Everything posted by suvy
-
பார்வை ஒன்றே போதுமே.......!
பார்வை ஒன்றே போதுமே..........! (11). இம்முறை வயலில் நல்ல விளைச்சல். விதைநெல்லை கழித்துப் பார்த்தாலும் அதில் எப்படியும் நாலு லட்சத்துக்குமேல் கிடைக்கும். இனி இவர்கள் உழைத்து கொண்டுவந்து குடுத்த காசு சேமிப்பு மற்றும் வீடு காணி ஈடுவைத்தாலும் அதில் எப்படியும் எழெட்டு லட்சங்கள் வரும்.கணக்கு பார்த்ததில் சராசரியாக பதினோரு லட்சங்கள் வரும். இன்னும் நாலு லட்சம் மற்றும் எழுத்து கூலிகள் எல்லாம் இருக்கின்றன. முத்து சொல்கிறான் கண்ணப்பர் இவ்வளவு குறைவாக தாறன் என்ற போதிலும் ஒரு கொஞ்சப் பணத்தால் எல்லாம் கைநழுவிப் போயிடும் போல இருக்கே என்று கவலைப் படுகிறான். தம்பியின் மனக்கஷ்டத்தைப் பார்த்த சித்ரா நானும் இப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். என்னை ஒரு பெரிய வணிக வளாக்கத்துக்கு ஆலோசகராக வக்கீல் நியமித்திருக்கிறார். ஆயினும் இப்பொழுது நான் உங்களுக்கு உதவ முடியாமல் இருக்கிறது வேதனை தருகிறது. மகேஸ்வரியும் பரவாயில்லை சித்ரா நீ யோசிக்காதை என்கிறாள் . பரவாயில்லை முத்து. ஒரு காரியம் கைகூட வேண்டுமென்றால் லேசில் கிடைக்காது. அதற்காக முயற்சி செய்யாமல் இருக்கக் கூடாது. "முயற்சி மெய் வருந்தக் கூலி தரும்" நாளைக்கு காலையில் நீ வங்கிக்கு சென்று உன் சான்றிதல்களைக் காட்டி கடன் கேட்டுப் பார் என்று சொல்ல அதுவும் சரி என்ற முடிவுடன் எல்லோரும் படுக்கப் போகின்றார்கள். மகேஸ்வரியும் சாமிநாதனின் கட்டிலுக்கு வேறு நல்ல துணிகளையும் போர்வையையும் மாற்றிவிட்டு லேசாக அவரை உரசிக் கொண்டு சென்று கதவருகில் நின்று சிநேகமான ஒரு பார்வை பார்த்துக்கொண்டே குசினிக்குள் பாய் விரித்து படுக்கப்போகிறாள். அப்போது சித்ரா அம்மா இங்கே வந்து என்கூட படும்மா என்று அழைக்க போடி உங்கே ஒரே நுளம்பு குத்துது. ஓ..... உங்கே நுளம்பு இல்லையா என்று கேட்க, ஓம் பிள்ளை இங்கு அடுப்பு வெக்கைக்கு நுளம்பு வாறதில்லை.வேணுமெண்டால் நீயும் இங்கு வந்து படு. இல்லையம்மா நான் கட்டிலில் படுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவள் தூங்கிப் போனாள். மகேஸ்வரிக்கு தூக்கம் வரவில்லை. இப்போதெல்லாம் தான் சாமிநாதன் மீது நிறைய அக்கறையும் உரிமையும் எடுத்துக் கொள்வதுபோல் அவளுக்கு தோன்றுகிறது. அந்நேரம் வெளியே படுத்திருக்கும் சாமிநாதனும் இவர்களின் சம்பாசனையைக் கேட்கிறார். தனது மனைவியின் இது போன்ற தவறுகளால்தான் தான் வீட்டை விட்டு வெளியேறி வந்தது. அதனால் எதுவாயினும் சபலத்துக்கு இடங்கொடுப்பதில்லை என்னும் வைராக்கியத்துடன் எதுவும் தெரியாததுபோல் நடந்து கொள்கிறார். அடுத்தநாள் காலை முத்து தனது சான்றிதழ்கள் எல்லாம் எடுத்துக் கொண்டு வங்கிக்கு செல்கிறான். அங்கு மேலதிகாரியை சந்திப்பதற்கு நேர அனுமதி கேட்கிறான். அவர் கணணியைப் பார்த்து விட்டு இன்று மாலை 15:00 மணிக்கு ஒரு இடம் இருக்கு சரியா என்று கேட்க சரி என்றுவிட்டு வெளியே வருகிறான். பின் அங்கும் இங்கும் விடுப்பு பார்த்துக்கொண்டு திரிந்து விட்டு மத்தியானம் நல்ல கடையில் சாப்பிட்டு விட்டு மூன்று மணிக்கு வங்கிக்கு வருகிறான். அங்கே அவரின் அறையில் அவரிடம் தான் தனியாக தொழில் தொடங்குவதற்கு கடன் தந்து உதவ முடியுமா என்று கேட்டு தனது சான்றிதல்களைக் கொடுக்கிறான். அவரும் அவனது சான்றிதழ்களைப் பார்த்துக் கொண்டே எவ்வளவு வேணும் என்று கேட்கிறார். அதற்கு அவனும் ஒரு ஐந்து லட்சம் வேணும் என்று சொல்கிறான். அதைக் கேட்டுக் கொண்டே ஆறுதலாக நிமிர்ந்தவர் இப்ப வெறும் சான்றிதழுக்கு எல்லாம் கடன் குடுக்க வாங்கி அனுமதிக்காது தம்பி. அப்ப நாங்கள் சுயமாய் தொழில் செய்ய கடன் பெற முடியாதா ஐயா என்று கேட்க அவரும் இப்ப வங்கி விவசாயத்திற்கும் கால்நடை வளர்ப்புக்கும்தான் கடன் தருகுது. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ நாங்கள் வந்து பார்த்து அதற்குரிய பெறுமதியை கடனாகத் தருகிறோம் என்று சொல்ல அவனும் கேட்டுக்கொண்டு அவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வருகிறான். அவன் வந்து சொன்னதைக் கேட்டதும் சாமிநாதன் கொஞ்சம் யோசித்து விட்டு வா கண்ணப்பரிடம் போகலாம் என்று அவனையும் கூட்டிக் கொண்டு போய் அவரைச் சந்தித்து அவரிடம், ஐயா நீங்கள் நகரத்துக்கு போவதாய் இருந்தால் உங்களின் இந்த மாடுகளை என்ன செய்யப் போறீங்கள் என்று கேட்கிறார். அவரும் நான் அவற்றை வித்துக் கொண்டு இருக்கிறேன் தம்பி. முன்பு பத்து மாடும் கன்றுகளும் இருந்தன. அதில் இதுவரை நாலும் சில கன்றுகளும் வித்துப் போட்டன். எல்லாம் நல்ல நாட்டு மாடுகள். உழவுக்கு வண்டிலுக்கு என்று தனித்தனியாக இருக்கு. இன்னும் ஆறு மாடுகளும் கன்றுகளும் இருக்கு என்று சொல்கிறார். சாமிநாதனும் விஷயத்தை சொல்லி வங்கியில் கடன் வாங்க மாடுகள் தந்து உதவ வேண்டும்.நீங்கள் பார்த்து சொல்லுங்கோ பணம் தருகிறோம் என்று சொல்கிறார். பின் அவர் சம்மதத்துடன் அங்கிருந்து மாடுகளையும் கன்றுகளையும் இருவருமாக ஓட்டிக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். வரும்போது முத்து கேட்கிறான் உங்களுக்கு எப்படி ஐயா தெரியும் அவரிடம் மாடுகள் இருக்குதெண்டு. அதுவா நாங்கள் அங்கு இருக்கும்போது பல மாடுகள் குரல் கொடுக்கும் சத்தங்களைக் கேட்டேன். சில சின்னக் கன்றுகள் வளவுகளில் துள்ளித் திரிவதையும் கண்டேன்....அத்துடன் இவர் குடிபெயரும்போது இவைகளை என்ன செய்வார் என்றும் யோசித்தேன் அவ்வளவுதான். ஒன்றும் இல்லை ஐயா உங்களின் அனுபவத்துக்கு முன்னாள் நானெல்லாம் வெறும் பூஜ்யம்தான் என்கிறான். ஓட்டிக் கொண்டுவந்த மாடுகளை வீட்டுக்கு முன் வெறுமையாய் கிடந்த நிலத்தில் ஒரு தடுப்புகள் போட்டு பட்டியாக அடைத்து விட்டார்கள். அடுத்து வந்த சில நாட்களில் வங்கி அதிகாரிகள் வந்து பார்த்து லோன் பாஸ் பண்ணி மகேஸ்வரியிடம் ஐந்து லட்சம் கடனாக கொடுக்கிறார்கள்..................! பார்ப்போம் இனி ........! ✍️
-
இனித்திடும் இனிய தமிழே....!
வெ . இறையன்பு அவர்களின் முத்தாய்ப்பான பேச்சு.......! 👍
-
சிரிக்க மட்டும் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஹே ஒத்த சொல்லால என் உசுர எடுத்து வச்சிகிட்டா ரெட்ட கண்ணால எண்ணத் தின்னாடா பச்ச தண்ணி போல் அட சொம்புக்குள்ள ஊத்திவெச்சு நித்தம் குடிச்சு என்னக் கொன்னாடா ஏ பொட்ட காட்டுல ஆலங்கட்டி மழை பெஞ்சு ஆறு ஒண்ணு ஓடுறத பாரு அட பட்டாம் பூச்சி தான் என் சட்டையில ஒட்டிகிச்சு பட்டாசு போல நா வெடிச்சேன் முட்டக் கண்ணால என் மூச்செடுத்து போனவ தான் தொட்ட பின்னால ஏதோ ஆனேன்டா என் பவுடர் டப்பா தீர்ந்து போனது அந்த கண்ணாடியும் கடுப்பு ஆனது நான் குப்புறக்க படுத்து கெடந்தேன் என்ன குதிர மேல ஏத்தி விட்டாயே ஒண்ணும் சொல்லாம உசுர தொட்டாயா மனச இனிக்க வெச்ச சீனி மிட்டாயே......! ---ஒத்தை சொல்லாலே---- பார்வை ஒன்றே போதுமே.......!
பார்வை ஒன்றே போதுமே...........( 10 ). முத்துவும் சாமிநாதனும் அந்தக் கடை முதலாளி குடுத்த பாதணிகளை சிறப்பாகத் திருத்தி பொலீஸ் போட்டு எடுத்துக்கொண்டு தங்களது வீட்டுக்கு போகும் வழியில் கடை முதலாளி கண்ணப்பரின் வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு முற்றத்து வாங்கில் இருந்து தேனீர் அருந்திக் கொண்டிருந்த கண்ணப்பர் இவர்களைக் கண்டதும் வாங்கோ வாங்கோ என்ன இண்டைக்கே செய்து கொண்டு வந்து விட்டீர்கள் என்று முகமன் கூறி வரவேற்கிறார். முத்துவும் பாதணிகளின் பையை அங்கிருந்த திண்ணையில் வைத்துவிட்டு நிமிர அவர் மனைவி அங்கு வந்து முத்துவை நலம் விசாரித்துக் கொண்டே நன்றாக செய்திருக்கிறாய் முத்து என்று பாராட்டுகிறாள். பின்பு நீங்கள் கதைத்துக் கொண்டு இருங்கோ உங்களுக்கும் தேத்தண்ணி போட்டு எடுத்துக் கொண்டு வாறன் என்று உள்ளே போகிறாள். கண்ணப்பரும் என்ன முத்து நீயும் அக்காவும் படித்து பட்டங்களும் பெற்று விட்டீர்கள் என்று அறிந்தேன்.இப்ப என்ன செய்கிறாய். ஓம் ஐயா நான் வியாபாரம் சம்பந்தமான படிப்பும், அக்கா வக்கீல் படிப்பும் படித்திருக்கிறோம்.இந்த வருடம்தான் எல்லாம் நல்லபடியாக முடிந்தது. இனி யாரோடாவது கூட்டாக சேர்ந்து செய்வதா அல்லது சொந்தமாக செய்வதா என்று யோசிக்கிறேன்.அப்படியா நல்லது, இதையெல்லாம் பார்க்க உனது அப்பா இல்லை என்பது வேதனையாக இருக்கு. அன்று நடந்த அந்தச் சண்டையில் அவர் மட்டும் என்னைக் காப்பாற்றவில்லை என்றால் இன்றைக்கு நான் உயிரோடு இல்லை என்று சொல்லி சிறிது நேரம் மௌனத்தில் மூழ்கிறார். அப்போது சாமிநாதன் அவரைப் பார்த்து ஐயா நான் ஒன்று கேட்கலாமா என்று வினாவ அவரும் ம்....என்று தலையை மட்டும் அசைக்கிறார். நீங்கள் உங்கள் கடையை விக்கப் போறதாய் கேள்விப்பட்டேன் அதுதான் என்று இழுக்க ....கண்ணப்பரும் ஓம் ....வியாபாரமும் முந்தியைப்போல இல்லை. எங்களுக்கும் வயசாயிட்டுது. மகளும் தன்னோடு வந்து இருக்கச்சொல்லி ஒரே ஆக்கினை. அவளுக்கும் இனி கலியாணம் காட்சி என்று இருக்குது. அதுதான் நகரத்துக்கு போய் அவளோடு இருப்பம் என்று யோசிக்கிறம் என்கிறார். சாமிநாதனும் நீங்கள் உங்களின் விலையை சொன்னால் ஆரும் விசாரித்தால் நாங்கள் சொல்லலாம் என்கிறார்.நான் ஒரு இருபது லட்சம் விலை வைத்திருக்கிறேன். கடை மேல் மாடி எல்லாம் போன வருடம்தான் கட்டியது. உங்களுக்கு தெரியும்தானே....ஏன் நீங்கள் யாராவது எடுக்கப் போறீங்களோ என்று கேட்கிறார். தற்சமயம் எங்களிடம் அவ்வளவு பணமில்லை.வாங்கிறதெண்டாலும் தோட்டம் வீடு எல்லாம் ஈடு வைத்துதான் வாங்க வேண்டும். இவர்களும் இன்னும் சிறுபிள்ளைகளாகத்தான் இருக்கினம். இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது வழி காட்டி விட்டால் உங்கள் நண்பரின் குடும்பமும் தலைநிமிர்ந்து விடும் என்று பார்க்கிறேன். கண்ணப்பர் முத்துவைப் பார்த்து, முத்து நீ என்ன சொல்கிறாய் என்று கேட்க, முத்துவும் நீங்கள் எல்லாம் பெரியவர்கள். மேலும் நீங்கள் நிர்கதியாய் நின்ற எங்களுக்கு செய்த உதவியை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம்.அம்மா அப்பப்ப இதைக் கதைக்கும்போது இப்பவும் கண்கலங்கி விடுவா. அக்காவும் படிப்பு முடிச்சு இப்ப பிரக்டீஸ் செய்கிறா என்று சொல்கிறார். சரி கொடுக்கல் வாங்கல் என்று வரும்போது நாளைக்கு இதால ஒரு பிரச்சினையும் வரக்கூடாது. உறவோ நட்போ எதையும் "அறப்பேசி உறக் கொள்ள வேண்டும்" நான் நேராகவே விசயத்துக்கு வாறன் நீங்கள் என்ற படியால் ஒரு பதினைந்து லட்சம் தந்தால் போதுமென்கிறார்.சாமிநாதனும் ஒரு மாதம் தவணை கேட்க அவரும் சரி என்று ஒப்புக் கொள்கிறார். பின் அவர்கள் இருவரும் தேநீரைக் குடித்து விட்டு வீட்டிக்குப் போகிறார்கள். அப்போது கதவருகில் நின்று இவர்களின் உரையாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணப்பரின் மனைவி வெளியே வந்து அவரருகில் கதிரையில் இருந்து கொண்டு, என்னங்க நான் ஒண்டு சொல்லவா என்று கேட்கிறாள். ம்...சொல்லு என்று அவர் சொல்லவும், வந்து உந்தப்பிள்ளை முத்துவும் எங்கட மகள் எல்லாரும் சின்னனில இருந்து ஒன்றாய் விளையாடித்திருந்த பிள்ளைகள். பொடியனும் நல்ல ஒழுக்கமாய் இருக்கிறான். எங்கட மகளுக்கு இவரைக் கேட்டு மகேஸ்வரியிடம் கதைப்பமே. நான் அதை யோசிக்காமல் இருப்பனே....ஆனால் அந்தப்பக்கத்தில சில பிரச்சினைகள் இருக்கு. என்னதான் நண்பனின் குடும்பம் என்றாலும் இப்ப முன்பின் தெரியாத ஒரு ஆளோட மகேஸ்வரி ஒரே வீட்டிலேயே வாழுறா. அதோட முத்துவுக்கு தமக்கை இருக்கிறாள். அவளின் திருமணத்துக்கு பிறகுதான் இவருக்கு வழி பிறக்கும். எதுக்கும் சிறிது காலம் போகட்டும் பிறகு பார்க்கலாம். நானும் அந்த ஆளைப் பற்றி விசாரித்துப் பார்க்கிறேன் என்று சொல்ல அவளும் அதுவும் சரிதான் என்று சொல்லிவிட்டு தேத்தண்ணி குடித்த போணிகளை எடுத்துக் கொண்டு உள்ளே போகிறாள். சாமிநாதனும் முத்துவும் வீட்டுக்கு வரும்போது வாசலிலேயே மகேஸ்வரி இவர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.இப்பொழுதெல்லாம் அவள் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொள்கிறாள். கை கால்களில் மருதாணி மலர்ந்திருக்கிறது அவளது மனம்போல. அவர்களும் வீட்டுக்கு வந்ததும் முத்து அவளிடம் அன்று நடந்ததெல்லாவற்றையும் சொல்கிறான்.சித்ரா எல்லோருக்கும் பனங் கற்கண்டுடன் தேனீர் கொண்டுவந்து தருகிறாள். அதைத் தொடர்ந்து எல்லோருமாய் ஆலோசிக்கின்றார்கள்............! பார்ப்போம் இனி..........! ✍️- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகான ஊற்றுக் கிணறு........அதன் நீர் பயிருக்கு உணவு.........! 🙏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஏ பெத்தவங்க பார்த்து வச்ச பொண்ண எனக்கு புடிக்கல பொண்ண கொஞ்சம் புடிச்சாலும் தாலி கட்ட புடிக்கல தாலி கட்ட நினைச்சாலும் ஜாலி பண்ண புடிக்கல ஜாலி பண்ணி முடிச்சாலும் சேர்ந்து வாழ புடிக்கல உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது (2) ஏ ஆம்பளைங்க வைச்சிருக்கும் மீசை எனக்கு புடிக்கல மீச கொஞ்சம் புடிச்சாலும் பேச எனக்கு புடிக்கல பேச கொஞ்சம் நினைச்சாலும் பழக எனக்கு புடிக்கல பழகி பார்த்து தொலைச்சாலும் பல்லானது புடிக்கல உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது (2) ஏ தூத்துகுடியில துடிப்பான ஆளொருத்தன் துரத்திவந்தானே எனக்கு புடிக்கல ஏ ஹே காரைக்குடியில கலையான பெண்ணொருத்தி கண்ணடிச்சாளே எனக்கு புடிக்கல ஏ சேல கட்ட புடிக்கல சீப்பெடுத்து தலவாரி பின்ன பிடிக்கல ஏ வேட்டி சட்ட பிடிக்கல விதவிதமா ஜீன்ஸ் வாங்கி போட பிடிக்கல பலகாரம் புடிக்கல பல வாரம் தூங்கல எனக்கு என்னையே கூட சில நேரம் புடிக்கல உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது உன்ன மட்டும் புடிக்குது உன் கண்ண மட்டும் புடிக்குது.......! ---பெத்தவங்க பார்த்து வைச்ச---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் தென்னை மரத்தில ........! 😍- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்கலாம் வாங்க
நாட்டை விட்டு ஓடணும்னு ஒரு கியூ நாட்டுக்குள்ள ஓடணும்னு மற்ற கியூ இரண்டு கியூவும் சந்தித்த ஒரே இடம் #பத்தரமுல்ல...- பார்வை ஒன்றே போதுமே.......!
பார்வை ஒன்றே போதுமே......! (9). அங்கே அவர்களது தாயார் யாரையோ கோபமாகப் பேசுவதும் இருவர் வாக்குவாதப் படுவதும் சத்தமாகக் கேட்கிறது. வெளிவராந்தாவில் வேலைக்காரம்மாவும் வாட்ச்மேனும் பதற்றமாய் நின்றுகொண்டிருக்கிறார்கள்.என்ன என்று ரவிதாஸ் அவர்களிடம் விசாரிக்க நிர்மலா விரைந்து உள்ளே போகிறாள். அந்த வேலைக்காரம்மாவும் அவனிடம் சின்னையா கொஞ்ச நாட்களாக அம்மாவின் கார் ட்ரைவர் சுந்தரத்தின் போக்கு சரியில்லை. அம்மாவிடம் அத்துமீறி நடந்து கொள்கிறான். அம்மாவும் ஏனோ அவனுக்கு பயந்து அவன் சொற்படி நடக்கிறா மேலும் அவன் கேட்க்கும்போதெல்லாம் பணமும் குடுக்குறா. அவன் குடித்து விட்டு வந்து தகராறு பண்ணினாலும் கண்டும் காணாதமாதிரி இருக்கிறா என்கிறாள். ரவிதாசும் ஓம்....நானும் பார்த்துக் கொண்டுதான் வாறன் அவற்ர போக்கு சரியில்லாமல்தான் இருக்கு. சரி என்ன என்று பார்க்க படியேறி தாயாரின் அறைக்குப் போகிறான். அங்கு ரேகாவோடு சுந்தரம் இழுபறிப்பட்டுக் கொண்டிருந்தான். இடையில் நிர்மலா அவனிடமிருந்து தாயாரைப் பிடித்து இழுக்கிறாள். அங்கு வந்த ரவிதாஸ் உடனே சுந்தரத்தின் வயிற்றில் எட்டி உதைக்க அவன் கட்டிலடியில் போய் விழுகிறான். அவனிடமிருந்து விடுபட்ட ரேகா மகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறுகிறாள். எல்லாம் என்னால்தான்.நான் குடி போதையில் செய்த தவறுகளினால்தான் என் புருசனும் எங்களை அனாதரவாய் விட்டிட்டு போயிட்டார். இன்று இந்த நாய்கூட என்மேல் கை வைக்கத் துணியுமளவுக்கு வந்து விட்டது. என்னை மன்னித்து விடுங்கோ பிள்ளைகள். முதலில் இவனை வெளியே அடித்துத் துரத்துங்கோ என்று சொல்லும்போது கட்டிலின் கீழே இருந்து எழுந்த சுந்தரத்தின் கையில் கைத்துப்பாக்கி இருந்தது.அது அன்று சாமிநாதன் கோபத்தில் எறிந்து விட்டு போன கைத் துப்பாக்கி. இண்டைக்கு உங்கள் மூவரையும் கொல்லாமல் விட மாட்டேன் என்று கத்திக் கொண்டு ரவிதாசை நோக்கி சுடும்போது மகனைக் காப்பாற்ற குறுக்கே பாய்ந்த ரேகாவின் மார்பில் குண்டு பட்டு அவள் கீழே சரிகிறாள். நிர்மலா தாயைத் தாங்கிப் பிடிக்க சுதாகரித்துக் கொண்ட ரவிதாஸ் பாய்ந்து சுந்தரத்தை மடக்குகிறான். துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிவந்த வாட்ச்மேனும் ரவிதாஸுடன் சேர்ந்து சுந்தரத்தை அமுக்கிப் பிடித்து துப்பாக்கியைப் பறித்து விடுகிறார்கள். இருவருமாக அவனைக் கட்டிப் போட்டுவிட்டு போலீசுக்கு போன்செய்ய சற்று நேரத்தில் போலீசும் அம்புலன்ஸ் வண்டிகளும் வந்து விடுகின்றன. அதற்கிடையில் அன்று நடந்ததை ரேகா பிள்ளைகளிடம் சொல்லி மன்னிப்பு கேட்கிறாள். நான் இனி இருக்கமாட்டேன் பிள்ளைகள். நீங்கள் கவனமாய் இருங்கோ. என்றாவது அப்பாவை சந்தித்தால் தன்னை மன்னித்து விடும்படி சொல்லுங்கோ என்று சொல்கிறாள். டொக்டர் வந்து அவளுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸில் ஏற்றும்போது ரேகாவின் உயிர் பிரிகிறது. போலீஸ் சுந்தரத்தையும் துப்பாக்கியுடன் விலங்கிட்டு அழைத்து செல்கிறது. இவை நடந்து இரண்டு மூண்டு வருடங்களாகி விட்டன. நிர்மலா முழுநேரமாக கம்பெனியைக் கவனித்துக் கொள்கிறாள். ரவிதாசும் கம்பெனி வேலைகளாக அடிக்கடி அயல்நாடுகளுக்கு செல்கிறான். அவன் குடுத்த புகாரின் பேரில் போலீஸ் சாமிநாதனை வலைபோட்டு தேடிக்கொண்டிருக்கிறது..............................................! பார்ப்போம் இனி ..................! ✍️- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் ரசிக்க
- களைத்த மனசு களிப்புற ......!
தடியூன்றிப் பாய்தல்.........! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மிஸ்டர் ராஜவன்னியன் தயவுசெய்து மேடைக்கு வரவும்......இங்கு ஒருவருக்கு குளிர் விட்டு போச்சு.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...........! பெண் : கல்லு மலைமேல கல்லுருட்டி அந்த கல்லுக்கும் கல்லுக்கும் அணை போட்டு மதுரை கோபுரம் தெரிய கட்டி ……நம்ம மன்னவரு வர்றத பாருங்கடி ஆண் : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ நம்ம மனச எடுத்து சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம் இந்த தேர இழுத்து செல்லும் ஆண் & குழு : இந்த மண்ணு மணக்குற மல்லிகை பூ நம்ம மனச எடுத்து சொல்லும் வந்து நின்னு ரசிக்கிற ஊரு சனம் இந்த தேர இழுத்து செல்லும் ஆண் : வந்தாரை வாழ வெச்ச ஊரு புயல் வந்தாலும் அசையாது பாரு எங்க தென்னாட்டு சிங்கம் வந்து முன்னேற்றி கொண்டு வந்த பொன்னான கதை உண்டு கேளு.......! ---மதுர குலுங்க குலுங்க---- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Eelathirumagan பூங்குன்றன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழத்திருமகன் & பூங்குன்றன்..........! 💐- பார்வை ஒன்றே போதுமே.......!
பார்வை ஒன்றே போதுமே..........(8). சோமு அப்பால் சென்றதும் சாமிநாதன் முத்துவிடம் ஏன் முத்து அந்தக் கடையை நாங்கள் வாங்கினால் என்ன என்று சொல்ல....என்னய்யா நீங்கள் புரியாமல் கதைக்கிறீங்கள். அவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கு போவது. அதுவும் மாடியுடன் கூடிய பெரிய கடை. பின்னாலும் பெரிய வளவு இருக்கு. என்னை நம்பி யார் அவ்வளவு பணம் தருவினம். சும்மா நடக்கிறதைச் சொல்லுங்கோ. அவ்வளவு அனுபவசாலியே வியாபாரம் இல்லாமல் கடையை விக்கிறார். நடக்கும் முத்து நீ அவர் வந்தால் என்னிடம் சொல்லு, நாங்கள் அவரிடம் கதைத்துப் பார்ப்போம். பின் இருவரும் தமக்குள் யோசனையுடன் தங்கள் தங்கள் வேலைகளைத் தொடர்கிறார்கள். அப்போது முத்து தனக்குள் கதைப்பது போல் நான் இப்போது படித்திருக்கும் படிப்புக்கு இப்படி ஒரு இடம் கிடைத்தால் வசதியாகத்தான் இருக்கும். ஆனால் என்ன செய்வது..... நீ ஒன்றுக்கும் யோசிக்காதே முத்து அது சரிவரும் என்றுதான் என் மனசு சொல்லுது என்று சாமிநாதன் முத்துவுக்கு ஆறுதல் சொல்கிறார். அன்று மதியம் முத்து இருவருக்கும் சாப்பாடு வாங்குவதற்காக வீதியைக் கடந்து எதிரில் உள்ள உணவகத்துக்கு வருகிறான். அப்போது ஒரு கார் அவனைக் கடந்து வந்து அந்தக் கடைக்குமுன் நிற்கிறது. அதில் இருந்து இறங்கிய அந்த மனிதர் முத்துவைக் கண்டதும் "முத்து இங்கு கொஞ்சம் வந்துட்டு போ" என்று அழைத்தார். அவனும் என்ன ஐயா என்று அவர் முன் சென்று பவ்யமாக நின்றான்.மனதுக்குள் இப்பதான் இவரைப் பற்றி கதைத்தோம் பார்த்தால் முன்னே வந்து நிக்கிறார் என்று நினைக்கின்றான். அவர்தான் சோமு வேலை செய்யும் புடவைக் கடையின் முதலாளி. அவரும் முத்துவின் தந்தையும் பால்ய நண்பர்கள். அவனது தந்தையின் மரணச்சடங்குக்கு வந்தபோது முத்துவின் கையில் ஒரு என்பலப்பில் பணம் வைத்துக் குடுத்துவிட்டு சென்றவர். அந்தப் பணத்தை வைத்துதான் தந்தையின் இறுதிக் காரியங்களை ஒரு குறைவுமில்லாமல் செய்தவன். அவர் காரின் டிக்கியத் திறந்து சில சோடி சப்பாத்துகள், செருப்புகளை அவனிடம் குடுத்து இவை எனது மனிசி மற்றும் பிள்ளைகளுடையது, இவற்றை பழுதுபார்த்து பொலிஸ் பண்ணிக் கொண்டுவந்து தா என்று சொல்லி அவனிடம் கொடுக்கிறார். அவனும் சரி ஐயா நான் இந்த வேலைகளை முடித்து பின்னேரம் வீட்டுக்கு போகும்போது உங்கட வீட்டில் குடுத்து விட்டு போகிறேன் என்றான். அவர் பர்சில் இருந்து பணம் எடுத்து குடுக்க வரும்போது, அவனும் வேண்டாம் ஐயா இருக்கட்டும் என்று சொல்லி விட்டு பையை எடுத்துக் கொண்டு போகிறான். சாமிநாதனின் வீட்டில் அவரை எல்லா இடமும் தேடிக் களைத்து விட்டார்கள். அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர்களுடைய வணிக வளாகத்தில் அவர் கம்பெனி விஸ்தரிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் வந்து விடுவார் என்றும் சொல்லி இருந்தார்கள்.ஆனாலும் ரேகாவுக்கு எல்லாம் விளங்கி விட்டது. தனது நடத்தைப் பிழையால்தான் அவர் வீட்டை விட்டுப் போய்விட்டார் என்று. இந்த உண்மையை பிள்ளைகளிடமும் சொல்ல முடியவில்லை. ரவிதாசும் நிர்மலாவும் மிகவும் கலங்கிப் போனார்கள். அப்பாவை யாராவது கடத்தி இருப்பார்களோ, அப்படியென்றாலும் இந்நேரம் கப்பம் கேட்டு போனாவது செய்திருக்க வேண்டுமே என்று தவிப்பாக இருக்கின்றது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. போலீசுக்கு தகவல் குடுக்கிறதுக்கும் தாயார் வேண்டாம் என்று தடுக்கிறா. ரேகா நினைக்கிறாள் போலீஸ் வந்தால் அவர்கள் நிட்சயம் வேலைக்காரர், ட்ரைவர்களிடம் அவர் வழக்கமாய் போகும் இடங்கள், கிளப்புகள் என்று விசாரிப்பார்கள். அப்படிவரும் போது தனக்கு மிகவும் அவமானமாய் போய்விடும். மேலும் இது வெளியே தெரிந்தால் வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும். ரவிதாஸ்தான் மூத்த அதிகாரிகளின் உதவியுடன் கம்பெனி நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறான்.ஒரு ரகசிய ஏஜென்ட் மூலமாகவும் தகப்பனைத் தேடிக்கொண்டிருக்கிறான். நிர்மலாவும் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் கம்பெனி வேலைகளிலும் உதவியாக இருக்கிறாள். அன்று கம்பெனியில் வேலை முடிந்து ரவிதாசும் நிர்மலாவும் ஒரேகாரில் கதைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது நிர்மலா அவனிடம் அண்ணா இன்று எங்கள் கம்பெனி வக்கீல் தவராசா இருக்கிறார் எல்லோ அவர் தனது உதவியாளர் என்று ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து அறிமுகப்படுத்தினவர். இனி எங்களது வியாபாரம் சம்பந்தமான எல்லா விடயங்களையும் அவாவிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொன்னவர். அப்படியா ....தவராசா தன்னிடம் ஒருவரை ஜூனியராக சேர்க்கிறார் என்றால் அவர் மிகவும் கெட்டிக்காரராகத்தான் இருப்பார். பேசிக்கொண்டு வரும்போது கார் வீட்டுக்கு வந்து போர்டிகோவில் நிக்கின்றது..........! பார்ப்போம் இனி.......! ✍️- சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஆமாம் அதனால்தான் மூஞ்சி கிழிஞ்சு பல்லு உடைஞ்சு நடமாடுகின்றார்கள்.....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெ: கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே இவன் போல ஒரு கிறுக்கணும் பொறந்ததில்ல யாகு யாகு பண்ணிப் பார்த்தேன் இவனப்போல எந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல நான் டேட்டிங் கேட்டா வாட்சப் பார்த்து ஓகே சொன்னானே ஷாப்பிங் கேட்டா நு-Bயல டாட்காம் கூட்டிப் போனானே மூவி கேட்டேன் எச்சில்பட்ட பாப்பகார்ன் தந்தானே பாவமா நிக்கிறான் கூரையே பிக்கிறான் மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட் மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட் மீட் மை மீட் மை பாய் ப்ரெண்ட் மை ஸ்மார்ட் அன்ட் செக்சி பாய் ப்ரண்ட் ஆ: கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்திலே இவ போல இங்க இன்னொருத்தி பொறந்ததில்ல யாகு யாகு பண்ணிப்பார்த்தேன் இவளப்போல எந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்ல இவ பேட்டிங்காக டின்னர் போன ஸ்டார்டர் நான்தானே ஷாப்பிங் போக கூட்டிப் போன டிராலி நான்தானே மூவி போனா சோக சீனில் கர்ஷீப் நான்தானே பார்க்கத்தான் இப்படி ஆளுதான் அப்படி மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட் மை ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட் மீட் மை மீட் மை கேர்ல் ப்ரண்ட் சோ ஹாட் அன்ட் ஸ்பிசி கேர்ல் ப்ரண்ட்......! ---கூகுள் கூகுள் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னை மறந்ததேன் தென்றலே .......! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.