Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. Variety of images · Rejoindre Sivasubramanian Sankaralinganadar · · பழைய சோறு கிடைச்சா கூச்சப்படாம சாப்பிடுவீங்களான்னு கேட்டார் ஒருத்தர். ...இதுக்கு கூச்சப் பட என்ன இருக்கு.. நிமிர்ந்து நின்று கெத்தா சொல்லுவோம் பழைய சோறு எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த சம்மர் வெப்பத்தை தணித்து உடம்பை குளுகுளு னு வச்சிருக்கும் முதலில் சிறு புளிப்பாயிருக்கும் நீராகரம் குடிச்சிடுவோம். பிளேட்டில் பழைய சோற்றை அள்ளி வைத்து மோர் ஊற்றிக்குவோம்! . பழைய சொற்றுக்கு ஏற்ற ஸைடு டிஷ் வகைகள்: 1. வெறுமெனே சின்ன வெங்காயம் கடிச்சிக்கலாம் 2. ஊறுகாய் 3.வற்றல் வகைகள்: வெங்காயம், கொத்தவரங்காய், வெண்டைக்காய், மோர் மிளகாய். 4. சுட்ட கருவாடு (அ) வெங்காயம் சேர்த்து வதக்கல் 5. பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கல் 6. மசால் மொச்சை 7. உருளைக்கிழங்கு வதக்கல்.....!
  2. மலர்............(12). நிர்மலாவின் குடும்பத்தினரும் அங்கு வந்து ஒரு இடத்தைப் பிடித்து பந்தல் எல்லாம் போட்டு சாமான்களை இறக்கி வைத்து அப்புவை காவலுக்கு வைத்து விட்டு மாதாவின் ஊர்வலம் பார்க்கப் போயிருந்தார்கள். பின் தரிசனம் முடிந்து அவர்கள் வந்து சமைக்கத் தொடங்கியதும் அப்பு கோயில் பார்க்கப் போகிறார். கதிரவனும் முகிலனும் விளையாட்டு சாமான்கள் வாங்குவதற்கு கடைகள் இருக்கும் பக்கமாகப் போகிறார்கள். சிவாங்கியும் சரவணனும் சிறுவர்களாதலால் தாயோடும் பேத்தியாரோடும் இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் ஆச்சியும் நிர்மலாவும் சமையல் வேலைகளை முடித்து விட்டிருந்தார்கள். இனி எல்லோரும் வந்து சாப்பிட்ட பின் ஊருக்கு கிளம்பு வேண்டியதுதான். ஆச்சி அங்கிருக்க நிர்மலாவும் பிள்ளைகளுக்கு பிராக்கு காட்ட இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு மூவருமாய் வீதியில் நடக்கிறார்கள். அப்போது ஒரு பந்தலுக்குள் இருந்த அம்மா அவளைக் கூர்ந்து பார்த்து விட்டு பிள்ளை நிர்மலா என்று சத்தமாய் கூப்பிடுகிறாள். உடனே நிர்மலாவும் திரும்பிப் பார்க்க அங்கு இராசம்மா ஒரு சிறிய கதிரையில் இருந்து எழும்ப முயற்சித்தபடி இவர்களை அழைக்கிறாள். ஓம் ...அம்மா நான் நிர்மலாதான், நீங்கள் இருங்கோ நான் அங்கு வாறன் என்று சொல்லி பிள்ளைகளுடன் அங்கே செல்கிறாள். அவளைக் கண்டதும் இராசம்மாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. கண்களில் நீர் சொரிய அவளின் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். --- நிர்மலா எப்பிடியடி இருக்கிறாய். இவர்கள் உன் பிள்ளைகளோ என்று வினவுகிறாள். ---ஓம் அம்மா நான் நல்லா இருக்கிறன். இவன் என் மகன் சரவணன். இவள் என் புருசனின் மூத்த தாரத்து மகள் சிவாங்கி. இவ பிறக்கும்போது அவ தவறிட்டா. --- அப்ப நீ இரண்டாம்தாரமாகவோ அவரைக் கட்டியிருக்கிறாய். அவருக்கு வேறு பிள்ளைகளும் இருக்கோ என்று கேட்கிறாள். --- ஓம் அம்மா இவளுக்கு மூத்த சகோதரன் முகிலன் என்றொரு மகனும் இருக்கிறார். பின் இராசம்மாவும் அவள் வயிற்றைப் பார்த்து விட்டு கண்ணாலேயே விசாரிக்க அவளும் ம்....என்று சொல்கிறாள். --- எத்தனையாவது மாசம் என்று கேட்க நிர்மலாவும் ஆறுமாசமாகுது என்கிறாள். --- பிள்ளை அன்று நீ போனதில் இருந்து நாங்கள் உன்னைத் தேடாத இடமில்லை. உன்ர அப்பா அம்மாவுடன் கதைக்கிறனியே. --- இல்லையம்மா, இனிமேல்தான் அவையளோட தொடர்பு கொள்ள வேணும். --- கெதியா அவையளோட கதை பிள்ளை.அவையிலும் கலங்கிப்போய் இருக்கினம். நாங்கள்தான் உன்னை ஏதோ செய்து போட்டம் என்று சண்டை பிடித்து விட்டு போனவை. பிறகு ஒரு தொடர்பும் இல்லை. அதுசரி உன்ர புருசனும் அவை வீட்டுக்காரரும் உன்னை நல்லபடியா வைத்திருக்கினமோ. --- ஓம் அம்மா. அவர் மட்டுமன்றி அப்பு ஆச்சியும் என்மேல் நல்ல பாசமாய்தான் இருக்கினம். --- எனக்குத் தெரியும் பிள்ளை, நீ உன்ர குணத்துக்கு எங்கிருந்தாலும் நல்லா இருப்பாய் என்று சொல்லி சரவணனை தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறாள். --- நான் அங்கு போகும்போது அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தன. நான் அவையளது வீட்டில் வாடகைக்குத்தான் இருந்தனான். பின் அவரைத் திருமணம் செய்துதான் கடவுள் அருளால் எனக்கு இந்தப் பிள்ளைகள் கிடைத்தன. அது சரி அம்மா உங்களுக்கு பேரன் பேத்தி இருக்கினமோ. --- இராசம்மாவுக்கு கண்களில் நீர் கோர்த்து விட்டது. அவள் மூக்கை சிந்தி அங்கால வரப்பில் எறிந்து விட்டு, அதை என் பிள்ளை கேட்கிறாய், ஜோதியை கலியாணம் செய்து கொண்டு வந்து இப்ப நாலைந்து வருடமாகி விட்டது. இன்னும் கடவுள் கண் திறக்கேல்ல. நானும் கையடுத்துக் கும்பிடாத தெய்வமில்லை, செய்யாத பரிகாரமுமில்லை, இனி இந்த மாதாவாவது கண் திறக்க வேணும் குரல் கம்முகிறது. --- அழாதையுங்கோ அம்மா. எல்லாம் நல்லபடியா நடக்கும். எனக்குத் தெரிந்தவரையில அவருக்கு ஒரு குறையும் இருந்ததில்லை. நான் செய்த இந்தத் திருமணம் கூட நானே எனக்கு செய்து கொண்ட ஒரு சுயபரிசோதனைதான். ஒருவேளை இந்தப் பிள்ளைகள் கிடைக்காதிருந்தாலும்கூட நான் வளர்க்க அவர் மூலமா இரண்டு பிள்ளைகள் இருக்கு என்னும் மனநிறைவுதான். --- நீ சொல்லுறதும் சரியாத்தான் இருக்கு. ஆனால் என்ன செய்வது எல்லாம் விதிப்படிதான் நடக்கும். --- நிர்மலா தனக்குள் நினைக்கிறாள் "ஒருவேளை சங்கரும் யாராவது ஓரிரு பிள்ளையுடன் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்திருந்தால் அவருக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கக் கூடுமோ என்று. --- அதே எண்ணம் இராசம்மாவுக்கும் அதேநேரத்தில் தோன்றுகிறது. --- பின்பு நிர்மலாவும் சரியம்மா அவர்கள் வரும் நேரமாச்சுது, என்னையும் பிள்ளைகளையும் தேடுவார்கள். நாங்கள் போகிறோம் என்று சொல்லி பிள்ளையை அவளிடம் இருந்து வாங்கும் போது எதிர்பாராமல் இராசம்மாவும் தனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழட்டி பிள்ளையின் கழுத்தில் போடப்போக நிர்மலா அதைத் தடுத்து வேண்டாம் அம்மா இது சிலநேரம் வீட்டில் பிரச்சினையாகி விடும், ஏதாவது இனிப்போ பலகாரமோ குடுங்கள் போதும் என்று சொல்ல இராசம்மாவும் ம்.....அதுவும் சரிதான் என்றுவிட்டு பைக்குள் இருந்து கொஞ்சம் சொக்கிலேட்டுகள் எடுத்து பிள்ளைகளிடம் கொடுக்கிறாள். நிர்மலாவும் சரியென்று சொல்லி விட்டு பிள்ளைகளுடன் போவதையே அவள் பார்த்துக் கொண்டிருக்க கோயில் மணியும் ஒலிக்கிறது. அவர்களின்தலைக்கு மேலால் மாதாவின் கோயில் தெரிகிறது. அவளையறியாமல் கைகள் கோயிலைப் பார்த்து கும்பிடுகின்றன. அதேநேரம் யாழ்ப்பாணத்தில் நல்லூர் முருகன் ஆலயத்தில் ஒரு பெண்ணும் சிறு பையனும் வந்து அங்கிருந்த கடலை விக்கிற பெண்ணின் அருகில் பாதணிகளை கழட்டி வைத்து விட்டு கால் கை முகம் கழுவி பையனுக்கும் முகத்தை நீரால் துடைத்துவிட்டு அர்ச்சனைத் தட்டுடன் உள்ளே செல்கிறார்கள். அங்கு ஒருரூபாய் அர்ச்சனை சீட்டு பத்து வாங்கிக் அர்ச்சனைத் தட்டில் வைத்துக் கொண்டு தண்டாயுதபாணி சந்நிதிக்கு வந்து அய்யரிடம் தருகிறாள். --- ஐயா இன்று இவருக்கு பிறந்தநாள்.ஒரு அர்ச்சனை செய்ய வேண்டும். --- அதுக்கென்ன செய்திடலாம். துண்டில பையனின் பெயர் நட்ஷத்திரம் மற்றும் பெற்றோரின் பெயர்களையும் எழுதிவிடுங்கோ. அது சரி ஏனம்மா பிள்ளைக்கு பிறந்தநாள் என்று சொல்கிறாய், முன்னுக்கு மூலவர்,உற்சவர், ஆறுமுகசாமி எல்லாம் கல்யாண கோலத்தில் இருக்க இந்தப் பழனியாண்டியிடம் வந்திருக்கிறாய். --- அது வந்து ஐயா இந்த சாமிதான் தந்தையின் வீடும் வேண்டாம் சொத்து பத்து எதுவும் வேண்டாம் என்று தனியாக வந்து தனக்கென ஒரு இடம் பிடித்து கம்பீரமாய் எழுந்தருளிக் கொண்டு இருக்கிறார் அதுதான். --- அதுவும் சரிதான், அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டுபோய் முருகனுக்கு முன்னால் ஜெய்சங்கர் மூலநட்ஷத்திரம் சங்கர் தாயம்மாவின் ஏகபுத்திரன் என்று பெயர் சொல்லி தூபதீபம் காட்டி அர்ச்சனை செய்கிறார். பின் தட்டோடு வந்து அவனின் நெற்றியில் வீபூதி இட்டு சந்தனப் பொட்டும் வைத்து விட்டு தீர்த்தம் குடுக்கும்போது அவன் கையை கவனிக்கிறார் அதில் ஆறு விரல்கள் இருக்கின்றன. நீ ராஜாடா, நன்றாக வாழ்வாய், "ஆண் மூலம் அரசாளும்" என்று சொல்லி விட்டு போகிறார். சுபம்.......! 🌺 யாவும் கற்பனை......! யாழ் இணையம் 25 வது அகவைக்காக அன்புடன் சுவி.....!
  3. வணக்கம் வாத்தியார்......! புன்னகையில் மின்சாரம் பொங்க வரும் முத்தாரம் அள்ளியெடுக்க பெண் : கன்னம் என்னும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க ஆண் : ஆஹா……கண்ணன் துணை ராதே ராதே கட்டிக் கொள்ளும் மாதே மாதே நெஞ்செல்லாம் ஆண் : மந்திரத்தை நான் பாட அந்தரத்தில் நீயாட சொர்க்கந்தான் மிகப் பக்கந்தான் பெண் : முத்தளந்து நான் போட முக்கனியை நீ தேட மெல்லத்தான் இடை துள்ளத்தான் ஆண் : வெப்பங்களும் தாளாமல் தெப்பக்குளம் நீந்த செங்கமலம் தானாக என்னை நெருங்க பெண் : செங்கமலம் நோகாமல் அன்புக்கரம் ஏந்த சங்கமங்கள் தேனாகத் தித்திக்க ஆண் : இன்பக் கதை நீ பாதி நான் பாதி நாள்தோறும் சொல்லத்தான் பெண் : இரு உள்ளங்களும் பூந்தேரின் மேலேறி ஊர்கோலம் செல்லத்தான் பெண் : கன்னம் என்னும் தாம்பாளம் கொண்டு வரும் தாம்பூலம் கிள்ளியெடுக்க.......! --- புன்னகையில் மின்சாரம்---
  4. நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் ........! 😍
  5. மலர்...........(11). சுமார் மூன்று வருடங்களின் பின் ஒருநாள் ஆச்சி நிர்மலாவிடம் பிள்ளை முன்பு நாங்கள் வருசம் தவறாமல் மடுக்கோயிலுக்கு போய் வருகிறனாங்கள். முகிலனின் அம்மா தவறியதில் இருந்து சில வருடங்களாக அங்கு போகவில்லை. இந்தமுறை மாதாவின் திருவிழா வந்திருக்கு. நாளைக்கு நாங்கள் அங்கு போகிறோம். நீ அதற்கு வேண்டிய ஆயத்தங்களை செய் பிள்ளை. இப்ப நீ அதிகம் பாரங்கள் துக்காதையனை வயித்துப் பிள்ளைக்காரி கவனம். தேவையென்றால் அப்புவைக் கூப்பிடு. சரி அம்மா என்று சொல்லிவிட்டு அவள் அதற்கான ஆயத்தங்களை செய்கிறாள்.அவளை வேலை செய்ய விடாமல் சரவணன் குழப்படி செய்கிறான். அவனுக்கு இப்ப இரண்டு வயதாகின்றது. அப்போது அப்பு வந்து அவனைத் தூக்கிக் கொண்டு போகிறார். பின்னால் சிவாங்கியும் போக முகிலன் அவளுடன் நின்று உதவிகள் செய்கிறான். அவன் இப்போது அவளது தோள் மட்டத்துக்கு வளர்ந்திருந்தான். அவளது நினைவுகள் பின்னோக்கி பார்க்கின்றன. இப்ப எண்ட மாதிரி இருக்கு, தான் சங்கரின் வீட்டை விட்டு வந்ததும், பின் கதிரவனை கலியாணம் செய்ததும், அந்த வருஷமே சரவணன் உண்டாகி அடுத்த வருசம் அவன் பிறந்ததும், முருகன் கோயிலில் தாங்கள் எல்லோருமாய் சென்று மாவிளக்கு போட்டு நேர்த்திக் கடனை நிறைவு செய்து விட்டு வந்ததும் அதன்பின் இப்ப மீண்டும் அவனருளால் தான் ஆறுமாத கர்ப்பமாகி இருப்பதையும் நெகிழ்ச்சியுடன் நினைக்கிறாள். அதே நேரத்தில் சங்கருக்கும் பிள்ளைகள் பிறந்திருக்கலாம் எப்படியோ அவர்களும் நல்லா இருக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொள்கிறாள். "மடுமாதா திருக்கோயில்" பெரும்பாலானோருக்கு நன்றாகத் தெரிந்த ஒரு கத்தோலிக்க தேவாலயம். (our lady of madu). வவுனியாவில் இருந்து மன்னார் போகும் வீதியில் பாதி வழியில் இருபத்தைந்து கி.மீ இருக்கலாம் ஒரு கிளை வீதி இந்தத் திருக்கோயிலுக்கு செல்கிறது. இந்தத் தேவாலயத்தின் பெருநாட்கள் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் நடைபெறும். அந்த நாட்களில் உலகெங்கிலும் இருந்து ஏராளமானவர்கள் கோயிலுக்கு வருவார்கள். அதற்காக விசேடமாய் பேரூந்துகள் புகையிரதங்கள் எல்லாம் சேவையில் ஈடுபடுத்தப் படும். அதை சுற்றி இருக்கும் ஊர்களில் இருந்தெல்லாம் கார்கள், வான்கள், லொறிகளில் எல்லாம் மக்கள் இன மத வேறுபாடின்றி வருகை புரிவார்கள். அக்கோயிலைச்சுற்றி பாலம்பிட்டி, சின்ன பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான் என்று சில கிராமங்கள் இருக்கின்றன. இங்கு விசேடமாக கருங்காலி மரக் காடுகள் விளாத்தி மரக் காடுகள் பல இருக்கின்றன. மான்,மரை, யானை போன்ற விலங்குகளுடன் சருகுப் புலிகளும் பெரிய பெரிய வெங்கிநாந்திப் பாம்புகளும், குளங்களில் கபரக்கொய்யா என்ற முதலை போன்ற இனங்களும் இருக்கின்றன. மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட கூடுபோன்ற அமைப்புள்ள இரதத்தில் கன்னி மரியாள் கையில் பாலகன் யேசுவுடன் கோயிலை சுற்றி வீதி வலம் வருவது வழக்கம். அதை பல லட்ஷம் மக்கள் கையில் மெழுகு வார்த்தியுடன் நின்று சுலோகங்கள் பாடித் தரிசிப்பார்கள். மேலும் அங்குள்ள விசேசம் யாதெனில் தேவையான அளவு காட்டு மிருகங்களின் இறைச்சி வகைகள் கிடைக்கும். அரச மரக் கூட்டுத்தாபனம் அங்கு கடை விரித்து மக்கள் சமைப்பதற்கும் சிறு குடில் அமைப்பதற்கும் தேவையான தடிகள், கிடுகுகள், விறகுகள் எல்லாம் விற்பனை செய்வார்கள். மக்களும் வீதியோரங்களில் குடிலுகள் அமைத்து தமக்கு விருப்பமானவற்றை வாங்கி சமைத்து உண்பார்கள். மலரும்.......! 🌻
  6. கண்ணனை நேசிக்கும் ஒருவராக, அவன் அன்பை யாசிக்கும் ஒருவராக நல்ல கவிதை .......பாராட்டுக்கள்......! 👍
  7. I Love Animals · These two dogs, they are brothers and they didn't see for three years... and when they meet again #photography #photooftheday #photographychallenge #PhotoEditingChallenge… Voir plus
  8. ரசகாளன் ........குருவாயூர் ஸ்பெஷல்......! 😂
  9. அருமையான பாடல்களும் வரிகளும், சொல்லி வேல இல்ல நுணா நன்றி..........! 👍
  10. நாள் முழுதும் நடந்த களைப்பில் உறங்கும் யானைகள்........! 👍
  11. மலரும்.........! (10). அன்று ஆச்சி அப்படிக் கேட்டதும் சில நாட்களாக அதை பற்றி நன்றாக யோசித்துப் பார்த்த நிர்மலா தனது வாழ்க்கைக்கும் ஒரு பிடிமானம் வேண்டும் என்று முடிவு செய்கிறாள். இவர்களின் குடும்பம் ஒரு நல்ல குடும்பமாகவும் இருக்கின்றது. ஏன் தானும் மறுமணம் செய்யக்கூடாது. அவர்கள் என்ன காரணத்துக்காக மறுமணம் செய்தார்களோ அதே காரணம் எனக்கும் இருக்குதுதானே. மாதங்கள் வந்து போகுதோ இல்லையோ மாதவிடாய் தவறாமல் வந்து விடுகிறதுதானே. தானாக வரும் இந்த சந்தர்ப்பத்தை ஏன் நான் எனக்கான பரிசோதனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. என்று பலவாறு யோசிக்கிறாள். அன்று ஆச்சி உரலில் வெத்திலை இடித்துக் கொண்டிருக்கும்பொழுது நிர்மலா சிவாங்கியுடன் அங்கு வருகிறாள். அப்போது ஆச்சியும் இயல்பாக என்ன பிள்ளை நான் சொன்ன காரியத்தை யோசிச்சனியோ என்று கேட்கிறாள். --- ஓம் அம்மா ....நான் நிறைய யோசிச்சனான். நீங்கள் இப்படிக் கேட்பது உங்களின் மகனுக்குத் தெரியுமோ, அவருக்கு இதில விருப்பம் இருக்குதோ என்று வினவுகிறாள். --- ஓம் பிள்ளை......முதலில் நானும் இவரும்தான் இது பற்றி கதைத்தனாங்கள். அன்றைக்கு இந்தப் பிள்ளை சிவாங்கி அந்தக் கிணத்துக் காட்டில் ஏறி நின்று விளையாடியபோது நானும் இவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிக்க நீ தளப்பம் இல்லாமல் மெதுவாக ஊர்ந்து போய் பிள்ளையை படக்கென்று பிடித்தனியெல்லோ, அப்போதுதான் எங்கட மனசுக்குள் இந்த எண்ணம் தோன்றியது. பின் இந்த சம்பவத்தை கதிரவனிடம் சொன்னபோது அவன் உனக்கு நன்றி சொல்லிவிட்டு போனவன். பிறகு சிலநாள் கழித்து நாங்கள் அவனுடன் இந்த எங்களின்விருப்பத்தை சொன்னபோது முதலில் தயங்கினாலும் பிறகு சரியென்று சொல்லிப் போட்டார். ஆனால் உனக்கு விருப்பம் இல்லையென்றால் வற்புறுத்தக் கூடாது எண்டவர். அதன் பின்னால்தான் நான் உன்னோடு கதைத்தது. அடுத்து வந்த சில நாட்களில் கதிரவனுக்கும் நிர்மலாவுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. என்னதான் அவர்கள் நட்புடன் பழகி இருந்தாலும் அடுத்து வந்த இரவுகளில் தயக்கத்தாலும் பிள்ளைகள் அவர்களிடையே படுத்துறங்குவதாலும் அதிகமான நெருக்கம் இன்றி கை கால்களின் சின்ன சின்ன உரசல்களுடனும் விரல்களின் சில்மிசங்களுடனும் காதல் பார்வைகளுடனும் உறவுகள் இன்றியே கடந்தன. இவர்களின் போக்கை தனது அனுபவத்தால் உணர்ந்த ஆச்சியும் மெய்கண்டான் காலண்டரில் ஒரு நல்ல நாள் பார்த்து அன்று பிள்ளைகளை தன்னுடன் பிடித்து வைத்துக் கொண்டு நிர்மலாவுக்கு சில அறிவுரைகள் சொல்லி அறைக்குள் அனுப்பி வைக்கிறாள். அறைக்குள் கட்டிலின் மீது புதிய விரிப்புகளும் பூபோட்ட தலையணைகளும் அழகாக விரித்து இருக்கின்றன. ஊதுபத்தியின் மணம் ஒரு கிறக்கத்தைத் தருகின்றது. உள்ளே கதிரவனும் நாலுமுழ வேட்டி அணிந்து மெல்லிய வெள்ளை சேர்ட்டுடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்கிறான். சேர்ட்டினூடாக கிப்ஸ் பெனியனும் அதன் மேல் அட்ஷரக்கூடுடன் கூடிய தடித்த டைமன் சங்கிலி டாலடிக்கிறது. அவனிடம் இருந்து நறுமணமிக்க செண்டின் வாசனை வருகின்றது. அவனுக்கு ஒரு நிமிஷம் ஒரு யுகமாக இருக்கிறது. நிர்மலாவும் ஆச்சி தன் கையாலேயே பின்னி அவள் தலையில் சூடிவிட்ட ஒற்றை மல்லிகை சரமும், கையில் மாற்றிக் கட்டுவதற்கான நைட்டியோடும் பூபோட்ட கொட்டன் புடவையும் அணிந்துகொண்டு கதவைத் திறந்து உள்ளே வந்து அதைத் தாழிடுகிறாள். அப்போது வலிமையான இரு கரங்கள் அவளை இடையுடன் சேர்த்து தன்னுடன் அனைத்துக் கொள்கின்றன. --- ஸ்......என்ன அவசரம், கொஞ்சம் பொறுங்கள் நைட்டியை மாற்றிக் கொண்டு வருகிறேன். அவள் குரல் கெஞ்சலாய் ஒலிக்கிறது. --- இந்த சேலையை அகற்றினால்தானே அதை நீ மாற்ற முடியும், அதற்கு நான் உனக்கு உதவி செய்கிறேன். அப்படியே பூமாலைபோல் அவளை அள்ளியெடுத்து தத்தையை மெத்தையில் வளர்த்திவிட்டு வித்தைகள் புரிய சரிந்து கொள்கிறான். அவள் வெட்கத்தில் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு மெத்தையில் உருண்டு குப்புறப் படுத்துக் கொள்கிறாள். அந்த அறையின் சிறு வெளிச்சத்தில் ஒரு தேவதைபோல் அவனருகே கிடக்கிறாள். அவனும்கூட வெகு காலத்தின்பின் தனக்கே தனக்கான ஒரு பெண்ணணங்கை தன்னருகே பாசத்தோடும் காதலோடும் பார்க்கிறான். அவளது கருங்குழல் அந்தப் பரந்த முதுகில் மயில்தோகை போன்று சற்றே விரிந்து பரவிக் கிடக்கிறது. அதன் நடுவே ஒற்றை மல்லிகை சரம் மின்னல் கீற்றாக மின்னுகிறது. அவன் கைகள் அவள் முதுகை ஆதரவுடன் வருடிக் கொண்டு வர "கரைதேடி நுரையோடு வரும் பேரலையொன்று கற்பாறையில் மோதி மேலெழுந்து குடையாய் விரித்தபடி ஒரு கணம் அசைவற்று அப்படியே நிண்றதுபோல்" இடைக்கும் முழங்காலுக்கும் இடையில் பொங்கித் தளும்பும் பேரழகு மனசை அலைக்கழிக்க, அவனது பார்வை போகும் இடமெல்லாம் தன் அகக்கண்களால் உணர்ந்தவள்போல் அவள் சிறிது நெளிந்து கொள்கிறாள். அவனும் தனது பார்வையை வேறு பக்கம் திருப்பி அவளது வழுக்கும் தோள்களை வலுவான கரங்களால் பற்றி தனது பக்கம் திருப்புகிறான். அவளது மேனியில் இருந்தும் ஒரு சுகந்தமான வாசனை அவன் நாசியை வருடுகிறது. தன் முகத்தருகே மிக அருகில் நெருங்கும் அவன் முகத்தை அவளும் காதலுடன் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுக்கையில் அந்த வார்த்தைகளை அவன் தன் வாயினுள் வாங்கிக் கொள்கிறான். அவர்களுக்குள் பல ஆண்டுகளாக பதுங்கியிருந்த காமம் கிளர்ந்தெழுகிறது. ஆதவனின் கதிர்கள் மலர்களை மலர்விப்பதுபோல் கதிரவனின் ஸ்பரிசத்தில் பெண்மை மலர்கின்றது. அந்நேரத்திலும் அவளது மனம் "முருகா எனக்கு ஏற்பட்ட அபவாதம் நீங்க நீ அருள் புரிய வேண்டும். குழந்தையுடன் உன் சன்னதிக்கு வந்து மாவிளக்கு ஏற்றுவதற்கு நீ கிருபை செய்திடு" என்று பிரார்த்திக்கிறாள். இதயம் பிரார்த்தனை செய்ய இதழ்களில் அவன் பருகப் பருக தேன் சுரக்கிறது. ஆகிருதியான அவன் மார்பின் உரோமங்களை உரசி உரசி முந்தானை மொட்டுக்கள் மலர்கின்றன. விலகிய ஆடையின் இடையினில் துலங்கிய நாபியில் அவனது விரல்கள் மேய்கின்றன. அந்த மோதிர விரல்களை மேலும் நகரவிடாமல் வளைக்கரமொன்று தளர்வாகத் தடுக்கின்றது. ஆனந்தகான அமுதமழையாக அவனை அவள் வர்ஷிக்கிறாள். அதில் மூல்கித் திளைத்தவனில் இருந்து வியர்வையுடன் முத்துக்களும் சிதறுகின்றன. சிந்திய முத்துக்களை சேகரிக்க சிப்பியொன்று தயாராகின்றது. சத்தான கருவில் வித்தாக எதுவும் தீண்டியதில்லை இதுவரை. கல்லாகி நின்ற மருங்குகள் அனல்மேல் மொழுகாகி நெகிழ்கின்றன. வியர்வை மதுவில் மூழ்கிய கனியை கொஞ்சி கொத்தி சுவைக்கும் கிளியாக ....... அந்தப்புரத்தில் ஆனந்தலீலை அதிகாலைவரை நீடிக்கின்றது. நேரத்துடன் கதிரவன் எழுந்து கொள்கிறான். இன்னும் அவள் களைப்பில் சாந்தமான முகத்துடன் உறங்குகிறாள். இதழ்களில் சிறு புன்னகையும் சேர்ந்திருக்க அதை சிறிது ரசித்து விட்டு அவள் நெற்றியில் நெளிந்த முடியை கொஞ்சம் ஒதுக்கி சிறு முத்தமிட்டு எழுந்து கொள்கிறான். அவள் கட்டியிருந்த சேலை எட்டிக் கிடந்ததால் அந்த ஆறடி அழகுச்சிலையை தனது நாலுமுழத்தால் போர்த்திவிட்டு சறத்தை அணிந்து கொண்டு வெளியே வருகிறான். அதற்காகவே காத்திருந்த ஆச்சியும் இரண்டு கோப்பைகளில் முட்டைக் கோப்பி எடுத்து வந்து ஒன்றை அவனிடம் குடுத்து விட்டு மற்றதை எடுத்துக் கொண்டு அறைக்குள் வருகிறாள். --- பிள்ளை எழும்பி இதைக் குடித்து விட்டு படனை. ஆறப்போகுது சுட சுட குடி நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு வேட்டியால் போர்த்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புடன் வெளியேறுகிறாள். கதிரவன் எழுந்தவுடன் நிர்மலாவுக்கும் விழிப்பு வந்துவிட்டது. ஆனால் தான் இருந்த நிலையில் துணி எடுக்க அவகாசமில்லாததால் உறங்குவதுபோல் பாவனை செய்கிறாள். அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு தனது வேட்டியால் போர்த்திவிட்ட அந்தக் கரிசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்பு அவள் எழும்புவதற்குள் ஆச்சியும் உள்ளே வந்து விட்டா அதனால் மீண்டும் தூக்கம்போல் நடிப்பு. அவர்களது அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது ஒரு சரியான பாதுகாப்பான இடத்துக்கு தான் வந்திருப்பதாக உணர்கிறாள்......! மலரும்.........! 🌼
  12. சிறப்பான கவிதை நெடுக்ஸ் ..........பாராட்டுக்கள்......! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.