Everything posted by இணையவன்
-
ரஷ்யாவுக்குள் புகுந்து முன்னேறும் யுக்ரேனிய ராணுவம் - போர்க்களத்தில் என்ன நடக்கிறது?
உண்மை. இதோ இன்றைய ரஷ்ய உத்தியோகபூர்வ அறிக்கை. https://fr.mil.ru/fr/news_page/country/more.htm?id=12525036@egNews இதன்படி ஊடுருவிய உக்ரெய்ன் படைகளின் இறுதிக் கணங்கள் எண்ணப்படுகின்றன. 2030 உக்ரெயின் படையினர் 35 தாங்கிகள் உட்பட 300க்கும் அதிகமான கவச வாகனங்கள், ஆட்டிலறிகள் அழிக்கப்பட்டுள்ளன. முதலில் 1000 படையினர் என்று குறிப்பிட்டாலும் பின்னர் இறந்த படையினரின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது குறைந்தது 4000 படையினராவது ஊருருவி இருக்க வேண்டும். இத்தனை ஆயிரம் படையினர் ஆயுத உணவு மருத்துவ வழங்கல் மற்றும் நீண்டதொரு ஆயத்தப்படுத்தல் இல்லாமல் நுளைந்திருக்க முடியாது. ரஷ்ய உத்தியோகபூர்வ அறிக்கையின்படி குறைந்தது 50 தாங்கிகளும் 500 கவச வாகனங்களும் உள்ளே நுளைந்துள்ளன எனக் கணிக்கலாம். இத்தனை பாரிய படையணி ஒன்று தனது நாட்டுக்குள் நுளைவதை உலகின் இரண்டாவது இராணுவமும் சக்திவாய்ந்த அதன் உளவுத் துறையும் வேடிக்கை பார்த்தனவா என்று கேட்கக் கூடாது. தந்திரோபாய நடவடிக்கையாக இருக்கலாம். 😎
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இராணுவ அமைச்சக அறிக்கை - பிரெஞ்சு மொழியில். ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் அந்த மொழியிலும் வாசிக்கலாம். https://fr.mil.ru/fr/news_page/country/more.htm?id=12524497@egNews இன்றைய அறிக்கையின்படி ஊடுருவிய 945 உக்ரெயின் இராணுவத்தினர், 102 கவச வாகனங்கள், 12 தாங்கிகள் உட்பட பல ஆயுதங்களையும் ரஷ்ய படைகள் அழித்துள்ளன. ஆரம்ப தகவல்களின்படி ஊடுருவிய உக்ரெயின் இராணுவத்தினர் ஏறக்குறைய முற்றாக அழிக்கப்படு விட்டனர். 🙂
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஊடுருவிய 660 உக்ரெயின் இராணுவத்தினரையும் 82 கவச வாகனங்களையும் தாம் அழித்து விட்டதாக ரஷ்ய இராணுவ அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
-
பிரித்தானியாவின் பல நகரங்களில் கலவரம்: பொலிஸார் மீது தாக்குதல், சொத்துகளுக்கு சேதம்
வெளிநாட்டவருக்கு எதிரான வலதுசாரி பிரிடிஷ் தமிழருக்கும் பிரெக்சிட் வேண்டும் என்று தலைகீழாக நின்ற தமிழருக்கும் விசேட சலுகை வழங்கப்படதா ? இந்த குறூப் இப்போது எந்தப் பக்கம் நிற்கிறது என்பதையும் அறிய ஆவல்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
சென்ற வாரம் 70000 டொலர் பெறுமதியில் இருந்த பிட்கொயின் இன்று அதிகாலை 49000 டொலர் வரை இறங்கியுள்ளது. இந்த வருட இறுதியிலாவது ஒரு இலட்சம் டொலரைத் தாண்டும் என்றார்கள். யாராலும் எதிர்வு கூற முடியாத நிலையில்லாத பெறுமதியுடைய பிட்கொயின் எவ்வாறு வர்த்தக பணமற்று நாணயமாக ஆக முடியும் என்று புரியவில்லை. XRP யும் இதே மாதிரித்தான், இன்று 0.46 டொலர் போகிறது.
-
ஒலிம்பிக் விளையாட்டு விழா 2024 செய்திகள்
எல்லா நாடுகளிலும் ஒலிம்பிக் விளையாட்டு நடக்கும்போது வெளிநாட்டிலிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் அவர்களுடன் வரும் பயிற்றுனர்கள் சேவையாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் வரவேற்புப் அன்பளிப்புப் பொதிகளில் ஆணுறைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். இது உடலுறவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் முன்னேற்பாடே. ஆண்களுக்கு மட்டுமன்றி எல்லாப் பெண்களுக்கும் வழங்கப்படும்.
-
5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
மேற்குறித்த செய்தியில் சீனாவில் செய்யப்பட்ட Telemedicine அறுவைச் சிகிச்சை புதிதல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளேன். இந்தியா சீனாவுக்கு முன்பே இதைச் செய்ததால் சீனா இந்தியாவிடம் பிச்சை எடுக்க வேண்டுமா ? ஒவ்வொரு நாடும் தம்மால் முடிந்த அளவு முன்னேறி வருகிறது. பிச்சை எடுப்பது பற்றி நீங்கள்தானே எழுதியுள்ளீர்கள் ?
-
யாழில் ஒன்றரை மாத குழந்தை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை – தாயாா் கைது!
முற்றிலும் ஆதாரமற்ற மூட நம்பிக்கை என்று நினைக்கிறேன்.
-
5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
Telemedicine அறுவைச் சிகிச்சைகள் பல வருடங்களுக்கு முன்பே பல நாடுகளிலும் வெற்றிகரமாகச் செய்யப்பட்ட ஒன்று. இந்தியாவிலும் 2018-19 இல் இதய அறுவைச் சிகிச்சை 25 கிமீ தொலைவிலிருந்து செய்யப்பட்டது. இதற்குப் பாவிக்கப்படும் இணைய வலையமைப்பு 5ஜி ஆக இருந்தாலென்ன 10ஜி ஆக இருந்தாலென்ன சிகிச்சை முறை ஒன்றுதான். இது போலத்தான் தூரமும் 5 கிமீ இடைவெளியும் 5000 கிமீ இடைவெளியும் ஒன்றுதான்.
-
யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு
அநாவசியமான பண விரயம். இதனைப் பராமரிக்கவும் செலவு அதிகம். 266 மில்லியன் டொலருக்கு மிகக் குறைவான செலவில் மழை நீர்த் தேக்கம் ஒன்றை அமைத்திருக்கலாம். வெற்றிலைக்கேணி பகுதியிலுள்ள குடா நீர்த்தேக்கத்தைச் சுத்திகரித்து அணை கட்டி மழை நீரைச் சேமிக்க முடியாதா ?
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
சிங்கம் வந்தாலும் இஸ்ரேல் பிரச்சனை இஸ்ரேலுக்கு ஆதரவாகத்தான் இருக்கும் போலுள்ளது. கமலா இஸ்ரேலியர்களுக்கு எதிரானவர் என்று பிரச்சாரம் செய்து யூதர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறார்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ஹெஸ்புல்லாவின் கொமாண்டோவான Fouad Chokr என்பவரை லெபனானின் தலைநகரில் நடத்திய தாக்குதலில் தாம் கொன்றுள்ளதாக இஸ்ரெயில் அறிவித்துள்ளது. இவர் கடந்த சனி இஸ்ரெயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பானவராகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தீவிர வலதுசாரிகளின் ஆட்சியை கைப்பற்றும் கனவு கலைந்தது - பிரான்சில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றி
பிரான்சில் தீவிர வலதுசாரிகளுக்கு வெற்றி கிடைத்திருந்தால் அது ஐரோப்பிய நாடுகளுடையே ஒரு அச்சுறுத்தலாகவே அமைந்திருக்கும். இது அவர்களுக்கு மக்களால் வழங்கப்பட்ட மிகப் பெரிய சாட்டையடி. 240 இடங்களுக்கு மேல் எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் 143 இடங்களே கிடைக்கப்பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டனர். தேர்தல் நெருங்கிவர மக்கள் இவர்களின் உண்மையான முகத்தை உணரத் தொடங்கினர். மக்றோனின் 64 வயது ஓய்வூதிய எல்லையைக் கலைத்து 60 வயது ஆக்குவோம் என்றனர். ஆனால் படிப்பு முடிந்து 23 வயதுக்கு பின் வேலையில் சேர்பவர் 66 வயதுவரை வேலை செய்ய வேண்டும் என்பதை மறைத்தனர். 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு வருமான வரிக் குறைப்பு செய்வோம் என்றனர். ஆனால் 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பத் தலைவர்கள் அதிக வரி கட்ட வேண்டுமென்பதை வெளிப்படுத்தவில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும் துன்பத்திலுள்ள எமதருமை பிரெஞ்சு மக்களுக்காக… என்று பதிலளிக்கும் இவர்களின் திட்டங்கள் யாவும் பணக்காரர்களுக்கே மறைமுகமாகச் சார்பானதாக இருந்தன. பெயரளவிலேயே பெண்களுக்கான சமவுரிமை மேம்படுத்தல் திட்டங்கள் இருந்தன. ஊனமுற்றவர்கள் என்ற சொல்லே இவர்களது விஞ்ஞாபனத்தில் இருக்கவில்லை. கக்கூஸ் துப்பரவு செய்ய கருப்பு தோல் வேண்டும். உயர் பதவிகளுக்கு மண்ணின் மைந்தர்களான வெள்ளைத்தோல் வேண்டும் என்பது இவர்களது வெளிப்படையான கொள்கை. இக் கட்சிகளின் கூட்டமைப்பில் உள்ள வேட்பாளர்களின் நடத்தை பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டபோது, 300 வேட்பாளர்களில் 4 அல்லது 5 பேர் தவறு செய்தவர்களாக இருப்பது சகஜம், விசாரிப்போம் என்று கட்சித் தலைவர் தெரிவித்துருந்தார். இன்றைய ஒரு செய்தியின்படி சிறுவர் பாலியல் குற்றவாளி, பணயக் கைதியாக ஒருவரைப் பிடித்து தண்டனை கிடைத்தவர் போன்ற குற்றவாளிகள் முதல் கறுப்பினத்தவர் ஒருவரை மிருகத்துடன் ஒப்பிட்டு படம் போட்டவர், நாசிகளின் சின்னத்துடன் முகப்புத்தகத்தில் படம் போட்டவர் வரை 26 பேர் இக் கட்சியில் வேட்பாளர்களாக உள்ளனர். இதுதான் தீவிர வலதுசாரிகளின் உண்மையான முகம்.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
நியாயம், மேலே உள்ள செய்திகள் வீரகேசரி, உதயன் மற்றும் தினக்குரல் செய்தித் தளங்களிலிருந்து இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் குறிப்பிட்டதுபோல் தமிழ்வின் செய்தியை யாரும் நிரூபிக்கத் தேவையில்லை. செய்தியின் பிரகாரம் இதற்குப் பொறுப்பான ஆறுதிருமுருகனும் அவர் சார்ந்த சிவபூமியுமே இங்கு கண்டனத்துக்கு உள்ளாகியதே தவிர சிறுவர் விடுதியின் அவசியம் பற்றியதல்ல. சிவபூமி பற்றிய விமர்சனங்களில் எதுவித மாற்றமுமில்லை. அது தவிர உங்கள் இரு கருத்துக்களிலும், நடைபெற்ற சம்பவத்தை - அது சட்டப்படி குற்றம் என்று தீர்க்கப்படாவிட்டாலும் கூட, இம்மியளவும் கண்டிக்கவில்லை என்பதையும் கவனியுங்கள். நன்றி.
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
சிவபூமி - சிவசேனை இரண்டும் ஒரே குட்டைகள். இதற்கும் முட்டுக் கொடுக்க ஆட்கள் உள்ளனர்.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
மதச்சார்பற்ற நாட்டில் கத்தோலிக்க பாடசாலை இருக்க கூடாதா ? எனது மகளும் கத்தோலிக்க தனியார் பாடசாலையில்தான் படிக்கிறாள். எந்த வகுப்பிலும் கத்தோலிக்க பாடமோ மதம் சம்பந்தமான சின்னங்களோ கிடையாது. மதம் பற்றிப் பேசுவதும் இங்கு தடை. கத்தோலிக்க பாடசாலையாக இருப்பதால் சிலவற்றில் பாடசாலை நேரம் தவிர்ந்த வேளைகளில் பாடசாலைக்குத் தொடர்பில்லாத வகையில் அருகிலிருக்கும் தேவாலையத்திலோ அல்லது தனிப்பட்ட கட்டடத்திலோ சமய வகுப்பு உண்டு. இதில் விரும்பியவர்கள் மட்டும் சேரலாம். இந்தச் சமய வகுப்பு பற்றிக் கூட பாடசாலை மூலம் அறிவிப்பதில்லை.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
அமெரிக்கா தவிர்ந்து எந்தெந்த நாடுகள் மதச் சார்பானவை என்று பட்டியலிடுங்கள் பார்க்கலாம். பிரான்சில் அரசியலில் அல்லது பாடசாலை உட்பட எந்தவொரு பொது வெளியிலும் மதம் தலையிடுவது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான மேற்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் மதத்தை நம்புவதில்லை. சீனா சரி. ரஷ்யா பற்றி உங்களுக்குத் தெரியவில்லை போலுள்ளது. புதினே ரஷ்யாவைக் கடவுளே ஆட்சி செய்வதாகக் கூறியுள்ளார். இதனுடன் வடகொரியாவையும் சேர்த்திருக்கலாம். எதிர்க்கட்சி இல்லாத அரசியல் எப்படி இலங்கைக்குச் சாத்தியமாகும் என்பதை விளக்குங்கள். இதைவிட நான் சச்சியின் ஆதரவாளர் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கலாம்.
-
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை பெறும் தீவிர வலதுசாரிகள் - அதிபர் மக்ரோங்குக்கு என்ன சிக்கல்?
அவை என்னவென்று கூறுங்கள் தெரிந்து கொள்கிறோம் 🙂 மக்றோனின் கட்சி இரண்டாம் சுற்றுத் தேர்தலில் போட்டியிடுவது வெல்வதற்காக அல்ல என்பதுகூடத் தெரியவில்லை போலுள்ளது.
-
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
மதத்தின் பெயரால் தமிழர்களிடையே பிரிவினைகளை உருவாக்கியும் பௌத்த ஆக்கிரமிப்புக்கு ஆதரவும் தரும் சச்சிதானந்தம் போன்ற கீழ்த்தரமானவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டும். தமிழருக்குத் தேவையானது மதமோ கடவுளோ அல்ல.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஈழபிரியன்.
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
நான் எழுதியதை வாசித்துவிட்டு விளங்காமல் கேட்கிறீர்களா அல்லது வாசிக்காமலே கேட்கிறீர்களா என்று புரியவில்லை. ஏனென்றால் இந்தக் கேள்விக்கு நான் மேலே எழுதிய பதிலைத்தான் மறுபடி எழுத வேண்டும். ஏன் விளையாடுகிறது என்று புரியும்படிதானே எழுதியுள்ளேன். தனிநபர் தாக்குதலிலேயே குறியாக இருக்காமல் பொஸ்னியா, கொசோவோ ஏன் விளையாடவில்லை போன்ற மலினமான கேள்விகளுக்கு இணையத்தில் சாதாரண தேடலின் மூலமே பதில் கிடைக்குமே, பொது அறிவையும் வளர்க்கலாம். 🙂
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
பரிதாபத்தில் உக்ரெயின் விளையாட அனுமதிக்கப்படவில்லை. ரஷ்யா கிறிமியை ஆக்கிரமிப்பதற்கு முன்பிருந்தே உக்ரெயின் யூரோ கிண்ணத்தில் விளையாடுகிறது. 1993 இன் உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விருப்பத்தைத் தெரிவித்திருந்தது. 1994 இல் ஐரோப்பாவுடனான பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்தது. அது மட்டுமின்றி புவியியல் ரீதியாகவும் ஐரோப்பாவுடன் நெருங்கி இருப்பதால் அனுமதிக்கப்பட்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுளைய முயன்று தோல்வியுற்ற துருக்கியும் விளையாடுவதைக் கவனியுங்கள். இன்று முதல் உக்ரெயின் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான வழிமுறைகுள் 27 நாடுகளின் ஒப்புதலுடன் நுளைவதால் துருக்கி போலவே உக்ரெயினுக்கும் யூரோ கிண்ணத்தில் விளையாட உரிமையுள்ளது.
-
நீண்ட நெடிய இடைவெளிக்கு பிறகு உறவுகளுக்கு வணக்கம்!
மிக்க மகிழ்ச்சி, வாருங்கள் சுண்டல். (பழைய சுண்டலை வேண்டுமானால் தேடித்தர முடியும் 🙂)
-
"கலங்காதே மகனே"
அருமயானதொரு கருப்பொருள். நாம் இழந்ததை அல்லது தோல்வியை இழப்பை நினைத்து வருந்துகிறோம். அதைக் கடந்து வர வேண்டும்.
-
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
நல்ல தீர்ப்பு. இவர்கள் குடும்பத்துக்கே அவமானம். புதிதாக இவர்கள எந்தத் தவறும் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக ஏழை மக்களை வருத்தி வேலை வாங்குவது இந்திய பணக்காரர்களுக்குச் சாதாரண விடயம். சக மனிதரை மதிக்கத் தெரியாதவர்கள். தனக்குக் கீழ் உள்ளவரை மிதிப்பதூம் மேலுள்ளவர்களுக்குப் பணிந்து போவதும் கலாச்சாரத்தில் ஊறிய ஒன்று. பிரான்சில் சில வருடங்களுக்கு முன் பிரான்சிலுள்ள இந்திய தூதரகத்தில் வேலை செய்த பணிப்பெண் ஒருவர் அவர்கள் செய்த கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து வெளியே வந்து தனக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படுத்தியிருந்தார். இவரும் சரியான தூக்கமின்றி ஒரு நாளைக்கு 16 மணித்தியாலம் வேலை செய்துள்ளார். உலகிலுள்ள ஏனையவர்களும் இத் தீர்ப்பைப் பார்த்து ஓரளவாவது அறிவு பெறட்டும்.