Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இணையவன்

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • Joined

Everything posted by இணையவன்

  1. குமாரசாமி புத்தன் ஆகியோருக்கு பிறந்தநாள் (பிந்திய) வாழ்த்துகள்.
  2. தொடர்ந்து எழுதுங்கள். ஈழபிரியன் சொன்னதுபோல் யாரும் சரியாகக் கணிக்க முடியாது. தங்கம் 1730 இல் இருந்து ஏறியபோது எந்த இடத்தில் நுளைவது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தபோதே 5 நாட்களில் 1800 இனை நெருங்குகிறது. மேலும் தொடர முடியாமல் தங்க முதலீட்டை நிறுத்திவிட்டேன். இதற்கும் மேல் சென்று குறைய ஆரம்பித்தால் முதலிடலாம் என்றிருக்கிறேன்.
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருபன்!
  4. பரந்தூரில் இருந்து சென்னை வர 2 மணித்தியாலங்களுக்கு மேல் எடுக்கும். இது மிக அதிகம். பரந்தூரிலிருந்து சென்னைக்கு அதிவேக வாகனப் பாதை அல்லது நேரடி அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட்டால் நல்லது.
  5. தங்கத்தின் மதிப்பீடு அரம்பத்திலிருந்தே உங்கள் கணிப்பு சரியக இருந்துள்ளது. 1700 களுக்கு இறங்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எனது முதலீட்டை ஏறத்தாள முற்றாக் இழந்தேன். 1720 இல் கடைசியான இருப்பை முதலீடு செய்து 1735 இல் விற்று சிறிய இலாபம் பெற்றுக் கொண்டேன். ஆனால் தொடர்ந்தும் முதலிட்டிருந்தால் தற்போதைய 1770 வரை அதிக இலாபம் ஈட்டியிருக்கலாம். நான் 1735 இற்குப் பின்னர் இறங்கும் எனறு ஒரு வாரமாகப் பார்க்கிறேன், ஏறிக்கொண்டே போகிறது. அதிக முதலீடு இல்லாதபடியால் இருக்கும் சொற்பத்தையும் இழக்க விருப்பம் இல்லை. சென்ற வாரம் 70 ஈரோவிலிருந்து ஆரம்பத்தில் நான் செய்ததுபோல் ETF முதலீடு செய்கிறேன்.
  6. பிறந்தநாள் வாழ்த்துகள் (தாமதமான) ஈழபிரியன்.
  7. யாழ் நிற்க வேண்டுமென்ற நோக்கில் யாரும் செயற்படவில்லை. மீண்டும் துளிர்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவலும் நம்பிக்கையும். நிலவின் மறுபக்கத்தைப்போல் யாழின் தொழில்நுட்பம் எமக்குப் புதியது. எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எம்மாலான முயற்சிகளைத் தொடர்வோம். என்றுமில்லாதவாறு யாழில் நாம் எல்லோருமே பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டிய தருணம் இது. பார்க்கலாம்.
  8. இன்று தங்கத்தில் முதலிட சரியான சந்தர்ப்பம் என்பது எனது கருத்து. இப்போது 1827 வலயத்தில் உள்ளது. எனது முதலீடு அனைத்தையும் நட்டத்தில் விற்று மீண்டும் தங்கத்தில் போட்டுள்ளேன். சென்ற வாரம் 1857 - 1827 ஏற்ற இறக்கங்களின்போது குறுகிய trade முறையில் அதிக இலாபம் கிடைத்தது. இப்போது எனது மொத்தக் கையிருப்பு 220 டொலர்கள். ProShares UltraPro பற்றி பின்னர் நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். கடைசி இரு நிரல்கள் > வாங்கியபோது இருந்த நிலை | தற்போதைய நிலை
  9. இன்று பல எதிர்பார்த்த/எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துள்ளது. தங்கம் : காலையில் இறங்கத் தொடங்கியதால் 1830 வந்தால் வெளியேறுவதாகத் தீர்மானித்து பின்னேரம் சிறிய இலாபத்துடன் வெளியேறினேன். ஆனால் இரவு 1855 வரை உயர்ந்துள்ளது. விட்டிருந்தால் பெரிய இலாபம் பார்த்திருக்கலாம். இன்று பங்குச் சந்தை திறந்தபோது ProShares UltraPro இல் நான் ஏற்கனவே எதிர்பார்த்ததுபோல் அமெரிக்க பங்குச்சந்தை மூடுவதற்குமுன் முதல்நாளே வாங்கி வைத்த பங்குகள் சில வினாடிகளில் பாரிய ஏற்றத்தைக் கண்டன. சில நிமிடங்களில் நான் வாங்கிவைத்த (X5) SQQQ பங்கு 5 வீதத்தை எட்டியவுடன் மூடப்படது. SPXU (X5) 4 வீதத்தை எட்டியவுடன் மூடப்பட்டது. 2-3 மணி நேரங்களின் பின் SQQQ 12 வீதத்தினை எட்டியதை அவதானிக்க முடிந்தது. விட்டிருந்தால் மிகப் பெரிய இலாபத்தைச் சில மணி நேரங்களில் எட்டியிருக்கலாம். (பரீட்சார்த்தமாக என்பதால் நான் இந்த இரண்டு ProShares களிலும் முதலீடு செய்த தொகை தலா 10 டொலர்கள் 🙂) இனி நாளைய முதலீடு : இன்று NASDAQ அதி உச்சத்தை அடைந்ததாலும் நாளை வெள்ளிக்கிழமை என்பதாலும் குறுகிய சாதகமான நிலையே இருக்கும் என்று எண்ணினேன். பின்னேரம் வேலை அதிகமாக இருந்ததால் பங்குச் சந்தை மூடுவதற்கு 4 மணி நேரத்துக்கு முனனரே TQQQ, SSO, UPRO (தலா 10 டொலர்கள்) ஆகியவற்றை வாங்கி சிறிய இலாபத்துடன் வெளியேறும்படி செய்துகொண்டேன். எனது கணிப்பை மீறி TQQQ பங்குச் சந்தை மூடப்படுவதற்கு முன்பே நான் நிர்ணயித்த எல்லையை எட்டி மூடப்பட்டு விட்டது. மீதி இரண்டும் நான் வெளியேற வேண்டிய வீதத்துக்கு அண்மையில் உள்ளன. நாளை என்ன நடக்கும் என்று தெரியும். இந்த நிலையில் தங்கத்தில் தற்போது முதலீடு செய்வதாக இல்லை.
  10. இன்று காலை மறுபடி 1828 ற்கு வந்தபோது வாங்கி 1833 இல் வெளியேறினேன். இப்போது மீண்டும் இப்போது 1023 வந்தபோது வாங்கிவிட்டேன். ஆனால் 1820 இனைத் தாண்டி இறங்கிக் கொண்டிருக்கிறது. NASDAQ இறங்கிக் கொண்டிருப்பதால் நேற்று ஊகத்தின் அடிப்படையில் முதலிட்ட ProShares UltraPro சரியாக இருக்கும். 🙂
  11. கசப்புத் தானே பாகற்காயின் தனித்துவமான சுவை ! கசப்பு இல்லாமல் பாகற்காய் சமையலா ?
  12. இன்று பின்னேரம் தங்கம் 1828 இனை அடைந்தவுடன் விற்று ஓரளவு இலாபம் எடுத்துவிட்டேன். நான் மூடியபின் 1835 வரை போனது. ProShares UltraPro இனைப் பரீட்சிப்பதற்காக அமெரிக்க பங்குச்சந்தை திறப்பதற்கு 1 மணிநேரத்துக்கு முன் TQQQ, UPRO அகியவற்றில் மிகக் குறைந்தளவு பங்குகள் வாங்கினேன். காலையில் NASDAQ சாதகமான நிலையில் இருந்ததால் நிச்சயமாகக் கூடும் ஆனால் எப்போது எனது முதலீடு அதற்குள் சேரும் என்பதைப் பார்க்கவே இந்தப் பரிசோதனை. பங்குச் சந்தை திறந்தவுடன் 5 வினாடிகளில் TQQQ 3 வீதத்தைத் தாண்டியது. எனது பங்கு 20-30 வினாடிகளுக்குப் பின்னரே எனது முதலீடு சேர்த்துக் கொள்ளப்பட்டது. 2 மணி நேரத்துக்குப் பின் குறைந்த இலாபத்துடன் வெளியேறினேன். பின்னர் NASDAQ 2.5 வீதம் கூடியபோது TQQQ 12 வீதத்தைத் தாண்டியது. இரண்டாவது பரிசோதனை, இன்று பங்குச் சந்தை மூடமுன்னர் SQQQ கொஞ்சம் வாங்கியுள்ளேன். NASDAQ நாளை குறையலாம் என்ற எதிர்பார்ப்புடன். இது தரவுகளின் அடிப்படையான எதிர்பார்ப்பு அல்ல, ஊகம் மட்டுமே. நாளை பார்க்கலாம்.
  13. ஆம். ஏனைய முதலீடுகளை இழப்புகளுடன் விற்றுவிட்டு இன்று பின்னேரம் (ஐரோப்பா) 1818 ஆக இருந்தபோது முதலிட்டேன். இப்போது 1808 இல் உள்ளது. பார்க்கலாம். நீங்கள் முன்னர் பல தடவைகள் குறிப்பிட்டதுபோல் மேலும் குறையலாம். சிறிய இலாபம் வந்தால் விற்பதாக உள்ளேன்.
  14. கடஞ்சா, வசி உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. கீழுள்ள படங்கள் நேற்றும் கடந்த வெள்ளியும் எடுத்தவை. முதலாவதில் சிவப்பு, நீல அடையாளங்களால் சோடிகளாகக் காட்டியிருப்பவை NASDAQ மற்றும் SPX500 ஆகியவற்றுக்கு நேரானதும் எதிரானதுமானவை. NASDAQ எவ்வளவு இறங்குகிறதோ அதற்கு எதிராக SQQQ பல மடங்கு ஏறுவதைக் கவனிக்கலாம். இதில் பிரச்சனை என்னவென்றால் இவை திறக்கும் நேரம் ETF பங்குச் சந்தையின் நேரமாகும். SQQQ இனை உதாரணத்துக்கு எடுத்தால், NASDAQ இரவு முழுவதும் திறந்திருப்பதால் அதன் ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து SQQQ இன் பெறுமதி தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருந்தாலும் update செய்யப்படுவதில்லை. ETF சந்தை திறக்கப்பட்ட சில வினாடிகளில் update செய்யப்படும். இதன்போது SQQQ இன் பெறுமதி திடீரென 5 - 10 வீதங்களுக்கு உயர்ந்துவிடும். இந்த இடத்தில்தான் பெருமளவு இலாபம் பார்க்கலாம். NASDAQ இன் தற்போதைய பெறுமதி தெரிந்திருந்தாலும் update செய்யப்படும் சில விநாடிகளுக்குள் SQQQ இனை வாங்க முடியாது. முன்னைய நாள் நிலவரத்தை வைத்துக் கணிப்பீடு செய்து முதல்நாளே பங்குச் சந்தை பூட்டப்படுமுன் இப் பங்குகளை வாங்குவதுதான் ஒரே வழி.
  15. இன்று 3 வீதம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தங்கத்தில் முதலிட இது சரியான தருணமாக இருக்கலாம். நாளை காலை பார்த்துவிட்டு மீதமுள்ள கைய்யிருப்பை ஒன்றாக்கி முதலிடலாம் என்று எண்ணியுள்ளேன்.
  16. இன்று மிக மோசமான நிலை. பொதுவாக எதுவுமே சாதகமாக இல்லை . நேற்று அடைந்த இலாபத்தைவிட அதிகம் இழந்துள்ளேன். Bitcoin 12 வீதம் சரிந்து 23000 டொலர்களை அண்மிக்கின்றது. ஆனலும் ProShares UltraPro வில் அரைவாசியானவை (UVXY +14%, SQQQ +10%, SPXU +8%) உயர்ந்துள்ளன.
  17. வணக்கம் வாத்தியார். சரி செய்தாயிற்று. 🙂 வணக்கம் ரதி, இப்போது சரி 🙂
  18. இன்று காலையில் தங்கம் மேலும் கீழே இறங்கியது. என்ன கரணமோ பின்னேரம் திடீரென உயர ஆரம்பித்தது. 15 - 20 நிமிட இடைவெளிகளில் 5 தடவை trade செய்து ஒன்றரை மணிநேரத்தில் எனது கையிருப்பை 160 இலி இருந்து 190 ஆக உயர்த்திக் கொண்டேன். 🙂 ProShares UltraPro பற்றி யாருக்காவது தெரியுமா ? இவற்றுக்கும் Forex ற்குமான சமன்பாடுகளை அறிந்து கொண்டால் சுவாரிசியமானதாகத் தெரிகிறது.
  19. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் குறுகிய trade முறையில் தங்க முதலீட்டில் சற்று இலாபம் கிடைத்தது. தங்கத்தில் நீண்டகால முதலீட்டுக்கு இப்போது சரியான சந்தர்ப்பம் என்று நினைக்கிறேன்.
  20. நன்றி வசீ. ஆரம்ப முதலீட்டாளர் என்பதால் எனது stop loss இனை 50% க்குக் கீழ் குறைக்க முடியாது. 🙂 forex கடினமனதுதான். கண்ணில் எண்ணை விட்டு எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
  21. நன்றி சுவி அண்ணா. குறைந்த முதலீடாக இருந்ததால் அதி கூடிய றிஸ்க் எடுத்தேன். பங்குச் சந்தை அதிஸ்டச் சீட்டு வாங்குவது போல் அல்ல என்பதை இதனுள் நுளைந்தவுடனேயே புரிந்து கொள்ளலாம். புதிதாகப் பங்குச் சந்தையில் இணைபவர்களில் 10 இல் 2 பேர் மட்டுமே நின்றுபிடிப்பதாகக் கூறினார்கள். அந்த 2 பேரில் நானும் இருக்கக் கூடாதா என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் பெற்றுக் கொண்ட அனுபவங்களுடன் ஆறுதலாக மீண்டும் புதிய முதலீட்டுடன் இறங்க உத்தேசித்துள்ளேன்.🙂
  22. இந்தத் திரி தந்த ஊக்கத்தினால் 700 ஈரோக்களுடன் அனுபவத்துக்காக 3-4 மாதங்களுக்கு முன்னர் நானும் பங்குச் சந்தையில் இறங்கினேன். பங்கு நிறுவனங்களின் தவணை நிதி அறிக்கைகளை ஆராய்வதும் அறிக்கை வெளியாவதற்கு முன்கூட்டியே குறைவான விலையில் பங்குகளை வாங்குவதுமாக ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நல்ல இலாபம் கிடைத்தது. பின்னர் NASDAQ, CAC40, DAX40 போன்றவற்றில் அதிக இலாபம் அடையலாம் போல் தெரிந்தது. சில வாரங்களிலேயே 1500 ஈரோக்களை எட்டிவிட்டேன். உக்ரெய்ன் போர் ஆரம்பித்தபோதுதான் வீழ்ச்சி ஆரம்பமானது. ஒரே நாளில் 300 ஈரோக்களை இழந்தேன். பின்னர் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. படிப்படியாகக் குறைந்து 300 ஈரோவுக்கு வந்தது. 4 நாட்களுக்கு முன்னர் எல்லவற்றையும் சுருட்டி தங்கத்தில் முதலிட்டேன். இன்று எல்லாம் இழந்து 90 ஈரோவில் நிற்கிறது. 🤣 நான் பெற்றுக் கொண்டது நல்ல அனுபவம். ஆனால் உங்களைப்போல் சந்தை எதிர்காலத்தை ஆய்வு செய்ய முடியவில்லை.
  23. விளக்கத்துக்கு நன்றி வசி. நிச்சயமாக ஒரு சில நாளில் 1900 இனைத் தாண்டிவிடும் என்றே உறுதியாக நம்பினேன். இருந்தாலும் 1300 வரை இறங்கும் என்பதையும் நம்பக் கடினமாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.