Everything posted by பெருமாள்
-
சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம்! மீண்டும் நீதிமன்றத்திலா தமிழரசுக் கட்சி...
தமிழரசுக் கட்சியின்(TNA) தேசியப் பட்டியல் தொடர்பிலான சர்ச்சை நிலைகள் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தற்போது வலுப்பெற்று வருகிறது. எனினும் தமது கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அந்த நியமனங்களில் ஒருவராக கருதப்படும் பா. சத்தியலிங்கத்தினது உள்வருகையானது முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் திட்டமிடலின் ஒரு அங்கம் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. அந்த வகையில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா. இளம்பிறையன் தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெறும் பல்வேறு முரணான கருத்துக்களை எடுத்துரைத்திருந்தார். மேலும், சுமந்திரனின் கருத்திற்கு அமையவே செயலாளரின் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், எதிர்வரும் காலங்களில் சத்தியலிங்கம் - சுமந்திரன் விவகாரம் மீண்டும் மீண்டும் தமிழரசுக்கட்சியை நீதிமன்றுக்கு அழைத்து செல்லும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்... https://tamilwin.com/article/controversy-over-the-national-list-of-tna-1731866604
-
"சிரிக்க மட்டும் ..."
ஓர் ஊரில், ஏழை ஒருவர் சிறிய அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கிடைத்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் நடந்துபோய்க்கொண்டிருந்தபோது, ஒரு பழைய நாணயத்தைப் பார்த்து, அதை எடுத்து தூசி தட்டினார். அந்த நாணயத்தில் நடுவில் துளை இருந்தது. அந்தக் காலத்தில் துளை இருந்த நாணயம் கிடைத்தால், அது நல்லது, இராசி என்ற நம்பிக்கை உண்டு. அந்த மனிதருக்கும் அது கிடைத்ததில் அதிக ஆனந்தம். இனிமேல் எனது கஷ்டம் எல்லாம் தீர்ந்துவிடும் என்று மகிழ்ந்து, அந்த நாணயத்தை பத்திரமாக தனது மேல் சட்டைப்பைக்குள் போட்டு வைத்தார். அதை ஒருநாளும் வெளியே எடுக்கமாட்டார். ஆனால் அதை அடிக்கடி தொட்டு மட்டும் பார்த்துக்கொள்வார். சிறிது காலம் சென்று, நல்வாய்ப்புகள், உண்மையாகவே அவரை தேடிவரத் தொடங்கின. செல்வம், பணம், புகழ், பதவி போன்ற எல்லாம் வந்து சேர்ந்தன. சமுதாயத்தில் அவர் பெரிய மனிதரானார், எல்லாரும் அவரைப் பாராட்டினார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றிதான், எல்லாம் அந்த நாணயத்தின் மகிமை என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அந்த மேல்சட்டையைப் போட்டுக்கொண்டுதான் வெளியில் கிளம்புவார். வெளியே புறப்படுவதற்குமுன், சட்டைப் பையில் அந்த நாணயம் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக்கொள்வார். இப்படி பல ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் அந்த துளையுள்ள நாணயத்தை கண்ணால் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அன்று காலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தன் மனைவியிடம் தனது ஆசையைச் சொன்னார். ஆனால் மனைவியோ, இப்ப எதுக்கு அதைப் பார்க்கணும், வேண்டாமே என்று இழுத்தார். இல்லை இன்று பார்த்தே தீருவேன் என, அதை சட்டைப் பையிலிருந்து வெளியே எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்போது அவரது மனைவி அவரிடம், உங்க சட்டை தூசியா இருக்கேன்னு, நான் அதை உதறினேன். அப்போ அந்த நாணயம் சன்னல் வழியாக தெருவில் விழுந்துவிட்டது. நானும் எவ்வளவோ நேரம் தேடினேன். கிடைக்கவில்லை. யாரோ அதற்குள் எடுத்துவிட்டார்கள்போலும். உங்களுக்குத் தெரிந்தால் வருத்தப்படுவீர்களே என்று நினைத்து, உங்களது சட்டைப் பைக்குள் ஒரு காசை போட்டுவைத்தேன் என்றார். சரி இது நடந்தது எப்போது என கணவர் கேட்க, நீங்க அந்தக் காசை எடுத்த மறுநாளே நடந்தது என்று மனைவி சொன்னார். ஆம். அந்த மனிதருக்கு நல்வாய்ப்பைக் கொடுத்தது அந்த நாணயமில்லை, அவரது நம்பிக்கை. அதாவது தன்னம்பிக்கை. அதுதான் அவரில் வேலை செய்துள்ளது. எனவே வாழ்வில் முன்னேற விரும்புகிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். “உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை (சுவாமி விவேகானந்தர்)
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ.. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனக்கு ஈமெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். ‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி... நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் ப. சத்தியலிங்கம் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சுமந்திரனால் வெளியிடப்பட்ட கருத்து பலர் தரப்பிலும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், "முன்னதாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாத யாரும் இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தார். அது மாத்திரமின்றி, இத்தேர்தலில் சிறீதரன் போட்டியிட கூடாது என்றும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். இவ்வாறிருக்கையில், தற்போது தேர்தலில் போட்டியிட்டு மக்கள் தெரிவில் தோல்வியடைந்துள்ள ப. சத்தியலிங்கத்தை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் மூலம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளமைக்கு சுமந்திரனே பதில் கூறியாக வேண்டும்” என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/udaruppu-today-lankasri-1731848186
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அட்டமத்து சனி லேசிலை போகாது சத்தியலிங்கம் தேசிய பட்டியலில் போகிறார் என்று அறிக்கை விட்டது சுத்து மாத்துதான் .
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தமிழ் இனத்தை அழித்த சந்திரிகா கூட லண்டன் தெருக்களில் சாவகாசமாக நடமாடி திரிந்தவ ஆனால் தமிழருக்கு அரசியல் செய்ய பின்கதவால் வந்த அட்டமத்து சனி சுமத்திரன் லண்டன் தெருக்களில் நடமாடி திரிய முடியாது .
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இங்கு லண்டன் வந்தால் பழைய கணக்குகளுக்கு பலன்ஸ் பண்ண அடி விழும் என்று அந்த அட்டமத்து சனிக்கு தெரியும் எனவே இங்கு வராது .
-
சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்..!
வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வழங்க முற்ப்பட்ட போது அதனை சுமந்திரன் வாங்க மறுத்துள்ளார். தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தற்போது இடம்பெற்றுவருகின்றது. பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் இதன்போது கட்சியின் செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப்பொறுப்பு உருக்குலைக்கப்பட்டதாகவும் அதனை விசாரணை செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் செயலாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குறித்த குற்றப்பத்திரிகையின் பிரதியை இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் சிவமோகன் வழங்கியிருந்தார். இந்நிலையில் சுமந்திரனுக்கும் அதனை வழங்க முற்ப்பட்ட போது அவர் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டுச்சென்றார். குறித்த குற்றப்பத்திரிகையில்.. கட்சி மாநாட்டுக்கு முன்னர் ஆலோசனைக்கூட்டம் நடாத்தாமை, சுகயீனம் எனக்கூறி பொதுக்குழு கூட்டத்திற்குவராமை, யாப்பிற்கு முரணாக தேர்தல் நியமனக்குழுவை நியமித்தமை, கட்சி உருக்குலைய காரணமாக இருந்தமை, முல்லைத்தீவு மாவட்டக்குழுவின் ஆலோசனை இன்றி தேர்தல் நியமனங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவு இதேவேளை இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவமோகன்… தோற்றவர்கள், நாடாளுமன்றதேர்தல் கேட்ககூடாது என்று சொன்னவர் யார். அப்படி ஒரு முடிவு கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுக்காத முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற போர்வையில் உட்புகுத்த கூடாது. முஸ்லீம்களை புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்ற அவரது கருத்து தமிழரசுக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்ப்படுத்தியது. அது கட்சி எடுத்த முடிவா இல்லையே. போரை நீங்கள் ஏற்கவில்லை. நீங்கள் கொழும்பில் இருந்தீர்கள் நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம். அதை ஏற்பதா இல்லையா என்று நாங்களே தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் சொல்லத்தேவையில்லை. தோற்றவர்கள் கேட்க கூடாது என்று கூறிவிட்டு தேசியபட்டியல் கொடுப்பதற்கு இனி இங்கு போராட்டம் நடக்கும். நான் எடுக்கமாட்டேன் என்று சொல்லி அவரும். நீங்கள் எடுங்கள் என்று சொல்லி சிலநேரம் கொடுக்கப்படலாம். அது பிழை. படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக்கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிகொள்ள வேண்டும். தேசியபட்டியல் ஆசனத்தை வன்னிக்கு கொடுக்க வேண்டும் என்றால் அது இரண்டாவது விருப்பு வாக்கை எடுத்தவருகே கொடுக்க வேண்டும் என்றார். https://tamilwin.com/article/sumanthran-refused-buy-charge-sheet-sivamohan-1731834495
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர். ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில் விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை. ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் . பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். 😏😏 ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் 😔😔 இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது😶😶😶
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இங்கு ஆறு பக்கம் தாண்டி இந்த திரி ஓடுது சுருக்கமா சொல்லணும் என்றால் சுத்து மாத்து சுமத்திரன் பதவிக்காக யாரின் காலில் விழுந்து நக்கியாவது பாராளுமன்றம் சென்று விடுவார் நாங்கள்தான் நேரத்தை விரயமாக்குகிறோம் . தேர்தலில் தோல்வியை சந்தித்தவர் தேசிய பட்டியல் மூலம் செல்ல கூடாது எனும் சட்டத்தை கொண்டு வரனும் கொண்டு வர விடுவார்களா ? நாமல்குஞ்சு தேசிய பட்டியல் மூலம் உள்ளே வருதாம் .
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த லூசு பெயில் பண்ணவில்லை யாக்கும் ? பொறுங்க வரும் 27 திகதி அனுராவின் முகம் எப்படி என்று வடகிழக்கு தமிழர்கள் அறிவார்கள் .
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அவர் போகமாட்டேன் என்று அறிக்கை விட்டு நடிப்பார் கொஞ்ச நேரத்தின் பின் மத்தியகுழு உத்தரவுக்கு அமைய போவேன் என்பார் அவர் போகணும் அப்பத்தான் சுத்து மாத்து பற்றி அங்குள்ளவர்களுக்கு உண்மை முகம் புரியும் டக்கிலஸ் ஓட ஓட அடிவாங்கியதை போல் இவரும் வாங்கி கட்டுவார் காரணம் சிங்கள எம்பிமாருக்கே பாதுகாவலர் இல்லை இவருக்கு அனுரா கொடுப்பாரா ? அனுராவின் உண்மை முகம் வரும் கார்த்திகை மாதம் 27ல் தெரிந்து விடும் .- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஊரில் ஒரு நாய் குலைத்தால் எல்லா நாய்களும் குலைக்கும் ! நாய்களுக்கு ஒரு பழக்கம் உண்டு! ஊரில் எங்கேயாவது ஒரு நாய் குலைத்தால்! பக்கத்து வீட்டு நாய் குலைக்க ஆரம்பிக்கும்! பின்னர் இன்னொரு நாய் குரைக்க ஆரம்பிக்கும்! ஒரு கட்டத்தில் ஊரிலிருக்கும் எல்லா நாய்களும் குறைக்க ஆரம்பிக்கும்! கடைசியாக குலைத்த நாய்க்கும் மற்ற நாய்களுக்கும் முதலில் குலைத்த நாய் ஏன் குலைத்தது என்று தெரியாது! அது போல் தான் முட்டாள் மனிதர்களும் ! ஒருவரை பற்றி ஒருவன் புறம் பேசினாலோ அல்லது அவதூறு கிளப்பினாலோ என்ன நடந்தது என்று தெரியாமலே அவர்களும் அவதூறு பரப்ப ஆரம்பித்து விடுகிறார்கள்! முட்டாள்கள் வேறு வழி இல்லை என்று சொல்லும் வழக்கு இது!- "சிரிக்க மட்டும் ..."
niதிபதி; நீங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்தானே!... உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!? #மனைவி; ஆமா பெரிய "காதல்!" நான் ஏமாந்துட்டேன் ஐய்யா!!! இவர் வாயை திறந்தாலே எல்லாமே பொய்தான், பேசுகிறார்... ஒரு விசயத்தில் கூட என்னிடம் உண்மையாகவே இல்லை... தயவுசெய்து எங்களை பிரித்துவிடுங்கள்... #கணவன்; இவள் பயங்கரமான ஹிட்லர் பேத்தி ஐய்யா! எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி கேட்கிறாள், என் மீது சந்தேகப்படுகிறாள், முடியல மை லார்ட்... தயவுசெய்து விவாகரத்து கொடுத்துவிடுங்க... #நீதிபதி; சரி உங்கள் விருப்பப்படி விவாகரத்து கொடுத்துவிட்டால் உங்கள் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது!? #கணவன்; இது என்ன கேள்வி...!!! என் குழந்தை என்னிடம்தான் வளரவேண்டும், அதுதான் நியாயமும் கூட... #மனைவி; அது எப்படி! நியாயம்...!!! பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்து எடுத்தவள் நான்! உடனே இவருக்கு தூக்கி கொடுத்திடனும்மா...! முடியாது மை லார்ட்... #நீதிபதி; இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் Mr...? #கணவன்; ஐய்யா... நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்களாமா! #நீதிபதி; ம்ம்! கேளுங்க!? #கணவன்; ஐய்யா...!!! ATM மெஷின்ல கார்டு உள்ளே சொருகி பணம் வெளீயே எடுத்தப்பிறகு அந்த பணம் ATM மெஷினுக்கு சொந்தமா! இல்ல! பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா!??? #மனைவி; அடப் பாவி... சண்டாளா..."!!! #நீதிபதி; ஒரே கேள்வியில் தலை கிருகிருவென சுற்றி டேபிளில் அடித்து எம்பி சுருண்டு கீழே விழுந்தார் ஜர்ஜ்... ((கோர்ட் இத்துடன் கலைகிறது. "டமால்"))- தோல்வியடைந்த முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்
இவ்வளவு கூட்டமும் தமிழருக்கு என்று வந்து இதுவரை தங்களின் வருமானத்தை மட்டுமே பார்த்தவர்கள் எல்லாமே கோடாலி காம்புகள் .- தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
சுத்து மாத்து எப்படியும் உள்ளே வந்து விடும் என்ன கேவலம் செய்தாவது உள்ளேதான் அனுரா அரசின் ஆதரவு இல்லாவிட்டால் கூட்டத்தில் கேள்வி கேட்டவரை மட்டும் போலிஸ் தூக்கி இருக்காது .- தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்துள்ள எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பில்லை இல்லை என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதன்படி, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல மாட்டேன் என தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வழங்கிய செவ்வி ஒன்றின் மூலம் குறிப்பிட்டிருந்தார். தற்போது யாழ் - கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதியில் சுமந்திரன் தோல்வியடைந்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் அவர் தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இல்லை என தெரிவிக்கின்றது. தேசியப்பட்டியல் எனினும், மக்கள் தன்னை நிராகரித்தால் இனிவரும் காலங்களில் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவே மாட்டேன் என்றும் சுமந்திரன் குறித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தற்டீபாது நாடளாவிய ரீதியில் நாடாளுமன்ற தேர்தலு்ககான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/ma-sumanthiran-regarding-the-national-list-1731646785- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
படுக்க போன நம்மளை முழிக்க வைக்காதிங்க பாஸ் 😀- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஐயோ இனி இந்தலூசின் அலுப்பளுகளை கேக்க வேண்டி உள்ளது வேறை என்ன அந்த லூசுக்கும் நம்ம பத்து பேரை வோட் போட சொன்னோமே நல்ல வேலை பார்த்து உள்ளார்கள்நன்றி அவர்களுக்கு .- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தெரிந்த விடயம் தானே . இனி சொரிந்த புண்ணுக்கு மருந்து போட சிலர் வருவார்கள் 😄- "சிரிக்க மட்டும் ..."
- சிரிக்கலாம் வாங்க
கணவன் காலில் விழுந்தால் நம்பாதீங்க! நேற்று என் புருசன் இனிமேல் குடிக்க மாட்டேன் என்று என் காலில் விழுந்து சத்தியம் பண்ணினார்! ஓ! அப்ப உன் வீட்டுக்காரர் குடிப்பதை நிறுத்தி விட்டார் என்று சொல்லு! நீ வேற என் ரெண்டு கொலுசையும் கழட்டி விற்று குடித்து விட்டார்!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
19 வயதில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார், அமெரிக்க ரகசிய சேவையில் ஊடுருவி நாட்டின் பல ரகசியங்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார். இவரது தந்தை தனியாக வசித்து வந்த முதியவர். ஒரு நாள், அவர் தனது தோட்டத்தில் உருளைக்கிழங்கை நடவு செய்ய விரும்பினார், ஆனால் அவரது முதுமை காரணமாக அவ்வாறு செய்ய அவருக்கு வலிமை இல்லை. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட தனது மகனுக்கு ஒரு செய்தியை அனுப்பினார், அது கூறியது: சிறிது நேரம் கழித்து, தந்தைக்கு மகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது: செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள், இரகசிய சேவைகளும் இராணுவமும் அந்த வீட்டை சுற்றி வளைத்தன. அவர்கள் பூமி மீட்டரை மீட்டரைத் தோண்டி, எல்லாவற்றையும் அகற்றினர், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை, வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு வாரம் கழித்து, தந்தைக்கு ஒரு புதிய கடிதம் வந்தது. - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.