Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. இப்படி சுமந்திரன் கூறியதாக "தமிழரசு" தன் காணொலியில் கூறுகிறார். கூட்டத்தில் இது தான் நடந்தது என்று தமிழரசு சொல்வதை வைத்து நாம் நம்ப முடியுமா தெரியவில்லை. அப்படிப் பட்ட "சுமந்திரன் லவ்வர்" தமிழரசு😎. அவர் உள்ளூரிலும் இல்லை. இதைப் பற்றி ஏராளன், ஓணாண்டியார் ஏதாவது உள்ளூர் தகவல்கள் தர முடியுமா? அது சரி, வீடியோவில் "பகீர்" எங்கே வருகிறது😂?
  2. இந்த மட்டக் களப்பு சிறையுடைப்பின் போது இன்னொரு கத்தோலிக்க குரு, சிங்கராயர் போல அல்லாமல் தப்பிச் சென்றார். (பெயர் மதுர நாயகம் என நினைக்கிறேன்). அவரைத் தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே அவர் திருச்சபையில் இருந்து விலகி மணவாழ்க்கையினுள் நுழைந்தார் என நினைவிருக்கிறது. வண. சிங்கராயர் அவ்வளவு இலகுவாக தன் குரு நிலையை விட்டு விடவில்லை. அவரை குரு நிலை நீக்கம் செய்த பின்னரும், யாழ் ஆயர் இல்லத்தின் மதிலுக்கு வெளியே (கோவில் வீதி?) இருந்த தெருவில் ஒரு வீட்டில் தனியே வாழ்ந்து வந்தார். அவருடைய அண்ணன் வீட்டிற்கு தனது உடல் நிலை பாதிக்கப் பட்ட கடைசிக் காலத்திலும் அவர் சென்று வாழவில்லை. "பிடிவாதக் காரன்" என்று அவரது அண்ணன் - எங்கள் தந்தையின் நண்பர்- அடிக்கடி திட்டுவதைக் கேட்டிருக்கிறேன்.
  3. ஓம். இரண்டும் வெவ்வேறு சிங்கராயர்கள். ஆ.சிங்கராயர் பற்றிய பதிவுகள் கத்தோலிக்க திருச்சபையின் தளங்களில் தற்போது பெரிதாக இல்லை. "டேவிட்" அல்லது தாவீது அடிகளார் என்று அழைக்கப் பட்ட முன்னைய சிங்கராயரின் வரலாறு தான் இருக்கிறது. நான் நினைக்கிறேன் இருவரும் அமல மரித்தியாகிகள் (OMI) சபையைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், உடைக்கப் பட்டது மட்டக் களப்புச் சிறை. வெலிக்கடைச் சிறை தமிழ் கைதிகள் கொலை நடந்த இடம் (நியூரல் கனெக்ஷன் எப்படி ஷோர்ட் சேர்க்கிற் ஆகிறது பாருங்கள்😂? இதற்குத் தான் "மக்கள் வரலாற்றை" எழுத்தில் வைத்திருக்க வேணுமென்பது!)
  4. வண சிங்கராயர் வெலிக்கடையில் இருந்தார் என நினைக்கிறேன். சிறையுடைப்பின் போது தப்பிப் போக மறுத்தவர்களில் ஒருவராக இருந்தார் என அந்த நேரத்தில் பேசிக் கொண்டார்கள். இது பற்றிய என் நினைவு பிழையாக இருக்கலாம். ஆனால், அவர் மன்னார் சிறையில் சாகவில்லை என்பது உறுதியாக தெரியும். ஏனெனில், வண சிங்கராயர் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர், ஆயுதப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரிக்க ஆரம்பித்தார். வழிபாடுகளின் போது செய்யும் பிரசங்கத்தில் (sermon) ஆயுதப் போராட்டத்தை வெளிப்படையாக ஆதரித்தார் என்பதற்காக வத்திக்கான் அவரை பிரசங்கம் செய்யாமல் தடை (censure) விதித்தது. அவர் தொடர்ந்து செயல்பட்டு, யாழ் மருத்துவ மனைக்கு முன்னால் அலுவலகம் அமைத்து செயல்பட்ட "பாலம்" என்ற சேவை அமைப்பை புலிகளின் சலீம் அவர்களோடு சேர்ந்து உருவாக்கினார். இதன் பின்னர் அவரை முழுவதும் கத்தோலிக்க குரு சேவைகளில் இருந்து நீக்கினார்கள் (defrocking). உள்ளூரில் தியோகுப் பிள்ளை என்ற போராட்ட ஆதரவாளரான பிஷப் இருந்த வேளையிலேயே , வத்திக்கான் (அப்போது ஜோன் போல் II என்ற போலந்துக் காரர் தான் பாப்பரசர்) சிங்கராயரைப் பதவி நீக்கியது. பின்னர் அவர் இயற்கையாக மரணமானார். அவரது மரண வீடு சாதாரணமாக நிகழ்ந்தது.
  5. ஒஸ்லோ பேச்சு வார்த்தையின் போது புலிகளின் பிரதிநிதிகள், இது நீக்கப் பட்ட ஏற்பாட்டைத் தான் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டார்களா? அல்லது இது அப்படியே இருந்ததா?
  6. கந்தையர் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் மட்டும் தான் அங்கே எழுதியுள்ளீர்கள், அதைப் பார்த்த பின்னர் தான் மேல் கருத்தைப் பகிர்ந்தேன். "குறை சொல்கிறார்கள்" என்று குறைப்படும் எவரும் அங்கே வந்து துலங்கல் வைக்கவில்லை! #தொண்டையில் முள்😂!
  7. கந்தையர், அந்த திரியில், தும்பளையானுக்கு பதில் எழுத இயலாமல் ஆட்கள் ஒளித்துத் திரிகிறார்கள்! நீங்கள் தேரை இழுத்துத் தெருவில் விடுவது போல இப்படிக் கேட்டு வெறுப்பேற்றுகிறீர்கள். இது உங்களுக்கே நல்லா இருக்கா😂?
  8. அர்த்தமில்லாத அலட்டல்களை முன்னகர்த்தும் ஒரு நிர்வாகியாக தொடர்ந்து ஆச்சரியம் தருகிறீர்கள்😂. சுமந்திரன் சொன்னதைப் பற்றிய என் கருத்தை நான் நிதானமாக எழுதியிருக்கிறேன். கள உறுப்பினர்கள் எவரையும் நோக்கி என் கருத்து இருக்கவில்லை - அரசியல் வாதிகளை நோக்கி மட்டுமே என் முதல் கருத்து இருந்தது👇. இதற்கு உணர்ச்சி மயப் பட்டு முதல் துலங்கல் வைத்து , இப்போது மிருக வைத்தியர் என்று அவசியமில்லாமல் தொழிலை இழுக்கும் நீங்கள், உண்மையிலேயே நிர்வாகத்திற்குத் தகுதியானவர் என்று நான் கருதவில்லை! அப்படியான மரியாதையை இனி உங்களுக்கு நான் தரப் போவதில்லை!
  9. அவை "சுமந்திரனோடு இந்த லும்பன்களுக்கு தொடர்பிருக்குமா?" என்று தேடுவதில் பிசி😎!
  10. எனக்கு நீங்கள் நேரடியாக பதில் எழுதாமல் விட்டால் "உவர் தனியாகப் பேசுகிறார்" என்று குதூகலம்! எவ்வளவு புத்திசாலியாக இருக்கிறீர்கள்😂!
  11. தீவிர தமிழ் தேசியர்களுக்கு தமிழ் மொழியாண்மை கொஞ்சம் குறைவாக இருப்பதும் ஒரு தனியியல்பாகக் கண்டிருக்கிறேன். முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுவதற்கு தமிழ் நாட்டு சாக்கடை அரசியல் கட்சியை குறிப்பிட வேண்டியது தவிர்க்க இயலாதது! இனியும் தவிர்க்கப் போவதில்லை, எனவே பழகிக் கொள்ளுங்கள்😎!
  12. https://archives.fbi.gov/archives/newyork/press-releases/2012/two-alleged-operatives-of-the-tamil-tigers-terrorist-organization-extradited-to-brooklyn இந்த ஆயுதம் வாங்கப் போய்த்தான், 2006 இல் அமெரிக்க உள்ளூர் புலனாய்வுப் பிரிவின் வலையில் இரு தமிழ் அமெரிக்கர்கள் சிக்கினார்கள்.
  13. தீவிர தமிழ் தேசியர்கள் "உள் முரண்பாட்டின்-cognitive dissonance" முழு வடிவமாக இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். சீமானின் "வாய் வீச்சுக் கட்சியை" தோற்றாலும் கூட தலையில் தாங்கிய படி, உள்ளூரில் ஒரு பழம் பெரும் கட்சி இன்னும் தனியே நிற்பதை "தொண்டையில் முள்" காரணமாகக் கடந்து போகிறார்கள். அதே நேரம், சீமான் "லவ்" மிகுந்து விட்டதால், சராசரிக்கும் கீழான அரசியல் வாதியான சீமானை யாராவது குறை சொன்னால், குறை சொன்னவரைத் தான் தாக்குவர். இது தான் "உச்சா" 😂போகும் செயலேயொழிய, நான் எழுதிய எவையும் அல்ல!
  14. அவரை "உள் வாங்கினார்கள்" என்று ஏன் சொல்ல வேண்டும்? அவராக கல்வியில் உயர்ந்து சட்டத்துறையில் சர்வதேச மட்டத்தில் ஒரு தனித் துறையில் (constitutional law) நிபுணராக வந்தார் (ஹார்வார்ட்டில் fellowship அப்பாவின் பெயரைப் பார்த்துக் கொடுப்பதில்லை). இப்படியானவர்களை தமிழ் சிங்களம் என்று பார்க்காமல் இலங்கைத் தலைவர்கள் தங்கள் நட்பில் வைத்திருந்திருக்கிறார்கள் (பொன்னம்பலம் சீனியர், சிறிமாவின் "கழு புத்தா", எப்படி என்று தேடினீர்களா?). சட்டத்தரணி கனக் ஈஸ்வரன் பற்றிக் கேள்விப் படவில்லையா? அவர் கூட சந்திரிக்காவின் நட்புத் தான். இதற்கெல்லாம் சதித் திட்டம் தேடி, குத்தி முறிந்து...எப்படி நீங்களெல்லாம் யாழ் போன்ற களத்தில் பதவியில் இருக்கிறீர்கள்? ஆச்சரியக் குறிகள்!
  15. இப்ப ஏன் உங்கள் இருவருக்கும் "உச்சியில் கரண்ட்" பாய்கிறது😂? உரிய உதாரணம் என்றால் எந்த நாட்டிலிருந்தும் எடுக்கலாம். இதைத் தடுக்கும் விதிகள் எவையும் இருக்கின்றனவா க.க "நிர்வாகி" நுணாவிலான்😎? தமிழ் நாட்டுக் கட்சி மீள மீள தோற்று டிப்போசிற் இழக்கும் வேளைகளில் "தனிய நின்று இவ்வளவு எடுத்தார்கள்" என்று உச்சி முகர்ந்தவர்கள், தனியாக தமிழரசு , கூட்டை விட வென்றிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுப்பது என்னத்தில் இருக்கும் "வரட்சி"? நிச்சயமாக கருத்தின் வரட்சி இல்லை, அது வேறேதோ "வரட்சி"😂!
  16. சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்? தமிழ் தேசிய பேரவையில், கடந்த தேர்தலில் போட்டியிட சீற் கிடைக்காமல் போனதால் திடீரென்று "தேசிய நரம்பில் கரண்ட்" பாய்ந்தவர்கள்😎 பலர் கூட்டாக நின்றார்கள். தமிழரசுக் கட்சி தனியாக ஒரு கட்சியாக நின்றது. தேர்தலின் பின்னர் கொள்கை ஒத்து வந்தால் சேர்ந்து கொள்ளலாம் என்று முன்னர் சொல்லப் பட்டது போல செய்யலாம். (தமிழ் நாட்டில் ஒரு கட்சி ஒற்றையாக நின்று டிபோசிற் இழக்கும் தருணங்களில், "தனியாக நிக்கிறாங்கள்- அதுவே வெற்றி" என்று வாழ்த்தும் ரசிகர்கள், அதே தியரியை தமிழரசுக்குப் பிரயோகிக்க மாட்டார்களாம்!)
  17. நன்னியருக்கு இன்னொரு அசைன்மென்ற் இருக்கிறது. "அமிரைச் சுட்ட போது குறுக்கே வந்து தடுக்க முயன்ற யோகேஸ்வரனும் பலியானார்"- இது தான் அந்த இடத்தில் தப்பியவர்கள் வெளிப்படுத்தியது. ஆனால், யாழ் களத்திலேயே அமிரோடு சேர்த்து யோகேஸ்வரனையும் (புலிகளின் குண்டு அவரைக் கொன்று விட்டதால்😂) துரோகி என்று எழுதும் "மண்ணு லாறிகள்" இருக்கிறார்கள். அவர்களுக்காக நன்னியர், "யோகேஸ்வரனின் துரோகம்" என்ற ஒரு புதிய தேடலைத் தொடங்க வேண்டுமென்று "புலி வெறுப்பாளர்கள் சங்கம்"😎 சார்பில் கேட்டுக் கொள்கிறேன்!
  18. ஆம். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து, மேலே இருப்பதும் உங்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருப்பது போல😎! மிக அண்மைய உதாரணமாக, தமிழர் நலனில் நீண்டகால அடிப்படையிலான அக்கறை 2002 சமாதான முயற்சியில் தமிழர் தரப்பில் இருந்து வெளிப்படவில்லை என்பதைப் பொது வெளியில் கிடைக்கும் தகவல்களே உறுதி செய்திருக்கின்றன. ஜப்பானுக்குப் போகாமல் விட்டது முதல், மாவிலாற்றை மறித்தது வரையில் இவை எல்லாவற்றையும் பல இடங்களில் எழுதியாகி விட்டது. தலையை மண்ணுக்குள் புதைத்த படி "சே, இவையள் புலி வெறுப்பில் சொல்லுகீனம்" என்பதையும் பல இடங்களில் வாசித்த படி தான் இருக்கிறோம்.
  19. நிமிர்ந்து நின்றவர்கள் மட்டும் தனியே சாகவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்! "போதும்" என்று சமாதானம் பக்கம் போக முயன்ற மக்களும் செத்தார்கள். "சமாதானம் செய்து பார்க்கலாம், முயன்று பார்க்கலாம்" என்று முன் வந்த நீலன் போன்றோரும் செத்தார்கள். இப்போது பெருமையுணர்வு மட்டும் தான் உங்களிடம் எஞ்சி நிற்கிறது. ஒரு மிகப் பெரிய போராட்டத்திற்கு இது ஒரு மிகக் குறுகிய அடைவு நிலை!
  20. இதில் கனேடிய பொருளாதாரம் தவிர்ந்த எல்லாம் செய்யக் கூடியவை அல்லவா? கார்பன் வரியை இல்லாமல் செய்வதாக தேர்தலுக்கு முதலே அறிவித்தாயிற்று (எனவே ஏன் இன்னும் கார்பன் வரி கார்னி என்கிறீர்கள் என விளங்கவில்லை, ட்ரம்பின் பிரச்சார பீரங்கிகள் போலவே "பட்டப் பெயர்" சூட்டும் வேலையென நினைக்கிறேன்😂) கனேடிய குடியேற்றக் கொள்கை வருடா வருடம் மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு திரவ நிலைக் கொள்கை, நீதி மன்றங்களும் தலையிடாது. அதுவும் நடந்து விடும். உட்கட்டமைப்பு, பொருளாதாரம் சார்ந்து, கனடா ஐரோப்பிய யூனியனோடும், மறைமுகமாக சீனாவோடும் ஒத்துழைப்பது தவிர்க்க இயலாதது. இது நடந்து, அமெரிக்காவின் கொண்டையில் சீனா கூடு கட்டும் போது தெரியும் "உலக சமாதான நாயகன்" ட்ரம்பின் "தூர நோக்கு"😂! அந்த நேரம், அல்பேர்ட்டாவை அமெரிக்கா வைச்சிருந்தாலென்ன, கனடா வைச்சிருந்தாலென்ன?
  21. கனடாவில் லிபரல் போலவே, அவுசிலும் தொழிற்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. தம்பு வருவதற்கு முன்னர், இது நடக்காதென நம்பினார்களாம், ஆனால் "அவுஸி ட்ரம்ப்" என்று சிலரால் அழைக்கப் பட்ட பீற்றர் டற்றனுக்கு அந்தப் பெயரே ஆப்பாகி, அவரது தொகுதியிலேயே தோல்வியடைந்து விட்டார். ஈழத்தமிழ் அகதிகள் உட்பட, பல நாட்டு அகதிகளை அவுசுக்கு வெளியே முகாம்களில் அடைத்து வைத்து, சிலர் உயிர்மாய்த்துக் கொள்ளக் காரணமாக இருந்தவர் இந்த டற்றன். சரியான பாடம் கிடைத்திருக்கிறது இவருக்கு. இனி, வேறு நாடுகளில் வலதுசாரிகள் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் ஒரு வழி இருக்கிறது. தம்புக்கு போனைப் போட்டு "உங்கள் ட்ரம்ப் நிதியத்திற்கு நன்கொடை தருகிறேன். என்னையத் திட்டி நாலு வரி உங்கள் ட்ருத் சோசியலில் எழுதி விடுங்கள் மகராசா!" என்று கேட்டுக் கொள்ள வேண்டியது தான்😎!
  22. கந்தையர், தொடர்ந்து உங்களுடன் விவாதிக்க நீங்கள் முதலில் அர்த்தமுள்ள வகையில் பேச வேண்டும். பூனைக்கு சிகையலங்காரம் செய்வது மாதிரியான திரிகளில் எனக்கு ஆர்வமில்லை. உங்கள் லொஜிக்கின் படி புலிகளின் 2002 முயற்சி, ஒஸ்லோ பிரகடனம் (அப்படியொன்று இல்லை என்போரும் உள்ளனர்), 2005 இல் மகிந்த தேர்தலில் வெல்ல மறைமுகமாக உதவியது -இவையெல்லாமே "தண்டனைக்குரிய பிழைகள்". அந்தப் பிழைகளுக்காகத் தான் புலிகள் அமைப்பு தாமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று நீங்கள் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.
  23. அமிர்தலிங்கத்தையும், நீலனையும் "பதவிக்காக அரசியல் செய்தோர்" என்ற ஒரே பட்டியலில் போட முடியுமென நான் கருதவில்லை. தீர்வு விடயத்தில் உதவுவதற்காக தமிழரசு தேசியப் பட்டியலில் நீலனைக் கொண்டு வந்தார்கள். பின்னர் நீலனே இது பயனில்லாத பா.உ பதவி என்று விலகிக் கொண்டார். இந்த வரலாறு தெரியாத கந்தையர் "நீலன் பா.உவாக வரத் துடித்த ஒரு அரசியல்வாதி" என்ற அர்த்தத்தில் மேலே ஒரு கருத்து எழுதியிருக்கிறார். நீங்களும் இதை மறுக்காமல் நீலனைத் தேர்தல், பதவி அரசியல் செய்த ஒருவராக சித்திரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நீலன், புலிகளின் தலைமைக்கு ஈடாக அல்லது அதை விட மேலாக மானசீகமாக, தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முயன்ற ஒருவர் என்பதே என் புரிதல். இதற்கான சில சான்றுகளை ஐலண்ட் முன்னைய திரியில் பகிர்ந்திருக்கிறார் என நம்புகிறேன். நீலன் கொலை விடயத்தில் நான் சொல்ல வேண்டிய எல்லாவற்றையும் நன்னி குறிப்பிட்ட முன்னைய திரியிலேயே எழுதி முடித்தாகி விட்டது. அந்த திரியிலேயே எழுதிய நன்னி, விசுகர் உட்பட்டவர்களின் கருத்தின் படி நீலன் கொலைக்கு ஒரேயொரு காரணம் தான்: "புலிகள் கொன்றார்கள், எனவே அவர் கொல்லப் பட வேண்டியவர் தான். இதைக் கண்டிப்பது, கேள்வி கேட்பது புலிவாந்தி" அம்புட்டு தான்😂. அதை விட, அந்த முன்னைய திரியை அடித்து நூக்க ஒரு பெரிய பொய்யையும் தூக்கிப் போட்டிருந்தார்கள், "நீலன் கொலைக்கு புலிகள் பின்னர் மன்னிப்புக் கேட்டார்கள்" என்று. அப்படியெதுவும் நடக்கவில்லை என்பதை யாரும் அங்கே சுட்டிக் காட்டவில்லை. மொத்தத்தில், நீலன் கொலையை நியாயம் செய்யும் குத்தி முறிதல் என்பது நாம் அடுத்த 100 ஆண்டுகளில் கூட ஒரு உரோமத்தையும் எங்கள் இனப் பிரச்சினையில் பிடுங்கிப் போடப் போவதில்லை எனச் சுட்டும் ஒரு நோய்க்குணங்குறியாகவே (symptom) எனக்குப் படுகிறது.
  24. கஜேந்திரகுமாரை சக தமிழ் தரப்போடு பேச்சு வார்த்தை மேசைக்குக் கொண்டுவரவே ஐ.நா சபை தலையிட வேண்டும் போல இருக்கிறது! இந்த இலட்சணத்தில், இவையெல்லாம் சிங்களத் தலைமையோடு பேசி தமிழர்களுக்கு தீர்வு...ஆகாசக் கோட்டை தான்😂!
  25. விலங்குகளிலும், தாவரங்களிலும் hybrid vigor என்று ஒன்று இருக்கிறது. ஒரே மாதிரியான இயல்புடைய சோடிகளை விட வெவ்வேறு இயல்புடைய சோடிகள் உருவாக்கும் கலப்பின வழித்தோன்றல்கள், சில நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியைக் காட்டும், நல்ல வளர்ச்சியைக் காட்டும், எனவே சந்ததி பிழைக்க உதவும். இது உயிரியல் ரீதியானது. குடியேற்றம், பல்லினத்தன்மை என்பவற்றின் காரணமாக மனித சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மை உயிரியலையும் தாண்டிய ஒன்று: எண்ணங்களின் பல்லினத்தன்மை - diversity of ideas. இது தான் ஐரோப்பாவில் நடந்திருக்கும் என நினைக்கிறேன். ஆக்கிரமிக்கும் எல்லா மக்களையும் முற்று முழுதாகத் தங்களைப் போலவே யோசிக்கும் படி வற்புறுத்தாமல், அவர்களது ஐடியாக்களையும் உள்வாங்கிக் கொண்ட ரோமர்கள் இந்த எண்ணங்களின் பல்லினத்தன்மைக்கு உதவியிருக்கிறார்கள். இதற்கு நேர் எதிரான நிலைக்கு உதாரணம் ஜப்பான். ஒரு ஆய்வில், கடந்த 3000 ஆண்டுகளில் ஜப்பான் நோக்கி மக்கள் குடியேறிய (population influx) சந்தர்ப்பங்கள் இரண்டு தான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். தற்போது கூட நவீன ஜப்பானில் ஒரு தெளிவான குடியேற்றக் கொள்கையோ, அகதி அந்தஸ்துக் கொள்கையோ இல்லை என நினைக்கிறேன். மக்களும் பல்லினம் அல்ல, ஐடியாக்களும் பல்லினத் தன்மையை இழந்து விட்டன. இதன் விளைவு, ஜப்பானின் சனத்தொகையும், பொருளாதார நிலையும் தேங்கி விட்டது. இதன் அடிப்படையில் தான் diversity is a blessing என்று நான் நம்புகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.