Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. "மனித குல எதிரியோடு" சந்திப்பாமா? சரி! இதுக்கு எப்படியெல்லாம் வளைஞ்சு குனிஞ்சு முட்டுக் கொடுக்கப் போறாங்களோ தெரியேல்ல! ஈஸ்ரர் விடுமுறைக்கு பொழுது போகும் போல இருக்கு😂!
  2. இது எந்த நாட்டிலும் இருக்கக் கூடிய சாதாரண நிலை, ஓரளவு செய்தி வாசிக்கும் எவருக்கும் புரியக் கூடிய உண்மை. ஆனால், "திராவிட மொடல் காரணமாக பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை" என்று நிறுவ "சீரமைப்பு" , "போக்கு" என்பன இரு வேறு விடயங்கள் என குத்தி முறியும் நிலைக்கு வந்திருக்கிறார் கடஞ்சா! அவரது தியரியின் மிகப்பெரிய ஓட்டை, இதே IAS அதிகாரிகள் செயலில் இருக்கும் பீகாரில் ஏன் தமிழகம் போல வளர்ச்சி இல்லை? என்பதற்கான பதிலில் இருக்கிறது. இதையெல்லாம் சீரியசாக அணுகுவது நேர விரயம்😂!
  3. அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல, மேற்கு நாடுகளில் பிறந்து வாழும் மக்களுக்கும், வந்தேறி வாழும் மக்களுக்கும் கூட அறியாமை தான் பெரும் பிரச்சினை. அந்த அறியாமையில், "வரலாறு அறியாமை" என்ற பகுதி தான் ட்ரம்ப் மீண்டும் வரக் காரணம். ஆனால், கோசான் ஒரு தடவை சொன்னது போன்ற "பெரும் சேதமுடனான வெற்றி-pyrrhic victory" ட்ரம்ப் விடயத்தில் எங்களுக்குக் கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்: வாக்குப் போட்ட முஸ்லிம் அமெரிக்கர்களின் பலஸ்தீன கூட்டாளிகளுக்கு ஏற்கனவே இந்த "வெற்றிக் கனி" கிடைத்து விட்டது. அதே போல, பச்சை மட்டையில் காத்திருக்கும் இந்தியர்களுக்கும் வெற்றிக் கனி நெருங்கி வருகிறது. சிறிலங்கன் அமெரிக்கன் ட்ரம்ப் விசிறிகளுக்கும் நிச்சயம் சில விடயங்கள் நடக்கும், ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன்😎!
  4. இதன் படி பார்த்தால் "மாநில அரசு" என்பது எங்கள் ஊர் மாநகர/நகர சபை போல "வாய்க்கால் தூரும்" அமைப்புகள் போல படுகிறதே? இன்னொரு சந்தேகம்: இந்த "வாய்க்கால் தூரும்" தமிழ் நாட்டு அரசின் தலைமையை யார் ஏற்றாலும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றாமல் ஈழத்தமிழர் பற்றியகொள்கைகளும் மாறாதே? பிறகேன் மொக்குத் தனமாக நடந்து கொள்ளும் ஒரு சாக்கடை தமிழக அரசியல் வாதியை எங்கள் ஆட்கள் முட்டுக் கொடுத்துத் தாங்குகிறார்கள்😂?
  5. உறவே, தாயகத்தில் என்ன நிலையோ எனக்கு முழுவதும் தெரியாது. ஆனால், புலம் வாழ் தீவிர தேசியர்களிடையே எல்லாம் இன்னும் தாயகத்தில் 30 வருடங்கள் முன்பு போலவே இருக்கிறது: காசுக்கும் (அல்லது அது இருப்பது போன்ற பகட்டிற்கும்) முதல் மரியாதை, ஆண்-பெண் சமத்துவமின்மை, சாதி, சில சூழ்நிலைகளில் சிறு பான்மை மதங்கள் மீதான சகிப்புத் தன்மையின்மை, வந்த இடத்தின் முற்போக்கான பழக்கங்களை வெறுத்தல் (இதனால் சிலர் homophobic, transphobic ஆகவும் மாறி ட்ரம்ப் போன்றவர்களை ஆதரித்தல்!)- இப்படியானவர்கள் புலத்தில் தீவிர தமிழ் தேசியம் பேசுவதே ஒரு status symbol என்று நான் ஐயம் கொள்கிறேன்.
  6. சும்மா பொய்ச் செய்திகளை வைத்து அலட்டிக் கொண்டிருக்காமல் இப்படி "தேவையில்லை" என்று சொல்லப் பட்ட ஆதாரத்தை இணைக்கலாமே?
  7. உங்களைப் போல இளைஞர்கள் இப்படி "முக்கியத்துவம்" வாய்ந்த விடயங்களில் கவனத்தைச் செலுத்துவதால் தான் ஈழத்தமிழர்களின் நிலை இன்று இத்தனை "சிறப்பாக" இருக்கிறது😎!
  8. அப்படி எதுவும் அழிந்து போகவில்லை. இலங்கை தமிழ் சங்க இணையத் தளத்தில் 1977 ஆண்டு த.வி.கூ தேர்தல் விஞ்ஞாபனம் ஆங்கில மொழி பெயர்ப்பில் இன்னும் இருக்கிறது. https://www.sangam.org/FB_HIST_DOCS/TULFManifesto77.htm இதில் இனவாதம் இருக்கிறதா என்பதை வாசகர்கள் வாசித்து அறிந்து கொள்ளலாம்.
  9. தமிழ் குடியேறிகளுக்குப் பிறந்த பெரும்பாலான இரண்டாம் தலைமுறைப் பிள்ளைகள் - நீங்கள் சொல்வது போல அடி விழும் போது- ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியனில் தான் கத்துவர் என்று ஊகிக்கிறேன் (அதுவும் அம்மா/மம்மி/மா என்று கத்தாமல் ஏதாவது கெட்ட வார்த்தையால் தான் கத்துங்கள்😂!). அப்ப இரண்டாம் தலைமுறை தமிழர் அல்ல என்பீர்களா?
  10. 🤣 நான் அறிய, வட அமெரிக்காவில் இது மறு வளமாகத் தான் நடந்திருக்கிறது: சிங்களவர்களைக் கண்டு தமிழர்கள் நடுங்கினர். 2009 போர்க்காலத்தில், மினசோட்டா மாநிலத் தலைநகரில் ஒரு கவன ஈர்ப்புப் போராட்டம் செய்தார்கள் மினசோட்டாத் தமிழர்கள். போராட்டத்தில் ஈடு பட்டவர்களை "சம்பல் றெஸ்ரோரன்ற்" என்ற பெயரில் இலங்கை உணவகம் நடத்திய ஒரு சிங்களவர் வந்து புகைப் படம் எடுக்க ஆரம்பித்தார். ஏற்பாட்டாளர்கள் காவல் துறையை அழைக்க, "அனுமதியில்லாமல் ஆட்களின் முகங்களைப் படம் பிடிக்க முடியாதென" எச்சரித்து, காவல் துறை சிங்களவரை அகற்றியது. அதன் பிறகு நடந்த சில மே 2009 தொடர்பான கூட்டங்கள், கவன ஈர்ப்புகளில் ஒரு காவல் துறை வாகனமும், அலுவலரும் காவலுக்கு நிற்கும் நிலை இருந்தது. கிழக்குக் கரையில், மினசோட்டாவை விட பல மடங்கு ஈழத் தமிழர்கள் வசிக்கும் நகரங்களில், 2009 இற்குப் பின்னரும் மாவீரர் தினம் நிகழும் இடத்தை கடைசி நேரம் வரை இரகசியமாக வைத்திருக்கும் அளவுக்கு சிங்களவரைக் கண்டு தமிழர்கள் அஞ்சினர். இந்த அச்சங்கள் எவையும் இல்லாமல் செயல்பட்ட ஒரு தரப்பும் இருந்தது. அவர்கள் ஒன்று இலங்கையோடு தொடர்பில்லாத ஈழத்தமிழ் அமெரிக்கர்களாக இருந்தனர். அல்லது, தமிழ் நாட்டுத் தமிழர்களாக இருந்தனர். தமிழ் நாட்டுத் தமிழர்களில் பெரும்பாலானோர் பெரியாரிஸ்டுகளாக இருந்தனர், இன்றும் செயல்படுகின்றனர். யாரோ ஒரு தமிழ் நாட்டு அரசியல் வாதிக்கு முண்டு கொடுக்கிறோம் பேர்வழி என்று பெரியாரை தூசித்துத் திரியும் வரலாறு தெரியாத ஈழவர்களுக்கு, இந்தத் தகவல் சமர்ப்பணம்.
  11. இவ்வளவு தரவுகளை ஒற்றைப் பதிவில் தந்திருக்கிறீர்களே? நீங்கள் "வேலை வெட்டி" இல்லாமல் இருக்கிறீர்களா? 😎
  12. "கருணாநிதி வீட்டில் தெலுங்கில் தான் பேசுவார்கள் (இப்போது "ஸ்ராலின் வீட்டிலும் தெலுங்கில் தான் பேசுவார்கள்") 😂 இதெல்லாம் முகநூல் பதிவர்கள் சில ஆண்டுகளாகவே பரப்பி, இப்போது யாழிலும் பரவலாக ஒப்புவிக்கப் படும் வதந்திகள். இதற்கெல்லாம் ஆதாரம் கேட்டால் இன்னொரு யூ ரியூப் குப்பையை இணைத்து விட்டு "தந்து விட்டேன்" என்பார்கள். இதை நம்பி நீங்களும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்பது வேடிக்கை. ஒரு தமிழ் தலைவருக்கு அயல் மாநில மொழி தெரிந்தால் அவர் எப்படி தமிழர்களின் முகத்தில் உமிழ்கிறார்? தமிழர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். தமிழ் மொழியை தன் அரசு மூலம் அவர் வளர்க்கிறார். ஒரு உதாரணத்திற்கு, "பச்சைத் தமிழன்" எடப்பாடியின் ஆட்சியில் ஈயோட்டிக் கொண்டிருந்த தமிழ் மொழி இயக்ககம், ஸ்ராலின் ஆட்சியில் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறது. இதனால் தான் தமிழ் நிலைக்குமேயொழிய "தமிழ் உலகின் முதல் மொழி, பேச்சுக்கு "ஸ்" போட்டு ஸ்பீச் வந்தது" என்று போலி அறிவியல் வளர்க்கும் தரப்புகளால் தமிழ் வளராது! மாறாக கேலிக்குள்ளாகும்!
  13. இந்த அனுபவம் உண்மையாக இருக்கலாம், ஆனால் ஜேர்மனியுட்பட வெளிநாடுகளுக்கு வரும் பெரும்பாலான சிங்களவர்களின் அனுபவம்/பயம் இதுவாக இருக்காதெனக் கருதுகிறேன். என்னுடைய அனுபவத்தில், அமெரிக்காவில் இருக்கும் சிங்களவர்கள் பலர் தமிழர்களின் நண்பர்களாக இருக்கிறார்கள். ஒரு சிலர் யுத்தம் நடந்த காலத்தில், தமிழர்களின் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் என்பவற்றை பொலிசிடம் போட்டுக் கொடுக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள், அதுவும் இப்போது குறைந்து இல்லாமல் போய் விட்டது. மாவீரர் தினம் உட்பட்ட பல நிகழ்வுகளை வெளிப்படையாகவே அனுசரித்து விட்டுப் போகிறோம். இனி ஜேவிபி அரசு ஏதாவது இதை மாற்ற முயற்சிக்குமோ தெரியாது. இலங்கையில் கூட நிலைமை மாறியிருக்கிறது என அறிகிறேன். 90 களில் வடக்கு, கிழக்கில் இருந்து தெற்கிற்கு, கல்வி, வேலை என்பவற்றிற்காக சென்ற தமிழ் இளையோரை அவர்களது பெற்றோர் சிங்களவர்களைப் பற்றி எச்சரித்து அனுப்பிய நிலை இருந்தது - அதற்கு நியாயமான காரணங்களும் இருந்தன. இப்போது, வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்கள், சிங்கள இராணுவம் தியத்தலாவ வளாகத்தில் நடத்தும் தலைமைத்துவப் பயிற்சி முகாமுக்கு, தாமாக விரும்பிச் சென்று வருகிறார்கள். குழுவாக சிங்களப் பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள்.
  14. அப்ப நீங்களும் வேலை வெட்டியில்லாமலா யூ ரியூப், முகநூல் குப்பையெல்லாம் கொண்டு வந்து ஒட்டி யாழ் வாசகர்களை முட்டாள்களாக்க முயல்கிறீர்கள்😂? "வியாபாரக் காந்தம்"😎 என்பதெல்லாம் பொய்யா? பொய்யை எழுதினால் கேள்வி யாரும் கேட்கலாம். இதற்கு பே ஸ்லிப்பெல்லாம் காட்டி எழுதும் படி யாழில் விதி இல்லை. எனவே கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாவிட்டால் மௌனமாகக் கடந்து போங்கள்! அவரவர் வேலை, வெட்டி, நேரம் அவரவர் தனியுரிமை!
  15. வீரகேசரி பிரதி பண்ணிப் போடும் செய்திகளைக் கூட சரியாகப் பிரதி செய்யத் தெரியாமல் தவிக்கிறது. இவ்வளவு குறைவாகப் பத்திரிகைத் தரத்தை வைத்துக் கொண்டு மக்கள் வாசிப்பைக் குறைத்து விட்டனர் என்று குறைப்படுவது சரியல்ல. மேலே செய்தியில் இருப்பது போல நெவார்க் நகரத்தை வாங்கிக் கொள்ளும் ஒப்பந்தமெதுவும் செய்யப் படவில்லை. கைலாசாவின் பிரதிநிதிகளோடு அமெரிக்காவின் நெவார்க் (Newark) நகரம் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது, அது போலி தேசம் என்பது தெரியாமல். இந்த நகரத்தின் மேயர் பராகா (Baraka) - ஒரு முன்னாள் ஆசிரியர், பிரபலமானவர் - இதனால் மிகவும் மொக்கேனப் பட்டார். எதிர்காலத்தில் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடிய நிலையில் இருப்பவர், நிச்சயம் இந்த ஜோக் அப்போது கிண்டப் படும்😂. மேலும், NYT செய்திகளின் படி, இந்த பொலிவியா நில அபகரிப்பை பொலிவியா அரசு தடுத்து சம்பந்தப் பட்ட 20 பேரை நாடு கடத்தியிருக்கிறது. https://www.nytimes.com/2025/04/03/world/asia/united-states-of-kailasa-bolivia.html நான் நினைக்கிறேன், கைலாசா கயானாவில் (Guyana) இருக்கிறது. பொலிவியாவில் நிலம் வாங்குவதற்காக சிஷ்யர்கள் முயன்று அகப்பட்டுக் கொண்டார்கள்!
  16. சரி, அண்ணாமலையின் "உப்பு" முடிந்து விட்டது. இனி இந்த "நைனா" வையும் அழைத்து பிரிட்டன் தமிழர்கள் சாமரம் வீசிக் கௌரவிக்க வேண்டுமா😂?
  17. பெரியாரின் ஒழுக்கம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஒழுக்கம் இல்லாத பெரியாரை முதலில் தலீவராக ஏற்று, பின்னர் ஒரு பெண்ணோடு "காந்தர்வ மணம்" புரிந்த சீமான் ஒழுக்கமுள்ளவரா? அல்லது அவர் உங்களுக்குப் பிடித்த கொடியை ஆட்டுவதால் சீமான் விடயத்தில் "வுட்ரா வுட்ரா" பொலிசியா😂?
  18. உங்களுக்கு மட்டுமல்ல, மீடியாக்களுக்கும் அனுப்பப் படவில்லை. எனவே, இந்தக் கையெழுத்தைத் தான் ஏகேடி ட்ரம்ப் கடிதத்தில் போட்டிருப்பார் என ஊகிக்க இயலாது. அனேகமாக ஆங்கிலக் கையெழுத்தாக இருக்கும், இல்லையேல் ட்ரம்ப் கோவித்துக் கொள்வார்😂!
  19. சீமான் இப்படியான வழக்கை நிச்சயம் வித்தியாசமாகத் தான் கையாண்டிருப்பார். 1. வழக்கைப் போட்டிருக்க மாட்டார். 2. பின்கதவால் ஆளுனரிடம் டீல் பேசி, ஏதாவது செய்ய முயன்றிருப்பார். 3. ஆளுனர் அதை எதிர்த்து வழக்குப் போட்டிருப்பார். 4. நீதி மன்றம் அழைத்தால் போகாமல், ஊர் ஊராக சுற்றித் திரிவார். 5. அழைப்பாணையை வாங்காமையால் அவர்கள் கதவில் ஒட்டினால் "தூள் தூளாகக் கிழித்து" சீமான் குழு ஆணையை வாசிக்க முற்படும்😂. 6. பிறகு வழக்கைத் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் போவார், யாராவது பிரபல வட இந்திய வழக்கறிஞர்கள் உதவுவர்! 7. கேஸ் ஓவர்! Trivia: இதே போல நடந்து கொள்ளும் இன்னொரு பிரபலம் மேற்குலகில் இருக்கிறார், யார் சொல்லுங்கோ பார்க்கலாம்😂?
  20. இதை அனுர பற்றிய விக்கிபீடியா பக்கத்தில் இருந்து எடுத்தீர்களா அல்லது அவர் அமெரிக்காவிற்கு அனுப்பிய கடிதத்தில் இருந்து எடுத்தீர்களா?
  21. "துண்டறிக்கை" கூட வாசிக்கத் தெரியாத ஸ்ராலின் எல்லா மாநிலங்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய ஒரு தீர்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறார்! இதைப் பற்றி "முக்கிய"😎 செய்திகள் எவையும் வெளிவரவில்லையா இன்னும்?
  22. சட்டங்களை இந்தியர்களும் சரி, இலங்கையர்களும் சரி "பரிந்துரைகள் - suggestions" போலத் தான் எடுத்துக் கொள்வார்கள், "கலாச்சாரம்" அப்படி! இதற்கு ஒரே மருந்தை சிறிலங்கா கடற்படை வைத்திருக்கிறது. கைது, நெருக்கடி மிகுந்த நீர்கொழும்பு போன்ற சிறைகளில் தடுத்து வைப்பு, படகுகள் பறிமுதல். இதைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்பதே என் அபிப்பிராயம்! ஒரு கட்டத்தில் , கிடைக்கும் மீனின் பெறுமதி இதற்கெல்லாம் ஈடு அல்ல என்று புரிந்து கொண்டு எல்லை தாண்டாமல் மீன் பிடிப்பர்!
  23. இதைப் பற்றிய நீண்ட உரையாடல் ஒன்று ஓணாண்டியாருக்கும் கோசானுக்குமிடையே நடந்ததே நீங்கள் பார்க்கவில்லையா? இந்தியாவின் கடல் எல்லையைக் கட்டுப் படுத்தும் சட்டங்கள் - எந்த நாட்டிலும் இருப்பது போல- மத்திய அரசின் பாற்பட்டவை. இந்த எளிமையான தரவைத் தூக்கி ஓரம் போட்டு விட்டு, "தமிழ் நாட்டு அரசு எதுவும் செய்யவில்லை, தமிழ் நாட்டு முதல்வர் தமிழில் கையெழுத்து வைக்கவில்லை" என்று தும்பைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்கள்! இப்படி இலகுவாக ஈழத்தமிழர்களை - அதுவும் வெளிநாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களை- மடை மாற்றிப் பேக்காட்டலாம் என்று சிங்களவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் தெரிந்திருக்கிறது😂!
  24. இதைக் கொஞ்சம் தமிழ்நாட்டுத் தெலுங்கர்களை விட ஈழப் பிரச்சினையில் அதிக கரிசனை கொள்ள வேண்டிய ஈழவர்களுக்கும் விரிவாக்கலாம்: ஈழத்தமிழர்கள் "சிங்களவன் அடிக்கிறான், துரத்துறான்" என்று வெளியேறி வந்து ஐரோப்பா, வட அமெரிக்கா என்று குடியேறி, பிள்ளை குட்டி பெத்து, அவர்களை அந்த நாட்டு நாகரீகங்களில் வளர்த்திருக்காமல், உள்ளூரிலேயே இருந்திருந்தால் ஈழவர் பிரச்சினை எப்போதோ தீர்க்கப் பட்டிருக்கும்😎! எனவே, தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கோ, தெலுங்கர்களுக்கோ எப்படி ஈழப் பிரச்சினையைத் தீர்ப்பது என்று சுட்டிக் காட்டும் தகுதி உங்களுக்கும் இல்லை, எனக்கும் இல்லை!
  25. கையெழுத்து ஒரு சட்ட முத்திரை, உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக அதைப் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு கையெழுத்தை வடிவமைப்பது தான் புத்தி சாலித்தனத்தின் அடையாளமேயொழிய தாய் மொழியில் வைக்கிறோமா ஆங்கிலத்தில் வைக்கிறோமா என்பதல்ல புத்திசாலித்தனத்தின் அடையாளம்! இதை வாத்தியார் மேலே ஏற்கனவே சுட்டிக் காட்டி விட்டார். தமிழ் நாட்டில் மும்மொழித்திட்டம் என்ற போர்வையில் இந்தியைத் திணித்து விட எத்தனிக்கும் மோடி, கடிதத்தை வாசிக்காமல் பூனைக்குட்டிக்கு சணலைக் காட்டியது மாதிரி ஸ்ராலினின் கையெழுத்தைக் காட்டி விட்டு அவர் போய் விட்டார்! திராவிட "லவ்வர்ஸ்" அதன் பின்னால் தீவிரமாக ஓடுகிறார்கள் போல இருக்கிறது😎. "தவறை மோடி சுட்டிக்காட்டியிருக்கிறார், அதைத் திருத்த வேண்டும்" என்கிறீர்கள். இப்படிப் பல தவறுகளை சக தமிழன் சுட்டிக் காட்டினாலே "வாந்தி, பூந்தி" என்று கண்டிக்கும் நிலையில் இருந்து முன்னேறியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்👍.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.