Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணி ......! 😍
  2. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : மகாராணி அவனை ஆளுவாள் அதில் மகாராஜன் மயங்கியாடுவான்…ஆ…ஆ… மகாராணி அவனை ஆளுவாள் ஆண் : புலவர் பாட அரசர் கூட அறிஞர் நாட வாழுவார் புதுமை கூறும் மனைவி கண்ணில் உலக இன்பம் காணுவார் பெண் : நான்கு பக்கம் திரைகளாடும் பாமலர் மஞ்சம் அதன் நடுவினிலே குடை பிடிக்கும் காதலர் நெஞ்சம் ஆண் : மான் கொடுத்த சாயலங்கே மயங்கிடும் கொஞ்சம் அந்த மயக்கத்திலே தலைவியிடம் தலைவனே தஞ்சம் பெண் : பாதத்தில் முகமிருக்கும் ஆண் : பார்வை இறங்கி வரும் பெண் : மேகத்தில் லயித்திருக்கும் ஆண் : வீரமும் களைத்திருக்கும் ஆண் : கண்ணனையும் அந்த இடம் கலக்கவில்லையா இந்த கர்ணனுக்கு மட்டும் என்ன இதயமில்லையா பெண் : வள்ளலுக்கு வள்ளல் இந்த பெண்மை இல்லையா எந்த மன்னவர்க்கும் வழங்குவது மனைவியில்லையா ஆண் : அள்ளி அள்ளி கொடுத்திருக்கும் பெண் : அந்தி பகல் துணையிருக்கும் ஆண் : உண்ண உண்ண வளர்ந்திருக்கும் பெண் : உலகமே மறந்திருக்கும்.....! --- மகாராஜன் உலகை ஆளலாம்---
  3. தினமும் காலையில் ஒரு கப் போதும்........! 👍
  4. மலர் .....(9). இராசம்மாவின் வீட்டில் ஜோதி வந்ததில் இருந்து அவளுக்கு தாயம்மாவை அவ்வளவாக பிடிக்கவில்லை. தாயம்மா பத்து வயதில் அந்த வீட்டுக்கு வேலைக்கு வந்து இராசம்மாவின் அன்பால் பத்தாவது வகுப்புவரை படித்திருந்தாள். நாளாக நாளாக அவள் அந்த வீட்டின் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யப் பழகியிருந்தாள். அங்கு இராசம்மாவும் சங்கரும் மட்டும் இருப்பதால் அவர்களுக்கு என்னென்ன தேவைகள் எந்தெந்த நேரத்தில் வேண்டும் என்பதை நன்றாக அறிந்திருந்தாள். ஆனால் ஜோதிக்கு அவள் தான் ஒரு வேலைக்காரி என்பதையும் மறந்து அந்த வீட்டில் அதிக உரிமை எடுப்பது போலப் படுகிறது. உணவு மேசையில் சங்கருக்கு சாப்பாடு பரிமாறுவது அவனது உடுப்புகளை கழுவிற மிஷினில் போட்டு பின் இஸ்திரி போட்டு மடித்து வைப்பதெல்லாம் பிடிக்கவில்லை. ஆனால் அவள் அவர்கள் எல்லோருடைய ஆடைகளையும் அப்படித்தான் செய்கிறாள். அதனால் அப்பப்ப சிறு சிறு பிரச்சினைகள் வர இராசம்மாவுக்கு தாயம்மா தனியாக போய் அழுவது எதையும் பார்க்கப் பொறுக்கவில்லை. அந்நேரம் தாயம்மாவின் தகப்பன் அங்கு வந்து தாயம்மாவுக்கு ஒரு வரன் வந்திருப்பதாகவும் அவளை தன்னோடு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்க இராசம்மாவும் அவர்களுக்கு தேவையான பணம், புடவைகள், நகைகள் எல்லாம் சீராகக் குடுத்து அனுப்பி வைக்கிறாள். ஜோதி சங்கரின் வீட்டுக்கு இரண்டாந்தாரமாக மணமுடித்து வந்து இந்தா அந்தா என்று நான்கைந்து வருடங்கள் ஓடி விட்டன. ஜோதியும் கல்யாணமாகி வந்த புதிதில் ஜோடியாக தியேட்டர்,பூங்கா,கடற்கரை என்று எல்லா இடமும் சந்தோசமாக சுற்றித் திரிவார்கள்.அப்படி அவன் கையைப் பிடித்து நடக்கும்போது அதில் ஆறாவதாக ஒரு சின்னி விரல் இருப்பதைப் பார்த்து ஏன் சங்கர் இதை ஒரு சத்திரசிகிச்சை செய்து அகற்றலாமே என்று சொல்ல அவனும் ஏன் அது தன்பாட்டுக்கு இருக்கு. என் அப்பா அவரின் அப்பா எல்லோருக்கும் இடது கையில் ஆறுவிரல் இருக்கு தெரியுமா. அதன் பின் அவளும் அதைப்பற்றி கதைப்பதில்லை. அவளுக்கு ஓரிரு தடவை வயிற்றில் பிள்ளை உண்டாகியும் மூன்று நான்கு மாதங்களில் கரு அழிந்து விடுகின்றது. இராசம்மாவுக்கு எல்லா நம்பிக்கையும் போய் விட்டது. இப்போதெல்லாம் அவள் யாரிடமும் அதிகம் கதைப்பதில்லை. தங்களுடைய இவ்வளவு திரண்ட சொத்துக்கு ஒரு வாரிசு இல்லையே என்பதை நினைக்க அவளறியாமலே கண்கள் கலங்கி கண்ணீர் வருகிறது. அவளும் தன்பாட்டில் புதிதாக வந்த வேலைக்காரி அம்மாவுடன் சேர்ந்து சமையல் செய்து வைத்து விட்டு மாலை நேரங்களில் அயலவர்களுடன் ஏதாவது கதைக்க போய் விடுவாள். அல்லது அருகில் உள்ள கோயிலுக்கு சென்று இருந்து விட்டு வருவாள். சங்கருக்கும் பிள்ளை ஆசையே போய் விட்டது. தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறான். ஜோதியிடமும் இந்த நான்கைந்து வருடங்களில் நல்ல நிதானமும் பக்குவமும் வந்து விட்டது. அவளுக்குள் எப்போதும் ஒரு குற்றவுணர்வு இருக்கு. குழந்தை ஒன்று வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்துகொண்ட இந்தக் குடும்பத்துக்கு தன்னால் ஒரு குழந்தை பெற்றுத்தர முடியவில்லையே என்று. கருத்தரிக்கும் பிள்ளைகள் கருவிலேயே அழிந்து போவதற்கு முன்பு கொழும்பில் தனது தவறான நடத்தையே காரணம் என்று நன்கு அறிவாள். அத்துடன் சங்கரின் முதல் மனைவி பற்றி ஒரு தகவலும் இல்லை. இப்ப எங்கிருக்கிறாளோ என்ன ஆனாளோ தெரியவில்லை. எல்லாம் தனது தவறான நடத்தையால் என்று உள்மனம் குத்திக் காட்டுது. சங்கருக்கும் எப்போதும் கலகலப்பாய் இருந்த தன்வீடு இப்போது வெறும் அமைதியாக இருப்பதும் கவலையளிக்கிறது. அத்துடன் அநியாயமாய் நிர்மலாவை மனம் நோகச்செய்து விட்டோம் என்ற கவலை வேறு. அவன் இப்போது தாயாரோடும் ஜோதியோடும் கலந்தாலோசித்து ஒரு பிள்ளையை தத்தெடுத்தால் என்ன என்றுகூட யோசிக்கிறான். அப்படியாவது இந்த வீட்டின் இழந்த சந்தோசம் மீண்டும் திரும்பாதா என்றும் நினைக்கிறான். முதலில் இந்தத் துன்பத்தை போக்குவதற்கு என்ன வழி, எல்லோருமாய் எங்காவது சுற்றுலா சென்று வந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றுகின்றது. இந்நேரத்தில் அவன் நண்பன் ஜோசேப் பத்திரிகையில் வந்த படத்துடன் கூடிய மடுமாதா திருக்கோயிலின் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பமாகும் ஒரு செய்தியைக் காட்டி தாங்களும் தங்கள் குடும்பத்துடன் போகப் போவதாகச் சொல்லுகிறார். அதைக் கேட்ட சங்கருக்கும் தாங்களும் அங்கு சென்று இரண்டு மூன்று நாட்கள் தங்கி மாதாவின் கூடு சுற்றும் திருவிழாவையும் பார்த்துவிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டு வரலாம் என்று தோன்றுகின்றது. மலரும்.........! 🌷
  5. ஆஹா.....நல்லதொரு குளிர்மையான தொடர்......தொடருங்கள்......கொஞ்சம் படங்களையும் பகிருங்கள் பிரியன்.........👍 😂
  6. நீங்கள் இங்கு வரையும் ஓவியங்கள் ஒவ்வொன்றும் பொத்திப் பாதுகாக்கப்பட வேண்டியவை......! 👍 நன்றி கவி அருணாசலம்......!
  7. மலர்.......(8). பிறிதொருநாள் ஆச்சி மகன் கதிரவனிடம் தம்பி நீ இந்தப் பிள்ளை நிர்மலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்கின்றாள். அவனும் ஏன் அவவைப் பற்றி நினைக்கிறதுக்கு என்ன இருக்கு. அவ தானும் தன் பாட்டில் வேலை செய்கிறா. வாடைக்காசும் ஒழுங்காய் தருகிறா. எங்கட மகன் முகிலனும் வகுப்பில் கெட்டிக்காரனாய் இருக்கிறான் என்று அவன்ர வகுப்பு ஆசிரியை சொன்னவர். வேறு எண்ணத்தை சொல்ல. --- இல்லை தம்பி, எங்களுக்கும் வயசாயிட்டுது. உனக்கு விருப்பமெண்டால் அந்தப் பிள்ளையை கேட்டுப் பார்க்கலாம் என்று நினைக்கிறன். கொப்பருக்கும் நல்ல விருப்பம். --- ஓ.....நீங்கள் இரண்டு பேரும் ஏற்கனவே கதைத்து வைத்து விட்டுத்தான் இப்ப என்னிடம் கேட்கிறீங்கள் போல. அவ ஏதோ தன் பாட்டுக்கு இருக்கிறா, அவவை அத இத கதைத்து குழப்பிப் போடாதேங்கோ. மேலும் அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது. அவ தனியா வீட்டை விட்டு வர என்ன என்ன பிரச்சினையென்றும் தெரியாது. அதால கதைக்கிறதை நல்லா யோசித்து கதையுங்கோ. --- அதடா மோனை அப்பப்ப கதையல் வரேக்க நான் கொஞ்சம் கொஞ்சம் ஜாடை மாடையா விசாரிக்கிறானான்.அதுகளை கோர்த்து வைத்துப் பார்த்தால், அவ யாழ்ப்பாணத்தில் கலியாணம் கட்டிய இடம் பெரிய இடமாம். கலியாணம் செய்து பல வருடங்களாக அவையளுக்கு பிள்ளை இல்லையாம். அதனால புருசன்காரன் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டு வீட்டுக்கு வர இந்த பிள்ளையும் அங்கிருக்கப் பிடிக்காமல் ஏதோ ஒரு தைரியத்தில வெளிக்கிட்டு வந்திட்டுது. தாய் தேப்பன் எல்லாம் தெல்லிப்பளையில் இருக்கினமாம். ஆனால் ஒருத்தரோடும் இதுவரை எதுவித தொடர்பும் இல்லையாம் என்று சொன்னவ. --- ஓ.....நீங்கள் எல்லாம் விசாரிச்சுதான் வைத்திருக்கிறியள். --- அதுதான் சொன்னேனே, அப்பப்ப பேச்சு வரேக்க கதைக்கிறது, பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் சேர்த்து புரிந்து கொள்ளுறதுதானே. அது கிடக்கட்டும் இப்ப நீ என்ன சொல்லுறாய் அத முதல்ல சொல்லு. --- சரி, என்னவோ செய்யுங்கோ ஆனால் அவவுக்கு அதிகம் மனக்கஷ்டம் உண்டாக்க வேண்டாம். அது முக்கியம். --- சரியடா தம்பி, நான் நேரம் பார்த்து நைசாய் கதைக்கிறேன். அநேகமான மாலை நேரங்களில் அவர்கள் அருகில் இருக்கும் குளத்தின் கரையையொட்டி நடந்து போய் வருவதை வழக்கமாய் கொண்டிருந்தார்கள். முன்பு ஆச்சி அப்புவுக்கு அந்தப் பழக்கமில்லை. ஆனால் நிர்மலா வந்து கொஞ்ச நாளில், அவள் முதலில் தான் தனியா நடந்து போட்டு வருவாள். பின் அவர்களுடன் நன்றாகப் பழகியபின் அவர்களையும் கூட்டிக் கொண்டு வெளியே நடந்து போய்வரப் பழக்கி விட்டாள். ஆரம்பத்தில் சும்மா சாக்கு போக்கு சொன்ன ஆச்சி நாளடைவில் அப்புவும் பிள்ளைகளும் ஆவலுடன் சேர்ந்து நடக்க பின் தானும் சேர்ந்து கொண்டாள். அதில் அவர்களுக்கு ஒரு சௌகரியம் இருந்தது. பிள்ளைகளின் இரவு உணவையும் கொண்டு சென்று அங்கேயே சாப்பிட வைத்து விடுவார்கள். அவர்களுக்கு முன் சிவாங்கியும் முகிலனும் நொறுக்குத் தீனிகளுடன் தயாராய் இருப்பார்கள். அப்படி குளக்கரையிலும் வயல்களுக்கு நடுவேயும் நடக்கும்போது சுத்தமான காற்றையும் சுவாசிப்பதால் ஆச்சி அப்புவுக்கும் உடம்பு இலேசாகவும் சில சில வருத்தங்கள் இல்லாமல் போவதையும் கண்கூடாக அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். இரவில் நல்ல பசியுடன் வந்து வடிவா சாப்பிட முடிகிறது. அடிச்சுப் போட்டால் போல் நல்ல உறக்கமும் வருகிறது. பலப்பல விடயங்களையும் கதைத்துக் கொண்டு வருவதால் மனசிலும் எந்தப் பாரமும் இல்லாமல் இலேசாக இருக்கின்றது. பிள்ளைகள் முன்னால் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டு திரிய இவர்கள் பின்னால் நடந்து போவார்கள். அன்றும் அப்படித்தான் அப்புவும் பிள்ளைகளும் முன்னால் போய்க்கொண்டிருக்க ஆச்சியும் நிர்மலாவுக்கு மிக அருகில் வந்து மெதுவாக பேச்சைத் துவங்குகிறாள். --- எடி பிள்ளை நிர்மலா நான் உன்னட்டை ஒரு விஷயம் கேக்கட்டே என்று பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள். --- என்ன அம்மா இது எதுவென்றாலும் கேளுங்கோ. --- பிறகு நீ குறை நினைக்கக் கூடாது சரியோ. --- சொல்லுங்கோ அம்மா இந்தமாதிரி தயக்கம் எல்லாம் வேண்டாம். நான் ஒன்றும் குறை நினைக்க மாட்டன். --- பிள்ளை நீ ஏன் இன்னொரு கல்யாணம் செய்யக் கூடாது. --- அது வந்து அம்மா நான் அங்கிருந்து வந்தபின் எப்படியாவது உழைத்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும். கடைசி காலத்தில அம்மா அப்பாவுக்கும் மற்றும் எனது மூத்த அக்காவுக்கும் உதவி செய்து அவர்களை நல்லா வைத்திருக்க வேண்டும். அதிலேயே என் சிந்தனை முழுதும் இருந்ததால் நான் மறுமணம் பற்றி நினைக்கவே இல்லை. --- சரி..... நீ இப்ப நல்லா சம்பாதிக்கிறாய்தானே. நீ கெட்டிகாரி அதெல்லாம் செய்து போடுவாய். அதவிடு, இப்ப நான் விசயத்துக்கு வாறன். இந்த சில வருடங்களில் உன்னை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போட்டுது. என்ர மகன் கதிரவனை கலியாணம் செய்ய உனக்கு சம்மதமே. அல்லது உனது பெற்றோருடன் கதைக்க வேண்டும் என்றாலும் தயங்காமல் சொல்லு நாங்கள் சென்று உன்னைப் பெண் கேட்கிறம். --- சிறிது தயங்கிய நிர்மலாவும் அது வந்து அம்மா நீங்கள் திடுதிப்பென்று என்னிடம் கேட்கிறீங்கள் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. --- பொறு பிள்ளை, நீ ஒன்றும் அவசரப்பட வேண்டாம்.நன்றாக யோசித்து ஒரு பதிலை சொல்லு. நீயும் இப்படியே இன்னும் எவ்வளவு காலம்தான் இருக்க முடியும். --- உங்களுக்கு தெரியும்தானே அம்மா எனக்கு பிள்ளை பிறக்காததால்தான் அவர் மறுமணம் செய்தவர். அதனால்தான் நானும் அங்கிருந்து கிளம்பி வந்தனான்.நாளைக்கு அதுவே உங்களுக்கும் ஒரு பிரச்சனையாய் இருக்கக் கூடாதல்லவா. --- அதையேண்டி அம்மா நீ நினைக்கிறாய். அது ஆண்டவன் போடுற பிச்சை. யார்யாருக்கு எதையெதை எப்ப குடுக்கணும் என்று அவனுக்குத்தான் தெரியும். எனக்கு ஆறு பிள்ளைகள். ஐந்து பிள்ளைகளும் ஒவ்வொன்றும் கருவிலே அழிந்தும், குறைப்பிரசவத்திலும் என்று போய் கடைசியில மிஞ்சினது இவன் கதிரவன் மட்டும்தான். இப்ப உனக்குத்தான் இரண்டு பிள்ளைகள் இருக்குதே. நீ இங்க வந்ததில் இருந்து அந்த தாயில்லாப் பிள்ளைகளை குளிக்கவாக்கிறதில் இருந்து அவையளுக்கு ஏற்ற சாப்பாடுகள் உடுப்புகள் எல்லாம் நீதானே பார்த்துப் பார்த்து செய்கிறாய். கண்ணன் தேவகியிடம் பிறந்தாலும் தாய் என்று யசோதாவிடம்தானே வளர்ந்தவன். அதுபோல் அதுகளும் உன்னிடம்தானே அம்மா அம்மா என்று ஒட்டிக் கொண்டு கிடக்குதுகள். பெற்றவளுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கேல்லையே. "கல்லைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டால்தான் கடவுள் வழிபாடா, இந்த பிள்ளைகளை தாய்க்கு தாயாய் இருந்து கண்ணுங் கருத்துமாய் வளர்க்கிறதும் கூட அந்த பரம்பொருளுக்கான வழிபாடுதான்" அன்று கிணத்துக் காட்டில் இருந்து நீ சிவாங்கியை காப்பாத்தினது இப்பவும் என் கண்ணுக்குள்ள நிக்குது. அண்டைக்கு மட்டும் ஒரு தப்பு நடந்திருந்தால் நான் என்ர பிள்ளைக்கு என்ன பதில் சொல்லுவன். அன்றிலிருந்துதான் எனக்கும் அப்புவுக்கும் உன்மீது இப்படி ஒரு எண்ணம் வந்தது. யார் கண்டது உனக்கும் ஆண்டவன் ஒரு மடிப்பிச்சை இட நினைத்தால் அதை யார் தடுப்பார். இப்படி இவர்கள் கதைத்துக் கொண்டிருக்க அப்புவும் பிள்ளைகளும் விளையாடி விட்டு வருகினம். பின் எல்லோருமாக வீட்டிற்கு வருகிறார்கள். மலரும்...........! 🌾
  8. அன்பே என் ஆரமுதே வாராய்.......! 😍
  9. வணக்கம் வாத்தியார்......! பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு குத்தந்கொர ஏது நீ நந்தவனத் தேறு அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் காத்தோடு மலராட கார்குழலாட காதோரம் லோலாக்கு சங்கதி பாட மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம் அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம் நிலவ வான் நிலவ naan புடிச்சு வாரேன் குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய் மூணாக்கு மொகம் பார்த்து வெண்ணிலா நாண தாளாம தடம்பாத்து வந்தவழி போக சித்திரத்துச் சோல முத்துமணி மாலை மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன் விண்ணில மீன் புடிச்சு சேல தெச்சுத் தாரேன் ஹோய்.....! ---பச்ச மலைப் பூவு நீ உச்சி மலைத் தேனு---
  10. காலச்சுழலில் சிறகடிக்கும் சிறிய பறவை நன்றாக இருக்கின்றது.......! 👍
  11. மலர்...........(7). நிர்மலாவும் வவுனியாவுக்கு வந்து இரண்டு வருடத்துக்கு மேலாகிறது. அவளது ட்யூசன் வகுப்புகளும் நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கிறது. அவள் கணிதமும் விஞ்ஞானமும் விசேஷமாக சொல்லிக் கொடுப்பதால் நிறைய A /L மாணவர்கள் கணனி மூலமாக படிக்கிறார்கள். மேலும் அயலில் இருக்கும் பலதரப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கும் பின் விறாந்தையில் வைத்து பாடம் சொல்லிக் குடுக்கிறாள். வறுமையான பிள்ளைகளிடம் பணம் வாங்குவதில்லை என்பதை தனக்குள் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறாள். கதிரவனின் பிள்ளைகளில் சிவாங்கி இன்னும் சிறு பிள்ளையாக இருக்கிறாள். முகிலன் கொஞ்சம் வளர்ந்து விட்டிருந்தான். அதனால் அவர்களையும் கவனித்து படிப்பு சொல்லிக் குடுக்கிறாள். சமையலிலும் ஆச்சியை அதிகம் வேலை செய்யவிடாமல் தானே கவனித்துக் கொள்கிறாள். கூடவே "யு டியூபிலும்" தான் சமையலில் இருந்து வீட்டுத் தோட்டம் பராமரிப்பது வரை பதிவிடுகிறாள். அவள் செய்யும் விதம் விதமான உணவுகள் ஆச்சி அப்பு மட்டுமன்றி கதிரவனுக்கும் பிடித்திருக்கு. பிள்ளைகளுக்கும் தனியாக உறைப்பில்லாமல் சமைத்து ஊட்டிவிடுவாள். என்னதான் இருந்தாலும் கதிரவனின் தேவைகளை கூடுதலாக ஆச்சிதான் கவனித்துக் கொள்வது வழக்கம். நிர்மலாவும் ஆச்சியிடம் இருந்து கோழிப்புக்கை, மீன் புட்டு, மற்றும் சிறுதானிய உணவுகள் எல்லாம் சமைக்கப் பழகியிருந்தாள். ஓய்வாக இருக்கும் சமயங்களில் அப்புவும் ஆச்சியும் பிள்ளைகளும் அவளுமாக கனக்க கதைத்துப் பேசி சிரித்து மகிழ்வார்கள். அந்நேரம் கதிரவனும் வீட்டில் இருந்தால் "சமா" களை கட்டும். இப்படித்தான் ஒருநாள் மாலைவேளை அப்பு கிணத்துக் கட்டினருகில் இருந்து பேரப்பிள்ளைகள் முகிலனுக்கும் சிவாங்கிக்கும் பெரிய கொடுவாக் கத்தியால் பணங்கொட்டையை வெட்டி பூரான் கிண்டிக் குடுத்துக் கொண்டிருக்கிறார். இடைக்கிடை ஆச்சிக்கும் நிர்மலாவுக்கும் முகிலனிடம் பூரான்களைக் குடுக்க அவனும் சின்னக் கால்களால் ஓடிச்சென்று அவர்களிடம் குடுத்து விட்டு வருகிறான். சிவாங்கியும் அருகே விளையாடிக்கொண்டிருக்கிறாள். ஆச்சி விறாந்தையில் இருந்து ஓலைச் சத்தகத்தால் செருகி செருகி பாய் இழைத்துக் கொண்டிருக்கிறாள். பக்கத்தில் நிர்மலாவும் ஏதோ பாடலை முணுமுணுத்தபடி பூசையறை குத்துவிளக்குகளை புளிபோட்டு விளக்கிக் கொண்டிருக்கிறாள். ஆச்சியும் அவளிடம் என்ன பிள்ளை நல்லா பாடுகிறாய் போல, கொஞ்சம் பெலுத்தாப் பாடேன் நாங்களும் கேட்பம். நிர்மலாவும் சரி அம்மா என்று சொல்லி விட்டு தொண்டையை கொஞ்சம் செருமி செம்பில் இருந்த தண்ணியையும் குடித்து விட்டு "காம்போதி" யில் ஒரு கீர்த்தனையை பாடுகிறாள். பக்கத்தில் ஆச்சியும் கையில் இருந்த சத்தகத்தை கொண்டையில் செருகி விட்டு பின்னால் இருந்த நெல்லு மூடடையில் சாய்ந்து கொண்டு பாட்டில் சொக்கிப்போய் கேட்டுக் கொண்டிருக்கிறா. அவளும் ஸ்வர வரிசைக்கு வந்து கீழ் ஸ்தாயியில் இருந்து உச்சத்தில் அரோகணத்துக்கு மாறி 7ம் கட்டையில் விஸ்தாரமாக ஸஞ்சரிக்கும் பொழுது அந்த இசை காற்றில் கலந்து வானில் பரவுகிறது. சற்று நேரத்தில் முற்றத்தில் "டமார்" என்று ஒரு பெரிய சத்தம். புழுதியும் நீருமாய் முகத்தில் அடிக்க ஆச்சி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க முற்றத்தில் பெரிய கொம்புகளுடன் ஒரு எருமை மூச்சிரைக்க வந்து நிக்குது. இதென்னடா இந்த எருமை எங்கிருந்து இங்க வந்தது என்று விழிகளை உயர்த்திப் பார்க்க சாட்சாத் சதாசிவனே அந்த எருமைமீது ஆரோகணித்திருக்கிறான். ஆச்சியும் பதறிப்போய்.... --- சுவாமி என்ன இது இந்த ஏழையின் இல்லத்துக்கு எருமையில் எழுந்தருளி இருக்கிறாய். என்றாவது நீ என்னை அழைக்க வருவாயென்று பூவும் புல்லும் படைத்து வணங்கினேன், இப்படி எருமையில் வருவாயென்று தெரிந்திருந்தால் பூவோடு புண்ணாக்கும் வைத்திருப்பேனே. நீ திடுதிப்பென்று வந்ததால் நான் பதறிவிட்டேன். --- பதறாதே கிழவி....நான் கயிலையில் நிஷ்டையில் இருந்த பொழுது ஒரு கந்தர்வ கானம் என் கர்ணங்களை (காதுகளை) தீண்டி சென்றது. அன்றொருநாள் தசமுகன் தன் தலையை தானே கொய்து என்னை மகிழ்வித்து விடுதலை பெற்றான். இன்று அதே இசை என்னை ஈர்த்ததால் நான் அதில் மெய்மறந்து என் வாகனத்தில் இங்கு வந்து விட்டேன். --- ஆ சிவ சிவா....என்ர சிவனே என்ன காரியம் செய்து போட்டாய், சுவாமி இது எமனுடைய எருமை உன் எருது அல்ல, கெதியா இதைக் கொண்டுபோய் அவனிடம் குடுத்திட்டு உன்ர எருதில் ஏறி வா. இதத் தேடிக்கொண்டு எமன் இங்க வந்திடப் போறான். (நடுங்குகிறாள்) --- அப்போதுதான் ஈசன் கவனிக்கிறான். அட நான் என்னை மறந்ததால் எருது எது எருமை எது என்று கவனிக்க வில்லை. ஓம் கிழவி நீ சொன்னதுபோல் இந்த எருமையைத் தேடி எமன் இங்கு வந்தால் எதாவது ஒரு உயிரை எடுக்காமல் போக மாட்டான். அதற்குள் நான் அங்கு போகவேண்டும். பின் எருமையைப் பார்த்து எருமையே நீ எதற்கு கயிலை வந்தாய். --- --- ஐயனே நான் அன்றாடம் எமதர்மராஜனோடு சென்று அவர் உயிர்களை கவர உதவுவதால் அந்தப் பாவத்தில் ஒரு பங்கு என்னையும் சேருமல்லவா. இன்று போயா விடுமுறையாதலால் எமன் எனக்கு விடுமுறை தந்ததால் அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ள பகீரதியிடம் (கங்கை) ஒருகுடம் தீர்த்தம் பெற்று ஸ்நானம் செய்யலாம் என்று வந்தேன் பிரபு. அப்போது தாங்கள் அங்கு வந்து என்மீது ஏறி இசை வந்த திசையில் விரைந்து செல் என்று கட்டளை இட்டீர்கள்.அதனால் இங்கு வந்தோம் ஐயனே. அப்படியா நல்ல காரியம் செய்தாய். பின் கங்காதேவி உடனே உன் புனிதமான தீர்த்தத்தால் இந்த எருமையை குளிப்பாட்டு என்று கூறி தலையைத் தடவ அங்கு சடாமுடி பிரிந்து கிடக்கிறது. கை கால்களை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஆபரணங்களான பாம்புகளையும் காணவில்லை. அடி கங்கா நீ எங்கிருக்கிறாய். --- சுவாமி அந்த எருமை வேகமாய் வந்து சடுதியாக நின்றதால் நாங்கள் சிதறிக் கிடக்கிறோம். அந்நேரம் அந்த எருமையை நானும் என் நிலைகுலைந்து முற்று முழுதாகக் குளிப்பாட்டி விட்டேன். இப்பொழுது நான் அதன் ஒரு கொம்பில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். உங்களின் கழுத்தாபரணமும் மற்ற கொம்பில் தொங்குது. கீழே குட்டி ஆபரணங்கள் சிதறி ஓடியதைக் கண்டு ஆச்சியின் நாயும் அங்கும் இங்கும் ஓடி பாம்புக்குட்டிகளைத் தேடிக் குரைக்கிறது. --- உடனே அந்த எருமையும் ஐயனே கங்கையின் தீர்த்தத்தால் என் பாவங்கள் தொலைந்தன. தங்களின் ஸ்பரிசத்தால் என் ஜென்மமும் புனிதமடைந்தது வணங்குகிறேன் சுவாமி.என்னை ஆசிர்வதியுங்கள் ஐயனே. அவர்களை ஆசீர்வதித்த சிவனும் அப்படியே திரும்பி ஆச்சியையும் நிர்மலாவையும் பார்வையால் ஆசீர்வதிக்கிறார். பின் சடாமுடியை தூக்கி ஒதுக்கி கொண்டை போட்டு கங்கையை தூக்கி அதில் வைத்து அவளை பிணைக்க எதையோ தேடுகிறார். அதையுணர்ந்த ஆச்சியும் தன் தலையில் செருகி இருந்த சத்தகத்தை எடுத்து சுவாமி இந்தா இதால குத்திக் கொண்டு கெதியா போய் உந்த எருமையை எமனிடம் குடுத்துடு என்று எறிய சிவனும் அதை கட்ச் பிடித்து முடியில் செருகிக் கொண்டு சீக்கிரம் செல் என்று எருமையிடம் சொல்கிறார். அந்த எருமையும் வேகமாய்த் திரும்பி ஓட வெளிக்கிட ஆங்காங்கே விழுந்து கிடந்த ஆபரணங்களாக அந்த பாம்புக் குட்டிகளும் ஓடுற பேரூந்தில் ஓடி ஏறும் பயணிகள் போல் பாய்ந்தோடிப்போய் எருமையின் கால்களிலும் வாலிலும் தொற்றிக் கொள்கின்றன. அது ஓடி கிணத்து கட்டில் மிதித்து வானில் கிளம்புகிறது. அந்த வேகத்தில் ஒரு கல்லு பறந்து வந்து ஆச்சியின் நெத்தியை பதம் பார்க்கிறது. உடனே திடுக்கிட்டு கண் விழித்த ஆச்சியின் மடியில் அப்பு கொத்தும்போது வழுக்கிப் பறந்து வந்து தலையில் அடித்த பனங்கொட்டை கிடக்கு. நடந்தது எல்லாம் சொப்பனம் என்று உணர்ந்து அப்புவைப் பார்க்க அங்கு அப்புவோடு முகிலன் நிக்கிறான். சிவாங்கி கிணத்துக் கட்டில் ஒரு கால் உள்ளே வைத்துக் கொண்டிருந்து வாளிக் கயிற்றோடு விளையாடிக் கொண்டிருக்கு. அப்புவும் அதைக் கவனிக்கவில்லை. எடியே இஞ்ச பாரடி பிள்ளை என்று ஆச்சி கத்த வெளிக்கிட அதைக் கவனித்த நிர்மலாவும் அவ வாயைப் பொத்தி உஸ்ஸ் என்று ஆச்சிக்கு ஜாடை காட்டிவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்று சிவாங்கி மறுபக்கம் கயிற்றுடன் சரியும் நேரம் அவளின் மற்றக் காலைக் கெட்டியாகப் பிடித்து தூக்கி தன்னுடன் சேர்த்தணைத்துக் கொள்கிறாள். உடனே அப்பு ஆச்சி எல்லாம் அவளை மொய்த்து விட்டினம். நல்ல காலமாக நடக்க இருந்த ஒரு பெரிய விபத்து தவிர்க்கப் பட்டது. இது எதுவும் அறியாமல் சிவாங்கி அழகாய் சிரிக்க மற்றவர்களும் அந்தத் துன்பத்தை மறந்து சிரிக்கிறார்கள். பின் ஆச்சி அப்புவைப் பார்த்து இஞ்ச நீங்கள் பூரான் வெட்டினது போதும் கெதியா முகிலனோடு வீட்டுக்கு போங்கோ, எவன் வருறானோ எமன் வருறானோ தெரியேல்ல காலம் கெட்டுக் கிடக்கு என்று திட்டிவிட்டு நிர்மலாவைப் பார்த்து பிள்ளை நீ நல்லாத்தான் பாடுறாய் ஆனால் நீ 7ம் கட்டை 8ம் கட்டை என்று அவ்வளவு தூரம் எல்லாம் போக வேண்டாம். இஞ்ச ரெண்டு கிழடுகட்டை கிடக்குது, ஏதோ எமக்குத் தோதாக 4ம் கட்டையோடு பாட்ட நிப்பாட்டு என்கிறா. நிர்மலாவும் இதென்ன அம்மா நல்லாத்தானே இருந்தவ என நினைத்துக் கொண்டு குழப்பத்துடன் விளக்கிய விளக்குகளை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள். மலரும்........! 🌷
  12. வணக்கம் பரணி வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!
  13. ஆக்கமும் ஊக்கமும் தந்து கருத்துக்களால் மகிழ்விக்கும் அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி......எனக்குப் பல புதிய உறவுகளும் வந்து வாசிப்பதும் கருத்துக்கள் பகிர்வதும் சந்தோசமாய் இருக்கு......! 💐
  14. வணக்கம் வாத்தியார்......! ஹே, மதுர வீர அழகுல மாட்டு கொம்பு திமிருல பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே வாடி என் கருப்பட்டி பாத்தா பத்தும் தீப்பெட்டி மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே மாருல ஏறிட இடந்தா மீசைய நீவுற வரந்தா உடுத்துற வேட்டிய போல ஒட்டிகிட்டு வர போறேன்டா (ம் வர போறேன்டா) உன் கூட வரேன்டா (உன் கூட வரேன்டா) தேனி மொத்தம் பாக்கத்தான் தங்கமே உன்ன தூக்கித்தான் மொத்த தேனைத்தான் நான் மொண்டு ஊத்தவா ஊரே கண்ணு போடத்தான் மாமன் உண்ண கூடித்தான் புள்ள நூறுதான் நான் பெத்து போடவா கொடை சாஞ்சேனே கொம்பன் நான்தானே கொடமாக்கி கருவாச்சி ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி.இ ஒன் கூட வரேண்டி (ஒன் கூட வரேண்டி) ஒன் கூட வரேன்டி (ஒன் கூட வரேண்டி).....! --- மதுர வீரன் அழகுல---
  15. 30 வருடங்களுக்கு முன் சுஜாதா எழுதியது.......! 👍
  16. மலர்.......(6). சங்கருக்கும் இராசம்மாவுக்கும் மனசுக்குள் ஒரே குற்றவுணர்வாய் இருக்கிறது. நிர்மலாவின் பெற்றோரும் அவளைத் தேடி அங்கு வந்திருந்தார்கள்.இருபகுதியினரும் சண்டை பிடித்து வாக்குவாதப் பட்டு பின் தனித்தனியே சென்று போலீசில் நிர்மலாவை காணவில்லை என்று புகார் குடுத்து விட்டு வந்திருந்தார்கள். இவ்வளவுக்கும் சங்கரின் புது மனைவியான ஜோதி அவர்களின் கண்களில் படவேயில்லை. நிர்மலாவின் தந்தை சண்முகம் போகும்போது சங்கரிடம் இதை தான் இப்படியே விடப் போவதில்லை நீங்கள் கெதியா என்ர பிள்ளையை என்னிடம் கொண்டுவந்து தரவேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது வழக்குப் போடுவன் என்று எச்சரித்து விட்டுப் போகிறார். இவை எதைப் பற்றியும் ஜோதி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. முதலில் அவள் பெற்றோர் அவளை வேலையையும் நிறுத்தி விட்டு கொழும்பில் இருந்து கூட்டிக் கொண்டு வந்ததில் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஜோதியின் தகப்பன் கஜேந்திரன் இராசம்மாவுக்கு துரத்து உறவு. ஜோதி கொழும்பில் ஒரு சர்வதேசங்களுடன் தொடர்புடைய கம்பனியொன்றில் நல்ல சம்பளத்தோடு நல்ல வேளையில் இருக்கிறாள். முதன் முதல் வீட்டில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போகும்போது பதவிசாக நல்ல மாதிரித்தான் போனவள். அங்கு அவர்களின் உறவினர் ராசன் வீட்டில் இருந்து கொண்டுதான் பேரூந்தில் வேலைக்குப் போய்வாறவள். காலப்போக்கில் கூட வேலை செய்ப்பவர்களின் சகவாசத்தாலும் மற்றவர்கள் போல் மிகவும் வசதியாக வாழவேண்டும் என்னும் இச்சையாலும் சின்ன சின்ன பார்ட்டிகள், அங்கு அவர்களுக்காக கொஞ்சம் கொஞ்சமாக மது அருந்துதல் என்று தடம் மாறுகிறாள். அவள் அடிக்கடி வீட்டுக்கு தாமதமாக வருவதாலும் சில நாட்கள் வெளியே தங்கிவிட்டு வருவதாலும் அதை ராசன் கண்டிக்க அவர்களுக்குள் உறவில் விரிசல் ஏற்பட்டு அங்கிருந்து கிளம்பி சக தோழியுடன் ஒரு அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வருகிறாள். சமீபத்தில் ஒருநாள் கஜேந்திரனுக்கு அவரது கை பேசியில் ஒரு அழைப்பு வருகிறது. எதிர் முனையில் பேசியவர் நீங்கள் கஜேந்திரனோ பேசுவது என்று வினவ, ஓம்....நீங்கள் யார் கதைக்கிறது என்று கேட்கிறார். ஐயா உங்களது மக்கள் ஜோதி கொழும்பாஸ்பத்திரியில் இன்ன வார்ட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான நோயில் இருக்கிறா. அதுதான் உங்களுக்கு தெரிவிக்கிறன் என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார். உடனே கஜேந்திரன் பதற்றத்துடன் மனைவி சுகுமாரியிடம் விஷயத்தை சொல்ல அவளும் பதறி இஞ்ச அப்பா இப்ப நீங்கள் கோபத்தை பாராட்டாமல் ராசனுக்கு அழைப்பெடுத்து என்னெண்டு போய் பார்க்கச் சொல்லுங்கோ. நாங்களும் உடனே போக வேணும் என்கிறாள். அவரும் ராசனுக்கு அழைப்பு விட அவனும் எடுத்து என்ன மாமா என்கிறான். --- தம்பி ராசு நான் மாமா பேசுறன்.....என்ன சொல்லுங்கோ மாமா.(ராசன் வீட்டில் இருந்துதான் ஜோதி வேலைக்குப் போய் வந்தவள்). --- அப்பன் குறைநினைக்காத இப்ப உங்கிருந்து ஒரு ஆள் யாரென்று தெரியாது போன் எடுத்தவர். என்னண்டால் எங்கட மகள் ஜோதி எதோ வருத்தமாய் ஆசுபத்திரியில் இருக்கிறாவாம். உனக்கு தெரியுமே. --- எங்களுக்குத் தெரியாது மாமா, விவரத்தை சொல்லுங்கோ நான் போய் பார்த்து உங்களுக்கு அறிவிக்கிறன். --- அவர் விபரங்களை விளக்கமாய் சொல்லிவிட்டு, குறைநினைக்காமல் ஒருக்கால் போய் பார்த்துவிட்டு எங்களுக்கு சொல்லு தம்பி. இங்க தாயார்காரி ஒரே அழுகையோடு இருக்கிறாள். --- ஒரு குறையுமில்லை மாமா, நான் இப்பவே சென்று பார்த்துவிட்டு சொல்லுறன். தொடர்பு துண்டிக்கப் படுகிறது.கொஞ்ச நேரத்தில் கஜேந்திரனுக்கு அழைப்பு வருகிறது. ராசன்தான் அழைக்கிறான். --- ஹலோ மாமா உங்களுக்கு வந்த செய்தி உண்மைதான். அவ இப்பவும் ஆசுபத்திரியில்தான் இருக்கிறா. குளுக்கோஸ் ஏத்துப்படுகுது. எதுக்கும் நீங்கள் இங்கு வாறது நல்லம் என்கிறான். உடனேயே கஜேந்திரனும் சுகுமாரியும் காரில் இரவிரவாக ஓடி கொழும்புக்கு வருகிறார்கள். பொழுது பல பலவென விடிந்து விட்டது. நேராக ஆஸ்பத்திரி சென்று மகளைப் பார்க்கிறார்கள். அவள் கட்டிலில் கிழிந்த நாராய் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். குளுக்கோஸ் எல்லாம் கழட்டி விட்டு விட்டார்கள். அங்கு அவள் அறைக்கு வந்த வைத்தியரிடம் விசாரித்த போது அவர் சொன்ன செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் சொல்கிறார், இப்ப இந்தப் பெண்ணுக்கு மூன்றாவது முறையாக "அபார்சன்" ஆகியிருக்கு. முன்பே எச்சரித்து இருந்தோம். இனி இன்னும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் கருத்தரிப்பது கடினம்.இன்றைக்கே நீங்கள் பில்லை கட்டிவிட்டு பிள்ளையை கூட்டிக் கொண்டு போகலாம் என்று சொல்லிவிட்டுப் போகிறார். அன்றே அவளிடம் கஜேந்திரன் உனக்கு இங்க வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் ஒழுங்கா வேலை செய்வாய் என்று அனுப்பினால் நீ இங்க விசர் வேலை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாய் என்று பேசிவிட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து விட்டார். இது நடந்து சில மாதங்களில் இந்த இராசம்மாவின் சம்பந்தம் தானாக தேடிவர, ஜோதிக்கு நிறைய புத்திமதிகள் சொல்லி அவசரம் அவசரமாக கலியாணம் செய்து வைத்து விட்டார்கள். ஆனால் இராசம்மா அவர்களிடம் உண்மையை மறைக்காமல் சொல்லித்தான் ஜோதியை சங்கருக்கு இரண்டாவது மனைவியாக கலியாணம் கட்டி அழைத்து வந்தவள். இரண்டு வீட்டாரும் மிகவும் பணக்காரர்களாக இருந்தபடியால் யாரும் இதைப் பெரிதாக்கவில்லை. மணமக்கள் சங்கரின் வீட்டுக்கு வந்த நேரம் நிர்மலா இல்லாததும் அவர்களுக்கு வசதியாகி விட்டது. இதை இராசம்மா சிறிதும் எதிர்பார்க்க வில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் தன்னுடைய வீட்டுக்குத்தான் போவாள், கொஞ்ச நாளில அங்கு சென்று அவளை அழைத்து வந்து விடலாம் என்றுதான் நினைத்தாள். இப்படியே ஒரு வருடத்துக்கு மேல் ஓடி விட்டது. ஜோதியும் புகுந்த வீட்டுடன் நன்றாக ஒன்றிப்போய் விட்டாள். நிர்மலாவைப் பற்றி அவர்களுக்கு எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை. மலரும்........! 🥀
  17. வணக்கம் வாத்தியார்......! காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித் தனி காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத் துளி காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி திருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன் தினமொரு புதுப் பாடல் வடித்து விட்டேன் அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி... பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது கோதையின் காதல் இன்று செவி வழி புகுந்தது என்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்தது இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் அஞ்சலி அஞ்சலி இவள் கலைக் காதலி அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி......! ---அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி---
  18. யானை தந்தம் போலெ........! 😍 416 Partager Télécharger Extrait 84 855 vues 22 août 2014 "யானைத் தந்தம் போலே பிறைநிலா"... அமரகவி (1952) பாடலாசிரியர் : 'உவமைக்கவிஞர்' சுரதா இசை : ஜி. ராமநாதன் பாடியவர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர், பி. லீலா பாடலுக்கான நடிப்பு : எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.எஸ். சரோஜா ************************************************************************************* 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய பாகவதர் சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார். 1934- பவளக்கொடி, 1936- நவீன சாரங்கதாரா ,1936- சத்யசீலன் ,1937- சிந்தாமணி,1937- அம்பிகாபதி,1939- திருநீலகன்டர்,1941- அசோக்குமார், 1942- சிவகவி , 1944- ஹரிதாஸ் , 1948-ராஜமுக்தி , 1953-அமரகவி , 1953-சியாமளா, 1957-புது வாழ்வு , 1960- சிவகாமி பவளக்கொடியில் தொடங்கிய பாகவதரின் வெற்றிப் பயணம் ஹரிதாஸ் படத்தில் விண்ணைத் தொட்டது. லட்சுமி காந்தன் கொலைவழக்கிற்குப் பின் சிறை சென்று மீண்டு வந்து நடித்த ராஜமுக்தி முதலான படங்கள் தோல்வியைத் தழுவின. அசோக்குமார்(1941) படத்தில் பாகவதரின் சேனாதிபதியாக நடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரும் ஜானகியும் ராஜமுக்தியில்(1948) நடித்த பொழுது காதல் ஏற்பட்டுத் திருமணம் செய்து கொண்டனர். சிந்தாமணி படத்தின் நாயகி அஸ்வத்தமா பெயர் தான் அன்றைய காலத்து விளம்பரங்களில் கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள். இதைக் கண்ட பாகவதருக்கு கோபமோ ஈகோவோ ஏற்படவில்லை. அம்பிகாபதியில் தலையை இழப்பது போலவும் , ஹரிதாஸ் படத்தில் கால்கள் இழப்பது போலவும் நவீன சாரங்கதாரா படத்தில் கைகளை இழப்பது போலவும் , அசோக்குமார் படத்தில் கண்களை இழப்பது போலவும் நடித்த பாகவதருக்கு சிவகாமி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது உண்மையிலேயே கண் பார்வை பறிபோனது. சிவகாமி(1960) படம் பாகவதரின் மறைவிற்குப்(1959) பின் வெளிவந்தது. பாகவதர் என்ற சொல்லிற்கு பக்திக்கதைகளை இசையுடன் பாடுபவர் என்று பொருள் இசைக்குள் சொர்க்கத்தை விதைத்த பாகவதர்...தன் இறுதிக்காலத்தை வறுமைநரகத்தில் கழித்தது...தமிழ் சினிமாவின் சொல்லமுடியா சோகம்.......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.