-
அரச அறிவிப்புகள் அனைத்தும் மும்மொழிகளிலும் கட்டாயம் - அதிரடி அறிவிப்பு
சிறந்த அறிவிப்பு. நடைமுறைப்படுத்துவார்கள் என நம்புவோம். இப்போது அரச அலுவலகங்களில் பதவி உயர்வு கிடைக்க மூன்று மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் என்ற நடைமுறை இருக்கிறது. தனிச் சிங்கள அறிவிப்புக்களையும் அரசாங்க சுற்று நிரூபங்களையும் பார்க்கும் போது பயங்கரக் கோபம் வருவதுண்டு. சிங்களம் நன்கு தெரிந்திருந்தாலும் வேணுமெண்டு தமிழிலோ ஆங்கிலத்திலோ கதைத்தும் இருக்கிறேன். சிறிலங்கன் விமான சேவையில் தமிழர்கள் அபூர்வம். சில தமிழ் விமானிகள் இருந்தார்கள். குறிப்பாக மட்டக்களப்பிலிருந்து ஒருவர். அழகு தமிழிலே அறிவிப்புக்களை செய்திருக்கிறார். தமிழர்கள் இப்படியான துறைகளை தெரிவு வேண்டும். இல்லாவிட்டால் தமிழை ஆங்கிலத்தில்/சிங்களத்தில் எழுதி வாசிப்பதை நிறுத்த முடியாது.
-
எம் தேசியதலைவர் பிரபாகரன் பிறந்த தினம் இன்று!......அகவை 71
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஒப்பற்ற ஒரு உதாரண தலைவர். வாழ்த்துக்கள் அண்ணை
-
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
சுயநலம் மிக்க எம்மவர்கள்தான் பிரச்சனை. அதைவிட குப்பை அள்ளுவதற்கு உரிய வாகனங்களோ, குப்பைத் தொட்டிகளோ இல்லை. சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு கையுறைகள், காலணிகள் இல்லை. பருத்தித்துறையில் நகரசபை தற்போது பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கிறார்கள். ஆனால் மக்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினமாகவே இருக்கிறது.
-
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
இதே முறையில் சிங்கப்பூரில் மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். சிறிய நாடான சிங்கப்பூரில் land fill முறை முடியாதது. பின்னர் வரும் சாம்பலை பாவித்து சிறிய தீவுகளை உருவாக்குகிறார்கள். சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாயுக்களை வடிகட்டி அகற்ற முடியும் என நினைக்கிறேன். வடமாகாணத்துக்கு ஏற்ற முறை, ஆனால் எரிப்பதற்கு போதுமான அளவு திண்மக் கழிவுகள் இருக்கிறதோ தெரியவில்லை.
-
கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை முன்வைத்த வடக்கு ஆளுநர்!
கழிவுகளை எரிப்பதன் மூலம் நீராவி உடற்பத்தியாக்கி அதன் மூலம் செய்வார்கள் என நினைக்கிறேன்.
-
மத்திய கிழக்கில் தலைவறைவாகிய 7 இலங்கைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம் - ஆனந்த விஜேபால
துபாய், துருக்கி, தாய்லாந்து - இந்த நாடுகள் தங்கள் நாட்டில் குற்றம் நடக்காமல் வேறு நாடுகளில் நடந்தால் கண்டும் காணாமல் விடுவார்கள், அதோட இந்த நாடுகளில் ஆள்மாறாட்டம் செய்து வேற பெயர்களில் கள்ள கடவுசீட்டு முதல் ஆவணங்களை எடுப்பது இலகு. இப்படியான தாதாக்கள் பெரும்தொகை கறுப்பு பணத்தை இந்த நாடுகளில் முதலிடுகிறார்கள், செலவளிக்கிறார்கள். சில நாடுகள் விட்டுப்பிடிப்பார்கள். ஹக்கான் அய்க் என்பவரை தேடிப்பாருங்கள். துருக்கியிலே பல மில்லியன்கள் முதலீட்டு பல சொகுசு கார்களை வாங்குமட்டும் விட்டு வைத்திருந்தார்கள். அவுஸ் ஆளை மடக்கித் தூக்கினவுடன் அனைத்தும் துருக்கி அரசுடைமையாகிவிட்டது. அவுசிலேயே போலீசில் இருந்து நீதிபதிகள் வரை (பலர் கொடுத்த தீர்ப்புகள் அடிப்படையில்) வாங்குபவர்கள் மற்ற நாடுகளில் இதைவிட அதிகமாக செய்வார்கள்.
-
மத்திய கிழக்கில் தலைவறைவாகிய 7 இலங்கைப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய இணக்கம் - ஆனந்த விஜேபால
அவுஸ்திரேலியாவிலும் பல முக்கிய தாதாக்கள் துபாய், துருக்கி, லெபனான், தாய்லாந்து போன்ற நாடுகளிலே ஒளித்திருந்து கொண்டு நடவடிக்கைகளை இயக்குகிறார்கள். இப்படியான ஒரு தாதா தனது இன்ஸ்டாகிராமில் போட்ட தகவலின் அடிப்படையில் அவுஸ் போலீஸ் இங்கிருந்து துருக்கி போய் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.
-
யூடியூபர் சாலிய டி ரணவக்க தாய்லாந்தில் கைது!
பயங்கர துவேசி , அத்துடன் ராஜபக்ஸ விசுவாசி. இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியோடு சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு முக்கிய சூத்திரதாரி/சாட்சி. தட்டுற மாதிரி தட்டினால் வாயை திறப்பார்!
-
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
இந்த சூட்டு சம்பவங்கள் பாதாள உலக தலைமைகளில் வந்த வெற்றிடத்தால் நடக்கிறது. மகிந்த கோத்தா டீம் பாதாள உலகை கண்டு கொள்ளாமலும், தங்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டும் இருந்தார்கள். ஜெவீபி சில பெரிய பாதாள உலக தலைகளை தூக்கினார்கள். மகிந்த தனது ரகசியங்களை பாதுகாக்க இன்னும் சிலரை போட்டார். பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். எஞ்சியவர்கள் தங்களுக்குள் அடிபடுகிறார்கள். களையெடுக்கப் பட வேண்டியவர்களே.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
அனுர விரும்பினாலும் ஒன்றுமே முடியாது. ஆனால் மகிந்த குரூப்புக்கு இருக்கு ஆப்பு. ஒருவரின் சொல் பேச்சையும் கேக்காமல் விஜேராமயில இருந்த மகிந்தவை எழுப்பி அனுப்பியதே ஒரு வெற்றி. அதோட மகிந்த அரசில் இருந்த பல ஊழல் அமைச்சர்கள் எம்பி இப்ப சிறையில. பந்து பல கால்களுக்கு மாறித்தான் கோல் அடிக்க முடியும். அண்ணை, வெள்ளவத்தை தானே எங்கட இதய பூமி. சண்முகாசில காலம்பிற மசாலா தோசை, றோயல் பேக்கரில மத்தியானம் சோறு கறி, இரவு ஒமேகால ஒரு பியர், சவொயில படம், தமிழ்ச்சங்க புத்தக வெளியீடு, கடற்கரையில ஒரு நடை. அங்கால தெற்குப்பக்கம் தள்ளிப் போனா உதெல்லாம் கஸ்டமண்ணை. ஒருகாலத்தில விக்கவேணும் எண்டாலும் உடனேயே விக்கலாம், காசையும் வெளிநாட்டிலேயே வாங்கி எடுக்கலாம்.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது. எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இருந்த தேய்வுகளில் அனுர சிறந்த தெரிவு. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு வரப்போவதில்லை. செம்மணிக்கு நீதி கிடைக்கப்போவதில்லை, காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. இப்போதைய நிலையில் மக்களின் பொருளாதாரம் மேம்பாட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே தேவையானது. காலா காலமாக புரையோடிப் போயிருந்த ஊழல் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. போலீஸ் உட்பட தவறு செய்தாலும் முறையிட முடிகிறது. நீதித்துறை ஓரளவு சுயாதீனமாக இயங்குகிறது. சுற்றுலாத்துறை உட்பட நாட்டின் அந்நிய செலாவணி நன்கு அதிகரித்திருக்கிறது. நாட்டை விட்டுப் போன பலர் திரும்ப வருகிறார்கள். அந்நிய முதலீடுகள் வருகின்றன. நாடு முன்பை விட சுத்தமாக இருக்கிறது. காசிருந்தா வெள்ளவத்தையில் ஒரு பிளட் எடுத்து விடுங்கோ, ஓய்வு காலங்களை ஊரிலயும் கொழும்பிலயும் கழிக்கலாம்
-
சிஸ்ட்டர் அன்ரா
வாசிக்க கடினமான பதிவு. சில தகப்பன்மாரின் கடுமையான போக்குகளால் பிள்ளைகளின், குறிப்பாக மகன் மாரின் வாழ்க்கைகள் அழிந்து போகின்றன. எனது நெருங்கிய நண்பன்/ வகுப்புத் தோழன். அவனது அப்பா நீதிமன்றத்தில் வேலை செய்பவர், கொஞ்சம் கடுமையான போக்குடையவர். அவனது அண்ணா உயர்தரம் படிக்கும் போது ஒரு பிள்ளையை காதலிக்க தொடங்கினார். அந்த அண்ணா படிப்பிலே மிகவும் திறமைசாலி. மருத்துவம் போகக்கூடியளவு கெட்டிக்காரன். ஒருநாள் தந்தை இந்தக் காதல் விவகாரத்தால் அவருக்கு அடித்து விட்டார். அந்த அண்ணாவும் கோவத்தில் இயக்கத்திற்கு போய்விட்டார். இறுதியாக அவர் வீரச்சாவு. எனது நண்பனும் கெட்டிக்காரன், ஆனால் உயர்தரத்தில் பல்கலை போக முடியவில்லை. இறுதியாக வெளிநாடு போய்விட்டான். அந்த தகப்பனின் நடவடிக்கையால் இறுதியில் கிடைத்த பலன் ஒன்றுமில்லை. காதல், குழப்படி, குடி, புகை தாண்டிதான் அனைவரும் வளரவேண்டும். எனக்கு கிடைத்த அப்பா ஒரு வரம். நாங்கள் மூன்று ஆண் பிள்ளைகள். எங்களை அவர் டேய் என்று கூட ஒருநாளும் கூப்பிட்டது கிடையாது. அடித்திருக்கிறார், ஆனால் அது காரணத்தோடான அடி. இண்டைக்கும் எனக்கு ஏதாவது ஆலோசனை தேவை என்றால் முதலில் கேட்பது அப்பாவைத்தான். இன்னும் இருபது வருடங்களின் பின்னர் அவர் போய்விடுவார். அந்த வெற்றிடத்தை நினைக்கக் கூட முடியவில்லை. உங்கள் அன்ராவின் இறுதி நிகழ்வுக்கு நீங்கள் கண்டிப்பாக போயிருக்க வேண்டும். உங்கள் வாழ்விற்கு ஒளியேற்றி வைத்த அந்த தெய்வத்திற்கு நீங்கள் கொடுத்திருக்கக் கூடிய இறுதி மரியாதை அது. அது உங்களுக்கும் ஒரு முடிவினை, ஆத்ம திருப்தியினை கொடுத்திருக்கும்.
-
வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம்
உந்த தனிச் சிங்கள சுற்றறிக்கைகளை பாக்க எனக்கு விசர் தான் வாறது. அரச மொழி மூண்டு, இந்த யாழ்தேவியை அதிகம் பாவிப்பவர்கள் தமிழர்கள். மூன்று மொழியும் நன்கு தெரிந்த ஒருவரையாவது அரச வேலையில் இணைக்க முடியாத நிலையிலா சிறிலங்கா இருக்கிறது?
-
முள்ளியவளை பகுதியில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்
சிங்களம் படிப்பிச்சா படிப்பிச்சிட்டு போங்கோ. உந்த புத்த தோரணங்கள் தேவையில்லாத ஆணி. நாளைக்கு அவன் வந்து விகாரை ஒண்டை கட்டுவான், தொல்பொருள் திணைக்களமும் வந்து புத்த சமய எச்சங்களை கண்டுபிடிப்பார்கள்.
-
சங்கு - சைக்கிள் சந்திப்பு!
தமிழ் தமிழ் எண்டு கதை மட்டுமே. அதென்ன, ஏப்ரல், யூன்?