Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பல்வேறு வழிகளிலும் ஆக்கிரமிப்பு நடைபெற்று வரும் நிலையில் கிழக்கை மீட்பவர்கள் என்று கூறுபவர்கள் வாயளவில் பேசி அரசியலை செய்து தங்களுடைய பைகளை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று (26.04.2024) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். பேரினவாதம் மேலும் தெரிவிக்கையில், “75 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இலங்கை தமிழரசுக் கட்சியானது (ITAK) அசைக்க முடியாத சக்தியாக நிற்கின்றது. தமிழரசு கட்சியை அழிப்பதற்காக கடந்த காலத்தில் பேரினவாதமானது பல்வேறுபட்ட செயல்களை செய்துள்ளது. மட்டக்களப்பில் வைத்து யோசப்பரராஜ சிங்கத்தை இந்த ஆலயத்தில் வைத்து சுட்டுக் கொண்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியத்தின் அடையாளமாக இருந்த சந்திர நேரு அவர்களை சுட்டுக் கொண்டார்கள். கொழும்பில் வைத்து இளம் இரத்தமான ரவிராஜ் அவர்களை சுட்டுக்கொன்றார்கள். தமிழ்த் தேசிய உணர்வோடு பயணிக்கின்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை அத்தோடு அருட்தந்தையர்கள் ஆக இருக்கலாம். இவ்வாறான அனைவரையும் அழிப்பதன் மூலமாக தமிழ் தேசியத்தை வடக்கு, கிழக்கிலிருந்து கழுவி விட வேண்டும் என்கின்ற அடிப்படையில் பேரினவாதம் திட்டமிட்டு செயல்பட்டுள்ளது. இந்த வேளையில் எங்களுடைய தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற குலத்தை கெடுக்கின்ற கோடரி கம்புகள் என்று சொல்லக்கூடியவர்கள் அவர்களோடு இணைந்து கூலிக்கு மாரடைத்து கொண்டு இருந்துள்ளார்கள். தமிழ் தேசிய அரசியல் இன்று கிழக்கு இருப்பைப் பற்றி பேசுகிறார்கள் அதைவிட கிழக்கை மீட்டு தருவதாக கூறுகின்றார்கள். உங்களுக்கு நன்றாக தெரிய வேண்டும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலத்திற்குள் நிறைவேற்றித் தருவோம் என்று கூறிய கிழக்கு மீட்பர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள். இப்போது மயிலத்தமடு மாதவனை பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. குசலான மலையில் கலாசார ஆக்கிரமிப்பு நடைபெற இருந்தது. குருந்தூர் மலையில் கலாசார ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. வடமுனையின் நெடியகல்மலை என்ற பகுதியிலும் ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. தந்தை செல்வா பிழையான அரசியலுக்குள் அகப்படவில்லை. நேர்மையான அரசியலை செய்தவர். அவ்வாறான தமிழ் தேசிய அரசியல் இருக்கும் வரையில்தான் தமிழ் தேசியம் இருக்கும். தமிழர்களின் அடையாளமும் இருக்கும். மேலும், அம்பாறையை ஆக்கிரமித்தவர்கள், திருகோணமலையை ஆக்கிரமித்தவர்கள் இன்று மயிலத்தமடுவினையும் கலாசார பூமி எனவும் ஆக்கிரமிக்கின்றார்கள். அதற்கு கிழக்கு மீட்பர்கள் ஒத்துழைத்து வந்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/they-save-east-province-politics-1714125050
  2. இலங்கைத் தீவு ஒரு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இன்றைய சூழலில் தமிழ் மக்களின் அரசியல் என்பது தீர்க்கமான எந்த முடிவுகளையும் எட்டாத திரிசங்கு நிலையில் தொங்குகிறது. கடந்த ஒரு நூற்றாண்டு கால ஜனநாயக அரசியலில் சிங்கள தலைவர்களினால் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட தமிழ் தலைவர்களின் வரிசையில் இன்றைய தமிழ் தலைவர்களும் தம்மை இணைத்துக் கொள்ள முண்டியடிப்பதாகத் தோன்றுகிறது. சிங்களத் தலைவர்கள் திருந்தி விட்டார்கள், இப்போது உண்மையை உணர்ந்து விட்டார்கள், கடந்த காலத் தலைவர்கள்தான் ஏமாற்றி விட்டார்கள், அவர்கள் தவறு இழைத்து விட்டார்கள், அவற்றையெல்லாம் மறந்து புதிய இலங்கையை உருவாக்குவோம், தமிழர்களும் சிங்களவர்களும் கலந்து மனம்விட்டு பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடும், சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து நின்று பேசினால்தான் பிரச்சினை. இப்போது சிங்களவர்கள் கீழ்ழிறங்கி வந்து பேசத் தயாராக உள்ளனர். நாம் பேசித்தான் பார்ப்போம். சிங்களவர்கள் மனம் திரும்பி குணப்பட்டு விட்டார்கள் என்றெல்லாம் இன்று சிங்கள தரப்பு அரசியல் ஆசாமிகள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.தமிழ் தரப்பு ஏமாளிகளும் கம்யூனிசிய குஞ்சுகளும் இதை அப்படியே விழுங்கி பிதற்ற தொடங்கி விட்டார்கள். இந்த இடத்தில் இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் கலாச்சாரத்தில் இன ஒழிப்பு கட்டமைப்பு வாதமும் (structural genocide) அதன் வரலாற்றுப் போக்கு பற்றிய புரிதல் அவசியமானது. அரசியல் கலாச்சாரம் இலங்கை அரசியல் கலாச்சாரம் என்பது தேரவாத பௌத்த தத்துவ நூலான "மகா மகாவம்ச"மகாநாம தேரரின் வாயிலான இனக்குரோத வாதமாக வெளிப்பட்டு நிற்கிறது. அது தமிழின பரிசீலனை , இந்திய எதிர்ப்பு என தத்துவத்தை முன்வைக்கிறது. பௌத்தத்தை பாதுகாப்பதற்கு இலங்கை தீவில் தமிழினத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனை "தம்மதீபக்" கோட்பாட்டின் மூலம் நியாயப்படுத்துகிறது. இந்த கோட்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide) கட்டமைப்பு வாதத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் என்பது தனி ஒரு மகாநாம தேரரினாலோ அல்லது சில மனிதனாலோ மட்டும் கட்டமைப்புச் செய்து வளர்க்கப்பட்டதல்ல. இது ஒரு நீண்ட வரலாற்று வளர்ச்சியில் (Historical development) வடிவம் பெற்று ஒரு முறைமைக்கு (System) உட்படுத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். சிங்கள பௌத்த மேலாண்மைவாத அரசியல் முறைமைக்குள் இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் இறுக்கமாக கட்டமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய இனப்படுகொலை முறைமைக்குள் இலங்கை தீவில் உள்ளே தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விருப்புக்கள் அல்லது அபிலாசைகள் பூர்த்தி செய்வதற்கு சிங்கள தேசத்தின் அரசியலில் கட்சிகளோ தலைவர்களோ தயாரா? இவை எல்லாவற்றிக்கும் மேலான அரச இறைமையை பிரயோகிக்க வல்ல பௌத்த மகா சங்கம் இடமளிக்குமா? இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் அரச இயந்திரம் இதற்கு அனுமதிக்குமா? இன்று நிலவும் இலங்கையின் ஒற்றை ஆட்சி அரசியல் முறைமைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டுமா? ஒற்றை ஆட்சி முறமையை மீறி எந்த ஒரு சிங்களத் தலைவர்களாலும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வையும் முன்வைக்க முடியாது என்பதை ஈழத்தமிழர் யதார்த்த பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. உலகளாவிய வரலாற்றில் நிகழ்ந்த அனைத்து இனப்படுகொலைகளும் ஒரு தத்துவார்த்த அடித்தளத்தையோ (Philosophical base) அல்லது கோட்பாட்டு தளத்தையோ (theoretical base) கொண்டிருந்தன. இது ஒரு வரலாற்று வளர்ச்சிப் போக்கின் தொடர் விளைவுகளின் அறுவடையாகவே நிகழும். வரலாற்று வளர்ச்சிப் போக்கு ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் குரோதம் என்பது தனி மனிதர்களால் ஒரு சில நாட்களிலோ சில வருடங்களிலோ ஏற்படுத்திவிட முடியாது. இது ஒரு வரலாற்று வளர்ச்சிப் போக்கில் கட்டமைப்பு பெறும். அது அந்தச் சூழலின் யதார்த்தமாக இருக்கும். சூழலின் யதார்த்தம் அந்தச் சூழலில் ஏற்படுகின்ற தொடர் நிகழ்வுகளின் போக்கின் விளைவு என்பதைக் கருத்துக் கொள்ள வேண்டும். எனவே இனப்படுகொலையை தத்துவம் (Philosophy) கோட்பாடு (Theory) என்ற இரண்டிலிருந்தும் பிரித்தெடுக்க முடியாது. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை (structural genocide) என்பது ஒரு முறைமை(system). எங்க இந்த முறைமை இருக்கிறதோ அங்கு அதற்கான ஒரு தர்க்கம்(logic) இருக்கும். எங்கு தர்க்கம் இருக்கிறதோ அதற்கு ஒரு தர்க்க ரீதியான செயல்முறை (logical process) இருக்கும். அந்தச் செயல்முறை தர்க்க ரீதியான வளர்ச்சியை (logical development) கொண்டிருக்கும். இத்தகைய நீண்ட வரலாற்றைக் கொண்ட இனப்படுகொலை கட்டமைப்பு வாதம் இலங்கை தீவில் கிபி 6ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர் வளர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தகைய தொடர் வளர்ச்சி போக்கின் விளைவாக தோற்றம் பெற்றதுதான் இன்றைய சிங்கள பௌத்த மேலாண்மைவாத அரசியல் முறைமை. இந்த அரசியல் முறைமையை இலகுவில் எந்த கொம்பனாலும் மாற்றிட முடியாது. யாரும் மாற்றவும் முனைய, துணிய மாட்டார்கள். இந்த யதார்த்தத்தில் இருந்துதான் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் பற்றி சிந்திக்கவும், பேசவும் வேண்டும். இலங்கை - இந்திய புவிசார் அமைவிட அடித்தளம்தான் இலங்கையின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியலின் அச்சாணியாக உள்ளது. இந்தப் பிராந்தியத்தின் புவிசார் கட்டமைப்பு (geographical structure) நிலையானது. இந்தப் புவியியல் அமைவிடம் இனப்படுகொலை கலாச்சாரத்தை தோற்றுவிப்பதற்கான முதன்மை காரணி ஆகவும் உள்ளது. அடுத்ததாக இப்பிராந்தியத்தில் நிலவும் அரசியல் கட்டமைப்பு (Political structure) இரண்டாவது காரணியாக உள்ளது. இந்த இரண்டு காரணிகளும் இணைகின்ற போது புவிசார் அரசியல் (Geopolitics) என்ற அரசியல் வாதம் செல்வாக்கு செலுத்த முனைகிறது. இந்த புவிசார் அரசியல் மடிக்கணினி போட்டியில் இலங்கை அரசும், இந்திய அரசும் மோதுகின்றன. ஈழத் தமிழினம் இந்த மோதலுக்குள் ஈழத் தமிழினம் இரண்டுக்கும் இடையில் அகப்பட்டு நசிந்து அழிவைச் சந்திக்கிறது. இந்தியாவின் புவிசார் அரசியல் மேலாண்மையை இலங்கைதீவில் இருந்து அகற்றுவதற்கு அல்லது தமக்கு சாதகமாக மாற்றுவதற்கு ஈழத் தமிழரை இலங்கை தீவில் இருந்து அகற்றுவதே சரியானது என கடந்த 14 நூற்றாண்டுகளாக இலங்கை பௌத்த பேரினவாத அரசு நம்புகிறது. இந்த புவிசார் அரசியலை தமக்கு சாதகமாக திருப்புவதற்காகவே இலங்கை அரசு இனப்படுகொலையை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இத்தகைய தொடர் வரலாற்று வளர்ச்சி ஊடான இனப்படுகொலை இன்று கட்டமைப்பிற்கு உட்படுத்தப்பட்ட வடிவம் பெற்று இலங்கை தீவின் அரசியலில் தவிர்க்க முடியாத கோட்பாடாக, தத்துவமாக நிலை பெற்றுவிட்டது. இந்த தத்துவார்த்த உண்மையை (Philosophical truth) புரிந்து கொள்ளாமல் தமிழர் அரசியலை ஒரு அடிதானும் நகர்த்த முடியாது. மாறாக சிங்கள தரப்புடன் சமரசம் பேசுவோமேயானால் தொடர்ந்து சீரழிந்து ஈழத் தமிழினம் தனது தாயகத்தை இழக்க நேரிடும். ஈழத் தமிழர்கள் முற்றிலும் அறிவுபூர்வமாக சிந்திக்கவும் செயல்படவும் வேண்டிய காலம் இது. எனவே தமிழர் தாயகத்தில் காணப்படுகின்ற யதார்த்தம் (Given reality), ஈழத் தமிழர்களின் வாழ்விடத் தாயகத்தின் உலகளாவிய அரசியலின் புவிசார் கேந்திர முக்கியத்துவம் (Geo-strategic importance) என்பவற்றை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியலை நிர்ணயம் செய்ய வேண்டும். வெறுமனே ஒத்தோடி அரசியலையோ, அடிபணிவு அரசியலையோ, ஓடுகாலி அரசியலையோ, சோம்பேறித்தனமான அரசியலையோ விடுத்து முற்றிலும் அறிவு சார்ந்து ஈழத் தமிழினத்திற்கு அதன் தாயாக அமைவிடம் சார்ந்து இருக்கின்ற உலகளாவிய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் இலங்கை இனப்படுகொலை அரசை எவ்வாறு வெற்றி கொள்ள முடியும் என்பதை நுண்மான் நுழைபுலத்தோடு அணுக வேண்டும். இலங்கையின் சிங்கள இடதுசாரிகள் தமிழ் மக்களுக்காக பரிந்து பேசிய ஒரு காலம் இருந்தது. ஆனாலும் அந்தக் காலகட்டத்தில் அவர்களால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்திட முடியவில்லை. அது மட்டுமல்ல அவ்வாறு தமிழ் மக்களுக்காக பரிந்து பேசியவர்கள் பின்னாளில் அந்தக் பஜ்ஜி கொள்கையில் நின்றுபிடிக்கவும் முடியவில்லை. மாறாக தமிழர்களை அழிக்கும் செயற்திட்டங்களை உருவாக்கினார்கள், ஒத்துழைத்தார்கள். அரசியல் முறைமை இவ்வாறே சிங்கள முற்போக்கு தலைவர்கள் என வந்தவர்களும் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. சிங்கள தலைவர்களால் தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கிட முடியவில்லை என்பதனை ஒரு வரலாற்று தத்துவார்த்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அதற்கு ஒரு வரலாற்று தத்துவார்த்த, கோட்பாட்டியல் செல்நெறி உள்ளது என்பதை இனங்காண வேண்டும். இனப்படுகொலை முறைமைக்கு உட்படுத்தப்பட்ட இலங்கைத்தீவின் அரசியலில் எந்த ஒரு தனிமனித படகு அரசியல் தலைவர்களினாலோ, அல்லது ஒரு அரசியல் கட்சியினாலோ தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது. அவ்வாறு வழங்குவதற்கு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியல் முறைமை ஒருபோதும் இடம் அளிக்காது. இத்தகைய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசியலை அதற்குரிய நடைமுறை அர்த்தத்தில் புரிந்துகொள்ளாமல் வெறுமனே சிங்களத் தலைவர்களின் தேர்தல் வேட்டையாட்டத்திற்கு உட்பட்டு அலந்த நாய் மலத்தில் வீழ்தது போல சிங்களத் தலைவர்களுக்குப் பின்னால் ஓடிக் குடைபிடிப்பது அழிவுக்கான அரசியலேயாகும். எனவே தமிழ் மக்கள் இங்கே அறிவு பூர்வமாக செயற்பட்டு சிங்கள தலைவர்களையும், சிங்களக் கட்சிகளையும், சிங்கள தேசத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வு எட்டப்படும் என்பதுதான் வரலாற்று உண்மை. இந்த உண்மையில் இருந்து இன்று இலங்கைத்தீவு எதிர்நோக்கி இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டும். சிங்கள தேசத்தின் தலைவனை தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? சிங்கள தேசத்தின் தலைவனை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலில் சிங்களத் தலைவர்கள் யாரும் இலகுவில் வெற்றி பெறுவது என்பது கடினமானதாக இருக்கப் போகிறது. இன்று சிங்களதேசத்தின் அரசியலில் மும்முனைப் போட்டி இருப்பதாக பலர் சொல்லத் தலைப்படுகின்றனர். மும்முனைப் போட்டி இருப்பதாக வெளிப்பார்வைக்கு தோன்றினாலும் உண்மையில் அங்கு இருமுனைப் போட்டியே உள்ளது. பொது வேட்பாளர் இந்த உலகில் மூன்று அணிகள் என்ற ஒரு நிலை ஒருபோதும் இருந்தது கிடையாது. உண்மையில் அங்கு இரண்டு அணிகளே இருக்கும். மூன்றாவது அணி என்பது வெற்றி பெறும் அணியை சார்ந்ததாகவோ அல்லது ஓர் அணியை தோற்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அணியாகவே இருக்கும். ஆகவே இங்கே இரண்டு அணிகள் மட்டுமே இருக்கும். உலகளாவிய அரசியலிலும், மனிதகுல வரலாற்றில் எப்போதும் இரண்டு அணிகளே இருந்துள்ளன. இது இன்றைய சிங்களதேச அரசியலுக்கும் பொருந்தும். தமிழ் மக்கள் தமக்கான ஒரு தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதற்கும், தமிழர்களுக்கான தலைமையை உருவாக்குவதற்கும் ஏற்ற ஒரு அரசியல் சூழல் இந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் விரிந்து கிடக்கிறது. எனவே தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் இறைமையை தமிழ் வேட்பாளருக்குரிய வாக்குகளாக பிரயோகித்து தமது வாக்கை தமிழ் பொது வேட்பாளருக்கு அளிக்க வேண்டும். சிதைந்துபோயிருக்கும் தமிழீழழ மக்களை இதன் வாயிலாக ஒரு தேசியச் சக்தியாகத் திரட்டி எடுக்க முடியும். அத்துடன் இதனை தமிழ் தேசிய இனத்தின் மக்கள் ஆணையாக வெளி உலகத்திற்கு காட்டவும் முடியும். அதனையே ஒரு சர்வதேச அரசியல் செயற்பாட்டுக்கு மூலதனமாக முன்வைக்கவும் முடியும். தமிழ் மக்களின் எதிர்கால அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு தமிழ் வேட்பாளரை முன்னிறுத்துவதன் மூலம் தமிழ் மக்களுக்கான புதிய அரசியல் வழி ஒன்றை திறக்க முடியும் அதுவே இன்றைய காலத்தின் தேவையாகவும் உள்ளது. https://tamilwin.com/article/politics-tamil-people-structuralist-genocidal-1714021831
  3. யாழ்ப்பாணத்தில் காணி ஒன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபரை விளக்க மறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணியே இவ்வாறு மோசடியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியை பராமரிக்கும் நோக்கில் உறவினர் ஒருவரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிலையில் இந்த மோசடி இடம்பெற்றுள்ளது. காணி மோசடி குறித்த காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார். மற்றைய காணித் துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். புலம்பெயர் தமிழர்கள் அதற்கமைய காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். புலம்பெயர் நாடுகளில் வாழும் அதிகளவான தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் காணிகளை கொள்வனவு செய்த நிலையில், மற்றுமொருவரின் கண்காணிப்பில் விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/jaffna-land-scammer-court-order-police-arrests-1714181334
  4. கனடாவில் சுமத்திரன் திறத்தப்படும்போது சிங்களவர்களுடன் வாழ்வதே நிம்மதி என்பவர் ஏனப்பா தமிழர்களின் அரசியலுக்குள் நின்று குழப்பம் விளைவிக்கிறாய் பேசாமல் சிங்கள அரசியல் கட்சி பக்கமே சேர்ந்து அவர்களை தொல்லை பண்ணும் ஐய்யா . இதைத்தான் இலங்கை இனவாத அரசு விரும்புது நீங்களும் விரும்புகிறீர்கள் .
  5. ஸ்ரீதரன் சுமத்திரனை வெண்டவர் ஆனால் ஊரும் சூழலும் ஒரு எல்லைக்கு மேல் அவரை தாண்டவிடாது சுமத்திரன் அப்படியல்ல லண்டன் வந்தால் குழப்பம் வரும் என்று தெரிந்தாலும் வலிய தேடி வந்து அடிவாங்கும் முட்டாள் .
  6. முதலில் மீரா என்ன எழுதினார் அதன் கருத்து என்ன என்பதை புரியாமல் உறைப்புக்கும் பூச்சி கொள்ளி பாவனைக்கும் Pesticide வித்தியாசம் தெரியாமல் உறைப்பு கூடாதது என்பது போல் அடித்து விடுகிறியள் . மீரா எழுதியது மிளகாய்க்கு பாவிக்கப்படும் மனிதருக்கு கேடு விளைவிக்கும் உரப்பாவனை கொண்ட அனைத்து மிளகாய் தூள் களும் uk யில் இனித்தடை இலங்கையில் இருந்து வரும் மிளகாய் தூள் பேமஸான பிராண்ட் என்றாலும் செத்தல் மிளகாய் கொள்வனவு இந்தியா ஆந்திரா வில்தான் அடுத்த மூலப்பொருள் கொத்த மல்லி அந்த கதையை பிறகு பார்ப்பம் . இலங்கையில் இருந்து வரும் பொருள்கள் இயற்கையானது என்று விடயம் தெரியாமல் Port Health அனுமதிக்குது . இப்ப விடயம் என்னவென்றால் சிங்களவன் ஜெயவாவோ சொல்றான் அது அவன் உரிமை ஆனால் கொஞ்ச காலமாய் யாழுக்குள் கொஞ்சம் ஜெயவாவோ சவுண்டு கொடுக்கினம் சிலர் Port Health மெயிலை தட்டி விட்டால் காணும் 90வயது கிழவன் சொல்வது போல் ஜெயவாவோ சவுண்டு வரும் .கொஞ்சம் சிந்தியுங்க காலம் காலமாய் இரண்டு இனமும் அடிபட்டு பெரும்பான்மை ஒரு தீர்வை கொண்டு வந்தாலும் சிங்களத்துக்கு முட்டு கொடுத்து முட்டு கொடுத்து அதை இல்லாமல் பண்ணுவது எங்களில் இருக்கும் முட்டுக்கொடுக்கும் கூட்டம் தான் . இனியாவது இரண்டு இனமும் நிம்மதியாய் அந்த தீவில் வாழ விடுங்க முட்டுக்கொடுத்தது இன்றுவரை காணும் சிந்தியுங்க . சிங்களவன் புத்திசாலி என்றால் இன்று இந்த தீவில் பாலரும் தேனாறும் ஓடும் தீவை சுத்தி வர கடன் அதற்கு பின்தான் கடல் முட்டுக்கொடுப்பவர்கள் புரிந்து கொள்ளணும் .
  7. நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த 8 விபத்துகளில் 5 விபத்துகள் வாகன சாரதிகளின் கவனக் குறைவினாலேயே இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், புத்தாண்டு தினத்தில் மாத்திரம் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 25 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மாத்திரம் 136 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் 1,189 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 130 விபத்துகளில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீதி விபத்துகளில் மூன்றில் ஒரு பங்கு விபத்துகள் மோட்டர் சைக்கிள்களால் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த வருடத்தில் 22,804 வீதி விபத்துகள் பதிவாகிய நிலையில் அவற்றில் 2,280 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என்றும் வீதி விபத்துகளை குறைத்துக் கொள்வதற்கு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட வலியுறுத்தியுள்ளார். அத்துடன், 2030ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக வீதி விபத்துகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இருப்பினும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300287
  8. வட மாகாணத்திலுள்ள ஆலயங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்கள் தொடர்பில் தென்னிலங்கையில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் புங்குடுதீவு அம்மன் ஆலயத்தில் கடவுளுக்கு சாத்திய சேலை ஒன்று 16 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து சிங்களவர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இந்நிலையில் யாழில் ஆலயம் ஒன்றின் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஏலத்தில் தேங்காய் சங்கானை ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது ஏலத்தில் தேங்காய் ஒன்று 4000 ரூபாவிற்கு ஏலம் போனது. 14 தேங்காய்கள் இவ்வாறு பக்தர்கள் மத்தியில் ஏலம் விடப்பட்டது. இதன்போது, தேங்காய்கள் அதிக விலைக்கு விற்பனையானது. ஒரு தேங்காய் மட்டும் 4000 ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி 13 தேங்காய்கள் ஒவ்வொன்றும் 2000 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான ஏலத்தின் போது உள்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமன்றி புலம்பெயர் தமிழர்கள் பலரும் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கண்ணகி அம்மன் ஆலயலத்தில் 16 இலட்சம் ரூபாவுக்கு சேலையை ஏலத்தில் எடுத்தவர்கள், கனடாவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/coconut-price-in-jaffna-today-temple-festival-1714098020
  9. அப்ப இனி புத்தரை தூக்கிக்கொண்டு தமிழ் பக்கம் வந்தால் சொறிலங்கன் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் ஆப்பு கொடுக்கலாம் அல்லது இங்கு ஓவரா ஜெய வாவோ சவுண்டு வந்தாலும் நன்றி மீரா . இனி நெட்டோ சோடாவும் அஜினமோட்டோ கட்டா சம்பலும் சொறிலங்கா போய்த்தான் சாப்பிடலாம் . @goshan_che
  10. கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀 ஸ்டாரட் மியூசிக் ..... இவர் தமிழ் அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
  11. தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள், நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும், தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள் என புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண (Jaffna) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) பகிரங்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்காக நீங்கள் இருவரும் (சுமந்திரன், சிறீதரன்) நின்றபோது புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் கட்சி ஒன்றை வழங்குவதாக உங்கள் இருவருடனும் பேரம் பேசினாரா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தமிழ் வர்த்தகர் மேலும் தெரிவிக்கையில், "எனக்கு ஒருவர் மூலமாகப் புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவர் செய்தி அனுப்பியிருந்தார். அதாவது, கட்சிகள் விற்பனைக்கு உண்டு, உங்களுக்கு வேண்டுமா? என்று. உரியவர் என்னுடன் நேரடியாகப் பேசவில்லை என்றபடியால் அந்தப் புலம்பெயர் தமிழ் வர்த்தகரின் பெயரை என்னால் பகிரங்கப்படுத்த முடியாது. என்னைத் தலைவர் தெரிவுப் போட்டியிலிருந்து விலகப் பண்ணுவதற்காகவே என்னுடன் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் வர்த்தகர்கள் தமிழரசுக் கட்சியில் அதிக செல்வாக்கு செலுத்துகின்றார்கள் என்பது உண்மை. இது இன்று பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் சர்வதேச மட்டத்தில் முக்கிய பதவியை வகித்த ஒருவர், எனக்கு அந்த நேரத்திலேயே ஒரு செய்தியை அனுப்பியிருந்தார். வடக்கிலும் அரசியலுக்குள் பணம் புகுந்து விட்டது, இது விரும்பத்தக்க விடயம் அல்ல, இதைப் பற்றி நீங்கள் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தார். இப்போது நான் பின்னால் திரும்பிப் பார்க்கின்றபோது பல விடயங்கள் அப்படி நடக்கின்றன போல்தான் தெரிகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கட்சியைச் சேர்ந்த சிலரிடத்தில் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறுமாறு ஒலிவாங்கிகளை நீட்டி கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. சிலரிடம் அப்படிக் கேட்டபோது அவர்கள் மறுத்தும் உள்ளனர். கொள்கை அரசியல் அதனால்தான் எனக்கு அந்த விடயமே தெரியவந்தது. சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்களைச் சொல்வீர்களேயானால் உங்கள் தேர்தல் பிரச்சார செலவுகளையெல்லாம் தாங்கள் பொறுப்பேற்பதாக அவர்களிடம் சொல்லப்பட்டிருந்தது. அதற்கமைய சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். சிலர் எனக்கு எதிராகக் கருத்துக்களைக் கூற மறுத்தும் இருந்தார்கள். அப்படியான முயற்சிகள் இன்று கூடுதலாக வலுப்பெற்றுள்ளன. இது தமிழ் மக்களுடைய கொள்கை அரசியல் விடயத்தில் மிகவும் பாதகமான பின்விளைவை ஏற்படுத்தும். நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளபடியால் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களிடம் தயவு செய்து தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து விலகி இருங்கள் என்று கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் செய்யும் வர்த்தகமும், உங்களுடைய இலாபம் ஈட்டும் வேலையும் வேறு வழிகளில் இருக்கட்டும். தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தயவு செய்து நுழையாதீர்கள். தமிழ் மக்களின் விடிவுக்கான பயணத்தை அரசியல் பாதையூடாக நாங்கள் முன்னெடுக்கின்றபோது அதற்குள் பணம் உட்செலுத்தப்பட்டால் அது பாரிய மோசமான பின்னடைவுகளை எங்கள் மக்களிடத்தில் கொண்டுவந்து சேர்க்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/sumandran-public-request-diaspora-tamil-traders-1713923907
  12. கூடவே ஒன்றுக்கு பத்தாய் அஜினோமோட்டொவை கொட்டி கொட்டி கொத்தை சட்டிக்குள் வைத்து பிரட்டுறம் கொத்து வேறை அது ஐந்தாயிரம் இது இரண்டாயிரம் வாங்க யாரும் இல்லா நேரத்தில் லண்டனில் இருந்து @goshan_che ஆகா ஓகோ என்று படமும் எடுத்து போட்டார் மாத்தையா .
  13. இந்த ஆய்வக அறிக்கையை பார்த்தால் சிங்கள ஏற்றுமதி இறக்குமதி இலகுவாக முடங்கும் நெட்டோ சோடா குடிக்கணும் என்றால் சொறிலங்காவுக்குத்தான் போகணும் .
  14. கண் சத்திர சிகிச்சையின் போது தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டதன் காரணமாக பார்வையிழந்த நோயாளிகள் , கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டின் ஏப்ரல் மாதமளவில் நுவரெலியா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் ஆறு நோயாளிகள் பார்வைத் திறனை முற்றாக இழந்திருந்தனர். குறித்த நோயாளிகளுக்கான சத்திர சிகிச்சையின் போது prednisolone acetate எனும் தரம் குறைந்த மருந்து பயன்படுத்தப்பட்டிருப்பதும், கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னரே குறித்த மருந்துப் பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்திருந்தது. அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடு சத்திர சிகிச்சையின் பின்னர் பார்வைத் திறனை இழந்த நோயாளிகளுக்கு நட்டஈடு வழங்கப்படு்ம் என்று அன்றைய சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்திருந்த போதும், அவ்வாறான இழப்பீடுகள் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த ஆறு நோயாளிகளும் ஒன்றிணைந்து கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஒரு நோயாளிக்கு நூறு மில்லியன் ரூபா வீதம் ஆறுநோயாளிகளுக்கும் அறுநூறு மில்லியன் ரூபா நட்ட ஈடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/people-blinded-by-substandard-medicine-sue-kehelia-1714075637
  15. மோட்டார் வாகனத் திணைக்களத்தில் குவிந்துள்ள அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார். நமது நாட்டில் அரச வருமானம் குறித்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசாங்கத்தை அன்றாடம் நடத்தத் தேவையான பணத்தைச் சேகரிக்க முடியவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை அச்சிட முடியாது எனவும் அமைச்சர் கூறினார். சாரதி அனுமதிப் பத்திரங்கள் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அரச நிறுவனங்களுக்கு பெரும் பணத்தை மீதப்படுத்துகிறது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களைப் பதிவுசெய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதே இந்த நிறுவனத்தின் பிரதான வருமான ஆதாரமாகும். பணத்தைச் சேகரிக்க முடியவில்லை இதற்கு சுங்க மற்றும் கலால் துறையினரும் பெரும் பங்காற்றி வருகின்றனர். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே இந்த நிறுவனங்களில் இடம்பெறும் திருட்டு, மோசடிகள் மறையும். ஆனால், கடத்தல்காரர்களும், சில அதிகாரிகளும் இதை அனுமதிப்பதில்லை. இந்த துறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. ஒருமுறை மோட்டார் வாகனத் திணைக்களம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் உரிமையை இராணுவத்துக்கு வழங்கியது. இவ்வாறு பல அனுகுமுறைகளை கையாண்டது. இந்த நிறுவனங்கள் வருமானம் ஈட்டும் பிரதான நிறுவனங்கள். எதிர்காலத்தில் மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது இலக்கத்தகடு வழங்கும் முறையும் மாற்றப்படும் என்றார். நமது நாட்டில் அரச வருமானம் குறித்து பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு, அரசாங்கத்தை அன்றாடம் நடத்தத் தேவையான பணத்தைச் சேகரிக்க முடியவில்லை. எக்காரணத்தைக் கொண்டும் பணத்தை அச்சிட முடியாது. கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. இந்த நாட்டை யார் ஆட்சி செய்தாலும் வெளிநாட்டு கடனை செலுத்தும் சட்டம் இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/important-notice-regarding-driving-licenses-1714042361
  16. சம்மாந்துறை ஹோட்டல்களில் "அதிக அஜினமோட்டோ" கலந்த சம்பலால் பாதிப்பு - சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை Madawala News 5 days ago சம்மாந்துறையில் உள்ள ஹோட்டோல்களில் "அஜினமோட்டோ" கூடுதலாக இட்டு புளிந்த தேங்காயில் சம்பல் செய்து அதிகமாக மக்களுக்கு இரவு நேரங்களில் அள்ளி வழங்குகின்ற ஹோட்டல்கள் சில சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட வேண்டும். நானும் எனது நண்பர்களும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பராட்டாவும் சம்பலும் வாங்கினோம். சாப்பிட்ட பின் ஓரிரு மனித்தியாளங்கள் கழித்து உடம்பில் அறிப்பு ஏற்பட்டு அங்கங்கோ மஸ்குட்டி உடம்பில் பட்டால் எப்படி இருக்கும் அது போன்று போன்று உடம்பில் தாங்க முடிதாக அறிப்பு ஏற்பட்டது. இதுவரை காலமாகவும் எனது வாழ்க்கையில் இவ்வாறான சம்பவம் (அலர்ஜி) இடம் பெறவில்லை. இதுவே முதல் தடவை இது தொடர்பாக வைத்திய ஆலோசனை பெற்ற நான் ஓரளவு சரி ஆகி விட்டது. வைத்தியரும் ஒரு சில ஆலோசனைகளை கூறினார். என்ன சாப்டீங்க? என்று கேட்க பராட்டா சம்பல் மட்டும் என்றேன். இறுதியாக அது மட்டும்தான் சாப்பிட்டேன் என்றேன் சம்பலில் நல்ல ரசமாக இருந்தது கூடுதலாக இருந்ததால் நிறைய சாப்பிட்டன் என்றேன் . இவ்வாறு பல பேருக்கு இது பேன்ற சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கூறினார்.மூன்று நாளைக்கு இந்த மாத்திரைகளை உபயோகியுங்கள். இனி இது போன்ற சாப்பாடுகளை தவிர்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு போட்டால் நின்றுவிட்டது என்று இல்லாமல் 3நாள் பாவியுங்கள் என்பது மட்டுமில்லாமல் எனது சந்தேகங்களுக்கும் பல தெளிவூட்டல்களை வழங்கினார். ஆனால் என்னைப்போன்று பல பேர் இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக அறிகின்றேன். எனக்கும் என் நண்பர்களுக்கும் நடந்த இது போன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்ககூடாது சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நம்புகின்றேன். "அஜினமோட்டோ" பாவனையை குறைப்போம்.🤝 ஐ.எல்.எம் நாஸிம் (ஊடகவியலாளர்) https://www.madawalaenews.com/2024/04/i_262.html
  17. நான் நினைக்கிறன் பேராண்டி எலக்சனில் நிக்கப்போறார் போல் உள்ளது 😀வாழ்த்துக்கள் இப்பவே சொல்லி வைக்கிறேன் .
  18. இலங்கை இந்தியா போல் நினைத்து இங்கு சிலர் கருத்துக்கள் மேற்குலகில் பிழைகள் நடப்பது உண்டு எப்போ மீடியாவின் பார்வை குறிப்பிட்ட நபர் மீது திரும்புதோ கதை அவ்வளவுதான் அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி அவரின் தொழில் பதவியேற்றம் எல்லாவற்றிலும் தாக்கத்தை செலுத்தும் .
  19. அப்படியே உன்காப்பா# யார் என்று சொன்னால் நல்லது ஏனென்றால் ரெம்ப பெண்ணையன் ஆகுவது எனக்கு பிடிக்காது .0 நீங்கள் உண்மையான ஆன் என்றால் நேரில் படம் போட்டு வர முடியுமா ?
  20. அவர் கொதிக்கிறார் என்றால் நியாயத்துக்கு கொதிக்கிறார் நீங்க ஏன் சொறிலங்காவுக்கு முட்டு கொடுப்பது ?
  21. பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை ஆட்கடத்தல் குழுவொன்று ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ரஷ்யாவிற்கு அனுப்பி வைத்து ஆட்சேர்ப்பு செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு இன்று (24) நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவிக்கையில், ரஷ்ய போரில் இலங்கையர்கள் ரஷ்ய போரில் நமது வீரர்கள் பலர் பயன்படுத்தப்படுகின்றார்கள். குசாந்த குண சின்ஹா என்ற நபர் பலரை அழைத்துச் சென்று ரஷ்ய இராணுவத்தில் இணைத்துள்ளார். இவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். தற்போது குஷாந்த குணசிங்கவை காணவில்லை. இந்தியாவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் இந்த ஆட்கடத்தலை செய்து வருகின்றார். இவரிடமிருந்து பதினெட்டு இலட்சத்தை பெற்று இராணுவ வீரர்கள் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைந்துள்ளனர். இலங்கை மக்கள் இரு தரப்பினராக பிரிந்து தற்போது சண்டையிட்டு வருகின்றனர். எத்தனை பேர் இதுவரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாது. இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். போர் வலயத்திற்கு அனுப்பப்படும் இலங்கையர்கள் இது முற்றிலும் சட்டவிரோதமானது. நாட்டில் வருமானம் இல்லாத காரணத்தினால் நமது இராணுவத்தில் உள்ளவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்றும் கேள்வி எழுப்புகின்றேன். இந்த மக்கள் பலவந்தமாக போர் வலயத்திற்கு அனுப்பப்படுகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/ukrain-russian-war-joint-srilankans-1713965289
  22. உக்ரேனிலும் சிங்கள ராணுவம் ரஸ்யாவிலும் சிங்கள ராணுவம் இனவாத சிங்கள அரசே அந்நிய செலவாணிக்கு அனுப்பிவைத்து விட்டு ரஸ்சயா வில் சிங்கள ராணுவம் மேற்குலக நாடுகளின் கண்களை உறுத்த தொடங்கியவுடன் தங்களுக்கு தெரியாது அப்படி இப்படி சரடு விடுகிறார்கள் . இறுதிக்கட்ட சண்டைக்கு மேற்குலக நாடுகள் நவீன ஆயுதப்பயிற்சிகள் கொடுத்தவை சிங்கள ராணுவத்துக்கு இப்ப அந்த நவீன ராணுவ பயிற்சி மேற்குலகுக்கு எதிராக திரும்பி உள்ளது .நல்ல விடயம் நடக்குது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.