-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள். அப்பாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
நீண்டநாட்களின் பின் இன்றுதான் இத் திரி கண்ணில் பட்டது. தமிழ்சிறி குணமாகி மீண்டும் வேலைக்கு போவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி. உறவுகள் அனைவரும் உங்கள் நலனுக்காகப் பிராத்தித்தார்கள். உங்கள் உடல் நலனில் கவனமுடன் தொடர்ந்து வேலை செய்யுங்கள்.
-
தையல்கடை.
சுவி இன்றுதான் நீண்டநாட்களின்பின் யாழை எட்டிப் பார்க்க நேரம் கிடைத்தது. தையல் கடையை முழுவதுமாக ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நானும்தான் வீட்டில் தைத்துக் கிழிக்கிறேன். நாம் எவ்வளவுதான் தைத்துக் கிழித்தாலும் எழுதிக்கிழித்தாலும் உங்களுக்கே உரிய தனித்துவமான நகைச்சுவையுடன் கூடிய எழுத்தாற்றல் எமக்கு வராது. எம்மைச் சுற்றி நடப்பனவற்றை மிகவும் கூர்ந்து அவதானித்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து ஆக்கங்களை தாருங்கள் பாராட்டுக்கள்.
-
எழு எல்லாம் இயலும்
பாடல் வரிகளும் காட்சியமைப்பும் இசையும் குரலும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள் கோபி.
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
கடற்கரையும் காதல்கதையும் மிக அழகான வர்ணனைகளும் மிக அருமை தொடருங்கள் புங்கை.
-
காவலூர்க் கனவுகள்
நன்றிகள் சுவி. முன்பெல்லாம் பல தடவைகள் சென்று பார்க்கக்கூடியதாக கடல் கோட்டை இருந்தது. பின்பு கடற்படையின் கட்டுக்காவல்களை மீறி நாம் எமது கடற்கரைக்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள்
-
இனி இளவேனில் காலம் - நிழலி
ஆகா அற்புதமான கவிதை. நீண்ட நாட்களின்பின் இன்றைய காலநிலையை அனுபவித்து வெளியே சென்ற நடைப்பயிற்சி செய்து வந்தேன். இந்த இளவேனிலுடன் எம் இன்னல்கள் மறைந்து இலைதுளிர்காலம்போல் எம் வாழ்வும் துளிர்க்க உங்கள் கவிதை இளவேனிலை வரவேறகிறது. நிழலியின் கவிதை அருமை.
-
சமூகமும் ஓட்டமும்
தொடருங்கள் விசுகு
-
லொக்டவுண்
சில சமயங்களில் சட்டத்திற்கு அமைந்து நடக்காவிட்டால் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டு விடுகிறது. அதிலும் இந்த காலக்கட்டத்தில் சமூகஅக்கறையுடன் நாம் செயற்படுவது அவசியம். படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் சு.ப. சோமசுந்தரம்
-
காவலூர்க் கனவுகள்
கருத்துக்கு நன்றிகள் உடையார். பசுமைநிறைந்த நினைவுகளை மீட்டியாவது மனத்திருப்தியடைவோம்.நனறிகள் நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன். நாம் இழந்தவைகள் எண்ணிலடங்காதவை. அந்த அமைதியான அழகான இயற்கையுடன் கூடிய இயல்பான வாழ்வை மட்டுமல்ல நாம் அனுபவித்த அத்தனை இன்பங்களையும் இழந்தவர்களாய் ....கருத்துக்கு நன்றிகள் புத்தன்.
-
பெண்மை எனும் நல் மனையாள் .
அன்னையாக அரவணைத்து மனைவியாக உடன் பயணித்து சகோதரியாக அன்பு செய்து மகளாக மடி தவழ்ந்து தோழியாக தோள் கொடுத்து வாழும் பெண்மையை போற்றுவோம் பகிர்வுக்கு நன்றிகள் நிலாமதி
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
இந்த கைத்தொலைபேசி இல்லாத காலத்திலும் நாம் வாழ்ந்தோம் என்று நினைக்க எனக்கே வியப்பாயுள்ளது. எப்படி ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டோம்? எப்படி பயணங்களை மேற்கொண்டோம்? எப்படி காரில் றைவிங் செய்தோம்? என்ன விடயத்தை எடுத்தாலும் எம் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த தொல்லைபேசி எம்முடன் ஒன்றித்து விட்டது. ஆனாலும் அன்று ஊரில் கிணற்றடி குழாயடி இவற்றில் பரப்பப்படும் செய்கிகளை மறக்காமல் கவி வடித்த பசுவூர் கோபியின் கவிதை அருமை. நோயும் இதுதான் நோய்க்கு மருந்தும் இதுதான் என்பதுபோல் ஆகிவிட்டது இத்தொலைபேசி.
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
விரிவான விளக்கத்திற்கு நன்றிகள் . இங்கும் கொரோனா காலமென்றபடியால் வைத்தியரிடம் செல்ல முடியாத நிலையில்தான் உள்ளோம். ஏதாவது பிரச்சினை என்றால் போனில்தான் கதைக்கிறார்கள். பாவிக்கும் மருந்துகளையும் பாமசியில் போய் எடுக்கும்படி போனில் அழைத்து சொல்கிறார்கள். நாம் இந்த நேரத்தில் எமது உணவுகளின் மூலம்தான் எமது நோய் எதிர்ப்புசக்தியை கூட்ட வேண்டி உள்ளது. முருங்கை இலை விற்றமின் டீ காய்கறிகள் நட்ஸ் உடல்பயிற்சி முதலியன எம் உடலுக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன். இது தவிர எமது குடும்ப வரலாறுகளும் எமது உடல்நலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக இரத்த அழுத்தம் மாரடைப்பு புற்றுநோய் முதலியவை சிலருக்கு பரம்பரையாக வர வாய்ப்பு உள்ளதாக அறிகிறோம். உங்கள் பகிர்வுக்கு நன்றிகள். அம்மா இறையடியில் அமைதியில் இளைப்பாறட்டும்.
-
காவலூர்க் கனவுகள்
இசை அமைப்பாளர் சசி வரிணன் என் கவிதையை ரசித்த விதம் கண்டு பூரித்துப் போனேன். உங்கள் அனைவரது ஊக்கமும் உற்சாகமும்தான் என்னை எழுத வைக்கிறது நன்றிகள் சசி. இத்தனை ஆண்டுகள் எங்கெங்கோ வாழ்ந்தாலும் இரவில் கனவில் வருவது எம் ஊரும் அதன் நினைவுகளும்தானே. அந்த இயற்கை அழகும் எம் இளமை நினைவும் என்றும் தொடரும். கருத்துக்கு நன்றிகள் பாஞ்ச்.
-
காவலூர்க் கனவுகள்
உங்கள் பதிவுக்கு கருத்தெழுத தவறி விட்டேன். மன்னிக்கவும். எங்கள் ஊருக்கே அழகு தருவது ஒல்லாந்தர் கட்டிய கடல்கோட்டை. சரித்திர சின்னங்களில் ஒன்றான இக் கடற்கோட்டை பல ஆண்டுகள் இராணுவத்தளமாக மாறியது. இப்பொழுது உல்லாச விடுதியாக மாற்றியுள்ளனர். நன்றிகள் தமிழ்சிறி.