Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஒரு சிறு பிள்ளையின் அருமையான தமிழ் பேச்சு பாராட்டுக்கள்........காவலரிடமே 500 ரூபாய் வாங்குவது சாதாரண செயல் அல்ல........! 👍
  2. மலர்............(5). வவுனியாவில் நிர்மலா நடந்து செல்லும் அந்த வீதியில் அநேகமானோர் பலதரப்பட்ட வாகனங்கள், வண்டிகளில் சென்று கொண்டிருக்கிறார்கள்.அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் நடந்தும் போய் வந்து கொண்டிருக்கின்றனர். பாடசாலைப் பிள்ளைகளும் முதுகில் புத்தகப் பையை சுமந்தபடி நடக்கிறார்கள். அப்போது தனியாக பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இரு பொம்பிளைப் பிள்ளைகளை நிர்மலா வழிமறித்து, பிள்ளைகள் இங்கு பக்கத்தில் ஏதாவது வீடுகள் வாடகைக்கு இருக்கிறதா என்று வினவுகிறாள். அவர்களும் அப்படி எதுவும் தமக்குத் தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்க அவளும் பரவாயில்லை என்று சொல்லி விட்டு அவர்களைக் கடந்து போகிறாள். அப்போது அங்கு சைக்கிளில் வந்த ஒரு பையனை மறித்த அந்தப் பிள்ளைகளுள் ஒருத்தி அவனிடம் ஏன்டா ரமேஷ் இங்கு பக்கத்தில் எங்காவது வீடு வாடகைக்கு இருக்குதா என்று கேட்க அவனும் கொஞ்சம் யோசித்து அந்த பைக் கடைக்காரர் வீட்டு கேட்டில "டூ லெட்" பலகையைப் பார்த்தனான் தேவையென்றால் கேட்டுப் பார்க்கலாம் என்று சொல்கிறான். உடனே மற்றப்பெண் சற்று தூரத்தில் செல்லும் நிர்மலாவை சத்தமாய் அழைத்து அக்கா சற்று நில்லுங்கள் என்று சொல்ல அதைக் கேட்டுத் திரும்பிய நிர்மலாவும் அவர்களுக்கு அருகில் வருகிறாள். அந்தப் பெண்ணும் அக்கா இவன் இங்கு அருகில் ஒரு வீட்டில் "டூ லெட்" பலகையைப் பார்த்ததாக சொல்கிறான்.விரும்பினால் சென்று பாருங்கள் என்று சொல்கிறாள். அந்தப் பையனும் அக்கா அது பக்கத்தில்தான் இருக்கு நானும் போற வழிதான் வாங்கோ காட்டிட்டுப் போறேன் என்று சொல்லி சயிக்கிளை விட்டிறங்கி உருட்டிக் கொண்டு நடந்து வருகிறான். அந்த வீதியில் சிறிது தூரம் சென்று ஒரு ஒழுங்கையில் இறங்கி இரு வளவு தாண்டி நடந்து வர ஒரு பெரிய கேட்டில் "டூ லெட்" பலகை தொங்குகிறது. பையனும் இடத்தைக் காட்டி விட்டு சயிக்கிளில் ஏறி சிட்டாய் பறக்கிறான். அந்த வீடு வெளிக்கேட்டில் இருந்து சிறிது தூரம் உள்வாங்கி இருக்கிறது. கொஞ்சம் பழைய காலத்து வீடானபோதும் அதை மிகவும் அழகாக நவீனமயப் படுத்தி இருந்தார்கள். ஆங்காங்கே செம்பருத்தி, ரோஜா மற்றும் சில பூ மரங்கள் செடி கொடிகளும் சரியான நீரின்றி காய்ந்துபோய் இருக்கின்றன. வீட்டின் முன்னால் முற்றத்தில் ஒரு மல்லிகை பந்தல் ஆர்ச் வடிவுக் கம்பிப் பந்தலில் படர்ந்திருக்கிறது. அங்கிருக்கும் தென்னை மரங்களின் ஓலைகள் எல்லாம் மாலையில் கிளிகள் கூட்டமாக வந்து தங்குவதால் நார் நாராக கிழிந்து தொங்குகின்றன.எல்லாவற்றையும் ஒரு கண்ணோட்டத்தில் நிர்மலா கவனித்து விடுகிறாள். அங்கு மல்லிகை பந்தலின் நிழலில் ஒரு ஐயா சரத்தோடும் வெற்றுடம்பில் ஒரு சிவப்புத் துவாயும் தோளில் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார். அவர் மடியில் ஒரு சின்னப்பிள்ளை விரல் சூப்பியபடி உறங்கிக் கொண்டிருக்கு. கையில் இருந்த பனை ஓலை விசிறியால் அவர் குழந்தைக்கும் விசிறி அப்பப்ப தனக்கும் விசிறிக் கொள்கிறார். நிர்மலாவும் படலையைத் திறந்து கொஞ்சம் உள்ளே வந்து ஐயா நாய் நிக்குதோ என்று கேட்டபடி சுற்று முற்றும் பார்க்கிறாள். அப்போது வீட்டுக்குள் இருந்து ஒரு ஆச்சி வருகிறா. அவவின் சீலைத் தலைப்பப் பிடித்துக் கொண்டு அரைக் காற்சட்டையுடன் ஒரு சிறுவன் மூக்கு ஒழுக வருகிறான். இஞ்சையப்பா யாரோ படலையடியில் நிக்கினம் ஒருக்கால் என்னெண்டு விசாரியுங்கோ என்று சொல்ல அப்புவும் அங்க பார்த்து பிள்ளை இங்க வாங்கோ உங்களுக்கு என்ன வேணுமென்று கேட்கிறார். --- நாய் நிக்குதோ ஐயா. --- ஒரு நாய் நிக்குதுதான் அது ஒன்றும் செய்யாது நீங்கள் பயப்பிடாமல் வாங்கோ என்று ஆச்சி சொல்லுறா. அவர்களுக்கு அருகே வந்த நிர்மலாவும் ஆச்சி இங்கு வீடு வாடகைக்கு என்று பலைகையில எழுதி இருக்கு அதுதான் விசாரிக்க வந்தனான். --- யாருக்கு பிள்ளை வீடு. பெரிய குடும்பமோ என்று ஐயா கேட்கிறார். --- இல்லை ஐயா, எனக்குத்தான். அவரின் மடியில் இருக்கும் பிள்ளையைப் பார்த்து பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்கிறாள். --- இவளுக்கோ ....ஓ இவள் பெயர் சிவாங்கி. எப்பவும் சிணுங்கிக் கொண்டிருப்பாள். அப்படியா நல்ல பெயர். அவர் தொடர்ந்து பேரன் பெயர் முகிலன் என்கிறார். ம்....இதுவும் நல்ல பெயர். என்று சொல்கிறாள். ஆச்சி பேரனின் மூக்கை வழித்து எறிந்து விட்டு தனது முந்தானையால் அவன் மூக்கை அழுத்தித் துடைத்து விடுகிறா. இவர்கள் இப்படி கதைத்துக் கொண்டிருக்க முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் மோட்டார் சைக்கிளில் உள்ளே வந்து நிறுத்தி விட்டு இறங்கி வருகிறார். ஆச்சி அவளிடம் இவர்தான் எங்கட மகன் கதிரவன். வவுனியா டவுனில் மோட்டார் சைக்கிள் கடை வைத்திருக்கிறார். நீங்கள் இவரோடு கதையுங்கோ என்று சொல்லிவிட்டு தம்பி கதிரவன் இவ வீடு வாடகைக்கு கேட்டு வந்திருக்கிறா, என்னண்டு நீ விசாரி என்று சொல்கிறாள். நிர்மலா அவரைப் பார்த்து வணக்கம் சொல்ல, அவனும் வணக்கம் சொல்லிவிட்டு விசாரிக்கிறான். நீங்கள் எங்கிருந்து வாறீங்கள். குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கினம். --- நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகிறேன்.தனியாக எனக்கு மட்டும்தான். ஒரு சிறு அறை இருந்தால் கூடப் போதும். --- இங்கு எங்கே வேலை செய்கிறீங்கள். --- நான் இனித்தான் வேலை தேட வேண்டும். --- அப்போ உங்களின் வருமானம் என்று கேட்கிறான். ---எனக்கு நல்ல வேலையொன்று கிடைக்கும்வரை பிள்ளைகளுக்கு ட்யூசன் குடுக்கலாம் என்றிருக்கிறேன்.மேலும் ஒன்லைன் மூலமாகவும் A /L வரை என்னால் படிப்பு சொல்லிக் குடுக்க முடியும் என்கிறாள். --- ஆச்சி குறுக்கிட்டு என்னபிள்ளை சொல்லுறாய், டியூசன் குடுத்து அதில என்ன வருமானம் வர போகுது. அதில வீட்டு வாடகை எங்க, உன்ர சாப்பாட்டு செலவுகள் எங்க என்று சொல்கிறாள். தாயை இடைமறித்த கதிரவன் தாயிடம் அம்மா நீ இந்தக் காலத்தில் இருக்கிறாய் இப்பவெல்லாம் டியூஷனில் நிறைய சம்பாதிக்கலாம் தெரியுமா, வீட்டுக்குள் இருந்து கொண்டே நாடுமுழுக்க பாடம் சொல்லிக் குடுக்கலாம் தெரியுமே, பின் நிர்மலாவின் பக்கம் திரும்பி அம்மா அப்படித்தான் நீங்கள் தப்பா நினைக்க வேண்டாம் சரி நீங்கள் சொல்லுங்கோ. --- இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு அறை போதும்.சிறிதாய் இருந்தாலும் பரவாயில்லை.வாடகை எவ்வளவு என்று சொன்னால் நல்லது. --- நாங்கள் ஒரு குடும்பத்துக்கு, மேல் வீட்டை முழுதாய் குடுக்கிறதாய்த்தான் இருக்கிறம். அங்கு குசினி, டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கிறது. நீங்கள் தனியாக இருப்பதால், உங்களுக்கு விருப்பம் என்றால் வீட்டின் பின்பக்கம் ஒரு அறை இருக்கு அதைத் தருகிறேன். பின் விறாந்தையில் வைத்து நீங்கள் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்கலாம். பக்கத்தில கிணத்தடியோடு குளியலறை மற்றும் டாய்லெட் எல்லாம் சேர்ந்தே இருக்கு அதை நீங்கள் பாவிக்கலாம். நீங்கள் சமைக்க ஒரு பத்தி இறக்கித் தாறன். ஒரு எண்ணாயிரம் ரூபாய் தந்தால் போதும். இரண்டு மாத வாடகை முன்பணமாகத் தரவேண்டும். --- அவள் கொஞ்சம் யோசிக்கிறாள்...... என்ன யோசிக்கிறீங்கள் எதுவென்றாலும் சொல்லுங்கோ. --- இல்ல, உடனடியாக அவ்வளவு பணம் தர எனக்கு கொஞ்சம் சிரமம். அதுதான் யோசிக்கிறேன். அப்போது ஆச்சி மகனைத் தனியாக அழைத்துப் போய் ....எட தம்பி அந்தப் பிள்ளையைப் பார்த்தால் நல்ல பிள்ளை போலத் தெரியுது. எங்களுக்கும் உதவியாய் இருக்கும். அத்துடன் உன்ர பிள்ளையளுக்கும் பிராக்காய் இருக்கும். இந்தப் பெரிய வீட்டில நானும் கொப்பரும் ஆளை யாள் பார்த்து முழுசிக் கொண்டு இருக்கிறம். நீ வாடைக்காசை கொஞ்சம் குறைத்து விடு. இப்ப பத்தி ஒன்றும் போடவேண்டாம், அவவும் எங்கட குசினியையே பாவிக்கட்டும் என்று சொல்ல அவனுக்கும் அது சரியென்று படுகிறது. பின் அவன் அவளிடம் வந்து நிர்மலா நீங்கள் ஒரு நல்ல வேலை எடுக்கும்வரை ஐயாயிரம் ரூபாய் தந்தால் போதும். முன்பணமும் இப்ப அவசரமில்லை என்று சொல்கிறான். --- சரிங்க....இந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டன். --- எப்ப இங்கு குடி வாறீங்கள். --- உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நான் இன்றைக்கே வந்து விடுகிறேன்.காலையில் இங்கு வரும்போது முருகனைக் கும்பிட்டுவிட்டு வந்தேன் அவர் கை விடேல்லை என்று சொல்கிறாள். --- உங்கட உடைமைகள் எங்கே இருக்கு. --- என்ன பெரிய உடைமைகள் ஒரு சூட்கேஸ் அது டவுனில் ஒரு விடுதியில் இருக்கு....! --- சரி நீங்கள் போய் அதை எடுத்துக் கொண்டு வாங்கோ அதற்குள் நான் அறையை தயார்படுத்தி வைக்கிறேன். நிர்மலாவும் வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து விடுதிக்கு சென்று தனது பெட்டியை எடுத்துக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு வாழைப்பழமும் பாணும் வாங்கிக் கொண்டு வருகிறாள்.....! மலரும்.......! 🌷
  3. வை.கோ வின் கண்ணாடி போர்ட் காரின் ஹெட்லைட் போலாக் கிடக்கு..... பெரிசின்ர கண்ணாடி பழைய மொடல் அம்பாசிடர் மாதிரி இருக்கு இதில் மஞ்சள் துண்டு வேற ..........அதனால் அது அவர்தான்......! 😁
  4. வணக்கம் வாத்தியார்.....! ஆண் : { அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில } (2) ஆண் : ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஆண் : அடங்காக் குதிரைய போல அட அலஞ்சவன் நானே ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால ஆண் : எதுவோ எங்கள சோ்க்க இருக்கே கயித்துல கோா்க்க ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபாா்த்தோமே துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறன் அவள தனியா எங்கே போனாளோ ........! --- அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல---
  5. பூவா தலையா போட்டால் தெரியும் நீயா நானா பார்த்து விடு.......! 😍
  6. எப்படிப் பாடுகிறார் என்பது முக்கியமல்ல அந்த வரிகளுக்குள் எப்படி கரைந்து போயிருக்கிறார் என்பதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும் யுவர் ஆனர்.....! 😁
  7. மலர்............(4). "வவுனியா" ஒரு நகரசபையைக் கொண்ட மிகவும் அழகான நகரம். திரும்பிய இடமெல்லாம் குளங்கள் உள்ள நகரம் என்றால் அது வவுனியாதான். அந்தக் குளங்களை அண்மித்தே குடிமனைகள் பாடசாலைகள் கடைகள் எல்லாம் இருக்கும். அங்கு பல கோவில்களும் ஓரிரு மசூதி மற்றும் விகாரைகள் இருக்கின்றன. அவளும் வெளிக்குளத்தில் ஒரு பாடசாலையை தெரிவுசெய்து அதற்கு அண்மையில் ஒரு ஆட்டோவில் சென்று இறங்கி பணம்குடுத்த ஆட்டோவை அனுப்பிவிட்டு அதில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதியில் குடிமனைகள் இருக்கும் பக்கமாக நடந்து போகிறாள். இங்கு இராசம்மாவின் வீட்டில் வழக்கம்போல் காலை ஆறுமணிக்கு காகம், கோழி, குருவிகளின்களின் சத்தத்தில் எழுந்த வேலைக்காரி தாயம்மா முற்றமெல்லாம் கூட்டி சாணித் தண்ணி தெளித்து கோலம் போட்டுவிட்டு அதன் நடுவில் சாணியாலேயே அழகாக ஒரு பிள்ளையாரும் பிடித்து வைத்து அதன்மேல் செம்பருத்திப் பூ ஒன்றும் வைத்து விட்டு நிர்மலாவைத் தேடி அவள் அறைக்குப் போகிறாள். அங்கு அவளைக் காணாமல் குளியல்அறை, கிணத்தடி எல்லாம் தேடி கூப்பிட்டுப் பார்த்து விட்டு நிர்மலாவுக்கு போன் செய்கிறாள். அது அமைதியாக இருக்கின்றது. சரி வெளியே சந்தைக்கு எங்காவது போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு மற்ற மற்ற வேலைகளைச் செய்கிறாள். இப்படியாக இருமணித்தியாலங்களுக்கு மேலாகி விட்டிருந்தது. மீண்டும் மீண்டும் நிர்மலாவின் கைபேசிக்கு முயற்சி செய்தும் தொடர்பில்லாததால் தாயம்மாவுக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருக்கிறது. அதற்கு சமீப நாட்களாக வீட்டில் ரகசியமாக நடக்கும் திருமண ஏற்பாடுகளும் காரணம். அது தாயம்மாவுக்கும் கவலையாக இருக்கிறது. தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு இராசம்மாவுக்கு தொலைபேசி எடுக்கிறாள்.அங்கிருந்தும் இராசம்மா கைபேசியை எடுக்கவில்லை. இராசம்மா மற்றும் சங்கர் ஜோதி அவளின் பெற்றோர்கள் எல்லோருமாக வந்த கார்கள் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலடியில் தரிசனத்துக்காக தரித்து நிற்கின்றன. சுவாமி தரிசனம் முடிந்து வந்த இராசம்மா தனது கைப்பேசியைப் பார்த்தபோது அதில் வீட்டில் இருந்து அழைத்திருப்பது தெரிந்து வீட்டிற்கு அழைப்பு எடுக்கிறாள். அப்போது தாயம்மா தொலைபேசியை எடுத்து ஹலோ அம்மாவா பேசுறது என்று கேட்கிறாள். --- ஓம்.....நான்தான் என்ன தாயம்மா என்ன விடயம். --- அது வந்து அம்மா சின்னம்மாவைக் காணவில்லை. அதுதான் பதற்றமாய் இருக்கு. --- சரி.....நீ பதறாதே......நாங்கள் இப்பொழுது கோயிலடியில் நிக்கிறம். நீ ஒரு தட்டத்தில் ஆரத்தி சாமான்கள் எல்லாம் எடுத்து ஒழுங்கு பண்ணி வை. நான் அயல் ஆக்களிடமும் சொல்லி இருக்கிறன், அவர்களும் இப்ப அங்கு வருவார்கள். நாங்களும் கொஞ்ச நேரத்தில் அங்கு வந்திடுவம். --- சரி அம்மா அப்படியே செய்கிறேன்......! அப்போது ஒரு வானில் சிலர் வந்து சில பல பலகாரப் பெட்டிகளுடன் உணவு கறி வகைகளும் அத்துடன் பெரிய பெரிய சுடுதண்ணீர்ப் போத்தல்களில் பால் தேநீர் மற்றும் கோப்பி எல்லாம் இறக்கி வைத்து விட்டுப் போகிறார்கள். கைபேசியில் தாயம்மாவுக்கு தைரியம் சொல்லி விட்டாளே தவிர இராசம்மாவுக்கும் உள்ளுக்குள் ஒரு பதற்றம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை நிர்மலா தனது தாய் வீட்டுக்கு போயிருக்கலாம் என நினைத்து அங்கு பேசுவதற்கு கைபேசியை எடுத்தவள் பிறகு இப்ப வேண்டாம், எதுக்கும் வீட்டுக்குப் போய் பார்க்கலாம் என்று முடிவெடுத்து சங்கருக்கும் விடயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். அவர்களின் கார்கள் மீண்டும் அங்கிருந்து புறப்படுகின்றன. தாயம்மாவும் அயலவர்களும் சேர்ந்து பொம்பிளை மாப்பிளைக்கு ஆரத்தி எல்லாம் எடுக்க ஆயத்தமாய் இருக்கும் போது அவர்களின் வண்டியும் அங்கு வந்து நிக்கிறது. மணமக்கள் இறங்கி உள்ளே வர இரு சுமங்கலிப் பெண்கள் வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து கண்ணூறு கழித்து அவர்களுக்கு திலகம் இட்டு விட்டு மிச்சத்தைக் கொண்டுபோய் வாசலில் கொட்டிவிட்டு வருகினம். பின் எல்லோருமாக வீட்டுக்குள் போகிறார்கள். சங்கரின் கண்கள் நிர்மலாவைத் தேடுகிறது. தாயிடம் ஜாடையில் விசாரிக்கிறான். தாயும் கண்ணாலேயே அவனைப் பேசாமல் இருக்கும்படி ஜாடை காட்டி விட்டு தாயம்மாவை தனியாக அழைத்துக் கொண்டு போகிறாள். அயலவர்கள் சிலர் வந்திருந்த எல்லோருக்கும் பெட்டிகளில் இருந்து உணவுகள், தேநீர்கள் எல்லாம் எடுத்து பரிமாறுகிறார்கள். சங்கரும் புது மனைவி ஜோதிக்கு ஆடைகள் மாற்றுவதற்கு தங்களது அறையைக் காட்டிவிட்டு தனது ஆபீஸ் அறைக்கு வருகிறான். அங்கு அவனது மேசைமீது நிர்மலாவின் கூறைப்புடவையும் அதன்மேல் தாலிக் கொடியையும் பார்த்ததும் அவனுக்கு ஓரளவு விடயம் புரிகின்றது. வந்திருந்தவர்கள் எல்லோரும் இவர்களை வாழ்த்திவிட்டு சென்றபின் அவன் தாயிடம் சென்று அவற்றைத் தருகிறான். அவற்றைப் பார்த்ததும் இராசம்மாவுக்கு எல்லாம் தெளிவாகப் புரிகின்றது. உடனே இராசம்மா நிர்மலாவின் வீட்டுக்கு அழைப்பு எடுத்து அங்கு நிர்மலா வந்தாளா என்று விசாரிக்கிறாள். அதைக் கேட்டதும் நிர்மலாவின் தந்தை சண்முகமும் கோமளமும் பதற்றமாகி இங்கு வரவில்லை என்று சொல்கின்றார்கள். தொடர்ந்து சண்முகம் நான் உடனே அங்கு வருகின்றேன் சம்பந்தி, என்ர பிள்ளை எங்கு போயிருப்பாள், அங்கு என்ன நடந்தது என விசாரிக்க இராசம்மாவும் நீங்கள் இப்ப இங்கு வரவேண்டாம். அவளின் சிநேகிதிகள் வீட்டுக்கு போயிருப்பாள். நான் எல்லா இடமும் விசாரித்து பார்த்து விட்டு உங்களுக்கு சொல்லுறன் என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விடுகிறாள். இவை எதையும் அறியாத ஜோதி ஆடை மாற்றி வரவேற்பறைக்கு வந்து சங்கரிடம் எங்கே உங்களது மனைவி நிர்மலாவை நான் பார்க்கலாமா என்று கேட்கிறாள். மலரும்..........! 🌹
  8. ஜனநாயகமும் சர்வாதிகாரமும். ஜனநாயகம்:--- பிள்ளைகள் : அம்மா எங்களுக்கு சைக்கிள் வாங்கித் தாங்கம்மா..... இந்தா மூன்று சில்லு சையிக்கிள். இதை வைத்து ஓடுங்கோ. சர்வாதிகாரம்:--- பிள்ளைகள்: அப்பா எங்களுக்கு சைக்கிள் வாங்கித் தாங்கப்பா......இந்தா மூன்று சில்லு சைக்கிள். இதை வைத்து ஓடுங்கோ. (சில மாதங்களின் பின் ) ஜனநாயகம்:--- அம்மா எங்களுக்கு இரண்டு சில்லு சைக்கிள் வாங்கித் தாங்கம்மா....... கொஞ்சம் பொறுங்கோ பிள்ளைகள் பக்கத்து வீட்டில் கடன் கேட்டிருக்கிறேன் தந்ததும் உங்களுக்கு புது சைக்கிள் வாங்கித் தருகிறேன். சர்வாதிகாரம்:--- பிள்ளைகள்: அப்பா எங்களுக்கு இரண்டு சில்லு சைக்கிள் வாங்கித் தாங்கப்பா...... ம்கூம் முடியாது நீங்கள் இதைத்தான் வைத்து ஓடவேண்டும். இதற்குமேல் கேட்டால் குரல்வளையை நசித்து விடுவேன். ஜனநாயகம்:--- பிள்ளைகள்: அம்மா உங்களுக்கு கடன் கிடைத்துட்டுதுதானே எங்களுக்கு இரண்டு சில்லு சைக்கிள் வாங்கித் தாங்கம்மா........அம்மா வந்து அந்த மூன்று சில்லு சைக்கிளில் ஒரு சில்லைக் எடுத்து விட்டு இந்தாருங்கோ பிள்ளைகள் நீங்கள் விரும்பியபடி இந்த இரண்டு சில்லு சைக்கிளை வைத்து ஓடுங்கள். (பிள்ளைகள் சைக்கிளையும் அம்மாவையும் பார்க்கிறார்கள், அம்மாவின் கழுத்திலும் கைகளிலும் தங்க ஆபரணங்கள் மின்னுகின்றன. சர்வாதிகாரம்:--- பிள்ளைகள் வெளியே வந்து பார்க்கிறார்கள், முற்றத்தில் புத்தம் புதிய இரண்டு சில்லு சைக்கிள் நிக்கிறது. தோட்டத்தில் அப்பா வியர்வை சிந்த வேலை செய்து கொண்டிருக்கிறார். யாவும் கற்பனை.......!
  9. இனி இதுதான் சரிவரும், கூடுதலாக நாலுபேரை ஏற்ற அனுமதிக்குமோ தெரியாது........! 😂 நன்றி பெருமாள்......!
  10. மலர்..........(3). நிர்மலாவும் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். தொடர்ந்து இங்கே இருப்பதா அம்மா வீட்ட சென்று அவர்களுக்கு சுமையாக இருப்பதா. ஏற்கனவே பெரியத்தான் குடி வெறி என்று ஒழுங்காக இல்லாததால பெரியக்கா குடும்பமும் பிள்ளைகளுடன் அம்மாவோடுதான் இருக்கிறார்கள். இதில் நானும் அங்கு சென்று இருப்பது சரியாய் இராது. என்று பலவாறு நினைக்கிறாள். தான் முன்பு விளையாட்டாக "யூ டியூபில்" சமையல் மற்றும் தோட்டக் கலை என்று தொடங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏதோ கொஞ்ச காசு வருகுதுதான் ஆனால் அது மட்டும் போதாது வேறு ஏதாவதும் செய்ய வேண்டும். அவளால் சரியாக ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அன்று இராசம்மாவும் சங்கரும் வீட்டில் பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சங்கர் கடைக்கும் போகவில்லை. அவன் தனது பெட்டியில் வேட்டி, சட்டை மற்றும் புது ஆடைகள் எல்லாம் எடுத்து வைத்து பூட்டுகிறான்.வளமையாய் அவன் எங்காவது வெளியூர் போவதென்றால் நிர்மலாதான் எல்லா ஆயத்த வேலைகளும் செய்து வைப்பாள். அவனுக்கு ஒரு வேலையும் இருக்காது. ஐயா ஹாயாக பெட்டியை உருட்டிக் கொண்டு கிளம்பிப் போவார்.இப்போது எதற்கும் அவளை கூப்பிடவில்லை.அவர்களுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு இருப்பதையும் அவள் கவனிக்கிறாள். வெளியே அவர்களது கார் வந்து நிக்கும் சத்தம் கேட்கிறது. அதை சாரதி மிகவும் அழகாக கழுவி பொலிஸ் போட்டு துடைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியே தயாராய் இருந்த இவர்களது சாமான்கள் எல்லாவற்றையும் அவரே எடுத்துக் கொண்டு போய் கார் டிக்கியில் வைக்கிறார். நிர்மலா எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து குடுக்கும் போது இராசம்மாவும் நிர்மலாவிடம் பிள்ளை நாங்கள் ஒரு அலுவலாய் ஒரு இடத்துக்கு போயிட்டு இரண்டுநாள் கழித்துத்தான் வருவம். அதுவரை தாயம்மாவும் நீயும் வீட்டைப் பார்த்துக்கொண்டு கவனமாய் இருங்கோ. நான் போய் வந்து எல்லாம் சொல்லுறன். வீட்டையும் கொஞ்சம் கழுவித் துடைத்து வளைவுகளையும் கூட்டிப் பெருக்கி சுத்தமாய் வைத்திருங்கோ என்று சொல்லி கொஞ்சநேரம் அவளது கையை வாஞ்சையாய் பிடித்திருந்தது விட்டு கலங்கிய கண்களுடன் காருக்குப் போக சங்கரும் அவளைத் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டு போய் காருக்குள் ஏறுகிறான். காரும் புறப்பட்டு செல்கிறது. நிர்மலாவுக்கும் வேலைக்காரம்மாவுக்கும் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. அவர்கள் கூடுதலாக இரண்டு ஆட்களையும் கூலிக்கு கூப்பிட்டு வீடு மட்டுமன்றி தோட்டம், முற்றம் என்று எல்லாவற்றையும் நன்றாக செப்பனிட்டு மரம் செடி கொடிகள் எல்லாவற்றையும் அழகாக கத்தரித்து செழிப்பாக வைத்திருந்தார்கள். நான்காம் நாள் அதிகாலை நிர்மலா முதல்நாளே ஒழுங்கு செய்து வைத்திருந்த தனது சூட்கேஸ், கணனி கைபேசி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். மறக்காமல் போன் சிம்மை கழட்டி பையில் வைத்துவிட்டு மிக்க வேதனையுடன் தாலிக்கொடியை கழட்டி தனது கூறைச் சேலையின் மேல் வைத்து அவற்றை சங்கரின் மேசைமேல் வைத்து விட்டு வெளியே வருகிறாள். பின் குசினி அருகே இருக்கும் அறையை சென்று பார்க்க அங்கு தாயம்மா பகல்முழுதும் வேலை செய்த களைப்பில் நன்றாக அயர்ந்து உறங்குகிறாள். அப்படியே வீதிக்கு வந்தவள் சிறிது தூரம் நடக்கும்போது அவ்வழியால் வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து புகையிரத நிலையத்துக்கு வருகிறாள். எதற்கும் இருக்கட்டும் என்று கொழும்புவரை பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு அடுத்து வந்த புகையிரதத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அந்த வண்டியும் சாவகச்சேரி, கொடிகாமம் என்று ஒவ்வொரு நிலையமாய் நின்று நின்று போகிறது. நிர்மலாவுக்கு எங்கு போவது, எங்கு இறங்குவது என்ற எண்ணம் இல்லை. அவர்கள் வரமுதல் இங்கிருந்து போக வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கின்றது. வவுனியாவில் வண்டி நிக்கும்போதுதான் தன் நினைவுக்கு வந்தவள் இனி அங்கால எல்லாம் சிங்கள ஊர்கள்தான் வரும், அதனால் இங்கேயே இறங்கி அடுத்த அலுவலைப் பார்க்கலாம் என்று நினைத்து வண்டி புறப்பட முன் பெட்டியுடன் இறங்கி விடுகிறாள். காலைப் பொழுது பலபலவென்று விடிந்து விட்டிருந்தது. நேராக வவுனியா மையத்துக்கு நடந்து வருகிறாள். இது எனக்குப் பழக்கமில்லாத ஊர் அதனால் எதற்கும் பயந்தவளாக தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வருகிறாள். அதனால் மிகவும் பழகியமாதிரி அங்கிருந்த ஒரு கைபேசி விற்கும் கடைக்கு சென்று புதிதாக ஒரு சிம் வாங்கிப் போனுக்குள் பொருத்திவிட்டு ஒரு புதிய இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது எங்கிருந்தோ ஒரு கோவில் மணி ஒலிக்கின்றது. அந்த ஓசையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்றால் அது ஒரு முருகன் கோவில். அங்கு நன்கு வணங்கி முருகனுக்கு ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு தனது கைபேசி மூலம் அருகில் இருக்கும் பல விடுதிகளில் ஒன்றைத் தெரிவுசெய்து அங்கு சென்று தனியறை ஒன்றை எடுத்து அங்கே தனது பெட்டியை வைத்துவிட்டு சிறிது ஒய்வு எடுக்கிறாள். பின்பு நிர்மலா அறையைப் பூட்டிவிட்டு கைப்பையுடன் வெளியே வருகிறாள். அவளது நோக்கமெல்லாம் நகரத்தைத் தாண்டி கொஞ்சம் உள்ளூருக்குள் சென்று ஒரு பாடசாலையை அண்மித்த இடமாக வதிவிடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். தற்போது நிர்மலாவிடம் போதிய அளவு பணமும் தனக்குப் பெற்றோர் போட்டுவிட்ட நகைகளும் கொஞ்சம் இருக்கின்றன. கைபேசியிலேயே அங்குள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்து பின் ஒரு வீதியைப் பிடித்து நடந்து செல்கிறாள்.......! மலரும்..........!🍁
  11. காற்றினிலே பெரும் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்......! 😍
  12. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : { இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை } (2) பெண் : மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு பெண் : { வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் } (2) ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் நீ கட்டும் சேலைக்கு நூலாவேன்......! --- ரோஜாவை தாலாட்டும் தென்றல்---
  13. ஏரி நல்லா ஏரி தாண்டா.......! 😍
  14. ஏதோ நல்லகாலம் ஒரு விபத்து சரியான நேரத்தில் தவிர்க்கப் பட்டிருக்கு. இல்லையெனில் சரி பிழையை விட வாழ்நாள் முழுதும் ஒரு மாதிரி இருக்கும்.......! 🙏 பகிர்வுக்கு நன்றி நிழலி......!
  15. வீடியோ உலகம் · Rejoindre Kanaga Rajan Kanaga Rajan · · #வாழ்க்கை_ஆலமரம் விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது. இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு #சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்" என ஏளனம் செய்தது. ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அந்த #காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது. அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , " இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க, இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி. தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக #வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது. நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்..
  16. மலர்.................(2). சங்கரும் நிர்மலாவும் எல்லா வைத்தியர்களையும் போய் பார்த்து தேவையான பரிசோதனைகள் எல்லாம் கூட செய்து விட்டார்கள். எல்லா பதில்களும் அவர்கள் இருவர் மீதும் உடலளவில் எந்தக் குறையும் இல்லை என்றே சொன்னார்கள். இப்போதெல்லாம் சங்கருக்கும் குழந்தை இல்லாதது பெரிய குறையாகத் தெரிகின்றது. தனக்குப் பின் திருமணம் செய்தவர்கள் எல்லாம் பிள்ளை குட்டிகளுடன் வரும்போது ஏக்கமாய் இருக்கும். அவளுக்கும் அந்த ஏக்கம் இருக்கிறது. தாயையும் மகனையும் பார்க்கும்போது கவலையாகவும் இருக்கும். இவ்வளவுகாலமும் இல்லாத பிள்ளை இனி கிடைக்குமா என்னும் விரக்தியும் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கு. நிர்மலாவின் மூத்த தமக்கைக்கு நான்கு பிள்ளைகள். அவளுக்கு பின் திருமணம் செய்த இரண்டாவது அக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். தனக்கும் எந்தக் குறையும் இல்லை என்பதை தானே நன்றாக உணர்ந்திருந்தாள். ஆனால் இந்த சமூகம் பெண்கள் மீதுதானே குறைகளைக் கூறி வசை பாடுகிறது. ஒருபோதும் ஆண்களை சந்தேகிக்கிறதில்லையே. ஏதாவது உறவினர்களின் விசேடங்களுக்கு இவர்கள் போனாலும் அவர்களின் மங்களமான எந்த நிகழ்வுகளிலும் நிர்மலாவை தவிர்த்து விடுவார்கள். அதனால் இப்போதெல்லாம் அவளாகவே அது போன்ற நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி விடுகிறாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை நிர்மலா அழுக்குத் துணிகளை அலசிப் பிழிந்து அவற்றை வாளியோடு தூக்கிக் கொண்டு வீட்டுக் கொல்லையில் இருந்த கொடியில் விரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அதன் பக்கத்தில் இருந்த அறையில் இருந்து இராசம்மாவும் மகன் சங்கரும் கதைப்பது கேட்கிறது. அவர்களது பேச்சில் தனது பெயரும் அடிபடுவதால் அவளும் அப்படியே நின்று கேட்கிறாள்......! --- இராசம்மா மகனிடம் தம்பி நான் சொன்னதை யோசிச்சனியோடா..... நீ என்ன சொல்கிறாய் என்று வினவ --- அது அம்மா வந்து.....நிர்மலா பாவம் அம்மா, இதெல்லாம் தேவையா என்றுதான் யோசிக்கிறேன்.....! --- நீ ஒன்றும் அதைப்பற்றி கவலைப் படவேண்டாம். நான் நல்ல நேரம் பார்த்து அவளிடம் பக்குவமாய் எடுத்து சொல்லுறன். அதுக்கென்ன அவளும் எங்களுடன் கூடவே இருக்கட்டும்......என்ன ஊர் உலகத்தில இல்லாததையா நீ புதுசா செய்யப் போகிறாய்......உங்களுக்கு ஒரு பிள்ளை இருந்தால் நான் ஏன் இப்படி சொல்லப் போறன்.......நானும் ஒரு பொம்பிளைதானே.....! --- அதுக்கு இன்னும் கொஞ்சகாலம் பார்த்து விட்டு செய்யலாம்தானே அம்மா. --- அது சரிதான்......ஆனால் நான் இப்ப பார்த்திருக்கிற இடம் நல்ல இடம். அப்பாவழி உறவும் கூட....பொம்பிளையும் நல்ல லட்ஷணமாய் இருக்கிறா. அதோட அவையிலும் அவசரப் படுகினம். இதை விட்டால் பிறகு எப்ப இப்படி அமையுமோ தெரியாது.அதுதாண்டா மோனை.....! --- சரியம்மா என்னவோ செய்யுங்கோ. பட்டும் படாமலும் சொல்கிறான். --- அப்ப நான் அவையளிட்ட சரியென்று சொல்லுறன்.நீ ஒன்றுக்கும் யோசியாத, வாறமாதம் நல்லநாள் இருக்கெண்டு சொன்னவை, கொஞ்ச ஆட்களுடன் சென்று கோயிலில தாலி கட்டி கூட்டிக் கொண்டு வரலாம். எல்லா அலுவலும் அவையளே பாக்கினம்,நாங்கள் செலவில் பாதி குடுத்தால் போதும். --- இதால பிரச்சினை ஒன்றும் வராதுதானே அம்மா. --- நான் நல்லா விசாரிச்சுட்டன். நிர்மலாவோடு பதிவுத் திருமணம் செய்யவில்லைத்தானே அதனால் பெரிசா ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் அவளையும் எங்களோடுதானே வைத்திருக்கப் போகிறோம். என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறாள். இவையனைத்தையும் எதிர்பாராமல் வெளியில் நின்று கேட்ட நிர்மலாவுக்கு வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தது போல் இருக்கிறது. இந்த கல்யாணத்துக்கு சங்கரும் சரியென்று சொல்லுவான் என்பதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அங்கிருந்து அழுதுவிட்டு பேசாமல் துணிகளை கொடியில் விரித்து விட்டு முத்தத்துக்கு வருகிறாள். அவள் பின் பக்கத்தில் இருந்து வெறும் வாளியுடன் வருவதைப் பார்த்த இராசம்மாவுக்கு தாங்கள் கதைத்ததை இவள் கேட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வருகிறது. கேட்டிருந்தால் அதுவும் ஒன்றுக்கு நல்லதுதான் என்று நினைக்கிறாள். அதற்கேற்றாற்போல் நிர்மலாவின் அழுது சிவந்த முகத்தைப் பார்த்தும் பார்க்காததுபோல் உள்ளே போகிறாள்.......! மலரும்........! 🌷

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.