஆதங்கம் அவளை கொஞ்சம் மாற்றி விட்டது. மலரும்...........! 🌹- அதிசயக்குதிரை
TamilCNN · *நெதர்லாந்து மக்கள் சுறுப்பாக இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா! நெதர்லாந்து தேச மக்கள் சுறுசுறுப்பானவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் வருடத்திற்கு சராசரியாக 1,000 கி.மீ. மிதிவண்டியில் பயணிக்கிறார்களாம்......! 👍- செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
பகிர்வுக்கு நன்றி பெருமாள்......!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாலாடை மேனி ......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச் சிற்பிகள் செதுக்கிய உருவமடி இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி பெண் : கொடுத்து வைத்த பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்தச் சுகம் சொல்வாயா கொடுத்து வைத்த கால்கொலுசே கால் அளவைச் சொல்வாயா கொடுத்து வைத்த மணியே மார் அழகைச் சொல்வாயா ஆண் : அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன் உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உனையிடுவேன் மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன் தூக்கத்தில் மாா்பில் வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளி எல்லாம் சேகரிப்பேன் தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்......! --- அன்பே அன்பே கொல்லாதே---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
உங்களுடைய துணிகரமான எண்ணங்களுக்கு வாழ்த்துக்கள்........இங்கு வாழும் பெரும்பாலோர்க்கு இப்படியான எண்ணங்கள் நிறைய உண்டு. ஆனால் எல்லோராலும் செயல்படுத்த முடிவதில்லை......! 😁- எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
ஓம்......ஆர்வத்தில சாறி வாங்கியபடியால்தான் தனது உடுப்புகளை வைக்க மறந்து போனார்.......! 😂- எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
எழுதுங்கோ எழுதுங்கோ எல்லாம் வெல்லலாம்......நல்லா கரைச்சல் பட்டாச்சுது போல........! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
அதில் ஒன்றும் தப்பில்லை பிள்ளை......."பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்" புட்டை விட களிக்குத்தான் பெலம் அதிகம்......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
எச்சரிக்கை: இது உங்களை குண்டம்மா ஆக்குற பிளான் போலக் கிடக்கு......! 😂- கொஞ்சம் ரசிக்க
சிம்பிள் & ஸ்வீட்.......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உணவு தரும் அன்னை போலெ......! 🙏Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.